💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு -17
நீ என்னவள் என என் மனம் அறியும் முன் கண்கள் அறிந்து உன்னைச் சிறைபிடித்து மனதுக்குள் பொக்கிஷமாய் வைத்துக் கொண்டது உன் விடயத்தில்
என் மனதை வென்றது என் கண்கள்
ராஜ் வீட்டில்….
ராஜ் மிகவும் உற்சாகமாக இருந்தான். என்ன தான் அவன் விரைப்பான காவல்காரனாக இருந்தாலும் ஒரு குடும்பச் சூழலுக்கு ஏங்கி இருக்கிறான்.
இதோ நாளையிருந்து அவனுக்கு அது கிடைக்க போகும் மகிழ்ச்சி. அது
மட்டுமா இது நடக்குமா என அவன் ஆசைப்பட்ட வர்ஷு உடனான திருமணம் பேச்சும் நடந்திருக்கிறதே அவன் மகிழ்ச்சியின் அளவை கேட்கவா வேண்டும்.
அவளைப் பற்றிய நினைப்பு வந்தவுடன், ‘அவளிடம் அதிகம் பேசிவிட்டோமோ’, என்ற எண்ணம் வரக் கலங்கிய மனதை
அவள் பேசியது மட்டும் சரியா என தேற்றிக்கொண்டான்.
உண்மையைக் கூற வேண்டும் என்றால் அவனுக்கு அவளைக் கட்டாயப்படுத்த விடுப்பமில்லை தான். ஆனாலும் ஒரு இரண்டு வருடம் டைம் கேட்டுப்பார்க்கலாம் எனத் தான் கேட்டான் அவள் அதற்குச் சம்மதித்தது ஆச்சர்யமே.
அவளின் மனது மாறவில்லை என்றால் கூறியது போல்
கல்யாணத்தை நிறுத்தவும் அவன் தயாராய் இருந்தான். என்றென்றால்
கட்டாயப்படுத்தி காதலைப் பெற முடியாதே.
இவ்வாறு தன் போக்கில் நினைத்துக் கொண்டிருக்க, வீட்டு வெளியில் கேட்ட
வண்டிச் சத்தத்தில் சிந்தனை கலைத்து வெளியே வந்தான்.
தியா தன் ஸ்கூட்டியை சைடு ஸ்டாண்ட் போட்டுவிட்டு வந்தாள்.
“ஸ்பீடா வந்தியா என்ன”, என அவளை கேட்க,
“இல்லையே ”, என கூறிக்கொண்டே அவன் அருகே வந்தாள்.
“அம்மா நீ கிளம்புனானு போன் பண்ண நேரத்துக்கும் நீ வந்ததுக்கும் கணக்கு
பார்த்த கொஞ்சம் ஸ்பீடா வந்தா மாதிரி இருக்கு”, என்றான் சந்தேகமாய்.
“ஐயோ அண்ணா நீ போலீஸ் தான் நான் ஒத்துக்குறேன் அதுக்குனு இப்படி விசாரணையைப் போடாதே. டிராபிக் அதிகம் இல்ல அதான் சீக்கிரம் வந்துட்டேன் போதுமா. உனக்குப் போய் உதவிப் பண்ணா வந்தேன் பார்”, என இவள் அலுத்து கொள்ள,
“சரி சரி உள்ள வா.”, என தங்கையிடம் சமாதான கொடியை பறக்க விட்டான்.
ராஜ் தான் இப்போது இருக்கும் வீட்டை காலி செய்து கொண்டிருந்தான்.
அவன் தந்தை அடிக்கடி மாத்தல் ஆவதினால் எப்போதுமே அதிகம்
பொருட்கள் வைத்துக் கொண்டது இல்லை.
இவன் வளர்த்த பின்னும் தனியாள் என்பதால் எதையும் வாங்கியது இல்லை. எனவே இருப்பதை ஏறக்கட்டிக்
கொண்டிருந்தான். அதற்கு தியாவும் உதவினாள்.
அவன் பொருட்களை அடுக்க இவள் வீட்டைச் சுத்தம் செய்தாள். சிறுது
களைப்பு தெரியவும் எதாவது குடித்தால் நன்றாக இருக்கும் போல்
தோன்றியது.
“அண்ணா கொஞ்சம் காபி போடவா”.
“சரி போடு”.
அந்த நேரம் வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் யாரெனக் கதவை எட்டிப் பார்க்க
ஷ்யாம் நின்றிருந்தான்.
ராஜ் தான் வீட்டை காலி செய்யும் வேலையிருப்பதாய் கூற இவனும்
உதவ வந்தான்.
“ஹாய் ஷ்யாம் வாங்க…”, என தியா கூறியது அவன் காதிலேயே
விழவில்லை அவளை தான் பார்த்திருந்தான்.
அவள் வழமையாய் வீட்டில் வேலை செய்வது போல் ஷாலை முன்னே படர
விட்டு இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்தாள் (நாட்டியம் ஆடுபவர்கள் போல்).
வேலை செய்ததால் முகத்தில் வேர்வை வழிந்தது அது ரோஜா மேலிருக்கும்
பனித் துளிகளை நினைவு படுத்தியது.
நெற்றி வேர்வையில் சிறுசிறு
மூடிகற்றைகள் ஓட்டி இருக்க, நீண்ட கூந்தலை இறுக்கிப் பின்னி முன்னே
விட்டிருந்தாள், வேலை செய்த அலுப்பு இருந்த போதிலும் முகத்தில்
புன்னகை தவழ நின்றிருந்தாள்.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் ஷ்யாம்.
“யாரு தியாமா”, எனக் கேட்டு வாசல் வந்த ராஜ் ஷியாமைப் பார்க்கவும்,
“ஏண்டா அங்கையே நின்னுட்டா உள்ள வா”, எனக் கூப்பிட்டான்.
தன்னிலைக்கு வந்தவன், “உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்” என்றான்.
“தியாவும் அதுக்கு தான் வந்தா”.
‘இது தெரிச்சா முன்னமே வந்திருப்பேனே. எல்லாம் சொன்னியே தியா வந்து இருக்கான்னு சொன்னியாடா’, மனதிற்குள் நண்பனே திட்டிக் கொண்டான்.
“என்ன எதுவும் பேசாம இருக்க”, என்ன சிலையாய் நின்றிருந்த நண்பனை பார்த்து கேட்க,
“ஆங், ஒண்ணுமில்லைடா”, தூக்கத்திலிருந்து விழித்தவன் போல்,
இதற்குள் தியா மூவருக்கும் காபி கலந்து வந்தாள்.
“இந்தாங்க எடுத்து கோங்க”, என தட்ளை நீட்ட அதை எடுத்துக் கொண்டே ,
“ஏண்டா என்னை கூப்பிடா நான் வர மாட்டேனா ஏன் பாவம் இப்படி தியாவ வேலை வாங்குற”.
“அப்படி கேளுங்க கேட்க ஆளில்லைனு சின்ன பிள்ளைய என்ன வேலை
வாங்குறாங்க பாருங்க”, என்றாள் ஷ்யாமிடம்.
“அடிப்பாவி நானா உன்ன வேலை வாங்குனேன்”, என அவளிடம் சண்டைக்கு வந்தான் ராஜ்.
இவர் அண்ணன் தங்கை சண்டையில் ஈடுபட, ஷ்யாமோ
காபியை ரசித்துக் குடித்தான் ஷ்யாம்… காபியை மட்டுமா?
“காபி ரொம்ப நல்லா இருக்கு தியா”.
“ஆமா அப்படியே அம்மா போடுற மாதிரியே இருக்கு”, என ராஜும்
ஒத்துக்கொண்டான்.
இப்படியே பேசிக்கொண்டே வேலைகள் துரிதமாக நடந்தது.
ஷ்யாம் தியாவை சமயம் கிடைக்கும் போதெல்லாம் ரசித்துக் கொண்டான்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்தும் முடித்து வண்டியில் பொருட்களை ஏற்றி, தங்கள் வீடு முகவரி கொடுத்துச் சேர்க்கச் சொல்லி, இவர்கள் பின்னால் ஷ்யாமின் காரில் கிளம்பினார்.
***
(இனி அது ராஜ் தியா வீடு)
அங்கே லட்சுமி ஏற்கனவே ராஜின் அறையை (தியா அறைக்கு எதிரே
இருந்த விருந்தினர் அறை) தயார் செய்திருந்தார்.
வந்தவர்கள் சிறிது நேரம் அமர்ந்து பேசப் பொருட்களும் வந்து சேர்ந்தது.
துணிமணி, செர்டிபிகேட், பதக்கம் போன்ற தேவையான பொருட்கள் மட்டும்
எடுத்துக் கொண்டு, மற்ற தட்டு முட்டு சாமான்கள் புதிதாய் தங்கள்
தேவைக்கு எனக் கட்டிய ஸ்டோர் ரூமில் வைத்தனர்.
“என்னப்பா அங்க செம வேலையா எல்லா களைப்பா இருக்கீங்க”, என்றார் லட்சுமி அக்கறையாய்.
“ஆமாமா உண்மையாவே அங்க செம வேலை, கொஞ்சம் பொருள் தானேனு
பார்த்த ஓட்டடை , மாப், கிட்சேன் கிளீனிங்னு நிறைய வேலை நல்ல வேல
தியாமாவும் ஷ்யாமும் வந்தாங்க இல்லனா கஷ்டம் தான்.”, என்றான் ராஜ்.
“பின்ன வீடு காலி பண்றதுனா சும்மாவா, சரி நான் போய் காபியும்
பலக்காரமும் எடுத்துட்டு வரேன்”, என்ன சமையல் அறைக்குள் செல்லப் போன லட்சுமியை தடுத்த,
“அம்மா கொஞ்சம் ரெப்பிரேஷ் ஆகிட்டு வரோம்.”, என ராஜ் கூற,
“சரிப்பா ராஜ் அப்படியே ஷ்யாமையும் உன் ரூம்க்கு கூட்டிட்டு போப்பா”, ஜனா அவனும் களைப்பாய் இருப்பதை பார்த்து கூறினார் லட்சுமி.
“சரிமா”, என்ன சாமியும் அவன் அறைக்கு அழைத்துக் கொண்டு சென்றான் ராஜ்.
அவனின் அறை ஒரு அணுக்கேற்றார் போல் இருந்தது.
அலமாரியில் அவனிற்காய் உடைகள் அணிவகுத்திருந்தது அதில் அவனின்
ஆசை உடையான காக்கி சட்டையும் அடக்கம்.
பின் பிரஷ், பேஸ்ட் , ஷாம்பு,
சோப்பு , ஷேவிங் கிரீம், அபிடேர் ஷேவிங் லோஷன், பாடி ஸ்பிரே, ஹேர் ஜெல்
எனச் சகலமும் இருந்தது.
‘தனக்காய் பார்த்துப் பார்த்து வாங்கி இருக்கிறார்கள்’, என அவன் மனம்
நெகிழ்த்தது.
“என்னடா மச்சி ஆல் செட் போல”, என்ன சந்தோஷமா கேட்டான் ஷ்யாம்.
“ஆமாடா இத நான் எதிர்பார்க்கல எப்படி என் பிராண்ட்லாம் தெரியும்”, என அவன் யோசனையாய் கேட்க,
அவன் சிரித்ததிலிருந்தே அது அவன் செயல் என்பது புரிந்தது.
“உன் வேலையா”, என்றால் நண்பனை சந்தோஷத்துடன் பார்த்து,
“உன் அம்மா பிராண்ட் கேட்டாங்க நான் சொன்னேன் அவளோ தான்”, என்ன சரண்டரானான் அவன்.
“ஷ்யாம் மனசு ரொம்ப லேசா இருக்குடா”, என்றான் உணர்த்து,
“புரிந்து மச்சா, ஐ ஆம் சோ ஹாப்பி போர் யூ”( I am so happy for you), என் நண்பனுக்காக மகிழ்ச்சி அடைந்தான் ஷ்யாம்.
மேலும் சிறிது நேரம் பேசி ராஜ் அம்மா தந்ததை மறுக்க முடியாமல் உண்டு, தியாவைக் கண்களில் நிரப்பிக் கொண்டு கிளம்பினான் ஷ்யாம்.
***
இரண்டு நாட்கள் கழித்து தியாவைத் தவிர அணைத்து லைட்டிங் ஸ்டார்ஸ் உறுப்பினர்களும் ஷ்யாமின்
வீட்டில் கூடி இருந்தனர் காரணம் அடுத்த வாரம் தியாவின் பிறந்தநாள்.
அனைவருக்கும் அவள் தான் பிறந்தநாளைச் சிறப்பாய் பிளான் செய்வாள்.
எனவே அவள் பிறந்தநாளை இம்முறை நன்றாகக் கொண்டாட வேண்டும்
எனக் கூடி இருந்தனர்.
“சரி உங்களுக்கு எதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க மக்கா”, என
ஆரமித்தாள் மித்து.
“என்கிட்ட செம ஐடியா இருக்கு”, என முன்னே வந்தான் அருண்.
“சொல்லுங்க கேட்போம்”, என்ன வித்து கூட அனைவரும் ஆர்வமாய் அவன் முகம் பார்த்தார்கள்.
“நைட் 12 மணிக்கு…”, என்ன பீடிகையோடு அவன் ஆரம்பிக்க,
“ம்…”
“நடு ரோட்ல கேக் வெட்டலாம்”, என்றால் ஏதோ பெரிய விஷயத்தை சொல்வது போல்,
“12 மணிக்கு”, என்ன ஷாம் அவனை முறைத்து கேட்க,
“எஸ்”, என்றான் கூலாக.
“நடுரோட்ல”, என மீண்டும் அவன் கேட்க,
“ஆமா மச்சி”
“ஏன்டா பப்ளிக் நியூசென்ஸ்னு உள்ள தூக்கி போடவா”, எனக்கு காட்டாய் புரிந்தான் ஷ்யாம்.
“நாம போலீஸ் பந்தோபஸ்தொட தானே இருப்போம்” எனக் கூறி ராஜை பார்த்து,
“ஏன் ராஜ் நீ
அதுக்கு ஏற்பாடு பண்ணமாட்ட” என்றான்.
“டேய் என்னை பத்தா உனக்கு எப்படித் தெரிந்து”.
“நம்ப பாசமலர்க்காக இது கூட பண்ண மாட்டியா”, என்ன சிவாஜி பாணியில் கேட்க,
“மித்து உனக்காக இவனை சும்மா விடுறேன் இல்ல…”, என கைகளை முறுக்கினான் ராஜ்.
“வோய் கைன்ஷன் வேணாம்னா விடுங்க…”, என்ன பம்பினான் இவன்.
“என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு”, என ஷ்யாம் கூற.
“நீயும் இவனை மாதிரி மொக்க போடாதே மச்சி”, என்றான் ராஜ்.
“இல்லை முத கேளுங்க”, எனது ஷாம் கூறவும் அனைவரும்
கேட்கத் தயாராகினர்.
“தியா ஒரு தடவ என்கிட்ட பேசும் போது கேரளா போக ஆசை ஆனா
போனது இல்லனு சொன்னா. சோ நாம ஏன் இந்தவாட்டி அவ பர்த்டேவ ஏன்
அங்க செலிப்ரட் பண்ணக் கூடாது?”, எனக்கூறி அனைவரும் முகத்தையும் பார்க்க,
“நல்ல ஐடியா மச்சி. பட் எல்லார்க்கும் செட் ஆகுமா”, என்ன கேள்வி எழுப்பினால் அருண்.
“எங்களுக்குப் பிரச்சனை இல்ல காலேஜ் லீவ் தான்”, என மித்து மற்றும் வர்ஷு கூற,
அருணும் தன் வேலைகளை போன் மூலம் பார்த்துக் கொள்வதாக கூறினான்.
“எனக்கு லீவ் கிடைப்பது கஷ்டம் , போய்ட்டு வர நேரமும் பாக்கணுமேடா”, என்றான் நம் போலீஸ்காரன் ராஜ்.
“டூ டயஸ் தான, போக வராது பிரச்சனையில்லை பிளைட்ல போய்ட்டு
வந்துட்டலாம்”.
“அது சரியா இருக்கும்”, என் ராஜூம் சம்மதித்தான்
“ஆமா அத நான் பாத்துக்குறேன்”.
“சரி, அப்போ நான் என்னோட எஸ்.ஐ கிட்டலாம் பேசிடுறேன்(அவனுக்கு கீழ் நான்கு போலீஸ் ஸ்டேஷன்ஸ் இருந்தது அதிலிருக்கும் எஸ்.ஐ களைதான் கூறுகிறான்). எதாவது பிரப்லம்னா கிளம்பிடுறேன்”.
“சரிடா அப்போ இந்த பிளான் ஓகே தானே”.
அனைவரும் ஒருசேர “ஓகே” என்றனர்.
***
ராஜ் அவர்களின் தாய் தந்தையிடம் விடயத்தைக் கூறி அவர்களையும்
தயாராகச் சொன்னான்.
சந்திரன் தியாவை அழைத்து “கேரளா அனைத்து வங்கிக்கான மீட்டிங்
ஒன்னு இருக்கு நீயும் போகணும்னு சொல்லிட்டே இருந்தியே
பேமிலியா போகலாம்” என்றார்.
“ஐ செமப்பா…” என குதுகலித்தவள், “அண்ணாகிட்ட சொல்லிட்டீங்களா
அவருக்கு லீவ் கிடைக்காதே”.
“சொல்லி இருக்கேன்மா முடிச்ச பாக்குறேனு சொன்னான்”, என சமாளித்தார்.
“என்னப்பா இப்படி சொல்றிங்க என் பர்த்டே அண்ணா இல்லாமையா…அதுலாம்
முடியாது”, என மீண்டும் அவள் கேள்வி எழுப்ப, இப்பொழுது என்ன சொல்லி சமாளிப்பது என்று முடித்தவரை பார்த்த லட்சுமி,
“நீ சின்ன பிள்ளையா என்ன அப்பா தான் சொல்றாரில்ல அண்ணா கேட்டு
பார்ப்பான்னு அதுக்குள்ள என்ன அவசரம்”, என கடியவும் ராஜ்
வரவும் சரியாய் இருந்தது.
“என்னமா எதுக்கு பாபாவை திட்டுறீங்க”, என் தங்கைக்கு பரித்துக் கொண்டு வந்தான் அண்ணன்.
“ஆமாடா அவ சும்மாவே அப்படி நடந்துக்குறாள் இதுல நீ வேற
பாப்பாவாம்…”, என வேண்டுமென்றே தியாவை வெறுப்பேற்றினார.
“பாருணா இப்படி தான் என்னை திட்டிட்டே இருக்காங்க…”, என அண்ணியை பற்றி குற்ற பத்திரிக்கை வாசித்தாள்.
“போதும்டி ரொம்ப பண்ணாத..நீயும் கேரளா வரணுமாம் அதுக்கு தான் இந்த
வாதம்”, என்ன விஷயத்தை மகனிடம் கூறினார் லட்சுமி.
“அவ்ளோ தானே நான் எஸ்.ஐ கிட்டலாம் பேசிட்டேன் நீங்க முன்னாடி போங்க
நான் அடுத்த நாள் உன் பர்த்டேக்கு கண்டிப்பா அங்க இருப்பேன்”, என தங்கையிடம் கூறினான்.
“முன்னாடியே வரமுடியாதா”, என தியா கேட்கவும்
“இல்லமா உனக்கு தெரியாத என் ஒர்க் பத்தி பர்த்டேக்கே டைம் ஒதுக்கித்
தான் வரேன்”, எனத் தங்கையை சமாதானப்படுத்தினான்.
“புரிதுண்ணா கண்டிப்பா வந்துடுவ தானே”, என அவன் வேலையை பற்றி அறிந்ததால் கேட்க,
“கண்டிப்பா”, என அவன் கூறவும்,
“அப்போ ஓகே”, என அவள் அறை நோக்கிச் சென்றாள்.
“என்ன ராஜ் கரெக்டா நீ எப்போ தான் வர”, எனச் சந்திரன் தியா சென்றதை
உறுதிப்படுத்திக் கொண்டு கேட்க.
“உங்களுக்கு முன்னையே பசங்கலோட பிளைட்ல போறேன் அங்க ஷ்யாம்
வீட்டுக்குச் சொந்தமான பங்களா ஒன்னு இருக்கு வேலைக்கு ஆளுங்களும் இருக்காங்க அங்க தான் நாம ஸ்டே பண்ண போறோம். நாம ஒரு டூ த்ரீ
டேஸ் ஸ்டே பண்ணலாம்னு பிளான். பாப்பா பர்த்டே செலிப்ரஷன்
முடிச்சிட்டு அன்னைக்கு ஒரு கோவில் போறோம். அப்புறம் ஒரு ரெண்டு
இடத்துக்கு பிளான் இருக்கு அத அங்க போய் எப்படினு பாத்து முடிவுப்
பண்ணனும்”.
“உனக்கு வேலையில் ஒன்னும் பிரச்சனை வராததே”, என அக்கறையை அவர் கேட்க,
“இல்லப்பா இங்க இப்போதைக்கு எல்லாம் ஓகே நான் மெடிக்கல் லீவ்
குடுத்துருக்கன் சோ ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல”.
“சரிப்பா”, என இவரும் இவர்கள் கிளம்புவதற்கான ஏற்பாட்டில் இறங்க துவங்கினார்.
***
ஷ்யாம் அவர்களின் அன்னை தந்தையையும் கூப்பிட்டான்.
“இல்லப்பா நீயும் கம்பெனியில் இல்ல நானும் வந்துட்டா ரொம்ப கஷ்டமா
போய்டும்”.
“இல்லப்பா இங்க எல்லாம் ஓகே தான், மேனேஜர் அங்கிள் தான் இருக்காரே”.
“அவன் பாத்துப்பான் தான் இருந்தாலும் ஒரு எமெர்கெனசினா நாம யாரவது
ஒருத்தர் இருக்கணும்”, என்று நிதர்சனத்தை கூறினார்.
அவர் சொல்வது இவனுக்கும் புரிந்தது ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
“நம்ப முருகன் வள்ளிக்கு போன் பண்ணி எல்லாம் ரெடி பண்ண சொல்லிடு ராதா”, எனது தன் மனைவியிடம் ஏற்பாடுகள் செய்ய சொல்லி சொன்னார்.
“சரிங்க”, என அவர்களுக்கு கால் செய்யப் போக,
“கீழ மட்டும் பண்ணிட போறாங்க எல்லாருக்கும் பிரீயா இடம் இருக்கனும்
அதுனால மேலையும் சுத்தம் பண்ண சொல்லிடு”, என கிருஷ்ணன் கூறவும்
“அதுவும் சரிதான் இதோ இப்போவே பண்ணி சொல்லிடுறேன்.”, என கால் செய்து அங்கு அனைத்தையும் ரெடி பண்ண சொன்னார்.
வர்ஷா அவள் ரூமில் உள்ள பால்கணியில் அமர்ந்து யோசனையில்
ஆழ்ந்தாள். அன்று தன் வீட்டார்கள் ராஜைப் பற்றியும் அவனுடனான திருமண
பேச்சிகள்ப் பற்றியும் தான் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தாள்.
நம்ப வீட்ல எல்லாருக்கும் அவர ரொம்ப பிடிச்சி இருக்கு போலவே. ஆனா
இது எப்படி செட் ஆகும்.
அந்த ரவி வாழ்க்கையில் வராம இருந்திருந்தால் இந்த கல்யாணம் பத்தி யோசிச்சி இருக்கலாம்.
அன்று காபி ஷாப்பில் நாம நன்றி கூறும்போது ஜாக்கறதையா இருக்கச்
சொன்னாரே தவிர நம்பல குற்றவாளியா அவர் பார்க்கவில்லையே.
இருந்தாலும் இதன் காரணமா எதாவது பிரச்சனை வருமா. ஒரு
வேல எப்போதாவது ஒரு முறை நீ வேற ஒருத்தன லவ்
பண்ணவதாதனனு சொல்லி காமிச்சிட்டா? அவருக்கு என்னை பிடிச்சிருக்குனு
சொன்னார் அது எப்படி? அவர்கிட்ட நான் சரியா கூட பேசுனதுயில்ல
அப்புறம் எப்படி? இந்த பிடித்தம் எதனால்? அது கடைசி வரை நீடிக்குமா?
இப்படிப் பல சிந்தனைகள் அவளுள்.
ஏற்கனவே கட்டாயத்தினால் காதல் என்ற பெயரில் அவள் ஒன்றவில்லை. எனினும் காதல் கல்யாணம் எனப் பேசியது
அவள் நினைவில் வந்து குற்றவுணர்ச்சியைத் தூண்டியது. காதல் கண்டு
மிரண்டு தான் போய் இருந்தாள் அந்த பாவை.
கடந்து போன கசப்பை மறந்து எதிர்கால இனிய வாழ்க்கைக்கு அவள் மனம்
மாறி தயாராவாள் என்ற நம்பிக்கையில் அவள் சிந்தனையைக் கலக்காமல்
அவள் அண்ணன் அறை நோக்கிச் செல்வோம் வாருங்கள்.
அடுத்த வார பயணம் பற்றித் தான் சிந்தித்திருந்தான் அவன்.
அவளுக்குப் பிடித்ததைச் செய்ய மனம் மிகவும் ஆசை கொண்டது.
அவன் அறை சுவரை வெறித்திருந்தான், அதிலிருந்த ஒன்று தியாவை
நினைவு படுத்தியது அவனுக்கு.
இப்போதெல்லாம் அவள் நினைவு அதிகமாகி இருந்தது.
இன்னும் ஒரு வாரம் தான் அப்புறம் தியா ஆபீஸ் வந்துடுவா.. என அவன்
நினைவு ஆட்டம் போட்டது.
முன்பு அவளிடம் ஏற்படும் ஈரப்பை கட்டுப்படுத்த நினைத்தான். ஆனால்
இப்போது அது கட்டுக்கடங்கா மத யானையைப் போல் அவளை நோக்கிப்
பாய்ந்தது.
அவன் ஏற்பாடு செய்த இந்த பயணம் அவன் மனதை அவனுக்குக்
கண்ணாடியாய் படம்பிடித்துக் காட்டப் போவதை அறியாமல் அதற்கு
தேவையானதை அடுக்கினான் ஷ்யாம்.
(சோ அடுத்த எபில கேரளா பயணம்…. வெறும் கேரளானு தான் சொல்லிருக்கேன் அங்கே எங்க போக போறோம் தெரியுமா? யோசிங்க இப்போதைக்கு பை பை)