Thanimai – 16

1111-61d7a513

Thanimai – 16

ராமலிங்கத்தின் கோபம்

நேற்று இரவு பேசும்போது நார்மலாக இருந்தாளே விடிவதற்குள் என்ன நடந்திருக்கும் என்ற சிந்தனையோடு சேலம் சென்றடைந்தான் அரவிந்தன். திருமணமான புதிதில் இரண்டுநாள் மட்டும் பேருக்கு மாமானரின் வீட்டில் தங்கியவன் அதன்பிறகு இன்றுதான் அங்கே செல்கிறான்.

அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்த செல்வியோ வாசலில் நிழலாடுவது கண்டு வேகமாக வாசலுக்கு வந்தவர், “வாங்க மாப்பிள்ளை” வரவேற்று ஹாலில் அமர வைக்க, சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து வெளியே வந்தார் ராமலிங்கம்.

மாமனார் – மாமியாரின் முகம் சரியில்லாமல் இருப்பதைக் கவனித்தவனின் மனம் வேகமாக நடந்தது என்னவென்று ஓரளவு யூசித்துவிட்டவனின் பார்வையோ மனையாள் மற்றும் மகளைத் தேடியது.

“அப்பா..” என்ற அழைப்புடன் ஓடிவத மகளை வாரியணைத்து முத்தமழை பொழிந்த அரவிந்தனைக் கண்டு ராமலிங்கத்தின் மனதில் சுருக்கென்று வலித்தது. தன் தந்தைக்கு தான் குறைந்தவளல்ல என்றுஅவனின் கன்னத்தில் முத்தமிட்டு நிரூபித்தாள் உதயா.

சற்றே தள்ளி நின்று அவர்களை பாசபிணைப்பை இமைக்க மறந்து ரசித்த கீர்த்தியிடம், “உனக்கு தேவையானதை எடுத்துட்ட இல்ல” என்றதும் சம்மதமாகத் தலையசைத்தாள்.

அவளின் கையிலிருந்த பேக்கை வாங்கி கொண்டு, “அவங்ககிட்ட சொல்லிட்டு வா” மகளை மறுகையால் தூக்கிக்கொண்டான்.

திடீரென்று வந்த மருமகனின் பேச்சில் தெரிந்த வேற்றுமையால் மனம் காயம்பட்டு போக, “மாப்பிள்ளை உங்களோட கீர்த்தி அனுப்ப முடியாது. இத்தனை நாளாக திருமணம் வேண்டாம்னு சொல்லும்போது ஒரு தந்தையாக, மகள் திருமண வாழ்க்கையை நினைத்து பயப்படுறான்னு நினைச்சேன். ஆனால் அதுக்கு பின்னாடி அவ செய்த காரியத்தை நினைக்கும்போது ரொம்பவே அருவருப்பாக இருக்கு” என்று முகம் சுளித்தார் ராமலிங்கம்.

கீர்த்தியின் நேர்கொண்ட பார்வை தந்தையைத் துளைத்தெடுக்க, “என் மகளை உங்களுக்கு கல்யாணம் செய்து வச்சது எங்க தவறு. அவளோட நிழல்கூட உங்க மகள்மேல் படக்கூடாது. அது பாவம். அதனால் உங்க பிள்ளையைத் தூக்கிட்டு நீங்க கிளம்பலாம்” மகளின் பார்வையைத் தவிர்த்து கோபத்துடன் கூறினார்.

செல்வி மகளுக்காக பேசவும் முடியாமல், கணவனின் முடிவு தவறென்று சொல்லவும் முடியாமல் தனியே நின்று தத்தளிக்க, “உங்க முடிவுக்கு சரின்னு தலையாட்டிவிட்டு கிளம்பி போறதுக்கு அவள் உங்க மகளில்ல. கீர்த்தனா என் மனைவி. எந்தவொரு நிலையுலும் அவ தவறு செய்திருக்க மாட்டானு நான் நம்பறேன்” அழுத்தம் திருத்தமாக உரைத்த கணவனை கண்கள் கலங்கிட ஏறிட்டாள்.

உதடுகள் துடித்திட உண்மை அங்கே ஊமையாக நின்றிப்பதை கண்ட கணவனின் உள்ளம் அவளை அணைத்து ஆறுதல் படுத்திட நினைத்தது.

“எந்த தவறும் செய்யாமல் தான் ஒரு குழந்தைக்கு தாயாகி, அதை பெற்ற இடத்திலேயே வீசிட்டு வந்து இருக்காளா?” என கோபத்துடன் வார்த்தைகளை விட்டார் ராமலிங்கம்.

சட்டென்று நிமிர்ந்த கீர்த்தி, “அப்பா நான் காதல் மயக்கத்தில் கற்பை பறிகொடுத்தேன் என்று நினைக்காதீங்க. நான் கர்பமானது, எனக்கு குழந்தை பிறந்தது இரண்டுமே உண்மை தான்” என்றவளின் நிமிர்வான பேச்சு அரவிந்தனின் மனதைக் கவர்ந்தது.

கற்பு என்பது மனிதனின் மனதை சார்ந்தது. உடலளவில் கற்பு பறிபோய் விட்டதே என்ற காரணத்திற்காக அவள் தயங்கி நின்றிருந்தால் இன்று அவளை இந்த சமுதாயம் ஒதுக்கி வைத்திருக்கும். தவறு செய்யும் ஆண்கள் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்க, பாதிக்கப்பட்ட பெண்ணோ ஒழுக்கம் கெட்டவள் என்ற பட்டத்தை ஏந்திக்கொண்டு குழந்தையோடு தனித்து விடப்படுகிறாள்.

குடும்பம் என்ற ஆஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட, சமுதாயம் அவளை ஒதுக்கி வைக்க அடுத்தவர்கள் பார்க்கும் கீழ்த்தரமான பார்வைக்கு தினம் தினம் செத்து பிழைக்கும் பெண்ணின் மன உணர்வுகளை யாரும் புரிந்து கொள்வதில்லை.

ஒரு பெண் தாயென்ற நிலையை அடையும்போது அவள் அனுபவிக்கும் வலிகளைவிட, பன்மடங்கு அவள் அனுபவிக்கும் துயரத்தை உணராமல் அனுதினமும் பெண்களைக் காயப்படுத்துவதே மற்றவர்களின் வேலையாகிப் போனது.

“எவனோ செய்த தவறுக்கு நான் இன்னைக்கு உங்க முன்னாடி குற்றவாளியாக நிற்கிறேன். அதுக்காக நான் செய்தது சரின்னு சொல்ல மாட்டேன். அன்னைக்கு நடந்ததை சமுதாயத்தின் கண்களில் இருந்து சாதுர்யமாக நான் மறைத்து இருக்கலாம். ஆனால் ஒரு குழந்தைக்கு தாயென்று என் மனசாட்சிக்கு நல்லாவே தெரியும்” அவளின் வார்த்தைகள் பெற்றோரை உலுக்கியது.

“யாரோ செய்த தவறுக்காக என்னைப் பெற்றவர்களோட மானம் பறிபோகக் கூடாதென்ற ஒரே காரணத்திற்காக, நான் பெற்ற குழந்தையை வந்து நான் அனுபவிக்கும் வலி என்னன்னு சொன்னால் உங்களுக்கு புரியுமா?” கண்களில் கண்ணீர் ஊற்றேடுக்க இடைவிடாமல் தொடர்ந்தாள்.

“ஒரு தாயாக குழந்தையோட எதிர்காலத்தை யோசிக்காமல் சுயநலமாக இருந்துவிட்டேனோ என்று அடிக்கடி நினைப்பேன். என் மனம் நிம்மதி இல்லாமல் தவிக்க அதிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்னு யோசிச்சு சில கண்டிஷனுடன் திருமணத்திற்கு சம்மதிச்சேன்” பெண்ணவளின் பார்வை கணவனின் மீது படிந்து மீண்டது.

இத்தனையும் செய்த தன்னைத் தவறாக நினைத்துவிட்ட தந்தையின் மீது பார்வையை படரவிட்டவள், “என்னை நம்பாத உங்க வீட்டிற்கு இனிமேல் நான் வர மாட்டேன்” அழுத்தத்துடன் கூறியவள் கணவனோடு சேர்ந்து வீட்டைவிட்டு வெளியேறினாள்.

தன் மகளின் பேச்சில் இடிந்து போனவர் தொப்பென்று சோபாவில் அமர்ந்தார். அதே நேரத்தில் இந்த உண்மையை அறிந்திருந்த தாயின் மனமோ மகள் எங்கிருந்தாலும் நன்றாய் வாழ வேண்டும் என்று வழக்கம்போலவே இறைவனுக்கு பிராத்தனை வைத்துவிட்டு கலங்கிய கண்களோடு சமையலறைக்குள் தஞ்சமடைந்தார்.

அன்னூர் செல்லும் பேருந்தில் ஏறிய பிறகும் அரவிந்தன் மனைவியிடம் எதுவும் பேசவில்லை. ஏற்கனவே தூங்கிருந்த மகளை மடியில் போட்டு தட்டிக் கொடுத்த கீர்த்தி கணவனின் தோளில் முகம் புதைத்தாள். எந்த காரணத்தை கேட்காமல் தோளோடு சேர்த்தணைத்து, இதமாக தலையை வருட நிம்மதியான உறக்கம் அவளின் விழிகளை தழுவியது.

இரவு முழுவதும் ஏதேதோ எண்ணத்தின் பிடியில் சிக்கி தூக்கமின்றி தவித்தவள், கணவனின் தோளில் தன்னையும் மறந்து துயிலில் ஆழ்ந்த கீர்த்திக்கும், தாய் மதிதனை மஞ்சமாக நினைத்து நித்திரையில் இருந்த மகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறியது அரவிந்தனின் நெஞ்சம்.

மனையாளையும் மழலையாய் பாவித்து, இரண்டு குழந்தைகளின் வளமான எதிர்காலம் தன் கையிருக்கும் கடமை உணர்ந்து கீர்த்தியின் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தான். அதே நேரத்தில் பஸ்ஸில் ஒலித்த பாடல் மயிலிறகாய் மாறி அவனின் மனம் வருடியது.

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

அடி நீதான் என் சந்தோசம்

பூவெல்லாம் உன் வாசம்

நீ பேசும் பேச்சேல்லாம்

நான் கேட்கும் சங்கீதம்

 

உன் புன்னகை

நான் சேமிக்கின்ற செல்வம்மடி

நீ இல்லையென்றால்

நானும் இங்கே ஏழையடி

 

நெடுங்காலமாய் புழங்காமலே

எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே

உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே

உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே

 

தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக

நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி

நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி

 

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

 

மழை மேகமாய் உருமாறவா

உன் வாசல் வந்து உயிர் தூவவா

மனம் வீசிடும் மலராகவா

உன் கூந்தல் மீது தினம் பூக்கவா

 

கண்ணாக கருத்தாக

உனை காப்பேன் உயிராக

 

உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே

அட உன்னுள் உறைந்தேனே

இன்று என்னுள் மாற்றம் தந்தாயே

உனை என்றும் மறவேனே

 

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா

 

அடி நீதான் என் சந்தோசம்

பூவெல்லாம் உன் வாசம்

நீ பேசும் பேச்சேல்லாம்

நான் கேட்கும் சங்கீதம்

 

உன் புன்னகை

நான் சேமிக்கின்ற செல்வம்மடி

நீ இல்லையென்றால்

நானும் இங்கே ஏழையடி

 

வீடு வந்து சேர்ந்தவுடன் மனைவியின் பக்கம் திரும்பியவன், “பாப்பாவை நான் தூங்க வைக்கிறேன். நீயும் குளிச்சிட்டு வந்து தூங்கு” என்றவன் உதயாவைத் தூக்கி சென்று கைகால்களை கழுவிவிட்டு குடிப்பதற்கு பால் கொடுத்தான்.

ஏற்கனவே அரை தூக்கத்தில் இருந்த உதயா பாலை குடித்தவுடன் உறங்கிவிட்டாள். அதற்குள் குளித்துவிட்டு வந்த கீர்த்தி கணவனின் அருகே அமர்ந்து காற்றில் ஆடும் வின்ட் செயின்னை வேடிக்கை பார்த்தாள்.

அவளின் தோளை பற்றிய கரங்களின் ஸ்பரிசத்தில், “ரவி.. அப்பா என்னை எப்படி தவறா நினைச்சாருன்னு சத்தியமா புரியல” என்றவளின் விழிதனில் கண்ணீர் கரையுடைக்க விம்மி அழுதாள்.

அவளை தோளோடு அணைத்த அரவிந்தன், “ஷ்.. என்ன நீ இதுக்கெல்லாம் அழுகிற?” என்று அதட்டினான்.

“நேற்று அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா ரவி?” கேள்விக்கு அவன் மறுப்பாக தலையசைக்க,

“எவளோ பெத்த குழந்தையைக் கொஞ்சிட்டு இருக்கிற.. உனக்குன்னு ஒரு குழந்தையை எப்போ பெத்துக்க போறன்னு கேட்கிறாங்க. அப்போ உதயா என் குழந்தை இல்லையா?” என்று விம்மலோடு கேட்க அரவிந்தன் சட்டென்று மௌனமானான்.

அவனின் பதிலை எதிர்பார்க்காமல், “அப்படி கேட்டதும் கோபத்தில், ஏற்கனவே பெத்த குழந்தையைத் தூக்கி வீசிட்டு வந்த ரணம் இன்னும் ஆறாத வடுவா மனசில இருக்கு. அதுக்கு மருந்தாக நினைச்சு உதயாவை வளர்த்துட்டு இருக்கேன். ஆரிய காயத்தை கீறி விடாதீங்கம்மான்னு சொல்லியதை அப்பா கேட்டுட்டார்” அவனின் மார்பில் முகம் புதைத்து அழுகத் தொடங்கினாள்.

தவறு செய்யாமல் பாதிக்கபட்ட கீர்த்தியின் மனவருத்தம் அரவிந்தனை வெகுவாக பாதித்தது. அவளின் நிலையை நேரில் இருந்து பார்த்தவன் என்பதால் அவளின் பக்கமிருக்கும் நியாயம் அவனுக்குப் புரிந்தது.

ஒரு பெண் மனமறிய தன்னை ஒருவரிடம் ஒப்படைத்துப் பிறகு அந்நிகழ்வு நடந்து, காதலுக்கு சாட்சியாய் குழந்தைப் பிறந்திருந்தால் தவறில் எனக்கும் பாதி பங்குண்டு என்று ஒப்பு கொள்வாள்.

இங்கே பாதிக்கப்பட்ட பெண்ணாய், திசையறியாமல் நிர்கதியாய் நின்றவள், பத்து திங்கள் சுமந்து வலியோடு ஈன்றெடுத்த குழந்தையை வேண்டாமென்று விட்டுவிட்டு வந்தபிறகும், அதன் வலியை ரணமாய் சுமப்பது எவ்வளவு கொடுமையானது என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது.

மற்றொரு பக்கம், ஏற்கனவே தன்னை தெரியும் என்ற காரணத்தினால் உண்மையைச் சொல்லி பயமின்றி திருமணத்திற்கு சம்மதித்தாள். அதுவே அவளின் மீது கடுகளவு தவறு இருந்திருந்தாலும் உண்மையை மூடி மறைத்திருக்க வாய்ப்புகள் அதிகமே!

தாய் – தந்தையின் மனம் தன்னால் நோகக்கூடாதென்று என்று எடுத்த முடிவு மீண்டும் அவளேயே பாதிப்பதைப் புரிந்த பின்னும், பெற்றோரின் பாசத்திற்கு ஏங்கும் கீர்த்தியின் மீது அரவிந்தனுக்கு இறக்கம் சுரந்தது.

அரவிந்தன் அவளின் தலையை வருடியபடி மௌனமாக இருக்க, “ரோட்டில் போகும் நாய் நம்மை கடித்துவிட்டால் ஒரு ஊசி யை போட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க போறோம். ஆனால் அதே ஒரு பெண் பாலியலில் பாதிக்கப்பட்டு கற்பினை இழந்தால் அவளின் ஒழுக்கத்தை கேள்வி குறியாக்கி பேசறோம். அது எந்தவிதத்தில் பெண்ணின் மனதை பாதிக்கும்னு இங்கே யாரும் யோசிப்பதில்லை ரவி” என்றவள் தொடர்ந்து,

“அன்னைக்கு அவன் செய்த கீழ்த்தரமான செயலுக்கு நான் சிலுவையை சுமந்தேன். அதுக்காக நான் செய்ததெல்லாம் சரின்னு சொல்லல. அப்பா – அம்மாவிடம் உண்மையை மறைத்தது தவறுதான். அதே மாதிரி அந்த குழந்தையை விட்டுட்டு வந்ததும் மன்னிக்க முடியாத குற்றம்தான்” இடைவெளிவிட்டு மீண்டும்,

“அன்றைய சூழ்நிலையில் பக்குவமற்ற வயதில் கைக்குழந்தைக்கு தாயாய் இருந்த எனக்கு படிப்புதான் நமக்கு முக்கியம்னு நினைச்சு எடுத்த முடிவால் எவ்வளவு தனிமையை அனுபவிச்சேன் தெரியுமா?” தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி சொல்ல தொடங்கினாள்.

பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து ரிசல்ட் வரும் நாள். கீர்த்தனா வகுப்பில் நன்றாக படிக்கும் பெண் என்றபோதும் இயல்பான பயம் மனதைப் படபடக்க வைத்தது. வீட்டிலிருந்து ரிசல்ட் பார்க்கும் பொறுமையின்றி தன் தோழியோடு பள்ளிக்கூடம் சென்றாள்.

அங்கே இன்னும் ரிசல்ட் ஒட்டாமல் இருப்பதைக் கண்ட அவளின் வகுப்புத்தோழி, “பக்கத்தில் இருக்கும் பிரவுசிங் சென்டருக்கு சென்று மார்க்கை பார்த்துவிட்டு வரலாம் வா” என்று அழைத்து சென்றாள்.

மறுப்பு சொல்லாமல் அவர்களோடு சென்ற கீர்த்தி பிரவுசிங் சென்டரின் முன்பு கூடியிருந்த கூட்டத்தைக் கண்டு, “இவ்வளவு கூட்டத்தில் நின்று ரிசல்ட் பார்ப்பதற்கு பதிலாக அங்கேயே இருக்கலாம்” என்றாள் பொறுமை இழந்து.

அதற்குள் ரிசல்ட் வந்துவிட ஒவ்வொருவராக சென்று அவர்களின் ரிஜிஸ்டர் நம்பர் மற்றும் டேட் ஆப் பார்த்த சொல்லி தங்களின் மதிப்பெண்ணைப் பார்த்து மகிழ்வுடன் சென்றனர்.

கீர்த்தியும் மற்றவர்கள் போல தன் விவரம் சொல்லி ரிசல்ட்டை ஆவலோடு எதிர்பார்க்க சர்வர் பிராப்ளம் என்று வரவே, “என்னங்க இப்படி ஆகிடுச்சு.. ஒருவேளை நீங்க ஃபெயில் ஆகிருப்பீங்களோ?” நக்கலடித்து சிரித்தவனை எரிப்பதுபோல பார்த்தாள்.

ஜீன்ஸ் பேண்ட், ஒயிட் கலர் சர்ட் அணிந்து சிஸ்டம் முன்பு கம்பீரமாக அமர்ந்திருந்தவனின் முகத்தில் கர்வம் தாண்டவமாடியது. ஏனோ அவனைப் பார்த்த நொடியே கீர்த்திக்கு பிடிக்காமல் போனது.

“எனக்கு நீங்க ரிசல்ட் பார்க்க வேண்டாம். இரவு பகல் பார்க்காமல் கண்முழிச்சு படிச்சு பரீட்சை எழுதினால் இப்போ வந்து ஃபெயில் ஆகிடுவீயான்னு நல்லா கேட்கிறீங்க?” கோபத்தில் பேசிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து கிளம்பினாள்.

மற்றவர்கள் அவளை சமாதானம் செய்ய முயற்சிக்க, “ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது” வேண்டுமென்றே அவளிடம் வம்பு பேசினான் அவன்.

அங்கிருந்த அத்தனை பேரின் பார்வையும் அவனின் மீது நிலைக்க, இத்தனை பேரின் நடுவே சீறிவிட்டு சென்றவளின் மீது சுவாரசியமாக படிந்தது.

பள்ளிக்கூடம் நோக்கி நடந்தவளின் பெயரைக் சொல்லி கத்தியபடி ஓடிவந்த ராகினி, “1098 வாங்கி இருக்கிற கீர்த்தி” தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தி மார்க் எழுதியிருந்த பேப்பரை அவளிடம் கொடுத்தாள்.

அதுவரை இருந்த கோபம் சூரியனைக் கண்ட போல விலகி சந்தோசம் குடிகொள்ள, “அந்த அண்ணா உன்கிட்ட சாரி சொல்ல சொன்னாருடி” என்றதும் கீர்த்தனாவின் முகம் இறுகியது. தன் தோழியிடம் விடைபெற்று சென்றவள், கல்லூரி சேர்ந்தபிறகு அதை முற்றிலுமாக மறந்து போனாள்.

Leave a Reply

error: Content is protected !!