💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 06💋

20210823_161826-f21de365

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 06💋

“லவ்வா, உங்க மேலயா… சத்தியமா வரல சார்!” 

 

“அப்போ நான் கைய கட் பண்னேன்.  அந்த பயத்துல ஓகே சொன்னியா, ஏன் பொய் சொன்ன?” என்று புறஞ்சேயனின் குரலில் கோபம் தென்பட்டது. 

 

“நீங்க கைய கட் பண்ணிங்கன்னு நான் உங்கள கல்யாணம் பண்ணிருந்தா இது எனக்கு பத்தாவது கல்யாணமா இருக்கனும்! இந்த மாதிரி நிறைய பேர் கைய கட் பண்ணி பிளாக்மைல் பண்ணிருக்காங்க. ஒன்பது பேர் கையதான் கட் பண்ணாங்க நீங்க மணிக்கட்டை சேர்த்து கட் பண்ணிட்டீங்க அவ்ளோதான்! ஒர் உயிர் காப்பாத்த பத்து பொய்கூட சொல்லலாம் அதுக்கெல்லம் கர்த்தர் தண்டிக்க மாட்டாரு என்ட் என்னோட டாடிய கண்டுப்பிடிச்சு தாரேன்னு சொன்னீங்களே அந்த ஒரு வார்த்தைக்காகதான் நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இதுதான் காரணம் வேற எதுவும் கிடையாது” 

 

“ஏதோ அன்னைக்கு சொன்ன, எனக்கு நிறைய பொறுப்பு இருக்கு நான் ஒன்னும் ஷெல்பிஷ் இல்ல ஜெலிபிஷ் இல்லன்னு கதைவிட்ட இப்போ அதெல்லாம் என்னாச்சு?”

 

“ஏன், உங்க லவ்வுகாக நீங்க எந்த லெவலுக்கும் இறங்கலாம். நான் என்னை பொத்த அப்பாக்காக இப்டி பண்றது தப்பா?”

 

“ஒரு வேளை உங்கப்பா நான் தேடி கிடைக்கலன்னா… என்ன பண்ணுவ?” 

 

“என்னோட வழிய பார்த்துட்டு போய்ருவேன் சார், கண்டிப்பாக உங்களுக்கு பாரமாயிருக்கமாட்டேன்”

 

“என் மேல நம்பிக்கையிருக்கா பியானா?” 

 

“டாடிய தேடித் தருவீங்கன்னு நம்பிக்கை இருக்கு சார்”

 

“ஓகே, உங்க அப்பா படம் வேணும் அப்புறம் கொஞ்சம் டீடைல்ஸ் வேணும். உங்களுக்கு என்ன நடந்துச்சு, உங்க அப்பாக்கு ஃப்ரெண்ஸ் யாரும்  இருக்காங்களா, அம்மாவ எப்டி கொலை பண்ணாங்க, இதெல்லாம் கொஞ்சம் சொல்லு?”

 

“அம்மாவும் அப்பாவும் நம்மல மாதிரி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க” 

 

“அச்சோ…! உங்க அப்பாவும் கைய வெட்டிக்கிட்டாறா?” 

 

“ஹாஹா எங்க டாடி ஒன்னும் கோழை கிடையாது. அம்மா இந்து, அப்பா க்றிஸ்டியன் வேற வேற மதம் ஆனா, அம்மா அதிகமா சர்ச போவாங்க. அப்பா கோவிலுக்கு போவாங்க. அம்மா பேரு சங்கீதா..” என்று அவள் உரையை முடிக்கும் முன், 

 

“ஓஓ… பியானா, வேர்லின், ரம்ப்பட் இந்த இன்ஸ்ட்ருமெண்டுக்கெல்லாம்உங்க அம்மாதான் டியூனா?” பியானா ஒரு பார்வை பார்த்தாள் அவனை. 

 

“சரி சரி குறுக்க பேச மாட்டேன். வாய மூடிக்கிறேன்” என்று தனது கையால் வாயை மூடிக்கொள்ள, 

 

பியானா நடந்தவற்றை கூறாமல், நடந்தவற்றை எல்லாம் நினைவலைகளுக்கு கொண்டுவந்தாள்.

 நீலகிரி மலையின் மேல் உள்ள ஓர் அழகிய ஊர் உதகமண்டலம். அவர்களது பிறப்பிடமும் வசிப்பிடமும் அங்குதான். வீட்டில் தாய், தந்தை, பியானா, தங்கை மற்றம் தந்தையின் உடன்பிறவா இளைய சகோதரருடன் சேர்த்து ஐவர். தந்தையுடன் வேலை பார்ப்பாதால்  சிற்றப்பன் அவர்களது வீட்டில் தங்கிக்கொண்டார். 

 

தந்தை தேயிலை உற்பத்தி நிறுவனம் நடத்துபவர். வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு பெரிய நிறுவனம் அல்ல உள்நாட்டில் மட்டும் வியாபரம் நடாத்தும் நடுத்தர வர்க்க நிறுவனம்தான். சிலவேளைகளில்  வியாபாரம் தொடர்பாக தந்தை சென்னைக்கு  சென்றால் ஒரிரண்டு நாட்களுக்கு பின்பு வீடு திரும்புவது வழக்கம். 

 

அன்றும் அப்படிதான் தந்தை சென்னைக்கு கிளம்பினார். தந்தை கிளம்பிய பிறகு காலைவுணவை முடித்துவிட்டு பியானாவும் பள்ளிக்கு கிளம்ப சிற்றப்பன் வேலைதளத்திற்கு கிளம்பினார். 

பள்ளிக்கூடம் முடிந்த வீடு திரும்பினாள். வழக்கத்திற்கு மாறாக சிற்றப்பரும் அவ்வேளை வீட்டிற்கு வந்திருந்தார். வேர்லினை உறங்க வைத்து பியானாவுக்கு அன்னம் ஊட்ட சங்கீதா  அடுக்களைக்குள் சென்றார். 

 

அவளது தாயை பின் தொடர்ந்த தந்தையின் உடன்பிறவா இளைய சகோதரர் அடுக்களைக்கு சென்று கதவை சாற்றிக்கொள்ள சங்கீதா அலரும்  சத்தம் பயங்கரயமாய் கேட்க, அந்த சிறுவயது பியானாவால் அடுக்களை கதவை திறக்காதான் முடியுமா? எவ்வளவு அல்லோலப்பட்டிருப்பாள். அவ்வேளை அவள் ஜன்னல் வழியே பார்த்த காட்சி சிற்றப்பன் அவள் அன்னையின் கழுத்தை ஒரு கையால் நெறிக்கி மறுகையால் கத்தியை எடுத்து வயிற்றில்  குத்த துடிதுடித்துப் போனாள் சங்கீதா,  பியானாவை வெளியே செல்லுமாறு சைகை காண்பிக்க அவள் பக்கத்து வீட்டை நாடியிருந்தாள். 

 

அவர்கள் வந்து பார்க்க காமகொடுரன் சிற்றப்பன் அங்கில்லை. அவ்விடத்தை விட்டு தப்பியிருந்தான். 

“ஏய், இங்க நான் ஒருத்தன் என்னானு கேட்டுட்டுயிருக்கேன் பதிலே வரல. ஏன், என்கிட்ட எதுவும் சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறியா?” என்று புறஞ்சேயனின் வார்த்தைகளும் அவள் செவிபரனுக்கு எட்டவில்லை.

 

மீண்டும் ஒரு முறை, “ஏய் பியானா…” என்று தன்னவளை அவன் இரு கைகளால் குலுக்கினான் புறஞ்சேயன்.

 

“எ…என்ன சொன்னீங்க சார்?” 

 

“நல்லதா போச்சு, உங்க ஃபேமிலி பிளாஷ் பேக் கேட்டேன்”

 

இவ்வளவு நேரம், தான் நினைத்த  இறந்தகால நிகழ்வுகளை புறஞ்சேயனிடம் கூற இடையில் கண்ணீருடன் அவள் குரல் அடைக்க, பின்பு பியானாவை நீர் அருந்தவைத்தான் அவன்.

 

 “அம்மாவ கொலை பண்ணிட்டாங்கா அதுக்கு அப்றம்… என்னாச்சு சொல்லு பியானா?” என்றவன் குரலும் தடுமாற,

 

“பக்கத்து வீட்டு ஆன்ட்டியும் அவங்க ஹஸ்பன்டும் வந்து ஆஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க போற வழிலயே அம்மா தவறிட்டாங்க சார். அப்பா அடுத்த நாள் காலைலதான் வந்தாங்க. நான் விம்மி விம்மி அழுதுக்கிட்டே சொன்னேன். அப்பாவால எதையுமே நம்ப முடியல. அவங்க தம்பிய தேட ஆரம்பிச்சாங்க கிடைக்கவே இல்லை. கொலைய பார்த்த சாட்சி நான் மட்டும்தான். இனி இங்கயிருக்க வேணாம்னு இத்தாலிக்கு கூட்டிட்டு போய் விட்டாங்க. நான் ஏஜ் அட்டன் பண்ணப்போ அப்பா வந்து பார்த்தாங்க. அதுக்கு அப்றம் வரவேயில்லை” அழுகையை விடுவதாக இல்லை பியானா. அவளுக்கு ஆறுதலாய் தோளை பற்றினான் புறஞ்சேயன். 

 

“அம்மாவோட பிக் வைச்சிருக்கியா?”

 

“இல்ல சார், அப்டி..அப்டியே வேர்லினுக்கு முடி வளர்ந்தா எப்டியிருக்கும் அதே மாதிரி அம்மா இருப்பாங்க. நான் அப்பா மாதிரி இருப்பேன்” 

 

‘இவளை எப்படி சமாளிக்கிறது’ என்று அறியாதிருந்தான். “ஏய் பியானா நீ அழும் போது கேவலமா இருக்க தயவு செஞ்சு அழாத பார்க்க முடியல கண்றாவியா இருக்கு” என்று கேலிக்கையுடன் அவள் துயரை துடைக்க அவன் முயல, இவள் எதையும் கண்டுகொள்ளவில்லை.

தன்னவளின் துயர்மழையில் அவனும் நனையத்தயாராகினான். அவள் கண்களை துடைத்துவிட்டான். இன்று அவளின் துயரத்தை பகிர்வதற்கு ஒருவன் கிடைத்துவிட்டான். அவள் மனதின் பாரங்களை குறைந்தது போல் ஒர் உணர்வு அவளுக்கு.

 

“சரி இதுக்கு அப்றம் நடக்குறதெல்லாம் நல்லதுக்குதான். விளம்பரம் குடுக்குறது ஓகே பட், இந்தவாட்டி ஒரு சேஞ்ச் தேடி தரவங்களுக்கு அஞ்சு லட்சம் தாரோம். இப்டி குடுத்து பார்ப்போம். அப்றம் ஊட்டில பழைய பில்டிங், பங்களா வீடு அந்த மாதிரி இடங்கள்ல ஆள் விட்டு தேடசொல்லிடலாம். கடத்திக்கூட வைச்சிருக்கலாம். அதோட போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்திறலாம்” 

 

“ஓகே சார் பட், என்கிட்ட அந்தளவு பணமில்ல” என்று அவள் தடுமாற,

 

“உன்கிட்ட யாரு இப்போ பணம் கேட்டா? அதெல்லாம் நான் பார்த்துப்பேன். நீ கண்டதயும் யோசிச்சு மண்டய போட்டு குழப்பிக்காத, அப்றம் அப்பா கிடைச்சா எனக்கு என்ன தருவ?” என்று அவன் தன்னவளை சீண்டினான்.

 

“முதல்ல டாடி கிடைக்கட்டும் சார் அப்றம் பார்க்கலாம்” 

 

“அசுக்கு புசுக்கு இதெல்லாம் போங்கு அப்பா சீக்கிரமே கிடைக்கனும்னு முருகன் கிட்ட மனு குடுத்திருக்கேன். சோ சீக்கிரம் கிடைச்சிருவாங்க. அதுக்கு அப்றமாவது இந்த பாவப்பட்ட ஜென்மத்த பார்த்து மனசிறங்கி காதல் பிச்சை குடுக்க டிரை பண்ணனும் ஓகே” என்று கெஞ்சுதலான குரலில் கட்டளையிட்டு அவனை அறியாமல் காமமில்லா அன்பில் அவள் பிறைநுதலில் ஒன்றை முத்தத்தை பதிக்க மெதுவாக அவள் நுதல் அருகில் செல்ல,  பாவையோ பாவமென எண்ணாமல் அவன் முத்தத்தை மறுத்து முகத்தை தள்ளிவிட்டு அவளும் மறுபுறம் திரும்பிக்கொண்டாள். 

 

தன்னை சுதாரித்துக்கொண்டவன்.

“சாரி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்”

இதுவரை மன்னிப்பு கேட்காதவனை மன்னிப்பு கேட்க வைத்தாள் அவள். அவன் மன்னிப்பு கேட்டதை எண்ணி இவளும் மனதிற்குள் சிரித்துக்கொண்டாள்.

 

“ம்ம்ம்,  நான்..நான் எங்க தூங்குறது சார்?”

 

“கட்டில்லதான்!” 

 

“அப்போ நீங்க சார்?”

 

“கட்டில்லதான், பயப்பிடாத உன் கற்ப நான் சூரையாடிருவேன். எதுக்கும் நான் பொறுப்பில்ல, ஏடாகூடமா எதும் நடந்தா, ஐ கான்ட்  சே சாரி” என்று விளையாட்டாவும் உல்லாசமாகவும் கூறிவிட்டு  பியானாவுக்கு இடத்தை ஒதுக்கிவிட்டு கட்டிலில் புரண்டு கொண்டான் புறஞ்சேயன். 

 

‘சார் இப்டி சொல்லுராறே, எப்டி தூங்குறது பயமா இருக்கே இப்பவே அவர அறியாம கிஸ்பண்ண வந்தாரே’ என்று நினைத்த வண்ணம் ஒற்றைநாற்காலியில் கால்களையும் கைகளையும் ஒடுக்கிக்கொண்டு துஞ்சினாள். 

 

இங்கோ ரஞ்சனா, கொதிக்கும் எண்ணெயில்லிட்ட கடுகாய் பொறிந்துக்கொண்டிருந்தாள்.

“என்ன அத்தை இப்டி சொதப்பிட்டீங்க. இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா பேசிருக்கலாம்”

 

“அவங்களுக்குள்ளதான் எல்லாம் முடிஞ்சிறிச்சே இதுக்கப்றமும்  அவனே கதினு இருக்காம வேற நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நீ எதுவும் யோசிக்காம சீக்கிரம் தூங்குமா” என்று செல்வம் உறக்கம் கொண்டார்.

 

‘இனி அத்தை வேலைக்காகமாட்டாங்க. இதுக்கப்றம் நம்மலே காரியத்துல இறங்குவோம்’ என்றெண்ணிக்கொண்டாள்.

 

*****

காலை வெய்யோன் ஜன்னல் ஓரமாய் வந்து தன் கதிர்களை வீச கொட்டாவி விட்டபடி உடலை முறித்துக்கொண்டு மலர்விழி மலர்ந்தாள் பியானா.

 

“ஓரே அலுப்பா இருக்கு’ என்று எழ முடியவில்லை பியானாவால், அவன் கைகள் இவளை அணைத்தபடி இருக்க, அவன் கையை ஒரு புறம் தூக்கி போட்டு விட்டு எழுந்துகொண்டாள் மங்கை 

 

“அச்சோ நான் எப்போ கட்டிலுக்கு வந்தேன்!” என்று புறஞ்சேயனை எழுப்ப,

 

“மணி ஆறுதான் டீ தூங்கவிடு” 

 

“சார் நான் எப்டி கட்டிலுக்கு வந்தேன் நீங்க என்னை என்ன பண்ணீங்க சொல்லுங்க, சொல்லுங்க சார்?” என்று பதறிக்கொண்டு அவனை உலுக்கி எழுப்பினாள்.

 

“ஏன் டீ, கதிரைல முடங்கி தூங்கிட்டு இருந்த பாவமேன்னு தூக்கிபோட்டேன். இது தப்பா, மிட் நைட்ல எழுப்பி கேள்வி கேக்குறியே?” அரை தூக்கத்தில் விளம்பினான் புறஞ்சேயன்.

 

“என்னை எதுவும் பண்ணலதானே சார்?” என்று அப்பாவியாய் பிதற்றினாள் பியானா.

 

“இப்டியே கேட்டு கேட்டுட்டுயிருந்த, என் பாதி தூக்கத்துலயும் நீ பால்கோவா மாதிரிதான் இருக்க உண்மையா ஏதும் பண்ணிருவேன்.இங்கேயிருந்து ஓடிரு” என்று அவன் கூற, மெதுவாக நழுவி குளியலறைக்குள் புகுந்தாள். 

 

வழக்கம் போல அவள் பிரார்த்தனை முடித்துக்கொண்டபின் கீழே சென்றாள். கீழே பாட்டியை தவிர அனைவரும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தனர். 

 

அனைவருக்கும் குளம்பியை  கலந்து அதன் மேல் ஒவ்வொரு வடிவங்களில் களிம்பு(கிரீம்) இட்டு வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்தாள். ரஞ்சனா நொடிந்து கொண்டாள். ‘காஃபில கிரீம போட்டு மயக்குறியா?’ என்று.

 

புறஞ்சேயனுக்கு குளம்பி  கொடுக்க சென்றாள். அவனை எழுப்பவே முடியவில்லை. “காஃபி ஆறுது சார், எழும்புங்க சார்”

 

“எல்லாருக்கும் போடும் போது எனக்கு போடாத நான் எழும்பினதுக்கு அப்றம் காஃபி போடு ஓகே”

 

“நீங்க எழுப்பும் போது நான் ஆபீஸ்ல இருப்பேன் சார், இன்னைக்கு லீவு அதனால பரவாயில்ல இதுக்கப்றம் ஆன்டிக்கிட்ட காஃபி கேட்டுக்கோங்க” 

 

குளம்பியை வாங்கி பார்த்தவன்.“ஏய், இந்த ஹார்டு எனக்குதானே!” என்று கண்கள் இமைத்து  புளகிதமாய் கேட்க,

 

“எல்லாருக்கும் இப்டிதான் போட்டு குடுத்தேன் சார்”

 

“ம்ம்ம், இன்னைக்கு தம்பி வீட்டுக்கு போறோம் நீ ரெடியாகு” 

 

“ம்ம்ம், நீங்கள் ரெடியாகி வெளிய போங்க. அதுக்கப்றம் நான் சீக்கிரம் ரெடி ஆகிருவேன்” 

 

இங்கிருவரும் தயாராகியிருக்க கீழே லக்ஷதாவும் வேர்லினும் தயாராகியிருந்தனர்.

*****

 

“உள்ள வாங்கண்ணா, உள்ளவாக்கா” என்று அவர்களை வரவேற்று  பியானா, வேர்லினை யார் என்று அவன் தம்பி வினவினான்.

 

“இவங்க உன்னோட அண்ணக, அவங்க அண்ணியோட தங்கச்சி. பியானா இவன்தான் என்னோட தம்பி யுவனஸ்வன்”

“என்னண்ணா சொல்லுற?  உங்க கல்யாணத்துக்கு கூட என்னை கூப்பிடல, அம்மாக்கு அவ்ளோ வெறுப்பா என்மேல?” என்று கேட்டான் யுவனஸ்வன்.

 

“நீ வேற யுவா, அவன் அம்மா அப்பாவே கல்யாணத்துக்கு கூப்பிடல” என்று கூறிவிட்டு லக்ஷதா சிரிக்க,

 

“ஓஓஓ.. என்னை மாதிரிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா, வீட்ல யாரவது கண்டிப்பா சொல்லிருப்பாங்க சின்னவன் மாதிரி பண்ணிட்டானு? என்று குறுநகைந்தான் யுவனஸ்வன்.

 

“ஆமாடா, கல்யாணம் பண்ண சொல்லி தொல்லை பண்ணுறாங்க அதுவும் ரஞ்சனாவ, எனக்கு அவள சுத்தமா பிடிக்கலடா அதுதான் வீட்டுக்கு சொல்லாமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”

 

“ஹாய், என்னை எல்லாரும் மறந்துடீங்க, மை நேம் இஸ் பட்டு குஞ்சம்” என்றோர் மழலை குரல் அனைவரையும் சிரிப்பூட்ட,

 

“டேய் குட்டி பையா” என்று லக்ஷதா கட்டிக்கொண்டாள். அப்படியே குழந்தையுடன் விளையாட லகஷதாவும் வேர்லினும் அறைக்குள் சென்றனர்.

 

“வாலு, பேரு பிரணவ் கிருஷ்ணா,  காஞ்சனா படத்துல வர வடிவேல் சாரோட நேம வைச்சிக்கிட்டான்” என்றான் புறஞ்சேயன்.

 

பியானாவுக்கு சிரிப்பாகயிருந்தது குழந்தையின் குறும்பை பார்த்து.

 

யுவாவின் மனைவி நித்தித்யா வந்தவர்களுக்கு குளம்பியை கொடுத்து அறிமுகமாகிக்கொண்டாள். 

 

“அக்கா நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க” என்று கூறினாள் நித்தி.

 

“நீங்களும் ரொம்ப அழகாயிருக்கீங்க நித்தி” என்று விளம்பினாள் பியானா

 

“ஆமா…, நாங்களும் இதே மாதிரிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்கள சேர்த்துக்கவே இல்ல. உங்கள மட்டும் எப்டி சேர்த்துகிட்டாங்க?” என்று நித்தி கேட்டது நியாயமான கேள்விதான்.

 

“நீ வேற நித்தி, அது ஒரு பெரிய கதை” என்று சுருக்கமாக கூறினான் புறஞ்சேயன்.

“ஆமா மாமா, நாங்க கல்யாணம் பண்ணும் போது அப்பாய் உடம்பு சரியில்லாம ஆஸ்பிடல்ல இருந்தாங்க. அவங்க மட்டும் இருந்தா நாங்களும் அங்கேயே இருந்திருப்போம்” என்றாள் கவலையுடன் சொன்னாள் நித்தி.

 

“கொஞ்சம் பொறுமா அப்பாய்கிட்ட பேசுறேன்” என்றான் புறஞ்சேயன்.

 

“ஐய்யோ அண்ணா நீ எதுவும் பேச வேணாம். ரஞ்சனா இருக்குற வரைக்கும் அந்த பக்கத்துக்கும் வரமாட்டேன்” என்று விளம்பினான் யுவனஸ்வன்.

 

‘என்ன ரஞ்சனானா இவ்ளோ பயப்பிடுறாங்க, அவ என்ன பெரிய கொம்பா?’ 

ஓடிவிளையாடிக்கொண்டிந்த பிரணவ் கிருஷ்ணா பியானாவின் காலில் வந்து தடுக்கி விழுந்தான். பியானாவும் பிரணவை தூக்கி நிறுத்தி கால்கைகளை உதறி விட்டு குழந்தை கன்னத்தில் இதழ்பதித்தாள். 

 

“பெம்மா, நீங்க ஏன் காலுல ரிங் போடல?” 

 

பியானாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. புறஞ்சேயனை பார்க்க அவனுக்கும் பிரணவின் மொழி புரியவில்லை.

 

***

Leave a Reply

error: Content is protected !!