😍உணர்வை உரசி பார்க்காதே! 17😍

20211124_190527-fff1764b

😍உணர்வை உரசி பார்க்காதே! 17😍

🌹அத்தியாயம் 17

சஷ்டிக்கு அண்ணன் கூறும் கதையை கேட்டு, இதற்கு வைத்தியசாலையிலேயே டிரிப்ஸ் ஏற்றிக்கொண்டு இருந்துவிடலாமென்று தோன்றியது. 

“சஷ்டிமா உன்னதான் கேக்குறேன். இவள எப்போ வீட்ட விட்டு துரத்தலாம் சொல்லு?” 

சஷ்டி யாரின் புறம் நிற்கிறாள் என்பதே இருவருக்குமே புரியாத புதிர்தான். 

“அண்ணி, அண்ணா சொல்லுறதெல்லாம் உண்மையா? நீங்க உங்க அக்கா கிட்ட கேட்டீங்களா?” 

“இல்ல சஷ்டி, உங்க அண்ணா சொன்னதும் என்னால எதையுமே நம்ப முடியல, அப்பறம் சிசிடிவி புட்டேஜ் பார்த்து நம்பினேன். அக்கா கிட்ட இதை கேக்கலாம்னு ஃபோன்  போட்டேன். அக்கா ஒன் இயர் மந்த்ஸுக்கு அப்பறம் ப்ரெக்னட் ஆகியிருக்கா, இந்த மாதிரி இருக்கும்போது நான் எப்படி கேட்பேன். அக்கா பண்ண தப்புக்கு அந்த சின்ன உயிர் என்ன பண்ணுச்சு?” 

சஷ்டி சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, “அண்ணா, நீ ஏன் இப்படி மாறிட்ட,  உண்மையாவே நீ என்னோட விகுஷ்கி அண்ணாவா, நீ பண்ண தப்புக்கு எனக்கு தண்டனை குடுத்தா அது சரியா ணா?” 

“அது எப்படி மா, உன்ன எந்த வகையிலயும் கஷ்டப்பட விடமாட்டேன்.” தன் தங்கை என்றுதும் அவன் சதை ஆடியது.

“அப்போ மத்தவங்க தங்கச்சிய நீ கஷ்டப்படுத்தலாம். அப்படிதானே?” என்று குதர்க்கமாய் வினவினாள் சஷ்டி.

“சஷ்டி மா அது வேற, இது வேற ரெண்டும் ஒண்ணு கெடயாது.” மாற்றான் தங்கை மாண்டு போனாலும் அவன் மனம் கவலை கொள்ளாது.

“ரெண்டும் ஒண்ணுதான் ணா, பழிக்கு பழி வாங்குற பேர்ல பேயா மாறிட்ட ணா, ரெண்டு பேரும் லவ் பண்ணி மேரி பண்ணிருப்பீங்கனு நெனைச்சுதான் ஆசை ஆசையா கேட்டேன். நீங்க இப்படி கல்யாணம் பண்ணீங்கனு நெனைக்கும்போது  இப்போ ஏன் டா கேட்டேனு இருக்கு!” என்று தலையில் கையை வைத்து தேய்த்துக்கொண்டாள் சஷ்டி.

“நீ லாயர்தானே, கேஸ் போட்டுருக்கலாம். இல்ல அவங்க அக்காவ நேர்ல பார்த்து பேசி இருக்கலாம். அதை விட்டுட்டு, அவங்க தங்கச்சிய கல்யாணம் பண்ணி பழிக்கு பழி வாங்குறேனு கேவலமா நடந்துக்கிற? 

நீ இதைதான் எனக்கு சொல்லிக் குடுத்தியா? மத்தவங்க நமக்கு கெட்டது பண்ணாலும், நம்ம கனவுலயும் கெட்டது பண்ணக்கூடாதுன்னு சொன்னியே, இப்போ அது என்னாச்சு? சொந்தங்கள தள்ளி வச்சி அளவோட இருந்தியே, அண்ணிய கல்யாணம் பண்ணிட்டு ஏன் நீ தள்ளி வச்சிருக்க? 

பொண்ணுங்கள இந்த மாதிரி சித்திரவதை பண்றது எந்த சட்டத்துலயும் இடமில்ல. நீ அண்ணிய தண்டிக்கிறதுக்கு கடவுளோ, ஜர்ஜோ இல்ல. இவ்ளோ தூரம் அண்ணி பொறுமையா இருக்காங்கனா அது அவங்க அக்கா பண்ண தப்புக்காக மட்டும்தான். உனக்கு பயப்படல அதை புரிஞ்சிக்கோ.” 

“சஷ்டி, நான் உனக்காகதான் பேசுறேன். அதை நீ புரிஞ்சிக்கோ. தப்பு பண்ணவங்க சந்தோஷமா இருக்கும்போது நாம ஏன் இப்படி இருக்கணும்?” 

“அதுக்கு நீ நேர் வழில போயிருக்கணும், இந்த மாதிரி குறுக்குவழில போகக்கூடாது.

அண்ணிகிட்ட நீ கீழ்தரமா நடத்துகிறது எனக்கு புடிக்கல. ஏன்னா நானும் ஒரு பொண்ணுதான். போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புருஷன் கொடுமை பண்றானு உன் மேல ஒரு கம்ப்ளைன் பண்ண ரொம்ப நேரம் ஆகாது. போனா போகுதுன்னு பொறுத்துட்டு போறாங்க.” 

“சஷ்டி, சத்தியமா சொல்றேன் என்னால பொறுத்துட்டு போக முடியல, என் பொறுமைக்கும் அளவு இருக்கு சஷ்டி. எந்த போலீஸ் ஸ்டேஷன் போனாலும் எங்க அப்பாவ எல்லாருக்கும் நல்ல தெரியும். அப்பா காதுக்கு விஷயம் போகும். எங்க வீட்டுக்கு தெரிய வேணாம்னு பார்க்குறேன். 

கல்யாணம் பண்ண நாள்ல இருந்து நான் இவ்ளோ கஷ்டப்படுறேனே தெரிஞ்சா, அம்மா, அப்பா, பாட்டி, எல்லாம் உடைஞ்சி போயிருவாங்க. அதை மட்டும்தான் யோசிச்சேன். உங்க அண்ணன பாவம் பார்த்து எனக்கு ஒரு புண்ணியமும் கிடைக்கபோறதில்ல. வாழ்க்கையே நரகம் ஆகிட்டு இனி புண்ணியம் பண்ணி என்ன ஆகபோகுது .” மீத்யுகாவின் பொறுமைக்கு ஒரு காரணமுண்டு. தமக்கை ஒரு குழந்தையை ஈன்று எடுக்க வேண்டுமென்று தங்கையாய் அவள் செய்வது ஒரு வகையில் தியாகம்தான்.

“அவங்க அக்கா பண்ண பாவத்துக்கு அண்ணி பரிகாரம் பண்ணிட்டாங்க. இதோட விடு ணா. அண்ணி கூட ஹேப்பியா இரு. வீட்டுக்கு ஏன்டா வந்தேனு யோசிக்க வச்சிறாத?” அண்ணன் குடும்பமாய் வாழ்வதை பார்க்கவே சஷ்டி மீண்டு வந்திருக்கிறாள்.

“சஷ்டி மா நீ சின்ன புள்ள, போய் ரெஸ்ட் எடு, சாப்பிட்டு மாத்திரை போட்டு தூங்குடா.” என்று பாசமாய் கூறினான் விகுஷ்கி. 

“அண்ணா, நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ, இந்த பிரச்சனை இதோட முடியணும். நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழணும். உன்னை பத்தி எதுவுமே தெரியாம நீ அண்ணிய காதலிக்கிறதா நம்பிதானே உன்னைய கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அவங்கள நீ ஏமாத்தலாமா ணா, சொல்லு ணா?” 

என்றிட விகுஷ்கி எந்தவித பதிலும் கூறவில்லை மௌனித்தான். 

“அண்ணா நீ எங்கிட்ட ஒரு விஷயத்த மறச்சிட்ட, ஆஸ்பிடல்ல இருந்து நான் வீட்டுக்கு வந்து மூனு நாளுக்கு மேல ஆகுது. கார்த்திக்னு ஒரு வார்த்தை கூட நீ பேசலையே அப்பவே புரிஞ்சிக்கிட்டேன் கார்த்திக் வேற கல்யாணம் பண்ணிட்டானு, அஞ்சு வருஷக் காதல்! நான் கோமாக்கு போனதும் அஞ்சு நிமிஷத்துல காணாம போயிருச்சே. நீ கல்யாணம் பண்ணதாலதான் இவங்க எனக்கு அண்ணி. அதும் நீ பொண்டாட்டியா ஏத்துக்காம எனக்கு அண்ணி ஆகிட்டாங்க.  ஆக்சிடன்ட்னு ஒரு வார்த்தையே வச்சே அவங்க அக்கா பண்ண தப்புக்கு அண்ணிய குற்றவாளி ஆகிட்ட, அப்படி இருந்தும் அண்ணி தினமும் ஆஸ்பிடல் எனக்கு டைம் ஸ்பென்ட் பண்ணாங்க.

ஏன், எதுக்கு பண்ணணும்? என் அக்கா பண்ண தப்புக்கு என் அக்கா கிட்டவே நீ எல்லாம் கேட்டுகோ. எனக்கு அந்த ஆக்சிடனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லேனு கல்யாணத்துக்கு அப்பறம் உன்னைய விட்டு பயிருந்தா என்ன பண்ணிருப்ப. அப்படி இல்லாமா, நீயே பார்த்துக்கோனு சொல்லியிருந்த என்ன பண்ணிருப்ப, அஞ்சு வருஷமா லவ் பண்ணேன் அவனே நான் வேணானு போயிட்டான். நேத்து வந்த அண்ணி ஏன், என்னைய அம்மா  மாதிரி கேர் பண்ணணும். அண்ணியோட நல்ல மனச புரிஞ்சிக்கோ அவங்க பொறுமைய சோதிக்காத ணா. பெண் பாவம் பொல்லாதது அதை நீ தேடிக்காத அவ்ளோதான் சொல்லுவேன்.” என்று கடுமையுடன் விகுஷ்கிக்கு எடுத்துரைத்தாள். 

விகுஷ்கியிடம் சிறு முன்னேற்றம் கூட தென்படவில்லை. சஷ்டி மீத்யுகாவின் புறம் திரும்பியது அவனுக்கு ஆத்திரம் வந்தது. சஷ்டியின் காதல் தோல்வி அடைந்தது கூட கவலை கொள்ளவில்லை. மீத்யுகா, சஷ்டியின் மனதை வென்றதுதான் விகுஷ்கிக்கு ஆராத ரணம். 

 மீத்யுகாவின் மனதை சஷ்டி புரிந்து கொண்டதால், மீத்யுகா, சஷ்டியை மீட்டு எடுத்தது மீத்யுகாவிற்கு வரம்தான்.

“என்ன ணா, நான் காட்டு கத்து கத்துறேன். நீ எதுவுமே நடக்காத மாதிரி இருக்க, என்னைய பத்தி உனக்கு தெரியும்தானே? நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்து ஒரு குழந்தைய பெத்துக்கிட்டா மட்டும்தான் நான் என்னோட அடுத்த கட்ட லைஃப பத்தி யோசிப்பேன். என் முடிவ மாத்தமாட்டேன்.நான் என் முடிவ சொல்லிட்டேன். இதுக்கு அப்பறம் உன் விருப்பம்.” என்று அவள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று விடாப்பிடியாய் நின்றாள்.

“சஷ்டி மா விளையாடாத!” என்று சத்தமாகக் கூறினான். 

‘என்னோட வைஃப் எப்படி எப்படி இருக்கணும்னு எனக்கும் கனவு ஆசை எல்லாம் இருக்கு. இந்த மாதிரி ரவுடி பஜாரி எல்லாம் எனக்கு வேணாம்.’ என்று மனதில் கருகினான். 

“ஐயோ எனக்கு தல வலிக்குது!” என்று சத்தமிட்டவாறு இருக்கையில் தலையில் கையை வைத்து அமர்ந்தாள். 

விகுஷ்கியும் பதற்றத்துடன் சஷ்டியை பிடித்துக்கொண்டான். மீத்யுகா தண்ணீரை எடுத்து வேகமாக வந்தாள். சஷ்டிக்கு மெதுவாக தண்ணீரை பருக்கினாள். 

“சஷ்டி மா என்னாச்சு?” என்று அச்சத்துடன் விளம்பினான்.

“உன் லைஃப நெனைச்சாலே நான் மறுபடியும் கோமாக்கு போயிருவேனோனு பயமா இருக்கு.”  

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ எதும் யோசிக்காத.” என்று அவளை ஆறுதல் படுத்தினான். 

“எப்படி ணா யோசிக்காம இருக்க முடியும்! இது என் அண்ணனோட லைஃப் ஆச்சே?” என்று கலங்கிய குரலில் கூறினாள். 

“அவ கூட வாழ டிரை பண்றேன். நீ ப்ரைனுக்கு நீ ஸ்ட்ரஸ் குடுக்காத சஷ்டி மா.” என்று விகுஷ்கியும் கவலையான குரலில் சொன்னான்.

“உண்மையா?” என்றாள் சஷ்டி.

“உண்மையா” என்றான் விகுஷ்கி. 

“சத்தியமா?” என்று கையை நீட்டினாள்.

“சத்தியமா.” என்று சஷ்டியின் தலை மீது கையை வைத்து விகுஷ்கி சத்தியம் செய்தான். 

“சமத்து அண்ணா, நான் ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்குறேன் அண்ணா.” என்று விகுஷ்கியின் புறம் கூறிவிட்டு, “அண்ணி என்னைய ரூமுக்கு கூட்டிட்டு போறீங்களா?” என்று சஷ்டி மீத்யுகாவின் புறம் திரும்பி கூற, மீத்யுகா கையை பிடித்து அழைத்துச் சென்றாள் சஷ்டியின் அறைக்கு. 

“அண்ணி, அண்ணா ஓகே சொன்னதுக்கு அப்பறமும் நீங்க ஹேப்பியா இல்ல ஏன்?” 

“தெரியல சஷ்டி எப்படி சந்தோஷப்படணும்னு தெரியல, நடிக்கலாம்ணு டிரை பண்றேன். அதுவும் முடியல. உங்க அண்ணனோட குணம் எப்போ மாறும் எப்படி மாறும் யாருக்கு தெரியும்?”

“அண்ணா என் மேல் வச்சிருக்க பாசம் அவன் கண்ண மறைக்குது அண்ணி அவ்ளோதான். மத்தபடி பொண்ணுங்க விஷயத்துல கரக்ட்டா இருப்பான்.” 

‘ஆமா ஆமா எப்படியெல்லாம் கரக்ட் பண்ணலானுதான் இருக்கும்.’ என்று மனதில் புழுங்கிக்கொண்டாள்.

“எந்த பொண்ணயும் அன்னார்ந்துகூட பார்க்க மாட்டான். அண்ணி இன்னுமொரு விஷயம்?” என்று தயங்கினாள். 

“எதுவா இருந்தாலும் சொல்லு சஷ்டி?” 

“உங்க அக்காகிட்ட எதுவுமே கேக்க வேணாம். ப்ரெக்னன்ட்டா இருக்காங்க. குழந்தை நல்லபடியா பொறக்கணும். அப்பறம் நீங்க இந்த விஷயத்தை கேட்டீங்கனா, ஒருத்தருக்கு ஒருத்தர் முகத்த பார்க்கவே சங்கடமா இருக்கும். பொண்ணுங்க கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு வந்த பிறகு, அம்மா வீட்டுக்கு போறதா இருந்தா ஏதோ ஒரு ஃபங்ஷன் வந்தாதான் அதிகமா போவீங்க. அப்படி போனா சந்தோஷமா இருக்கணும். அக்காவும் தங்கச்சியும் ஒருத்தருக்கு ஒருத்தர் முகத்த தூக்கி வச்சிக்க வேணாமே. விட்ருங்க அண்ணி கேக்க வேணாம். அக்கா தப்பு பண்ணாங்க. நீங்க சரி படுத்திடீங்க. அதோடமுடிஞ்சு போச்சு.” 

“இது உன் பேருந்தன்மை சஷ்டி. பட், அஃப்டர் டெலிவரி கண்டிப்பா கேட்பேன்.” அதற்கு மேல் சஷ்டி எதுவும் கூறவில்லை. 

“இருக்குற ப்ராப்ளம் சால்வ், இன்னும் ஏன் அண்ணி சாடா இருக்கீங்க?” மீத்யுகாவின் முக வாட்டத்தை வைத்து கேட்டாள் சஷ்டி.

“யாரு சொன்னா ப்ராப்ளம் சால்வ்னு அதை விட ஒரு பெரிய ப்ராப்ளம் இருக்கு. அதை எப்படி உங்கிட்ட சொல்றதுன்னு தெரியாம இருக்கேன்.” 

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க அண்ணி, உங்க மனசுல இருக்கிறத எங்கிட்ட கொட்டிருங்க அண்ணி.” 

“உங்க அண்ணாக்கும் எனக்கும்” என்று தடுமாறினாள் மீத்யுகா.

“மேல சொல்லுங்க அண்ணி” 

“விகுஷ்கிக்கும் எனக்கும் எல்லாமே முடிஞ்சு போச்சு!” என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டாள்.

“என்ன அண்ணி சொல்றீங்க. அண்ணா லைஃபே ஸ்டார்ட் பண்ணாத மாதிரி பேசுறான். நீங்க என்னனா இப்படி சொல்றீங்க” என்று வியப்பில் ஆழ்ந்தாள் சஷ்டி.

“ஆமா சஷ்டி, உங்க அண்ணா ஒருநாள் டிரிங்க் பண்ணிட்டு வந்தாரு” என்றவள் வார்த்தைகள் சற்று சறுக்கியது. 

“அண்ணாக்கு அந்த பழக்கமே இல்லயே, என்னால நம்பவே முடியல அண்ணி!” 

அன்று நண்பர்களுடன் விருந்துக்கு சென்று பழச்சாறு என்று மது அருந்தியது, வழக்கத்திற்கு மாறாக மீத்யுகாவை புகழுரைத்தது என ஒன்று விடமால் விளக்கமாக கூறினாள். அதன் பிறகு இருவரின் கூடலை விகுஷ்கி ஏற்க மறுத்ததையும் கூறினாள்.  போதாமல் இடையிடையே அரங்கேறிய சில்மிஷ சித்திரவதைகளையும் கூறினாள். 

“என் அண்ணாவானு எனக்கே ஆச்சர்யமா இருக்கு அண்ணி, என்ன சொல்றதுன்னு எனக்கே தெரியல, அண்ணாக்கிட்ட தனியா பேசி பார்க்குறேன்.” சஷ்டிக்கும் தயக்கமாய் இருந்தது.

“சரி சஷ்டி நீ ரெஸ்ட் எடு நான் என் ரூமுக்கு போறேன்.” 

“ஓகே அண்ணி.” என்றிட, மீத்யுகா மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியோடு அவ்வறையை விட்டு நகர்ந்தாள். 

சஷ்டிக்குதான் இப்போது குழப்பம் அதிகமானது. தனயனின் நிலையை எப்படி அறிந்து கொள்வது என்று தெரியாமல் ஊசலாடுற்றாள். 

அறையில் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்த மீத்யுகாவின் மூளையும் மனமும்  சிந்தனை வலையில் சிக்கித் தவித்தது. 

சஷ்டி, மீத்யுகாவின் புறம் சார்ந்திருந்தது, மீத்யுகாவிற்கு சற்று நிம்மதியை தந்தது. 

நிசப்தமான அறையில்   நாட்காட்டியின் தாள்கள், மின்விசிறியின் தாளத்திற்கு ஏற்றவாறு நடனமாடுவது மீத்யுகாவை இம்சிதத்து எழுந்து சென்று தலையில் சொருகி இருந்த கிளிப்பை கழட்டி நாட்காட்டியில் சொருகினாள்.  

அன்றைய திகதியை பார்த்தாள்.  மீத்யுகாவிற்கு மாதவிடாய் தள்ளி போயிருந்ததை அப்போதுதான் உணர்ந்தாள். ஒரு நிமிடம் தூக்கி வாரிப்போட்டது. 

கண்களை அகல விரித்து அடி வயிற்றில் கை வைத்தாள். “பீடியட்ஸ் ஏன் வரல, பேபி எதும் ஃபார்ம் ஆகி இருக்குமா?”

“ச்சே அப்படி இருக்காது. நான் ஓடுற ஓட்டத்துக்கு பேபி ஃபார்ம் ஆகா சான்சே இல்ல.”

“இன்னும் ரெண்டு நாள் பீரியட்ஸ் வரலனா ப்ரெக்னன்சி டெஸ்ட் பண்ணி பார்க்கலாமா?” என்று தன்னந்தனியே அறைக்குள் இருந்து புலம்பிக்கொண்டிருந்தாள். 

***

                                                                   உணர்வுகள் தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!