காதல்போதை FINAL💙

காதல்போதை FINAL💙

சில வருடங்கள் கழித்து,

“அம்மு… எழுந்துருடி. டெவில்… ஏய்! முக்கியமான மீடிங்டி, நீ போயே ஆகனும். அய்யோ! படுத்துறாளே…” என்று ரோஹன் மாயாவை எழுப்ப முயற்சித்தவாறு புலம்ப,

தன் அம்மாவை உலுக்கிய ரோஹன், மாயாவின் தவப்புதல்வன் மஹேந்திரன், “ம்மீ, எழுந்திரு. தாத்தா இஸ் கோலிங் யூ. அப்றம், திட்டும்” என்று தன் மழலை மொழியால் எழுப்ப முயற்சித்தான். ஆனால், நம் நாயகியோ எழுந்தால் தானே! சிணுங்கியவாறு மீண்டும் இழுத்தி போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.

‘உஃப்ப்ப்…’ என்று பெருமூச்சுவிட்டவாறு இடுப்பில் கை வைத்து தன்னவளை முறைத்தவனுக்கு ஒரு யோசனை தோன்ற, உடனே தன் மகனின் காதில் ரோஹன் எதையோ கிசுகிசுத்ததும், அடுத்தநொடி அந்த பாடலை ஒலிக்க விட்டான் அவர்களின் சில்வண்டு.

“ஒரு சின்ன பையன் பார்க்க தான் பொடியன் செய்யும் வேலை எல்லாமே…

வன்ஸ் மோர் கேக்க வைக்கும் உங்கள் ச்சொய்ஸ்ஸாய் மாறிடுமே.. ஓ சின்ச்சேன்…

என் பேரு தான் சின்ச்சேனே..
குறும்பு செய்ய தான் பிறந்தேனே…”

என்ற கார்டூன் பாடல் ஒலிக்க, அடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள் மாயா. தன் கணவனையும், மகனையும் பார்த்து அவள் மலங்க மலங்க விழிக்க, தலையிலடித்துக் கொண்ட ரோஹன், “டெவில்…” என்று பல்லைக்கடித்துக் கொண்டு கத்தியவாறு நேரத்தை காட்டினான்.

அதைப் பார்த்தவளுக்கு அப்போது தான் அலுவலகத்தில் முக்கியமான கூட்டம் இருப்பதே நியாபகத்துக்கு வந்தது. தலையில் கை வைத்துக் கொண்டவள், “அய்யய்யோ! போச்சு… போச்சு… அப்பா திட்ட போறாரு. என்னை எழுப்பிவிட்டா தான் என்னவாம்? இப்போவாச்சும் பருப்பு மாதிரி நிக்காம பொறுப்பா என் ட்ரெஸ் அ எடுத்து வை ரூஹி” என்றுவிட்டு  குளியலறைக்குள் புகுந்து கொள்ள, அவர்களின் புதல்வனோ தன் தந்தையை பார்த்து கிளுக்கி சிரித்தான்.

குளித்து உடை மாற்றி வந்தவள் உணவு மேசையில் அமர்ந்தவாறு, “அத்தை, கோஃபி…” என்று கத்த, திடீரென தன் முன் நீட்டப்பட்ட கரத்தில் விலுக்கென நிமிர்ந்து, தன்னவன் தன்னையே முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு அப்போது தான் இன்னொரு விடயமும் நியாபகத்துக்கு வந்தது. 

மீண்டும் தலையில் கை வைத்து, “அய்யய்யோ! அத்தை, மாமா ஹனிமூன் போயிருக்காங்கல்ல?” என்றவாறு தன்னவனின் முறைப்பை கண்டுக்காது கோஃபியை குடிக்க, ரோஹன் தான் அவனின் முறைப்பை விட்டபாடில்லை.

“கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?” என்று ரோஹன் திட்ட வர, “ஸ்டாப்!” என்று அவனை குறுக்கிட்டவள், “ஆல்ரெடி ஆஃபீஸ்ல எனக்கு பெரிய லெக்ச்சர்ஸ் இருக்கு. நீ திட்டுறதை கேட்டுட்டு போனா அதை கேக்க முடியாது” என்றுவிட்டு வாசல்புறம் ஓட, “டெவில்…” என்று மீண்டும் அதட்டினான் ரோஹன்.

அப்போது தான் மறுபடியும் ஏதோ நியாபகத்துக்கு வந்தவளாக, “அய்யோ! சோரி… சோரி…” என்றவாறு ஓடி வந்து, கூட்டம் தொடர்பான கோப்புக்களை எடுத்தவள், “மஹி…” என்று தன்னை வாயை பொத்தி சிரித்தவாறு பார்த்திருந்த தன் மகனை தூக்கி ஒரு சுற்று சுற்றி, அவனின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்.

தன்னவனுக்கும் கன்னத்தில் முத்தமிட்டு காரை நோக்கி அவள் ஓடியதும் தான் , “ஸப்பாஹ்ஹ்… இவள வச்சிகிட்டு…” என்று பொறுமியவாறு சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தான் ரோஹன். மஹியோ, “ம்மீ ரொம்ப பேட்ல?” என்று சொல்லி சிரிக்க , ரோஹனுக்கு கூட அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு தான் வந்தது.

மாயாவோ அலுவலகத்தில் காரை நிறுத்தியதும் அரக்க பறக்க கூட்டம் நடக்கும் ஹோலை நோக்கி ஓட, இது எப்போதும் நடப்பது தான் என்று யாருமே கண்டுக் கொள்ளவில்லை. ஏதோ பள்ளிகூடத்திற்கு செல்லும் மாணவியை போல் காலையில் அவளை எழுப்புவதே ரோஹனுக்கு பெரும்பாடு தான். கூட்டம் நடக்கும் ஹோலின் கதவை திறந்துக் கொண்டு மூச்சு வாங்கியவாறு வந்து நின்ற முதலாளியை அங்கிருந்தவர்கள் விழிவிரித்து பார்க்க, ரவீந்திரனோ தன் மகளை மூக்கு விடைக்க முறைத்தார்.

கீர்த்தியும், அலைஸ்ஸும் நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொள்ள, “ஹிஹிஹி… சோரிபா, தூங்கிட்டேன்” என்று சிறுபிள்ளை போல் அசடுவழிந்தவாறு மாயா காரணம் சொல்லவும், ரவீந்திரனோ அங்கிருப்பவர்களை கண் ஜாடையால் காட்டினார். அப்போது தான் இடம், பொருள் உணர்ந்து, “சோரி… சோரி எவ்ரிவன்” என்று தன் இருக்கையில் சமத்தாக அவள் அமர, கூட்டமும் ஆரம்பானது.

பல நாடுகளிலிருக்கும் ஐரா நிறுவனத்தின் கிளைகளை நிர்வகிப்பவர்கள் காணொளி மூலமாக இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள, ஐரா  நிறுவனத்தின் புதிய உற்பத்தி தொடர்பான கலந்துரையாடலே இடம்பெற்றது. இத்தனை நேரம் இருந்த குறும்புத்தனம் மறைந்து, ஐரா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவள் பேச, அவளின் உறுதியான முடிவுகளிலும், நிமிர்விலும் தன் மகளை மெச்சிக் கொண்டார் ரவீந்திரன்.

பெங்ளூரில் ஆரம்பித்த கிளையின் பொறுப்பை ரவீந்திரனிடம் ஒப்படைத்தவள், கீர்த்தியும், அலைஸ்ஸும் மறுக்க மறுக்க நிறுவனத்தின் முக்கிய பகுதியிக்கு அவர்களை பொறுப்பாக நியமித்திருந்தாள். வீட்டிலிருந்தவாறே இட்டாலியில் இருக்கும் தலைமையகத்தை கவனித்துக் கொள்பவள், எப்போதாவது இட்டாலி சென்று வருவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தாள். அதுவும், தனியாக இல்லை, ஹொலிடேய் என்ற பெயரில் மொத்த பேரையும் தன்னுடன் இழுத்துக் கொண்டு சென்று விடுவாள்.

கூட்டம் முடிந்து, எல்லாரும் அங்கிருந்து நகர்ந்ததும் ஆரம்பித்தது ரவீந்திரனிடமிருந்து மாயாவுக்கு கச்சேரி. விடாது வாங்கிய திட்டுக்களை ஏதோ விருது வாங்குவது போல் வாங்கியவள், “தேங்க் யூ அப்பா, லவ் யூ” என்று அவரை அணைத்துவிட்டு வெளியில் ஓடிவிட, அவருக்கு கூட அவளின் சேட்டையில் லேசாக சிரிப்பு எட்டிப் பார்க்க தான் செய்தது. தன் காதலியிடமிருந்த அதே குறும்பை மகளிடம் பார்ப்பவருக்கு தன்னவளுடன் வாழ்ந்த நினைவுகள் தான் ஆக்கிரமித்தது.

“ஜிலேபி, நில்லுடி” என்றவாறு கீர்த்தி ஓடி வர, அலைஸ்ஸோ மாயாவை முறைத்தவாறு அவள் முன் வந்து நின்றாள். “நீ நிஜமாவே எம்.டி ஆ? இல்லை, எம்.டி ஆன்னு கேக்குறேன். பாவம் ரோக்கியண்ணா” என்று கீர்த்தி திட்ட, மாயாவோ உதட்டை பிதுக்கினாள்.

“அன்னைக்கு சொல்ல சொல்ல கேக்காம தெருவுல நிறுத்தியிருந்த பானிபூரி வண்டியில பானிபூரி வாங்கி சாப்பிட்ட. அதை எவன் ஃபோட்டோ எடுத்தான்னு தெரியல, சோஷியல் மீடியால போட்டு ஏதேதோ எழுதி வச்சிருக்கானுங்க. என்ன மாயூ இது?” என்று அலைஸ்ஸும் அவள் பங்கிற்கு திட்ட, “ஓ கோட்! நான் எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கேன். எனக்கு இந்த பகட்டு வாழ்க்கை பிடிக்கல. இப்படி சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் பிடிச்சிருக்கு” என்றவாறு வெளியில் வந்து காரில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

சுற்றி முற்றி காவலர்களை தேடிய அலைஸ், “கார்ட்ஸ் எங்க மாயூ? என்ட், ட்ரைவர் கூட இல்லை” என்று புரியாமல் கேட்க, “இது கூட உன் வேலை தானா ஜிலேபி?” என்று முறைப்பாக கேட்டாள் கீர்த்தி.

“இன்னைக்கு அவங்களுக்கு லீவ்” என்றவாறு வண்டியை உயிர்ப்பித்த மாயா, அடுத்து அவர்கள் திட்டியதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. ஒரு நடன அரங்கத்திற்கு முன் காரை நிறுத்தியவள், உள்ளே விறுவிறுவென செல்ல, அவளை முறைத்தவாறு அவள் பின்னே சென்றனர் அவளின் இரு நண்பிகளும்.

ரோஹன் தனியாக நடனப் பயிற்சிக்கென ஒரு நிலையத்தை ஆரம்பித்திருக்க, பல பேர் அவனிடத்தில் நடனம் கற்று வருகின்றனர். அதுவும், சினிமாத்துறையில் பல முண்ணனி பாடல்களுக்கு ரோஹனே நடன பயிற்சி செய்திருக்க, சினிமாத்துறையிலும் சிறந்த நடன கலைஞர் என்ற பெயரை கூட பெற்றிருந்தான் அவன்.

மூன்று பெண்களும் உள்ளே வர, ரோஹன் சில மாணவர்களுடன் நடனப்பயிற்சி செய்துக் கொண்டிருக்க, அங்கு ஓரமாக நின்றவாறு ‘தானும் ஆடுகிறேன் பேர்வழி’யென்று விழுந்து புரண்டு உருண்டுக் கொண்டிருந்தனர் மூன்று குட்டி வண்டுகள்.

அதில் மஹேந்திரனுக்கோ தன் தந்தையின் நடனம் என்றால் அத்தனை பிரியம். ரோஹனும் தன் புதல்வனை தன் அரங்கத்திற்கு கூட்டி வந்து தன்னுடனே வைத்திருப்பான். இதில் தன் மாமாவின் நடனத்தை பார்க்கவென அடம்பிடித்து இங்கு வந்துவிடுவார்கள் ஆத்விகா(கீர்த்தி, பாபியின் தவப்புதல்வி) மற்றும் அகஸ்டின் (சஞ்சய், அலைஸ்ஸின் புதல்வன்). அதிலும் அகஸ்டின் ரோஹனின் தீவிர விசிறி என்று கூறலாம்.

“என் டாடி எவ்வளவு சூப்பரா டான்ஸ் பண்றாரு. இவ டாடிக்கு ஆடவே தெரியாது அகி” என்று எப்போதும் போல் மஹி ஆத்விகாவை வம்பிழுக்க, “நோ… என் டாடிக்கும் தெரியும்” என்று தன் தந்தைக்கு வக்காலத்து வாங்கினாள் அந்த குட்டிப்பெண்.

இருவரையும் மாறி மாறி பார்த்த அகஸ்டின், “ஷட் அப்! ரோஹன் அங்கிள் டான்ஸ்ல ஸ்டார், பாபி அங்கிள் பாஸ்கெட்போல் ச்சேம்பியன். புரியுதா?” என்று கடுப்படிக்க, “உன் டாடிக்கு இது இரண்டுமே தெரியாது” என்று மஹி அவனையும் வாரினான்.

அவனை முறைத்த அகஸ்டின், “ஏன், ஜிலேபி ஆன்ட்டிக்கு கூட டான்ஸ் சுட்டு போட்டாலும் வராதுன்னு கீர்த்தி ஆன்ட்டி சொல்லியிருக்காங்க” என்று சொல்ல, ஆத்விகாவும் சிரிக்க, அங்கு மூண்டது கலவரம். சிறுவர்களிடத்தே காணப்படும் சாதாரண பிரச்சினை பெரிதாகி, ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள, சத்தம் கேட்டு திரும்பிய ரோஹன் அவர்களை விலக்க பதறிக் கொண்டு ஓடி வந்தான்.

அப்போது தான் வந்த மூன்று பெண்களின் கண்ணுக்கும் இது விழுந்து தொலைக்க, “அய்யய்யோ!” என்று பதறியபடி ஓடிச் சென்று அவர்களை விலக்கி விட்டனர். “ம்மீ, உங்களுக்கு டான்ஸ் தெரியாதுன்னு அகி கிண்டல் பண்றான்” என்று மஹி போட்டு கொடுக்க, அலைஸ்ஸோ “அகி…” என்று தன் மகனை முறைத்தாள்.

“ஆமா, சொன்னேன். ஆனா, கிண்டல் பண்ணல்ல” என்று அகி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொன்ன தொனியில் மாயாவோ சிரித்தவாறு அவன் கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்து, “நீ சரியா தான் சொல்லியிருக்க தங்கமே…” என்று அணைத்துக் கொண்டாள். மஹியோ தன் அன்னையை முறைத்து பார்க்க, ரோஹனோ அவள் அகிக்கு முத்தமிடுவதை உதட்டை பிதுக்கிக் கொண்டு பார்த்தான்.

“ஆதி, நீ என்ன பண்ண?” என்று கீர்த்தி முறைப்புடன் கேட்க, “நான் சமத்தா இருந்தேன் மா. இவங்க தான் பேட் பாய்ஸ், சண்டை பிடிச்சாங்க” என்று தன் இரு தோழர்களையும் முகத்தை சுழித்தவாறு பார்த்துக் கொண்டு ஆத்விகா சொல்ல, இப்போது முறைப்பது அந்த குட்டி வண்டுகளின் முறையானது.

“ஜிலேபி ஆன்ட்டி, நீங்க லாஸ்ட் டைம் கொடுத்த லிப்ஸ்டிக் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவ்வளவு சூப்பர்” என்ற ஆத்விகாவுக்கு மாயா கொண்டு வந்து கொடுக்கும் ஒப்பனை பொருட்களில் அத்தனை பிரியம். அவளின் தலைமுடியை செல்லமாக கலைத்து விட்ட மாயா, “நெக்ஸ் டைம் வீட்டுக்கு வரப்போ, உனக்குன்னு ஸ்பெஷலா ரெடி பண்ண மினி கோஸ்மெடிக் பாக்ஸ் கொண்டு வர்றேன்” என்று சொல்ல, அந்த குட்டி மலருக்கோ ஒரே குஷி தான்.

“அம்மு” என்ற தன்னவனின் அழைப்பில் திரும்பியவள், கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த தன்னவனை பார்த்து, திருதிருவென விழித்துக் கொண்டு நின்றாள். ரோஹனோ அங்கிருந்த ஒரு அறையை கண்களால் காட்டிவிட்டு அந்த அறைக்குள் நுழைய, குழந்தைகளை தன் நண்பிகளின் பொறுப்பில் விட்டு தன்னவனின் பின்னாலே ஓடினாள் மாயா.

உள்ளே நுழைந்து கதவை சாத்தியவள் தன்னவனை தேட, பின்னாலிருந்து அவளை அணைத்துக் கொண்டு, அவளின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்த ரோஹன், “கார்ட்ஸ் இல்லாம வெளில போக கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்” என்று கண்டிப்பான குரலில் கேட்டாலும், தன்னவளின் அருகாமையில் சற்று தடுமாறத் தான் செய்தது. அவளுக்கோ அவனின் இதழ் ஊர்வலம் உடலை சிலிர்க்கச் செய்ய, வாயில் வார்த்தை வந்தால் தானே!

“அது… அது வந்து…” என்று மாயா தடுமாற, அவளின் தடுமாற்றத்தில் மென்மையாக சிரித்தவன் தன் பிடியை தளர்த்தி, அவளின் முன் ஒரு அழைப்பிதழை காட்ட, அதை புரியாது வாங்கி பார்த்தவளுக்கோ கண்கள் சாரசர் போல் விரிந்துக் கொண்டது.

சந்தோஷத்தில் துள்ளி குதித்தவாறு தன்னவன் புறம் திரும்பி, அவனை தாவி அணைத்தவள், “வாவ்! பேபி, இன்னும் வன் மன்த்ல நடக்க போற சினி அவார்ட் ஃபங்ஷன்ல உன் பேர் நோமினேட் ஆகியிருக்கு, மீ ஹேப்பி…”   என்று உற்சாகமாக சொல்ல, அவளை அணைத்து தன்னுள் அடக்கியவன், விடாமல் பேசிக் கொண்டு சென்ற அவள் இதழ்களை தன் இதழ் கொண்டு அடக்கினான்.

சிறிதுநேரம் அவளின் இதழ்தேனை பருகிவிட்டு விலகியவன், “எல்லாமே உன்னால தான் டெவில், ஏன்டி என்னை இவ்வளவு காதலிக்கிற?” என்று கண்களில் காதல் ததும்ப உணர்ச்சி பூர்வமாக கேட்க, குறும்பு பார்வையுடன் உதட்டை பிதுக்கி, தோளை குலுக்கினாள் மாயா.

அதில் மேலும் கிறங்கியவன் மீண்டும் அவளின் இதழை சிறைப்பிடிக்க நெருங்க, “அய்யோ! பேபி வேணாம்” என்று முகத்தை மூடிக் கொண்டாள் அவள். ‘என்ன பண்றா இவ?’ என்ற ரீதியில் ரோஹன் அவளை கேள்வியாக பார்க்க, இருவிரல்களை மட்டும் விலக்கி அவனை ஏறிட்டவள், “ஒருதடவை உன் கன்னத்தை கடிச்சி வச்சதுக்கு இப்போ வரைக்கும் என் கன்னத்தையும், மூக்கையும் கடிச்சி பழிவாங்கிகிட்டு இருக்க. மஹி கேக்கும் போது ரொம்ப ஷேம் ஆ இருக்கு பேபி” என்று சிணுங்கியவாறு சொன்னாள்.

அதில் வாய்விட்டு சிரித்த ரோஹன், தன்னவளை இழுத்து அணைத்து, நெற்றியில் அழுந்த முத்தமிட, அவன் அணைப்பில் தன்னை புதைத்துக் கொண்டாள் அவள்.

ஒரு மாதம் கழித்து,

அந்த விருது வழங்கும் விழா அரங்கமே சினிமாத் துறையின் நடிகர் நடிகைகளினால் நிரம்பியிருக்க, பல தொழிலதிபர்கள், விருந்தினர்கள் வருகை தந்து அந்த விழாவையே சிறப்பித்தனர்.

ரோஹனின் மொத்த குடும்பமுமே விழாவுக்கு வருகை தந்திருக்க, அலீஷாவை பார்த்த மஹி, “அகி, என்னடா இவ? மேக்கப்குள்ள ஃபேஸ் அ வச்சிக்கிட்டு வந்திருக்கா. ப்பாஹ்… பேய் மாதிரி இருக்கால்ல?” என்று அகஸ்டினிடம் சொல்லி சிரிக்க,

அவனை தாண்டி ஆத்விகாவை எட்டிப் பார்த்த அகஸ்டினும், “ஆமா… ஆமா…” என்று சொல்லி சிரித்தான். இது ஆத்விகாவின் காதில் சரியாக  விழுந்து தொலைக்க, இருவரையும் பார்வையாலேயே எரித்துக் கொண்டிருந்தாள். 

கால் மேல் கால் போட்டவாறு ரோஹன் கோபமாக தொலைப்பேசியை நோண்டிக் கொண்டிருக்க, அவனை உதட்டை பிதுக்கியவாறு பார்த்த மாயா பக்கத்திலிருந்த பாபியை சுரண்டி, “தருணு, என் ஆள கரெக்ட் பண்ண ஐடியா கொடுடா” என்று பாவம் போல் சொன்னாள்.

அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்த பாபி, “பேபி, இந்த டயலாக்கை நீ விடவே மாட்டியா? இல்லை, தலைல டப்பா விழுந்து மறுபடியும் பழசெல்லாம் மறந்துட்டியா?” என்று கேட்க, ரோஹனுக்கோ இதெல்லாம் காதில் விழுந்தாலும் கண்டுக்காதது போல் இருந்தான்.

“தங்கச்சிமா, ஏன்டா என்னாச்சு? உன்னை திட்டினானா அவன்?” என்று சஞ்சய் கோபமாக கேட்க, “அய்யோ! சும்மா இருங்கண்ணா. ஜிலேபிக்கு வேற வேலையே இல்லை. கை கால்ல வச்சிகிட்டு சும்மா இருக்காம ஏதோ பண்ணி வச்சிருக்கா. அதான், ரோக்கியண்ணா கோபமா இருக்காரு” என்று தன் அண்ணனுக்கு சாதகமாக பேசினாள் கீர்த்தி.

‘கிராதகி’ என்று தன் நண்பியை முறைத்த மாயா, பாபியும் சஞ்சய்யும் தன்னை கூர்மையாக பார்ப்பதை உணர்ந்து, “ஹிஹிஹி… நான் எதுவுமே பண்ணல்ல. ரூஹி பங்ஷன்க்குன்னு ஸ்பெஷலா ரெடி பண்ண ட்ரெஸ்ல இத்துணூன்டு கோஃபிய கொட்டிட்டேன். அதான், என் மேல இம்புட்டு கோபம். ச்சே…” என்று சலித்துக் கொள்ள, ரோஹனோ சட்டென்று நிமிர்ந்து அவளை உக்கிரமாக முறைத்துவிட்டு குனிந்துக் கொண்டான்.

“இவள திருத்தவே முடியாது” என்று அலைஸ் சொல்லி வாய்விட்டு சிரிக்க, “ஏன்டா ஜிலேபி ஆன்ட்டி இவ்வளவு சேட்டை பண்றாங்க?” என்று மஹியிடம் கேட்டாள் ஆத்விகா. “ஆதி, எங்கம்மாவோட சேட்டைக்கு கூட்டுக் களவாணியே உங்க டாடி தான்” என்று மஹி அவளை வார, அவளோ அவனை முறைத்துவிட்டு அகஸ்டின் பக்கத்தில் போய் அமர்ந்துக் கொண்டாள்.

பெண்கள் என்றாலே ஆகாத அகஸ்டினோ அவளை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தள்ளி அமர்ந்துக் கொள்ள, மஹியோ வாயை பொத்திக் கொண்டு சிரித்ததில், அவனின் தலையிலே ஓங்கி கொட்டினாள் அந்த குட்டிப் பெண்.

அடுத்தடுத்தென்று விருதுகள் வழங்கப்பட்டு பல நிகழ்ச்சிகளுக்கு பிறகு நடனக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் தருணமும் வந்தது. மாயாவோ இடம், பொருள் பாராது கண்களை மூடிக் கொண்டு ஏதேதோ முணுமுணுத்தவாறு கடவுளை வேண்ட, மஹியோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு, “ம்மீ…” என்று அதட்டினான்.

ரோஹனோ வெளியே விரைப்பாக காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் தன்னவளை ரசித்துக் கொண்டிருக்க, “த பெஸ்ட் டான்ஸ் க்ரியோக்ராஃபெர் அவார்ட் கோஸ் டூ ரோஹன் சைதன்யா” என்று பெயர் அறிவிக்கப்பட, மாயாவோ ரோஹனை தாவி அணைத்து, “நீ ஜெயிச்சிட்ட பேபி” என்று உற்சாகமாக சொன்னாள்.

அவளிடமிருந்து விலகி அவளை முறைத்தவன், அவளின் கண்கள் மின்னுவதை பார்த்து கோபத்தை மறந்து சிரித்துவிட்டு, “உன்னால மட்டும் தான் டி என்னை அடக்கி ஆள முடியும்” என்றவாறு அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, மேடைக்கு சென்று பல கரகோஷங்களுக்கு மத்தியில் விருதை பெற்றான்.

மாயாவோ தன்னவனை நெட்டி முறித்து, “எம்புட்டு அழகு உன் டாடி” என்று தன் மகனிடம் சிலாகித்து சொல்ல, அவளின் புதல்வனோ இவளின் மொத்த குறும்புகளுக்கும் அரசனாக, “ஆமா ம்மீ, ஆனா எனக்கொரு டவுட்டு. சூப்பர் ஹீரோ மாதிரி இருக்குற என் டாடிக்கு உங்கள எப்படி பிடிச்சது?” என்று போலியாக ஆச்சரியப்படுவது போல் கேட்க, எல்லாரும் பக்கென்று சிரித்து விட்டனர்.

மாயாவோ தன் மகனின் தலையில் ஒரு கொட்டு வைத்து, மேடையில் விருதை கையிலேந்தியிருந்த தன் ரூஹியை கவனிக்க, ரோஹனோ மைக்கை கையில் வாங்கியவன், “ஹெலோ எவ்ரிவன், ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் தேங்க் யூ சோ மச். டான்ஸ் என்னோட உயிர். அந்த கனவை அடைய பல வருடங்கள் நான் காத்துகிட்டு இருக்க வேண்டி இருந்திச்சி. ஆனா, இந்த விருதுக்கு என்னை விட என் வைஃப் தான் தககுதியானவங்க” என்று சொல்ல, மாயாவுக்கோ கண்கள் கலங்கிவிட்டது.

“என்னோட கனவை தொலைச்சிட்டு, அதை அடைய எந்த முயற்சியும் பண்ணாம நான் இருந்தப்போ, என் வாழ்க்கைய வசந்தமா மாத்தி, இந்த டான்ஸ் ஃபீல்ட்குள்ள என்னை திரும்ப வர வைச்சா. என்னோட ஒவ்வொரு பெஃபோர்மன்ஸ்லயும் ஏதோ அவளே பெஃபோர்மே பண்ண போற மாதிரி அவ்வளவு படபடப்பா இருப்பா. இப்போ கூட என்னை விட அவளுக்கு தான் அவ்வளவு சந்தோஷம்.

ஒரு ஆணோட வெற்றிக்கு பின்னாடி ஒரு பெண் இருப்பான்னு சொல்லுவாங்க. இத்தனை நாள் அதை சாதாரண வசனமா தான் கேட்டிருக்கேன். பட், என் லைஃப்ல அது உண்மையாகிறுச்சி. என்னோட கனவ நினைவாக்கின தேவதை அவ. மை ஸ்வீட் டெவில். ஐ லவ் யூ மாயா” என்று பேசி முடித்த ரோஹன் மேடையிலிருந்து இறங்கி வந்து, ஒரு கையில் விருதை ஏந்திக் கொண்டு மற்ற கையால் தன்னவளை அணைத்துக் கொண்டான்.

பாபி, கீர்த்தி, சஞ்சய், அலைஸ் அவர்களை புன்னகையுடன் பார்த்திருக்க, மூன்று வண்டுகளும் துள்ளி குதித்து, கத்தி கரகோஷம் எழுப்ப, விழியோரத்தில் துளிர்ந்த கண்ணீரை தன்னவனின் கோட்டிலே துடைத்த மாயா,  “லவ் யூ ரூஹி” என்று சொல்லி அழுதே விட, அவளின் கண்ணீரை துடைத்து, தன்னவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்ட ரோஹனின் விழிகளும் லேசாக கலங்கித் தான் இருந்தது.

இதை அங்கிருந்த பல புகைப்படக்கருவிகள் வளைத்து வளைத்து படம்பிடிக்க, பல பேர் மனதிலும் இவர்களின் காதலுடனான பிணைப்பு ஆழமாக பதிந்து போனது.

காளையவனை கண்டதும் கொண்ட நேசத்தில்…
நான் என்னை மறக்க…
அவனோ என்னை மறுக்க…

நின் கால்தடங்களில் என் தடம் பதித்து உன் ஸ்பரிசம் அதனை அதில் உணர்ந்து பூரிக்கும் பேதையானேன்…

என் சேட்டைகளில் சிவக்கும் உன் கோப வதனம் அதை காணும் ஆவலில் குறும்புகளுக்கே அரசியானேன்…

சூரியக் காதலனின் கதிருக்கு ஏங்கும் மலர் போல் உன் பார்வைக்கு ஏங்கும் மங்கையவளின் காதலை புரிந்தும் புரியாமலும் அவன் இருக்க…

வாய் மறுத்தாலும் விழிகள் காதல் மொழி பேசி அவளுக்காக காத்திருந்த இராமனவனை அவள் அறிந்தும் அறியாமலும் இருக்க…

போதையிலும் கொடிய போதை காதல்போதை…
அதில் தன்னை இழந்தாள் ராதை…
விரும்பியே தொலைந்த அவளின் அந்த போதை தெளிய வேண்டுமடா நீ,  அதே காதல் போதை…

***** முற்றும் *****

ஷேஹா ஸகி💙

Leave a Reply

error: Content is protected !!