💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 09💋

20210823_161826-694ec740

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 09💋

அத்தியாயம் 09

உதிரம் உதிர்வதை கூட அவன் பெரிதாக எண்ணவில்லை. 

“என்ன பிரச்சனைனு சொல்லுடீ?” காலில் விழாத குறையாக தன்னவளிடம் இறைஞ்சி நின்றான்.

 

“ஃபர்ஸ்ட் வைஃப் இருக்குனு சொன்னீங்களே, அவங்களுங்கும் உங்களுக்கும் பிறந்த குழந்தை   இருக்குனு எப்போ சொல்லுவீங்களோ, எப்போ என் தலையில இடி விழும்னு தெரியல?” என்று சீற்றத்தோடு அங்கலாய்த்தாள். 

 

“ம்ம்ம், இன்னைக்கு ஒரு முடிவு பண்ணலாம் வா..” என்று அவள் கைகளை இழுத்துக்கொண்டு தீவிரமாக கீழே இறங்கினான்.

இவன் இழுத்துக்கொண்டு வருவதை பார்த்த செல்வம், பாட்டி, ரஞ்சனா மூவருமே திகைத்து போனார்கள்.

“மாமா அந்த பொண்ண எங்க இழுத்துட்டு  போறீங்க?” என்று வினவினாள் ரஞ்சனா.

 

“அவன் பொண்டாட்டிய அவன் அழச்சிட்டு போறான் உனக்கு என்ன?” என்று ரஞ்சனாவை கண்டித்தார் பாட்டி.

 

“தேங்க்ஸ் அப்பாய், நாங்க ஹனிமூன் போறோம்” என்று சத்தமாக ரஞ்சனாவின் புறம் திரும்பி கூறிவிட்டு பியானாவை இழுத்துச் சென்றான். 

 

என்ன செய்வது என்று தெரியாமல் பியானா பயந்ததுதான் மிச்சம்.

சீருந்தின் கதவை திறந்து தன்னவளை உள்ளே தள்ளிவிட்டான். அவனும் ஏறி சீருந்தை வேகமாக செலுத்தினான். 

மன்னவன் மாதுவை தேன்நிலவுக்கு அழைத்து செல்லதாக கூறி வேகத்தடையை(பிரேக்) இட்டு சீருந்தை நிறுத்திய இடம் மீண்டும் இடுகாடு. அவர்கள் தேன்நிலா கொண்டாடும் இடம் ஒரு வேளை அதுவாகயிருக்குமோ!

 

“என்ன சார், உங்க லிஸ்ட்டு பெருசா.. இருக்கும் போல?” என்று விரக்தியாய் வினவினாள். 

 

“கீழ இறங்கி வா, என் லிஸ்ட்ட காட்டுறேன்” என்று அவள் கைபிடிக்க முயன்றான்.

 

“நான் வாரேன்.. கைய பிடிக்க வேணாம்” என்று எரிச்சலுடன் கூறினாள் அவள். நேற்று இருந்த பயம் அவளுக்கு இன்று இல்லை.

 

கிரண்யாவின் கல்லறைக்கு முன் தன்னவளை நிறுத்தினான். கிரண்யாவின் படத்திற்கு கீழே பொறிக்கப்பட்ட எழுத்துகள் தூசி படிந்திருக்க அவற்றை அவனின் கைக்குட்டை கொண்டு சுத்தப்படுத்தினான். 

 

“இப்போ படி” 

 

“நீங்க சொன்ன மாதிரி கிரண்யானு தான் இருக்கு, அதுக்கென்ன இப்போ?” எகத்தாளமாய் கூறினாள்.

 

“ஆமா, கொஞ்சம்  ஃபுல் நேம் படி”

 

கண்களை கசக்கி உற்று பார்த்தாள்.

“மிஸ் கிரண்யா க்றிஸ்டீனா!” முழு பெயரை படித்தவளுக்கு அதிர்ச்சி,

‘அப்போ கல்யாணம் நடக்கலயா நான்தான் தேவையில்லாம கோபப்பட்டேனா?’

 

“இப்போ சொல்லு நான் யார முதல் கல்யாணம் பண்ணேனு?”

 

“நீங்க தானே சொன்னீங்க முதல் மனைவி, முதல் மனைவினு நானா சொன்னேன். சொல்லுறத அலட்டாம ஒழுங்கா சொல்லிருக்கனும். இப்போ எங்கிட்ட கேட்டா, நான் என்ன பண்ண?” என்று சமாளித்தாள். 

 

தன்னவளை சற்று இறந்தகால நிகழ்விற்கு அழைத்துச்சென்றான் அவன்.

 

“புறஞ்சேயன், புறஞ்சேயன் என்றோர் அழகான வாலிபன் இருந்தான். அவனின் கல்லூரி காலத்தில் இளங்காளை போல் தோற்றம் மிடுக்கு பொருந்திய மீசை கலைந்த சிகை இவற்றை பார்த்து மயங்காத மங்கையர் உண்டோ. பல மங்கையர்களுக்கு இவன் மீது ஒரு தலைகாதல்தான். அதில் அவன் ஒரு காதலையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இவ்வேந்தனோ ஒரு பேரழகியே மட்டும் தீவிரமாக காதல் செய்தான். அவள் பெயர்தான் கிரண்யா” 

அவன், தன்னை தானே வர்ணிப்பது பியானாவுக்கு பிடிக்காமல், “ம்க்கும்” என்று தொண்டையை செருமினாள்.

 

“என்ன பியூ?”  

 

“ஒன்னுமில்ல மேல சொல்லுங்க”

 

“அவளும் உன்னை மாதிரி ஆசிரமத்துல வளர்ந்த பொண்ணுதான், உனக்காவது வேர்லின் இருக்கா அவளுக்கு யாருமே இல்ல. வெண்ணைல செஞ்சி வைச்ச சிலை அவ்ளோ அழகா இருப்பா. ரெண்டு வருஷமா 

அவ பின்னாடியேதான் சுத்துனேன்.

அவளுக்கும் என்னைய ரொம்ப பிடிக்கும். ஆனால் காட்டிக்கமாட்டா. விதி செஞ்ச விளையாட்டு அவளோட ஆயுசு இருபத்தி மூனோட முடிஞ்சிட்டு, அதுவும் என் கண் முன்னாடி தான்.. அவளோட உயிர் போச்சு! இறந்ததுக்கு அப்றம் தான் தெரியும் அவளோட ஹார்ட்ல ப்ராப்ளம் இருந்தது. அவ சீக்கிரமா இறந்துருவானு அவளுக்கு முன்னவே தெரிஞ்சிருக்கும் போல அதுனாலதான் என்னை விட்டு விலகியே இருந்தா. எனக்கு தெரிஞ்சிருந்தா நான் ஏதாவது பண்ணி காப்பாத்தியிருப்பேன். உன்னை பார்க்கும் போது அவளை  பார்க்குற மாதிரி ஒரு ஃபீல் எனக்குள்ள” அவன் கூறும் தோணியிலேயே அவன் கொண்ட காதல் மெய் என உணர்ந்தாள் பியானா.

 

“ஓ.. அதுனால என்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?”

 

“ஆமா பியூ, அவள மாதிரி உன்னை மிஸ் பண்ணக்கூடான்னு நினைச்சேன். அதுனாலதான் உன்னோட விருப்பத்துக்கு கூட வெய்ட் பண்ணல, கிரண்யாவ பத்தி எதுவும் தெரியாம அவள மிஸ் பண்ணேன். அதான் நீ வந்த அடுத்த நாளே உன்ன பத்தி எல்லாமே தெரிஞ்சிக்கிட்டேன்.

 

அவதான் என்னை விட்டுட்டு போயிட்டா நீயாவது என்கூட இருப்பியா? நான் உனக்கு பண்ணது தப்புதான் மன்னிச்சிரு” இவ்வார்த்தைகளை அவன் கூறும் போது நாடிகள் சுருங்கி விழிகளில் விசனம் கூடி நீர் வழிந்தது.

 

தன்னவன் அழுவதை அவளின் விழிகள் பார்க்க தயங்கியன.

‘எனக்கு மட்டும் கவலை இருக்குனு நினைச்சிட்டு இருந்தேன்.சாரோட மனசுக்குள்ளயும் இவ்ளோ கவலை இருக்கே, அப்போ வேர்லின் சொன்ன மாதிரி சார் நல்லவரா?’ என்றது அவள் மனம்.

 

“உனக்கு ஒன்னு தெரியுமா, உன்னோடு மூக்கும் அவளோட மூக்கும் ஒரே மாதிரி நீயும் வெண்ணைல செஞ்ச மாதிரிதான் நீயும் இருக்க, லவ் பண்ணதுக்கு அவளோட கையை கூட புடிச்சதில்ல. எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுனு சொன்னதெல்லாம் என்னோட கனவு இன்னும் நிறைய கனவு இருந்துச்சு எல்லாத்தையும் கல்லறையோட பொதச்சுட்டேன். நீயும் என்னைய விட்டு போயிறாத தாங்க மாட்டேன் டீ செத்துருவேன்” 

தன்னவன் வார்த்தைகள் முன்னால் காதலியை வர்ணித்தது பொறுக்கவில்லை என்றாலும் அவனின் துயரங்களை எல்லாம் இவளின் மனம்  ஏற்க மறுக்கவில்லை. “கிரண்யா இருந்தா என்னை கல்யாணம் பண்ணாம அவங்க கூட சந்தோஷமா இருந்து இருப்பீங்கதானே சார். என் உயிர் இருக்கும் வரைக்கும் உங்ககூட இருப்பேன் சார்” என்று தன்னவனுக்கு ஆறுதலளித்தாள்.

 

“ஏன் இப்டி எல்லாம் பேசுற, உனக்கு சும்மா பீவர் வந்ததே எனக்கு எவ்ளோ பயமா இருந்துச்சி தெரியுமா, எல்லாம் அவன் செயல் நம்ம கைல எதுவுமே இல்ல. அவளோட தலை எழுத்து அவ்ளோதான். நீ என்கூட பல வருஷம் சேர்ந்து வாழனும்னு  ஆசைப்படுறேன். ப்ளீஸ் அத மறுக்காத” 

 

“நான் எதையும் மறுக்கல சார் மறந்திடுவேனோனு பயமா இருக்கு சார், குடும்ப வாழ்க்கைக்கு வந்த பிறகு, டாடிய தேடனும்,

வேர்லினுக்கு அம்மா, அப்பா, அக்காவா இருந்து ஒரு நல்லா வாழ்க்கை அமைச்சு குடுக்கனும். இதெல்லாம் நடக்காம போயிருமோனு பயமா இருக்கு சார்” 

 

“வேர்லினுக்கு நல்ல வாழ்கை அமைச்சு குடுக்குறது என் பொறுப்பு. உங்க அப்பா கிடைக்கிற வரைக்கும் நாம இப்டியே இருக்கலாம். பத்து வருஷம் ஆனாலும் பரவாயில்ல.

அது வரைக்கு என்னை புரிஞ்சு லவ் பண்ண மட்டும் ட்ரை பண்ணு அது போதும்” 

“இல்ல சார், நாளைக்கு நம்ம வாழ ஆரம்பிச்சதுக்கு அப்றம், நானே என் தங்கச்சிய ஒழுங்கா பார்க்காட்டி?” 

 

“அப்டி எல்லாம் நடக்காது நம்பு, நீயே பார்க்காட்டியும், என் பொண்ண பார்த்துக்க எனக்கு தெரியும். எனக்கு எப்பவும் முதல் பொண்ணு வேர்லின்தான். எனக்கு ஒரு டவுட்?” எல்லாம் கூறிவிட்டு இது என்ன சந்தேகம்.

 

“தேங்க் யூ சார், என்ன டவுட் கேளுங்க” 

 

“என் மேல லவ்வே வரலனு சொன்னீயே, கிரண்யாவ கல்யாணம் பண்ணேனு சொன்னதும் அவ்ளோ கோபம் வருதா?”

 

“அதுக்கு பேர் லவ் இல்ல என்னோட உரிமை அவ்ளோ தான்” 

 

“என்ன உரிமை, பொண்டாட்டிங்கற உரிமையா?”

 

“ஆமா, நீங்கதானே தொட்டு தாலி கட்டுனீங்க. அப்போ இது என் உரிமை இல்லையா?”

 

“ஹாஹா.., தொட்டு தாலி கட்டுன புருசன் பொண்டாட்டிய தொட்டு தூக்குனா அது தப்பு, எப்டி எப்டி.. ‘என்னை ஏமாத்திடீங்க சார், என் வாழ்க்கையே பாழா போச்சு..’ கத்திய எடுத்து கைய வெட்டிக்க போனீயே அப்போகூட என் மேல ஒரு துளியளவும் லவ் வரல இத நான் நம்பனுமா?” 

 

“சார் ஒன்னு புரிஞ்சிக்கோங்க. சின்ன வயசுல இருந்து எனக்கு எல்லாமே ஏமாற்றம்தான். கல்யாணம் வேணாம்னு இருந்தேன் நீங்களே வந்து பலவந்தாம ஒத்துக்க வைச்சீங்க.இப்போ நீங்களும் என்னை ஏமாத்திடீங்கனா எனக்கு எப்டி இருக்கும். 

அவங்க உங்க முன்னால் லவ்வர்னு சொல்லிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்துருக்காது. கல்யாணம் ஒரு முறை தான் நடக்கனும். இத்தாலில வளர்ந்தாலும் நான் இந்திய பொண்ணுதான்”

தாயை பரிக்கொடுத்து, தந்தையை பிரிந்து பாராதிருந்து அவரின் வருக்கைக்கு காத்திருந்த காலமெல்லாம் ஏமாற்றங்கள் ஏராளம். தங்கைக்கு பெற்றோர் பாசத்தினை முழுவதுமாய் கொடுத்திருந்தாள். அவளுக்கு யாரும் கொடுத்ததில்லையே, இத்தாலியில் புளோரன்ஸ் கதீட்ரல் தேவாலயத்தின் அருட்தாயின்(மதர்) அரவணைப்பில் வளர்ந்ததால் அவர்கள் கண்டிப்பான முறையில் வளர்த்தார்கள். அதற்காக அடிமை முறையென எண்ண வேண்டாம். 

 

ஆசிரமத்திற்கு வரும் ஏனைய பெற்றோர்களை பார்த்து பியானா  கண்களால் ஏங்கியது அதிகம் என்றே கூறலாம். அப்படி இருக்கும் வேளை தன்னவன் கொடுத்த அதிர்ச்சி பெரிய ஏமாற்றம் தானே அவளுக்கு, முறுக்கை சுற்றாமல் முன்னால் காதலி என்றே சுருக்கமாக கூறியிருக்கலாம் அவன்.

“ஓ.. என் மேல லவ்வே வரல, லவ்வராவும் ஏத்துக்கல புருசனாவும் ஏத்துக்கல ஆனால்,  எனக்கு முதல் கல்யாணம் ஆகிடுச்சுனு  சொன்னதும் பொசசிவ்னஸ் வருது அது உனக்கே தெரியல, நீ சொன்னதெல்லாம் உன்னோட உரிமைதான் காதலுரிமையா, அன்புரிமையா, கணவனுரிமையா நீ எதை சொல்ல போற?” அவளுள் இருக்கும் ஒரு தேன் துளி காதலை தன்னவன் உணர அதை அவள் மனது ஏற்க மறுத்தது.

“என்னை கொல்லாதீங்க சார்?” என்று அவள் அழுதாள். அவள் கடமைகளை மறந்திடுவாள் என்றே அவள் காதல் உணர்ச்சியை கட்டிப்போட்டாள். 

 

அவனோ இரு கைகளை தாரளமாக விரித்து, “ஏய், பொண்டாட்டி, பியூமா மாமாக்கிட்ட ஓடி வா” என்று ஆசையோடு அழைத்தான். 

 

“போடா, டாடி வரும் வரைக்கும் நோ ஹக்!” தன்னவனுக்கு நிபந்தனை எனும் பூட்டைய் இட்டாள் பூவை. 

 

“மரியாதை எல்லாம் எங்கயோ போயிருச்சு. என்னடி கொடுமை, ஹக் பண்ணுறதுக்கு கூட உன் அப்பா வரனுமா! யோவ் மாமா எங்கயா இருக்க?” பூவை இட்ட பூட்டை  திறவோனாக(ஆண்)  திறப்பவன் ஏற்றுக்கொண்டான்.

 

“எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் குடுங்க சார் ப்ளீஸ்” இவள் தன்னவனிடம் வருந்திக்கேட்டாள்.

“ம்ம்ம் ஓகே, வீட்ல இருந்து வரும் போது ஹனிமூன் போறோம் சொல்லிட்டு வந்துட்டோம்.. சோ”

 

“அதுக்கு..!”

 

“எங்கயாது ஹோட்டலுக்கு போகலாம்”

 

“இல்ல இல்ல நான் வரல” தன்னவன் தனிமையில் வரம்பை மீறிடுவானோ என்ற பயத்தில் மறுத்தாள்.

 

“ஏய், ரஞ்சனா முன்னாடி பில்பட் பண்ண வேணாமா? பயப்படதா, நாளையோட கல்யாணம் பண்ணி வன் வீக் ஆக போகுது, ஒரு குட்டி செலபிரேட் அவ்ளோ தான் ப்ளீஸ், நம்ம வீட்ல கஷ்டம்டீ” பாவையிடம் பாலகனாய் பணிந்தான்.

 

“ம்ம்ம், டிரஸ் எதுவும் எடுத்துட்டு வரல” பயத்தில்தான் அதையும் கூறினாள்.

 

“போற வழில வாங்கிக்கலாம். ஆஸ்பிடல் போயிட்டு இன்ஜக்ஷன் போட்டு போகலாம் சரியா, இப்போ கிளம்பலாம்” கிரண்யாவின் கல்லறை முன் சிறி பிரார்த்தனை மேற்கொண்டு இருவரும் கிளம்பினர்.

 

அவன் கூறியவாறு மருத்துமனைக்கு சென்று தன் மனையாளின் காய்ச்சலுக்கு தடுப்பூசி ஏற்றி மேலும் சில மாத்திரைகளையும் வாங்கிக்கொண்டான். அப்படியே பேரங்காடி(ஷாப்பிங் மால்) அழைத்து சென்றான். 

 

“பசிக்குது முதல்ல சாப்பிடலாம்”  என்றான் அவன்.

 

“நான் மான்சிங்க்ல இருந்து பிரஷ் பண்ணல சார்”

 

“ஒரு நாளைக்கு பிரஷ் பண்ணாம சாப்பிட்டா ஒன்னும் ஆகாது பியூ” என்று இரைப்பை அவனை வாட்டியதால் அப்படி கூறினான். 

 

இருவரும் உணவு வேட்கையில் இறங்கி உதரங்களை(வயிறு) நிரப்பினர். அப்படியே உடைகளை வாங்க சென்றனர். புறஞ்சேயனுக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டான். பிறகு பியானாவுக்கு தேவையானவற்றை வாங்க அவள் பின்னே சென்றான்.

அவளுக்கு பிடித்தாமான உடைகளை அதன் பெறுமதியை பார்க்காமல் வாங்குமாறு கூறினான். 

 

“சார், எங்க போனாலும் பின்னாடியே வருவீங்களா? இது லேடீஸ் செக்ஷன் வெளிய போங்க சார்” தன்னவனின் செவியின் அருகில் வந்து மெதுவாகவும் தீவிரமாகவும் கூறினாள்.

 

அவனும், “ஈஈஈ..” பல்லை காட்டியவாறு ஒரு விரலால் கேசத்தை சுழற்றி குறுநகையுடன் நாகரீகமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். பியானாவும் அவளுக்கு பிடித்தமான தேவையான ஆடைஅணிகலன்களை வாங்கிக்கொண்டாள். 

 

அப்படியே ஐந்து நட்சத்திர விடுதியை நோக்கி மகிழ்வோடு மகிழுந்தை(கார்) செலுத்தினான். இருவரின் பெயரில் ஒரு பிரம்மாண்டமான அறையை ஒரு நாள் இரவிற்கு மட்டும் பதிவு செய்தான். அறைக்கு சென்று இருவரும் ஓய்வாக அமர்ந்தனர்.

 

‘ஏதோ  செலபிரேட்னு சொல்லுறாரு என்ன குண்ட தூக்கி போடுவரோ தெரியலயே? ஆண்டவரே!” என்று சிலுவையிட்டுக்கொண்டாள். 

 

****

 

 

Leave a Reply

error: Content is protected !!