💙இருளை ஈர்க்கும் ஒளி💙

Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு – 21

என் இத்தனை வருடக் கட்டுப்பாடு உன்னை பார்க்கவும் ஒளியில் காணாமல் போன இருளான மாயம் என்ன 

அருண் ஷ்யாமை பார்த்துக் கேட்ட கேள்வி யாதெனில் அவன் காதலிக்கிறானா  என்பது தான்.

தன் மனதை இன்னும் தன்னவளிடமே  தெரிவிக்காத நிலையில் அவன் என்ன சொல்வான்.

“டேய் என்னடா  எல்லார்கிட்டையும் இதே கேள்வி கேட்கிற அதுலாம் ஒத்துக்கமுடியாது.வேற எதாவது கேளு”.

“டேய் நாம என்ன சின்ன பாப்பாவா என்ன மிட்டாய் பிடிக்கும் எந்த ஹீரோயின் பிடிக்கும்னு கேட்க. கேட்ட கேள்விக்குப் பதிலை சொல்லு இல்ல  சொல்ற டேர் பண்ணிட்டு போ.”

‘என் காதலைப் பற்றி இப்போ  சொல்ல முடியாது டேர் கேட்டா ஒரு மார்க்கமா பாப்பாங்க என்ன பண்ணலாம்’

“சரிடா என்ன டேர் பண்ணனும் சொல்லித்தொலை” என அருணிடம் கடுப்படித்தான்.

“நான் தரேன் அண்ணாக்கு டேர்”, எனக் கத்தினாள் மித்து.

“என்ன ஒரு ஆனந்தம் மித்து உனக்கு”,  என்றான் ஷ்யாம்.

“ஈஈஈ…”

“சிரித்தது போதும் என்ன பண்ணனும் சொல்லு”, என்றவன் கேட்கவும்,

“தியாக்கு ப்ரொபோஸ் பண்ணுங்க…”, என அவள் கூறவும்,

“என்ன லூசா நீ” என அருண் அவளை பொரிந்து தள்ளினான்.

பெரியவர்கள் இருக்க இப்படி பேசினால் எங்கே அவளைத் தவறாய் நினைப்பார்களோ என இவன் சொல்ல,

“என்னப்பா நீ அவ ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறாள் அவளைப் போய் திட்டிக்கொண்டு…” என லட்சுமி அவளுக்கு வக்காலத்து வாங்கவும் அவனுக்கு அப்பாடா என்றிருந்தது.

தியாவும் “அதானே” என மித்துவை ஆதரித்தாள்.

வர்ஷா அவளின் இந்த செயலுக்கான காரணம் புரிய அவளை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தாள்.

ராஜ் இதை விளையாட்டாய் பார்க்க, அவனுக்கு ஒன்றும் தவறாய் படவில்லை.

ஷ்யாமின் நிலை தான் சந்தோசமா இல்லை அது எந்த மாதிரியான உணர்வென்றே புரியாத நிலை.

“சரி யாருக்கும் பிரச்சனை இல்ல நீங்க உங்க டேர்க்கு தயாரா அண்ணா”, மித்து ஷ்யாமிடம் வினாவினாள்.

அவனும் “ம்… ரெடி”, எனவும் தியாவை அழைத்து அவன் முன்னே நிற்கச் சொன்னாள் மித்து.

ஓகே ரெடி ஆக்ஷன் என அந்த காட்சிக்கு அவளே இயக்குநரானாள்.

ஷ்யாம் தியாவை பார்த்தான்… அவளும் அவனைத் தான் பார்த்தாள்.

“தியா…நான்…நீ…வந்து…”,  எனத் தடுமாற

“அதுதான் வந்துட்டீங்களே விஷயத்தை சொல்லுங்க” என்றாள் மித்து.

அவள் வாயை மூடினான் அருண்.

“தியா…..வந்து….”, என ஆரமிக்க அவளின் நீள நயனங்களை பார்க்கவும் வார்த்தை தொண்டை குழியில் சிக்கிக் கொண்டது ஆடவனுக்கு.

“அடேய் அதுக்கு மேல பேசுடா…”, என்றான் அருண் கடுப்புடன்.

“வரமாட்டேன் என்கிறது”, என்றான் ஷ்யாம் பாவமாக.

“சரி ஒன்னு பண்ணு வெறும் ஐ லவ் யூ சொல்லு போதும்”, என அருண் கூற அவனும் தலையாட்டி சம்மதித்தான்.

“தியா…ஐ… லவ்… யூ…”, ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி குரலில் அத்தனை காதலைத் தேக்கிக் கூறினான் அவன்.

அந்த நேரம் வள்ளி வந்து சாப்பிட அழைக்க, அனைவரும் சென்று விட இப்போது தியா ஷ்யாம் மட்டும் அங்கே இருந்தனர்.

இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி கொண்டிருக்க, தங்கள் நிலையிலிருந்து விலகவில்லை இருவரும்.

ஷ்யாம் மெது மெதுவாய் அவள் அருகில் வந்தான்.

அவளை விழுங்கிக் கொண்டே அவள் கரம் பற்றி அவள் கொழுத்த கண்ணங்கள் பார்த்தான். பின் அவன் அவளை நோக்கிக் குனிய  அந்த நேரம் பாத்து “தியா ஷ்யாம் வாங்க சாப்பிட”, என்ற லட்சுமியின் குரலில் ஷ்யாம் தான் செய்ய வந்த காரியம் உணர்ந்து அவசரமாய் விலகிச் சென்றான்.

தியா செல்லும் அவனையே பார்த்திருந்தாள். பின் அவளும் சாப்பாட்டு மேசையில்  சென்று அமர்ந்தாள்.

அடிக்கடி அவள் பார்வை அவனைத் தீண்டியது அவன் அதை உணர்ந்தாளும் அவள் புறம் திரும்பவில்லை.

சிறிது நேரத்தில் அனைவரும் உறங்கச் செல்ல. ஷ்யாம் அவன் அறையில் ‘ச்ச என்ன இது நானா இப்படி அவகிட்ட இன்னும் காதலைக் கூட சொல்லல அதுக்குள்ள அவளை முத்தமிட எப்படி துணிந்தேன்’, தன்னையே நொந்து கொண்டான்.

‘அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்’, என யோசித்தவன் சாளரத்தை நோக்க, அங்கே தியா தோட்டத்தில் உலாவுவது தெரிந்தது.

தியா  உலாவிக் கொண்டே யோசனையில் ஆழ்ந்தாள்.

அந்த யோசனை முழுவதும் நிறைந்திருந்தவன் ஷ்யாம் தான்.

ஷ்யாமின் குரலில் வெளிப்பட்ட காதல் அவளைக் குழப்பியது. அது மட்டுமா அவன் செய்யத் துணிந்த காரியம் என்ன? தான் ஏன் அவ்வாறு உறைந்திருந்தோம் என்பதும் அவளுக்குக்  குழப்பமே…

“தியா…”, என ஷ்யாம் கூப்பிடவும்,

தன்னை அழைப்பது யாரென உணர்ந்தவள் மெதுவாய் திரும்பினாள்.

“தியா ஐ யம் ரியல்லி சாரி”, என்றான் எடுத்தவுடன்.

“எதுக்கு?”, என அவள் வினவ,

“உனக்கு தெரியும்.”

“நீங்க லவ் பண்ணறீங்களா”, என பட்டண அவள் கேட்கவும்,

‘அவளே புரிந்து கொண்டாளோ’, என்ன சிறிது மகிழ்ச்சியை தான் உணர்ந்தான் இவன்.

“உனக்கு என்ன தோணுது”, என அவளையே திருப்பி கேட்டான்.

“இல்ல சொல்லுங்க நீங்க யாரையாச்சு லவ்  பண்ணிறீங்களா”, என அவள் கேட்கவும்,

“யாரையாச்சா…புரியலை”, என்றான் குழப்பமாய்.

“இல்ல நீங்க டேர் கேட்ட போதே யாரையோ லவ் பண்றிங்கன்னு புரிந்தது. என்கிட்ட ப்ரொபோஸ் பண்ண விதத்தில் கன்போர்ம் ஆகிடுச்சு”, என்னை இவள் கூற,

“வேற யாரையோ நான் லவ் பண்ணறேன்னா”, என கேட்டா இவன் புரியாமல்.

“ஆமா”

“எப்படி?”

“உங்க குரலில் அவளோ லவ் அது மட்டும் இல்லாம நீங்க…என்… கைய…”, அதற்கு மேல் அவள் சொல்லவில்லை.

“சரி அதுனால”, என அவன் விடாமல் கேட்க,

“இந்த படங்களில் எல்லாம் வரும்யில்ல அது மாதிரி உங்க கண்ணுக்கு நான் நீங்க காதலிக்கும் பெண்ணா தெரிந்து இருக்கேன்”, என அறிவாளித்தனமாக இவள் சொல்ல,

“ஓஹோ”, தன்னவளின் இந்த ஆராய்ச்சியில் அவனுக்குச் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

“என்ன சரியா”

“ரொம்ப அறிவு வழியிது உனக்கு”

“அப்போ ஏன் ட்ருத் சொல்லலை”

“உன் ஆராய்ச்சியை ஓரம்கட்டிட்டு போய் தூங்கு டைம் ஆச்சி. அப்பறம் இப்படி தனியா இரவில் தோட்டத்துக்கு வராதே எதாவது பூச்சி போட்டு வரும்”.

“ம்…. குட் நைட்”.

“குட் நைட்”.

செல்லும் அவளையே பார்த்திருந்தான் ஷ்யாம் அவள் கூறியதை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டே உறங்க சென்றான்.

கனலி(சூரியன்) தன் ஆயிரம் கரங்கள் கொண்டு பூமியைக் கட்டித் தழுவியது.

அந்த டீ எஸ்டேட்டில் வேலைகள் சுறுசுறுப்பாய் நடந்துக் கொண்டிருந்தது. டீ இலைகளைப் பறிப்பதும் அதை தங்கள் தோள்களில் இருக்கும் பைகளில் போடுவது என லாவகமாக அதே சமயம் விரைவாய் செய்தனர்.

உலக மக்கள் பலரால் விரும்பி அருந்தப்படும் பானம் தேனீர். பல பேருக்குக் காலை தேநீர் இல்லாமல் ஓடாது. நானும் அதில் ஒருத்தி தான். ஆனால் நம்மில் எத்தனை பேர்க்கு அது தயாரிக்கும் முறை தெரியும்?

கமெலியா சினென்சிஸ் என்ற  ஒரு பசுமை மாறாத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து, அதனை உலர வைத்து, நொதிக்கச்(Fermentation) செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாகப் பக்குவப்படுத்தி தேநீர் தயாரிக்க பயன்படுத்துவர்.

ஷ்யாம் தங்கள் டீ எஸ்டேட்க்கு அனைவரையும் அழைத்து வந்திருந்தான்.

தியாக்கு அவர்களைப் பார்த்து தானும் இலை பறிக்க ஆசைப்பட்டு அதை ஷ்யாமிடம் கூற,

தன்னவளின் ஆசைக்கு அவனா தடை விதிப்பான். அங்கே வேலை செய்யும் ஒரு பெண்ணை அழைத்து தியாக்கு இலை பறிக்கக் கற்றுத்தர சொல்ல அந்த பெண் தியாவை அழைத்துக் கொண்டு போனாள்.

அந்த பெண் கூறியபடியே அழகாய் பறித்து தன் கூடையில் இட அவர்களின் வேகம் மட்டும் இவளுக்கு வரவில்லை.

அவளையே பார்த்திருந்தான் ஷ்யாம். ‘ஏன் தியாக்குட்டி என் குரலிலிருந்த காதல் புரிந்த உனக்கு அது உனக்கானதுனு எப்படிப் புரியாமல் போச்சி’.

அதே நேரம் தியா ஷ்யாமை பார்த்தாள். அவனும் அவளையே பார்க்க, தன் கைகளிலிருந்த இலைகளைக் காட்டி தானும் பறிக்கக் கற்றுக்கொண்டேன் எனச் செய்கை செய்ய, அவனும் புருவம் உயர்த்தி அவளை மெச்சிக் கொண்டான்.

பின் அவளை அழைக்க, அவளும் அந்த பெண்ணிற்கு நன்றி உரைத்து வந்தாள்.

அவளுக்காக அவன் நின்ற நேரம் மற்றவர்களை அவர்கள் எஸ்டேட் மேனேஜர் அழைத்துச் சென்றிருக்க இவர்கள் மட்டும் தனியே சென்றனர்.

“ஏன் ஷ்யாம் நீங்க உண்மையாவே யாரையும் லவ் பண்ணலியா”, என்றாள் காலை பேசியதன் தொடர்ச்சியாய்.

அவளின் இந்த திடீர் கேள்வியில் திணறியவன் என்ன சொல்வதேன திண்டாட.

அவளோ “ஏன் என்கிட்ட சொல்லக் கூடாதா”.

“உன்கிட்ட சொல்லாம வேற யாரிடம் சொல்ல முடியும்” என இருப்பொருள்பட பேசினான்.

“அப்போ சொல்லுங்க”.

“இப்போ இல்ல இன்னோர் நாள் கண்டிப்பா சொல்றேன்”.

“அட போங்கப்பா” எனக் கூறிக்கொண்டே வந்தவள் சரிவை கவனியாமல் விழுந்தாள்.

“ஹே தியா” எனக் கத்திக்கொண்டே அவளைப் பிடிக்க முயல, அது முடியாமல் இவனும் அவளுடன் உருண்டான்.

இருவரும் ஒரு சேர சரிவின் முடிவை அடைந்தனர். இப்போது தியா ஷ்யாமின் மேல் இருந்தாள். விழுந்த வேகத்தில் இருவரின் இதழும் மெலிதாய் உரசி இருந்தது.

ஷ்யாம் தன் உணர்வுகள் அடக்க பெரும் பாடுபட்டான், அது முடியாமல் போக பெண்ணவளின் இடையை இறுக்கி அணைத்திருந்தவன் அதன் மென்மையில் கிறங்கிப் போய் இருக்க, அவளோ கீழே விழுந்த பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அழுத்தி பிடித்தவனின் கைகள் அவளின் நிலை உணர்ந்து கொள்ள, ஏதேதோ நினைவில் பறந்த தன் மனதை அடக்கி அவளைச் சமாதான படுத்தினான்.

“ஒன்னும் இல்ல தியாம்மா நாம பாதுகாப்பா தான் இருக்கோம்”, எனக் கூற.

அவளும் மெதுவாய் விழி விரித்தாள். அப்போது தான் தங்கள் நிலை உணர்ந்து வேகமாய் எழ முயன்றாள்.

அந்தோ பரிதாபம் அவள் முயற்சி தோற்று மீண்டும் அவன் மேல் மொத்தமாய் விழுந்தாள்.

தன் மீது மேகமாய் விழுந்தவளைத் தாங்கியவனின் மனதிற்குள் ஓடியது இந்த பாடல் வரிகள்.

🎼கம்பன் சொல்ல வந்து

ஆனால் கூச்சங்கொண்டு

எழுதா ஓர் உவமை நீ

வர்ணம் சேர்க்கும்போது

வர்மன் போதை கொள்ள

முடியா ஓவியமும் நீ

எலோரா சிற்பங்கள்

உன் மீது காதலுறும்

உயிரே இல்லாத

கல்கூட காமமுறும்

உன் மீது காதல் கொண்ட

மானுடன் தான் என்ன

ஆகுவான்🎼

 

மீண்டும் தன் எண்ணம் தறிகெட்ட குதிரையாய் பாய அதற்குக் கடிவாளம் இட்டு அவளைப் பார்த்தான்.

அவன் சட்டை பொத்தானில் மாட்டிய தன் கூந்தலைப் பதட்டத்தில் எடுக்க முயன்றாள் அதுவோ வராமல் அவளுக்கு ஆட்டம் காட்டியது.

ஷ்யாம் தன்னவளின் பதட்டம் புரிய “தியாம்மா கொஞ்சம் இரு நானே மெதுவாய் எடுக்கிறேன்”, என்றான்.

அவள் சரியேன கை எடுத்து மாட்டிய தன் கூந்தலையே பார்க்க, அவனோ இவளையே பார்த்துக் கொண்டு மெதுவாய் எடுத்தான்.

எடுத்த மறுநொடி அவள் எழும்ப இவனுள் அழகாய் மீட்டிக் கொண்டிருந்த ஸ்ருதி  பட்டேன நிற்க, அவனும் எழுந்தான்.

“எஸ்டேட்டில் இது மாதிரி சரிவுகள் பல இருக்கும் பாத்து வா”.

“ம்…”, என்பதைத் தவிர அவள் எதுவும் பேசவில்லை.

இவனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

மற்றவருடன் கலந்து கொண்டார்கள்.

கிமு இரண்டாயிரத்தி எழுநூத்தி முப்பதி ஏழாவது வருடம் எழுதப்பட்ட ஒரு சீன கதையொன்றின்படி, வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகக் கருதப்படும் ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன்.

ஒரு நாள் சுடுநீர் அருந்திக்கொண்டு இருந்தானாம். அப்போது, காற்று வீச அருகிலிருந்த மரமொன்றிலிருந்து சில இலைகள் அவன் அருந்திக்கொண்டுடிருந்த நீருள் விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவன் கவனித்தான்.

புதிய விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசன், அந்த நீரில் ஒரு மிடறு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தானாம். அந்த இலை தேயிலை என்பதை அவன் பின்பு அறிந்து கொண்டானாம். இப்படி பழம்பெரும் கதைகளில் தெரியலை பற்றிய குறிப்புகள் இருப்பதாய் கூறப்படுகிறது.

ஜப்பான், கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் இதை மரபு சடங்காகவும், கலையாகவும் தேநீர் சடங்கு (Tea Ceremony) வழங்குகின்றது.

தேநீர் சடங்கு நடத்துபவர் முறையாய் தேனீர் தயாரித்து வரும் விருந்தினருடன் அதை பகிர்ந்து கொள்வர்.

(ரொம்ப தேநீர் ஆராய்ச்சிக்குள் போய்விட்டோமோ🤔)

ஸ்பெஷலாய் பல வகையான தேநீர் அவர்களுக்குப் பரிமாறப் பட்டது, இஞ்சி தேநீர், துளசி தேநீர், மசாலா சாய், செம்பருத்தி தேநீர் போன்றவை.

அங்கிருந்து மதிய நேரம் எஸ்டேட் பங்களா சென்று உணவு முடித்து சென்னை கிளம்பத் தயாராகினர்.

தியாக்கு அங்கிருந்து செல்ல மனமே இல்லை அவளுக்கு அந்த இடம், அந்த சூழல் மிகவும் பிடித்து விட்டது.

அனைவரும் தயாராகிக் கொண்டிருக்க இவள் மட்டும் பின் கட்டிலிருக்கும் ஓடையை ரசித்தபடி நின்றிருந்தாள்.

காலை நடந்த நிகழ்வு அவளை பாதித்தது. முதல் முறை ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளை மனதில் பதிந்தது. பயத்தில் அப்போது ஏதும் யோசிக்காதவள் இப்போது நிதானமாய் யோசிக்கும்போது என்னவென்று புரியாத உணர்வு அவளை ஆட்கொண்டது.

“இங்க என்ன பண்ற கிளம்பலையா நீ”, என ஷ்யாம் வினவ,

காலை நடந்த சம்பவத்திற்குப் பின் இப்போது தான் ஷ்யாமை பார்க்கிறாள். ஏனோ அவனின் முகம் பார்த்து பேச முடியவில்லை அவளால்.

“ம்…கிளம்பனும்”, எங்கோ பார்த்து பதில் சொன்னாள் அவள்.

‘ஐயோ நம்பக் காலையில் நடத்த விதத்தில் கோவமாய் இருக்கிறாளோ’, எனத் தோன்ற,

“என்ன ஆச்சி தியா”, என்றான் மென்மையாய்.

“ஒன்னும் இல்லையே”, இப்போதும் அதே போல் பேச, இவனுக்கு மனம் ஒரு மாதிரி ஆனது.

“தியா…”, என அவன் ஏதோ கூற வர, அதற்குள் ராஜ் வரவும் இவன் வாய்க்கு பூட்டு போட்டுக் கொண்டான்.

“தியா அம்மா கூப்பிட்டாங்க”, என ராஜ் அவளிடம் கூற,  

“இதோ போய் பாக்குறேன் அண்ணா”, எனச் சென்றுவிட்டாள் அவள்.

ஷ்யாமின் மனம் ஒரு நிலையாய் இல்லை. ‘அவளைத் தவிர வேறு யாராய் இருந்தாலும் அப்படி நடந்திருக்க மாட்டேன்’, என தனக்குள் சொல்லிக்கொண்டான்.

நேற்றும் சரி இன்றும் சரி அவன் அவனின் கட்டுப்பாட்டில் இல்லை.

நேற்று கூட தன்னை சமாளித்துக் கொண்டவன் இன்று சிறிது பிசறிவிட்டான்.

தியாவோ முதன் முறை உணர்த்த மாறுபட்ட உணர்வில் அவனிடம் முகம் கொடுத்துப் பேசாமல் செல்ல, இவன் அதை கோவம் என எண்ணினான்.

இப்படிப்பட்ட மனநிலையில் சென்னை சென்ற பின் இரண்டு நாளில் தியா ஷ்யாமின் அலுவலகத்திற்கு ப்ராஜெக்ட் சம்பந்தமாய் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் செல்லப் போகிறாள்.

அந்த காலகட்டத்தில் ஷ்யாம் அவன் மனம் பகிர்வானா?

இந்த அனுபவத்தை மறந்து ஷ்யாமிடம் இயல்பாய் இருப்பாளா தியா?

(கேரளா முடிச்சிச்சி…. இனி சென்னை போய்ட்டு தியாவ அப்படியே ஷ்யாம் ஆபீஸ்க்கு கடத்திட்டு போயிடுவோம் ஓகே வா டியர்ஸ்)

error: Content is protected !!