💙இருளை ஈர்க்கும் ஒளி💙

Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

 

ஈர்ப்பு 31

இரு குடும்பம் ஒரு குடும்பமாக, இருமனம் ஒரு மனமாகி ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, அன்பை பரிமாறி, அக்கறைக்காட்டி, சுக துக்கங்கள் பகிர்ந்து வாழ்வதே திருமணம் வாழ்க்கை.

முதலில் திருமணத்திற்கு தேவையான பட்டு புடவைகள் வாங்கினார்கள். முகூர்த்த புடவை மட்டுமின்றி நலங்கு, நிச்சயம், திருமண இரவு, மறு வீடு இப்படி பல புடவைகளும் எடுக்க வேண்டி இருந்தன.

முதலில் அந்தந்த பட்டுப்புடவைகள் எடுத்துவிட்டு, பிறகு முகூர்த்தத்துக்கான புடவை எடுக்க துவங்கினர்.

இங்கே தான் பிரச்சனை ஆரம்பித்தது முகூர்த்த புடவை எடுப்பதில் பிரச்சனையை ஏற்படவில்லை.

அதற்கு ‘யார் பணம் கொடுப்பது’ என்பதில்தான் பிரச்சனையே ஆனது.

இதில் யாரும் எதிர்பார வண்ணம் ராதாவும், ராஜும் வாக்குவாதம் செய்து கொண்டனர்.

‘தன் மகளுக்கு தான் தான் செய்வேன்’ என்று ராதாவும் ‘நான் கட்டிக் கொள்ள போறவளுக்கு நான்தான் எடுப்பேன்’ என்று ராஜும் முட்டிக்கொண்டனர்.

“விடுங்கம்மா தங்கச்சிக்கு ராஜ் எடுத்துக் கொள்ளட்டும். நீங்க என் கல்யாணத்துக்கு உங்க மருமகளுக்கு எடுத்துக்கோங்க” என்று சமாதானப்படுத்தினான் ஷ்யாம்.

அவன் அதை கூறும் போது தியாவை ஒரு முறை திரும்பி பார்த்தான். அவளும் அவனை தான் பார்த்திருந்தாள்.

முகத்தில் சிரிப்புடன் இதை கவனித்த மித்துவும், வர்ஷாவும் “இதுக்கு இவங்க ரெண்டு பேரும் நேரடியாவே சொல்லி இருக்கலாம்”, என்று பேசிக் கொண்டார்கள்.

மித்து வர்ஷு மட்டுமல்ல அதை ராதாவும் கவனித்தார்.

அதன்பின் ராஜ்ஜே வர்ஷாவிற்கு முகூர்த்த புடவை எடுத்தான்.

அதை தொடர்ந்து கோயில் சென்று இறைவனை தரிசித்து, ‘அனைத்தும் நல்லபடியாக நடக்க வேண்டும்’ என்று முகூர்த்த புடவை வைத்து வேண்டிக்கொண்டு சென்னை திரும்பினர்.

சென்னையில் ஒரு பிரபலமான கடையில் இவர்கள் குடும்ப வழக்கமான தாலியை செய்ய சொல்லி ஆர்டர் கொடுத்து விட்டு வீடு திரும்பினர்.

அனைவருக்கும் அன்று மதியம் ஷ்யாம் வீட்டில் தான் விருந்து. காலையிலேயே அனைத்தையும் தயார் செய்து விட்டு தான் வந்திருந்தார் ராதா.

காலை நேரமே எழுந்து காஞ்சிபுரம் சென்று புடவை வாங்கி, இங்கேயும் வேலை முடித்து விட்டு வந்ததால், மதியம் ஒரு ரெண்டு முப்பது மணி போல உணவுக்கு வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

பெண் வீட்டில் கை நனைப்பது என்பது ஒரு முறை. இவர்கள் இரு குடும்பமும் முன்பே தெரிந்தது என்பதால் பெரிதாக எந்த முறைகளையும் செய்து கொள்ளவில்லை.

இருந்தாலும் ராதாக்கு இவ்வாறு ‘மாப்பிள்ளை வீட்டுக்கு விருந்து கொடுக்க வேண்டும்’ என்பது மனதிலிருந்து கொண்டே இருந்ததால் இன்று அதை நிறைவேற்றிக் கொண்டார்.

அருணுக்கு கிளம்பும் நேரத்தில் ஒரு வேலை வந்து விடவே, அவனால் காஞ்சிபுரம் வர முடியவில்லை. எனவே, இப்பொழுது ஷ்யாமின் வீட்டிற்கு வந்திருந்தான்.

சந்திரன், லட்சுமி, மித்து, அருண், ராஜ், கிருஷ்ணன் என அனைவரும் சாப்பிட அமர, லட்சுமி தான் வர்ஷாவையும், ராஜின் அருகில் அமர்ந்து சாப்பிட சொன்னார்.

‘சரி’ என அவளும் அமர்ந்து கொள்ள தியா ராதாவுடன் சேர்த்து பரிமாறு துவங்கினாள்.

ஒரு கட்டத்தில் ராதாவையும் அவர்களுடன் சேர்த்து அமர சொல்லி சாப்பிட வைத்து விட்டனர்.

ஷ்யாம், தியாவுடன் சாப்பிட நினைக்கவே தான் பிறகு சாப்பிட்டுக் கொள்வதாய் கூறிவிட்டான்.

இனிப்பில் ஆரம்பித்து…தயிர் சாதம் வரை அனைத்து பதார்த்தங்களும் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தார் ராதா. அனைவருமே அவரை பாராட்டி கொண்டே உண்டு முடித்தனர்.

அனைவரும் ஹாலில் சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஷ்யாமும், தியாவும் தனிமையில் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அவர்கள் உணவை விழுங்கினார்களோ இல்லையோ, ஒருவரை ஒருவர் கண்களாலே விழுங்கிக் கொண்டிருந்தனர்.

“இந்த பாயாசத்துல ஏன் இனிப்பு இவ்வளவு கம்மியா போட்டு இருக்காங்க”.

“அப்படியா”.

“இந்தா ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு பாரேன்”, என்று அவளுக்கு ஒரு டீஸ்பூன் எடுத்து ஊட்டி விட்டான்.

“இல்லையே சுகர் கரெக்டா தான் இருக்கு” எனக் கூறிக்கொண்டே அவனைப் பார்க்க.

அவனோ அவள் உண்டா அந்த டீஸ்பூனை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு. அதே டீஸ்பூனில் பாயசத்தை மிகவும் ருசித்து உண்டான்.

இவளுக்கு அதை பார்த்து என்னவோ போலாக தலைநிமிராமல் சாப்பாட்டில் கவனமானாள்.

திடீரென்று ஷ்யாமுக்கு இருமல் வர, பருகுவதற்காக தண்ணீரை எடுத்து நேரம் அது கைத்தவறி கீழே கொட்டியது.

தியா சட்டென்று அவள் குடித்துக் கொண்டிருந்த டம்ளரை அவனிடம் நீட்டினாள்.

அதுவரை ஏதோ டிபியில் பாதிக்கப்பட்டவன் போல் விடாமல் இரும்பிக் கொண்டிருந்தவன், சட்டென்று ஏதும் நடவாதது போல் தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தான்.

அவன் செயல் புரிந்து கொண்டவள், அவனை முறைத்தாள்.

என்னமோ அவள் பாசமாய் பார்ப்பது போல, இவன் சிரித்து வைத்தான். அது மட்டுமா அவளைப் பார்த்து கண்ணடித்து வேறு அவளை பதட்டமாக்கினான்.

இப்படியாக அவளை சீண்டிக் கொண்டே இருவரும் உண்டு முடித்தார்கள்.

இவர்கள் அனைவரும் ஒன்றாய் இருக்கும்போதே பத்திரிக்கை வந்து இறங்க, பத்திரிகையை பார்த்து சந்திரன் மற்றும் லட்சுமி தம்பதியினர் குழப்பமுற்றனர்.

ஏனென்றால் அவர்கள் ராஜின் உண்மையான அப்பா அம்மாவான ராஜசேகரன், லக்ஷ்மி தம்பதியரின் பெயரை தான் போட சொல்லி இருந்தார்கள்.

ஆனால் பத்திரிகையில் இருந்ததோ ‘ராஜசேகரன், லட்சுமி மற்றும் ராமச்சந்திரன் , லக்ஷ்மி தம்பதியரின் ஜேஷ்ட குமாரன் ராஜேஷ் என்ற வரன்…’ என்பதைப் பார்த்துதான்.

கிருஷ்ணனிடம் அதைப் பற்றி அவர் விசாரிக்க, “ராஜ் தான் அவ்வாறு போட்ட சொன்னான்” என்று அவர் கூறினார்.

இது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராஜ் வந்து, “உங்க பேர் இந்த பத்திரிகைல இல்லாம போனா மேல இருக்க என்ன பெத்தவங்க கூட கண்டிப்பா ஃபீல் பண்ணுவாங்க. இந்த பத்திரிகையில் இருக்க வார்த்தைகள் நான் உங்களை எங்க வெச்சிருக்கேன்னு காட்ட தான். உங்க பேர் போடாம அவங்க பேர் மட்டும் போட சொல்லி இருக்கீங்க”.

ராஜ் வாதம் இவர்களுக்கு சந்தோஷத்தையே கொடுத்தது. இவர்களின் பாசப்பிணைப்பை நன்றாக புரிந்து கொண்ட வர்ஷாவின் குடும்பத்தினருக்கும் இதை பார்க்க சந்தோஷமாகவே இருந்தது.

பின்பு அனைவரிடமும் விடைபெற்று ராஜ் குடும்பம் வீடு சென்று சேர்ந்தனர்.

**********

அதன் பின் நாட்கள் வேகம் எடுக்க, ஒரு மாதம் முடிந்து திருமண நாளும் வந்தது.

காலை ஐந்தரை மணிக்கு முகூர்த்தம் என்பதால் சீக்கிரமே எழுந்து விட்டார்கள். முன்தினம் சரியாக உறங்காது அனைத்தும் சேர்ந்து மணமக்களை சேர்வாக்கியிருந்தது..

அத்தனை சோர்விலும் இருவர் முகத்திலும் பொலிவு இருந்தது. ஒருவர் மற்றவருக்கு சொந்தமானவர்கள் என்பதை உற்றார் உறவினர், சுற்றம், நட்பு என அனைவருக்கும் அறிவிக்கும் நாள் அல்லவா?

மேடையில் இரு வீட்டினர் மற்றும் சில உறவுகள் நின்றிருந்தார்கள்.

தியா நாத்தனார் முடிச்சுப போட வேண்டும் என்பதால் அவள் வர்ஷாவின் பின் நின்றிருந்தாள். அவள் அருகிலேயே மித்துவும் நின்றிருந்தாள்.

நேத்து ரிசப்ஷனில் அழகிய லெகங்காவும், அதற்கு தோதான ஹேர் ஸ்டைல்,மேக்கப் என்று அழகில் மின்னினாள் தியா. இன்றோ பட்டுப்புடவையில் தேவதையை தெரிந்தாள்.

சும்மாவே தியாவின் மேலிருந்து ஷ்யாமால் கண்களை எடுக்க முடியாது. இப்பொழுது கேட்கவா வேண்டும்?

ராஜின் நிலையோ ஒரு படி மேலே இருந்தது. வர்ஷா இயற்கையாகவே அழகு அதிலும், அவன் வாங்கிய பட்டுப் புடவை சரக்கரக்க மணப்பெண்ணுக்கே உரிய அலங்காரங்களுடன் அருகே இன்னும் சில மணி நேரங்களில் தன் மனைவியாக போகும் தன்னவளையே ஆசை தீர பார்த்தான்.

“கெட்டி மேளம் கெட்டி மேளம்” ஐயர் கூற, பரபரப்பான மக்கள் கூட்டம் மணமக்களை எட்டி எட்டி பார்த்தார்கள்.

தாலியை தொட்டு ஆசிர்வதித்த மங்கள அர்ச்சதையை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டார்கள்.

ராஜ், வர்ஷாவின் கழுத்தில் மங்கள நாணில் முதல் இரண்டு முடிச்சை அவன் போட, மற்றொரு நாத்தனார் முடிச்சை தியா போட்டாள்.

இப்பொழுது வர்ஷா திருமதி வர்ஷா ராஜேஷ்.

இவ்வளவு நேரம் தியாவை சைட் அடித்துக் கொண்டும். கல்யாண வேலையில் பரபரப்பாகவும் சுற்றி திரிந்த ஷ்யாமுக்கு, இப்பொழுது தங்கை ‘தன் வீட்டு பெண் அல்ல மற்றவர் வீட்டுக்கு சொந்தமாகி விட்டாள்’ என்ற உண்மை உரைக்க.

தானும் தங்கையும் சிறுவயதிலிருந்து இப்பொழுது வரை பகிர்ந்துக்கொண்ட நிமிடங்கள் நினைவடக்குகளில் ஓட, கண்களில் கண்ணீர் வழிந்தது. அருண் தான் அவனை சமாதானப்படுத்தினான்.

கிருஷ்ணன் ராதா தம்பதியரும் அதே மனநிலையில் தான் இருந்தார்கள்.

பெண்ணை ‘ஒரு நல்ல குடும்பத்தில் கட்டி வைத்தோம்’ என்ற சந்தோஷமும்.

அதே நேரம் தங்கள் பெண்ணை ‘தங்கள் இல்லத்தின் தேவதை மற்றொரு இல்லத்திற்கு சென்றுவிட்டாளே’ என்ற துக்கமும் ஒன்று சேர ஊமையாய் கதறியதே அவர்களின் மனது.

திருமணத்தன்று ஒவ்வொரு பெண்களுக்கும் சந்தோஷம், கவலையும் இரண்டும் கலந்தே இருக்கும்.

பிறந்தது முதல் எப்படி ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு நம் வளர்ந்தோமோ அதே போல் இதுவும் ஒரு குழந்தை பருவம் மாதிரி தான்.

புது வீட்டில் அடி எடுத்து வைத்து, மெது மெதுவாக அந்த வீட்டின் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கற்று,

அந்த வீட்டை சேர்ந்தவர்களுடன் இணைந்து எந்த இடத்திலும் வழி பிசறாமல் தேர்ந்து வாழ வேண்டும்.

இனி தான் வாழ்வில் பல விஷயங்களை சந்திக்க வேண்டி வரும்.

ஒரு நான்கு சக்கர வண்டியில் ஒரு சக்கரம் பழுதானாலும் வண்டியை நாம் ஓட்டிச் செல்ல முடியாது, அதை போல் தான் திருமணத்திற்கு பின் கணவன் என்னும் ஒரு முக்கிய சக்கரத்தை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த சக்கரம், மாமியார் மாமனார் உள்ளுக்குள்ள ஆயிரம் பூசல்கள் இருந்தாலும், வெளியில் அவர்களை விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்வது சிறந்தது.

தாய், தந்தை என்னும் சக்கராத்தையும் பார்க்க வேண்டும்.

‘தாய்வீடு’ என்பது முக்கியமான ஒன்று தாய் வீட்டுக்கும் மாமியார் வீட்டுக்கும் எவ்விதமான பிரச்சனைகளும் வராதவாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கே நடப்பதை அங்கேயும் அங்கே நடப்பதை இங்கேயும் தெரிவிக்காமல் இருப்பது நல்லது.

அடுத்த நான்காவது சக்கரம் தன் உடன் பிறந்தவர்கள் மற்றும் கணவன் உடன் பிறந்தவர்கள் இருவரையுமே எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்.

கணவனிடம், வீட்டுரை பற்றி குறை கூறினால் நிச்சயம் கணவன் மனைவிக்குள் தான் பூசல்கள் வரும்.

இந்த விஷயங்கள் யாவுமே ஆண்களுக்கும் பொருந்தும், அவர்களும் ‘தன் தாய் வீடு, தன் மாமியார் வீடு, தன் மனைவியுடன் பிறந்தவர்கள், தன்னுடன் பிறந்தவர்கள்’ என அனைவரையுமே தன் உறவுகளாய் ஏற்று அவர்களைப் பேணி பாதுகாக்க மனைவிக்கு துணை நிற்க வேண்டும்.

குடும்பம் என்பது பெண்களை சுற்றி மட்டுமில்லை, அதில் ஆண்களும் அடக்கம் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே, அதில் சம பங்கு இருக்கிறது.

திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்த பின் இருவரையும் மாப்பிள்ளை வீடு அழைத்து சென்று, பால்பழம் அருந்த செய்து. முக்கியமாக பூஜை அறையில் விளக்கேற்றி தெய்வத்தை வழிபட வைத்தனர்.

ராஜின் பெற்றவர்கள் படங்களுக்குள் தெய்வங்களாய் இருந்தனர். அவர்களுக்கும் விளக்கேற்ற சொன்னார் லட்சுமி.

ராஜும், வர்ஷாவும் அவர்கள் இருவரையும் வணங்கி ஆசி பெற்றுக் கொண்டார்கள். அங்கு செய்ய வேண்டிய முறைகள் அனைத்தையும் செய்து பெண் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

பெண் வீட்டில் தான் அன்று அனைவருக்கும் விருந்து. அது மட்டுமல்ல திருமண இரவை கழிக்க வேண்டியதும் இங்கே தான். இது அந்தந்த சமூகத்திற்கு ஏற்றார் போல மாறும்.

பொதுவாக மாப்பிள்ளையுடன் பிறந்தவர்கள் அன்று இரவு பெண் வீட்டில் கழிப்பது வழக்கம். ஆனால் தியாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் அவளை தன்னுடனே அழைத்து சென்று விட்டனர் அவள் தாய் தந்தை.

அனைத்து புதுமண தம்பதிகளுக்கும் மறக்க முடியாத அந்த இரவும் வந்தது. வர்ஷா இலகுவான சேலையை எடுத்துக்கொண்டவள், அதை அவளே அணிந்துக் கொள்ள, அவளை மிதமான ஒப்பனையில் தயார் செய்திருந்தார் ராதா மற்றும் சில உறவுக்கார பெண்கள்.

ராதா ஒரு தாயாய் அவளுக்கு சில விஷயங்களை மேலோட்டமாக சொன்னார்.

பின் தாய், தந்தையிடம் ஆசி பெற்று, பூஜை அறை சென்று ‘தன் புது வாழ்க்கை சிறக்க வேண்டும்’ என்ற வேண்டுதலை வைத்துக்கொண்டு இறைவனை வணங்கினாள்.

பின் இளவட்டங்கள் அனைவரும் வர்ஷாவை சாந்தி முகூர்த்தத்திற்கு தயார் செய்த அறை வாசலில் விட்டு வந்தார்கள்.

படபடக்கும் மனதுடன் அவள் உள்ளே சென்று முதலில் அந்த அறையை நோட்டம் விட்டாள்.

அந்த கிங் சைஸ் மெத்தை மல்லிப்பூ, ரோஜா பூ போன்ற பூக்களைக்கொண்டு கட்டிளை முழுவதுமாய் மறைத்தார் போல சரம் சிரமாக இருந்தது.

அதுமட்டுமின்றி கட்டில் நடுவே ரோஜாக்கள் கொண்டு இதய வடிவம் அமைத்து அதில் ஆர் வி என்ற எழுத்துக்கள் போடப்பட்டிருந்தது.

இதய வடிவத்திலான பலூன்கள் ஆங்காங்கே ஹீலியம் காற்றின் உதவியுடன் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தது ‘ராஜ் வர்ஷா ஜஸ்ட் மேரிட்’ என்னும் பலூன்களில் எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இப்படியாக பழமை,புதுமை இரண்டும் கலந்தார் போன்ற ஒரு முதல் இரவு அறையை ஏற்பாடு பண்ணி இருந்தார்கள்.

ஏனோ அந்த அறையை சுற்றிப் பார்த்தவளுக்கு கை கால்கள் வெடவெடவென நடுங்கியது.

தன் பின்புறம் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தாள்.

அப்பொழுதுதான் குளியல் அறையிலிருந்து வெளிவந்த ராஜ். இவள் நடுங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவள் அருகே வந்தான்.

அவன் என்னவோ அவளை சமாதானப்படுத்த தான் வந்தான். ஆனால், அவன் நெருங்க நெருங்க இவர்களின் கைகால்கள் இன்னும் ஆட்டம் கண்டது.

அருகே வந்து அவளின் கைகள் பற்றினான். “ஏன் இப்படி நடுங்கிட்டு இருக்க, இப்ப என்ன ஆச்சு.”

அவள் எதுவும் பேசவில்லை இடம் வலமாக ‘ஒன்றுமில்லை’ என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

“நான் என்ன சிங்கமா புலியா? என்ன பாத்து எதுக்கு உனக்கு இப்ப இப்படி பயம்.”

…………..

“இந்த சாரீ உனக்கு அழகா இருக்கு. யார் கட்டிவிட்டா?”, எனக் அவள் பயத்தை குறிக்கும் நோக்குடன் கேட்டான்.

“நான் தான்”, மெதுவாக உரைத்தாள்.

“ஓ! உனக்கு சாரீ எல்லாம் கட்ட தெரியுமா?”

“ஏன் தெரிய கூடாதா?” இப்பொழுது கொஞ்சம் சகஜமாய் பேசினாள்.

“தெரியலமே தப்பு இல்லையே இதுவரை நீ சாரீ கட்டி நான் பார்த்ததே இல்ல இல்லையா அதனால தான்”.

“ரொம்ப ரேரா தான் கட்டுவேன். அதான் பார்த்திருக்க மாட்டீங்க”.

இப்படியாக அவளை மெது மெதுவாய் பேசி இயல்பாகினான்.

சிறிது நேரம் இவ்வாறு பேச்சு சென்று கொண்டிருக்க, அவள் இயல்பாகிவிட்டாள் என்றதும் மெல்ல அவளை நெருங்கினான்.

அவ்வளவு நேரம் இயல்பாய் இருந்தவளின் மனது திரும்பவும் வேகமாக அடிக்க தொடங்கியது.

அவளின் கரம் பற்றி அவளை அவனின் அருகில் அமர்த்தினான்.

“பயமா இருக்கா”

“ம்..”

“பயப்படாதே, உன்னை நான் ஹர்ஷா ஹாண்டில் பண்ணுவேனா?”

‘மாட்டான்’ என தலையாட்டினாள்.

பின் நெற்றி, கண்கள், கண்ணம் என முத்த ஊர்வலங்கள் தொடங்கி, இறுதியாய் அவள் இதழில் இளைப்பாறினான்.

பெண்ணுக்கு உடலில் புதிதாய் மின்சாரம் பாய்ந்தது.

பெண்ணின் மென்மையை அவன் உணர, அந்தக் காவலன் திருடனாய் மாறி அவளிடம் அவனுக்கு பிடித்த அனைத்தையும் திருடினான்.

இப்படியாக அவர்களின் முதல் இரவு இனிமையான துவங்கியது.

கல்லூரியில் இவ்வளவு நாட்கள் கற்றுத் தராத பாடங்களை தன் கணவனின் மூலம் கற்றுக் கொண்டாள்.

விடிய விடிய ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள, ‘ஒருவரின் பிடித்தம் என்ன’ என்று மற்றவர் அறிய, இப்படியாக இனிமையான பொழுதுகள் கழிந்தது அந்த புது ஜோடிக்கு.

ஷ்யாம் அவன் அறை பால்கனியில் நின்று கொண்டு அந்த வெண்ணிலாவை பார்த்து தன் மனங்கவர்ந்தவளை எண்ணி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.

இவர்கள் இருவரும் எப்பொழுது ஒருவருக்கொருவர் வாய்மொழியில் காதல் பரிமாறிக் கொள்வார்கள்?

(போன எபிக்கு லைட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட வாசக தோழமைகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்🙏 இனிஅடுத்த எபியில் சந்திக்கலாம்…பை….பை….)

 

 

 

error: Content is protected !!