காதல்போதை24?

காதல்போதை24?

காதல்போதை 24?

தன்னையே கண்களில் எதிர்ப்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன் ஏதோ யோசித்து,
      “இப்போ க்ளாசுக்கு கிளம்பு.. மதியம் வெளில கிளம்பலாம்..” என்று சொல்லிவிட்டு செல்ல அவளுக்கோ இதுவே போதும் என்றிருந்தது.

அன்று மதியம் வரை கஷ்டப்பட்டு நேரத்தை கடத்தியவள் கீர்த்தியிடம் விஷயத்தை சொல்ல அவளுக்கோ நம்பவே முடியவில்லை.
      “நிஜமா தான் சொல்றியா ஜிலேபி..” என்று ஆச்சரியமாக கீர்த்தி கேட்க,

     “ஆமாடி போன்டா.. ரொம்ப ஹேப்பியா இருக்கு.. ஓகே ஓகே என் ஆளு வெயிட் பன்னுவான் பாய் செல்லம்..” என்றவாறு கீர்த்தியின் கன்னத்தை கிள்ளி முத்தம் ஒன்றை பதித்து விட்டு துள்ளி குதித்தவாறு மாயா பார்க்கிங் ஏரியாவிற்கு செல்ல அங்கு தனது பைக்கில் சாய்ந்தவாறு ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான் ரோஹன். 

அவனருகே மெதுவாக சென்றவள் அவன் காதில் “பூம்..” என்று கத்த நிதானமாக அவளை திரும்பி பார்த்தவன் ‘பைத்தியமா நீனு..’ என்ற ரீதியில் ஒரு லுக்கு விட, ‘ஹிஹிஹி..’ என்று அசடுவழிந்தவள் “போகலாமா..” என்று கேட்க, தலையசைத்தவன் அவள் வண்டியில் ஏறியதும் பைக்கை பறக்க விட்டான்.

மாயாவோ அவன் தோள்களை பிடித்தவாறு,
    “ரொம்ப நாளைக்கு அப்றம் உன்கூட பைக்ல.. மாயா ஹேப்பியோ ஹேப்பி..” என்று உற்சாகமாக சொல்ல, அவனோ அதையெல்லாம் கண்டுக்காது “எங்க போகனும்..” என்று கேட்டான்.

சற்றுநேரம் யோசிப்பது போல் பாவனை செய்தவள்,
       “ஒரு லோங் ட்ரைவ் போகலாம் செல்லகுட்டி..” என்று சொல்லி அவனை அணைத்துக்கொள்ள,
       “மொதல்ல என் மேலயிருந்து கைய எடு..” என்று கடுப்பாக சொன்னவன் உர்ரென்று முகத்தை வைத்தவாறு வண்டியை ஓட்ட அவளோ அவன் பேச்சையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டால் தானே..

ஒரு மணி நேரமாக மாயாவின் வளவள பேச்சுக்களை கேட்டவாறு வண்டியை நிறுத்தாமல் சில இடங்கள் சுற்றியவன் ஒரு பூங்காவில் கொண்டு வந்து வண்டியை நிறுத்த துள்ளிகுதித்து இறங்கியவள் “வாவ்..” என்று குதூகலித்தாள்.

ரோஹனோ அவளுக்கும் தனக்கும் சம்மதமில்லை என்ற ரீதியில் அவன் பாட்டுக்கு முன்னே செல்ல மாயா தான் அவன் பின்னே குடுகுடுவென ஓடினாள். அங்கு ஐஸ்க்ரீமிலிருந்து பஞ்சுமிட்டாய் வரை ரோஹனின் செலவிலே வாங்கிக் கொண்டவள் தன்னவன் அருகிலே அமர்ந்து ரசித்து ருசித்து சாப்பிட ரோஹன் தான் அவளை இருபுருவங்கள் உயர்த்தி வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அதுவும் அங்கும் இங்கும் பூக்களை பறிக்கிறேன் பேர்வழியென்று அதை பராமரிப்பவரிடம் ரோஹனை திட்டு வாங்க வைத்து அவனிடமிருந்து முறைப்பை வாங்கவும் தவறவில்லை நம் நாயகி.

பூங்காவிலிருந்து அவளை அழைத்துக் கொண்டு வந்தவன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வந்தவளின் மனதை சரியாக படித்தது போல் அடுத்து அவளை ஒரு ஹோட்டலுக்கு தான் அழைத்துச் சென்றான். ஃப்யூஸ் போன பல்பு ஆயிரம் வோல்ட்ஸ் பிரகாசமாக எறிவது போல் அவள் முகம் மலர ரோஹன் வண்டியை நிறுத்த முன்னே வண்டியிருந்து குதித்து ஹோட்டலுக்குள் சென்றுவிட்டாள் மாயா.

ரோஹனும் ‘அடிப்பாவி..’ என்று அவளை வறுத்தவாறு உள்ளே சென்று அவளருகே அமர வெயிட்டர் சொன்ன “ஓர்டர் ப்ளீஸ்..” என்ற வசனத்திற்கு அவள் சொன்ன உணவுகளின் பட்டியலில் அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக ரோஹன் பார்க்க அதையெல்லாம் அவள் கண்டுக்கொள்ளவே இல்லை.

தனக்கு தேவையானதை சொன்னவள் தன்னவனிடம்,
      “ரூஹி உனக்கு..” என்று ஒரு கேள்வியை கேட்டு வைக்க, அவனோ சலிப்பாக, “நீ ஏதாச்சும் மிச்சம் வைச்சா ஒரு இரண்டு வாய் சாப்பிட்டுக்குறேன்..” என்றுவிட்டு ‘சரியான சோத்துமூட்டை..’ என்று நினைத்துக் கொண்டான்.

உணவும் வர வயிறு முட்ட சாப்பிட்டவள் அப்போதும் மினுகார்டை எடுத்து புரட்ட போக அவள் கைப்பிடித்து தடுத்தவன்,
     “போதும்டி வெடிச்சிறுவ..” என்றுவிட்டு பணத்தை செலுத்தி அவளை வெளியே இழுத்துக்கொண்டு வந்துவிட்டான்.

அடுத்து அங்கிருந்து அவளை பீச்சிற்கே ரோஹன் அழைத்துச் சென்று வண்டியை நிறுத்திவிட்டு சைட் கண்ணாடி வழியாக அவள் முகபாவனைகளை அவன் ஆராய்ச்சியாக பார்க்க மாயாவோ உண்ட மயக்கத்தில் அவனை அணைத்தவாறு முதுகில் கன்னத்தை வைத்து தூங்கியே இருந்தாள். 

‘அடிப்பாவி உன்னையெல்லாம்..’ என்றவாறு அவள் அணைத்திருந்த கையை உதற திடுக்கிட்டு எழுந்தவள்,
     “நா எங்க இருக்கேன்..” என்று சுற்றி முற்றி புரியாது பார்த்தவாறு மாயா முழிக்க, தலையிலடித்துக் கொண்டவாறு ரோஹன் இறங்கிச்செல்ல தலையை சொறிந்தவாறு அவன் பின்னே சென்றவள் கடலலைகளை ரசிக்க ஆரம்பித்தாள்.

ரோஹனோ அலைகளை காலால் அலசியவாறு அப்படியே நடந்து செல்ல அவன் பின்னே ஓடியவள் அவன் கையை பிடித்துக்கொண்டு,
     “அண்ணாத்தையும் தருணும் ஏன் கொலேஜ் வரல..” என்று கேட்க,

அவள் கையிலிருந்து தன் கையை நைசாக எடுத்தவன்,
     “பாபிக்கு பாஸ்கெட்போல் மேட்ச் இருக்கு அவன்கூட சஞ்சய் போயிருக்கான்.. வர டூ டேய்ஸ் ஆகும்..” என்று சொல்ல,

     “ஆமா பேபி என் அத்தை மாமா எப்படி இருப்பாங்க.. நீ அத்தை ஜாடையா இல்லை மாமா ஜாடையா..” என்று அதிமுக்கிய கேள்வியாக மாயா கேட்க, ‘இப்போ இது ரொம்ப முக்கியம்’ என்று நினைத்தவாறு தன் ஃபோனில் தன் பெற்றோரின் புகைப்படத்தை அவளிடம் காட்டியவாறு,
      “உன் அத்தை மாமா இல்லை.. என்னோட மம்மி டாடி.. சோ, உரிமையில்லாத விஷயத்தை உரிமை கொண்டாடுறதை நிறுத்து.. இட்ஸ் இர்ரிடேட்டிங்..” என்று ரோஹன் பல்லைகடிக்க, அவளோ எப்போதும் போல் அவன் திட்டுவதை எல்லாம் கண்டுக்காது ரோஹன் யாருடைய ஜாடை என்ற தீவிர ஆராய்ச்சியில் இருந்தாள்.

    “வாவ்வ் க்யூட் ஆ இருக்காங்க.. உன் பேரன்ட்ஸ் லவ் மேரேஜ் ஆ ரூஹி..” என்று மாயா ஆர்வமாக கேட்க,

  “இல்லை இல்லை என் தாத்தா பாட்டி அவங்க விருப்பத்தோட பார்த்து விசாரிச்சு குடும்பமா பேசி முடிவு பன்னி நடந்த அர்ரேன்ஜ் மேரேஜ்.. யாரையும் ஹர்ட் பன்னி நம்மள நாமளே கஷ்டப்படுத்தி நடக்குற லவ் மேரேஜ் இல்ல..” என்று ரோஹன் சொல்லவும்,

      “ஆமா, இல்லை இதை மட்டும் சொன்னா தான் என்னவாம்.. எதுக்கு எவ்வளவு லென்த்தா ஒரு ஸ்பீச்..” என்று சொல்லி மாயா சிரிக்க,

“அப்படியே அவ்வளவு லென்த்தா நா பேசி நீ அதை கேட்டுட்டாலும்..” என்று நொடிந்துக் கொண்டவன் ஏதோ ஒரு ஆர்வத்தில்,
     “ஆமா உன் அம்மா அப்பா எப்படி..” என்று கேட்டுவிட்டு தான் அவளுக்கு தந்தை இல்லை என்று மண்டைக்கு உரைக்க “சோரி..” என்று நாக்கை கடித்துக் கொண்டவன் மன்னிப்பு யாசிக்கும் விழிகளுடன் பார்க்க,

மெல்லிதாக புன்னகைத்தவள்,
    “எதுக்கு சோரி.. தெரிஞ்சிக்கிறது ஒன்னும் தப்பில்லையே.. அம்மா அப்பா கல்யாணம் பன்னிக்கல ஆனா என் அம்மா அப்பாவோட காதல் சின்னம் தான் நான்.. தட்ஸ் இட்..” என்று முடித்துக் கொள்ள, ரோஹன் தான் அதிர்ந்து போனான்.

ஆனாலும் மேலும் ஏதாவது கேட்டு அவளை காயப்படுத்த விரும்பாது அவன் அமைதியாக வர சட்டென,
     “ரூஹி செல்லகுட்டி நா உனக்கு கொடுத்த ச்செயின ஏன் நீ இப்போ எல்லாம் போட மாட்டேங்குற..” என்று கேட்க,

      “அதை நீதான் தந்தேன்னு எப்போ தெரிஞ்சதோ அப்போவே அதை கழட்டி தூக்கி போட்டுட்டேன்..” என்று ரோஹன் கடுப்பாக சொல்லவும் சிரித்தவள்,
     “ரூஹி உனகிட்ட உன் வீட்டுல பார்த்திருக்க பொண்ணு ஃபோட்டோ இருக்கா..” என்று கேட்டாள்.

முதலில் அதிர்ந்தவன் பின், “ஆமா இருக்கே..” என்று உற்சாகமாக சொல்லியவாறு எப்போவோ தனக்கு அனுப்பிய தான் இன்னும் டவுன்லோட் செய்யாத சைந்தவியின் புகைப்படத்தை மாயா பார்க்காதவாறு உடனே சேமித்தவன் இதழுக்குள் சிரிப்பை அடக்கியவாறு மாயாவிடம் காட்டி,
       “ரொம்ப அழகா இருக்கால்ல.. யூ க்னோ வட் இந்தியால டொப் டென் பிஸ்னஸ்மேன்ல ஒருத்தரான மிஸ்டர் சரணோட ஒரே பொண்ணு.. அழகு அறிவு அந்தஸ்த்து  எல்லாம் இருக்கு சோ க்யூட்ல..” என்று மாயாவை வெறுப்பேற்றவென பேசிய ரோஹனுக்கே தெரியும் அந்த பெண்ணின் அழகால் கூட மாயாவின் சாதாரண அழகை ஈடு செய்ய முடியாது என்று..

அவளோ சைந்தவியின் ஃபோட்டோவை உற்று பார்த்தவாறு,
    “யாஹ் ஷீ இஸ் கோர்ஜியஸ்.. வெளியூர் மாப்பிள்ளை நிறைய பேர் வரிசை கட்டி வருவாங்க..” என்று சொல்ல,

      “வாட் எதுக்கு ஃபோரீன் மாப்பிள்ளை.. ஏன் எனக்கு என்ன குறைச்சல்..” என்று ரோஹன் கேட்க,

அவனை நெருங்கியவள் அவன் கன்னத்தை கிள்ளி,
      “குறைச்சல் தான் பேபி அதான் இந்த மாயாவோட கண்ணு உன்மேல பட்டுறிச்சே.. சோ, வாய் கொழுப்ப அடக்கிட்டு சமத்தா இருந்தா இரண்டு பேருக்குமே நல்லது.. ஓகேவா செல்லகுட்டி..” என்று மாயா அழுத்தி சொல்ல அவள் பேச்சில் மிரட்டலையே உணர்ந்தான் ரோஹன்.

அவளை முறைத்தவன் “போகலாம்..” என்றுவிட்டு முன்னே நடக்க அவனும் அவள் தோளை குலுக்கிவிட்டு அவன் பின்னே சென்றாள்.

ஹோஸ்ட்டல் இருக்கும் தெருவுக்கு சற்று தள்ளி வண்டியை நிறுத்தியவன் மாயா இறங்கியதும் வண்டியை ஸ்டார்ட் செய்ய போக,
     “ரூஹி வெயிட்..” என்ற மாயாவின் குரலில், “இன்னும் என்னடி..” என்று அவளை சலிப்பாக பார்த்தான் ரோஹன்.

அவனருகே நெருங்கியவள் அவன் கண்களோடு தன் கண்ணை கலக்கவிட்டவாறு பைக்கின் கைப்பிடியின் மேலிருந்த அவன் கை மேல் தன் கையை வைத்து அழுத்தியவாறு,
      “நா ஒன்னு கேக்கவா..” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்க, அவனோ அவளையே இமைக்காது பார்த்திருந்தான்.

     “ஒன்னே ஒன்னு கேக்குறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லு ரூஹி.. உனக்கு நிஜமாவே என்னை பிடிக்கலையா பேபி என் மேல சின்ன ஃபீலிங்க்ஸ் கூட இதுவரைக்கும் வரலையா.. நீ சொன்ன மாதிரி தான் உன் பின்னாடியே நாய்குட்டி மாதிரி வர்றேன்.. சின்னதா கூட என் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் தோணல்லையா.. ப்ளீஸ் ரூஹி ஏன்னு மட்டும் சொல்லுடா..” என்று மாயா கண்களில் ஆர்வத்துடன் கிட்டதட்ட ரோஹனின் மூச்சுகாற்று படும் தூரத்தில் நின்று கேட்க,

எதுவும் பேசாது அவளையே பார்த்தவன் முகத்தை வேறுபுறம் திருப்பி ‘இல்லை’ என்ற ரீதியில் அழுத்தமாக தலையாட்ட உள்ளுக்குள் நொறுங்கி போனாலும் மெல்லிய சிரிப்பில் அதை மறைத்தவள் ஒரு அடி பின்னோக்கி நகர்ந்து ஏதோ யோசித்து சுற்றி முற்றி பார்த்து யாரும் அந்த பாதையில் இல்லாததை உறுதி செய்துவிட்டு மின்னல் வேகத்தில் ரோஹனை மேலும் நெருங்கி ஒரு கையால் அவன் தாடையை தன்னை நோக்கி திருப்பி மறுகையால் அவன் ஷர்ட் கோலரை இறுகப்பிடித்தவாறு அவனிதழில் தன்னிதழை அழுத்தமாக பதித்தாள்.

எதிர்ப்பார்க்காத மாயாவின் இந்த செயலில் அவளை தடுக்க கூட தோணாது ரோஹன் விழிகளை விரித்து உறைந்து இருக்க கண்ணை மூடி அவன் இதழில் அழுந்த முத்தமிட்டவள் அவன் சுயவுணர்வு பெற்று அவளை விலக்கும் முன்னே அவனை விட்டு மனமே இல்லாமல் விலகி நின்றுக் கொண்டாள்.

ரோஹன் வார்த்தை வராது அவளையே அதிர்ந்து நோக்க,
      “நீ இல்லைன்னு சொன்னா மட்டும் உன்னை விட்டுறுவேனா ரூஹி..” என்று ஒற்றை கண்ணை சிமிட்டி சொன்னவள் துள்ளிகுதித்து ஹோஸ்ட்டலை நோக்கி செல்ல வண்டியை செலுத்த கூட தோணாது அசையாது இருந்தான் ரோஹன்.

அன்று இரவு,

கீர்த்தி நன்றாக உறங்கிக் கொண்டிருக்க மாயா மட்டும் சிறிதும் தூக்கமின்றி ஜன்னல் வழியே நிலவை வெறித்துக் கொண்டிருந்தாள். எப்போதும் ரோஹனின் விடயத்தில் தெளிவாக இருப்பவள் இன்று என்னவோ முதன்முறை உள்ளுக்குள் உணர்ச்சியின் மத்தியில் போராடிக் கொண்டிருந்தாள்.

    ‘என்ன நடந்தாலும் என் ரூஹிய விட்டு போகமாட்டேன் ஆனா நா யாருன்னு தெரிஞ்சா நா அவன ஏமாத்திட்டேன்னு அவன் நினைக்க மாட்டானா.. என்னோட சேர்த்து என் காதலும் பொய்யாகிறுமே.. இல்லை இல்லை.. என் ரூஹி எனக்கு வேணும்.. அதுக்கு சில உண்மைகள் அவனுக்கு தெரியனும்னா கூட பரவாயில்லை.. ஆனா அவன் என்னை ஏத்துப்பானா..  ஏதாச்சும் யோசி மாயா..” என்று உள்ளுக்குள் ஒரு போராட்டத்தை நடத்தியவள் இறுதியில் ஒரு முடிவு எடுத்த பின்னரே நிம்மதியானாள்.

ஆனாலும் ஒருவித படபடப்பு அவள் மனதில் இருக்கத்தான் செய்தது. இங்கு இவள் தன்னவனை நினைத்து குழப்பத்தில் இருக்க அங்கு இவளின் மனப் போராட்டத்திற்கு காரணமான நம் நாயகனோ தன் அறை சுவற்றில் ஃபோனை தூக்கி எறிந்து உச்சட்ட கோபத்தில் “மாயா..” என்று வாய்விட்டே கத்தி கொத்தித்துக் கொண்டிருந்தான்.

அடுத்தநாள்,

  கீர்த்தி அப்போது தான் மெதுவாக கண்விழித்து பார்க்க அவளுக்கு எதிரே மாயாவோ கல்லூரிக்கு தயாராகி நெற்றியை நீவிவிட்டவாறு அமர்ந்திருக்க கீர்த்திக்கோ பதற்றம் தொற்றிக் கொண்டது.

    “என்னாச்சு ஜிலேபி ஏன் ஒரு மாதிரி இருக்க..” என்று எழுந்தவாறு கீர்த்தி கேட்க, நிமிர்ந்து பார்த்தவள்,
     “ச்சே ஒன்னுஇல்ல போன்டா.. சீக்கிரம் ரெடி ஆகு இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு..” என்றவள் அறையிலிருந்து வெளியேற கீர்த்தியோ அவளை புரியாது பார்த்தாள்.

குளித்துத தயாராகி கீர்த்தி வரவும் கல்லூரிக்கு செல்லும் வரை அதிசயத்தின் அதிசயமாக மாயாவோ எதுவும் பேசாது கீர்த்தியின் தோளில் சாய்ந்தவாறு அமைதியாகவே வர கீர்த்திக்கோ ஒன்றுமே புரியவில்லை. எப்படியும் அவளாக சொல்லும் வரை அவளிடமிருந்து ஒரு வார்த்தை கூட வாங்க முடியாது என்பதை புரிந்து கொண்டவளுக்கும் ஒருபக்கம் அவள் மேல் கோபம் வரத் தான் செய்தது.

    “போன்டா நீ க்ளாசுக்கு போ நா ரூஹிய பார்த்துட்டு வரேன்.” என்று மாயா அவள் பதிலை கூட எதிர்ப்பார்க்காது அவள் பாட்டுக்கு செல்ல கீர்த்தியோ போகும் அவளையே புருவத்தை நெறித்து பார்த்தாள்.

தன்னவனை தேடி சென்றவள் அவன் பாஸ்கெட்போல் கோர்ட்டில் தான் எப்படியும் இருப்பான் என்று தெரிந்தே அங்கு செல்ல அவள் நினைத்தது போல அங்கு தான் பென்ச்சில் முட்டியில் கைகளை கோர்த்து தலையை தாங்கியவாறு ரோஹன் இருக்க அவனை பார்த்தவள் ‘உஃப்ப்’ என்று பெரிய மூச்சுக்களை விட்டு தன்னை நிலைப்படுத்தியவாறு அவளை நெருங்கினாள். முதன்முறை தன் இதயம் துடிக்கும் சத்தத்தை தானே கேட்பது போல் உணர்ந்தாள் மாயா.

காதல்போதை?
—————————————————————–

    நெக்ஸ் எபி மாயா ரோஹன விட்டு போயிறுவா.. அவங்கள பிரிக்கிறேன்னு என்னை திட்டிறாதீங்க..  எனக்கு வேறவழி தெரியல கோபால்..?

-ZAKI?

   
   

Leave a Reply

error: Content is protected !!