சீமை சீயான்

IMG-20200114-WA0014

சீமை சீயான்

சீமை சீயான் – 8

 

பொன்னுரெங்கத்தின் தாக்குதலை எதிர்பார்க்காத சீயான் தடுமாறி விழுகவும் முனியாண்டி வரவும் சரியாக  இருந்தது.பொன்னுரெங்கத்தின் செயலில் ஆடி போன முனியாண்டி

 

‘மச்சான்……… என்ன காரியம் பண்ணுறீங்க’

 

“உங்க மவன் என்ன காரியம் ணா தெரியுமா?”

 

“தெரிஞ்சுதான் வரேன் நீங்க முதல இங்கு என்ன நடந்ததுன்னு விசாரிங்க” இவர்கள் இங்கு வழக்காட மெல்லமாகக் கண் விழித்தாள் வேம்பு. அதுவரை பொன்னுரெங்கத்தின் செயலில் அதிர்ச்சியில் இருந்த பிச்சி வேம்புவின் அசைவை உணர்ந்து அவளிடம் சென்று தண்ணீர் பருக கொடுத்துக் கை தாங்களாக எழ செய்தவள்,

 

“எல்லாம் உன்னால புள்ள மாமா உனக்கு உதவப் போய் உங்க அப்பன் தப்ப புருஞ்சு மாமவ அடுச்சுடுச்சு”

 

“என்னடி சொல்லுற”

ஆமாடி  என்றவள் நடந்தவற்றை மெல்லமாகச் சொல்ல வேம்புக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை தகப்பனது ஆவேசத்தை பார்த்து பேச பயமாக இருந்தது. அவள் அமைதி பிச்சிக்குக் கோவத்தைக் கிளற

 

அடியேய்! உங்க அப்பன் ரொம்ப பேசிட்டு போறாரு பாரு மாமா தலைய தொங்க போட்டுட்டு நிக்குது எனக்கு அடிவயிறே பிச்சுக்கிட்டு போகுதடி மரியாதையா பேசு.

 

அங்கு வார்த்தை முத்தி போகப் பிச்சி வேம்புவை துரிதப்படுத்தினால். எங்கு? அவள் பேசினால் தானே! ஒரு வார்த்தை ஒரே வார்த்தை அவள் வாய் திறந்து சொன்னால் போதும் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்.ஆனால் விதியின் பிடியில் நூல் பாவை போலும் அவள்.

 

முடியாது என்பது போல்  தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.அவளுக்குப் பயமாக இருந்தது போலும் இருந்தாலும் அது தேவையற்றது, பேச வேண்டிய இடத்தில் பேசாமல் போனதால் அவள் வாழ்க்கையே தடம் புரண்டு போனது.பொன்னுரெங்கத்தின் சத்தத்தில் அனைவரும் ஒன்று கூடச் சீயானுக்கு மிகுந்த அவமானாகப் போனது.

 

அங்காயிக்கு நடந்தவை சொல்லி மற்ற உறவு பெண்கள் அழைத்து வர தனது மகனின் நிலை கண்டு அந்தத் தாய் உள்ளம் தவித்துப் போனது.அதற்கு மேலும் பொறுமை காக்க முடியாமல்

 

பொன்னுரெங்கத்தை நெருங்கி “யாரை பார்த்து என்ன வார்த்தை பேசுற எங்களுக்குப் பொறாமையா?”

 

ஆமா! நான் அந்தச் சம்மந்தம் பேசும் போதே உனக்குப் புடிக்கல.அதான் உன் மவனே வச்சுக் கலைக்கப் பாக்குற.அவர் நாக்கு பழி என்னும் விஷத்தை கக்கியது அங்காயி கோபமாகத் தனது மகனை அழைத்துக் கொண்டு பொன்னுரெங்கத்தை நோக்கி.

 

“நான் கும்முட்ர என் சாமி மேல ஆணையாச் சொல்லுறேன் என் மவன் தப்பு பண்ணா அது எம் மகனோட. உன் மவ தப்பு பண்ணா அது உம்மவளோட” என்றவர் தனது மகனையும் கணவனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

 

கூடி இருந்த ஊர் சனம் எல்லாம் இருவருக்கும் தொடர்பு என்று பேச மாப்பிள்ளை விட்டார் முன்பு தலை குனிந்து நின்றார் பொன்னுரெங்கம்.மாப்பிள்ளையின் தந்தை வந்து அவர் தோள் தட்டி எங்களுக்கு உங்க பொண்ண ரொம்பப் புடுச்சு இருக்குப் பொன்னுரெங்கம் இதெல்லாம் கணக்குல வைக்காதீங்க

 

எதோ பெருந்தண்மையாகப் பேசுபவர் போல் பேச பூரித்துப் போனார் பொண்ணுரெங்கம்.அங்கனம் அவருக்குப் புத்தி மழுங்கியதோ?

 

நிகழந்த படி ரொம்ப நன்றீங்க என்றவர். அதன் பின் முனியாண்டி குடும்பத்தை ஒதுக்கினார்.திருமணத்திற்குக் கூட முறை செய்ய அனுமதிக்க வில்லை. இத்தனை நடந்தும் வேம்பு ஒரு வார்த்தை  எதிர்த்து பேசவில்லை அவளுக்கும் விதி மூளையை மழுங்க செய்தது போலும்.

 

********************************

திருமண இனிதே நடக்க வேம்பு மறுவீடு செல்லும் வரை எந்த விதமான உறுத்தலும் இல்லை.ஆனால் முதல் இரவன்று மாப்பிள்ளைக்கு உடல் சுகமில்லாமல் போக மறுவீடு சென்று சடங்கு வைத்துக் கொள்ளலாம் பையனுக்கு இங்குச் சீதோஸ்ணம் சரியில்லை என்றனர்.

 

பொன்னுரெங்கத்துக்கும் பட்டணத்து பையன் என்றளவில் அவர்கள் சொல்லுவது உறுத்தவில்லை. அதுசரி அவரும் விதியின் கையில் பொம்மை தானே.

 

மறுவீடு பெண்ணை அனுப்பி வைத்து ஓய்ந்து அமர்ந்தார் மனிதர் மனதில் அத்தனை நிம்மதி அது தற்காலிகம் தான் என்பதைப் பாவம் அவர் அறியவில்லை.

********************************

அங்கு வேம்புவை முதல் இரவுக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தனர்.உறவுகள் என்றாள் மாப்பிள்ளையின் உறவு மட்டுமே அங்கே இருக்க வேம்புக்குக் கண்கள் கலங்கியது தெரிந்த முகம் என்று யாருமில்லை அங்கே.

பொதுவாக மறுவீட்டுக்கு செல்லும் போது மூன்று அல்லது ஐந்து சுமங்கலிகள் செல்வது வழக்கம். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் செய்த சதியால் பெண் வீட்டில் இருந்து ஒருவரும் வேம்புடன் வரவில்லை.பிச்சியும் கோவத்தில் திருமணத்திற்கு வரவில்லை அன்று நடந்த சண்டையில் சீயானுக்கு ஆதரவாகப் பேச அவளையும் பொன்னுரெங்கத்தின் ம் தவிர்த்து விட்டார்.

 

யாருமில்லா தனிமையில் அவள் மட்டும் இருக்க எனோ மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.அவள் வயது பெண்ணொருத்தி அவளை அழைத்து அறையில் விட இன்னும் பெண்ணுக்கு நடுக்கம் வந்தது எதோ ஒரு ஒவ்வாமை.

 

பல கனவுகளோடு கல்யாணம் செய்து இரு தலைமுறைகளும் கலக்கும் இந்தப் புனித நாளில்.மாப்பிள்ளை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு கண்கள் மேலே செல்ல தவித்துக் கொண்டு இருந்தான்.உள்ளே சென்றவள் பயம் கலந்த நாணம் கொண்டு நிமிர்ந்த பார்க்க அவனது நிலை கண்டு அதிர்ந்து போனால்.

 

ஒரு சில கணங்கள் அதிர்ச்சியில் இருந்தவள் மறுநிமிடம் வீறிட்டு கத்த அனைவரும் அங்கே கூடினர். அவர்களிடம் ஒரு பதற்றமோ வருத்தமோ அல்லாது விரக்தி கலந்த அலட்சியம் தென்பட அந்நிலையிலும் அவர்களது செய்கை அவளை யோசிக்க வைத்தது.

 

மருத்துமனையில் சேர்த்து அவனுக்கு சிகிச்சி அழிக்கப் பட்டு அவன் விடுவர நடை பிணமாக வந்தாள் வேம்பு.மருத்துமனையில் இருந்த அந்த மூன்று நாட்களில் அவளுக்கு உண்மை மெல்ல மெல்ல விளங்கியது இப்புடியும் சில மனிதர்களா அதிர்ந்தது போனால்.அந்நேரம் அங்காயி சாபம் அவள் நினைவுக்கு வர உடலில் உள்ள சக்தி வடியும் வரை கதறி அழுதாள்.

 

வீட்டுக்கு வரும் வரை பொறுமை காத்தவள் வீட்டினுள் நுழைந்த உடன் காளியாக மாறினால். எந்தவித பூச்சும் இல்லாமல் நேரடி தாக்குதல் “உங்க மகன் நிலைமை தெரியுமா? தெரியாத ?அவளது கத்தலில் பயந்தவர்கள் தன்னைச் சமாளித்துக் கொண்டு “என்னம்மா ரொம்பக் கத்தி பேசுற”

 

“நான் இன்னும் பேசவேயில்லை” என்றவள் தனது கணவனிடம் திரும்பி

 

“நீங்க சொல்லுங்க உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இருக்கா?”
 என்று கேட்க வாழ்வின் இறுதியில் இருப்பவன் என்ன பதில் சொல்ல முடியும்.வெறித்த பார்வை மட்டுமே பதிலாக அவன் குடுக்க நொந்து போனால்.

 

தனது மகனை கேள்வி கேட்பதை பொறுக்காத அந்த நல்ல உள்ளம் கொண்ட தாய் “ஏய்! என்னடி ரொம்பச் சவுண்ட் உடுற ஆமா என் மகன் சாக  போறான் அதுக்கு முன்னாடி எங்களுக்கு அவன் மூலமா ஒரு வாரிசு வரணும் யோசுச்சு தான் உன்ன கல்யாணம் பண்ணுனோம்,

உங்க அப்பன் தான் வீடு தேடி வந்து பேசுனான் நாங்க ஒன்னும் உங்கள தேடி வரல” என்று கத்த.என்ன சொல்வாள் அவள் சிறுநீரகம் செயல் இழந்த ஒருவனை ஏமாற்றித் தலையில் கட்டியதுமில்லாமல் அவன் இறந்த பின்பு அவன் வாரிசு வேண்டும் என்பதற்காக ஒரு பெணின் வாழ்க்கையைக் கேள்வி குறி ஆக்கிவிட்டு குற்றமில்லை பேசும் அந்த தாயை என்ன செய்வது.

 

 அதுவும் ஒரு பெண்ணே இதைத் தைரியமாகச் சொல்கிறாளே. என்ன ஓர் உயர்ந்த பண்பாடு கொண்ட மக்கள் இடையில் வாழ்கிறோம் நாம். அவள் பெற்ற பெண்ணாக இருந்தால் இப்படிச் செய்ய மனம் வருமா அதிர்ச்சியில் வேம்புவிற்குப் பேச்சே நின்று போனது.

 

அதன் பிறகு அந்த வீட்டில் உள்ள ஒருவரிடமும் அவள் பேசுவதில்லை.கணவன் என்றளவில் அந்த ஜீவனைப் பார்த்துக் கொண்டால் .அவனும் கண்ணியம் காத்து அவளுக்கு எதோ சற்றுப் புண்ணியம் செய்தான் இல்லையென்றால்?

 

அவன் வீட்டார் போன்று அவனும் வாரிசு வேண்டுமென்றால் நிச்சயம் வேம்பு உயிருடன் மாய்ந்திருப்பாள்.அவனுக்கும் ஈரம் உண்டு போலும் அவனது கை விரல் கூட அவள் மீது படவில்லை.அதனை அறியாத அவ்வீட்டு தெய்வங்கள் நிம்மதியாக வளம் வந்தனர்.

 

நாட்கள் அதன் போக்கில் நகர மதுரைக்கு ஒரு வேலையாக வந்த சீயான் வேம்புவை பார்த்துவிட்டான். மருத்துமனையில் அதிலும் அவள் தாங்கி நின்ற அவனை அடையாளம் காண முடியவில்லை அந்த அளவில் உடல் நலிந்து போயிருந்தான்.

 

யாரை அவள் தாங்க முடியாமல் தாங்கி செல்கிறாள் என்று மனம் கேட்காமல் அவன் அவளை நோக்கி செல்ல.அவன் நெருங்கிய நேரம் அவள் மாமியார் அவளைத் திட்டி கொண்டே வந்தார்.

 

ஏய்! நில்லுடி உன்ன என்ன சொல்லி கல்யாணம் பண்ணுனோம். நாங்க சொன்னது மறந்து போச்சா என்ன? அவன் இப்பவோ அப்பவோன்னு இருக்கான் நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எங்களுக்கு வாரிசு வேணும்” என்றவர் பொரிந்து விட்டு செல்ல சிலையாக நின்றான் சீயான்.

 

கண்ணில் நீர் வடிய அதனை புறங்கையில் துடைத்தவரே சென்றாள் வேம்பு அவர்கள் செல்லும் வரையிலும் பார்த்துக் கொண்டே அதிர்ந்த மனதுடன் வீடு திருப்பினான் சீயான்.

 

அவனது அதிர்ந்த தோற்றத்தை பார்த்த முத்து என்ன சீயான் மதுரை போய்ட்டு  வந்ததுல  இருந்து ஒருமாதிரி இருக்க என்று தோள் தொட்டு அசைக்க.அதில் சுயம் பெற்றவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக முத்துவை இழுத்துக் கொண்டு தனது தந்தை பார்க்க சென்றான்.

 

“டேய் ! என்னடா ஆச்சு உனக்கு”

“பேசாம வாடா எல்லாம் சொல்லுறேன்” என்றவன் அவனை இழுத்துக் கொண்டு தோப்புக்குச் சென்றான்.

 

அங்கு வேளையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த முனியாண்டியை நோக்கி சென்றவன்  ஐயா! என்று அழைத்து  உங்க கூடக் கொஞ்சம் பேசணும் என்று சொல்ல.

 

அவனது அவசரத்தில் பதரியவர் “ஏஞ்சாமி என்ன ஆச்சு?”என்று கேட்க

 

அப்பா! என்றவன் சற்று கலங்கிய மனதை அடக்கி. மதுரையில் வேம்புவின் நிலையை அவன் கண்டதை  கூற கண்கள் சிவந்தது அந்தக் கிராமத்து காளைக்கு. இன்னும் நீதி உயிர் பெற்று சில மனிதர்கள் மூலம் வாழத்தான் செய்கிறது. அவர்களுக்குத் தகுந்த படம் கற்பித்து வேம்புவை கூட்டிவர அவர் எண்ண கடவுளின் எண்ணம் கொண்டு அவரை முந்தி கொண்டது விதி.

 

 

 

Leave a Reply

error: Content is protected !!