இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 1

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 1
Epi17
விஜயோடு பேசிக்கொண்டிருக்கவுமே ஷோருமில் கஸ்டமர் வந்ததாக கூற தருணைஅனுப்பிய பிரபா, “என்னடா தங்கச்சிக்கு உங்கம்மா மேல அவ்வளவு அக்கறை.தருண் பிரெண்டுக்கு கஷ்டம்னா
அவங்களுக்கே கஷ்டம் மாதிரி புலம்புறாங்க?”
“யாரு தங்கச்சிக்கு? “விஜய் கேட்க,
ஹ்ம்ம்ம தாரா தங்கச்சிக்கு.”
“ஒஹ்! அதை அவகிட்டத்தானே டா நீ கேட்கணும்.” விஜய் சொல்ல,
“அப்டிங்குற அப்போ லேப்டாப் வழியா அவ பேசுறதை கேட்டு வெளியே குதிச்சு வர ரெடியான கண்ணு ரெண்டு வச்சிக்கிட்டு வேறு உலகத்துல இருந்த மாதிரி இருந்தியே அதை என்னன்னு யாரை கேட்க? “
“ஆஹ்! அதைன்னா நீ என்னைத்தான் கேட்கணும். ஏன்னா அது என் கண்ணு தானே மச்சான்… “
“அப்படிங்குற…?” பிரபா கூற,
“ஆமாங்குறேன்…’ கூறிய விஜய்
சிரித்து விட்டான்.. ‘டேய் சும்மா லாலூலாய்க்கு “
“யாரு நீ. போடா போடா… இவன் இங்க சொல்லாம லவ் பண்ரான்ன நீ என்ன பண்ணிட்டு இருக்க.அதே தானே”
எனவும்,
“ச்சே ச்சே… இது வேற லெவல் நாம கலத்துல
இறங்கிட்டோம்னா அப்புறம் நம்ம லவ் தான் லவ்டா. இடையில் இருக்க தடையெல்லாம் இப்போவே சரி பண்ணிட்டா நாம பிரியா லவ் பண்லாம் இல்ல… “
“ஏதோ பண்ணுங்கடா…” என்றான் பிரபா.
அவ்விடம் வந்த தருணிடம் “டேய் உன் அம்மா நம்பரும் தாரா நம்பரும் சென்ட் பண்ணு.’ என்றவன் பிரபாவை பார்த்து கண் சிமிட்ட, ‘ ‘நல்லா வருவடா மவனே’ என கண்களாலேயே பேசினான்.
“எதுக்குடா அவங்க நம்பர்…”
ஹ்ம்ம் நம்ம மிஷன்க்கு ஏதும் ஹெல்ப் தேவைன்னா கேட்கத்தான்…”
” ஹ்ம்ம் சரிடா அனுப்புறேன் “. என்றான்.
“ஓகே, நீ அப்பா கூட ரெண்டு நாள் கழிச்சு பேசிட்டு என்கிட்ட சொல்லு ஓகே.” என்றவன் அழைப்பை துண்டித்தான்..
தருணின் தந்தையோடு பேசியதாக இவன் தருணிடம் கூறவில்லை.அவரும் கூற மாட்டேன் என்று விட்டார்… “
(விஜய், தாரா நம்பர் வாங்கிட்டானே பேச வச்சுரலாமா?)
தருணுக்கு அழைத்து பேசுவதற்க்கு முன்னமே அவனது தந்தைக்கு அழைத்திருந்தான் விஜய் அவரது நல விசாரிப்புக்கு பின்னர் அவரிடம் ஒன்றும் மறையாது அனைத்தையும் கூறினான்…
“தருண் உங்களோட பேசுறதாக சொன்னான். அதற்கு முன்னமே நான் உங்க கூட பேசனும்னு நினச்சேன் அங்கிள்.நம்ம பிரென்ஷிப் கடைசி வரை தொடரனும்னு நினைக்கிறேன் அங்கிள்.
‘புரிது விஜய்,எனக்குமே சந்தோஷம் தான். இது உங்க வீட்டுக்கு தெரிய வேணாம் இல்லையா?” குமார் கூற,
” ஹ்ம்ம் ஆமா அங்கிள் நீங்களே விரும்பி கேட்குறதா இருக்கட்டும். நா அவங்க லவ்வை மறைக்கணும்னு நினைக்கல.வீட்ல எதாவது பேசி வேணாம்னு சொல்லிட்டாங்கன்னா கஷ்டமாகிரும் அதான்.நா ஹரி அண்ணாகிட்ட பேசிட்டு சொல்கிறேன் அங்கிள்.” என்றான்.
“ஓகேப்பா. நானும் ஆன்ட்டிகிட்ட பேசுறேன்… “
“முதல்ல தருண் பேசட்டும் அதோட அவனுக்கும் நான் உங்க கூட பேசினது தெரியவேணாம். “சரிப்பா…” எனவும் அழைப்பை துண்டித்தான்.
அதன் பிறகே தருணோடு பேசினான் விஜய். அந்நேரம் தான் தாராவும் பேசியது.
இரவு ஏழு மணி இருக்க அருணா அவரது கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்க அவர் அருகே அவர் உடல் நலம் பார்க்க வந்த வள்ளி பாட்டியும் அமர்ந்திருந்தார். அருணாவின் அலைபேசி இசைக்க வேண்டா வெறுப்பாக அழைப்பை ஏற்றவர் ஹலோ எனவும்
“ம்மா… ‘என்ற குரல் அவர் கருவறை தட்டிச்சென்றது. அவர் குரல் பதிலுக்கு
எழவில்லை கண்களில் நீர் வடிந்து கன்னங்களில் உருண்டோட,
‘ம்மா.. சாரிம்மா… ‘என்றான். அவனுக்கும் பேச முடியவில்லை.
“வேணும்னே பேசாம இருந்துட்டேன் மா. பேசினா வந்துருவேனோன்னு தான் பேசல.. சாரிம்மா.பேசுங்க மா… ” என்றான் மீண்டும்.
“பேசு…” என வள்ளிப்பாட்டி அவர் கைகளை வருட,அழுகைக்கு அனை இட்டவர், பகல் தாரா அவன் நிலை பற்றி கூறியது நினைவிருக்க, “ஸ்ரீ… அம்மா எதுக்குடா கோவிச்சுக்க போறேன். நானே தான் உன்னை போக விட்டுட்டேன்.’ என விசும்பியவர்.
‘அம்மா, நீ தப்பு பண்ணினாலும் என் பையன் தானேன்னு உன் கூட நான் இருந்திருக்கணும். நானும் உன்னை ஒதுக்கி விட்டுட்டேன். நான் பேசலைன்னதும் நீயும் அம்மா கூட பேசல. ஒரு வார்த்த நீ அம்மாட்ட பேசி இருக்கலாம் டா.”
அருகே அத்தை அமர்ந்திருப்பதை உணர்ந்து வேறெதுவும் பேசாது.
” இன்னக்கி தான் அம்மா ஞாபகம் வந்ததா. எத்தனை வாட்டி தருண்கிட்ட சொல்லிவிட்டேன்.என்கிட்ட பேச சொல்லுன்னு. நீதான் பேசவே இல்லை. இன்னக்கி என்ன
திடிர்னு அம்மா ஞாபாகம் … “
(ஸ்ரீ உன்கூட பேச சொன்னதால்தான் பேசினேன்னு எப்படி சொல்வான் )
“ம்மா சாரிம்மா… உன் ஞாபகமாவே தான் இருக்கேன்.வீட்டு நினைவாவே தான் இருக்கு.இன்னும் ஆறு மாசம் இருக்கும்மா. அதற்கு பிறகு ஒரு நிமிஷம் கூட இங்க
இருக்கப் போறதில்லை.’
‘ம்மா பாட்டி எப்படி இருக்காங்க எல்லோரும் என்கூட இன்னும் கோபமா இருக்காங்களா? நான் வந்துட்டா பழைய மாதிரி என்கூட எல்லாருமா பேசுவாங்கல்ல? வீட்ல இருக்கதே கொஞ்சம் பேர் என் பிழையால நானே…’
‘ப்ச். சாரிம்மா… பாட்டிய விசாரிச்சதா சொல்லுங்க. பாட்டிகிட்ட சாரி சொன்னதா சொல்லுங்க. அப்புறம் முடியுமான டைம்ல நான் உங்ககூட பேசுறேன்” என்றான்.
“பாட்டிகூட பேசுறியா? “
“வேணாம் மா திட்டிட்டாங்கன்னா.”என இவன் அழைப்பில் கூறுவது கேட்க, இங்கு பாட்டியோ”
“வேணாம் வேணாம்… அவன் பண்ண தப்புக்கு அங்க இருந்துட்டு வரட்டும். அவ உயிர் போயிருந்தா … ” என எழுந்து சென்றுவிட்டார்..
அது விஜய்க்கும் நன்றாக கேட்டு விட,
“ஸ்ரீ…” என அருணா அழைக்க, “ம்மா.. உடம்பை பார்த்துக்கோங்க. நேரத்துக்கு சாப்பிடுங்க, நான் மறுபடியும் கதைக்குறேன். வச்சிரட்டுமா? ” எனவும்
“சரிப்பா.” என்றார்.
அப்படியே கட்டிலில் சாய்ந்து இருந்தவன் தருண், நிவி கல்யாணம் முடிஞ்சதுன்னா எல்லாம் சரியாகிடும் என மனதில் கூறிக்கொண்டு சாய்ந்திருக்க அப்படியே கண்ணயர்ந்திருந்தான்..
இங்கு தருண் பிரபாவுடன் அவர்களது இல்லம் வந்திருக்க,தாரா மற்றும் புன்யாவும் இந்த வாரம் வீடு செல்லாது வார இறுதி நாட்களில் வீட்டை சுத்தம் செய்ய வேண்டியும் கொஞ்சம் ஷாப்பிங் செய்யும் நோக்கிலும் இருந்தனர். தருண் வெளியில் உணவு கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்திருக்க சிறிது நேரம் தாராவோடு பேசிக் கொண்டுருந்த தருண் நாளை வீட்டுக்கு சென்றதும் அப்பாவுடன் பேச இருப்பதாக கூறினான்.
“ஹ்ம்ம் ஒகே ண்ணா. சாரி அவங்க வீட்டுக்கு போய்ட்டு வந்தப்புறம் கஷ்டமா இருந்தது அதான் உன்னை திட்டிட்டேன்.”
“அச்சோ பரவாயில்லை குட்டிமா. நானும் தப்புதானே. சரிபண்ணலாம் விடு.என்றவன்… ‘பிரபா என்னை திட்டப்போறன் வந்ததுல இருந்து உன்கூட பேசுறேன்னு. நீ தூங்கு நான் போகிறேன்.” என கீழே சென்றான். புன்யாவும் இன்று சீக்கிரமே உறங்கி விட்டாள்…
தாராவோ கட்டிலில் படுத்து போனை பக்கத்தில் வைத்திருக்க. அவள் நினைவுகளோ, ‘அண்ணாக்கு மேரேஜ் ஓகே பண்ணிட்டா அடுத்து என்னையும் வீட்ல கேட்பாங்களே. ஸ்ரீ மனசுல நான் இல்லன்னா? என் மனசுல ஸ்ரீய வச்சுகிட்டு எப்படி இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிப்பேன். நினைக்கவே உள்ளம் உடைந்து
நெஞ்செல்லாம் இறுகி கண்கள் மழை என பொழிய ஆரம்பித்து விட்டது. புன்யா எழுந்து விடுவாளோ என அஞ்சி மெதுவாக அலைபேசியை எடுத்துக்கொண்டு எழுந்து முன்வாசல் சோபாவில் படுத்துக்கொண்டாள்.
‘ஸ்ரீ…’ என உள்ளம் அவன் பெயரை ஜபம் செய்ய, திடுக்கிட்டு எழுந்தான் விஜய் நேரம் பார்க்க மதியம் இரண்டு எனக்காட்டியது. பசி வேறு உயிரெடுக்க எழுந்து முகத்தை கழுவி வந்தவன் உண்டு விட்டு போனை நோண்டியப் படியே மீண்டும் கட்டிலில் சாய்ந்தமர ஸ்ரீயின் நம்பர் பதிந்து வைத்த ஞாபகம் வந்தது வாட்சப்பில் அதனை ஓப்பன் செய்தவன், ஏதோ ஒரு உந்துதலில் அவளுக்கு மெசேஜ் செய்தான்…
அதே நேரம் போனில் மெசேஜ் டோனுக்கு திரும்பியவள் அலைபேசியை பார்க்க புது எண் அதுவும் வெளிநாட்டு எண் யோசித்த படியே பார்க்க, “ஸ்ரீ… ” எனும் ஒரெழுத்து கொண்ட. மெசேஜ். அதுவே சொன்னது அது யாரென்று. உள்ளம் பந்தயக்குதிரை என ஓட போனை பிடித்திருந்த விரல்களில் நடுக்கம், கண்களில் துளிர்த்த கண்ணீர், உடலில் பூனை முடிகள் சிலிர்த்து எழுந்து நிற்க என அவள் உணர்வுகளை அவள் உடல் ஒவொரு உறுப்புகளும் வெளிப்படுத்தின.அவள் மகிழ்ச்சிக்கு அளவேது.இவ்வளவுக்கு ஒரே ஒரு எழுத்து தான் மெசேஜ்ஜாக அனுப்பி இருந்தான். இவள் பார்த்து விட்டதாக அவனுக்கு நீலக்குறியீடு விழ, அவனுக்கும் படபடப்பு,
“ஸ்ரீ… “என மீண்டும் அனுப்ப,இப்போது இவள் அனுப்பினாள்.இரண்டு எழுத்தாக. ஹ்ம்…” பார்த்தவனுக்கு கண்கள் காதலை வடிக்க“தேங்க்ஸ் ஸ்ரீ.” என்றான். “
“எதுக்கு?” இது இவள்.
“எல்லாத்துக்கும்…” என்றான்.
‘எல்லாத்துக்கும் நா..’ இது தாராவின் மனம் அவளை கேட்க,அதை எப்படி அவனிடம் கேட்பது என யோசிக்க..
“எல்லாத்துக்கும்னா எதுக்குன்னு கேட்க மாட்டியா?” என்றான். எழுத்துக்கள் பல சேர்ந்து வார்த்தைகள் நீண்டன.இவள் பார்த்தும் பதில் அனுப்பாததை கண்டவன், அவனே மீண்டும்
” 1 என் கண்ணுல உன்னை காட்டினதுக்கு.
2 என்னை உன் மனசுக்குள்ள வெச்சிருக்கதுக்கு.
3 என்னை புரிஞ்சிகிட்டத்துக்கு.
4 எங்கம்மாக்கு இன்னக்கி ஆறுதலா இருந்ததுக்கு.
என ஒவ்வொரு இலக்கமாக இட்டு அவளுக்கு அனுப்ப,அவளுக்கு என்ன பதில் அனுப்புவதென்றே புரியவில்லை. “அப்புறம் ஒன்னே ஒன்னு, என்னை புரிஞ்சிகிட்டவ என் மனசை இன்னும் புரிஞ்சிக்காம இருப்பது தான் கஷ்டமா இருக்கு. ” என்றான்.
‘என்னடா இது இப்படி பட்டுன்னு இவங்க லவ்வ சொல்ராங்க.’ உள்ளம் மகிழ்ந்து கும்மாளமிட,அவள் அமைதியாக இருப்பது கண்டு,“ஸ்ரீ… என்னாச்சு பிடிக்கலையா? “
“ஹ்ம்ம் பிடிச்சிருக்கு.” என்றாள். ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. இது அவள் மனம் கும்மாளமிட.
“எது பிடிச்சிருக்கு?” என்றான்.
“உங்க தேங்க்ஸ்காண விளக்கம். ” என்றாள்.
“உண்மையா பிடிச்சிருக்கா? ” ஹ்ம்ம்
ரொம்ப.”
“ஸ்ரீ என்ன பண்ணிட்டு இருக்க இவ்வளவு நேரம் தூங்காம?” என்றான்.
“தூக்கம் வரல ஹால் சோபால சாஞ்சிருக்கேன்.” என்றாள்.ஸ்ரீ கால் பண்ணட்டுமா? எனக்கு உன்கூட கதைக்கணும் போல இருக்கு.” என்றான்.
“ஹ்ம்ம்.” என இவள் மெசேஜ் போன அடுத்த நொடி ரிங் பண்ணியிருந்தான்…
போனை காதுக்கு கொடுத்தவள் ” ஸ்ரீ…”எனும் அவன் குரல் கேட்ட அடுத்த நொடி கண்கள் கலங்க அவன் நெஞ்சில் சாய்ந்துகொள்ள ஆசை கொண்டது பென்னவளுக்கு. கிட்டத்தட்ட ஆறு வருட அவள் காதலுக்கு (ஆமாம் அவனை கிணற்றடியில் பார்த்தாளோ அந்நொடியே அவனில் வீழ்ந்தவள் வீழ்ந்து சில காலம் சென்றே அதை உணர்ந்தாள்.) அவளவனிடம் இருந்து அவளுக்கான முதல் அழைப்பு. மீண்டும் “ஸ்ரீ…” எனவும் அவள் விசும்பலுடன்
“ஹ்ம்ம்..” என்ற குரல் கேட்க,
“ஹேய் ஸ்ரீம்மா என்னாச்சுடா?”
“ஒன்னுமில்லை தேங்க்ஸ்.”என்றாள்
“இது எதுக்கு ?” என்றான். இவன்.
“தெரில சொல்லணும் தோணுது எனக்கு.” என்றாள்.
“ஸ்ரீம்மா கோவமா என்கூட? ” இவள் எதற்கென்று கேட்கவுமில்லை. அவன் சொல்லவுமில்லை.இப்படியே அவர்களது முதல் எழுத்துடன் ஆரம்பமான உரை நெடுந்தொடர் என நீண்டது…
அவர்களது உரையில் அனைத்துமே பகிர்ந்துக் கொள்பபட்டிருந்தது. அவன் வீட்டு ஹரிணி முதல் இவள் இன்று அவன் வீட்டுக்கு சென்றது வரை.( அவள் முதல் பார்வையிலே கொண்ட நீண்ட காதல் தவிர்த்து.அதை சொன்னாள் அவன் கை செயின் இவள் இடையில் குடிகொண்டிருப்பதை சொல்ல வேண்டுமே! )
“வச்சிரட்டுமா? ” என விஜய் கேட்க,
‘வேணாம் ‘ என்றாள்…
“டைமென்ன பாரு மணி ரெண்டாகுது. எனக்குன்னா இங்க ஈவினிங் நான்கு மணிதான். நீ தூங்குடா நான் காலையில பேசுறேன்.” என்றான்.
“அண்ணா, புன்யா எல்லாம் இருக்காங்க.”என்றிட,
“இருக்கட்டுமே.அதுக்கென்ன ஸ்ரீம்மா…”
“அச்சோ ஸ்ரீப்பா … நா எப்படி அவங்க முன்னாடி… தப்பா நினைச்சுக்க போறாங்கப்பா.” என்றாள்.
“அப்போ யாருக்கும் தெரியாம லவ் பண்ணலாம்னு சொல்றியா?” எனவும்
“எதுக்கு ஒருத்தங்க அப்படி பண்ணிட்டு நீங்க படர கஷ்டம் போதும்.” என்றாள் பட்டென்று. “அப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு. ‘என்றான்.
“அண்ணா மேரேஜ் பிக்ஸ் ஆனதுக்கப்றம் நா அப்பாகிட்ட எனக்கு ஸ்ரீ வேணும்னு சொல்லிருவேன்.” என்றாள்…
“அது வரைக்கும் இப்படியே இருக்கலாம் என்றாள்…
“ஹ்ம்ம். சரிம்மா அப்டின்னா ஓகே
தான்.” என்றான்.
“ஸ்ரீப்பா எனக்கு உங்களை பார்க்கனும் போல இருக்கு.” எனவும்,
“இப்போ நீ என்னை பார்த்தன்னா, யாரு நீங்கன்னு கேட்ப அப்படி இருக்கேன்.” என்றவன் “நா வந்தப்றம் நேர்ல பார்த்துக்கோ. அது வரை நானுமே உன்னை பார்க்கணும்னு சொல்லப்போறது இல்லை. என்னால உன்னை பார்த்துட்டு அதுக்கப்றம் இங்க இருக்க
முடியாது என்றான் .இப்போ சமத்தா
தூங்குவீங்களாம்.நாளை நீ பிரியா இருக்கப்ப மெசேஜ் பண்ணு நான் கால் பண்றேன்.’ என்றவன் ‘வெச்சிரட்டுமா?”என்றான்.
“ஹ்ம்ம் என்றவள், டேக் கேர் ஸ்ரீ…” என போனை தூண்டித்தாள்.உள்ளம் குளிர்ந்து இதமாக இருக்க இருவருக்குமே அன்றைய இரவு இனிதாக இருந்தது.