💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு – 11
“கருவாய் உன்னைச் சுமந்து மசக்கையில் அவதிப் பட்டு எப்போது உன் உருவம் பார்ப்போம் என்ற தவம் இருக்கவில்லை…
சிறுபிள்ளையாய் உன்னைக் கையில் ஏந்தி தாலாட்டிச் சீராட்டவில்லை…
உன் மழலை மொழி கேட்கவில்லை…
தாயாய் என்னை நீ பார்க்கும் பார்வையில்…
என் அன்பிற்காய் ஏங்கும் உன் தவிப்பில்…
உன் ‘அம்மா ‘ என்ற அழைப்பின் உரிமையில்…
உன் தாயாய் மாறினேன்”
ஷ்யாமின் கால் வரவும் உடனே எடுத்தவள் “வர்ஷு இப்போ எப்படி இருக்கா”, என அவள் நலனை விசாரித்தாள் தியா.
“ம்…கொஞ்சம் எமோஷனலா இருந்தாள் இப்போ ஓகே. உனக்குத் தான் தேங்க்ஸ் சொல்லனும், நீ இந்த விடயத்தை கரெக்டா ஹண்ட்டில் பண்ணலனா ரொம்ப கஷ்டமா போய் இருக்கும்”, என்றான் உணர்ந்து.
“இதில் நான் ஒன்றுமே பண்ணல, எல்லாம் ராஜ் அண்ணா தான் பண்ணாங்க அவங்களுக்குத் தான் தேங்க்ஸ் சொல்லணும். நீங்கச் சொன்ன மாதிரி அவங்க நல்ல பழகுறாங்க”, என்றாள் ராஜை புகழ்ந்து,
“தொடக்கத்தில் கொஞ்சம் எங்ககூட ஒன்ற ரொம்ப கஷ்டப்பட்டான், ஆன உன்கிட்ட உடனே ஒட்டிக்கிட்டான் எப்படினே தெரியல”, என்றால் அவனின் மனதில் வெளிப்படையாய் ஓடிக்கொண்டிருந்ததை.
“அதுலாம் அப்படித்தான்…”, என்றாள் இவள் சிரிப்புடன்.
“நீ அண்ணா அண்ணானு அவனை போல்டு ஆக்கிட்ட”, என்றான் அவளை கலாய்த்து,
“ஆமா ஆமா நான் பெரிய ட்ரெண்ட் போல்ட் போவீங்களா”, நீங்களும் சலைக்காமல் பேசினாள்.
(Trend boult, New zealand player, world no 1 bowler)
“பார்ரா அவளோ கிரிக்கெட் தெரியுமா”, என்றான் ஆச்சரியமாய்.
“ஏன் தெரியக் கூடாதா”, என்றான் பதிலுக்கு,
“தெரியலாம் தெரியலாம்”, என்ன பேச்சை வளர்த்தான்.
“சரி இந்த வாரம் எங்க போலாம் லாஸ்ட் டைமே என்ஜோய் பண்ணல ராஜ் அண்ணா வேற வந்திருக்காங்கல”, என இவள் கேட்க,
“ம்…எங்க போகலாம் நீயே சொல்லு”, அவளையே முடிவு பண்ண சொன்னான்.
“பக்கத்துலயே எங்கனா போகலாம்… எங்க… ம்… ஆஹ்…பெசன்ட் நகர் பீச் போகலாமா?”, என்றாள் யோசித்து,
“ஓகே, குரூப்ல எல்லார்க்கும் அப்டேட் பண்ணிடு”, என அவளையை கூற சொன்னான்.
“சரி…அப்படியே மொதல்ல இங்க நம்ப வீட்டுக்கு வந்துட்டு போங்க அம்மா ராஜ் அண்ணாவை பாக்கணும்னு சொன்னாங்க அப்படியே எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டாங்க”.
“வந்துருவோம்”, என்றவனின் குரலில் மகிழ்ச்சி.
“அப்போ பிளான் ஓகே தானே அம்மா கிட்ட சொல்லிட்டா”, என்றாள் முடிவாய்.
“அம்மாகிட்ட ஓகே சொல்லிட்டு தியா, சரி பை…”
“பை…..”, இவளும் பேசியே வைத்தாள்.
தொலைப்பேசியை அனைத்து எழுந்தவன் தோட்டத்திலிருந்து தன் அறையின் அருகே இருக்கும் ஸ்விம்மிங் ஃபூல் அறை சென்று உடம்பு அலுக்கும் வரை நீந்தினான், பின் ஆஸ்வசமாய் அமர்ந்தவன் யோசனையில் மூழிகினான்.
அந்த யோசனையின் விளைவாய் இதழில் குறுநகை தவழ்ந்தது. அவன் இப்படி தான் கவலை, கோபம், மகிழ்ச்சி எதுவாய் இருந்தாலும் நீந்துவது பிடிக்கும். இப்போது எந்த காரணத்தால் நீந்தினானோ அவனே அறிவான்.
***
ராஜின் வீடு….
ஸ்டேஷனில் தன் வேலையை முடித்து இரவு வீடு வந்தவன் சலித்துக் கொண்டான். எப்போதுமே அப்படி தான் தன்னக்கென கண்விழித்துக் காத்திருப்பது யார்? உன்னவளிப்பது யார்?, அவனே செய்துகொள்வான் தான் சீக்கிரம் போய்விடுவோம் என தெரிந்ததாலோ என்னவோ அவனுக்கு அனைத்தும் சொல்லிக் குடுத்திருந்தார் அவன் தாத்தா.
இரவுணவை எளிமையாய் முடித்தான் இரவு மட்டும் அல்ல எப்போதும் அவனே செய்து சாப்பிடுவதால் எதையோ செய்து கொரிப்பது தான் வழமை.
கட்டிலில் சரிந்தவன் கண்மூடி உறங்க நினைக்க, மூடிய கண்முன் வந்து நின்றது அந்த உருவம்.
திடுக்கிட்டு எழுந்தான் அருகே இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக்கென நீரை அருந்தியவன் தன்னை அஸ்வாசபடுத்தி உறங்க முயல மறுபடியும் அதே உருவம்.
“என்னடா இது”, என எழுந்தவன் அறையை கால்கள் நோகும்வரை அளந்தான் பின் அதே அலுப்பில் கண்ணயர்ந்தான்.
(யாருடா அது நம்ப ஐபிஸ் ஆபீஸரையே பயமுறுத்துறது)
***
அந்த வாரயிறுதி…..
தியா கூறியதை போல் முதலில் அவள் வீட்டுக்கு வந்திருந்தனர் அனைவரும்.
ராஜிக்கு முதல் முறை என்பதால் சிறு தயக்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான்.
எப்போதும் போல் லட்சுமி தன் ஸ்பெஷல் காபியுடன் அனைவரையும் வரவேற்றார்.
தியா தன் தாய் தந்தையை அறிமுகப் படுத்தினாள். இது என் அப்பா ராமச்சந்திரன் இது என் அம்மா லட்சுமி…
அவள் தன் அன்னையின் பெயரைக் கூறவும் அவரை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் பார்வையில் சிறு ஏக்கம் அவரிடம் எதையோ தேடியது அவன் மனம்.
அவனின் பார்வை அவரை ஏதோ செய்ய “என்னப்பா”, என லட்சுமி கேட்க.
“என் அம்மா பேர் கூட லட்சுமி தான்”, என்றான்.
ஷ்யாம் ஏற்கனவே தியாவிடம் ராஜ் பற்றிக் கூறியிருக்கிறான், தியாவின் பெற்றோரும் அதை அறிவர். அவன் இவ்வாறு கூறவும் லட்சுமியின் தாயுள்ளம் அவனைச் சிறுபிள்ளையாய் அரவணைக்கச் சொல்ல, ஆதுரமாய் அவன் தலை கொதினார்.
“நான் உங்களை…”, என ராஜ் இழுக்க,
“அம்மானே கூப்பிடுப்பா”, என முடித்தார் அவர்.
வயிற்றில் சுமத்தால் தான் பாசம் வருமா என்ன?, இதோ எங்கோ பிறந்து எத்தனையோ இடங்கள் சுற்றி தன் பதின்வயதில் தாய் தந்தை இழந்து. தன்னை அவர்களுக்குப் பின் காத்த தாத்தாவை இழந்து தன் தாயின் பெயரை கொண்ட ஒரே காரணத்தினால் அவரிடம் தன் தாயைத் தேடுவதை என்ன சொல்ல.
லட்சுமியின் இளகிய தாயுள்ளம் அவன் நிலை காணக் கவலை கொண்டு கடவுளை திட்டித்தீர்த்து அவனை அன்னையாய் தாங்க நினைப்பதை என்ன சொல்ல…
அனைவரும் இவர்களுக்குள் நடக்கும் பாச பகிர்வை நெகிழ்வாய் பார்க்க.
தியா தான், “சரி சரி அம்மாவும் பிள்ளையும் இப்படியே பாச பயிர் வளர்த்தா நாங்க என்ன பண்ண ரொம்ப பசிக்கிது கொஞ்சம் எதாவது கொடுத்தா நல்லா இருக்கும்”, என தன் அன்னையைக் கேலி செய்ய.
“உனக்குப் பொறாமைடி”, எனக் மகளிடம் கூறியவர் சமைத்த உணவை உணவு மேசையில் அடுக்கினார்.
லட்சுமி அனைவருக்கும் பார்த்துப் பார்த்துப் பரிமாற ராஜ் வெகு நாட்கள் கழித்து வயிறார உண்டான்.
பள்ளி படிக்கும் காலத்தில் தன் வாழ்வில் நடந்த எதிர்பாரா இழப்பில் கூட்டுக்குள் சென்றவனை வெளிக்கொண்டுவர ஷ்யாம் படாத பாடு பட வேண்டியதாய் போக, சற்று இயல்பானவன் ஷ்யாம் வீட்டிற்குச் செல்வான்.
அவன் அன்னை ராதாவும் நன்றாகக் கவனிப்பார். பின் கல்லூரி படிப்பு என நாட்கள் செல்ல தன் தாத்தாவின் இழப்பில் மீண்டும் கூட்டுக்குள் சென்று விட்டான். அதன் பின் யு.பி.ஸ்.சி தேர்வு, ட்ரைனிங் என நாட்கள் செல்ல அவன் மனமும் பக்குவப்பட்டு இருத்தது.
இப்போது லட்சுமியைக் காணவும் தன் அன்னையை அவர்களிடம் தேடினான் அவரும் அவனை அரவணைக்க, வெகு நாட்கள் கழித்து மனம் மகிழ வயிறும் நிறைந்தது.
ஷ்யாமும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். நண்பனின் மகிழ்ச்சி அவர்களையும் தொற்றிக் கொண்டது.
(கதைக்காக மட்டும் சொல்லலை உண்மையாகவே பெறாத பிள்ளையைக் கூட தாங்குவது தாய்க்கு உரிய விடயம் தான் என் வீடு பக்கம் ஒருதவங்களுக்கு ரொம்ப நாள் குழந்தை இல்லாம தத்தெடுத்து வளத்தாங்க அப்புறம் நான்கு வருடம் கழித்து கடவுள் அருளால் அவங்களுக்குனு குழந்தை பொறந்துச்சி. அதான் உங்களுக்கென்று குழந்தை வந்துடுச்சே இனி இந்த குழந்தை எதுக்குனு அவங்க சொந்த பந்தம் கேட்க. அவன் தான் என் முதல் குழந்தைனு அவனை வீட்டுக்குடுக்காம வளர்த்தாங்க இப்போ அந்த பையன் காலேஜ் போக போறான். இது வரைக்கும் அந்த வீட்ல இரண்டு குழந்தைக்கும் பாரபட்சம் காட்டினது இல்லை)
“அம்மா ரொம்ப நல்ல இருக்கு எல்லாமே”, என ஆசையாய் வாய் நிறைய அம்மா அம்மா என அழைத்தான் ராஜ்.
“சும்மா உங்க அம்மாக்கு ஐஸ் வைக்காத”, எனக் சந்திரன் கூற,
“உண்மையை தான்ப்பா சொன்னேன்”, என்றான் ராஜ்.
“ஐயோ! அண்ணா, அம்மாக்கு அவர் மட்டும் தான் பாராட்டு பத்திரம் வாசிப்பார் நாம எதாவது சொன்ன இப்படித்தான் வாருவார் அவரை கண்டுக்காதீங்க”, என தியா தங்கையாய் அவனிற்கு அறிவுரைகள் வழங்கினாள்.
பின் வெய்யில் தாழும் வரை அங்கேயே இருந்து அரட்டை அடித்து, அடிக்கடி வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அங்கிருந்து கடற்கரை நோக்கிச் சென்றனர் நம்ப லைட்டிங் ஸ்டார்ஸ்.
(அடுத்த எபி நம்ப பெசன்ட் நகர் பீச்சில் சந்திக்கலாம்…பை…. பை…)