💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு 3
“’குழந்தையின் முதல் அழுகை’ – இருள் சூழ்ந்த பாதுகாப்பான தாயின் கருவறையிலிருந்து ஒளிமயமான உலகைக் கண்ட பயத்தின் வெளிப்பாடு”
காலையில் ஷ்யாமின் வீட்டிற்கு வந்த அருண். அவனை அவசர அவசரமாக கிளப்பி இருந்தான். மித்துவை பார்த்த, ஷ்யாமிற்கு அருணின் செய்கைக்கான காரணம் புரிய அவனை முறைத்தான்.
அதை அவன் கவனித்தால் தானே, மித்து வந்தவுடன் அவளிடம் பேசப் போய் விட்டான்.
காலேஜில் ஒரு முறை வர்ஷா, ஷ்யாம் தன் அண்ணன் என்பதை அறிமுகப்படுத்தி இருந்தாள்.
அருண் மித்துவுடன் பேசிய நேரம், தியா ஷ்யாமை அணுகி, “நீங்க எனக்கு ஒரு உதவிப் பண்ண முடியுமா”, என்றாள் தயக்கமாக.
“ம், சொல்லுங்க என்ன வேணும்”, என அவன் சகஜமாகக் கேட்க.
அதில் தயக்கம் நீங்கி, “வர்ஷாக்கு சர்ப்ரைஸ் பிளான் பண்ணி இருக்கோம் அதுக்கு உங்க ஹெல்ப் வேணும்.”
“இப்படி கேட்ட மறுக்க முடியுமா சரி சொல்லுங்க என்ன வேணும்”
“முதல்ல அவளுக்காக ஷாப்பிங் பண்ண ஹெல்ப் பண்ணனும்”
“சரி வாங்க”.
அவள் விருப்பம் அறிந்து முதலில் ஆல்ளுயர டெடி பியர், காட் வாங்கினாள்.
பிறகு, கிரிஸ்டலிலால் ஆன ஒரு பெண்ணின் மாடல். அதை மிகவும் நுட்பமாக வடிவமைத்திருந்தனர் அதை பார்த்தவுடன் பிடித்து விட்டது தியாவிற்கு “இது ரொம்ப கியூட்டா இருக்குல, இது வர்ஷுக்கு பிடிக்குமா”.
“எப்பா! இத்தோடு இருப்பது தடவை கேட்டாச்சு வருஷத்துக்கு பிடிக்குமா? பிடிக்குமான்னு, எதுக்கு இவளோ விலை அதிகமா”.
“இதுலாம் சிங்கள் பீஸ்ங்க, இது மாதிரி ஐட்டம்ஸ் கலெக்ட் பண்ணுவேன்னு வர்ஷு சொன்னா அதான், அவளுக்குனு வாங்குறோம் அது அவளுக்கு பிடித்தமாதிரி இருக்கணும்ல அதான் உங்ககிட்ட கேட்டு வாங்குறேன்”.
தன் தங்கை ஏன் இவளின் புராணதையே பாடுகிறாள் என்பது புரிந்தது அவனிற்கு.
பின் அனைத்திற்கும் பில் போட்டு வாங்கினாள் தியா.
அதற்குள் மித்துவும் அருணும் இவர்களை நோக்கி வந்தார்கள்.
மித்து, “என்ன தியா எல்லாம் வாங்கிட்டியா”.
“ஆச்சுடி இன்னும் டிரஸ் மட்டும் தான் பாக்கி”, என்று சொல்லி,
“வர்ஷுக்கு என்ன கலர் பிடிக்கும்”, என்று கேட்டாள் ஷ்யாமை பார்த்து,
“எதுக்குங்க டிரஸ் வேற ஆல்ரெடி இவ்வளவு வாங்கியாச்சே”
அதற்கு தியா பதில் சொல்லும் முன் அவளை முந்திக்கொண்டு மித்து கூறினாள், “இவ இப்படித்தான் நான் ண்ணா யாரையாச்சும் ரொம்ப புடிச்சுருச்சுன்னா நிறைய பண்ணுவா”
“நீ சும்மா இரு மித்து. அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. நீங்க சொல்லுங்க வர்ஷுக்கு பிடிச்ச கலர் என்ன?”
“சொல்லலைனா விட மாட்டீங்க போலையே, உனக்கு ப்ளூ கலர் ரொம்ப பிடிக்கும்”.
மித்து, “தியாக்கு கூட ப்ளூ தான் பிடிக்கும்”.
தியா, “சரி நேரம் ஆச்சி, வாங்க குர்த்தி ஒன்னு வாங்கிட்டு கிளம்பலாம்”.
அதன்படி அழகிய வேலைப்பாடு நிரம்பிய சுடிதார் எடுத்து கடையிலிருந்து வெளியே வந்தனர்.
“நாளைக்கு வர்ஷுகூட நீங்களும் வீட்டுக்கு வாங்க ப்ளீஸ், அப்படியே கிளம்பும்போது கால் பண்ணுங்க ப்ளீஸ். இது தான் என் நம்பர் நோட் பண்ணிக்கோங்க”.
அதற்காக அவன் சிரித்துக் கொண்டே, “மறுபடியும் மறுக்க முடியாத மாதிரி கேக்குறீங்க சரி வரேன்”, இன்று அவள் நம்பரை பதிவு செய்து கொண்டான்.
அருணிடம் திரும்பி அண்ணா நீங்களும் வந்துருங்க என்று அழைத்தால்
“கண்டிப்பா நான் இல்லாமையா” என்றவனை பார்த்து, இடம் பலமாக தலையை ஆட்டிக் கொண்டான் ஷ்யாம்.
“சரி அப்போ நாங்க கிளம்புறோம் பை”, என அங்கேயிருந்து தோழிகள் நகர்த்தவுடன்,
“என்னடா மொத்தமா விழுந்துட்ட போல”, என்ற தோழனை பார்த்து அசடு வழிந்தான் அருண்
அதைக் கண்டு புன்னகைத்த ஷ்யாம், “சரி வா கிளம்பலாம்”.
“நாளைக்கு வரேன்னு சொன்னியே அது உண்மையாடா”
“ஆமாண்டா, உன் தங்கச்சி தான் நான் வரேனா இல்லையான்னு கன்ஃபார்ம் பண்றதுக்குள்ள அவளுக்கு ரிப்போர்ட் பண்ண வேற சொல்லிட்டாங்களே”
அதற்கு அருண் சிரித்து, “அவன் நல்ல பொண்ணுடா”, என்றான்
“யாரு இல்லனு சொன்னா. சரி நாளைக்கு ரெடியா இரு போகலாம்”.
அடுத்த நாள் காலை தியாவிற்கு கால் செய்து, தானும் தங்கையும் வீட்டில் இருந்து கிளம்பி விட்டோம் என்ற தகவலை அளித்தான் ஷ்யாம்.
இதே மாதிரி வீட்டிடை நெருங்கவும் ஒரு மிஸ்டு கால் பண்ண சொல்லி பேசியே வைத்தாள்.
‘மேடம் ஒரே ஆடரா போடுறாங்களே’, மனதில் எண்ணினான்.
தான் வாங்கிய அலங்கார பொருட்கள் கொண்டு இரவே ஹாலை மித்து, தாய் மற்றும் தந்தை உதவியோடு அலங்கரித்திருந்தாள் தியா.
“அவங்க கிளம்பியாச்சு கேக் எல்லாம் ரெடி பண்ணிடலாம்” என தியா கூறவும்,
வேலைகள் துரிதமாக நடந்தது தியாவும் மித்துவும் கேக் வெட்ட ரெடி செய்ய,
லட்சுமி, வரஷுக்கு பிடித்த ஆப்பம் தேங்காய்ப் பால், பால் கொழுக்கட்டை, பூரி மசால், குலாப் ஜாமுன் என அனைத்தையும் தயாராக டைனிங் டேபிளில் வைத்தார்.
ஷ்யாமின் மிஸ்டு கால் வர, மித்து இருவரும் வீட்டின் வெளியில் சென்று வர்ஷாவை கண் மூடி உள்ளே அழைத்து வந்தனர்.
உள்ளே நுழையவும் கைகள் விளக்கி சர்ப்ரைஸ் என கத்தினர்.
வர்ஷு என்னடி இதெல்லாம் என்ன சிணுங்கினாலும் கேட்டு வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டு மகிழ்ந்தால்
பின், மகாலட்சுமி அவர்களை சாப்பிட அழைக், ஏற்கனவே தியா இந்த ஏற்பாட்டை பற்றி கூறியதால் ராதா செய்த இணைப்பை மட்டும் சாப்பிட்டு வந்திருந்தனர் அண்ணன் தங்கை இருவரும்.
ஷ்யாமும் லட்சுமி அன்பு கட்டளையும் மீற முடியாமல் உண்டான். அனைத்தும் தன் தங்கைக்கு பிடித்தது என்பதையும் கவனிக்க தவறவில்லை அவன்.
“அருண் அண்ணா ஏன் வரல”.
ஷ்யாம் பதில் சொல்லும் மித்து முந்திக்கொண்டு, “மாமா ஏதோ முக்கியமான வேலையாய் அனுப்பி இருக்காங்களாம். அதான் வர முடியலன்னு சொன்னார். உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.”
மித்துவின் இந்த பதிலில் ஷ்யாம், ‘ஓ! நம்ம பையன் மித்துகிட்ட போன்ல கடலைலாம் வறுக்க ஆரம்பிச்சுட்டானா’, என நினைத்தான்.
வர்ஷுக்கு வாங்கிய அனைத்தும் அவளிடம் கொடுக்க ஒவ்வொன்றையும் அவள் ஆசையாய் பார்ப்பதிலே அவளுக்கு பிடித்திருக்கிறது என்பது புரிய, ஷ்யாமிற்கு கண்களாலே நன்றி சொன்னாள் தியா.
அவனும் சிறு தலையசைப்பில் அதை ஏற்றுக்கொண்டான்.
பின் இன்று மாலை அவர்கள் வீட்டில் நடக்கும் பிறந்தநாள் விழாவிற்கு அனைவருக்கும் அழைப்புவிடுத்தனர் ஷ்யாம் மற்றும் வர்ஷா.
திரும்பும் வழி முழுக்க, தியா வீட்டின் புராணத்தையே பற்றியே பேசிக் கொண்டு வந்தால் வர்ஷா.
“தியா ரொம்ப ஸ்வீட், மித்து நல்ல பொண்ணு. அங்கிள் ஆண்ட்டி கூட நல்லா பழகுறாங்க இல்லண்ணா”
“உண்மைதான் வர்ஷு நம்ம வீட்ட தவிர எங்கேயும் நீ போனதில்லை. அதான் அப்பா, அம்மா உன்னை அனுப்ப ரொம்ப யோசிச்சாங்க நாங்க அனுப்ப, அப்புறம் நான் தான் அவங்ககிட்ட பேசி உன்னை கூட்டிட்டு வந்தேன்.”
“நல்ல காரியம் பண்ணணா.”
“எனக்குமே யோசனை தான் வர்ஷு ஏன்னா, வீட்ல எப்படின்னு தெரியாது இல்லையா. பட் தியா மாதிரி அவங்க வீட்லயும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருக்காங்க”
“ம்.”
“இனி, உனக்கு எப்ப தோணுனாலும் நீ அங்க தனியாவே போகலாம்”.
“லட்சு ஆண்ட்டி கூட, அடிக்கடி வர சொன்னாங்கண்ணா”
இப்படிப் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.
உள்ளே நுழைந்தவுடன் அங்கே நடந்த அனைத்தையும் தாய், தந்தையிடம் ஒப்பித்தாள் வர்ஷு.
தியா அவளுக்கு வாங்கி கொடுத்த, அனைத்தையும் அவர்களுக்கு காட்டிவிட்டு சென்றாள்.
“பரவால்ல ஷ்யாம் உன் தங்கச்சிக்கு நல்ல பிரெண்ட்ஸ் கிடைச்சுட்டாங்க போல”
“ஆமாமா உண்மையாலே அவங்க நல்ல மாதிரி” என அவர்கள் வீட்டில் நடத்திய விதத்தை அவன் பங்கிற்கு கூறினான்.
“டிபன் கூட எல்லாம் நம்ம வர்ஷுமாக்கு பிடிச்சது தான்”
ராதாக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அவருக்கு தெரியாத பெண்ணைப் பற்றி ஏம்மா எனக்கு மட்டும் நல்ல பிரெண்ட்ஸ் இல்ல அப்படின்னு எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கிறாள் அவள்.
அதற்கெல்லாம் விடுவாய் இப்பொழுது கிடைத்த இந்த தோழிகள் நினைத்து, அந்த தாய் உள்ளம் மிகவும் மகிழ்ந்தது. அதிலும் அவர்களின் குடும்பத்தாரும் இவளிடம் அனுசரணையை அன்பாய் நடந்து கொண்டது, இவரை மிகவும் கவர்ந்தது.
ராதா வீட்டின் பெரியவராய் தியா மற்றும் மித்து வீட்டுக்குக் கால் செய்து அனைவரையும் மாலை விழாவிற்கு அழைத்தார்.