பூவை வண்டு கொள்ளையடித்தால்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
கொள்ளை 15
தேங்கும் நீர் பாதையின் இடையூறாவது போலத்தான். தேங்கிய கவலைகளும் சந்தோசத்தின் இடையூறுகள்.
வருணின் புகைப்படத்தைக் கண்டதும், அந்தச் சிறுப்பெண்ணின் கண்களில் தானாக விழிநீர் எட்டிப்பார்க்க, எதுவும் பேசாமலே அவளது வதங்கிய முகத்தைக் கண்டதும், வருணைப் பற்றி அவள் அறிந்திருக்கிறாள் என்று யூகித்துக் கொண்டான்.
” சொல்லுமா, உனக்கு வருணை முன்னாடியே தெரியுமா? அவனை உனக்கு எப்படித் தெரியும்? உன் போட்டோ அவன்கிட்ட எப்படி வந்தது? அவன் டீல் பண்ண கேஸ்ஸைப் பத்தி உனக்கு எதுவும் தெரியுமா? ” என அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்த கேள்விகளை எல்லாம் கேட்டான்.
தன் கண்ணீரைத் துடைத்தவள், விசும்பிக்கொண்டே கூற ஆரம்பித்தாள்… ” அண்ணா, என் பெயர் சீமா… இந்த இடம் தான் நான் பிறந்து வளர்ந்த இடம்… என் அம்மா ஒரு தமிழ்ப் பொண்ணு.. எங்க அம்மா, சின்ன வயசா இருக்கும் போதே! அவங்களைக் கடத்திட்டு வந்து பாலியல் தொல்லைக் கொடுத்தது மட்டும் இல்லாம இந்த காமத்திப்புரால, அவங்களையும் பாலியல் தொழிலைச் செய்ய வச்சாங்க… இங்க இந்தத் தெருவில வாழ்ந்துட்டு இருந்த எங்கப்பா, எங்கம்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டாங்க.. நான் இங்க தான் பிறந்தேன்.
என்னை வளர்த்தது இந்தக் காமத்திபுரா ஆட்கள் தான்…. நான் பள்ளில படிக்கும் போது. இந்த ஏரியாவிலிருந்து வந்ததுனால என்னை ஒரு மாதிரி தான் பார்ப்பாங்க, யாரும் எங்கிட்ட பேச மாட்டாங்க. என்னைக் கிண்டல் பண்ணுவாங்க.. எனக்குப் பத்துவயசா இருக்கும் போது என்னுடைய ஆசிரியர் எனக்கு பாலியல் தொந்தரவு செய்தார்.. எனக்கே விவரம் தெரிந்தபின் தான் தெரிந்தது..
அதன் பின் நான் கஷ்டபட்டு இங்க இருக்கிற மக்களோட உதவியால படிச்சேன். இங்க இருக்கிற பெண்பிள்ளைகளுக்கு எல்லாமே தெரியணும். பாலியல் கொடுமைப் பத்தி தெரியணும் விழிப்புணர்வு கொடுக்கணும் நிறைய ட்ரமா போடுவேன்…
அப்படி ஒரு நாள் ட்ராமா போட்டுட்டு நைட் லேட்டா வரும் போது தான்… ஒரு பெண்ணை வலுக்கட்டாயமா இழுத்துட்டு வந்தாங்க… அந்தப் பொண்ணை எல்லாரும் சேர்ந்து கற்பழிச்சாங்க.. என்னால எதுவும் பண்ணமுடியல அழுத்துட்டே வந்தேன்..
மறுநாள் அந்த இடம் முழுதும் போலீஸ்ஸா இருந்துச்சு. அந்தப் பொண்ணை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டுப் போச்சு.. எனக்கு சந்தேகமா இருந்தது.., இங்கப் போலீஸ். ஒண்ணு மாமுல் வாங்க வருவாங்க…. இல்லைன்னா…. ஆனா அன்னைக்கு அந்தப் பொண்ணை அரெஸ்ட் பண்ணிட்டு போனாங்க…
ஏதோ வேடிக்கைப் பார்த்தது போல இங்க இருக்க மக்கள் பார்த்தாங்க.. நியூஸ்ல அந்தப்பொண்ணோட போட்டோவும் அவளை அரெஸ்ட் பண்ணிட்டு போன செய்தியைப் பார்த்ததும் தான் எனக்கே தெரிந்தது. இது அந்தக் கும்பலும் போலீஸும் சேர்ந்து செய்த திட்டம்..
இங்க நிசாப்ன்னு ஒருத்தன் இருக்கான். அவனுக்கு கீழ பல கும்பல் வேலைப் பார்க்குது. அவன் பாலியல் தொழில் செய்றது, கஞ்சா சப்ளை பண்றது, ட்ரக்ஸ் போதைப் பொருள் விக்கிறது மட்டுமில்லா, பெரிய பெரிய ப்ஸ்னஸ் பண்றவங்க கிட்ட அடித்தடி பண்ணி காசு வாங்கிறது என பல தொழில் செய்துட்டு இருக்கான். அவனால இன்னும் இங்க பாலியல் தொழில் நடந்துட்டு இருக்கு..
கே.எஸ் க்ரூப் ஆப் கம்பெனி ஓனரோட பொண்ணு ஷப்னா.. அந்த நிசாப், ஷப்னா அப்பாகிட்ட பணம் கேட்க, அவர் மறுத்துட்டார். அது மட்டுமில்ல போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிருக்கார். ஆனா, போலீஸ் அவங்க பக்கம் தான் அவருக்குத் தெரியல. அவரைப் பழிவாங்க, ஷப்னாவைக் கடத்தி, அவரை அவமானம் படுத்த, பாக்கெட் மணிக்காக ப்ராஸ்டியூட் செய்ததாக ஷப்னா மேல பழிச் சுமத்திட்டாங்க. நியூஸ்ல அவ போட்டோ போட்டு ஒரு செய்தியா வந்ததை பார்த்த, ஷப்னா தற்கொலைச் செய்துகிட்டாள்.
உங்களைப் போல தான். வருண் அண்ணா இங்க விசாரிக்க வந்தாங்க, நானும் உண்மையெல்லாம் சொன்னேன்.. என்னைச் சாட்சி சொல்லக் கூப்பிட்டாங்க. நானும் வரேன் ஒத்துக்கொண்டேன். ஆனால் இது எப்படியோ நிசாப் ஆட்களுக்குத் தெரஞ்சுருச்சு என்னையும் அவரையும் கொல்ல நினைச்சாங்க. எங்க அப்பா அம்மாவையும் கொன்னுட்டாங்க, என்னைக் கொல்ல நினைக்கும் போது தான் வருண் அண்ணா என்னை காப்பாத்தினார்.
அந்தக் கும்பல் கிட்ட தப்பிக்க முயற்சிப் பண்ணினோம்.. ஆனால் அதுக்குள்ள நாங்க வந்த வண்டியை ஆக்ஸிடென்ட் பண்ணிட்டாங்க, நாங்க அடிப்பட்டு கிடைந்தோம்.. அப்பையும் அவங்க சும்மா விடல, நாங்க வந்தக் காரை எரிக்க டரைப் பண்ணாங்க. என்னை அவர் தான் காப்பாத்தி அங்கிருந்து போகச் சொன்னார்.. அங்க இருந்து ஓடி வந்துட்டேன்..
அங்க என்ன நடந்து எனக்குத் தெரியல, இவங்க தான் என்னைய காப்பாத்தி வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாங்க… அடுத்தநாள் தான் தெரிந்தது வருண் அண்ணா இறந்தது.. நாங்க இங்க தான் இருக்கேன் யாருக்கும் தெரியாது இவங்க தான் என்னைப் பாதுகாத்துட்டு வர்றாங்க ” என்று உண்மை முழுவதையும் கூறி முடித்தாள்.
வருண், இறப்பிற்கான காரணம் மட்டுமில்லாமல், அவன் விசாரித்து வந்த வழக்கைப் பற்றியும் தெரிந்துக்கொண்டனர்..
அவள் சொல்லுவதை தனது அழைப்பேசியில் பதிவு செய்து கொண்டான் அப்துல்..
” இந்த உண்மையை நீ எங்க வேணா வந்து சொல்லுவீயா ? வருணோட இறப்புக்கும் ஷப்னா இறப்புக்கும் காரணமானவங்களுக்குத் தண்டனை வாங்கித் தரணும் நான் நினைக்கிறேன்., உன்னால எனக்கு உதவ முடியுமா சீமா? ” எனவும்.
” வேணாம்பா, அவ ஏற்கனவே உயிருக்குப் போராடி, இப்ப தான் நல்லா இருக்கா! மறுபடியும் அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்கிக்க முடியாதுப்பா.. என்னால பெத்துக்க முடியலைன்னாலும் அவளை நான் என் மகளாத்தான் பார்க்கிறேன்.. அவளுக்கு ஒண்ணுன்னா, தாங்கிக்க முடியாதுப்பா, இருக்கிற காலமாவது அவ நிம்மதியா இருக்கட்டுமே! ” என அவளைப் பாதுகாத்து வந்த அந்தத் திருநங்கை அழுதார்.
” அம்மா, நீங்க என்னைக் காப்பத்தி உயிர் கொடுத்திருக்கீங்க. உங்கப் பேச்சை நான் கண்டிப்பா கேட்பேன். ஆனா, இதுல நான் என் பெத்தவங்களையும் வருண் அண்ணாவையும் இழந்திருக்கேன் அதுக்கு ஒரு நியாயம் கிடைக்கணும்மா! இப்படி தப்பைக் கண்டுக்காம விடுறதாலையும் சுட்டிக்காட்டிச் சொல்லாம இருக்கிறதுனால, இந்தக் காமத்திபுரா அழுக்கு நிறைந்த இடமா இன்னும் இருக்கு… எல்லாருக்கும் எல்லா உண்மைத் தெரியணும்., இந்தக் காமத்திபுராவைப் பத்தி தெரிந்து ஒரு மாற்றம் வரணும்.. அதுக்கு நான் சாகவும் நான் தயார் தான்மா ” என்றவள். ” நான் சாட்சிச் சொல்லுறேன் அண்ணா… நீங்க எங்க கூப்பிட்டாலும் வருவேன் அண்ணா! ” என்றாள்.
” அம்மா, யாரோ பெத்த பொண்ணா இருந்தாலும், தான் பொண்ணா, பாசம் காட்டி அவளுக்காகத் துடிக்கிறீங்க.. நிச்சயம் உங்களை நான் ஏமாத்த மாட்டேன்.. உங்கப் பொண்ணுக்கு எந்த ஆபத்தும் வராமா நான் பார்த்துக்கிறேன்.,. ” என அவர்களது கைகளைப் பற்றிக் கூற தனது இன்னொரு கைகளை அவன் கைமேல் வைத்தவர், ” உன்னை நம்புறேன் பா… உன் நண்பனோட இறப்புக்குக் கண்டிப்பா நியாயம் கிடைக்கும். நல்லா இருப்பா! ” அவனது தலையை மெல்ல வருடி ஆசிர்வதித்தார்..
அனைவரிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து இருவரும் கிளம்ப, அதனை இருவர் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு இருந்தனர்…
மனம் தெளிவோடு வீடு வந்து சேர்ந்தான்…
” மயூபேட்டா! ” என சகுந்தலா அழைக்க, ” சொல்லு சகு… ”
” மயூ பேட்டா! எப்ப பாரு வேலை வேலை தான் இருப்பீயா? உன் பொண்டாட்டி இங்க வந்து எத்தனை நாள் ஆச்சு, என்னைக்காவது வெளியே கூட்டிட்டு போயிருக்கியா? பாவம் விஷ்ணுக்கும் ஆசை இருக்காதா? கூட்டிட்டுப் போயிட்டு வா பேட்டா! ” என்றார் அவன் தலையை வருடி…
” சரி சகு கூட்டிட்டுப் போறேன்… ” என சிரித்துக்கொண்டே தன் அறைக்கு விரைய, அவளோ கையில் டயரியை வைத்துக் கொண்டு வருணின் பிரிவை சொற்களால் நிரப்பிக் கொண்டு இருந்தாள்…
உள்ளே வந்தவன் அவள் வைத்திருந்த டையரியைக் கண்டதும், சற்று உடல் நடுங்கிப்போக வேகமாக அதைப் பறித்து பார்த்தான்… பறித்த வேகத்தில் பயந்து போனாள் விஷ்ணு… அவன் பக்கங்களை வேகவேகமாகத் திருப்ப, அவளுக்குப் பத்திக்கொண்டு வந்தது…
” மெனஸ் தெரியாதா உனக்கு? அடுத்தவங்க டைரியை பெர்மிசன் இல்லாம படிக்கிறதே தப்பு, இதுல புடுங்கிப் படிக்கிறது அதைவிட தப்பு…, நீ படிச்ச ஸ்கூல உங்க டீச்சர் கத்துக்கொடுக்கலையா? ” எனவும்
அவன் கையிலிருக்கும் டைரி, வருணுடையது போல இருக்கவே, தனது அலுவலகத்தில் தான் இருக்கிறது என்பதையும் மறந்தும், வருணுடையது என்று பயந்து அதைப் பறிந்தான்…. அதன் பின் அவளது கையெழுத்தைக் கண்டதும் நிம்மதி வர பெருமூச்சை விட்டவன், அதனை மெத்தையில் ஏறிந்தான்.
” இங்க ஒருத்தி கத்திட்டு இருக்கேன்.. பதில் சொல்லாம இருக்க? இதுல என் டைரியைத் தூக்கி வேற போடுற. எந்த ஸ்கூல்டா படிச்ச நீ? எதையும் கத்துக்கொடுமா, இப்படி மிஸ்பிகேவ் மேன்னா வளர்ந்திருக்க, உங்க டீச்சரைத் சொல்லும். வளர்ந்திருக்கான் பாரு தடியன் ” எனவும் அவன் உதட்டில் சிறு மூரல் முளைக்க,
” சொரனையும் இல்லையா? உன்னைத் தான் டா திட்டுறேன்… சிரிச்சுட்டு நிக்கிற? ” என்றவள் அவனது செயலில் சற்று தடுமாறினாள். அவன் தனது சட்டை பட்டனைக் கழற்றியவாறு அவளை நோக்கி முன்னே செல்ல, அவளோ பின்னே செல்ல, விழிகளை எடுக்காமல் அவனது செய்கை, உள்ளுக்குள் பயம் உருண்டை சுழல, ” இப்ப… இப்ப.. என்.. கி… கிட்ட வர.. ” என அவளது தடுமாற்றதைப் போலவே சொற்களும் தடுமாற…
பேசாது தனது செய்கையைத் தொடர்ந்தவன்,மேலும் முன்னேற அவளோ இடமின்றி சோபாவில் அமர, குனிந்து அவளருகே சென்றவன், ” ஏதோ கேட்டியே! என்ன கேட்ட? ” எனவும்..
” அ… அ.. அது… கா… காபி வேணுமா… இல்ல… டீ… டீ வேணுமா? கே… கேட்டேன்.. ” என்றாள் திக்கித்திணறி, முகம் வியர்த்து, சிறு இடைவெளியில் இருவரின் முகமிருக்க, பெண்ணவளின் வார்த்தைத் தொண்டைக்குள் சிக்கி சிக்கிக்கொண்டது.
” ம்ம் காபி கொண்டுவா ” என்றவன், அவளருகில் இருந்த துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றான்.
மூச்சை வெளியே இழுத்து விட்டவள்,’ விஷ்ணு, இந்தப் பானிபூரிகாரன் உன்கிட்ட விளையாட்டுக் காட்டுறான்… இது சரியில்ல, இவனுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்.. ” என்றவள் கீழே இறங்கினாள்..
ரெப்ஃரஷ் ஆகி வந்தவன் மெத்தையில் அவளது டைரியைக் கண்டான். அதை எடுத்து திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அங்காங்கே நான்கு வரி கவிதை. பாடல் வரிகள் என எழுதிவைத்திருக்க, டைரியின் முன் பக்கத்தில் அவனது புகைப்படம் இருந்தது… கடைசியாக அவள் எழுதின பக்கத்தை திருப்பிப் பார்க்க,
நீரின் மகன் எந்தன் காதலன்நீரின் கருணையில் வாழுவான்இன்று நாளைக்குள் மீளுவான்எனது பெண்மையை ஆளுவான்என்னை மீண்டும் தீண்டும் போதுகாதல் தேவன் இருமுறை முதலிரவுகள் பெறுவான்…
என்றே எழுதிருக்க. அவள் அழுத தடங்கள், அந்த தாள் சுமந்திருந்திருந்தது.
அவன் மனமோ வலிக்க ஆரம்பித்தது….
அவனுணர்வுகள் அவனுக்கே புலப்படவில்லை, சக மனிதனாய் அவளை எண்ணி நெஞ்சமும் வலிக்க. காதலனாய் எண்ணி அவள் மேல் பொறாமையும் வந்தது.. சிறு வயதிலிருந்து அவளைத் தன்னவள் எண்ணி வளர்ந்தவனுக்கு அவளருகில் இருப்பது பெரும் வரமாக இருந்தாலும். அவள் வேறொருவனை மனதில் எண்ணிக்கொண்டுருப்பது அவனுக்கே சாபமாக இருந்தது.
தன்காதலைச் சொல்வதா? வருண் இறந்ததைச் சொல்வதா? இரண்டினை அவள் ஏற்பாளா? எப்படி எடுத்துக்கொள்வாள்? உண்மை தெரிந்தப்பின்பும் என்னோடு இருப்பாளா? இல்லை தவறான முடிவுகளை எடுப்பாளா? ‘ என பல விதமாய் அவன் யோசிக்க, அவள் வரும் அரவம் கெட்டு அதனை மெத்தையில் வைத்தவன், டீசர்ட்டை அணிந்து கொண்டான்…
அவள் அவனைக் காணது டேபிளில் காபி கப்பை வைத்தவள். டைரியை எடுத்து பத்திரப்படுத்தினாள்.
” விஷ்ணு, கிளம்பு வெளிய போலாம்.. ” என்றான் அவளைப் பாராமல் காபியைப் பருகியவாறு..
” எங்க போறோம்? ” என்று கேட்டு அவன் அருகில் வந்தாள். ” நீ இங்க வந்ததிலிருந்து, உன்னை நான் எங்கயும் கூட்டிட்டு போனதில்லையாம் சகு சொல்லுச்சு. அதான் உன்னைக் ஊர் சுத்திக் காட்ட கூட்டிட்டுப் போலாம் நினைக்கிறேன். சீக்கிரமா கிளம்பு.. ” என்றான்.
அவனை கண்டு முறைத்தவன், ” நான் வரமாட்டேன் “என்றாள் பட்டென்று.
” ஏன் ஏன் வரமாட்ட? ” எனவும்
” உனக்கா தோணுச்சாடா என்னைக் கூட்டிட்டுப் போகணும், சகு சொன்னதும், சார் கூட்டிட்டுப் போறீங்களோ! அப்படி ஒண்ணும் நீ கூட்டிட்டுப் போகணும் அவசியம் இல்ல, ச்ச, ஒரு பிரண்டை இப்படி நடந்துற நீ நாளைப்பின்ன உனக்கு கல்யாணம் ஆச்சுன்ன இப்படி தானே பண்ணுவ உன் ஓயிப்பை, வேலைத் தான் முக்கியம் அங்கே இருந்துக்க வேண்டியது. உனக்கு எதுக்கு டா குடும்பம்? ” என அவள் உரிமையாய் சண்டை இட, அவளைத் தன் மனைவியாக மனக்கண்ணில் எண்ணிப்பார்க்க ஆரம்பித்தவன் அவளை ரசிக்க, ” வருண் மட்டும் இப்படி பண்ணட்டும் அப்ப இருக்கு அவனுக்கு… ” என்றதும் சுருக்கென்று வலிக்க, சற்றென்று கோபம் வர, அவளது புஜங்களைப் பற்றி அருகில் இழுத்தவன்,
” நான் தான்டி உனக்கெல்லாம். எப்பையும் வருண் உன் வாழ்க்கையில வரப்போறதில்லை… இனி அவன் பெயரைக் கூட நீ சொல்லக்கூடாது.நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்.. ” என்றவன் கற்பனையில் அவளிடம் கூறுவதாய் எண்ணிக்கொண்டான்.. அவன் கைப்பிடியில் பயந்த விழிகளால் தன்னை நோக்கியிருப்பதை உணர்ந்தவன்,
” சாரி, நான் இன்னைக்கு ரொம்ப அப்சட் இருக்கேன்.. உன்கூட கைப்பிடிச்சிட்டு நடந்தா சரியாகிடுவேன். நாம வெளிய போலாமா? ” என கேட்கவும்.. அவளால் அவனது பேச்சை மறுக்க முடியவில்லை.. தலையை ஆட்டிவைத்தாள்.. சிரித்தவன், ” சீக்கிரமா வா..,” என்று சென்றுவிட்டான்..
சிறு படபடப்பு வந்து சென்றது அவளுக்குள்….
அவள் கிளம்பிவர இருவரும் காரில் சென்றனர்…, அவள் அமைதியாக சாளரத்தின் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தாள்…
மக்களின் தோற்றமும் ஆடை மட்டும் தான் வித்தியாசம். ஆனால் உழைப்பு, பிழைப்பு, கஷ்டம், கண்ணீர், வறுமை, வசதி எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தது.. உயர்ந்த கட்டிடங்கள் இருக்கும் இடத்திற்கு முன்பு தான் சிறு தள்ளு வண்டியும் ப்ளாட் பார்ம் கடைகளும் இருந்தது…
அதைப் பார்த்தவாறே வந்தாள்.. சொற பஜார், தெற்கு மும்பையிலிருக்கும் மிகப் பெரிய பஜார்.. மும்பையில் தொலைந்து போன பொருட்களை அங்கே மீட்கலாம் என்பர் அங்கே ஸ்கெண்ட்ன்ட் பொருட்கள் தான் அதிகம் கிடைக்குமாம். அவளை அங்கு அழைத்துச் சென்றான்.
காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன்.. அவளோடு நடக்க ஆரம்பித்தான்… ” பானிப்பூரி…” என அவள் கைக்காட்ட, அங்கே சென்றனர் இருவரும்..
ஒரு ப்ளேட் வாங்கி இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு விழுங்கினர். மீண்டும் ப்ளேட் வாங்கி தின்ன முதலில் தின்று முடிந்தது விஷ்ணு தான். ” நான் தான் ப்ரஸ்ட் நான் பர்ஸ்ட் ” என்று குதிக்க, இல்லை என்று மறுத்தவன் தான் தான் என்றான். இருவரும் சண்டைப்போட்டு கடைக்காரரிடம் பதில் கேட்டு நிற்க, அவரோ காசு என்று சைகையில் செய்தார்.. அதனைக்கொடுத்து விட்டு மீண்டும் நடந்தனர்..
” விஷ்ணு, நான் ஒண்ணு கேட்பேன். கோபப்படாம நிதானமா பதில் சொல்லு… ” எனவும், ” சரி கேளு, பதில் சொல்லுறேன். ” என்றாள்.
” சப்போஷ் வருண் கிடைக்கலைன்னா என்ன பண்ணுவ? ” எனவும் நின்றாள்… ” ஏன் அப்படி கேட்கிற மயூரன்? ” அவள் முகம் வாட, அவனது புஜங்களை இறுக்கப்பற்றிக் கேட்க, ” ஹேய்… நான் சும்மாதான் கேட்டேன் விஷ்ணு… கண்டிப்பா வருண் கிடைப்பான். சப்போஷ் கிடைக்கலைன்னா என்ன பண்ணுவ தான் கேட்டேன்? ” என்றான்.
அவள் அசையாது நின்றவள், ” அவன் கிடைக்கலைன்னா நான் செத்துடுவேன் மயூரன் ” என்று அழுக ஆரம்பித்தாள்..
” விஷ்ணு, அழுகாத. சாரிமா, சும்மா தான் கேட்டேன். ப்ளீஸ், உன் டேங்கைத் திறக்காத! அப்புறம் மும்பைல வெள்ளம், எங்க நியூஸ் சேனல் நியூஸ் போட்டிட போறாங்க… ” என்று அவளது தற்போதையை நிலமையை மாற்ற எண்ணியவன் நகையாட..
” ம்ம்.. அப்படியே அந்த வெள்ளத்தில் மயூரனும் அடித்து செல்பட்டார்ன்னு சேர்த்து சொல்லச் சொல்லு! தேவையில்லாத கேள்வியைக் கேட்டு அழுக வைச்சுட்டு இப்படி வேற சொல்லுவீயா? ” எனவும்
அவள் சொன்னத் தோரணையில் சிரித்தே விட்டான்.. ” சரி சாரி.. வாங்க மேடம் போலாம்.” என்றவன் அழைத்து வீடு வந்து சேர்ந்தான்.,
நேற்றைய தினம் இருந்த பாரம் குறைந்திருந்தது… இருவரும் நாளைய நடக்க இருக்கும் விபரிதத்தை அறியாமல் இன்று நிம்மதியாக உறங்கிப் போயிருந்தனர்.
மறுநாள்…. விஷ்ணு அமர்ந்திருக்க, அவளைச் சுற்றி சுமங்கலிப் பெண்களும் அமர்ந்தனர்… அவள் முன்னே தாலி,அதில் கோர்க்கப்படவேண்டியவையும் இருந்தது… கடவுளை வேண்டி பூஜை செய்துக்கொண்டிருக்க, மயூரன் வேலைக்குச் செல்ல தயாராகி வந்தான்..
” மயூ பேட்டா எங்க கிளம்பிட்ட வீட்டுல விஷேசம் நடக்கும் போது? ” என சகு கேட்க, ” சகு, இது லேடிஸ் பங்கசன் நான் எதுக்கு? ” எனவும்..
” ஆமா லேடிஸ் பங்கசன். ஆனா பங்கசன் உன் பொண்டாட்டிக்குத் தான். புருசனா, நீ அவ கூட இருக்கணும்., அது மட்டுமில்ல, நீ தான் அவ கழுத்துல தாலியைக் கட்டணும் ” என்றதும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து நின்றனர்…