💙இருளை ஈர்க்கும் ஒளி💙

Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு -12

“காற்றுக்குத் தடை போட முடியுமா…

அதைப் போல் தான் உன் மேல் படியும் என் பார்வையும்…

அப்பப்பா எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டேன் எனச் சிறுகுழந்தையாய் அடம் பிடிக்கிறது என் கண்கள்…

போட்ட தடை உத்தரவுகளைக் காற்றில் பறக்க விட்டது…

போதும் இனி உனக்குத் தடை விதிக்க மாட்டேன் கண்களே…

ஏன் என்றால் தவறு உங்கள் மேல் அல்ல, அதோ அழகிற்கே இலக்கணம் எழுதுவது போல் உங்கள் ரசனையை தூண்டும் அவள் மேல் தான் முழு தவறும்”

எலியட்ஸ் கடற்கரையில்…

மெரினா உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை. ஆனால், இளைஞர்களுக்கு அதைவிட பெசன்ட் நகரில் இருக்கும் எலியட்ஸ் கடற்கரைதான் விரும்புவர்.

எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரை அப்போதைய சென்னை கவர்னர், எட்வர்ட் எலியட்ஸ் நினைவாக எலியட்ஸ் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.

சென்னையில் இருப்பவர்களுக்கே எலியட்ஸ் கடற்கரை என்றால் ஒரு நிமிடம் யோசிப்பார்கள். பெசன்ட் நகர் கடற்கரை என்றால்தான் சட்டெனப் புரிந்துகொள்வார்கள்.

வார இறுதியில், வாகனங்களை நிறுத்த கூட இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் அள்ளும்.

கடற்கரையை ஒட்டியுள்ள நடைபாதையில் வழி நெடுக உட்கார்ந்திருக்கும் ஜோடிகள், இளைஞர் பட்டாளம், நடை பயிற்சி செய்பவர்கள், சாலை எதிரே இந்த இளைஞர் கூட்டத்திற்காகவே இருக்கும் ஏராளமான உணவகங்கள், காஃபி ஷாப்புகள் என்று வார இறுதியில் பிஸியாக இருக்கிறது பெசன்ட் நகர் கடற்கரை.

இக்கடற்கரையில் ஒர் புகழ்பெற்ற வரலாற்று அடையாளம் இருக்கிறது. அது கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம்.

ஒரு சோக கீதத்தின் சாட்சியாய் நிற்கிறது அந்த நினைவுச் சின்னம். ஐரோப்பாவை சேர்ந்த காரல் இசுமிட் என்னும் மாலுமி கடலில் உயிருக்காய் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு ஆங்கிலேய பெண்ணை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றினார்.

ஆனால் அந்தப் பெண்ணோ எழுத நன்றி விசுவாசமும் அற்று, ஒரு உயிர் தன்னால் தன்னை காப்பாற்றி சென்றிருக்கிறதே என்ற கவலை அற்று, மறுநாளே ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டு மகிழ்ந்திருக்கிறாள்.

இதை கேள்வியுற்ற கவர்னர் கடுப்பாகி காரல் இசுமிட்டின் தியாகத்தை அனைவரும் அறிந்து கொள்ளும்படி அவருக்காக காரல் இசுமிட் நினைவுச் சின்னம் என்ற ஒன்றை பெசன்ட் நகர் பீச்சில் நிறுவினார்.

அந்த ஒரு பெண் அவரை நினைக்கவில்லை என்றாலும். அந்த கவர்னரின் செயலால் இன்றளவும் அங்கு செல்லும் அனைவருமே காரல் இசுமிட்டை நினைவு கூறுகின்றனர்.

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம் எத்தனையோ தமிழ்ப் படங்களில் வந்திருக்கிறது – “அந்த காலத்து ‘நடையா இது நடையா’ பாடல் சிவாஜி தேவிகா நடித்த அன்னை இல்லம் முதல், 1980’இல் இதய தாமரை கார்த்திக் ரேவதி சீன், மௌன ராகம் படத்தின் ‘ஓஹோ மேகம் வந்ததோ’ பாடல், புது வசந்தம் படம் ‘பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா’, 1990’இல் படமான பூவே உனக்காக படத்தின் ‘ஓ பியாரி’ பாடல், 2கே பாடலான வாரணம் ஆயிரம் ‘அஞ்சல அஞ்சல’ பாடல் வரை”, பல தலைமுறையாக பாடல் மற்றும் காட்சிகள் இங்கே படமாக்கப் பட்டுள்ளது

இரவு நேரத்தில், சில்ஹவுட் (silhouette) உத்தியில்போட்டோ (நிழல் படம்) எடுக்க‌ விரும்பும் நபர்களும் இந்த நினைவுச் சின்னத்திற்கு விரும்பி வருவார்கள்.

(கலை அண்ணா அந்த பக்கம் போற மாதிரி இருந்தா ஒரு போட்டோ பார்சல் பண்ணுங்க)

நம்ப லைட்டிங் ஸ்டார்ஸ் கொஞ்சம் தூரம் போய் ஜனநடமாட்டம் குறைவான இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்தனர். அருண் மித்து சிறிது தூரம் நடக்க செல்ல, தியா வருஷு கடலில் கால் நனைத்துக் கொண்டிருந்தனர்.

ராஜ் ஷ்யாம் கரையில் அருகருகே அமர்ந்திருந்தனர்.

ஒருவன் ஏதோ தீவிர சிந்தனையில் இருக்க மற்றொருவனோ அலையில் விளையாடும் அவளை ரசித்து கொண்டிருந்தான்.

வளி புகுந்து விளையாடும் அவள் கேசமும்…பட்டாம்பூச்சியாய் படபடக்கும் அவள் கண் இமைகளும்…அலைகள் அவள் கால்களை மோதும் போது அந்த ரோஜா நிற அதரங்கள் வளைந்து மெலிதாய் இதழ் விரிந்து இளநகை உதிர்ப்பதும்…

நீரில் ஆடை நனையாமலிருக்க அதைச் சற்று உயர்த்தி இறுக்கிப் பிடித்த அவள் செங்காந்தள் விரல்களும்…நீர் நனைத்துப் போன அவள் செந்நிற பாதங்களும் அதில் சிணுங்கும் கொலுசுகளும்…அவனைக் கட்டிப்போட்டது.

அவளைப் பார்க்காதே எனத் தன் கண்களுக்குப் போட்ட கட்டுப்பாடுகளை அவை தகர்க, எவ்வளவு முயன்றும் அவளிடம் செல்லும் பார்வையைத் தடுக்க முடியவில்லை.

அதே நேரம் அவள் திரும்பிப் பார்க்க, அவன் பார்வையைச் சந்தித்தவள் என்ன எனப் புருவம் உயர்த்தனாள்.

ஒன்றுமில்லை எனத் தானாய் அவன் தலை ஆடியது. அவள் சாதாரணமாய் கண்சிமிட்டி மீண்டும் அலைகளில் விளையாடத் துவங்கினாள்.

‘ஐயோ! சும்மாவே என்னால அவ மேல இருந்து கண்ண எடுக்க முடியல இதுல கண்ண வேற சிமிட்டி கொள்ளுறாளே ஆண்டவா இன்னைக்கி ஏன் என்னை இவளோ சோதிக்கிற’.

ஏற்கனவே திருட்டுத் தனமாய் அவளை ரசித்தவன் தான் இன்று சற்று வெளிப்படையாகவே போய்க் கொண்டிருக்கிறது. தான் செய்வது தவறோ என்று பல தடவை யோசித்திருக்கிறான் ஆனாலும் அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.

அவன் நல்ல நேரம் அருகே இருந்தவன் தீவிர சிந்தனையில் இருக்க, மித்து அருண் அங்கே இல்லாமல் போக, அவன் தங்கையும் விளையாட்டில் கவனமாய் இருக்க, இவன் ரசனையைக் கலைக்கவும், கவனிக்கவும் ஆள் இல்லாமல் போனது.

(அண்ணன பக்கத்துல வெச்சிகிட்டே அவன் தங்கச்சிய சைட் அடிக்கிற பாத்தியா… நீ பெரிய ஆள் தல)

அருகே இருந்த அவன் நண்பன் மட்டும் என்ன நாட்டின் முன்னேற்றதைப் பற்றியா சிந்திக்கிறான் அவனும் ஒரு காரிகையைப் பற்றித் தான் தீவிர யோசனையில் மூழ்கியுள்ளான். ‘ஏன் நமக்கு அப்படி ஒரு நினைப்பு வந்தது இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லையே…ம்…நானே என்ன குழப்பிக்கிறேனா’.

(அப்படியே குழம்புடா ராசா அப்போ தான் நாங்க மீன் பிடிக்க முடியும்)

பின் அனைவரும் ஒன்றுகூட “என்ன மச்சி ரொமான்டிக் வாக்கா”, என மித்து அருணை அனைவரும் ஓட்ட,

“அட போகப்பா அவ ஏதோ என்கூட ரொமான்டிகா வந்தா மாதிரி நினைச்சி பேசிகிட்டு”.

இல்லையா பின்ன.

“அடேய் அவ மிளகா பஜ்ஜி, வருத்த மீனு, சோளம், அப்புறம் அது பேறு என்ன?”, என அவன் யோசிக்க.

“ஸ்பைரல் பொட்டேட்டோ (spiral potato) மாமா”, என்றாள் மித்து.

அவளை மிகவும் பாசமாகப் பார்த்து வைத்தான்!!! அவளின் மாமா.

“பாத்தியா, இதுலாம் வாங்கி மொக்கிட்டு வராடா இதுல எங்க இருந்து ரொமான்டிக்கு வாக்கு…”

இவன் சொன்னதைக் கேட்டு மற்றவர் சிரிக்க, மித்துவோ “மாமா…”,எனச் சிணுங்கினாள் அந்த சிணுங்கலில் தடுமாறித்தான் போனான்.

“உங்களுக்கும் வாங்கிட்டு வந்தாடா”, என அவன் கையிலிருந்ததைக் கொடுக்க, தியா அதை வாங்கி அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தாள்.

“அப்புறம் மச்சி உங்கப் ப்ராஜெக்ட் எப்படி போகுது”, ராஜ் வினவ,

“முடிஞ்சதுடா இன்னும் ரெண்டு நாளைல வைவா இருக்குடா. அடுத்த மாதம் செம் இருக்கு அவளோ தான் காலேஜ் லைப் முடியுது. இனி நான் பிசினஸ் பாக்க போக வேண்டியது தான்”.

கல்லூரி வாழ்க்கை முடியப் போகிறதே என்ற சிறு கவலை ஷ்யாமின் பேச்சில் தெரிந்தது. அனைவருக்கும் பிடித்த ஒன்று அல்லவா அது, பொறுப்புகளற்று இளமையின் இனிமையை அனுபவித்து வாழும் காலம், யாருக்குத்தான் பிடிக்காது.

“லோன் என்னடா ஆச்சி”, என அருணை ராஜ் வினவ,

“எல்லா செயல்முறைகளும் முடிஞ்சிடுச்சி எக்ஸாம் முடியவும் சாங்ஷன் ஆகிடும்னு நினைக்கிறன்”, என்றான் அருண்.

“சூப்பர் மச்சி எப்போ பிசினஸ் ஆரமிக்க போற?”, என ஷ்யாம் வினவ,

“லோன் வந்து ஒரு ரெண்டு மாசத்துல ஸ்ட்ராட் பண்ணிடலாம்டா”.

‘உனக்கு எப்போ ட்ரைனிங் முடியுது ராஜ்”, அருண் வினவ,

“இன்னும் மூணு மாசம் இருக்குடா’.

“அண்ணா ட்ரைனிங் முடிச்ச உடனே இங்கயே போஸ்டிங் கிடைத்திடுமா”, என கேட்டாள் தியா.

“தெரியல தியாம்மா, ட்ரைனிங்ல முதல் வந்த கேண்டிடேட்க்கு அவங்க கேட்குற இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கு பார்ப்போம்.”

‘இங்கயே இருந்தா நல்லா இருக்கும்.”, என தியா கூற,

“எனக்கும் அதே ஆசைதான்”, என்றவனின் கண்கள் வர்ஷாவை தொட்டு மீண்டது.

“சரி நேரம் ஆச்சி கிளம்பலாமா?”, ஷ்யாம் தான் சொன்னான்.

அங்கிருந்து செல்ல மனமே இல்லாமல் எழும்பினர்.

“அப்படியே அஷ்டலட்சுமி கோவில் வேளாங்கன்னி மாதா தேவாலயம் போயிட்டு போகலாமா”, என தியா கேட்க.

முதலில் அஷ்டலட்சுமி கோவில் சென்று சாமியைத் தரிசித்தனர்.

அட்ட (எட்டு) இலட்சுமிகளும் நான்குநிலைகளில் நிறுவப்பட்டுள்ளனர். முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியலட்சுமி உள்ளனர். முதல்தளத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் உள்ளனர். கோயில் தரிசனத்தை இங்கிருந்தே துவக்குவர். சில படிகள் ஏறி மூன்றாம் தளமடைந்தால் அங்கு சந்தான லட்சுமி, விஜயலட்சுமி வித்தியா லட்சுமி மற்றும் கஜலட்சுமி சன்னதிகளைக் காணலாம். மேலேறினால் உள்ள நான்காம் தளத்தில் தனியாக உள்ள தனலட்சுமியைக் காணலாம்.

ஓவ்வோருவருக்கும் வேண்டுதல்களும் மனக்குழப்பங்களும் இருக்க, தன் கணவன் பாற்கடலில் பள்ளிகொண்டதைப் போல் அலைகடல் அருகிலேயே கோவில் கொண்ட அந்த அலைமகளிடம் அதற்கான தீர்வுகளை வேண்டினர்.

அதன் அருகேயே தேவாலயம் இருந்தது அதற்கும் சென்றார்கள்.

மாதாவை வழிபடும் கிறிஸ்துவ மக்களின் திருத்தலங்களில் வேளாங்கன்னிக்கு பிறகு மிகவும் பிரசித்து பெற்றதாக இருப்பது பெசன்ட் நகர் மாதா கோயில். பல நூறு மக்கள் இங்கு தினமும் வந்து மாதாவை வழிப்பட்டுச் செல்கின்றனர். புனித அந்தோனியாரின் இறப்புக்குப் பின் அவரின் நாக்கு மட்டும் அழியாமல் இருக்கிறதாம் அது மக்களின் பார்வைக்கு ஒரு கண்ணாடி பெட்டியில் இங்கு வைக்கப் பட்டுள்ளது. அத்தனையும் முடித்து வீடு சென்றனர்.

அதன் பின் நாட்கள் விரைந்தோட தங்கள் தேர்வுகள் முடிய, அருண் ஷ்யாம் கல்லூரி படிப்பை முடித்து, ஷ்யாம் தங்கள் நிறுவனத்தில் பொறுப்பேற்க, அருண் தன் தொழில் துவங்க ஆவண செய்துகொண்டிருக்க, மூன்று பெண்களும் கடைசி வருடத்தினுள் கால் பதிக்க தயாராகினர்.

ராஜ் அவன் ட்ரைனிங்கை தொடர்ந்தான்.

(ஒரு பைசா செலவில்லாமல் பெசன்ட் நகர் பீச்சைச் சுத்தி பாத்தாச்சுப்பா…😜 பொறுப்புக்குள் புகுந்த ஆண்களும் கல்லூரியின் இறுதி ஆண்டுக்குள் நுழையப் போகும் பெண்களும் என்று நம்ப லைட்டிங் ஸ்டார்ஸ் வாழ்க்கை எப்படி போகுதுனு இனி வர எபிக்கல பார்க்கலாம் இப்போதைக்கு பை…பை)

 

 

error: Content is protected !!