காதலின் விதியம்மா 13

KV -9043c028

காதலின் விதியம்மா 13

மதிய வேலை சீரான வேகத்தில் கார் நகரத்தை விட்டு கிராமங்கள் நோக்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருக்க, 

 

கௌசல்யா ‘நான் என்ன டி பண்ணேன் பத்து நாள் பிரேக் விட்டது ஒரு குத்தமா நல்லா தூங்கலாம்னு நினைச்ச பொண்ணை இப்படி மிரட்டி கடத்தி கொண்டு போறீங்களே’ என பக்கத்தில் தனக்கும் காலையில் நடந்த விஷயத்துக்கும் துளியும் சம்மதம் இல்லை என்பது போல் தூங்கும் தேஜுவை மனத்தால் திட்டிக்கொண்டே காலையில் நடந்ததை எண்ணி பார்த்தாள்.

 

பூமகள் “ஏங்க அவன் கிட்ட ரெடியா இருக்க சொல்லிட்டீங்க தானே அப்புறம் கிளம்ப போற நேரம் பார்த்து வேலை இருக்குனு சொல்ல போறான்” என 

 

“நேற்றே சொல்லிட்டேன் கவலைப்படாமல் இரு” என்று பேசும் போதே மேலே இருந்து பைரவ் தயாராகி வர,  

 

வந்ததும் “மாம் டாட் நம்ம கூட தேஜஸ்வினி வருவாங்க உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல தானே” என்று தன் எடுத்த முடிவை கூற,

 

அவளுக்கு இருக்கும் ஆபத்து தெரிந்ததால் நாராயணன் சரி என்க, பூமகளோ நீ வந்தா அதுவே போதும் என்ற நிலையால் அவரும் பெரிதாக ஒன்னும் சொல்லவில்லை.

 

“ஒகே அப்ப எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரும் போது அவளையும் கூப்பிட்டு வரேன் நீங்க ரெடியா இருங்க” என்று கிளம்பி விட,

 

சொந்த ஊருக்கு பல ஆண்டுகள் கழித்து போக போகிறதே நினைக்கும் போதே இங்கே வர காரணமான கசப்பான விசயங்கள் நியாபகத்தில் வர, இருவருக்கும் சொல்ல இயலா துன்பத்தில் முழுகி போனார்கள்.

 

கௌசல்யா “தேஜு போன் வருது டி எழுந்து பேசு ஏய்…. உங்க எம்.டி சார் தான் பேசறாரு டி ஒழுங்கா எழுந்து கால் அட்டென்ட் பண்ணுமா” என அவளை உலுக்கி எழுப்பி விட

 

தூக்கம் கலையாத குரலில் “ஹலோ” என்க “ஐந்து நிமிடத்தில் நீ கீழ வர” என்ற பைரவின் அழுத்தமான குரலில் தூக்கம் பறந்து போக “சார் என்ன ஆச்சு சார் ஏதாவது எமெர்ஜென்சியா” என்று படபடக்கும் மனதை மறைத்து கொண்டு கேட்க,

 

“கீழ வர சொன்னேன் ஜஸ்ட் டூ வாட் ஐ சே” என்றதும் பக்கத்தில் அவளை புரியாமல் பார்த்து கொண்டு இருந்த கௌசல்யாவை இழுத்து கொண்டு கீழே சென்றாள்.

 

    

 

 

தன் முன் கலைந்த தலை முடிகளை சரி செய்யாமல், கசங்கிய நைட் டிரஸ் உடன் அரக்க பறக்க வந்து நின்ற தேஜுவை தலை முதல் காலை வரை தன் லேசர் பார்வையால் அளந்து கொண்டே  “டென் டேஸ் சவுத் சைட் போக போறோம் சோ சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா” என “நானா சார்” என்று புரியாமல் கேட்க,

 

“உன்னை தான் சொன்னேன் எனக்கு நேரம் இல்லை சீக்கிரம் போ” என்றதும் “நான் வரலை சார் நீங்க மட்டும் போயிட்டு வாங்க” என 

 

ஏற்கனவே போன காரியம் முடியாததால் இருந்த கோபம் இப்பொழுது தலைக்கு மேல் ஏற அவளின் கையை அழுத்தி பிடித்து “உன்னை வரியா இல்லையா நான் கேட்கல நீ வர புரியுதா” என

 

எதோ ஒன்று அவளை போக விடாமல் தடுப்பது போல் இருக்க இருந்தும் போக வேண்டும் என்று மனது அவளிடம் சொல்வது போல் இருக்க “சரி சார் நான் வரேன் பட் என் கூட இவளும் வரணும்” என்று பக்கத்தில் இருந்த கௌசல்யாவை கை காட்ட,

 

‘அடி பாதகத்தி  நான் என்ன டி பண்ணேன்’ என்று அவள் உள்ளுக்குள் பதற, பைரவ் “ஏன் என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு என்னை பார்த்தால் எப்படி தெரியுது” என்று கோபத்தில் கத்த,

 

“அய்யோ சார் நான் எப்ப உங்க மேல நம்பிக்கை இல்லனு சொன்னேன் அவளுக்கு பத்து நாள் லீவு தனியா இங்க என்ன பண்ணுவா அதான் கூட வந்தால் அவளுக்கும் டைம் போகுமே னு சொன்னேன் எப்ப பார்த்தாலும் நீங்களா ஒன்னு நினைச்சுகிட்டா நான் என்ன பண்ண முடியும்” என்று முதல் முறையாக எந்த பதட்டமும் இல்லாமல் தைரியமாக பைரவ் முன்னால் பேச,

 

கௌசல்யா  “இல்ல சார் நான் வரலை நீங்க எல்லாம் போயிட்டு வாங்க” என்று  அவசரமாக சொல்ல 

 

அதை எல்லாம் கேட்க நேரம் இல்லாமல் “உங்க இரண்டு பேருக்கும் இன்னும் பத்து நிமிடம் தரேன் ரெடி ஆகி வரீங்க இல்ல இப்படியே காரில் போட்டு கூப்பிட்டு போயிடுவேன்” என்று மிரட்டலாக மொழிய,

 

‘பண்ணாலும் பண்ணுவாங்க’ என்று இருவரும் வாழ்க்கையின் முதல் முறையாக வேகமாக குளித்து சாப்பிடாமல் சொன்ன நேரத்துக்கு தன் துணிகளை ஒரு பெட்டியில் அடைத்தது கீழே வர,

 

 “குட் இரண்டு பேரும் என் கூட தஞ்சாவூர் வர போறீங்க” என்று இருவரையும் பின் பக்கம் ஏற வைத்து வேகமாக தன் வீட்டை நோக்கி செலுத்தினான் காரை.

 

 

“சார் சார்….. என்னோட ஊருக்கு தானே போக போறோம் எதுக்கு வெளிய எல்லாம் தங்கிட்டு நாங்க வீட்டுக்கு போறோம் சார் உங்களுக்கு எங்க வேலை சொல்லுங்க நான் டைம் க்கு அங்க வந்துறேன்” தன் குடும்பத்தை பார்க்கும் ஆவலில் தேஜு சொல்ல,

 

“ஹலோ தஞ்சாவூர் எனக்கும் சொந்த ஊர் தான் பேசாமல் வா கூப்பிட்டு போற எனக்கு தெரியாதா என்ன பண்ணனும் னு” என்று கோபமாக சாலையில் மட்டும் பார்வையை செலுத்தி வாகனத்தை ஓட்ட,

 

‘சரியான சைக்கோ நான் என் வீட்டுக்கு போறதுக்கு கூட இவன் கிட்ட பெர்மிஸ்ஸின் கேட்கணுமா உன் கிட்ட என்ன பேச்சு நான் பெரிய சார் கிட்ட கேட்பேன்….. போடா போடா’ என்று நினைத்து கொண்டே பைரவை முறைத்து பார்த்து விட்டு திரும்பி விட்டாள்.

 

தற்பொழுது கார்  ஈ சி ஆர் ரோட்டில் சென்று கொண்டு இருக்க, காரின் முன் பக்கம் பைரவ் நாராயணன் இருக்க, பின்னே பூமகள் கௌசல்யா மற்றும் தேஜு இருந்தனர்.

 

நாராயணன் “தம்பி பக்கத்தில் எதாவது ஹோட்டல் இருந்தா நிறுத்து பா சாப்பிட்டு கிளம்பலாம்” என்றதும் அருகில் இருந்த ஹோட்டலில் இருந்தினான்.

 

 

தஞ்சாவூர் 

 

 

ஊர்வசி (ஆர்யாவின் தாய்) “இல்லங்க நான் வரலை விட்ட சொந்தம் விட்டதாவே இருக்கட்டும் என் பையனுக்கு அவனோட அப்பா சொந்தம் யாருனு இது வரைக்கும் தெரியாது இனியும் தெரியா வேண்டாம் உங்களை கூட பிறந்த அண்ணாவா நினச்சு கேட்குறேன் விட்டுருங்க என் புருஷன் இருக்கும் போது வராத சொந்தம் எனக்கு இப்பவும் வேண்டாமே” என்று தன் வீட்டுக்கு வந்து இருக்கும் நபரிடம் கூற,

 

  

 

“உன்னைக்கே தெரியும் நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லமா அந்த நேரம் நம்ம குடும்பத்துக்கு எதோ கேட்ட காலம் போல மா நிறைய விஷயம் நடந்துடுச்சு உங்களை நாங்க தனியா விடணும்னு நினைச்சது கூட இல்லமா உன் புருஷன் என்னோட மச்சான் ரொம்ப சுயமரியாதை பார்க்கிறவன் அதான் ஒரு சொல்லுக்கு உன்னை கூப்பிட்டு வீட்டை விட்டு போய்ட்டான்…. உங்களுக்காக அப்பவும் வீடு திறந்து தான் இருந்துச்சு இப்பவும் திறந்து தான் இருக்கும். வர வெள்ளி கிழமை நீங்க கண்டிப்பா அதில் கலந்து கொண்டால் நல்லது மா…. உங்க உரிமையும் கூட. நான் கிளம்புறேன் மா” என்று அவர் கிளம்ப அதே நேரத்தில் ஆர்யா வீட்டுக்கு வந்தான்.

 

 

“ஆரி என்ன பா இந்த நேரத்தில் வந்து இருக்க என்ன விஷயம்” என்று வந்த தன் மகனிடம் ஊர்வசி கேட்க,

 

“அம்மா ரொம்ப குழப்பமா இருக்கு மா மனசில் எதோ தப்பு பண்ற மாதிரியே இருக்கு எனக்கு பிடிச்சது பக்கத்தில் தான் இருக்கிற மாதிரி தெரியுது கிட்ட போன அது எனக்கு சொந்தமானதா இல்லமா எனக்கு என்ன ஆச்சு ஒண்ணுமே புரியலை… அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன் மா” என்றதும் ஆர்யாவை தன் மடியில் சாய்த்து கொண்டு,

 

“என்ன நடந்துச்சு என்னோட பையன் இப்படி எல்லாம் குழம்பி போகமாட்டான். என்ன நடந்துச்சு மறைக்காமல் அம்மா கிட்ட சொல்லு” என்றதும் 

 

 

“அது நான் அஸ்வினியை பார்க்க சென்னை போனேன்லா சின்ன வயசில் ஒரு முறை இல்ல இரண்டு முறை தேவா கூட பார்த்து இருக்கேன் மா  அப்பெல்லாம் பிடிக்கும் மா. நீங்க அவளை கல்யாணம் பண்ணிக்கிறியா னு கேட்கும் போது அந்த சின்ன பொண்ணு முகம் தான் எனக்கு நியாபம் வந்துச்சு அதான் நானும் சரி சொன்னேன் மா ஆனால் அங்க போனதுக்கு அப்புறம் அப்படி நினைக்க முடியல்ல மா.

 

அவங்க மேல அன்பு பாசம் எல்லாமே இருக்கு தான் ஆனா உங்க கிட்ட இருக்கிற ஒரு பீல் தான் மா அவங்க மேலையும் வருது. அதை தாண்டி வேற அதையும் நினைக்க கூட கஷ்டமா இருக்குமா. நேத்து நைட் ல இருந்து எது தான் என் மண்டைக்குள்ள  ஓடிட்டே இருக்கு. நான் வேற தேவா கிட்ட உன் தங்கச்சியை நான் நல்லா பார்த்துப்பேன் எல்லாம் சொல்லி அவன் மனசில் ஆசையை விதைச்சிட்டேன்” என்று நேற்று முதல் மண்டையில் இருக்கும் பாதி விசயத்தை கூற,

 

 

“சரி விடு பா அந்த கடவுள் இருக்காரே நம்ம பிறக்கிறதுக்கு முன்னாடியே நமக்கு இவங்க தான்னு எழுதி வைத்து இருப்பார். உனக்கனவள் உன்னை தேடி சீக்கிரம் வருவா நீ மனசை குழப்பிக்காமல் இரு நான் அஸ்வினி வீட்டில் பேசறேன். அப்புறம் ஒரு விஷயம் இப்ப வந்தார் அவர் உன்னோட மாமா வெள்ளி கிழமை எதோ பூஜை போல நம்ம கண்டிப்பா போகணும் டா. இது உங்க அப்பாவோட உரிமை கூட” முதலில் போக வேண்டாம் என்று இருந்த மனது தன் மகனது நிலையை பார்த்து அங்கு சென்று வந்தால் கண்டிப்பா நல்லது நடக்கும் என்று தோன்றவே மகனிடம் விசயத்தை கூற,

 

“சரி மா போகலாம்” என்று தன் அறைக்கு சென்று விட்டான்.

 

 

ரம்யா ” எங்காவது நான் சொல்றதை கேக்கறீங்களா நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன் என் முகத்தையே பார்த்து கிட்டு இருக்கீங்க வந்து எவ்வளவு நேரம் ஆகுது இருட்டியே போச்சு ஒண்ணுத்தையும் சொல்லல, இப்ப பேச போறீங்க இல்ல நான் கிளம்பவா” என்று கிளம்ப அவளின் கையை பிடித்து இழுத்தான் தேவேஷ்.

 

இழுத்த வேகத்தில் அவன் மேலே வந்து விழ இது தான் சந்தர்ப்பம் என அவளை கட்டி கொள்ள, “அய்யோ என்னங்க இது யாரவது பார்க்க போறாங்க விடுங்க” என்றதும் 

 

“யார் டி இந்த நேரத்தில் நம்மை பார்க்க போற” என்று தேவேஷ் அவள் கன்னத்தில் வரைத்து கொண்டே கேட்க அவளோ நெளிந்து கொண்டே நகர பார்க்க,

 

  • “அண்ணா! ரம்யா!” என்ற குரலில் இருவரும் அடித்து பிடித்து விலகி நின்று தங்கள் முன் வெறியோடு நிற்கும் தேஜஸ்வினியை பார்த்து பேந்த பேந்த முழித்தனர்

Leave a Reply

error: Content is protected !!