காதல்போதை 33?
காதல்போதை 33?
ரோஹன், மாயாவை இடக்காக கேள்வி கேட்டதில் திணறியவள், “அது வந்து…. ஆங்… இப்போ நீங்க கட்டிக்கிட்டு இருக்குறது எங்க கம்பனி பில்டிங். சோ, ஏதாச்சும் பிரச்சினையோன்னு நினைச்சிட்டேன்” என்று மாயா தடுமாற்றத்துடன் சொல்லி முடிக்க,
“டோன்ட் வொர்ரி மிஸ்.மாயா மஹேஷ்வரி, அப்படியே ஏதாச்சும் பிரச்சினைன்னா, எங்களுக்கு ப்ரோஜெக்ட் கொடுத்த கம்பனிய நாங்க உதவிக்கு கூப்பிட மாட்டோம். எங்க செர்வீஸ் உங்களுக்கு ரொம்ப செடிஸ்ஃபையா தான் இருக்கும்” என்று ரோஹன் சொல்லி முடிக்கவும், அவர்கள் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த கடைசி தளத்திற்கு வரவும் சரியாக இருந்தது.
உரிமையாக அவள் கையை பிடித்து தன் காரின் அருகில் இழுத்துச் சென்றவன், கார் கதவை திறந்து அமருமாறு கண்களால் சைகை காட்ட, மாயாவோ அவனை முறைத்தவாறு ஏறிக் கொண்டாள்.
தானும் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன், அவளிடம் முகத்தை மறைக்குமளவிற்கான ஒரு கண்ணாடியையும், தொப்பியையும் கொடுத்து, “உன் கார்ட்ஸ் ஆஃபீஸ் முன்னாடி நீ நிறுத்தியிருக்க உன் கார் பக்கத்துல இருக்காங்க. என்ட், வெளில இருந்து உள்ள பார்க்க முடியாது. இறங்கும் போது இதை போட்டுக்க, யாருக்கும் உன்னை அடையாளம் தெரியாது. கொட் இட்?” என்றவாறு வண்டியை ரோஹன் இயக்க,
“அய்யோ! இங்க என்ன தான் நடக்குது? நான் எதுக்கு இந்த டெர்ரர் சொல்றதெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கேன்! நேத்து தான் எனக்கு என்கேஜ்மென்ட் ஆச்சு. ஆனா, இன்னைக்கு இவன் கூட அவுட்டிங். மொதல்ல நான் எதுக்கு இங்க வந்தேன்? ஒருவேள நம்மள வசியம் செய்திருப்பானோ…?” என்று வாய்விட்டே புலம்பினாள் மாயா.
அதில் ரோஹன் வாய்விட்டு சிரிக்க, அதை அதிசயமாக பார்த்தவள், அவன் சிரிப்பை தன்னை மீறி ரசித்தாள் என்று தான் சொல்ல வேண்டும். ‘இவருக்கு இவ்வளவு அழகா சிரிக்க தெரியுமா?!’ என்று நினைத்தவாறு மாயா அவனையே இமைக்காது பார்த்திருந்தாள்.
தன்னவளின் பார்வையை உணர்ந்தவன், அவள் புறம் பார்வையை திருப்பாது வண்டியை ஓட்டியவாறே, “எவ்வளவு நேரம் என்னையே இப்படி குறுகுறுன்னு பார்த்துகிட்டு இருக்க போற?” என்று கேட்க,
சட்டென பார்வை திருப்பிக் கொண்ட மாயா, “இப்போ என்னை எங்க கூட்டிட்டு போறீங்க?” என்று கேட்க, அவனிடமிருந்து பதில் வந்தால் தானே!
மாயாவும் தொடர்ந்து கேள்வி கேட்டு ஒருகட்டத்தில் முடியாமல் தனது தொலைப்பேசியை தேட, அப்போது தான் அதை அலைஸ்ஸிடம் விட்டு வந்ததே அவளுக்கு நியாபகம் வந்தது. தன் மடத்தனத்தை எண்ணி வெளிப்படையாகவே அவள் தலையிலடித்துக் கொள்ள, கடற்கரையில் தன் வண்டியை நிறுத்தினான் ரோஹன்.
தன் இருக்கையிலிருந்துக் கொண்டே சற்று தலையை நிமிர்த்தியவள், நுரையுடன் துள்ளி குதித்து ஓடி வரும் அலைகளை பார்த்ததும் பரவசமாகிப் போனாள்.
கண்கள் மின்ன, தன்னிலை மறந்து உற்சாகமாக மாயா வெளியே செல்ல கதவை திறக்க போக, அவள் கையை பிடித்து இழுத்தவன், “மாயா” என்று கண்டிப்புடன் அழைத்தவாறு கண்ணாடியையும், தொப்பியையும் காட்டினான்.
மீண்டும் தன் நெற்றியில் அடித்துக் கொண்டவள், அந்த கண்ணாடியையும் தொப்பியையும் அணிந்துக்கொண்டு அலைகளை நோக்கி வேகமாக ஓடினாள்.
ரோஹனும் அவளையே ரசித்தவாறு அவளருகில் வர, “தேங்க்ஸ் ரோஹன், லைஃப்ல ரொம்ப நாளைக்கு அப்றம் இவ்வளவு ஹேப்பியா இருக்கேன். நானே ஆசைப்பட்டா கூட சுதந்திரமே இல்லாத வாழ்க்கை. இப்போ யூ ச்சேன்ஜ் இட் மேன்” என்று சந்தோஷத்தில் கூச்சலிட,
சிரிப்புடன் அவளை பார்த்த ரோஹன், “என் பாதத்துல ஏறிக்க மாயா” என்று சொல்லவும், அவளோ, “வாட்?” என்று புரியாமல் கேட்டாள்.
அவளை நெருங்கியவன் சுற்றி முற்றி ஒருமுறை பார்த்து உறுதி செய்துவிட்டு, அவள் முகத்திலிருந்த கண்ணாடியை மட்டும் கழட்டி, அவள் விழிகளுக்குள் தன் விழிகளை கலக்க விட்டவாறு, அவள் இடையை வளைத்து சிறைப்பிடிக்க, முதலில் அதிர்ந்தவள் தானாகவே அவன் பாதங்களுக்கு மேல் தன் பாதங்களை வைத்து, அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
அவள் இடையை தன் இரு வலிய கரத்தாலும் வளைத்து பிடித்தவன், அன்று மாயாவின் வற்புறுத்தலில் செய்ததை, இன்று காதலோடு செய்தான். முதல் அடியை ரோஹன் எடுத்து வைக்க, மாயாவின் இதழ்களோ தானாகவே விரிந்துக் கொண்டது.
அவனை குறும்பாக பார்த்த மாயா, “மிஸ்டர்.ரோஹன், என்னை பார்த்தா குழந்தை மாதிரி தெரியுதா என்ன?” என்று சிரித்தவாறு கேட்க,
அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்தவாறு, “பார்த்தா அப்படி தெரியலை…” என்று ஒவ்வொரு அடியாக வைத்தவாறு அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்னான்.
அவனின் குறும்பு பேச்சில் அவனை முறைத்தவள், “எனக்கு நேத்து ராத்திரி தான் என்கேஜ்மென்ட் ஆச்சு, என் பாய்ஃப்ரென்ட்க்கு தெரிஞ்சா என்னாகுறது?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க,
ஒருநொடி முகம் இறுகியவன், அவளை அழுத்தமாக பார்த்தவாறு, “ஐ ஜஸ்ட் டோன்ட் க்யார்” என்று அவளுக்கு கண்ணாடியை போட்டுவிட்டு அலைகள் புறம் திரும்பி நின்றுக் கொண்டான்.
அவன் செய்கையிலும், கண்களில் தெரிந்த உணர்வுகளிலும் குழம்பிப் போன மாயா ஏதோ யோசித்தவாறு, “பார்ட்டிக்கு தனியா வந்தீங்க. அப்றம், எதுக்கு சடன் ஆ கிளம்பி போயிட்டீங்க?” என்று கேட்டாள்.
“உன் கைய பிடிச்சி இன்னொருத்தன் கொஞ்சுறதை எல்லாம், என்னால பார்த்துகிட்டு இருக்க முடியல, அதான்” என்று சாதாரணமாக ரோஹன் சொல்ல, அதிர்ந்தவள், “கம் அகைன், நீங்க ஏதோ சொன்னீங்க. ஆனா, என் காதுல தப்பா விழுந்திருக்குன்னு நினைக்கிறேன்” என்று தடுமாறியபடி கேட்டாள்.
இதழ் ஒட்டியபடி புன்னகைத்தவன், “இல்லை… இல்லை…. நீ கரெக்டா தான் கேட்டிருக்க” என்றுவிட்டு காரை நோக்கி செல்ல, ‘இவன் என்ன லூசா’ என்ற ரீதியில் அவனை ஒரு பார்வை பார்த்தாள் மாயா.
காரில் ஏறியதும், “எக்ஸ்கீயூஸ் மீ, ஆர் யூ இன்ட்ரஸ்டட் ஒன் மீ?” என்று மாயா வியப்பாக கேட்க, அவள் கேட்டது காதில் விழுந்தும் கேட்காதது போல் காரை செலுத்தினான் ரோஹன்.
அவனை உதட்டை சுழித்து முறைத்த மாயா, “எதுக்கு அப்படி சொன்னீங்க? லியோ எனக்கு ரிங் போட்டதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று புரியாமல் கேட்டாள்.
காரை ஓரமாக நிறுத்தியவன் ‘உஃப்ப்ப்’ என்று பெருமூச்சுவிட்டவாறு, “ரொம்ப கேள்வி கேட்டு இம்சை பண்ற நீ” என்றுவிட்டு அடுத்த கணம் மாயாவே எதிர்ப்பார்க்காதவாறு அவளை இழுத்து, அவளிதழில் அழத்தமாக தன்னிதழை ரோஹன் பதிக்க, விதிர்த்துப் போய் விட்டாள் அவள்.
அழுத்தமான முத்தமொன்றை அவளிதழில் வழங்கிவிட்டு விலகியவன், கட்டுண்ட வண்டாய் அவள் இதழையே பார்த்தவாறு, “இதுக்கப்றம் ஏதாச்சும் கேள்வி கேட்ட, இதோட விட மாட்டேன், புரியுதா?” என்று மிரட்டும் தொனியில் சொல்லிவிட்டு, மாயாவின் முகபாவனைகளில் முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவாறு வண்டியை செலுத்தினான்.
ஏற்கனவே முத்த அதிர்ச்சியில் இருந்தவள், அவன் மிரட்டியதில் மேலும் அதிர்ந்து, “அடி ஆத்தீதீதீ” என்று வாயை இரு கைகளாலும் மூடிக் கொண்டாள்.
ரோஹன் அலுவலகத்தில் அதே கடைசி தளத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, இதற்கு முன் மாயாவை அழைத்து வந்த அந்த வழியாலேயே அவளை அறைக்கு அழைத்துச் செல்ல, அவன் எதுவும் நடவாதது போல் சாதாரணமாக வருவதை ஓரக்கண்ணால் பார்த்தவளுக்கு தான் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது.
அந்த விஷேட அறையில் இவர்கள் நுழையும் அதேநேரம், ரோஹன் மாயாவை அழைத்துச்சென்ற கோபத்திலும், சர்வேந்திரன் விடாது மாயாவின் எண்ணிற்கு அழைத்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு செய்த தொல்லையிலும் உச்சகட்ட கோபத்தில் அமர்ந்திருந்தாள் அலைஸ்.
சஞ்சய்யோ தன்னவளை சீண்ட எண்ணி, “உன் கண்களோ குட்டி ஸ்ட்ரோபெர்ரி, உன் நாசியோ குட்டி முந்திரி, உன் உதடோ ஆப்பிள் பீஸஸ், உன் நெற்றியோ பாதி ஆப்பிள்பை, உன் முகமோ தர்பூசணி, நீதான் என் ஃப்ரூட்மிக்ஸ்” என்று வாயிற்கு வந்த வார்த்தைகளை போட்டு, அலைஸ்ஸை ஓரக்கண்ணால் பார்த்தவாறு, தொலைப்பேசியில் பேசுவது போல் பாவனை செய்து கொண்டிருந்தான்.
சரியாக மாயாவும் ரோஹனும் உள்ளே வர, விருட்டென எழுந்த அலைஸ் இத்தாலியன் மொழியில் ஏதோ சொல்ல, புருவத்தை நெறித்த மாயா தனக்கு வந்த அழைப்புக்களை பார்த்து சலிப்பாக தலையாட்டினாள்.
ரோஹனோ அவன் பாட்டிற்கு அங்கிருந்த மேசையில் ஒற்றை காலை மடக்கி சாய்ந்து நின்றவாறு தன்னவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். மாயாவும் தொலைப்பேசியை பார்த்துவிட்டு நிமிர்ந்து ரோஹனை பார்க்க, அவனோ குறும்பாக ஒற்றை கண்ணை சிமிட்டியதில் விழிவிரித்தவள் தனக்குள் ஏற்படும் உணர்வுகளை கஷ்டப்பட்டு அடக்கியவாறு, அவனை போலியாக முறைத்தாள்.
“டாட் என்ட் லியோ இட்டாலி கிளம்புறாங்க. சோ, ஐ ஹேவ் டூ கோ, சீ யூ” என்றுவிட்டு ரோஹனை பார்த்தவாறே மாயா வெளியேற, போகும் அவளையே பார்த்திருந்தவன் அவள் மறைந்ததும் பின்னந்தலையில் தட்டி வெட்கப்பட்டு சிரித்துக்கொள்ள, சஞ்சய்யோ ‘ஙே’ என்று அவனை புரியாது பார்த்தான்.
ஹோட்டல் அறையில்,
“என்ன சார் சொல்றீங்க?! ரோஹன்கிட்ட நமக்கெதிரா எவிடென்ஸ் இருக்கா? ஓ ஷிட்! மாயாவுக்கு தெரிஞ்சி ஒரு சின்ன சந்தேகம் நம்ம மேல வந்தா கூட, இத்தனை வருஷம் நீங்க எதிர்ப்பார்த்தது மொத்தமும் போயிறுமே” என்று லியோ பதட்டமாக சொல்ல,
“அவன் நினைச்சிருந்தா அப்போவே மாயாக்கிட்ட காட்டியிருக்கலாம். ஆனா, அவன் அதை செய்யல்ல. அவன் என்ன யோசிக்கிறான்னு கூட எனக்கு தெரியல்ல. அவனோட ஃபோன் என்ட் லேப்ல இருக்க எவிடென்ஸ்ஸ ஹேக்கர்ஸ் அ வச்சி ஹேக் பண்ணி அழிக்க நினைச்சா, ரொம்பவே செக்யூரா எல்லாத்தையும் வச்சிருக்கான் அந்த இடியட்.
பட், தட்ஸ் ஓகே. மாயாவுக்கு சின்ன சந்தேகம் என் மேல வந்தா கூட, நான் ஐரா கம்பனீஸ்ஸோட ப்ரான்ட் அ வச்சி பண்ற அந்த இல்லீகல் பிஸ்னஸ்ஸ அந்த ஐரா கம்பனீஸ்க்கு எதிராவே திருப்பி விட்டுறுவேன்.
அவ பழைச மறந்துட்டா ஈஸியா எல்லாத்தையும் எனக்கு சொந்தமாக்கலாம்னு நான் ஃப்ளான் போட்டா, ஒவ்வொரு ஃபைலையும் அவ்வளவு அலசி ஆராய்ஞ்சி தான் சைன் போடுறா. கம்பனில எனக்கு தெரிஞ்ச ஆளுங்க மூலமா தான் அக்கௌன்ட்ஸ்ல கை வைக்குறேன், அதுவும் இப்போ வரைக்கும் அவ அதை ஹேன்டல் பண்ணல, இல்லைன்னா அதையும் எப்போவோ கண்டுபிடிச்சிருப்பா. ஆதி நாராயணணோட வேகமும் மூளையும் அவளுக்கு அதிகமாவே இருக்கு” என்று சர்வேந்திரன் அடக்கப்பட்ட கோபத்துடன் சொன்னார்.
“சார், இந்த ரோஹன் கதைய முதல்ல முடிச்சாகனும். அவன் இருக்குற வரைக்கும் நமக்கு பிரச்சினை தான்” என்று லியோ சொல்ல,
“அப்போ, யாரு என்னன்னு தெரியாமலே மாயாவுக்கு வந்த ஆபத்தை தடுத்தான். இப்போ, எதிரி யாருன்னு தெரிஞ்சதுக்கு அப்றம் அசால்ட்டா இருப்பான்னு நினைக்கிற? இந்த ஊர் ஆளுங்க வேணாம். நம்ம ஆளுங்கள்ள ஒருத்தனை ரெடி பண்ணு” என்று விஷம புன்னகையுடன் சர்வேந்திரன் கூறிக் கொண்டிருக்கையிலேயே, ” யாரை தூக்க போறீங்க டாட்?” என்ற மாயாவின் குரலில் இருவருமே திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர்.
மாயாவோ விழிகளில் கூர்மையுடன் இருவரின் எதிரே நின்றிருக்க, ஒருநொடி அதிர்ந்தாலும் சுதாகரித்து, “பிஸ்னஸ்ல சின்ன பிரச்சினை மாயூ, ரொம்ப குடைச்சல் கொடுக்குறானுங்க அதான். இதெல்லாம் பிஸ்னஸ்ல சகஜம் ஸ்வீட்ஹார்ட்” என்று சமாளித்தார் சர்வேந்திரன்.
“பிஸ்னஸ்ல இதெல்லாம் சகஜம்னு சொல்றீங்க, தென் எதுக்கு உயிரை எடுக்கனும்? கூல்லா ஹேன்டல் பண்ணுங்க டாட்” என்று மாயா சொல்ல, “நீ எப்போ இட்டாலிக்கு வர போற பேபி?” என்று கேட்டவாறு அவளை நெருங்கினான் லியோ.
அவனிடமிருந்து நகர்ந்தவள், “ஸ்டாப் கோல்லிங் மீ லைக் தட்” என்று காட்டமாக சொன்னவாறு, “கொஞ்சநாள் இங்க இருந்துட்டு வரேன், என்னால இங்க இருந்துக்கிட்டே பிஸ்னஸ்ஸ பார்த்துக்க முடியும்” என்று முடிவாக சொன்னாள் மாயா.
“டேக் க்யார் ஸ்வீட்ஹார்ட், உன்னை பத்தி தப்பான நியூஸ் எதுவும் வராம பார்த்துக்க என்ட், கார்ட்ஸ் இல்லாம தனியா எங்கேயும் போகாத, நீ எனக்கு ரொம்ப முக்கியம்” என்று கடைசி வசனத்தில் அழுத்தத்தை கொடுத்து சர்வேந்திரன் வெளியேற, மாயாவை நெருங்க நினைத்த லியோ அவள் முறைப்பை பார்த்து பல்லைகடித்துக் கொண்டு, வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் தள்ளி நின்றே சொல்லிவிட்டே வெளியேறினான்.
போகும் அவர்களை பார்த்த அலைஸ் உள்ளுக்குள் கொதித்தாள் என்றால், எதையும் கண்டுக்காது இருந்த மாயாவின் நினைவுகளோ இன்று தன்னவனுடனான நினைவுகளையே சுற்றி வந்தது.
அடுத்த சில நாட்கள் கழித்து,
“மிஸ்.கீர்த்தி, சீக்கிரம் இந்த லெட்டர டைப் அப் பண்ணிருங்க. என்ட், இந்த டென்டர்கான கொட்டேஷன பாலாவ ரெடி பண்ண சொல்லி, எனக்கு மெயில் பண்ண சொல்லுங்க” என்று பாபி வேலைகளை அடுக்கிக் கொண்டே போக, கீர்த்தியும் அவன் சொல்வதை மூளைக்குள் குறித்து வைப்பதிலே களைத்துப் போய்விட்டாள்.
இத்தனை நேரம் அலுவலகம் சம்மந்தமாக பேசிக் கொண்டிருந்தவன் திடீரென, “வீட்ல மாப்பிள்ளை பார்த்திருக்காங்களாமே… அங்கிள் சொன்னாரு, என்ன முடிவு பண்ணிருக்கீங்க?” என்று கேட்டதில் விழிவிரித்த கீர்த்தி, என்ன சொல்வதென்று தெரியாமல், “அது சார்… எனக்கு தெரியல” என்று தடுமாறியடி சொன்னாள்.
“ஓஹோ! நல்ல பதில்” என்று நக்கலாக அழுத்தி சொன்ன பாபி நேரத்தை பார்த்து, “ஓ கோட்! இட்ஸ் கெட்டிங் லேட், இன்னைக்கு என் கேர்ள் ஃப்ரென்ட் அ மீட் பண்றதா சொல்லியிருந்தேன். சோ, நீங்க உங்க வேலைய முடிச்சிட்டு கிளம்பலாம், என்கிட்ட சொல்லனும்னு வெயிட் பண்ண தேவையில்ல” என்றுவிட்டு பாபி அவன் பாட்டிற்கு வெளியேற, கீர்த்தி தான் ஆடிப் போய்விட்டாள்.
“சார்… சார்…” என்று அவன் பின்னாலே கீர்த்தி கத்திக் கொண்டு ஓட, நின்று திரும்பி அவளை கேள்வியாக பார்த்தான் பாபி.
“அது… நீங்க… முகம் பார்க்காம காதலிச்சிங்களே, அந்த இன்ஸ்டா பொண்ணா?” என்று கீர்த்தி கேட்க, அவளை முறைத்தவன், “தட்ஸ் நொன் ஆஃப் யூவர் பிஸ்னஸ்” என்றுவிட்டு சில அடிகள் முன்னே நடந்தான்.
பின் ஏதோ யோசித்த பாபி, திரும்பி கீர்த்தியை பார்த்து, “என் பர்சனல் தான் இருந்தாலும், என் பிஏகிட்ட சொல்றதுல எனக்கு எந்த ஆப்ஜெக்ஷனும் இல்லை. யாஹ் அந்த பொண்ணு தான்” என்றுவிட்டு வெளியேற, “அய்யோ!” என்று தலை மேலே இரு கைகளையும் வைத்துவிட்டாள் கீர்த்தி.
அப்போது தான் ஏதோ ஒரு கோப்பை பார்த்தவாறு வந்த சஞ்சய், கீர்த்தியின் செய்கையில் குழம்பி, அவளருகில் வேகமாக வந்து, “என்னாச்சு கீர்த்தி?” என்று புரியாமல் கேட்டான்.
“சஞ்சுண்ணா…” என்று கீர்த்தி அழுதே விட, அவனோ பதறி போய் சுற்றி முற்றி பார்த்து, அறைக்குள் அழைத்து வந்து, என்னவென்று விசாரிக்க, அவள் சொன்னதில், “அடிப்பாவி” என்று வாயில் கை வைத்துவிட்டான் சஞ்சய்.
காதல்போதை?
—————————————————————
ZAKI?