காதல்போதை 42💙

காதல்போதை 42💙

“அம்மு அந்த சர்வேந்திரன் உன் அப்பான்னு சொல்லிகிட்டு திரிஞ்சானே… வெளியாளுங்க யாருக்கும் சந்தேகம் வரலையா?” என்று ரோஹன் சந்தேகமாக கேட்க,

‘உஃப்ப்ப்…’ என்று பெருமூச்சுவிட்டவள், “அது எப்படி சந்தேகம் வரும்? பாதி பேரு அது தான் உண்மைன்னு நினைச்சிகிட்டு இருக்காங்க” என்று மாயா சொல்ல, “ஏன் அப்படி? புரியல” என்றான் ரோஹன்.

“சின்னயசுல இருந்து என் அம்மா கூடவே இருந்தவன் தான் சர்வேந்திரன். ஏற்கனவே அவங்க இரண்டு பேரையும் பார்க்குறவங்க லவ்வர்ஸ்னு தான் சொல்லிகிட்டு இருந்திருக்காங்க. பட், அம்மா இதெல்லாம் பெருசா எடுத்துக்கல. அப்றம், அம்மாவும் சர்வேந்திரனும் வன் இயர் ஆ இட்டாலிலே இல்லை, வன் இயர் கழிச்சி இங்க வந்த மூனு நாள்ல அம்மா ப்ரெக்னென்ட்னு தெரிஞ்சிருக்கு.

அப்றம், வன் மன்த் கழிச்சி தான் மீடியாவுக்கும் இந்த விஷயம் தெரிய, எல்லாரோட சந்தேகமும் சர்வேந்திரன் மேல தான். ஏகப்பட்ட வதந்தி, நியூஸ்னு இரண்டு பேரையும் சேர்த்து வச்சி பேசினாங்க. பட், அம்மா அப்படியே என்னை மாதிரி, இதெல்லாம் கண்டுக்கல. ஆனா, நான் மெமரி லோஸ் ஆனதும் அவன் தான் என் அப்பான்னு என்னை நம்ப வைக்க, இந்த நியூஸ் அ சர்வேந்திரன் யூஸ் பண்ணிக்கிட்டான். எல்லாரும் அதையே நம்ப ஆரம்பிச்சிட்டாங்க” என்று மாயா சொல்லி முடிக்க, ரோஹனும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

“நீ ஏன் பேபி உன் கம்படீஷன மிஸ் பண்ண? நீ சொல்லும் போது எனக்கு எவ்வளவு கோபமா இருந்துச்சி தெரியுமா?” என்று மாயா கண்கள் கலங்க சொல்ல,

“நீ என்னை விட்டு போனதும் வாழ்க்கையே சூனியமாகிறுச்சி. என்னால நீ இல்லாம எதுவுமே பண்ண முடியல, எதுலயும் கான்சன்ட்ரேட் பண்ண முடியல. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் அம்மு, மொத்தமா சேர்த்து வச்சி இந்த அஞ்சு வருஷம் அதுக்கான தண்டனைய அனுபவிச்சிட்டேன். ஐ அம் சோரி” என்று குற்றவுணர்ச்சியில் சொன்னான் அவன்.

அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள், “நான் தான் மன்னிப்பு கேக்கனும். என்னை விட யாரும் உன்னை புரிஞ்சிக்க முடியாதுன்னு நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனா, என் ரூஹிய நான் சரியா புரிஞ்சிக்கல” என்று சொல்ல, ரோஹனோ மீண்டும் அவள் இதழை நெருங்கும் சமயம் அவனின் தொலைப்பேசி அலறியது.

இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவாறு தொலைப்பேசி திரையை பார்த்தவனது புருவங்கள் யோசனையில் முடிச்சிட, அழைப்பை ஏற்று காதில் வைத்தவன், “டாட்” என்று சொன்னதும் தான் தாமதம், மறுமுனையில் சொன்ன செய்தியில் அதிர்ந்தே விட்டான்.

அவனுடைய தொலைப்பேசி கையிலிருந்து நழுவ, “அம்மா” என்று அழைத்தவாறு அழுதவனை பார்த்த மாயா பதறியபடி, “ரூஹி” என்று அவன் தோளை தொட, “மாயா, அம்மாவுக்கு ப்ரஷர் அதிகமாகி ஹோஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்களாம். சுயநினைவே இல்லாம இருக்காங்கன்னு அப்பா சொல்றாரு. எல்லாமே என்னால தான்” என்று ரோஹன் சொல்லி அழ, மாயாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

இருந்தாலும் குழப்பத்தை ஒதுக்கி வைத்தவள், “ரூஹி ரிலாக்ஸ், அத்தைக்கு எதுவும் ஆகாது. நாம சீக்கிரம் பெங்ளூர் போகலாம்” என்று சொல்ல,

“அம்மு, ப்ளீஸ் சீக்கிரம் நெக்ஸ் ஃப்ளைட்க்கு டிக்கெட் புக் பண்ணு, நான் அம்மாவ பார்க்கனும்” என்று ரோஹன் அவசரப்பட, “எதுக்கு டிக்கெட்?” என்று புரியாமல் கேட்டு வைத்தாள் மாயா.

அவனோ கேள்வியாக அவளை பார்க்க, ஒரு எண்ணிற்கு அழைத்த மாயா, “ஜேசன், இம்மிடீயட்ட இந்தியாவுக்கு போகனும். ப்ரைவட் ஜெட் ரெடி பண்ணு. என்ட், அதை அங்க லேன்ட் பண்ண பர்மிஷன் வாங்கிறு. வீர் ஆர் ஒன் த வேய்” என்று சொல்லி வண்டியை செலுத்த, ரோஹனோ விழிவிரித்து மாயாவை பார்த்தான்.

பெங்ளூர்,

ரோஹனோ தன் தந்தை சொன்ன வைத்தியசாலையை அடைந்தவன், அங்கு வரவேற்பு பகுதியில் விசாரித்து லலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டை நோக்கி சென்றான். மாயாவும் அவன் பின்னாலே தன் முகத்தை பெரிய கண்ணாடி, தொப்பி கொண்டு மறைத்தவாறு நடந்தாள்.

அங்கு அறை வாசலில் மானவ் வைத்தியரிடம் பேசிக் கொண்டிருக்க, அவரை நெருங்கிய ரோஹன், “டாட், அப்பாவுக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று பதட்டமாக கேட்க,

“இப்போ பரவாயில்லை கண்ணா, கண்ணை திறந்துட்டா. உள்ள போகலாம், உனக்காக தான் காத்துகிட்டு இருக்கா” என்று மகனை அவர் உள்ளே அழைத்துச் செல்ல, ரோஹனோ மாயாவை சுத்தமாக மறந்து தன் தந்தையுடன் உள்ளே சென்றிருக்க, மாயாவும் அவர்கள் பின்னாலே உள்ளே நுழைந்தாள்.

“அம்மா” என்ற தன் மகனின் குரலில் கண்விழித்த லலிதாவிற்கு தன் எதிரே நிற்கும் தன் மகனை பார்த்ததும், உடல் சோர்வெல்லாம் பறந்து போனது போல உணர்வு.

“கண்ணா இப்போ தான் உனக்கு அம்மா நியாபகம் வந்திச்சா?” என்று அவர் தழுதழுத்த குரலில் கேட்க, ஓடிச் சென்று அவர் வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டவன் சிறுபிள்ளை போல் உதட்டை பிதுக்கி தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தான்.

“சோரிமா, உங்க கூட பேசாம இருந்து நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன், என்னை மன்னிச்சிறுங்க மா” என்று ரோஹன் அழ, அவரோ அவனின் அழுகை தாங்காது தன் வயிற்றில் புதைத்திருந்த தன் மகனின் கேசத்தை வருடியவாறு, “இல்லைடா கண்ணா, நான் உனக்காக பேசியிருக்கனும். நானும் என் மகன பத்தி யோசிக்காம விட்டுட்டேன், சோரிடா கண்ணா” என்று சமாதானப்படுத்த, தாயின் வருடலில் அழுகையை மட்டுப்படுத்தினான் அவன்.

மாயாவுக்கோ அவர்களை பார்க்கும் போது ஒருவித ஏக்கம் தோன்ற, புன்னகையுடன் அதையே பார்த்திருந்தவளுக்கு சுத்தமாக இவர்களுக்குள் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

மானவ்வும் ஐந்து வருடங்கள் கழித்து தன் மனைவி, மகன் முகத்தில் சிரிப்பை கண்டதில் உள்ளம் நிறைந்து போயிருக்க, திடீரென ஏதோ உந்துதலில் பக்கவாட்டாக திரும்பியவர் அப்போது தான் முகத்தை மூடி மறைத்த வண்ணம் நின்றிருந்த மாயாவை கவனித்தார்.

‘யார்ரா இது? இங்க என்ன பண்றா இந்த பொண்ணு?’ என்று முழித்தவர்,  “யாருமா நீ? இங்க நின்னுகிட்டு என்ன பண்ணிகிட்டு இருக்க?” என்று அதட்டுவது போல் கேட்க,

மானவ்வின் குரலில் திடுக்கிட்டு திரும்பிய மாயா, அவரின் புரியாத பார்வையை புன்னகையுடன் பார்த்தவாறு தன் முகத்தை மறைத்திருந்த கண்ணாடியையும், தொப்பியையும் கழட்டி, அவர் முன் கை நீட்டி, “ஹெலோ அங்கிள், ஐ அம் மாயா” என்று சொல்ல, அவரோ அவளை பார்த்து ஆடிப் போய்விட்டார்.

அப்போது தான் மாயா தன்னுடன் வந்ததை உணர்ந்த ரோஹன் தலையிலடித்துக் கொள்ள, மானவ்வோ அவளை உற்று பார்த்து உறுதி செய்து, “மிஸ்.மாயா, நீங்க இங்க…?” என்று தடுமாறியபடி கேட்டார்.

“அதை நான் சொல்றேன் டாட்” என்றவாறு வந்த ரோஹன், மாயாவை தன் தோளோடு அணைத்து, “நானும் மாயாவும் லவ் பண்றோம். இவளுக்காக தான் அன்னைக்கு நான் கல்யாணத்தை வேணாம்னு சொல்லி, வீட்டை விட்டு வந்தேன். என்னை மன்னிச்சிறுங்க டாட், இதை நான் அன்னைக்கே உங்ககிட்ட சொல்லியிருக்கனும்” என்று வருத்தத்துடன் சொல்ல, ‘வீட்டை விட்டு வந்தியா?’ என்ற கேள்வியோடு மாயா ரோஹனை பார்க்க, மானவ்விற்கு வார்த்தையே வரவில்லை.

அவருக்கோ மாயாவை நேரில் பார்த்ததே கனவா? நினைவா? என்று இருக்க, இதில் தன் மகன் அவளை காதலிப்பதாக சொல்லியதில் அவரால் நம்பவே முடியவில்லை. அதில் கூடவே அவருக்கு இன்னொரு சந்தேகம் வந்ததில் தன் மனைவியை அவர் திரும்பி பார்க்க, லலிதாவே கண்கள் கலங்க மாயாவை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதிலே மானவ்விற்கு புரிந்து போக, அப்போது தான் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தார் ரவீந்திரன். அங்கு நின்றிருந்த ரோஹனை பார்த்த ரவீந்திரன், “மருமகனே…” என்று உற்சாகமாக அழைக்க, சத்தம் கேட்டு திரும்பிய மாயா அவரை புரியாமல் பார்க்க, ரவீந்திரனோ அவளை பார்த்து அதிர்ந்தே விட்டார்.

தன் காதலியின் மறுவிம்பமாய் தன் முன் இருப்பவளை பார்த்தவரது கண்கள் கலங்க, இதழ்களோ “மஹா” என்று முணுமுணுத்தது. மாயா அவரையே கூர்மையாக பார்த்துக் கொண்டு நின்றாள் என்றால், ரோஹனுக்கு தன் குடும்பத்தாரின் முகபாவனையே ஏதோ உணர்த்தியது.

ரவீந்திரனின் முன் வந்து நின்ற மாயா, “ஹெலோ சார், ஐ அம் மாயா, உங்க வீட்டு மருமகள்” என்று தன்னை தானே அறிமுகப்படுத்தியவாறு அவர் முன் கை நீட்ட, தயக்கமாக அவளுடன் கை குலுக்கி, “என் பேரு ரவீந்திரன் மா, ரோஹனோட மாமா” என்று பேசியவரின் குரலில் அப்பட்டமாக தடுமாற்றம் தெரிந்தது.

சூழ்நிலையை புரிந்து கொண்ட ரோஹன் அதை மாற்ற எண்ணி, “மாயா, அம்மாவ டிஸ்சார்ஜ் பண்ணியாச்சு. ஃபோமலிட்டீஸ் முடிஞ்சதும் கிளம்பலாம். இப்போ, போய் உன் அத்தை கூட பேசு” என்று அவளை இழுத்து லலிதாவின் அருகில் நிற்க வைக்க,

“ஹாய் அத்தை, அது வந்து நான்… ரூஹி… ச்சே! ச்சே! ரோஹன்… லவ்… அவர் என்னை வேணாம்னு… இப்போ நான் வேணும்னு…” என்று என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் தடுமாற, அதில் வாய்விட்டே சிரித்து விட்டார் லலிதா.

“ஹப்பாடா! சிரிச்சிட்டாங்க. தேங்க்ஸ் அத்தை, யூ லைக் மீ ரைட்?” என்று மாயா சிரிப்புடன் கேட்க, “எனக்கு நீதான்டா மருமகள், போதுமா?” என்று லலிதா சொன்னதில் மாயாவுக்கு உச்சகட்ட சந்தோஷம்.

“சரிடா கண்ணா, மாயாவுக்கும் உனக்கும் ரொம்ப அசதியா இருக்கும். ஃப்ளைட்ல இருந்து இறங்கினதும் நேரா இங்க வந்துட்டீங்க. மொதல்ல மருமகள வீட்டுக்கு அழைச்சிட்டு போ, உன் அம்மாவ நாங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர்றோம்” என்று மானவ் சொல்ல, தொப்பியையும் கண்ணாடியையும் அணிந்து அறையிலிருந்து வெளியேறிய மாயாவையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தார் ரவீந்திரன்.

போகும் வழியில் தன்னவனை அழுத்தமாக பார்த்த மாயா, “என்னாச்சு ரூஹி? நீ ஏன் வீட்டை விட்டு வந்த?” என்று கேட்க, காரை செலுத்தியவாறு அவள் புறம் பார்வையை திருப்பாது, “டாட், கல்யாணம் பண்ணனும்னு ரொம்ப ஃபோர்ஸ் பண்ணாரு. பண்ணலன்னா வீட்டை விட்டு போக சொல்லிட்டாரு. அதுவும், நான் மிஸ்டர்.சரண் வீட்டுல போய் என் முடிவ சொன்னதுல, அப்பாவுக்கு ரொம்ப அவமானமாகிறுச்சி. அதான், நான் பண்ண தப்புக்கு அவங்கள விட்டு வந்து, நானே எனக்கு தண்டனை கொடுத்துகிட்டேன் ” என்று ரோஹன் நடந்ததை சொல்லி முடித்தான்.

அதில், மாயாவுக்கு தான் ‘தன்னால் அவன் வாழ்க்கையில் இத்தனை கஷ்டம்’ என்று முகமே வாடிவிட்டது.  அதை உணர்ந்த ரோஹன் வண்டியை ஓரமாக நிறுத்தி, தன்னவளை இழுத்து அணைத்து, நெற்றியில் அழுந்த முத்தமிட்டவாறு, “உன்னோட இடத்தை யாராலையும் நிரப்ப முடியாது, அதுக்கு நான் சம்மதிக்கவும் மாட்டேன்” என்று காதலாக சொல்ல, அவளுக்கோ தான் எதிர்ப்பார்க்காத அவனின் காதல் இப்போது அளவுக்கு அதிகமாக தனக்கு கிடைப்பதில், மனம் உல்லாசமாக இருந்தது.

ஏதோ யோசித்தவள் அவனிடமிருந்து விலகி, “பேபி, ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்று சொல்ல, “என்ன வேலை அம்மு?” என்று புரியாமல் கேட்டான் ரோஹன்.

“எனக்கு போன்டாவ பார்க்கனும், அவக்கிட்ட அவளோட ஜிலேபியா நான் பேசனும், ரொம்ப மிஸ் பண்றேன் அவள” என்று வருத்தமாக சொல்ல, அவனின் இதழ்களோ புன்னகையில் விரிந்தது.

“சீக்கிரம் பார்க்கலாம். ஆனா, நாளைக்கு. இப்போ, வீட்டுக்கு போய் மொதல்ல ரெஸ்ட் எடு. நாளைக்கு சப்ரைஸ் ஆ வீட்டுக்கு போகலாம்” என்று அவன் சொல்ல, உதட்டை சுழித்தவாறு அவள் அவனின் தோளில் சாய்ந்துக் கொள்ள, அவள் தலையை வருடி கன்னத்தில் முத்தம் வைத்தவன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.

மாயாவிற்கான அறைக்குள் அழைத்துச் சென்றவன், “பிடிச்சிருக்கா?” என்று கேட்க, அவளோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு, “பேபி, எதுக்கு நாம தனி தனியா இருந்துகிட்டு? உன் ரூம்க்கே கூட்டிட்டு போ” என்று சிணுங்க,

அதில் கையெடுத்து கும்பிட்டவன், “ஏம்மா, நம்ம கல்யாணம் முடியுர வரைக்கும் வாய அடக்கிகிட்டு இரும்மா, ப்ளீஸ்” என்று கெஞ்சும் தோரணையில் சொல்ல, “போயா…” என்று கோபமாக சொல்லிவிட்டு பால்கெனியில் போய் நின்றுக் கொண்டாள் மாயா.

அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவன், அவளின் கழுத்து வளைவில் முகத்தை புதைக்க, அவன் மீசை முடி தந்த குறுகுறுப்பில் நெளிந்தவள், “பேபி” என்று கிறக்கமாக அழைக்க, அவனும் தன்னவளின் ஸ்பரிசத்திலிருந்து மீள மனமில்லாது அவளின் கழுத்தில் அழுந்த முத்தமிட்டவாறு, “ம்ம்” என்று மட்டும் முணங்கினான்.

அவளும் அவனுடைய முத்தத்தில் மயங்கி நிற்க, திடீரென அவனுடைய கை தன் மேனியில் அத்து மீறுவதை உணர்ந்து, அவன் புறம் திரும்பி அவன் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டு, “ஸப்பாஹ்ஹ்…” என்று பெருமூச்சுவிட்டாள் அவள். மோனநிலை அறுபடவும் எரிச்சலில், “ச்சே… என்னடி?” என்று ரோஹன் கேட்டவாறு மீண்டும் நெருங்க, “ஒன்னுஇல்ல, மொதல்ல நீ கிளம்பு” என்று அவனை திருப்பி, அவனின் முதுகுபுறமாக தள்ளிக் கொண்டே அறைக்கதவை நோக்கி சென்றாள்.

“டெவில், ப்ளீஸ் ஒன்னே ஒன்னு…” என்று அவனும் அவளிடம் கெஞ்ச, அதையெல்லாம் காதில் வாங்காது அவனை வெளியே தள்ளி, கதவை சாத்தியவள், அதன் மேலேயே சாய்ந்து வெட்கப்பட்டு சிரித்து கொண்டாள்.

அடுத்த சில மணி நேரங்களில் லலிதாவை வீட்டுக்கு அழைத்து வந்திருக்க, வீட்டுக்குள் நுழைய போனவர்கள் “அத்தை ஸ்டாப்…” என்ற குரலில் நின்று, புரியாது பார்க்க, ரோஹனும் குரல் வந்த திசையை கேள்வியாக நோக்கினான்.

சாதாரண சுடியில் கையில் ஆரத்தி தட்டுடன் வந்த மாயா, தனக்கு தெரிந்தது போல் தட்டுத்தடுமாறி ஆரத்தி எடுக்க, அவளுடைய செய்கையில் ரோஹன் நெற்றியில் வெளிப்படையாக அடித்துக் கொள்ள, லலிதாவுக்கு இதழ் முழுக்க புன்னகை தான். அதுவும், ரோஹனுக்கு ‘தன் அம்முவே தனக்கு கிடைத்து விட்டாள்’ என்ற உற்சாகம் உச்சத்தை தொட்டது.

லலிதாவை கட்டிலில் அமர வைத்தவர்கள் அவரையே பார்த்தவாறு இருக்க, அவரோ மாயாவை பக்கத்தில் அமர வைத்து, அவள் தலையை வாஞ்சையாக வருடியவாறு, “என் மகன உனக்கு ரொம்ப பிடிக்குமா?” என்று புன்னகையுடன் கேட்டார்.

ரோஹனோ சிரித்தவாறு தன்னவளை பார்க்க, அவளோ தன்னவனை பார்த்தவாறு, “என் ரூஹிய மட்டும் தான் பிடிக்கும்” என்று காதலாக சொல்லி, பின் லலிதாவிடம், “இப்போ, உங்களையும் ரொம்ப பிடிச்சிருக்கு அத்தை” என்று அணைத்துக் கொள்ள, அவரும் அவளை அணைத்தவாறு உணர்ச்சி மிகுதியில், “மஹா” என்று அழைத்தார்.

அந்த அழைப்பில் சட்டென்று விலகி அவர் முகத்தை புரியாது நோக்கியவள், “உங்களுக்கு எங்க அம்மாவ தெரியுமா?” என்று ஆச்சரியமாக கேட்க, ரவீந்திரனோ கலங்கிய கண்களை மறைக்க முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டார்.

“ஐரா கம்பனீஸ் ஓட எம்.டியா இல்லை, ஒரு தோழியா அவள எனக்கு நல்லாவே தெரியும் மாயா. என்னை விட வயசுல சின்னவ தான். ரொம்பவே சுட்டி, உன்னை மாதிரி…” என்றவாறு தன் தம்பியை அழுத்தமா ஒரு பார்வை பார்த்த லலிதா, “ஆனா, போகும் போது ஒரு வார்த்தை கூட சொல்லாம போயிட்டா” என்று வருத்தமாக சொல்ல, மாயாவுக்கும் தன் அம்மாவை நினைத்து கண்கள் கலங்கியது.

“மிஸ்.மாயா, நீங்க உங்க ஃபேமிலிய வர சொன்னீங்கன்னா, சீக்கிரம் பேசி கல்யாணத்துக்கான ஏற்பாட்டை ஆரம்பிக்கலாம்” என்று மானவ் சந்தோஷமாக சொல்ல, அவர் கேட்டதும் தான் அவர்களுக்கு இன்னும் சர்வேந்திரன் பற்றி தகவல் தெரியவில்லை என்பது புரிந்தது.

“எனக்கு ஃபேமிலி கிடையாது. என்ட், நீங்க என்னை மாயான்னே கூப்பிட்டுக்கலாம்” என்று அவள் சாதாரணமாக சொல்ல, ரவீந்திரனோ சட்டென்று நிமிர்ந்து மாயாவை புரியாது பார்க்க, “அப்போ… மிஸ்டர்.சர்வா…” என்று கேள்வியாக இழுத்தார் மானவ்.

ரோஹன் ஏதோ சொல்ல வர, அதற்குள், “அவர் ஒன்னும் என் அப்பா கிடையாது. ஐ அம் ஜஸ்ட் மாயா மஹேஷ்வரி தான். நீங்க இன்னும் நியூஸ் பார்க்கலன்னு நினைக்கிறேன், மிஸ்டர்.சர்வேந்திரன் ஒரு க்ரிம்னல். இத்தனை நாள் மீடியா முன்னாடி பொய்யா வேஷம் போட்டிருக்காரு” என்று மாயா இறுகிய குரலில் சொல்ல, இப்போது ரவீந்திரனின் முகத்தில் குழப்பம், அதிர்ச்சி, சந்தோஷம் என்று கலவையாக உணர்வுகள் சூழ்ந்துக் கொண்டன.

அதை தெளிவுபடுத்த எண்ணி ரோஹனே, மஹேஷ்வரியின் வாழ்க்கையில் நடந்ததையும், சர்வேந்திரனின் துரோகத்தையும் சொல்ல, ரவீந்திரனுக்கோ அதிர்ச்சியிலும், சந்தோஷத்திலும் கண்களிலிருந்து கண்ணீரே வந்துவிட்டது. இத்தனை நாள் அவரும் கூட அப்போது மஹேஷ்வரி, சர்வேந்திரனின் உறவு பற்றி வெளியான செய்தியை நம்ப தான் செய்தார். மஹேஷ்வரி, மாயாவை சுமந்த போது வெளியான செய்தியை பார்த்த போது கூட, ‘அது தன் குழந்தையாக இருக்குமோ’ என்று அவர் யோசிக்க கூட இல்லை.

இப்போது ரோஹன் சொல்லும் வரை மாயா சர்வேந்திரனின் குழந்தை என அவர் நினைத்திருக்க, மாயா தன் உயிர்நீரில் உருவான ஜீவன் என்று தெரியவும், மகிழ்ச்சியில் திக்கு முக்காடித்தான் போனார் அவர். ஆனாலும், தன் மகளை அணைக்க துடித்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டவர், ‘தன்னை வெளிப்படுத்தி விடுவோமோ’ என்ற பயத்தில் அறையிலிருந்து விறுவிறுவென வெளியேற, லலிதாவுக்கும் எல்லாம் புரியவும், ‘தன் தம்பியின் மகளே தனக்கு மருமகள்’ என்று சந்தோஷம் இரட்டிப்பானது அவருக்கு.

“அப்போ, அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணத்தை வச்சிரலாம்” என்று மானவ் சந்தோஷமாக சொல்ல, மாயாவின் முகம் ஏதோ ஒரு யோசனையில் இருப்பதை கவனித்த ரோஹன், “அப்பா, கல்யாணம் பெங்ளூர்ல வேணாம், இட்டாலில வச்சிக்கலாம்” என்று சொல்ல, மாயாவோ தன்னவனை அதிர்ந்து பார்த்தாள்.

அவனை புரியாது பார்த்த லலிதா, “கண்ணா, அது எப்படி? சொந்தங்கள் எல்லாம் இங்க தானே இருக்காங்க. அப்படி இருக்கப்போ…” என்று தயக்கமாக இழுக்க, “ஆனா, மாயாவோட சொந்தங்கள் அங்க தான் இருக்காங்க. அவளோட அம்மாவும், அவளோட தாத்தாவும் அவக் கூடவே இருக்குற மாதிரி என் அம்மு ஃபீல் பண்ணனும். என் அம்மு எதுக்காகவும் ஏங்க கூடாது, அவளோட ஆசையும் அது தான்… கல்யாணத்தை சிம்பிளா வச்சிரலாம், ப்ளீஸ்” என்று ரோஹன் தன்னவளுக்காக பேசினான்.

லலிதாவும், மானவ்வும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு, “உன் இஷ்டம் கண்ணா” என்று ஒருசேர சொல்ல, மாயாவோ இடம் பொருள் பாராது உச்சகட்ட சந்தோஷத்தில் தன்னவனை தாவி அணைத்திருந்தாள்.  பெரியவர்கள் சங்கடமாக திரும்பிக் கொள்ள, ரோஹனோ முதலில் அதிர்ந்து பின் அவளை தன்னிடமிருந்து விலக்கி அவர்களை கண்களால் காட்ட, “ஹிஹிஹி…” என்று அசடுவழிய சிரித்தாள் அவள்.

 

காதல்போதை💙
*****************************

-ZAKI💙

Leave a Reply

error: Content is protected !!