காதல்போதை 32?

காதல்போதை 32?

ரோஹன் அழவும், அவனை ஆறுதலாக அணைத்த சஞ்சய், “ரோக்கி, நீ தங்கச்சிமாவ இவ்வளவு காதலிச்சிருப்பன்னு, எங்களுக்கு சத்தியமா தெரியாதுடா. இப்போ ரொம்ப ஹேப்பியா இருக்கு, ஆனா…” என்று தயக்கமாக நிறுத்தினான்.

“என்னடா ஆனா! என் ரோக்கியே காதல ஒத்துக்கிட்டான்ல, இனிமே மாயாவுக்கு நினைவு திரும்புதோ, இல்லையோ என் பேபிய தூக்கிட்டு வந்தாவது என் ரோக்கிக்கு கட்டி வைப்பேன்” என்ற பாபி, பின் ஏதோ யோசித்து,”ரோக்கி,  அந்த சர்வேந்திரன் யாருன்னு விசாரிச்சியா? அவனுக்குள்ள ஏதோ தப்பு இருக்கு” என்று தீவிரமாக சொன்னான்.

பாபி கேட்டதும், ரோஹனின் முகம் கோபத்தில் சிவக்க, “என் மாயாவுக்கு அப்பன்னு சொல்லிக்கிட்டு என் முன்னாடி நிக்கிறான், அவனை விசாரிக்காம இருப்பேனா!?  முதல்தடவை அவளுக்கு வந்த ஆபத்தை அலட்சியமா விட்டுட்டேன். அதே தப்பை மறுபடியும் பண்ணா, என்னை விட முட்டாள் யாருமே இல்லை. அன்னைக்கு டின்னர் மீடிங்ல என்ன நடந்துச்சுன்னு தெரியுமா? ” என்று கேட்டவாறு தன் லேப்டாப்பை திறந்து அதில் ஒரு காணொளியை ரோஹன் காட்ட , அதைப் பார்த்த பாபியும் சஞ்சய்யும் விழிவிரித்தனர்.

அன்று, சர்வேந்திரன் ஏதோ படபடப்பில் கழிவறைக்கு செல்ல, அதை கவனித்த ரோஹனும் தனக்கு அழைப்பு வருவது போல் பாவனை செய்து, அவர் பின்னாலேயே சென்றான்.

உள்ளே நுழைந்த சர்வேந்திரன், “ஹாய் மிஸ்டர்.சர்வா” என்று பின்னால் கேட்ட குரலில் சட்டென்று நின்று திரும்பி பார்த்தார். எதிரே ரோஹனோ, பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு, ஏளன சிரிப்புடன் அவரையே கூர்மையாக பார்த்த வண்ணம் நின்றிருந்தான்.

ரோஹனுடைய பார்வையில் சர்வேந்திரனுக்கு மேலும் பதட்டம் தொற்றிக் கொண்டாலும், அதை முகத்தில் காட்டாது விரைப்பாக அவர் இருக்க, வாய்விட்டு சிரித்த ரோஹன், “நாங்க ஜஸ்ட் உங்களுக்கு செர்வீஸ் பண்ண போற ஒரு கம்பனி, எங்களை பார்த்து பயந்து ஓடி வர வேண்டிய அவசியம் இல்லையே மிஸ்டர்.சர்வா, ஒருவேள நாங்க மிஸ்.மாயா மஹேஷ்வரிக்கிட்ட அவளோட பாஸ்ட் லைஃப் ஃப்ரென்ட்ஸ்ஸா பேசிறுவோம்னு பயப்படுறீங்களா?” என்று கேலியாக கேட்டான்.

அவனை உக்கிரமாக பார்த்தவர்,பின் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், “ஓஹோ! அப்போ உனக்கு எல்லாமே தெரியும், ரைட்!? தட்ஸ் ஓகே, அதுக்காக உன்னை மாதிரி புழுப்பூச்சிய பார்த்து பயப்படுவேன்னு நினைக்கிறியா? டூ யூ க்னோ, வூ அம் ஐ?” என்று கோபமாக கேட்க,

‘ஹாஹாஹா’ என்று கத்தி சிரித்த ரோஹன், “ஷெர்வி கோஸ்மெடிக்ஸ்ஸோட எம்.டி மிஸ்டர்.சர்வேந்திரன், எப்போ உன்னை மாயாவோட அப்பாவா பார்த்தேனோ அப்போவே நீ யாரு,  என்னன்னு முழுசா தெரிஞ்சிக்கிட்டேன். மிஸ்.மஹேஷ்வரிக்கும் உனக்கும் இருந்த தப்பான வதந்தியான உறவை மாயாகிட்ட நிஜம் போல சொல்லி, உரிமை இல்லாத பொருளுக்கு உரிமை கொண்டாட ஆசைப்படுற, ரைட்?” என்று காட்டமாக கேட்டான்.

“வாவ்!” என்று பெருமிதமாக சொன்ன சர்வேந்திரன், “இப்போ என்ன பண்ண போற? இதைப்போய் மாயாக்கிட்ட சொல்ல போறியா? அவளும் இதை நம்புவான்னு நினைக்கிற!? ஓ கோட்! அவ என்னை அவளோட அப்பாவா நினைக்கிறா, அப்படியே நீ போய் சொன்னாலும், அடுத்தநிமிஷம் உன் மாயாவோட உயிரை எடுக்கவும் தயங்க மாட்டேன் மிஸ்டர்.ரூஹி” என்று அழுத்தி சொன்னவர், “மாயா அன்னைக்கு ஆக்சிடன்ட் ஆனப்போ, மயக்கத்துல இந்த பெயரை மட்டும் தான் சொல்லிக்கிட்டு இருந்தா, வட் அ லவ்..! ஹான்!” என்று பொய்யான ஆச்சரியத்துடன் பேசியவரையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹன்.

“யூ க்னோ வட் ரோஹன்? அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஆக்சிடன்ட் கூட நான் ப்ளான் பண்ணது தான். ஆனா என்ன, ஜஸ்ட் மிஸ் ஆகிட்டு” என்று சர்வேந்திரன் சொல்லவும், ரோஹனோ அதிர்ச்சியாகாமல் அவரை கேள்வியாக தான் பார்த்தான்.

அவன் பார்வையை உணர்ந்த சர்வேந்திரன், “ஐ க்னோ, நீ என்ன நினைக்கிறேன்னு. என்னடா கொல்ல ப்ளாள் பண்ணதா சொல்றானே, ஆனா இப்போ எதுவும் பண்ணாம அவ அப்பான்னு வேஷம் போட்டுகிட்டு இருக்கானேன்னு தானே பார்க்குற, ச்சு… ச்சு… ச்சு…  நான் என்ன பண்ண!? மிஸ்டர். ஆதி நாராயணணோட உயில் அப்படி.” என்று சொல்ல, ரோஹனோ யோசனையில் புருவத்தை நெறித்தான்.

“மாயா இறந்தா, கம்பனியோட சேர்த்து அவளோட மொத்த சொத்தும் ஓர்ஃபனேஜ்க்கு போயிறும். அதுக்கு அவ இறந்த செய்தி யாருக்குமே தெரிய கூடாது. ஐராவோட வருங்கால அட்மினிஸ்டர் மாயமானதா இருக்கனும். என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தப்பொ தான், கம்பனி மேனேஜ்மென்ட் அ என் பொறுப்புக்கு கொடுத்துட்டு, அவ பெங்ளூர் வந்துட்டா. இந்த ஊர்ல வச்சே அவள போடலாம், தொலைஞ்சவ தொலைஞ்சவளாவே இருக்கட்டும்னு நான் ப்ளான் போட்டா, அதுக்கு நடுவுல நீயும் உன் ஃப்ரென்ட்ஸ்ஸும்.

ச்சே..! அப்போ தான் மாயாவே திடீர்னு இட்டாலிக்கு வர போறதா சொன்னா. அவ வந்தா இப்போ நான் அனுபவிக்கிறது மொத்தமும் போயிறும்னு,  இட்டாலில நுழைஞ்சதுமே அவள கொல்ல ப்ளான் போட்டேன். ப்ளான் பண்ண மாதிரி ஆக்சிடன்ட் பண்ணேன், ஆனா அவ சாகல, மொத்தத்தையும் மறந்துட்டா.  அதை வச்சே ஐரா கம்பனீஸ் அ என் பெயருக்கு மாத்தலாம்னு நினைச்சேன். ஆனா, நான் எதிர்ப்பார்க்காத ஒன்னு,அவ திரும்ப பெங்ளூர் வந்ததும், புது ப்ரான்ச்காக உங்க கம்பனிய தெரிவு செஞ்சதும். வட் அ கோஇன்சிடன்ட்…!” என்று சொல்லி சிரிக்க, ரோஹனோ கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தினான்.

“மிஸ்.மஹேஷ்வரி உன்னை ரொம்ப நம்பினாங்க. அவங்களுக்கு நீ பண்றது துரோகம் இல்லையா?” என்று ரோஹன் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான்.

“என்ன! நான் துரோகம் பண்ணேனா? அவ தான் என்னை ஏமாத்தினா, அவள நானும் காதலிச்சேன். ஆனா, அவ திடீர்னு வயித்துல குழந்தைய சுமந்துகிட்டு வந்து நின்னா. அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்!? என்ட், ஐரா கம்பனீஸ் உலகத்துல அசைக்க முடியாத ஒரு இடத்துல இருக்கு, அது எனக்கு சொந்தமாகனும்னு நினைச்சேன். ஆனா, அதையும் உயில்னு பேருல பிரச்சினையா கொண்டு வந்து ச்சே!

ஷெர்வியோட ப்ரோடெக்ட்ஸ் ஐரா ப்ரோடெக்ஸ்ஸ பீட் பண்ண முடியாதுன்னு, நிறைய பேர் என் காதுல விழ பேசியிருக்காங்க. அப்போ எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா? அதான் அதை அடைய என்ன வேணாலும் பண்ண தயாரா இருக்கேன்” சர்வேந்திரன் பேசி முடிக்கவில்லை, ரோஹனின் கை தட்டலில் பேச்சை நிறுத்தியவர், அவனை புரியாது பார்த்தார்.

ரோஹன் தன் கோர்ட் முன் பாக்கெட்டில் சொருகியிருந்த பேனையை எடுத்தவன், “ஓ மை கோட்! இந்த கேமரா பென் இப்போ நீ பேசின மொத்தத்தையும் ரெகோர்ட் பண்ணியிருக்குமே! டெக்னோலொஜி ரொம்ப வேகமா வளர்ந்துட்டு, ஆடியோல இருந்தா நம்ப மாட்டிக்கிறாங்கன்னு இப்போ விஷ்ஷுவலா(Visual) ஒரு எவிடென்ஸ்.

உன்னை சந்திக்க ஒவ்வொரு நொடியும் காத்துகிட்டு இருந்தேன். இந்த மீடிங்க்கு நீயும் வருவேன்னு என் செல்லக்குட்டி சொன்னப்போவே, என் ப்ளான் அ போட்டேன். பட், டோன்ட் வொர்ரி மிஸ்டர்.சர்வா, நான் இதை மாயாக்கிட்ட காட்ட போறதில்லை. என் அம்முவே உன்னை எதிர்த்து நிப்பா, அவளுக்கு அரணா நான் இருப்பேன். அதுவரைக்கும் யூ என்ஜோய் யுவர் டேய்ஸ், வில் சீ…” என்றுவிட்டு ரோஹன் செல்ல, அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார் சர்வேந்திரன்.

சர்வேந்திரன் பேசிய மொத்தத்தையும் காணொளியில் பார்த்த சஞ்சய், “டேய், இதே போதும், அந்த சர்வேந்திரனோட உண்மையான முகத்தை வெளில கொண்டு வர” என்று உற்சாகமாக சொல்ல,  ‘இல்லை’ எனும் விதமாக இருபுறமும் தலையாட்டிய ரோஹன், “இல்லைடா, அந்த சர்வேந்திரன் இதுக்கும் மேல ஏதோ தப்பு பண்றான். அவனுக்குள்ளேயும் ஏதோ சீக்ரெட் இருக்கு. அது ஐரா சம்பந்தப்பட்டதா கூட இருக்கலாம். நாம ஏதாவது பண்ண போய், அந்த மாயாவுக்கும் ஐரா கம்பனீஸ்ஸோட பெயருக்கும் ஆபத்தா முடிஞ்சிறுமோன்னு பயமா இருக்கு, அதான்…” என்று யோசனையாக சொன்னான்.

“ஆனா, அதுக்குள்ள அந்த சர்வா, மாயாவ ஏதாச்சும் பண்ணிட்டா…? நமக்கு தான்டா இழப்பு” என்று பாபி பதறியபடி சொன்னான்.

“நோவேய், அவனால அவள எதுவுமே பண்ண முடியாது. மாயா யாருன்னு இந்த உலகத்துக்கே தெரியும். அவ இறந்தா, அது சர்வேந்திரனுக்கு தான் நஷ்டம். மாயாவோட மொத்த சொத்தும் அவனுக்கு சொந்தமாகனும்னா, அதுக்கு மாயா உயிரோட இருக்கனும். மாயா யாருன்னு உலகத்துக்கு தெரியுறதுக்கு முன்னாடி அவள கொல்ல ட்ரை பண்ணான், இப்போ, அவ மேல சின்ன கீறல் விழுந்தாலும் அதை ஃப்ளேஷ் நியூஸ்ஸா கூட பேசுறதுக்கு ச்சேனல்ஸ் இருக்கு. அதனால மாயா ஆல்மோஸ்ட் சேஃப். என்ட், என் அம்முக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன்.”  ரோஹனின் பேச்சில் இருந்த உறுதியில் இருவருக்குமே நிம்மதியாக இருந்தது.

“ஹப்பாடா! எப்படியோ நீ லவ் பண்றதை இப்போவாச்சும் சொன்னியே, எப்படிடா எந்த ரியாக்ஷனும் முகத்துல காட்டாம உன்னால இருக்க முடிஞ்சது!? இப்படி ஒரு சந்தர்ப்பத்துல தான் உன் லவ்வ நீ வெளிப்படுத்துவன்னு தெரிஞ்சிருந்தா, நான் அப்போவே மாயாக்கு ப்ரோபோஸ் பண்ற மாதிரி ஒரு நாடகத்தை போட்டிருப்பேனே…” என்று பாபி சிரித்தவாறு சொல்ல,

ரோஹனின் காது மடலை திருகிய சஞ்சய், “லவ் பண்ற சரி, அப்றம் ஏன்டா என் தங்கச்சிமாவ முறைச்சி பார்த்துகிட்டே, திட்டிகிட்டே இருந்த? அதுவும் அன்னைக்கு அவ ரூஹின்னு உன்னை கூப்பிட்டதும், தாத்தூம்னு குதிச்சு என்ன பேச்செல்லாம் பேசின” என்று முறைப்புடன் கேட்டான்.

“டேய்! டேய்! டேய்! விடுடா, வலிக்குது” என்று அவன் பிடியிலிருந்து துள்ளி விலகிய ரோஹன், பின் புன்னகைத்தவாறு, “என் அம்மு என்னை பார்க்குறப்போ அவ கண்ணுல எனக்கான காதல் தெரியும்டா, அவளோட ஒவ்வொரு எண்ணங்கள்ளையும் நான் மட்டும் தான் இருப்பேன், நான் திட்டுறதை கூட ஏதோ அவளுக்கு என் கூட பேச கிடைச்ச பாக்கியம்னு லூசுத்தனமா நினைச்சிப்பா. ஆனா இப்போ, என் முன்னாடி இருக்குறது ஐரா கம்பனீஸ் எம்.டி மிஸ்.மாயா மஹேஷ்வரி, இது என் அம்மு இல்லைடா” என்று பேசியவனை, ‘லூசா இவன்’ எனற ரீதியில் தான் ஒரு பார்வை பார்த்தனர் இருவரும்.

“நான் பேசுறது உங்களுக்கு கிறுக்குத்தனமா இருக்கலாம். ஆனா, இவளால என் அம்முவ எப்போவும் ரீப்ளேஸ் பண்ண முடியாது. என்ட், என் அம்முவ தவிர வேற யாரும் என்னை ரூஹின்னு கூப்பிட, நான் அல்லோவ் பண்ண மாட்டேன். அதான் அன்னைக்கு கோபத்துல கத்திட்டேன்.

ஆனா இன்னைக்கு, என் அம்மு இன்னும் எனக்காக காத்திருக்கான்னு புரிஞ்சிக்கிட்டேன்டா, நீ நோட்டீஸ் பண்ணியா? பார்ட்டில அவளோட கண்ணு என்னை தான் தேடிச்சு, என்னை பார்த்ததும் அவ கண்ணுல ஏதோ தெரிஞ்சது, அதுக்கு மேல அங்க இருக்க முடியாம வந்துட்டேன். பட், அப்போவும் சரி, இப்போவும் சரி என் பேச்சை மட்டும் மதிக்கிறதா இல்லை என் டெவில்” என்று சிரித்துக் கொண்டான் ரோஹன்.

வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்ட பாபி, “போடா டேய்! இதுவரைக்கும் மாயாவ தான் புரிஞ்சிக்க முடியாதுன்னு நினைச்சேன். ஆனா, நிஜமாவே புரிஞ்சிக்க முடியாத ரெயார் பீஸ் நீதான்டா” என்று சலித்துக் கொள்ள,

“அப்போ, நீ மாயா மேல இருக்குற காதலை இப்போ சொல்ல போறதில்லை. ரைட்?” என்று கேட்டான் சஞ்சய்.

தன் கழுத்திலிருந்த ச்யினை மென்மையாக வருடியவன், “இந்த மாயா மஹேஷ்வரிக்குள்ள தான் என் அம்மு இருக்கா, மாயா எனக்கு சொந்தமானவ, அவள நான் யாருக்கும் விட்டுத்தர தயாரா இல்லை. என்ட், அந்த லியோ அவனும் சர்வேந்திரனோட ஆள் தான். இனிமே, மாயாவே தடுத்தாலும் அவள விட்டு நான் விலகுறதா இல்லை. சோ, இனிமே இந்த ரோஹன், மாயாவோட ரூஹியா முழுநேர வேலையா பார்க்க போறான்” என்றுவிட்டு ரோஹன் கட்டிலில் விழ,

“இவன் எந்த மாதிரியான விசித்திர ஜந்துடா?” என்று வாய்விட்டே கேட்டுவிட்டான் பாபி.

அடுத்தநாள் காலை,

சஞ்சய்யின் மேல் மல்லாக்காக உறங்கிக் கொண்டிருந்த பாபி, முழிப்பு தட்ட கண்களை கசக்கிய வண்ணம் எழுந்தவன், கையை உயர்த்தி சோம்பலை முறித்தவாறு எதிரே பார்க்க, தான் பார்த்ததில் ஆச்சரியப்பட்டு தான் போனான்.

ஆனாலும் நம்ப முடியாது மீண்டும் கண்களை கசக்கி விழிவிரித்து பார்த்துவிட்டு, பக்கத்தில் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்த சஞ்சய்யை, “டேய்! சஞ்சு!” என்று தட்டி எழுப்ப, அடித்து பிடித்து எழுந்தமர்ந்த சஞ்சய்யும், தான் எதிரில் பார்த்த காட்சியில் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.

இருவரின் இதழ்களும் தானாக, “வாவ்!” என்று முணுமுணுக்க, அவர்கள் எதிரே நேர்த்தியாக வெட்டப்பட்ட சிகை, தாடி, மீசையில் மாயாவின் ரூஹியாகவே குறுஞ்சிரிப்புடன் நின்றிருந்தான் ரோஹன்.

“அப்படியே கொலேஜ்ல பார்த்த மாதிரியே இருக்க ரோக்கி! செம்மடா… நீ நடத்து, நடத்து” என்று சஞ்சய் குதூகலிக்க, பாபியோ இருபுருவங்களையும் உயர்த்தி அவனை சிரிப்புடன் பார்த்திருந்தவன் எதுவும் பேசாது குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

தன்னை கண்ணாடியில் பார்த்து மீண்டும் திருப்திபட்ட ரோஹன், தன் தொலைப்பேசியிலிருந்த மாயாவின் புகைப்படத்தையே சிறிதுநேரம் பார்த்துவிட்டு, முதல்முறை தன்னவளின் எண்ணிற்கு அழைத்தான்.

அங்கு ஹோட்டல் அறையில் மாயாவோ, கட்டிலில் சாய்ந்தமர்ந்தவாறு, யோசனையாக நேற்றிரவு லியோ அணிவித்த மோதிரத்தையே உதட்டை பிதுக்கிய வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

திடீரென வந்த அழைப்பில் திரையில் தெரிந்த எண்ணை பார்த்து, புருவத்தை நெறித்தவள், அழைப்பு ஏற்று எதுவும் பேசாது அமைதியாக இருக்க, மறுமுனையில் ரோஹனோ, “மிஸ்.மஹேஷ்வரிக்கு ஆல்ரெடி என் நம்பர் தெரியும் போல…?” என்று கேலியாக கேட்க, திடுக்கிட்டாள் மாயா.

“அது… அது வந்து…” என்று என்ன சொல்வதென்று தெரியாமல் மாயா தடுமாற, “வாவ்! மாயா தடுமாற்றத்தை இப்போ தான் முதல்தடவை பார்க்கிறேன். பை த பை இப்போ என்ன பண்ற?” என்று சாதாரணமாக ரோஹன் கேட்க, சட்டென காதிலிருந்து தொலைப்பேசியை எடுத்து, ‘நிஜமாவே அவன் தானா’ என்று உறுதி செய்ய, அவன் பெயரை கூர்ந்து பார்த்தாள் மாயா.

அவனின் சாதாரண பேச்சில் அதிர்ந்தவள், எதுவும் பேசாது அமைதியாக இருக்க, அவள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருப்பானா அவள் கள்வன்!

மெல்லியதாக புன்னகைத்த ரோஹன், “எனக்கு உன்னை பார்க்கனும். சோ, ஓஃபீஸ்க்கு வந்துரு, வெளில எங்கேயாச்சும் போகலாம். உன் கார்ட்ஸ் பத்தி யோசிக்காத, அவங்கள நான் சமாளிச்சிக்கிறேன்” என்று அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக, “வாட்!?” என்று அதிர்ந்தேவிட்டாள் மாயா.

அன்று மதியம்,

ஆர்.டீ.எஸ்.கன்ஸ்ட்ரக்ஷன்,

கம்பனியில் முக்கிய விருந்தினர்கள் செல்வதெற்கென அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கியில் ஏறிய மாயாவை முறைத்த ஜெனி, “திஸ் இஸ் டூ மச் மாயா, அடிக்கடி நீ இங்க வர்றதை மீடியா ஆல்ரெடி கவனிச்சி உன்னையும், இங்க இருக்க மூனு டிரெக்டர்ஸ்ஸையும் சம்மந்தப்படுத்தி பேசுறாங்க. அதுவும் உனக்கு இது சேஃப் கிடையாது. வை டோன்ட் யூ அன்டர்ஸ்டேன்ட்?”  என்று திட்டிக் கொண்டிருக்கும் போதே, மின்தூக்கியின் மூடப்பட்ட கதவுகள் திறக்கப்பட்டன.

இத்தனை நேரம் ஜெனி பேசியதை யோசித்தவாறு கேட்டுக் கொண்டிருந்த மாயா, தனக்காகவே காத்திருப்பது போல் முன்னால் நின்றிருந்தவனின் தோற்றத்தை விழிவிரித்து பார்த்தாள். 

ஏதோ இனம்புரியாத உணர்வு அவளை வாட்ட, ரோஹனையே அவள் விழிகள் அளவிட்டுக் கொண்டிருந்தன. ரோஹனோ புன்னகை முகமாக மாயாவை வரவேற்க, அதில் மாயாவுக்கு ஆச்சரியமோ…? இல்லையோ…?, ஜெனி அவனை சந்தேகமாக பார்த்தாள்.

மின்தூக்கியிலிருந்து மாயாவும் ஜெனியும் வெளியேற, கதவுகள் மூடப்படுவதற்கு முன்னே மாயாவின் கையை பிடித்து மின்தூக்கியிற்குள் இழுத்தவன், ஜெனியிடம், “வீ வில் பெக் சூன்” என்றுவிட்டு கதவை மூடினான்.

இதில் ஜெனியோ, “மாயாஆஆ…” என்று கோபத்தில் கத்த, அதை புரிந்து கொள்ளும் நிலையிலா அவள் இருந்தாள்! அவளுக்கு தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியே…!

தன்னை சுதாகரித்த மாயா, “வட் த ஹெல் யூ திங் ஆஃப் யூவர் செல்ஃப்? ஹான்…! உங்க இஷ்டத்துக்கு என்னை வர சொல்றீங்க, இப்போ என்னடான்னா என் பர்மிஷன் இல்லாம என்னை எங்கேயோ கூட்டிட்டு போறீங்க. பதில் சொல்லுங்க மிஸ்டர்.ரோஹன்” என்று கத்த,

“சேம்  குவெஷ்ஷன்(question) ஹியர், நான்தான் வர சொன்னேன்னா, என் பேச்சை கேட்டு எதுக்கு வந்தீங்க மிஸ்.மாயா மஹேஷ்வரி?”  என்று ரோஹனும் சரிக்கு சமமாக கேட்க, “அது… அது வந்து…” என்று திணறியவளுக்கு ‘இவன் பேச்சை கேட்டு, ஜெனியின் திட்டுக்களையும் மீறி ஏன் இங்கு வந்தோம்’ என்று சுத்தமாக தெரியவில்லை.

காதல்போதை?
——————————————————————

-ZAKI?
 
 
  

Leave a Reply

error: Content is protected !!