💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு – 33
காதலில் தன் துணையிடம் விரும்பிய தோற்பவர் உண்மையில் அதில் வெற்றி கண்டவர் ஆவர்….
அவளும் விருப்பப்பட்டு திருமணத்துக்கு ஒத்துக் கொண்டாள் என்பது போல் பேச, இவளுக்கு ஒரு மாதிரியானது.
‘தேவையில்லாமல் தான் ஒருவரை வரவைத்து, அவமானப்படுத்துவது போல் ஆகிவிடுமோ’ என்று மனம் வெதும்பினாள்.
பின் அவளே அவனிடம் பேச்சை துவங்கினாள்.
“இல்ல…நான் எந்த இடத்துலயும் அப்படி ஒரு வார்த்தை சொல்லல. ஆனா நீங்க வர்றத தடுக்காம இருந்தது, என்னோட தப்பு தான்” அவள் உண்மையான வருத்ததுடன் பேச.
இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஷ்யாம் வந்தான். அவனைப் பார்க்கவும் இவள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தாள்.
“என்ன நடக்குது அண்ணா, நீதானே சொன்ன, அண்ணிக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம்னு. அதனாலதானே நம்ம வந்தோம் இப்ப இஷ்டமில்லனு சொல்றாங்க”.
“அண்ணியா!” ஏகத்திற்கும் அதிர்ந்தாள் தியா.
“ஆமா அண்ணி, அண்ணா தான் சொன்னாங்க, உங்களுக்கும் அவங்களை பிடிக்கும்னு, அதனாலதான் நான், அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா எல்லாருமே பொண்ணு கேட்டு வந்தோம். நீங்க இப்ப புடிக்கலைன்னு சொல்றத பாத்தா அண்ணா உங்கள கம்பெல் பண்றாங்களா? அப்படி ஏதாவது இருந்தா சொல்லுங்க நான் வீட்ல பேசுறேன்”.
“நந்து அப்படிலாம் ஒன்னும் இல்ல, உங்க அண்ணிக்கு பல குழப்பம் அத நான் கிளியர் பண்ணிக்கிறேன் நீ கீழ போ”.
“இல்லண்ணா அது….வந்து…. “
“அடேய் உண்மையாலே அவளுக்கு என்ன பிடிக்கும் டா. நான் ஒன்னும் அவளை கடிச்சு தின்ற மாட்டேன், போடா ரொம்ப தான் பாதுகாக்குறான் அண்ணிய கிளம்பு”.
அப்பொழுதும் கிளம்பாமல் அவன் தியாவை பார்க்க, தியாவுக்கு ‘சிரிப்பதா அழுவதா’, என்று தெரியவில்லை.
பின் அவனை பார்த்து “ஒன்னும் பிரச்சனை இல்ல, நீங்க போங்க”, எனக் கூறவும் தான் அவன் கீழே கிளம்பினான்.
அவன் கீழே செல்லவும் ஷ்யாமை பார்த்து, “என்ன நடக்குது இங்க” என்றாள் குழப்பத்துடன்.
“அது என் தம்பி, கீழ அவன் கூட இருக்கிறது என் சித்தி, சித்தப்பா”.
அதே நேரம் கீழே வர்ஷா, ராஜை வருத்துக் கொண்டிருந்தாள், “ஏங்க உங்களுக்கு வேற மாப்பிள்ளை கிடைக்கலையா எப்படிதாங்க என்னோட சித்தப்பா பையனையே மாப்பிள்ளைனு உக்கார வச்சிருக்கீங்க”.
“ஏன்டி நான் என்னமோ கூட்டிட்டு வந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்க, கூட்டிட்டு வந்தது உன் அண்ணன்”.
“அவனுக்கு அறிவு இல்ல, அவன் கூட சுத்துற உங்களுக்கும் அறிவே இல்ல”.
“என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட”.
“வேற என்ன சொல்றது”, என்று கடுகடுத்து கொண்டிருந்தாள்.
இங்கே வர்ஷா, ராஜை திட்டிக் கொண்டிருக்க, அங்கே தியாவோ, ஷ்யாமை வைத்து செய்தாள்.
“கொஞ்சமாச்சு அறிவு இருக்கா உங்களுக்கு? இப்படித்தான் பயமுறுத்துவீங்களா?”.
“நான் எங்க பயமுறுத்துனேன்?, நீதான் பொண்ணு பாக்குறேன்னு ரெடி ஆயிட்ட, ஆனா, சும்மா சொல்லக்கூடாது இந்த சேரிலா செமையா இருக்க போ”.
“இந்த ரணகளத்திலும் உங்களுக்கு ஒரு குதூகலம் கேக்குது, பின்ன உங்களுக்கு போன் பண்ணலாம்னு நினைச்சிட்டே வந்தேன். அதுக்குள்ள, அண்ணா கிட்ட என்னவோ நானா பண்ணா தான் நீங்க பண்ணுவேன் சொல்லவும் எனக்கு கடுப்பாயிடுச்சு”.
“கடுப்பான பொண்ணு பாக்கறதுக்கு ஓகே சொல்லிட்டுவியா?”
“தப்புதான், அதை நினைச்சு தான் ரொம்ப நொந்துக்கிட்டு இருந்தேன்”.
“அவ்வளவு எல்லாம் ஒன்னும் நொந்துக்க தேவையில்லை, உன்ன பார்க்க வந்த மாப்பிள்ளை நான் தான்”
“தெரியுது தெரியுது” என்றாள் நக்கலாக.
“ரொம்ப கொழுப்பு தான் உனக்கு…என்ன இந்த மாப்பிள உனக்கு புடிச்சிருக்கா இல்லையா” அவனை மேலிருந்து கீழ்வரை காட்டி கேட்க,
“பிடிக்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்களாம்”
“நீதானே சொன்ன உன் அம்மா, அப்பா பாக்குற பையனை தான் கல்யாணம் பண்ணிபேன்னு, அப்புறம் என்ன உனக்கு”
“நான் சொன்னதை வச்சே என்ன மடக்குறீங்க”
“உன்னை நான் இப்பதான் மடக்குறேனா”
“ஏப்பா! ஓவரா பேசுறீங்க”
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம ஏதோ பேசிட்டு இருக்க, மாப்பிள்ளைய உனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா?” அவன் அழுத்தமாக கேட்டான்.
“மாப்பிள்ளைக்கு முதல்ல பொண்ணு பிடிச்சிருக்கான்னு சொல்லணும்”
“எப்பா! போதும்டி உன்கூட விளையாட்டு நீயா சொல்லுவ சொல்லுவேன் பார்த்தா வேலைக்கு ஆகல, நானே சொல்றேன். இந்த பொண்ண நாலு வருஷத்துக்கு முன்னையே ரொம்ப புடிச்சு போனதுனால தான் பொண்ணு கேட்டு வந்தோம்.”
விரும்பியே அவளிடம் தோற்றான். காதலில் மட்டும் வெற்றி தோல்வி நிலையல்ல. ஒருவர் வென்றால் அவரின் மகிழ்ச்சி மற்றவரையும் தொற்றுக்கொள்ளும்.
அவன் காதலை சொன்னதில், இவளுக்கு சிரிப்பு, வெட்கம் என அனைத்தும் கலந்து வந்தது.
“அப்புறம் வெக்கப்பட்டுக்கோ இப்பையாச்சும் சொல்லலாம் இல்ல, பிடிச்சிருக்கா?” என்று குரலில் காதலை தேக்கி கேட்க,
“பிடிச்சிருக்கு, ரொம்ம்ம்ம்பபபப பிடிச்சிருக்கு” என்று இரண்டு கைகளையும் அகலவிரித்துச் சொன்னாள்.
“அதை நீ அவ்வளவு தூரத்தில் இருந்து சொல்ல வேணாம்.”அவன் அவளை சீண்ட,
“ஏன் நான் தான் வரணுமா? நீங்க வர மாட்டீங்களா.” என அப்போதும் மல்லுக்கு நின்றவளை பார்த்து,
“நான் யார்கிட்டயும் இவ்ளோ இறங்கி போனதே கிடையாதுடி, ஆனா நீ என்ன மொத்தமா கவுத்துற” என்று அவளை நோக்கிச் செல்ல.
அவளும் பாய்ந்து கட்டிக் கொண்டாள்.
சட்டென நியாபகம் வந்தார் போல் “ஆமா அப்ப என்ன சொன்னீங்க நாலு வருஷத்துக்கு முன்னாடியா”
“ஆமா, அந்த கதை உனக்கு அப்புறம் சொல்றேன்”.
அங்கே காதல் கிளிகள் ரெண்டு வானில் பறந்து கொண்டிருக்க, கீழே அப்பொழுதுதான் வர்ஷாவுக்கு விஷயம் புரிந்தது.
தன் அண்ணன் தான் தியாவை பெண் பார்க்க வந்திருக்கிறான் என்று.
ராஜோ, ‘அட இதுக்காடா இத்தனை நாள் என் பொண்டாட்டிகிட்ட திட்டு வாங்கி, பட்டினி போட வச்சு இப்படி பண்ணிட்டீங்களேடா…’ என்று அங்கு இல்லாத நண்பனை வசைப்பாடிக் கொண்டிருந்தான்
வர்ஷாவிற்க்குமே ராஜை பார்க்க பாவமானது. அனைவரும் இருக்கிறார்கள் என்று கூட யோசிக்காமல், அவனை அழைத்துக்கொண்டு மேலே அவர்கள் அறைக்கு சென்றாள்.
அறை கதவை சாத்தியது தான் தாமதம் அவனை நெருக்கி முத்த மழை பொழிந்தாள். அதில் திக்கு முக்காகி தான் போனான் ராஜ்.
பின் வெகு நேரம் கழித்தே, இருவரும் கீழே வந்தார்கள்.
அவர்கள் கீழே வரும்பொழுதெல்லாம் தியாவும், ஷ்யாமும் கீழே வந்திருக்க, அனைவரும் பார்வையும் ஷ்யாமை துளைத்தெடுத்தது,
‘இத முன்னாடியே எங்க கிட்டயும் சொல்லி இருக்க வேண்டியதுதானே’ என்று.
அதை கண்டும் காணாது போல் இருந்து கொண்டான் அவன்.
இன்னும் படிப்பு முடிய ஐந்து மாதம் தான் இருந்தது, எனவே அதற்கு பின் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர்.
நல்ல நாள் கூட குறித்து தான் வைய்திருந்தார் லட்சுமி, அதில் ஒன்றை கும்பகோணத்தில் இருக்கும் தாத்தா, பாட்டியிடமும் கேட்டுக் கொண்டே முடிவெடுத்தனர்.
இதில் ஷ்யாமுக்கு ஏக கடுப்பென்றால் மற்ற இரு ஜோடிகளுக்கும் ஏக குஷியாய் இருந்தது.
பின்னே இந்த பிளான் அவர்களிடமும் சொல்லி இருந்தால் பிரச்சினை இல்லாமல் ஓடி இருக்கும்.
அதிலும் ராஜ் பாவம் அவன் மனைவி அவனை கண்டுகொள்ளாமல் அவனைப் படுத்தி எடுத்தாளே.
அவர்களின் பார்வையிலேயே தெரிந்தது அவர்களின் சந்தோஷம், “எல்லாம் உங்க வயித்தெரிச்சல்தான்டா”, மெல்ல வாய் அசைத்தான்.
அதைப் புரிந்து கொண்டவர்களோ அவனை பார்த்து நகைத்தே வெறுப்பேத்தினர்.
‘பெண்ணை அனைவருக்கும் பிடித்து விட்டது’ என்று உறுதி செய்யும் பொருட்டு தியாவின் தலையில் ராதா பூச்சூடினார்.
ராதாவுக்கு, தியாவை மிகவும் பிடிக்கும். தாய் அறியாத சூலா என்பது போல், சில நேரங்களில் தன் மகனின் போக்கை கண்டு அவனுக்கு இவள் மேல் விருப்பம் இருக்கிறது என்பதை முன்னமே தெரிந்து கொண்டிருந்தார் அவர்,
தியா படித்துக் கொண்டிருக்கவே அவளின் படிப்பு முடியவும் லட்சுமியிடம் இவரே கேட்க வேண்டும் என்று தான் இருந்தார்.
ஆனால் அதற்குள் ஷ்யாமே ‘அவரிடம் பெண் கேட்டு போகலாம்’ என்று கூறவும், அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை,
ஒரு பக்கம் சந்தோஷம் மறுபக்கம் இன்னும் ‘ஐந்து மாதம் முடிந்த பிறகு திருமணம் வைத்துக் கொள்ளலாமே’ என்பது போன்ற நினைப்பு.
அவரின் நினைப்பை மகனிடமும் பகிர்ந்து கொண்டார்.
தியாவின் நிலைமைதான் ஷ்யாமுக்கும், இத்தனை நாள் அவன் தனியா அமர்ந்து சாப்பிட்ட இடம் தான், அவன் தனியே இருந்த எம்.டி ரூம் தான், ஆனால் இப்பொழுது அவை அனைத்துமே அவனுக்கு வெறுமையைப் பட்டது.
அதிலும் மதிய உணவு நேரம் அவனின் அந்த சிறு அறைக்கு செல்லும்போது அந்த அறையை பார்க்கும் போதெல்லாம், மனதில் ஏதோ வலி பரவும். இப்படி அவன் யோசித்து யோசித்து மண்டை காய்ந்து, பிறகுதான் இந்த முடிவுக்கு வந்தான்.
அவன் அம்மா ‘ஐந்து மாதம் கழித்து திருமணம் வைத்துக் கொள்ளலாம்’, என்று கூறும் போது முதலில் இவனுக்கு கஷ்டமாக இருந்தாலும். அவர் கூறுவதன் அர்த்தம் புரிந்து, தன் மனதை சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டினான்.
முதலில் இந்த சந்தோஷமான செய்தி ‘தியாவிற்கு பகிர வேண்டும்’ என்று எண்ணி அவளுக்கு கால் செய்யப் போக, அப்பொழுதுதான் அவர்களின் கண்ணாம்பூச்சி ஆட்டம் இவன் நினைவுக்கு வந்தது.
எப்படியாவது தியாவை முதலில் சொல்ல வைத்து விட வேண்டும் என்று தான் அவன் இவ்வாறு தான் பெண் பார்க்க வருகிறோம் என்பதை மறைத்து சென்றது.
ஆனால் இப்பொழுது அனைத்தும் தலைகீழ் ஆகி வழக்கம் போல இவனே அவளிடம் குப்புற விழுந்து விட்டான்.
***
‘உலகம் சுழல்வது நின்று விட்டதோ’ என்று இவர்கள் என்னும் அளவு அந்த ஆறு மாத காலம் நத்தையாய் ஊர்ந்து சென்றது.
‘ஸ்வீட் நத்திங்ஸ்’ என்பார்களே அதுபோல் என்ன பேசினோம், ஏது பேசினோம் என்று புரியாமல் ஏதேதோ பல மணி நேரங்கள் பேசினார்கள்.
ஆனால் எந்த இடத்தில் ‘தங்கள் மற்றவரை விரும்ப துவங்கினோம்’ என்பதை பற்றி மட்டும் இருவருமே பேசிக்கொள்ளவில்லை.
தியா பல முறை ‘அந்த நான்கு வருடங்கள்’ பற்றி கேட்டுவிட்டாள். அவனோ அதை சொல்லாமல் இவளுக்கு ஆட்டம் காட்டினான்.
இவர்களின் காத்திருப்பு முடியும் நாட்கள் நெருங்கியது.
ஏற்கனவே ஒரு திருமணம் செய்ததால் அதில் செய்த தவறுகள் அனைத்தையும் இந்த திருமணத்தில் நடக்காமல் பார்த்து கொண்டார்கள் இருவீட்டினரும்.
முன்பு போல் ஒரு நல்ல நாளில் காஞ்சிபுரம் சென்று திருமண சேலைகள் முக்கியமாக முகுர்த்த பட்டு அனைத்தும் எடுத்து கொண்டார்கள்.
ஷ்யாம் தான் அனைத்து புடவைகளையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான்.
முகுர்த்த புடவை மற்றும் திருமண இரவு புடவை இரண்டும் அவன் தான் எடுத்தான்.
அதில் முகுர்த்த புடவை மட்டுமே தியா அறிந்தது.
தாலி செய்யவும் ஆர்டர் கொடுத்து, தியா வீட்டிற்கு விருந்துக்கு சென்றனர்.
லட்சுமியும், வர்ஷாவும் விருந்துருக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் கடையில் இருந்து வாங்கி வந்த பொருட்களை கடைப்பரப்பி பார்த்துக் கொண்டிருக்க,
‘யாரும் தன்னை கவனிக்கவில்லை’ என்பதை உணர்ந்த ஷ்யாம் மெதுவாய் பூனை நடை நடந்து மாடியிலே தியாவின் அறை முன் நின்றான்.
அப்பொழுது தான் புடவை கட்டிக் கொண்டிருந்தது கசகசவென இருக்கிறது என்று அதை மாற்ற நினைத்தது கதவை சாத்தி இருக்க,
கதவைத் தட்டும் ஓசை கேட்கவும், சென்று திறந்து பார்க்க அங்கு ஷ்யாம் நின்று இருந்தான்.
அவளை பார்த்தவுடன் கண்கள் பளிச்சிட, “அப்பாடா” எனவும்.
“என்ன ஆச்சு எதுக்கு அப்பாடா” என வினவினாள் ஒன்றும் புரியாமல்.
“ஒன்னும் இல்ல எங்க நீ சாரீ மாத்திட்டியும் பயந்துட்டே வந்தேன், நல்ல வேலை இன்னும் சாரீல தான் இருக்க”எனக்கு கூறிக் கொண்டே கதவை சாத்த, இவளுக்கு உதறல் எடுத்தது.
“என்ன பண்றீங்க? எதுக்கு கதவை சாத்துறீங்க…?” குரலில் சிறிது பதட்டம் எட்டி பார்த்தது.
“காலையில் உன்னை சாரீல பாத்துட்டு இருந்தனா..அதான்..”
“நீங்க பாக்குறதும், பண்றதும் சரி இல்ல முதல்ல வெளியே போங்க”
“என்னடி மனசாட்சியே இல்லாம வெளிய போக சொல்ற, ப்ளீஸ் டி ஐ பேட்லி வாண்ட் டு கிஸ் யூ”
“இதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம், இப்ப தயவு செஞ்சு போங்க”
“முத்தத்தை கூடவா கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லுவ”
“ஆல்ரெடி கொடுத்த வரைக்கும் போதும் போங்க”
“ஐய்ய அதெல்லாம் வெஜ் எனக்கு நான்வெஜ் கிஸ் தான் வேணும்” என கூறிக்கொண்டே அவன் அவளை நெருங்க, அவள் பின் நகர, இது பயமல்ல உண்மையில் இது ஒரு கலவையான உணர்வே, பெண்ணின் மனது அந்த வினாடி வேகமாக துடித்தது. சுவற்றில் இடித்து அவள் நிற்க, அவன் கண்களில் குறும்பு,
‘உன் இதழில் கதை எழுதும் நேரம் இது’ அவன் பார்வையின் மாற்றம் பெண்ணின் உதட்டை கடிக்க வைக்க. அந்த இதழுக்கு விடுதலை அளித்து தனதாக்கினான் காதல் கள்வன்.
அவன் சென்ற பிறகும் அதே இடத்தில் அவள் தேங்கிவிட, சிறிது நேரம் கழித்தே நிதானத்திற்கு வந்தாள் அவள்.அதன் பின் தான், உடை மாற்றி கீழே வந்தாள்.
அனைவரும் விருந்துண்டு, அனைத்தும் முடியவும் இவர்கள் வீடு சென்று சேர்ந்தனர்.
ஷ்யாமுக்கு தான் இவளை இங்கே விட்டு செல்வது மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
**********
இவ்வளவு நாட்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்தது, இப்போது தான் ஜெட் வேகத்தில் ஓடி, திருமணத்திக்கு முன்தின நாளும் வந்தது. அன்று காலை நிச்சம் செய்வதாய் முடிவு செய்தபடி வர்ஷாவகற்கு திருமணம் முடித்த அதே மண்டபத்தில் உறவுகள் கூடி இருக்க.
அந்த நிச்சயதார்த்த விழா நன்றாகவே சென்று கொண்டிருந்தது. அந்த காலத்தில் எப்படி நிச்சயதார்த்த விழா நடக்குமோ, அதே போல் ஏற்பாடு செய்திருந்தார்கள.
“அதாகப்பட்டது ஊர் பெரியவர்களின் முன் இரு வீட்டாரும் நிச்சயித்துக் கொள்ள வேண்டும். இதில் யாருக்காவது எதிர்ப்பு இருக்கிறதா? இரு புறமும் அனைவருக்கும் சம்மதமா?” என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படும்.
பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரும் தட்டுமாத்தி கொண்டார்கள். அவரவர் பெயர்கள் எழுதிய மோதிரத்தை ஷ்யாமும், தியாவும் ஒருவர் கையில் மற்றவர் மாற்றினார்கள்.
அந்த நேரத்தில் தியாவின் கையை ஷ்யாம் அழுத்தி கொடுக்க, அனைவர் எதிரிலும் தன் வெக்கத்தை மறைக்க கஷ்டப்பட்டாள் பெண்… இவ்வாறு நிச்சயதார்த்தத்தை நிறைவாய் முடித்தார்கள்.
பின், அன்று இரவே ரிசப்ஷன் இருப்பதால் சிறிது நேரம் மணமக்களுக்கும் மற்றவருக்கும் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்கினர்.
ரிசப்ஷன் இரவு, தியாவுக்கு நீல கலர் பிடிக்கும் என்பதால். ஆழ்ந்த நீல லெகங்கா அது முழுக்க இளம் ஆரஞ்சு வண்ண பூக்கள் எம்பிராய்டரி டிசைனிலும் அதை சுற்றி கற்கள் பதிக்கபட்டு மின்னியது அதற்குத் தோத்தாய் அதே இளம் ஆரஞ்சு வண்ண தாவணி.
அதில் எம்ராய்டிங், முத்து, கற்கள் போன்ற பல டிசைன்கள் செய்து மெருகேற்றப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல் ஹேர் டூ, மேக்கப் என அனைத்தும் சேர்த்து தேவதையை ஜொலித்தாள் அவள்.
அவளுக்கு ஏற்றார் போலவே அதே ஆழ்ந்த நீல நிறத்தில் சர்வானி அணிந்து கீழே வெள்ளை நிற பேண்ட் அணிந்திருந்தான் ஷ்யாம். அவனுடைய சர்வானியிளும் தியாவின் அதே இளம் ஆரஞ்சு நிற பூக்கள் போட்ட டிசைன் இருந்தது. கம்பீரமாய் ஆண்மை ததும்ப நின்றிருந்தவனை பார்க்க தியாவுக்குமே கர்வமாய் தான் இருந்தது ‘அவன் தன்னுடையவன்’ என்று.
அவர்களைப் பார்க்கும் அனைவருமே ‘சிறந்த ஜோடிகள்’ என்ற பட்டம் அளித்துக் கொண்டே இருந்தார்கள்.
ஷ்யாமின் கைகள் அடிக்கடி தன்னவளை யாரும் அறியாமல் சீண்டிக் கொண்டே தான் இருந்தது. அவளுக்குத்தான் ‘இப்பொழுதே இவனை சமாளிக்க முடியவில்லையே,இனி நாளை இரவு எப்படி சமாளிப்பேனோ’ என்று பயம் சூழ்ந்து கொண்டது.
நின்று, நின்று கால்கள் வலித்தது அப்பொழுதெல்லாம் இவர்கள் இருவருக்கும் பார்த்து பார்த்து ‘மித்து, வர்ஷா, அருண், மற்றும் ராஜ்’ என்று மாறி மாறி பழச்சாறுகள் அளித்து கொண்டே இருந்தார்கள்.
நண்பர்கள் இறைவன் நமக்கென்று ரத்த தொடர்பில்லாமல் அனுப்பி வைத்த சொந்தங்கள். அவர்கள் அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி இவர்கள் இருவரும் இணைந்ததில்.
சொந்த பந்தங்கள், தெரிந்தவர்கள், ஷ்யாமின் கம்பெனியில் வேலை செய்பவர்கள் அவர்களுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள், பள்ளியில் படித்த நண்பர்கள், தியாவுடன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், அவள் பள்ளி தோழிகள், அவர்கள் பெற்றவர்களுக்கு தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என்று பல கூட்டங்கள் வந்து சேர்ந்தது. இவர்கள் அனைவரையும் கவனித்து, சாப்பிடவே இரவு பனிரெண்டு ஆனது அதற்கு மேற்பட்டு தான் இவர்கள் சிறிது கண்ணயர்ந்தனர்.
மறுநாள் காலைப் பொழுது அழகாய் விடிந்தது. காலை ஐந்தரை மணிக்கு எல்லாம் முகூர்த்தம் வைத்திருந்ததால், இவர்களால் சரியாக உறங்க கூட முடியவில்லை. தியாக்கு ‘மேக்கப் போட வேண்டும்’ என்று அவள் இன்னமும் முன்னமே எழுந்து விட்டாள்.
எவ்வளவு டயர்டா இருந்தாலும் முகத்தில் சோர்வு தெரியவில்லை. பின்னே அவர்களுக்கு இது எவ்வளவு முக்கியமான நாள். இருவர் முகத்திலும் அந்த மகிழ்ச்சியும் பொலிவும் அப்படியே தெரிந்தது.
செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் நலங்கு உட்பட்ட அனைத்தும் முடிந்த பின் ஐயர் ஓமம் வளர்த்தார்.
முதலில் ஷியாம் வந்த அமர்ந்து, ஐயர் சொன்ன அனைத்து மந்திரங்களையும் சொல்லிக் கொண்டிருக்க,எப்பொழுதும் போல் ஐயர் கணீர் குரலில் “நாழி ஆச்சு பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்று கூறவும்.
வர்ஷா, மித்து இருவரும் தியாவை அழைத்துக் கொண்டு மணமேடை நோக்கி வந்தனர்.
சும்மாவே அவள் சேலை கட்டினால் அவள் மீதிருந்து இவனால் கண்களை எடுக்க முடியாது. இன்றோ மாம்பழம் மஞ்சளில் பச்சை நிற பார்டர் போட்ட பட்டுப் புடவையில் ஆன்ட்டிக் டெம்பிள் ஜுவல்லரிஸ் போட்டு, கைகளில் மெஹந்தி டிசைன்ஸ் கைநிறைய மஞ்சளும் பச்சையமாக கலந்த வளையல் அணிந்திருந்தாள்.
அவர்களின் முறைப்படி திருமண அன்று ‘மஞ்சள் நிற புடவை’ தான் உடுத்த வேண்டும்.
ஷ்யாம்க்கு எப்பொழுதுமே மஞ்சள் உடன் பச்சை கலந்திருப்பது மனதுக்கு இதம் அளிப்பது போன்ற, ஒரு எண்ணம் தருவதால் தான் இந்த புடவையை அவன் தேர்வு செய்தான்.
இவ்வாறு புடவை, நகை, அதற்கேற்ற ஒப்பனை என்று வானிலிருந்து இறங்கி வந்த அப்சரஸ் போல காட்சியளித்தாள் அவள்.
அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்ததில் ஐயர் சொன்ன எதையும் அவன் கவனிக்கவில்லை.
தியா அவன் அருகில் அமர்த்தபட்டாள்.
அப்பொழுதும் அவள் மேலிருந்து பார்வையை எடுக்காமல் இருந்தவனை ஐயர் “என்னப்பா நெய் போடச் சொன்னனே” என்று அவர் சொன்னதை அவன் செய்யாததால் திரும்பவும் கேட்க,
அவன் தங்கை வர்ஷா தான் அவனை இடித்து, ஐயரை கவனிக்க சொன்னாள்.
அதில் தூக்கத்திலிருந்து விழித்தவன் போல் திரு திருவென முழிப்பதை கண்ட ஐயர் “பொண்ணு எங்கேயும் போய்ட மாட்டா உனக்கு தான்” என அவனை கிண்டல் செய்தார்.
அதில் அங்கே நின்றிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். தியாக்கு ‘எங்கே சென்று ஒளிந்து கொள்வது’ என்று தெரியவில்லை.
பின் மெதுவாய் குனிந்து அவன் காதருகே “தயவு செஞ்சு மானத்தை வாங்காமல் கல்யாணத்தை முடிங்க”, என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு கூறினாள்.
அவனும் முடிந்த அளவுக்கு திருமணத்தில் ஈடுபட முயற்சித்தான். அதன்பின் திருமண சடங்குகளில் மனமோன்றி பங்களித்தான்.
தியா, ஷ்யாமின் பெற்றோர்கள் மாலை மாற்றிக் கொள்ள, மணமக்கள் அவர்களின் பெற்றோருக்கு பாத பூஜை செய்து,
தியாவின் பெற்றோர் ஷ்யாமின் பெற்றோருக்கு தங்கள் பெண்ணே தாரை வார்த்து கொடுத்து, என இப்படி அனைத்து சடங்குகளும் முடிந்த பின் திருமணத்தின் முக்கிய நேரமான முகூர்த்த நேரம் நெருங்கியிருந்தது.
ஐயர் தன் கணீர் குரலில் “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்று முழங்க நாதஸ்வர ஓசையும் மிருதங்க இசையின் பரபரப்பு அனைவரையும் தொற்றுக்கொள்ள செய்து, பல தலைகள் மணமேடையை எட்டி எட்டி நோக்கின.
ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க அதை வாங்கி அந்த இறைவனை “தங்கள் வாழ்க்கை நல்லபடியாக துவங்க வேண்டும்” என வேண்டிக் கொண்டே,
தியாவின் வலம்புரி வெண்சங்கை ஒத்த கழுத்தில் இரண்டு முடிச்சு இவன் போட, வர்ஷா ஒரு முடிச்சியை போட, தியாவை தன் சரிபாதியாய் ஆக்கிக் கொண்டான் ஷ்யாம்.
தியாவிற்கு என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வு, அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அதைத் துடைத்த ஷ்யாம் அவள் நெற்றியில் முத்தமிட்டான். அதில் மற்ற உணர்வுகள் பின் செல்ல, வெட்கம் என்ற உணர்வு மட்டும் பெண்ணை ஆட்கொண்டது.
மேடையில் சுற்றி நின்ற லைட்டிங் ஸ்டர்ஸ் மற்றும் அவர்களின் உறவினர்கள் அனைவரும் இந்த காட்சியை கண்டு இருவரையும் கலாய்த்தனர்.
சந்திரன், லட்சுமி இருவருக்கும் அழுகை தாங்கவில்லை. அவர்கள் உறவினர் அனைவருமே அவர்களை பாராட்டினர் நல்லபடியாக திருமணத்தை நடத்தி விட்டாய் என்று,
ஆனாலும் தங்கள் மகளை பிரிய போகும் வலி, இனி அவள் தங்கள் மகள் என்பதை விட இன்னொரு வீட்டுப் பெண் என்ற நிதர்சனத்தை எண்ணி மகிழ்ச்சி துக்கம் இரண்டும் கலந்து இருவரையும் ரொம்பவே உணர்ச்சிவசப்பட வைத்தது.
ராஜூம் அதே நிலையில் இருந்தாலும் இப்பொழுது தாய், தந்தையை சமாதானப்படுத்த வேண்டியது முதன்மை என்பதால் அவர்களின் நெருங்கி கட்டிக் கொண்டான்.
பின் இரு பெற்றோர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது ஷ்யாம் லட்சுமி, சந்திரன் இருவரையும் கட்டிக்கொண்டு,
“அவ எங்கயுபோக போயிடலை அத்தை உங்க பக்கத்துல தான் இருக்க போறா அடிக்கடி நாங்க வீட்டுக்கு வருவோம் நீங்களும் வீட்டுக்கு வரணும். நீங்க எப்படி பார்த்துக்கிட்டீங்களோ அதே அளவுக்கு முடியலனாலும் அதுக்கு கொஞ்சம் மேட்ச் பண்ற மாதிரி நாங்களும் அவங்கள நல்லா பாத்துப்போம். என்ன நம்பி பொண்ணு குடுத்தாதுக்கா இப்படி அழுவுறீங்க” இன்று பேசி பேசிய லட்சுமியை சிரிக்க வைத்திருந்தான்.
தன் கணவனின் இந்த செயளில் அவனுக்கு முத்த பரிசுகள் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது தியாவிற்கு.
சிறிதாய் கிடைத்த இடைவெளியில் அந்த பரிசை கொடுக்கவும் செய்தாள். இவளின் இந்த திடீர் செயலை எதிர்பாக்காத ஷ்யாம் ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளானான்.
அதன்பின், அவன் எதுவும் செய்யும் அளவுக்கு அவனுக்கு நேரம் கொடுக்கவில்லை. மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து சென்று பால் பழம் கொடுத்து, அவர்கள் வீட்டு பூஜை அறையில் இவளை விளக்கேற்ற சொல்லி, என அடுத்தடுத்த சடங்குகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்ததால், இவனுக்கு அவளுடனான தனிமை கிடைக்கவில்லை.
(போன எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி🙏 இனி பைனலில் சந்திக்கலாம்)