😍உணர்வை உரசி பார்க்காதே! 24😍

IMG-20211108-WA0067-d1710e20

😍உணர்வை உரசி பார்க்காதே! 24😍

🌹அத்தியாயம் 24

வழக்கின் இறுதிக்கட்டத்தில், “மீத்யுகாவின் பெற்றவர்களை மனவருத்ததிற்கு உட்படுத்துவது என் நோக்கம் அல்ல. இன்னுமொரு சிறுமிக்கு இப்படி பட்ட பாலியல் துஷ்பிரயோகம்  இடம்பெறக்கூடாது. என்பதற்காகத்தான், இவற்றை கூறினேன்.” 

உண்மைகள் வெளியே வர, ராஜயோகியனோ, விகுஷ்கியை கொலை செய்யும் அளவில் கோபத்துடன் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். 

“இல்ல இல்ல, என் பையன் அப்படிப்பட்டவன் இல்ல. ஒழுக்கமாதான் வளர்த்தேன். விகுஷ்கி வேணும்ன்னு பொய் சொல்றாரு! என்ன நிவேத் வாயமூடிக்கிட்டு இருக்க?” என்று குரலை உயர்த்தி பேசினார் ராஜயோகியன். 

“இல்ல இல்ல நான் எதுவும் பண்ணல. பொய், பொய் சொல்றாரு விகுஷ்கி. அவரே ஒரு லெட்டர் எழுதிட்டு வந்து சீன் போடுறாரு.” என்று அவன் கூறும் பொய் கூட ஒழுக்கமற்றதாய் தெரிந்தது. 

“ஓ நான் பொய் சொல்றேன்னு சொல்றீங்களா? இருக்கட்டும் ஆனா, செல்ஃபோன் பொய் சொல்லாது.” என்று ராஜாயோகியனின் வீட்டில், அவர் விகுஷ்கியிடம், தனது மகன் செய்த தவறை கூறி இவ்வழக்கில் வாதாடுமாறு கெஞ்சியதை ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தான். அதை அப்படியே அவையோர் முன்னிலையில் கேட்கச் செய்தான். 

அனைத்தையும் கவனித்த நீதிபதியோ, “மிஸ்டர். நமசிவாயம் இந்த வழக்கை கொலை வழக்கென்று வாதாட வேறு ஆதாரங்கள் சமர்ப்பிக்க விருப்புகிறீர்களா?” 

நமசிவாயத்தின் நோக்கம் சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்டயீடு பெற்றுக்கொடுக்க வேண்டும். அதனால், “நோ மை லார்ட்!” என்று தாழ்மையாக கூறினார்.

“மிஸ்டர். விகுஷ்கி இந்த வழக்கை தற்கொலையென வாதாட வேறு சாட்சியங்கள் உண்டா?” 

“யெஸ் மை லார்ட், சிறுமி மீத்யுகாவின் அறையை நான் சென்று பார்த்த போது அவ்வறையில் ஒரு மின்விசிறியோ, மின்விளக்கோ இல்லை. காற்று உட்செல்வதற்கு ஜன்னல் இல்லை. சீமெந்து பூசப்படாத மண் தரை, எடுத்துக்காட்டாக. கூறினால் அது ஒரு இருள் சூழ்ந்த பிணவறை.

 நீதி மன்றத்தின் நேரத்தை வீணடித்தமைக்கு மன்னிப்பு வேண்டுகிறேன். வழக்கில் உள்ள ஊழல்களை வெளிக் கொண்டு வருவதற்கே காலதாமதமானது. அது மட்டுமின்றி யோகியன் பெற்ற அயோக்கியனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவே அதிக காலம் தேவைப்பட்டது.

வக்கீல் நமசிவாயம் கூறியது போல் யாரும் யாருக்கும் விலைப் போகவில்லை. வைத்தியரின், உண்மையான பிரேத பரிசோதனையின்  அறிக்கையை பார்வையிடுமாறு நீதிபதி அவர்களை தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்.” என்று விகுஷ்கி கூற, வைத்தியர் நீதிபதியிடம் போலியான அறிக்கையை சமர்ப்பித்ததற்கு மன்னிப்பு வேண்டி, உண்மையான. அறிக்கையை சமர்ப்பித்தார்.

அறிக்கையின் பிரகாரம் சிறுமி மீத்யுகாவின் பிறப்புறுப்பு அதிகளவில் பாதிப்பிற்கு உட்படுத்தபட்டுள்ளது என உறுதி செய்யப்படுகிறது. பிறப்புறுப்பை வெட்டி கொடூரமாக ஏற்றப்பட்ட கம்பிகள், உணர்ச்சிகளை தூண்டும் ஊசிகள், மாதவிடாய் தடுப்பதற்காக ஊசிகள், கரு கலைப்பதற்கு ஊசிகள் என உடலுள் ஏற்றியிருக்க, வெளியே நகக்கீறல்களும், சூடிட்ட தழும்புகளும் பற்தடங்களும் காணப்பட்ட இடங்கள் வெளியே கூற முடியாதவை, அனைத்தையும் அவள் உடலை பரிசோதித்த வைத்தியர் பின் தலையில் பலமாக அடிப்பட்டிருந்ததையும் உறுதிப்படுத்தி இருந்தார். 

மேலும் ஏற்றப்பட்ட ஊசிகளும் கம்பிகளும் வலித்திட, காலை எழுந்து சளைப்பின்றி கால்களில் பம்பரத்தை கட்டிக்கொண்டு  இரவு வரை சக்கரம் போல் சுழன்று வேலை பார்த்தும், தனிமையை தேடி ஓடிச்சென்று ஓய்வெடுக்க நினைத்தாள், அவள் உடலுக்கும் உணர்வுகளுக்கும் ஓய்வற்றுப் போனது. 

சிறுமி மீத்யுகா ஊசிகளும் கம்பிகளும் ஏற்றும்போது எவ்வளவு துடித்திருப்பாள், வேண்டாமென்று அழுது கதறி இருப்பாள். பெண் பிறவியை வெறுக்கும் அளவிற்கு எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருப்பாள்.

பெற்றோரின் பாசத்திற்கு ஏங்கிய சிறுமி, பெற்றோரின் கடனை அடைக்கும் வரை காத்திருந்து, வலிகளை பொருத்திருந்து,  தனிமை கொடுத்த ஏக்கமும், உடலுணர்வு கொடுத்த சோர்வுமே சிறுமி தன்னை தானே மாய்த்துக்கொள்வதற்கு காரணமாயிருந்தது. 

பக்குவம் இல்லா பதிமூன்று வயதில் பாடாய் படுத்தும் காமவெறியனின் இச்சைக்கு அகப்பட்டு, கசக்கி எரியப்பட்ட உடலையும் உணர்ச்சிகளையும் அள்ளிக்கொண்டு தனியறையில் கதறல் பாதி புலம்பல்கள் மீதியென அவலத்தில் உணர்ச்சிகள் அற்ற நடைப்பிணமாய் வாழும் மீத்யுகாக்கள் இவ்வுலகில் இனியும் வேண்டாம்!

“மை லார்ட், இவ்வழக்கை ராஜயோகியன் தற்கொலை வழக்காக வாதாடுமாறு கோரியிருந்தார். அதற்கிணங்க சட்ட ரீதியாக செல்லுபடியான  ஆணித்தனமான ஆதாரங்களை தங்களிடம் சமர்ப்பித்துவிட்டேன்.

அத்தோடு மீத்யுகா சகஸ்ரீயை ராஜயோகியனின் வீட்டிற்கு அழைத்து சென்ற பத்து இடைதரகர்களுக்கு தக்க தண்டனை அளிக்குமாரும் கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு முன்னரும் ராஜயோகியனின் வீட்டில் வேலை பார்த்த பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதோ அதற்கான ஆதாரங்கள் உங்கள் முன்!” என்ற விகுஷ்கி, இதற்கு முன் வேலை செய்தவர்களின் தகவலை திரட்டி, மூன்று பெண்களை அழைத்து வந்திருந்தான். 

மூவரும் பதினெட்டு வயது பூர்த்தி அடைந்தவர்கள். கற்பை இழந்தவர்கள். என்பது பரிசோதனை ரீதியாக உறுதி செய்து அதன் அறிக்கை நீதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டான். 

நீதிபதியோ, “உங்க மூனு பேருக்கும் இப்படி ஒரு அக்கிரமம் நடந்தும் நீங்க ஏன் போலீஸ்ல கம்ளைன்ட் பண்ணல.” 

“யாரும் உண்மையா இல்லைங்க ஐயா. எங்ககிட்ட பணம் இல்ல. நாங்க சாதாரண தோட்ட தொழிலாளர் குடும்பத்துல பொறந்தவங்க. அதனால நாங்க சொல்லுறதெல்லாம் போலீஸ் காதுக்கு போகாது. அப்படியே போயிருந்தா நாங்க இந்நேரம் உயிரோட இருக்க மாட்டோம்.” என்று பாதிக்கப்பட்ட பெண்ணொருத்தி மனம் குமுறினாள். 

அதற்கு விகுஷ்கி, “இப்போ பேசுற தைரியம் அப்போ வந்திருந்தா, சிறுமி மீத்யுகா சகஸ்ரீ இறந்திருக்க மாட்டா. ஓகே இதுக்கு அப்பறம் எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி நடக்ககூடாதுன்னு நெனைச்சி, என் பேச்ச மதிச்சு கோர்ட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி” என்று அந்த மூன்று பெண்களுக்கும் விசனத்தோடு நன்றியை தெரிவித்தான். 

வழக்கை பார்வையிட்ட திவ்யா கண்ணீர் வடித்தாள். 

“யுவரானர் இதிலிருந்து புரிகிறது. சிறுமி மீத்யுகா சகஸ்ரீ பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு உடல், உள ரீதியான பல கொடுமைகளுக்கு அனுபவித்து மன விரக்தில் தற்கொலை செய்து கொண்டமையை உண்மை.

இடைத்தரகர்கள் பத்து பேரிற்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பாராளுமன்ற உறுப்பினர் ராஜயோகியனின் பதவியை பறிமுதல் செய்து மூன்று ஆண்டுகால சிறை தண்டனையும்,

அவருடைய மனைவிக்கு இரண்டு வருட சிறை வாசமும், இராஜயோகியனின் மகன் நிவேதிற்கு, இயற்கைக்கு மாறான தவறுகளும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் முன்னூற்றி அறுபத்தி ஐந்தாம் சட்ட இலக்கத்தின் கீழ் சிறுமியின் உணர்வுகளை உரசி பார்த்து  பாலியல் துஷ்பிரயோகம் படுத்தியமைக்கு பத்து வருடம் குறையாது விஞ்சாதுமான கடூழிய சிறை தண்டனையும் சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்டயீடும், தண்டனை காலம் முடிவடைய மரண தண்டனையும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக ஒரு கோரிக்கை மை லார்ட், தெரிந்தோ தெரியாமலோ ஒரு வகையில் அரசாங்கமும் சிறுமியின் தற்கொலைக்கு காரணமாகிறது. தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை உயர்த்துமாரு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன் தெட்ஸ் ஆல் மை லார்ட்!” என்று அவன் உரையை முடித்து மூச்சை விட்டான் விகுஷ்கி. 

“சிறுமி மீத்யுகா சகஸ்ரீயின் வழக்கு கொலை அல்ல தற்கொலையென்று வழக்கறிஞர் விகுஷ்கி உறுதி செய்துவிட்டார். சிறுமியை வேலைக்கு அமர்த்திய இடைதரகர்களாக இயங்கிய பத்து பேருக்கு குற்றப்பணத்துடன் இரண்டு வருட சிறை தண்டனையும், 

பாராளுமன்ற உறுப்பினர் ராஜயோகியனின் பதவியை பறிமுதல் செய்து குற்றப்பணத்துடன் மூன்று ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனையும், சிறுமியை கொடுமை செய்த அவரது மனைவிக்கு குற்றப்பணத்துடன் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், சிறுமியின் பிறப்புறுப்பை சிதைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கிய நிவேத்திற்கு, விகுஷ்கி கூறியதுபோல் அல்லாமல் இன்னும் இரண்டு மாத காலத்தில் மரண தண்டனையாய் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென தீர்ப்பளிக்கிறேன். 

அத்தோடு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நஷ்டயீடாய் இருபத்தைந்து இலட்சமும், பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கு தலா ஐந்து லட்சமும் வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் நேரத்தை விரயப்படுத்தியமைக்கு ஒரு லட்சமும் செலுத்தியாக வேண்டும். 

ஊழல் நிறைந்த உலகில் பணத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல், சிறுமி மீத்யுகா சகஸ்ரீயின் வழக்கை சமயோசித புத்தியை பயன்படுத்தி சாமர்த்தியமாய் வாதாடிய வழக்கறிஞர் விகுஷ்கிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இந்த வழக்கு இத்தோடு முடிவடைகிறது.” என்று கூறிய நீதிபதி பச்சை வர்ண எழுதுகோலை உடைத்து, வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி. 

நிவேத்தோ தந்தையின் முகத்தை பரிதாபமாக பார்த்துக்கொண்டிருந்தான். 

ராஜயோகியனோ விகுஷ்கி மேல் வெறித்தனமாய் கோபம் கொண்ட விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தார். தனது ஒரே மகன் இன்னும் இரண்டு மாதத்தில் இறந்து விடுவான் என்று நினைக்கும்போது பற்றிக்கொண்டு வந்தது. ‘வெளிய வந்து என்ன பண்றேன்னு பாரு!’ என்று மனதில் வைராக்கியம் வளர்க்க ஆரம்பித்தார்.

நீதிமன்றம் கலைந்தது காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளின் கையில் விலங்கை மாட்டி கைது செய்து சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். விகுஷ்கி அவர்கள் பின்னேச் சென்றான்.

மற்றற்றமகிழ்ச்சியில் நமசிவாயம் விகுஷ்கியை நிறுத்தி ஆரத்தழுவினார்.

“நீ இந்த கேஸ இப்படி திசை திருப்புவேன்னு யாருமே எதிர்ப்பார்க்கல. அந்த பொண்ணுக்கு நீதி கெடச்சதுல ரொம்ப சந்தோஷம்.” என்பதோடு நிறுத்திக்கொண்டார். அவருடைய மகளை பற்றி கேட்டிட வாய் துடித்தது. இருப்பினும் நீதிமன்ற வளாகம் என்பதனால் குடும்ப விஷத்தை பற்றி எதுவும் பேச வேண்டாமென்று விட்டார். 

விகுஷ்கி வீட்டிற்குசா செல்வதற்கு மகிழுந்தை நாடிச் சென்றுக்கொண்டிருந்தான். ஊடகவியலாளர்கள் அவனை விடுவதாக இல்லை. மக்கள் மத்தியில் பாராட்டு மழைதான், சிறுமியின் குடும்பத்தினர் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அவர்கள் செய்த தவறை உணர்ந்து விகுஷ்கியிடம் நன்றி கூறினர். 

மகிழுந்தின் கதவை திறந்த வேலனோ வீரமரியாதை(சல்யூட்) அடித்து வரவேற்றான். “மன்னிச்சிடுங்க சார்! நாங்கூட உங்கள தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.” என்று வருத்தத்தில் தலை கவிழ்ந்தான் வேலன். 

மகிழுந்து சென்றுக்கொண்டிருக்க, விகுஷ்கியின் நினைவெல்லாம் சிறுமி மீத்யுகா சகஸ்ரீயின் மீதே இருந்தது. சிறுமியின் உடல் மட்டும்  புதைந்து மண்ணில் மக்கிப்போவதில்லை. அவளுடைய இலட்சியங்களும் சேர்ந்தே மண்ணில் மக்கிப்போகிறது. 

வீட்டு வேலை செய்யும் சிறுமிகளுக்கு மட்டுமல்ல, பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளும் தினமும் ஒரு தடையை தாண்டியே பயில்கின்றனர். 

விச்சையை(கல்வி) கற்றுக் கொடுக்கம் ஆசான் இச்சையாய் இயங்கும் கேவலம்! பரீட்சையில் மதிப்பெண்களை குறைத்தல்,  வகுப்பேற்றுதலை தவிர்த்தல்,  ஆசை வார்த்தைகளை கூறுதல்,  பொய்யான ஆதரங்களை கூறி  பெற்றோரிடம் கூறுவதாக மிரட்டுதலென இன்னும் இந்த ஆக்கிரமங்கள் ஒழியவில்லை. 

வலைதளங்களில் சென்று பார்த்தால், ஆசிரியன் மாணவியுடன் காம வார்த்தைகள்  பேசும் ஒலிப்பதிவுகள் பல உள்ளன. 

மாணவிகள் ஏன் அதை பெற்றோரிடம் தெரியப்படுத்தவில்லை? பெற்றோர் தைரியமளிக்கவில்லையா, அல்லது சுதந்திரம் கொடுக்கவில்லையா? 

பெற்றோரே இது உங்கள் கவனத்திற்கு! சிறுவர்களுடன் நண்பர்களாக பழகுங்கள். எங்கு சென்றாலும் வீட்டிற்கு வந்தவுடனே நீங்கள் கேட்கும் முன்னரே சிறுவர்களே நடந்த அனைத்தையும் கூறுவிடுவர்.

காதலன் ஆசை வார்த்தைக்கு மயங்கிடதே பெண்ணே! காலம் முழுவதும் கலங்கிடுவாய்.

‘சேல ப்ளவுஸ்சோ சின்ன கவுனோ டிரெஸ்சுல ஒண்ணும் இல்லைங்க ஆச வந்தா சுத்தி சுத்தி அலையா அலையும் ஆம்பள புத்தி.

கலரோ கருப்போ மாநிறமோ. நெறத்துல ஒண்ணும் இல்லைங்க சீனி சக்கரை கட்டிய சுத்தி எறும்பா திரியும் ஆம்பள புத்தி.

நெட்ட பொண்ணோ குட்ட பொண்ணோ திட்டம் எல்லாம் ஒண்ணுங்க தேகம் எல்லாம் மோகம் முத்தி திருட ஏங்கும் ஆம்பள புத்தி.

கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ சைஸ்ல ஒண்ணும் இல்லைங்க அல்வா மாதிரி அழகச்சுத்தி அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி.

ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன் வெளிய போடும் வேஷம்ங்க வெளக்க அணைச்சா போதும் எல்லாம் வெளக்குமாறும் ஒண்ணுதாங்க!’

உன்னுடைய ஆண்மையை கட்டுப்பாட்டோடு  வைத்தக்கொள்ள முடியவில்லையென்றால் ஒன்று இரத்து செய்து அல்லது துண்டித்துவிடு!

நூறு ஆண்கள் இருக்கும் ஒரு இடத்தில் இரண்டு காமுகன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்விரு காமுகன்களால் ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்திற்கும்  அவதூறான பெயர். 

பெண்ணே நீ துணிந்தெழு! ஆண்ணின் இச்சைக்காக படைக்கப்பட்டவள் நீ அல்ல, உலகை ஆள பிறந்தவள். 

நீதிமன்றத்திலிருந்து உருகிய இதயத்தோடு மீத்யுகாவை பார்ப்பதற்கு வெகு விரைவாக வைத்தியசாலையை வந்தடைந்தாள் திவ்யா. 

சஷ்டி, திவ்யாவை பார்த்தவுடன், “அண்ணிக்கு கேர்ள் பேபி பொறந்துட்டு திவ்யா அண்ணி!” என்று சஷ்டியின் முகம் மலர்ந்தது. 

“நல்ல படியா குழந்த பொறக்கும்ன்னு எனக்கு தெரியும்! மீத்யுகா எப்படி இருக்கா?” 

“அண்ணி நல்லா இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல உள்ள போகலாம்.” என்று வெளியே காத்திருந்தனர். 

“கேஸ் என்னாச்சு அண்ணி?” என்று சஷ்டி, திவ்யாவிடம் கேட்டாள். 

“உனக்கும் மீத்யுகாக்கும் ஒரே நேரமா சொல்றேன். கொஞ்சம் வெய்ட் பண்ணு.” என்றிட, அந்த அளவுக்கு பொறுமையாய் சஷ்டி இல்லை. 

அரைமணி நேரம் கழித்து உள்ளே சென்றனர். மீத்யுகா முதலில் கேட்ட கேள்வி, “கேஸ் என்னாச்சு?” 

“ஏன் டீ இவ்ளோ அவசரம், முதல்ல குழந்தைய பார்க்க விடு.” என்று கூறிவிட்டு, குழந்தையை பார்த்து இரசித்த பிறகு, “விகுஷ்கி கேஸ்ல ஜெய்சிட்டாரு டீ!” என்றாள். 

மீத்யுகா, சஷ்டி இருவரின் முகமும்  சோர்வடைந்தது. “அப்போ அந்த சின்ன பொண்ணுக்கு நீதி கெடைக்கலயா?” என்று கேட்டாள் மீத்யுகா.

“மீத்யுகா சகஸ்ரீக்கும் நீதி கெடச்சிட்டு” என்றிட, இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

திவ்யா நீதிமன்றத்தில் நடந்த அனைத்தையும் விளக்கமாக கூறினாள். இருவருக்கும் சோகம் ஒரு புறம் இருந்தாலும், சிறுமி மீத்யுகாவிற்கு நீதி கிடைத்ததை எண்ணும்போது அகவை அடைந்தனர். 

“அண்ணா இப்படி பண்ணுவான்னு நெனச்சும் பார்க்கல. ஆனா, அண்ணிக்கு மட்டும் ஏன் இப்படி பண்றான்னு தெரியல?” 

“ஆமா சஷ்டி, உங்க அண்ணா கோர்ட்டுல வாதாடும்போது என்னாலயே நம்ப முடியல, மீத்யுகா, விகுஷ்கி கண்டிப்பா திரும்பி வருவாரு. தப்ப ஒத்துப்பாரு”. என்றாள் நம்பிக்கையுடன், ஆனால், மீத்யுகாவிற்கு நம்பிக்கை வரவேயில்லை. 

மீத்யுகா குழந்தையுடன் ஆரோக்கியமாக வீட்டிற்கு வந்துவிட்டாள். விகுஷ்கியின் ஏக்கமும் தாய்வீட்டின் ஏக்கமும் அதிகமாய் அவள் மனமுழுவதும் பரவியிருந்தது. 

ஒரு வாரம் கடந்திருக்க, குழந்தைக்குப் பெயர் சூட்டினர். சிறுமி மீத்யுகாவை நினைத்து,  ஏற்கனவே ஒரு மீத்யுகா இருப்பதனால், சகஸ்ரீ என்ற பெயரை வைத்தனர். 

திடீரென நமசிவாயத்தின் குரல் திவ்யாவின் வீட்டு வாசலில் இருந்து, “மீயூ மா” அதில் ஏக்கம் கலந்திருந்தது. 

“அப்பா!” என்று கலங்கிய குரலில் அழைத்தாள். 

“உள்ள கூப்பிட மாட்டியா மா?” என்று நமசிவாயம் கவலையோடு கேட்க, “உள்ள வாங்க பா.” என்று தந்தையின் அருகில் சென்றாள். 

தன்னுடைய மகளை வருத்தத்தோடு கட்டியணைத்து, “மீயூ மா, இந்த அப்பாவ மன்னிச்சிரு மா, அப்பாவ மன்னிச்சிருமா” 

“ஏன் பா, அப்படி எல்லாம் சொல்லாதீங்க” 

“இல்லமா, தம்பிதான் தப்பா நெனைச்சிட்டாரு, நானும் உன்ன தப்பா பேசிட்டேன் மா. என்னை மன்னிச்சிரு மா. தம்பி இப்போதான் சொன்னாரு, அவர் மேலதான் பிழைன்னு.”

சஷ்டிக்கு அதிர்ச்சி! மீத்யுகாவிற்கு அது உண்மையிலே பேரதிர்ச்சிதான்! விகுஷ்கிக்கு எப்போ ஞானம் பிறந்தது என்பது போல், “அவர் என்ன பா சொன்னாரு?” 

“தம்பி மேல தப்புனுதான் சொன்னாரு வேற எதுவும் சொல்லல, நீ அவர் கிட்டவே கேட்டுக்கோ மா.” என்று கூறிவிட்டு, “மாப்பிள்ளை உள்ள வாங்க” என்று நமசிவாயம் கூற, விகுஷ்கி தலை குனிந்தவாறு உள்ளை நுழைந்தான். 

“சரி மா நீங்க பேசுங்க நான் குழந்தைய பார்த்துட்டு வாரேன்.” என்று குழந்தை இருக்கும் இடத்திற்குச் சென்றார். 

சஷ்டியும் திவ்யாவும் என்ன நடக்கிறது? என்ன நடக்கப்போகிறது? என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். 

நமசிவாயம் உள்ளே சென்று வெளியே வந்தும் விட்டார். இருவரும் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. விகுஷ்கி செய்த தவறு அவன் வாயை அடைத்தது. மீத்யுகாவிற்கு கோபம் அவளது வாயை அடைத்தது. 

“மீயூ நான் கோர்ட்டுக்கு போகணும். ஈவினிங் வாரேன். அம்மாவும் பாட்டியும் வரச்சொல்லிருக்கேன் மா.” என்று கூறிவிட்டு, சஷ்டிக்கும் திவ்யாவுக்கும் நன்றி கூறிவிட்டு அவசரமாக நீதிமன்றத்திற்கு சென்றார். 

“சஷ்டி, உங்க அண்ணா எதுக்கு வந்துருக்காரு கேட்டு சொல்லு?” மீத்யுகா கோபமாய் கேட்க, சஷ்டி விகுஷ்யின் முகத்தை பார்க்க, “நான் மீத்யுகா கூட தனியா பேசணும்!” என்று குற்ற உணர்ச்சியில் அவன் குரல் தாழ்ந்துச் சென்றது. 

விகுஷ்கியின் கையில் இரத்த கசிவு இருந்ததை கண்ட சஷ்டி, “அண்ணா! கைல ஏன் ப்ளட் வருது?” என்று பதற்றத்துடன் வினவினாள்.

“அது ஒண்ணுமில்ல சஷ்டி மா, உன் அண்ணி வடிச்ச கண்ணீர விட, என் கைல வர ப்ளட் பெருசு இல்ல.”

அதன் பிறகு விகுஷ்கியின் கையை பார்த்த மீத்யுகா மனதை கல்லாக்கிக்கொண்டு, “இங்க எதுக்கு வந்தீங்க, அதை சொல்லிட்டுப் போங்க” என்றவளின் குரல் விரக்தியானது. 

“நான் பண்ணது தப்பு மீத்யுகா! மன்னிப்பு கேக்குற அளவுக்கு  நான் பண்ணது ஒண்ணும் சின்ன தப்பு இல்ல. அவ்ளோ பெரிய பாவத்த பண்ணிருக்கேன், உன் காலடியில காலம் பூரா இருந்தாலும் அந்த பாவம் கழியாது? மன்னிச்சிரு மீத்யுகா.” என்றவன் கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தது. 

“எப்போ உங்களுக்கு இந்த ஞானோதயம் வந்துச்சு?” 

“நமக்கு என்ன குழந்தை பொறந்துருக்கு மீத்யுகா?” என்று விகுஷ்கியின் குரலில் அன்பும் அக்கரையும் அவலமும் அவன் முகத்தில் ஒரே நேரத்தில் குடியேறியது. 

“பேஷ் பேஷ் நன்னா இருக்கு உங்க பேச்சு! அது உங்க குழந்த கெடயாது. என்னோட குழந்த அவ்ளோதான்! என்று மீத்யுகா வீம்புரைத்தாள். 

“இல்ல மீத்யுகா, நீ பேசுனது சரி,   நான்தான் தப்பு பண்ணிட்டேன்.” என்று கூறிவிட்டு வாசலில் இருக்கும் மீத்யுகாவின் செருப்பை எடுத்து, “செருப்பால அடி மீத்யுகா, அடி மீத்யுகா, என்னைய அடி மீத்யுகா, நான் பண்ண பாவத்துக்கு என்னை உன் கையால கொன்னுரு மீத்யுகா, கொன்னுரு மீத்யுகா.” அவள் முன் மண்டி இட்டு தன்னைதானே மீத்யுகாவின் செருப்பால் அடித்துக்கொண்டான். 

அவன் கையிலிருந்த செருப்பை பிடுங்கி அவனை அடிப்பதற்கு ஓங்கியது போல் தூர எறிந்தாள்.

“உங்க குழந்த இல்லனு சொன்னீங்க இப்போ எப்படி உங்க குழந்தை ஆச்சு, நீங்க எப்படி நம்புனீங்க?”

“நான் காலைல!” என்று கூறும்போது அவன் குரல் அடைத்துவிட்டது. 

“சொல்லுங்க, காலைல?” என்று மீத்யுகா குதர்க்கமாய் உசாவினாள். மௌனம் காத்து தலை குனிந்து நின்றான் விகுஷ்கி. 

பேச வேண்டிய 

நேரங்களில் பேசி 

விடுவதே சிறந்தது

இங்கே உமிழப்படும்

வார்த்தைகளை விட

விழுங்கப்படும்

வார்த்தைகளுக்கே

வீரியம் அதிகம்.

***

Leave a Reply

error: Content is protected !!