Innarkku Innar Entru -1
Innarkku Innar Entru -1
இன்னார்க்கு இன்னார் என்று
பரபரப்பாக வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான் முருகவேல். ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணி மேற்பார்வையாளான். சம்பளம் கொஞ்சம் தாளராளமாகவே வருகிறது. ஆள் பார்க்கிற மாதிரி அழகாகத்தான் இருப்பான். வயது முப்பது ஆகிவிட்டது. கல்யாணம்தான் இன்னும் ஆகவில்லை.
அவனுடையது ஒரு வித்தியாசமான கூட்டுக் குடும்பம். தாயை இழந்த முருகவேலும் அவனது தம்பி வெற்றி வேலும் தங்கள் தாய் மாமன் ராஜேந்திரன் மற்றும் அவரின் பிள்ளைகள் தேவிஇ கணேஷ்இ துளசி ஆகியோருடன் ஒன்றாக வாழ்கிறார்கள். ராஜேந்திரன் ஒரு நடுநிலைப்பள்ளி ஆசிரியர். அவரின் மனைவி கனகம் மற்றும் முருகவேலின் தாய் தகப்பன் ஆகியோர் ஒரு கல்யாணத்திற்கு ஆட்டோவில் செல்லும் போது விபத்தில் உயிரிழந்து விட்டார்கள் .; அது நடந்து ஆகி விட்டது கிட்டத்தட்ட இருபது வருடங்கள். இவர்களையெல்லாம் இணைத்து வைக்க பாலம் இல்லாமல் எப்படி? ஆம் ! அந்த இணைப்புப் பாலம் அவர்களின் பாட்டி லட்சுமி அம்மாள் தான். ராஜேந்திரனையும் முருகவேலின் தாய் கனகத்தையும் பெற்றவர். முருகவேலை “முருகா” என்றும் வெற்றி வேலை “வேலய்யா” என்றும் அழைப்பவர் கணேஷை “கணேசா” என்று அழைப்பார். பேத்திகளை “பெரியவளே” இ “சின்னவளே” என்று அழைப்பார்.
.
மூன்று உயிர்களை பலி கொண்ட அந்த கோர விபத்திற்குப் பிறகு ராஜேந்திரன் எல்லோரையும் கோவைக்கு அழைத்து வந்து விட்டார். தனக்கும் போராடி கோவைக்கு பணி மாறுதல் வாங்கிக் கொண்டார். ஆரம்பத்தில் ஒரே வாடகை வீட்டில் வசித்தார்கள். பெண் பிள்ளைகளை கருத்தில் கொண்டு ராஜேந்திரன் வீட்டுக் கடன் பெற்றும்இ வில்லங்கத்திலிருந்து அப்போது அவருக்கு சாதகமாய் வந்திருந்த பூர்வீக சொத்துக்கள் சிலவற்றை விற்றும் தனி வீடு கட்டினார்.
அவர்கள் குடியிருந்த வீடு வித்தியாசமான அமைப்பை உடைய சொந்த வீடு. ராஜேந்திரன் பெயரில் இருக்கிறது. வீடு பொதுச் சுவரால் இரண்டாக சமமாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு சமையலறை வழியாக செல்ல வழி இருந்தது. வீட்டுக் கூடத்தில் பொதுச்சுவரில் சற்று உயரத்தில் மரஜன்னல் ஒன்று இருந்தது. யாருடைய பிரைவஸியும் பாதிக்காதஇ அதே நேரத்தில் குழந்தைகளை தன் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளும் வகையில் ராஜேந்திரன் அந்த வீட்டைக் கட்டியிருந்தார். வீட்டின் ஒரு பகுதியில் ராஜேந்திரனும் அவருடைய பிள்ளைகளும் வசித்தார்கள்.. மறு பகுதியில் லட்சுமி அம்மாள் தன் மகள் வயிற்றுப் பேரன்களுடன் வசித்து வந்தார். அனைத்து வகையிலும் அந்தக் குடும்பத்தை பராமரித்துக் கொள்பவர் அவர்தான்.
தாத்தா பத்து வருடங்களுக்கு முன்பு இறந்த போது தேவிக்கு பதின்மூன்று வயது. அவர்கள் தாத்தா மாரடைப்பால் இறந்த நாளும் அவள் பூப்படைந்த நாளும் ஒன்றுதான். இரண்டையும் எப்படியோ சமாளித்தார் லட்சுமி அம்மாள். அவரால் அவர் பேத்திக்கு சீர் செய்ய முடியவில்லை. அக்கம் பக்கத்துப் பெண்களை ஒரு அளவுக்கு மேல் உதவி கேட்க முடியவில்லை. சொன்னால் செய்வார்கள்தான் . எடுத்துச் செய்ய ஆளில்லாத அந்த நேரத்தில்தான் அவரின் தன்மானம் தீயாய் வேலை செய்தது.
தன் மூத்த பேரன் முருகவேலை அழைத்தவர் அவனிடம் சில விபரங்களை கேட்டு உறுதி செய்து கொண்டார். பின் தேவியின் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தார். அப்Nபுhது அவன் பெரிய படிப்பான காலேசு படிப்பை மூன்றாவது வருடமாக படித்துக் கொண்டிருந்தான். தாத்தாவின் காரியங்களை மகனிடம் ஒப்படைத்தார். இரண்டிலும் அவர்களின் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு அனைத்து காரியங்களையும் அவரே செய்தார். எப்போதும் மனதிலிருக்கும் தன் கணவரை தனியாக அவர் நிதை;துப்பார்க்க நேரமே இருந்ததில்லை.
அதன் பின் தன் கணவரை அவர் நிதானமாக நினைத்துப் பார்ப்பது முருகவேல் பரபபரப்பாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்கும் இப்போதுதான்.
“அய்யா! முருகா!” என்று அன்பொழுக அழைத்தார் மூத்த பேரனை.
“ என்ன ஆச்சி? என்னாச்சி? “ என்று சிலேடையாக தன் ஆச்சியைப் பார்த்து சிரித்தவன் அவர் பதில் சொல்லும் முன்னமேஇ “டைம் ஆச்சி” என்று கடித்து விட்டு தன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். வாசலுக்கு வந்து நின்று பக்கத்து வீட்டைப் பார்த்து “ தேவிம்மா! ரெடியா? ஒரு ஸ்கூல் டீச்சர் ஸ்கூலுக்கு கரெக்டா போக வேண்டாமா? அப்புறம் உங்க ஸ்கூலை யார் கட்டி காப்பத்தறது? அந்த ஸ்கூலோட தூணே நீதானம்மா” என்று வாய் ஓயாமல் வம்பிழுத்தான்.
“ இதோ வந்திட்டேன் அத்தான் “ என்று வீட்டினுள் இருந்து புயலாக வெளிவந்த தேவிக்கு இருபத்து மூன்று வயது. டீச்சர் டிரைனிங் முடித்து விட்டு பக்கத்து ஊர் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறாள். தபால் மூலமாக மேற்படிப்பு படித்து வருகிறாள். பார்வைக்கு அழகி. பழக இனிமையானவள். தம்பி தங்கையின் மீது பாசம் அதிகம். பாட்டி லட்சுமி அம்மாள் மீது அன்பு கலந்த பயம் உண்டு. “ பாட்டி திட்டிப்புடும்” என்று அவள் தியாகம் செய்த விஷயங்களில் அதிகாலை தூக்கத்திற்கு முதலிடம் உண்டு. அப்புறம் சீக்கிரம் எழ பழகிவிட்டாள்.
அத்தையின் பெரிய மகன் மீது மரியாதை உண்டு. அதை கெடுத்துக் கொள்பவன் முருகவேலுதான். “ யாருக்கு வேணும் உன் மரியாதை? ஒழுங்கா நான் சொல்றதை செய்தா போதும்.” என்பான். அப்படி செய்யச் சொல்பவை அவளின் நன்மையாக தானாக அமைந்து விடுகிறதா? இல்லை நன்மைக்காக அவனாக சொல்கிறானா? ஏன்று அவள் ஆராய்ந்ததில்லை. அத்தான் கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் குதித்து விடுவாள். கிட்டத்தட்ட அப்படி குதித்தும் விட்டவள்தான்.
அவர்கள் கோடை விடுமுறையின் போது லட்சுமி அம்மாளின் கிராமத்து வீட்டில் இருந்த சமயம் அது அப்போது அவளுக்கு பத்து வயது. கணேஷிற்கு ஒன்பது வயது. துளசிக்கு எட்டு. அஞ்சாத சிங்கம் வெற்றி வேலுக்கு அப்Nபுhது பதினாறு வயது. அவனுக்கு ஒரு வயது மூத்தவன் அந்த சங்கத் தலைவன் முருகவேல். கணேஷையும் வெற்றியையும் ஊரின் நீர் நிறைந்த பெரிய ஆற்றிற்கு அழைத்துச் சென்றவன் வெற்றியை நோக்கி “நீச்சல் பழகணும்னு சொன்னியேடா! இந்த ஆத்துல குதி! ”என்றவன் கணேஷை நோக்கி இ”நான் அவனுக்கு சொல்லிக் குடுக்கறதை நீ இங்க இருந்து பாரு. தண்ணி கொஞ்சம் வத்தினதும் உனக்கும் சொல்லித் தர்றேன”;. என்றான்
அது என்னவோ ஓடுகிற நல்ல பாம்பையும் பிடிக்கும் வெற்றிவேலுவிற்கு தண்ணீர் என்றதும் படபடப்பாகி விட்டது. “ முருகா இ அதெல்லாம் அப்புறம் கத்துக்கறேன்டா. இப்ப குளிச்சிட்டு கிளம்பலாம் என்று பம்மினான். “ அட ! ஒண்ணும் ஆகாதுடா! சும்மா குதி! இந்த ஆறு எனக்கு மனப்பாடம். ஏந்த பிரச்சனையும் இல்ல. சும்மா குதி!” என்று ஆன மட்டும் சொல்லிப் பார்த்தும் வெற்றியை வெல்ல முடியவில்லை.
அப்போது சிறிய குடத்தில் தண்ணீர் எடுக்க நிலாவாக அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த தேவி “என்னாச்சு அத்தான்? என்று முருகNலுவைப் பார்த்துக் கேட்டாள். அவனை மட்டும் தான் அத்தான் என்பது. வெற்றியை ‘வெற்றி’ என்றுதான் கூப்பிடுவாள். என்னவோ அந்தப் பெயர் அவளுக்கு ரொம்பப் பிடித்தம்.. துளசிதான் பெரியத்தான் என்றும் சின்னத்தான் என்றும் கூப்பிடுவாள்.
தேவி அணிந்திருந்த உடைகளைப் பார்த்தவன் அவை நீச்சலுக்கு சரிப்பட்டு வரும் எனபதை உணர்ந்து கொண்டான். அவளின் தைரியமும் தெரியுமாகையால் “ஒண்ணுமில்லை. யாருக்காவது நீச்சல் கத்துக் குடுக்கலாம்னு பார்த்தேன். நீ கத்துக்கறியா? “ என்றான்.
அவளும் “ஓ…!” என்றாள் சந்தோஷமாக.
அவளை விட்டு கண்ணை எடுக்காமல் “ சும்மா சொல்லக் கூடாது” என்றான்.
;” சும்மாவும் சொல்லலைஇ சொமந்துகிட்டும் சொல்லலை. நெஜமாத்தான் சொல்றேன் “ என்றாள். சொல்லும் போதே அவள் கண்கள் ஆற்றிடம் சரண் புகுந்தது.
“ அப்ப அதோ அந்த அண்ணன்கள் குதிக்கிற மாதிரி இந்த ஆத்துலு குதி”என்றான். .அவன் கண்கள் அவளை விட்டு அகலவேயில்லை.
ஒரு மைக்ரோ செகன்ட் ஓரக் கண்ணில் ஆற்றில் குதிக்கும் அண்ணன்களைப் பார்த்தவள் மின்னலாய் விழியுயர்த்தி தன் அத்தானைப் பார்த்தாள்.
அவன் கண்களைக் கண்டவள் வேறெதையும் யோசிக்காமல் அவன் சொன்ன மாதிரி ஆற்றில் குதித்து விட்டாள்.
அவள் ஆற்றின் நீர்ப்பரப்பைத் தொடுமுன்னர் அவன் அவள் குதிக்கப்Nபுhகும் இடத்தை ஊகித்து அதற்க்கருகில் குதித்திருந்தான்.
அப்படியே அவளுக்கு நீச்சலும் சொல்லிக் கொடுத்து விட்டான்.
இவற்றைப் பார்த்திருந்த வெற்றி வெலவெலத்துப் போனான். கணேஷிற்கும் பயம்தான். ஆனால் அக்காவை பெரியத்தான் பிடித்துவிட்டபோது. அவனது பயம் ஓடி விட்டது. “ எனக்கும் சொல்லிக் குடுங்கத்தான்”; என்று சட்டையை கழற்றி விட்டு ஆற்றில் அவனும் குதித்துவிட வேறு வழியில்லாமல் வெற்றியும் ஒருவாறாக குதித்து நீச்சல் பழகிக் கொண்டான்.
கிராமங்களில் விஷயங்கள் ஜெட் வேகத்தில் பரவிவிடும். விஷயம் கேள்விப்பட்டு ஆற்றிற்கு ஓடி வந்த லட்சுமி அம்மாள் கையோடு கொண்டு வந்திருந்த துண்டுகளால் அவர்களுக்குத் தலை துவட்டி விட்டு அதையே மேலே போர்த்தி இ அத்துடன் விடாமல் இ தேவியின் முதுகிலும் ஓங்கி ஒன்று போட்டார். அதை எதிர்பார்க்காத வெற்றியும் கணேசும் அதிர்ந்து விழிக்கஇ முருகவேலோ கோபத்தின் உச்சிக்குச் சென்றான்.
அவன் வாயைத் திறப்பதற்குள் “ அத்தான்” என்று அவனைக் கட்டிக் கொண்டாள் தேவி.
பதினேழு வயதுப் பையன் ஆகையால் அவளின் வெகுளித்தனமான செய்கையை பிறர் சொல்லிக் காட்டும் முன்னர் அவளைத் திருத்த விழைந்தவன் அவளைத் தன்னிடமிருந்து பிரித்தான். தொட்டுப் பேசுவது தவறு என்று உடனடியாகப் புரிந்தது அவளுக்கு. அன்றிலிருந்து அவள் யாரையும் தொட்டுப் பேசுவதில்லை. யாரையும் அதற்கு அனுமதித்ததில்லை.
தேம்பிய அவளைப் பார்த்துக் கேட்டான் “ நான் சொன்னதும் நீ ஏன் குதிச்சே?”
அவள் திருப்பிக் கேட்டாள் “ ஏன் குதிக்கக் கூடாது?”
“ஏதாவது ஆகியிருந்தால் நான் என்னடி பண்ணுவேன்?”
“அப்படி ஏதாவது ஆக விட்டிருவீங்களா அத்தான்?” என்று கேட்டு அவனை அவனுக்கு உணர்த்தி விட்டுஇ தான் எதையும் உணராதவளாய் செருப்பினுள் கால் நுழைத்து “வீட்டுக்குப் போகலாமா பாட்டி? “ என்று நடக்க ஆரம்பித்தாள் .
எப்போதிருந்து அவள் அந்த முடிவுக்கு வந்திருந்தாள் என்பது அவளுக்கு தெரியாது.
ஆனால் அவளுக்குத் தெரியர்த ரகசியங்களும் உண்டு.
அதற்கு பத்து வருடங்கள் பின்னால் போக வேண்டுமே?
கோபித்துக் கொள்ளாமல் பத்து வருடம் பின்னே போனால் ….
தேவியின் தாய் அவளை நிறைமாசமாய் வயிற்றில் சுமந்து கொண்டிருந்த சமயம் அது. ராஜேந்திரன் ஆசிரியர்களுக்கான தொழிற்படிப்பு படித்துவிட்டு வேலை கிடைக்காமல் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பூர்வீக சொத்துக்களின் மீது வில்லங்கங்கள் இருந்ததால் கொஞ்சம் சிரம தசையாகத்தான் இருந்தது. துலைப் பிரசவம் தாய் வீட்டில்தான் நடக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருந்த காலகட்டம் அது.
தாய் தந்தையற்ற் கனகத்தினை அவரின் சித்தி தலைப் பிரசவத்திற்கு அழைத்துச் சென்றவர் அவரிடம் கேட்ட கேள்வி “ஒருவேளை பெண் குழந்தை பிறந்தால் உங்களால் காப்பாற்ற முடியுமா? இல்லை கள்ளிப்பால் கொடுத்துவிடலாமா?” என்பதுதான்.
“ச்சே என்ன வார்த்தை சொல்லிட்ட சித்தி நீ” என்று கனகமும் குதிக்கத்தான் செய்தாள். அப்புறம் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவளைப் பார்க்க் வந்த ராஜேந்திரன் தன் பணக் கஷ்டத்தை சொல்லிப் புலம்பிப் போகவும் அப்போதைய நிலவரத்தை சீர் தூக்கிப் பார்த்தால் நிறைய சீர்வரிசை செய்து மகளைக் கட்டிக் கொடுக்க முடியாது என்பது கனகத்திற்கு மிக நன்றாகப் புலனானது. என்னதான் முறைப் பையன்கள் இருந்தாலும் சீர்வரிசை செய்யாவிட்டால் தன் கணவனின் மதிப்பு சபையில் குறையும் என்று கணக்கிட்டவர் அந்த துன்பத்தை தன் கணவனால் தாங்கவும் முடியாது என்ற உண்மையும் உரைக்கவே. விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவர் தவிப்பார் என்று உறுதியாக நம்பினார்.
அந்தக் கொடுமையை அவருக்குச் செய்வதை விட கள்ளிப்பாலே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தவர் கள்ளிப்பால் என்று தன் முகத்தையும் மனதையும் கல்லாக்கிக் கொண்டார். ஆப்போது அது கிராமங்களில் வழக்கத்தில் இருந்ததால் அதன் வீரியம் பற்றி அவர் உணரவில்லை. வயிற்றில் இருக்கும் தன் குழந்தையைத் தான் சொல்கிறோம் என்பதை உணராதவராய் தன் தாயிடம் குழந்தை பெண்ணாக இருந்தால் கள்ளிப்பால் கொடுத்துவிட சம்மதித்தார்.
கேட்ட அவரின் சித்திக்கும் சங்கடமாகத்தான் இருந்தது.நாளை பின்னே “நீ பெற்ற பிள்ளையாயிருந்தால் இப்படி பெண் குழந்தையோடு அவளை அல்லாட வீவாயா?” என்று நான்கு பேர் கேட்டு விடுவார்களோ என்றுதான் அவர் அப்படிக் கேட்டது.
அதிலிருந்து ஒரு வாரம் கழித்து தன் மதனியைத் தன் மூத்த மகன் முருகவேலின் துணையுடன் பார்க்க வந்திருந்தார் ராஜேந்திரனின் தங்கை . மதனியைப் பார்த்து சில பல பிரவச அறிவுரைகளை வழங்கி விட்டு “ தலைச்சான் புள்ளை மட்டுமாச்சும் பையனைப் பெத்திருங்க மைனி. அண்ணன் நிம்மதியாய் இருக்கும் “ என்று பேச்சுவாக்கில் கூறிவிடவேஇ கனகத்தின் கள்ளிப்பால் எண்ணம் உறுதியானது.
அன்றிரவே பிரசவ வலி எடுக்க பாட்டிமார் கூடி பிரசவம் பார்த்தில் தேவி தரிசனம் தந்தாள்
மயக்கதில் இருந்த கனகத்திடம் மறுபடியும் கேட்க எத்தனித்தபோதுஇ அங்கே எட்டிப்பார்த்தான் முருகவேல்
இங்கேயெல்லாம் வரக்கூடாதுய்யா என்றவாறே குழந்தையின் முகத்தை ஏக்கமாகப் பார்த்தார் கனகத்தின் சித்தி . அந்த முகத்தில் இருந்த பாவனைகள் புரியாவிட்டாலும் குழந்தைக்கு ஏதோ தவறு என்பது வரை புரிந்தது அவனுக்கு.
குழந்தையின் முகத்தைப் பார்த்தால் வைராக்கியம் போய்விடும் என்றுணர்ந்தவர் சங்கில் இருந்த கள்ளிப்பாலை கை நடுங்கத்தொட்டார் “முருகா! இந்தக் காரியத்தை என்னை செய்ய வச்சிராதேன்னு உன்னைக் கும்பிட்டேனே? இன்னும் என்னென்ன நான் பார்க்கணும் “ என்றவாறே சங்கைக் கையில் எடுத்தார். கள்ளிப்பால் கொட்டிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஏதாவது அதிசயம் நடக்காதா என்று ஏங்கினார்.
“எந்தக் காரியம் பாட்டி?” முருகன்தான். அவர் கும்பிட்ட முருகன் வந்து விட்டான்.
பாட்டி ஒரு நிமிடம் அவனை உற்றுப் பார்த்தார் . இந்தப் புள்ளையை நீ சீர் வரிசை அதிகம் வாங்காமல் கட்டிக்குவியா ராசா? என்றாh.;. தன்னை பெரிய மனிதனாக மதித்துப் பாட்டி கேட்டதும் அவன் தன்னை பெரியவனாக உணர்ந்தான்.” நிதானமாக குழந்தையைப் பார்த்தவன்” இந்தப் பாப்பாவை நான் பத்திரமா பாத்துக்குவேன். சீர் வரிசை எனக்கெதுக்கு? எங்க வீட்டில் எல்லாம் இருக்கு. பாப்பாவோட கல்யாணம் அவ இஷ்டப்படி மாமாகிட்ட கேட்டு நடத்தி வைப்பேன். “என்றான்
வாழ்க்கையில் எல்லா நாளும் சாதாரணமாய் கழிவதில்லை. அசாதாரணமாக நாட்களுமஇ; கணங்களும் நம் வாழ்வில் வருவுதுண்டு. அப்படி ஒரு கணம் தான் அதுவும். அதுதான் ஏழு வயது சிறுவனை அத்தனை பெரிய மனிதனாய் பேச வைத்தது.
பெண் சிசுக் கொலையை அரசாங்கம் போராடி நிறுத்தி விட்டது. இப்Nபுhது ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் பிறப்பதை பெற்றோர் மிகவும் விரும்புகிறார்கள். அல்லது பெரிதாய் சலித்துக் கொள்வதில்லை.
அன்றிலிருந்து தேவியின் மீது அவன் கண்காணிப்பு எப்போதும் இருக்கும். அவளை ஆசிரியப் படிப்பு படிக்கச் சொன்னவன் அவன்தான். இப்போது தபால் மூலம் படிக்கச் சொன்னதும் அவன்தான். அவள் படிப்பிற்காக பல இடங்களுக்கு சுற்றியலைந்ததும் அவன்தான். அதில் அவள் பாஸ்போர்ட் சைஸ் போட்டாவுக்காக நேரங்காலம் இல்லாமல் அவன் போன ஸ்டுடியோக்களும் அடக்கம்.
வெற்றி இது போன்ற பொறுப்புகளையெல்லாம் எடுத்துக் கொள்பவனில்லை. அவரவரர் வேலையை அவரவர்களே செய்ய வேண்டும் என்பவன். வுhழ்வின் பல பரிணாமங்களைப் அவனும் பாhத்து விட்டவன்தான். தாய் தந்தையின் கோர இறப்பு அவனை பக்குவப்படுத்தியிருந்தாலும்இஅவன் வீட்டின் கடைக்குட்டி என்ற காரணத்திற்காக காட்டும் அவன் குடும்பத்தினரின் அன்பு அவனை விளையாட்டுப் ப்pள்ளையாக வைத்திருந்தது. வெற்றி இகணேஷ் துளசி மூவரும் ஒரே செட்டாக திரிவார்கள். மூவரின் நண்பர்களும் “நண்பனுக்கு நண்பன் நண்பன் “ என்ற வகையில் நண்பர்கள். தேவிக்கு நெருங்கிய நட்புகள் கிடையாது. அதே நேரத்தில் எப்போதும் கண்டிப்புடன் கூடிய அன்பான அவளை யாருக்கும் பிடிக்காமலும் போகாது. அவள் யாரையும் நெருங்க விட மாட்டாள். அவள் அத்தானை மீறி யாரும் அவளிடம் ஒட்டுதலாக பழகவும் இல்லை. அதை அவள் பெரிதாக நினைக்கவும் இல்லை.
; வீட்டினுள் இருந்து புயலாக வந்த தேவி முருகவேலின் பைக்கில் ஏறிக் கொண்டு வீட்டினுள் பார்த்து “ அப்பா பை ப்பா. “ என்று அப்பாவுக்கு பை சொல்லிவிட்டு “ அத்தான் போலாம்” என்றாள். துளசியும் கணேஷ_ம் முதுகலை படிக்கிறார்கள். அவளுக்கு முன்பே வீட்டை விட்டு கல்லுரிகளுக்குச் சென்று விட்டர்கள்.
“ ஒரு நிமிசம் இருடி ஆத்தா .” என்ற லட்சுமி அம்மாள் இ பொறுமையற்று திரும்பிய தன் பேரனைப் பாhத்துவிட்டு சாயங்காலம் ரெண்டு பேரும் சீக்கிரம் வந்திருங்க. முக்கியமான விசயம் பேசனும் “ என்றார். “ அதை சாயங்காலம் சொல்ல வேண்டியது தானே? “ என்று நக்கலடித்துவிட்டு (முன்னாடியே சொல்லவில்லையாம்!) வண்டியைக் கிளப்பினான் முருகவேலு.
“ அத்தான் இன்னிக்கு செப்படம்பர் அஞ்சு. டீச்சர்ஸ் டே. ஸோ சீக்கரம் போகணும் “ என்றாள். “இன்னிக்கு டீச்சர்ஸ் டே ன்னு இன்னிக்குதான் தெரிஞ்சுதா உனக்கு? சீக்கிரம் போய் என்ன பண்ணப் போறே?”
ஸ்கூல்ல டெக்கரேசன்லாம் முடிச்சிட்டோம். எல்லா பசங்களுக்கும் சாக்லேட் கொடுப்பாங்க. ஏதாவது காம்படிசன் வச்சி ப்ரைஸ் குடுப்பாங்க . என் கிளாஸ் பசங்க எல்லாருக்கும் பென்சில்; வாங்கிக் கொடுக்கலாம்னு ஒரு ஐடியா. சரியா வருமா அத்தான்?”
“ இல்ல. எல்லாம் சின்ன பசங்க தானே. எல்லாருக்கும் பென்சில் வாங்கி குடுத்துரு. “
“ஐயோ! அவ்வளவு காசு எடுத்துட்டு வரலியே?”
“அத்தான் எதுக்கு இருக்கேன்? ஆல்ரெடி பென்சில் வாங்கியாச்சு. வேற எதுவும் வாங்கனுமா?”
“ எதுக்கும் ஒரு பாக்கெட் சாக்லேட் வாங்கிக்கலாம்”
“ஓ.கே”
பென்சில் பாக்கெட்டுகளையும் சாக்லேட் பாக்கெட்டையும் அவள் கையில் கொடுத்தவன்இ ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி ஒன்றை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.
“ ஹேப்பி டீச்சர்ஸ் டே”
“ஐம் ஸோ ஹேப்பி!”
என்று சந்தோசமாக வாங்கிக் கொண்டாள்.
டீச்சர்ஸ் டே கொண்டாடிவிட்டு மதியம் மூன்று மணியளவில் பஸ்ஸை பிடித்து வீடு வந்து சேர்ந்திருந்தாள். தன் ஐ.டி கம்பெனி வேலையின் இரவு ஷிப்டில் இருந்து வந்து தூங்கி எழுந்திருந்த வெற்றியும் இதேவியின் தம்பி தங்கையும் வந்துவிடவே வீடு களை கட்டியது.
ராஜேந்திரனை தனியே அழைத்துச் சென்ற லட்சுமியம்மாள் ஏதோ முணுமுணுவென்று பேசுவதும் அவர் தலையை மறுதலிப்பாக ஆட்டுவதும் தெரிந்தது. என்னவாயிருக்கும் என்று யோசித்துவிட்டு அதற்காக நேரத்தை வீணடிப்பது தவறு என்றுணர்ந்து மூவரும் கேரம் போர்டில் ஐக்கியமானர்கள்.
ஆறு மணிக்கு முருகுவேலின் பைக் சத்தம் கேட்டது. கேரம் போர்டை அப்படியே விட்டு விட்டு ஓடிப்Nபுhய் அவன் பேக் பேக்கை வாங்கிக் கொண்டாள் துளசி.
“பெரியத்தான்”
“ம்?”
“ அக்காவுக்கு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி வாங்கிக் குடுத்தீங்களே? எனக்கு ஏன் ஒண்ணும் வாங்கலை?”
“மறப்பேனா? எம்.காம் படிக்கிறே. கால்குலேட்டர் ரிப்பேராயிடுச்சின்னு சொன்னியே? புது கால்குலேட்டர் வாங்கிட்டேன். வீட்டுக்குள்ள கொண்டு போய் பேக்கை பிரிச்சுப் பாரு”
“ஐ! சூப்பர்!!”
உள்ளே ஓடிவிட்டாள்.
அதற்குள் மூக்கு வியர்த்த வெற்றியும் கணேஷ_ம் “அப்ப எங்களுக்கு ஒண்ணுமில்லையா?” என்று ராகம் போடஇ
“ விட்ருவீங்களா? இந்தாங்க ஆளுக்கு ஒரு நேந்திரங்காய் சிப்ஸ் பாக்கெட். எல்லாரும் ஷேர் செய்து சாப்பிடுங்க”
“அடிங்க!. அவளுகளுக்கு மட்டும் கிப்ட். எங்களுக்கு ஸ்னாக்ஸா? அதையும் ஷேர் பண்ணிக்கனுமா? நாட்டாமை தீர்ப்ப மாத்து” என்று அலறினார்கள்.