இரும்புக்கோர் பூ இதயம் அத்தியாயம் -23

இரும்புக்கோர் பூ இதயம் அத்தியாயம் -23
Epi 23
ஷோரூம் வந்தவன் பிரபா வெளியில் சென்றிருப்பதாக கூறவும் உள்ளே சிறிது நேரம் அனைத்தையும் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களது ஆபிஸ் அறையில் அவன் வரும் வரை உணவுக்கு ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருந்தான்.சிறிது நேரத்தில் பிரபாவுடன் தருணும் சேர்ந்து இருவருமாக உள்ளே வர,
“டேய் மச்சான் எப்போடா வந்த? ‘ என இருவரும் அவனை தழுவி ஒரு வழி செய்து விட்டனர். டேய் செம பசில இருக்கேன் சாப்பிட்டு மற்றது.” என பிரபா கூற.
“சாப்பிட வர்றவன் சாப்பாடு கொண்டு வரல்லயா? என தருண் கேட்க,
“இருடா ஆர்டர் பண்ணிட்டேன் இப்போ வந்துரும்.” என்று கூறவுமே உணவும் வர நண்பர்களின் அரட்டை தொடர்ந்து இரவு ஏழு மணிவரை நீடித்தது. அருணா அழைத்து,
“எங்க இருக்கடா?” என கேட்க, இன்னும் வன் அவர்ல வந்துருவேன். “என்றான்.
” அம்மாவா? ” என தருண் கேட்க
“ஆமாடா காலைல ஆபிஸ் போனது அப்படியே இங்க வந்துட்டேன்.” என விஜய் கூற,
“வந்ததுமே எதுக்கு ஆபிஸ் போன ரெண்டு நாள் கழிச்சு பார்த்துக்கலாம்டா.” எனவும் ‘
“முக்கியமான வேலை ஒன்னுடா அதான்” என்றான்.
“ஓஹ் ! ரொம்ப… முக்கியம் போல…” என பிரபா கூற
“ஆமாண்டா… “என அவனை பார்த்து கண்ணடித்தான் விஜய்.
“தாராவுக்கு உடம்புக்கு முடியல.நீ இன்னக்கி பிரபா கூடத்தானே தங்கப்போற.போய் பாரு காலைல டாக்டர் வந்து மருந்து கொடுத்திருக்கு பார்த்துக்க.’ என்றவன், ‘அப்போ நான் கிளம்பட்டுமா பார்க்கலாம்டா. நாளைக்கு புல்லா வீட்லதான். இல்லன்னா பாட்டி அடி பின்னிரும்.” என்றவன் கிளம்பினான்.
அதற்குள்ளேயே தருண் தாராவுக்கு கால் செய்து பேசிக்கொண்டிருந்தான். பிரபாவை அழைத்துக்கொண்டு கார் அருகே சென்றவன் இன்று ஆபிசில் நடந்ததை சுருக்கமாக கூறி, “கொஞ்சம் பார்த்துக்க. இவன்கிட்ட சொன்னா டென்ட்டின் ஆகி அவனை கொன்னாலும் கொன்றுவான். புன்யாக்கு தெரியும் அதுனால அவகிட்ட கொஞ்சம் என்னன்னு கேட்டு பார்த்துக்கோ. நாளைக்கு முடியும்னா வரேன்.” என்றவன் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
வீட்டுக்கு வர ஹாலில் அனைவரும் அமர்ந்து
பேசிக்கொண்டு இருக்க உள்ளே வந்தவன் தன் தந்தை அருகே சென்று அமர்ந்தவன்,
” ஹாய் ப்பா. நா ஆபிஸ் வந்திருந்த நேரம் நீங்க மீட்டிங்ல இருந்திங்க அதுனாலதான் பேசமுடியல. ” என்றான்.
“அதுதான் பையன் வந்ததுல இருந்து அவ்வளவு பிஸியா இருந்திங்களே. எங்க அப்பா ஞாபகம் வரும்.”என அவரது பங்குக்கு கூறிவிட்டு,
‘எல்லார்கூடவும் பேசி முடிச்சிட்டு பையனுக்கு டைமிருந்தா கொஞ்சம் என் ரூமுக்கு வர சொல்லு.” என அருணாவை பார்த்து கூறி விட்டு எழுந்து சென்றுவிட்டார்.ஹரி அவன் அறை உள்ளே இருந்து அப்போதுதான் வந்தவன்,
” எப்டி இருக்கடா? ” என அவனை அணைத்து விடுவித்தவன்,
“ஹரிணி எங்கே?” எனவும்,
“அவங்க மாமாவுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலடா. அதான் ரெண்டு நாள் கழிச்சி கூட்டிட்டு வரலாம்னு விட்டு வந்தேன்.” என்றான்.
“அதென்ன விட்டுட்டு வந்தேன். நீயும் இருந்துட்டு வந்திருக்கலாமே…” என அவனுடன் பேசிவிட்டு பாட்டி எங்க எனவும் உள்ள அறைல இருக்காங்க என்றான்.ஹரி
“சரி நா குளிச்சிட்டு வரேன். என்றவன் தன் அன்னை கன்னத்தில் முத்தமிட்டவன்,
“இப்படியே அப்பாவை கரெக்ட் பண்ணவா இல்லனா வேறேதாவது ஐடியா குடும்மா ரொம்ப கோவமா பேசுறாரு.” என்றான்.
“நியாச்சும் உங்கப்பவாச்சு. என்னை நடுவுல இழுத்த அப்றம் அடிதான்.போ போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா எல்லாரு நீ வரும் வரைதான் வெய்ட் பண்றாங்க.”
“இதோ டென் மினிட்ஸ்ல வரேன் என்று தன் அறைக்கு சென்றவன் குளித்து வெளி வர தாராவிடம் இருந்து கால் வந்தது. அட்டன் செய்தவன்,
” ஸ்ரீம்மா பிவேர் எப்டி இருக்கு? சாப்டாச்சா, மாத்திரை போட்டுக்கிட்டியா?”
“ஹ்ம்ம் சாப்டாச்சு. மாத்திரை போட்டாச்சு.அப்றம் பிவர் இப்போ சுத்தமா போயாச்சு.” என்றாள்.
“ஓஹ் அப்டிங்களா அது எதுனாலன்னு தெரிஞ்சுக்கலாமா? “
“தெரிஞ்சுகிட்டே கேக்குறவங்களுக்கு சொல்ல முடியாது.” என்றாள்.
“ஸ்ரீ, நா கொஞ்சம் நேரம் கழிச்சு பேசட்டூமா? நீ தூங்குறதுன்னா தூங்கு.”என விஜய் கூற.
ஹ்ம்ம் கால் பண்ணுங்க எழுந்திருந்தேன்னா பேசலாம்.” என்றாள்.
சரிடா வச்சுரட்டுமா..? “என்று அழைப்பை துண்டித்தவன் கிழே செல்ல அருணா மேசையில் உணவு வைப்பதை பார்த்தவன்,
“ம்மா நா அப்பாவை கூட்டிட்டு வரேன்.”
என்றான்.
“ஆமா அப்பாக்கு டேபிள் எங்கன்னு
தெரியாதுப்பா கூட்டி வாங்க.” எனவும்
அவர்களது அறைக்கு சென்றவன்,
“அப்பா அம்மா சாப்பிட வரவாம்.”
“இவ்வளவு நாள் நீங்க கூப்பிட்டுத்தானே அவ எனக்கு சாப்பாடு போட்டா.போடா சும்மா வந்துட்டான்.’ என அவனை பார்த்து கூறியவர் ‘இன்னக்கி ஆபிஸ்ல எதுக்கு வினோத்தை அப்படி பேசின?என்கிட்ட கேட்காம எப்படி அவனை நீ வேலையை விட்டு தூக்கலாம். ஹ்ம்ம் சொல்லு.” என்றார்.
“சாரிப்பா.உங்ககிட்ட கேட்காதது
பிழைதான்.ஆனா தப்பான முடிவு நான் எடுக்கலை அதோட எனக்கு ரீசனும் சொல்ல முடியல.”என்றான்.
“ஓஹ் அப்டியா?” என்றார் ராஜ்.
“சாரிப்பா.” என்றான் மீண்டும் விஜய்.
“விஜய் நான் உனக்கு அப்பா தானே அதுனால உன் அறிவு எனக்கும் கொஞ்சம் இருக்குமில்ல. அவன் தாரா கூட பேசின வீடியோ இன்னக்கி காலைல தான் நானும் பார்த்தேன். ஆனா வாய்ஸ் இருக்கல. அப்றம் லிப்ட்லயும் பேசிருக்கான். ஈவினிங் வேலை விட்டு போறதா மெயில் பண்ணிருக்கான், விசாரிச்சதுல கம்பெனி விட்டு போனதுமே ஹாஸ்பிடல் அட்மிட் ஆகி இருக்கான். என்ன நடந்ததுன்னு பார்க்க போனா நீயும் அந்த டைம்லதான் ஆபிஸ் வந்து போயிருக்க. அதோட உன் அறைல அந்த ரெண்டு மணி நேரம் வீடியோ ஒன் ஆகல.அப்றம் உன் அறைல இருக்க வீடியோ செக் பண்ணினேன் வித் ஆடியோ. என்னாலேயே நம்ப முடியல.இப்படி பண்ணுவான்னு. குட் ஜாப் பா.நம்மள நம்பி வந்த பொண்ணுங்க. அவங்களுக்கு எதுன்னாலும் நாமதான் பொறுப்பு. “என்றார்.
“தேங்ஸ் ப்பா.’ என்றவன்,
‘ஆடியோ கமெராஸ் இருக்கது யாருக்கும் தெரியவேணாம்ப்பா. அப்போதான் அது நம்மளுக்கு யூசாகும்.’ என்றவன்
‘ சாப்பிட போகலாமா?’ எனவும் வா என அவனை அருகே அழைத்தவன் தோளோடு அணைத்துக்கொண்டு,
“அம்மாவை மட்டும் தான் கட்டிக்கிட்டு முத்தம் கொடுக்கணும்னு இல்லை. எனக்கும் நீ மட்டும் தான் பையன்டா.”என் ராஜ் கூற.
“சாரிப்பா நீங்க என் கூட கோவமா இருப்பீங்கன்னு தான் வரல்ல.மத்தபடி நீங்க ரெண்டு பேருமே எனக்கு ஒன்னுதான் ப்பா ” என அவரை கலங்கிய கண்களோடு அணைத்துக்கொண்டான்.
“நான் கோவமெல்லாம் இல்லை. உயிர்குறது நம்மளுக்கு சொந்தமில்லாதது. சோ அதை எடுக்குற உரிமை நமக்கு இல்லை. உன்னால் ஓர் உயிர் போயிருச்சுன்னு வந்துட்டா அப்றம் நம்மளால தாங்க முடியுமா? அவ கூட நீ பேசி இருக்கலாம். உன்மேல அவளுக்கு ரொம்ப பாசம்மா டா. ஆனா அது காதலா இருந்திருக்காதுன்னு இப்போ கொஞ்சநாளாவே தோணுது எனக்கு.இல்லன்னா அவளுக்கு தருணோட இவ்வளவு சீக்கிரமா மனம்
ஒத்துபோய் இருக்காது. ஹ்ம்ம் எது எப்படியோ சந்தோஷமா இருந்திங்கன்னா அதுவே எனக்கு போதும்.”
அவர் பேசுவதை கேட்டிருந்தவன் அப்படியே அவர் அணைப்பில் நின்றிருக்க,
” சரி வா உங்கம்மா திட்டப்போறா
இன்னும் காணமேன்னு. ” அவனின் மேலிருந்த கையை விளக்காமலே அப்படியே அறை விட்டு வெளியே வர பார்த்திருந்த வள்ளிபாட்டியும், அருணாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.
இரவு விஜய் அவனறையில் இருக்க அருணா உள்ளே வந்தவர் “என்ன ஸ்ரீ தூங்கலயா இன்னும்? “
“தூங்கனும்மா ‘ என அவர் அவனருகே அமர அவர் மடிமீது தலைவைத்துக் கொண்டவன்,
‘ம்மா ஒன்னு சொல்லணும் ஆனா என்ன நினைப்பேன்னு தெரில.”
” என்னாச்சு என் பையன் வந்ததுல இருந்து ரொம்ப ஹாபிய இருக்கீங்க. ” எனவும்,
“அது…என்றவன்,நம்ம தருண் சிஸ்டர்… என அவன் பேச,
“நம்ம ஸ்ரீ குட்டி, அவளுக்கென்ன?” என்றார்.
“இல்ல அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்மா. அவளுக்கும். நான் அவளை கல்யாணம் கட்டிக்கட்டுமா?” என்றான்.
“டேய் என்னடா?எப்போ இருந்து?” எனவும் அது ஜேர்மன் போக முன்னமே பிடிச்சிருந்தது ஆனா அது பிடித்தம் மட்டுமான்னு தெரில.அங்க போய்
பார்க்கலாம்னு இருந்தேன்.ஆனா உன்கூட பேசலன்னு ஒரு நாள் நாம தருணோட பேசிக்கொண்டு இருக்கும் போதே தருணுக்கு போனை போட்டு ரொம்ப திட்டிட்டா. எனக்கு உன்கூட பேச சொல்லி.”
ஓஹ்! அதுக்கப்புறம் தான் என்கூட நீங்க பேசு நீங்களோ “
“அச்சோம்மா அப்டில்லாம் இல்ல. நீங்க பாட்டி யெல்லாம் என்னை திட்டிட்டே இருப்பிங்கன்னு நினச்சேன். இவ்வளவு வொரி பண்ணு வீங்கன்னு நினைக்கலம்மா சாரி ” என்று
விஜய் எழுந்து அவர் இரு கைகளையும் பற்றிக்கொண்டு கூற,
“சும்மா சொன்னேன்டா.எனக்கும் ஏன் உங்கப்பாகும் கூட குட்டியை உனக்கு பேசலாமான்னு ரெண்டு மூனு தடவை பேசிருக்கோம். ஆனா ஒரே வீட்ல அவங்க விருப்பப்படுவார்களோ, அதோட நீ என்ன சொல்வியோன்னு தான் வந்ததும் பார்த்துக்கலாம்னு இருக்கோம்.” என்றார்.
“அதான் வந்ததும் பையன் ஆபிஸ் போனீங்களோ!” என்றார்.
‘ ஆம்’என்று சிரித்தவன்,’இன்னக்கி ரொம்ப காய்ச்சல் போல,அதோட ஆபிசுக்கு வந்து மயக்கம் போட்டு விழுந்துட்டா.”
“அச்சோ குட்டிக்கு என்னாச்சு? இவ்வளவு லேட்டா தான் சொல்வியா? மாதவியும் ஊர்ல இல்லையே, குட்டி அங்க தனியா இருப்பாளே.”
என இவர் புலம்ப.
“ம்மா டாக்டர் பார்த்து மருந்தெல்லாம் குடுத்திருக்காங்க. அவ பிரென்ட் இருக்கா அவ கூட. இப்போ கூட பேசினேன். ஒகே பீலிங் பெட்டெர்னு சொன்னா. காலைல திரும்ப பேசி கேட்டுக்கலாம் என்றான். “
“அச்சோ ஒரு எட்டு அவளை பார்த்துட்டு வந்துரலாம் டா. அவ அம்மா வேறு ஊர்ல இல்ல.வீட்ல இருந்தான்னா அவ கைக்கும்
கால்க்கும் வேலைக்கு ஆள் வேணும். பெட்ட விட்டு அசையமாட்டான்னு அவங்க அம்மா சொல்வா.”
“சரி நாளைக்கு பார்க்கலாம். ஆனா அவகிட்ட சொல்லவேணாம் உங்க கிட்ட நான் சொன்னதா.
“சரிடா… ஹாப்பியா இரு. நான் அப்பாகிட்ட பேசுறேன்.” என்றார்.
“தேங்ஸ் மா.” என அவரை அணைத்து கொண்டான்.
“சரி தூங்கு என அவர் எழுந்து செல்ல, அவனை வந்து சேர்ந்தது அழகிய வர்ண கனவுகளுடனான நித்திரை தழுவினான்.
****
காலை எழுந்தவர்கள் பிரட் மற்றும் முட்டை இருக்க அதனை ஆம்லெட் போட்டு இருவருமாக சாப்பிட மீண்டும் சிறிது நேரத்தில் தாராவை பார்க்க நல்ல உறக்கத்தில் இருந்தாள். புன்யா அவர்களது வாயில் படிகளில் அமர்ந்தவாறு தொலைபேசியில் வீட்டினருடன் பேசிக்கொண்டு இருந்தாள்.அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு பார்த்தவள் அருணாவை பார்க்கவும்
“ஹாய்! ஆன்ட்டி வாங்க வாங்க.” என அவரை உள்ளே அழைத்து வந்தவள் ஹாலில் அமர வைக்க கைகள் இரண்டிலும் இருந்த பைகளை கொடுத்து உள்ளே வைக்கச் சொன்னவர்,
“எப்டி இருக்கம்மா?”எனவும்
“நான் நல்ல இருக்கேன் ஆன்ட்டி. இதோ மேடம் தான் நல்லா சுருண்டு தூங்குறா.காலையில
சாப்பிட மட்டும் எழுந்தது. அதையும் பெட்லயே இருந்து சாப்பிட்டு அப்படியே தூங்கிட்டா.தருண் அண்ணாவும் முக்கியமா வேலை ஒன்னு இருக்கதா போனாங்க. இவளுக்கு பிட் இல்லேன்னா திரும்ப டாக்டரை பார்க்கலாம்னு தோணுது என உண்மையாக வருந்திக் கூறினாள்.”
” எங்க இப்போ” எனவும் உள்ளேதான் இருக்கா வாங்க ஆன்ட்டி என அவரை உள்ளே அழைத்து சென்றாள் புன்யா. தலையணை ஒன்றை அணைத்தவாறு பெட்ஷீட்டை கழுத்துவரை போர்த்திக்கொண்டு கால்கள் இரண்டையும் மடித்து உறங்கியிருந்தாள். உள்ளே ஸ்லீவ்லெஸ் டீ ஷர்ட் லோங் போட்டம் என இரவு உடை உடனே இன்னும். அவளருகே அமர்ந்து அவள் நெற்றி கழுத்தில் என கைகளை வைத்து பார்த்தவர் “உடம்பு கடுன்னா இல்லை.காலையில மாத்திரை சாப்பிட்டா தானே.ரெஸ்டா
இருந்தான்னா சரியாகிருவா. காலையில என்ன சாப்பிட்டிங்க?” எனவும்,
” பிரட் தான் சாப்பிட்டா ஆன்ட்டி. வேறேதும் சாப்பிட முடியாதுன்னா. அதையும் கம்ப்ல் பண்ணி கொடுத்தேன்.” என்றாள்.
“இப்படி சாப்பிட்டா எப்டி,சாப்பிட்டா தானே உடம்புக்கு தெம்பா இருக்கும்,’ என்றவர், ‘ ஸ்ரீ குட்டி..” என அவள் தலை வருடி எழுப்பினர்.
“அச்சோ, ஆன்ட்டி நீங்க இப்படி எழுப்பினா இன்னும் நல்லா தூங்குவா. இருங்க நான் எழுப்புறேன்’ என்றவள்,
‘பேபி எழுந்துக்கோ.யாரு வந்திருக்கா பாரு என அவள் கைகளை பிடித்து எழுப்ப,
“ஏன் உனக்கு பாக்குறதுக்கு என்ன நீ பாரேன். எதுக்கு என்ன எழுப்புர’ என்றாள்.”
“பேபி உங்க அத்தையும் உங்க அத்தானும் வந்திருக்காங்க.’ என அவள் காதருகே சென்று கூறிவிட்டு,
“எழுந்துக்கோ பேபி.பாரு எவ்வளவு நேரம் ஆன்ட்டி எழுபுறாங்க” எனவும் பட்டென எழுந்தமர்த்தாள்.
“என்னடா ரொம்ப முடியலையா? ” என்றார்.
“இப்போ பரவால்ல ஆன்ட்டி. உடம்பெல்லாம் பேனிங்கா இருக்கு. தலைக்கு குளிக்காம நல்லா வோஷ் ஒன்னு பண்ணுடா உடம்புக்கு கொஞ்சம் பிரெஷா இருக்கும்.” என்றார்.
அச்சோ குளிருமே நா அப்புறமா
பண்ணிக்கிறேன்” என்றாள்.
“இப்படி இருந்தேன்னா எப்டி?
எழுந்துக்கோ முதல்ல. அங்க உங்கம்மா புலம்புறா பொண்ணு பக்கத்துல இருக்க முடியலையே.என் பொண்ணு காய்ச்சல் வந்துட்டா மத்தவங்களையும் சேர்ந்து படுத்தி
எடுப்பாளேன்னு. நான் தான் சொல்லிட்டு வந்தேன் அப்டில்லாம் இருக்காது அவ இப்போ எழுந்து உட்கார்ந்திருப்பான்னு.நீ என்னனா அம்மா சொன்னது உண்மை தான் போல.” அவளை சீண்ட..
“அச்சோ! ஆன்ட்டி.”.
“என்ன ‘அச்சோ ஆன்ட்டி’ அம்மா எப்போவாச்சும் பொய் சொல்வாங்களா? தாராவுடைய அம்மா உண்மையைத்தான் சொல்லிருக்காங்க.”என புன்யாவும் கூற புன்யாவை முறைத்தவள்,
“நான் வோஷ் பண்ணிட்டு வரேன் ஆன்ட்டி,நீங்க ஹால்ல இருங்க ” என்றவள் எழுந்து பாத்ரூம்
சென்றாள்.தாரா உடை மாற்றி வெளியில் வர இவளுக்காக உணவு மேசையில் பரத்தப்பட்டிருந்தது.’வா’ என அவளை அழைத்து சென்றவர்,
” உனக்கு எது பிடிக்குமோ தெரில கொஞ்சம் கொஞ்சமா பண்ணிருக்கேன் சாப்பிடு” என்றார்..
ஹ்ம்ம் என தலையாட்டியவள் அமர இரண்டு மூன்று கைப்பிடி சாப்பிட்டவள் வேணாம் என்று விட்டு வோஷ் பேசின் அருகே சென்று வோமிட் செய்து விட்டாள். “என்னாச்சுடா?” என அவள் முதுகை தடவி விட்டவர்,
“சாப்பிட முடியல ஆன்ட்டி வொமிட்டிஷா இருக்கு.” எனவும்,
“சரி வா.”என அவளை அமர்த்திக்கொண்டார்.. புன்யா,” அவளுக்கு லெமன் ஜீஸ் குடுக்கட்டுமா?” எனவும் அதை பருகக் கொடுக்க அதிலும் பாதியே பருகியவள் கால்களை மடக்கி சோபாவில் அமர்த்துக்கொண்டாள்.
“சாரி ஆன்ட்டி எனக்கு சமைச்சு எடுத்துட்டு வந்து என்னாலதான் சாப்பிட முடியல.”
” அதுக்கெல்லாம் நீ வொரி பண்ணிக்காத நானே உன் பங்கை சாப்பிடுறேன் பேபி”
என்றாள் புன்யா.
“ஆன்ட்டி யார்கூட வந்திங்க எனவும் ஸ்ரீகூடத்தான் வந்தேன்டா. கீழ பிரபா கூட பேசிட்டு இருக்கான் போல.
அவங்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்கலையே.”
“லெமன் ஜூஸ் இருந்தா குடு அதுவே சாப்பிடுவான் மா.”
“ஓகே ஆன்ட்டி நீங்க பேசிட்டு இருங்க நான் அவங்களுக்கு கொடுத்துட்டு வரேன்.’என்று எழுந்து அவர்களுக்கு ஜூஸ் எடுத்து சென்றவள் அவர்கள் இருவரது சத்தமும் காதை பிளக்க கேட்டுக்கொண்டிருந்தது.
‘என்னத் தான் பேசுவார்களோ இப்படி.’ என அவர்கள் அருகே சென்றவள்,
“ஹீரோ சார் எடுத்துக்கோங்க,’ என அவனுக்கு நீட்ட,
“எடுத்துக்கடா நம்ம வீட்டுக்கு புதுசா எடுத்திருக்க செர்வண்ட்.” என பிரபா கூறவும் அவனை முறைத்தவள் அவனுக்கு கொடுக்காது அதனை மேசையில் வைத்தவள்,
“என்ன ஹீரோ சார் வந்ததும் கீழ வந்துடீங்க. மேல தானே பேஷண்ட் இருக்காங்க? “என்றாள்.
“எழுந்துட்டாளா?”
“ஹ்ம்ம் எழுந்து சாப்பிட்டு வொமிடும் பண்ணிட்டா.”
“ஏன் என்னாச்சு.” இன்னும் நல்லா ஆகலையா நைட் நல்லாதானே பேசினா.பீவர் இல்லை. ஆனா இன்னும் சரியாகல “என்றாள்.
“சரி டா நீ போ நான் வரேன்.” என்றான்.
சரிண்ணா என்றவள் திரும்பி நடக்க.
“டேய் உன்கிட்ட கேட்கணும்னே இருந்தேன் . தயிர் சாதம்னு பொண்ணுங்க நம்மள திட்டினா என்ன அர்த்தம்? ” என்றான். ஜூஸ் பருகியவனுக்கு புரை ஏறிவிட,
“டேய் பார்த்து பார்த்து… ” என பிரபா அவன் தலைய தட்ட, “யாரிப்போ அப்படி சொன்னா உனக்கு?”
“அதெதுக்கு உனக்கு விஷயத்தை மட்டும் சொல்லுவியா?”என்றான்.
படியேறிக்கொண்டிருந்தவள், “ஹீரோ சார், உங்க பிரெண்டு ரொம்ப நாளா சாதமே சாப்பிடல போல. இதுல அவருக்கு தயிர் சாதம்னா என்னனு தெரிலயாம். கொஞ்சம் விளக்கமா சொல்லி குடுங்க உங்களுக்குத்தான் அனுபவம் இருக்கே என்று விட்டு ஓடிவிட்டாள்”
“என்னடா நடக்குது இங்க ஹான்? “
“அது ஒரு லூசுடா. எப்பப் பார்த்தாலும் என்னை தயிர் சாதம்னு திட்ரா.”
” டேய் அப்டின்னா.என அவனுக்கு விளக்கி சிரித்துக்கொண்டே ‘ஆஸ்திரேலியா போய் என்னடா பண்ண இவ்வளவு நாளா? ” எனவும்
“டேய் நான் நல்ல பையன்டா.” என்றிட,
“நம்பிட்டேன்.வா மேலே போகலாம்”
” நீ போ நான் வரேன்.” என்றான். அவன் மேலேற அருணா கீழிறங்கி பிரபாவை பார்க்க வர,
“அம்மா எங்க வரீங்க,வா தாராவை பார்த்துட்டு வரலாம் என்றான்.”
” நீ போய் பேசிட்டு வா நான் பிரபாவை பார்த்துட்டு வரேன். வந்து இவ்வளவு நேரமாச்சு அம்மாவை பார்க்க வந்தானா அவன். ” என கேட்டுக் கொண்டு அவர் அவனைக் காணச் செல்ல,விஜய் மேலேறினான்.புன்யா வாசலில் இருக்க, “ஸ்ரீ எங்க?” எனவும் உள்ள இருக்காண்ணா போங்க. ” என்றவள்
தொலைபேசி எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்து விட்டாள்.
அறை உள்ளே எட்டிப்பார்க்க கட்டிலில் சம்மணமிட்டு தலையணை மடியில் வைத்து அமர்ந்திருந்தாள் தாரா. கையில் அலைபேசியிருக்க இவன் அப்படியே நின்றிருக்க அவள் அலைபேசியில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. ஒலி அவளையும் வந்தடைய நிமிர்ந்தவள் அவளை பார்த்தபடி நீண்டிருந்தவனை கண்டாள். அவளருகே வந்தமர்ந்து அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டவன்,
” இப்போ எதுக்கு கால் பண்ணுன?”
” வந்து இவ்வளவு நேரமாச்சு என்னை பார்க்க வரவே இல்லை அதான்” என்றாள்.
“அப்போ என்னை எதிர் பார்த்துட்டு இருந்தீங்களா?” எனவும் ‘ஹ்ம்ம்’ என்றாள்.
“வொமிட்டிஷா இருக்கா? திரும்ப டாக்டரை பார்க்க போலாமா ஸ்ரீம்மா?”
“வேணாம் எனக்கு எப்போவும் இப்படித்தான். ரெண்டு நாளைல சரியாகிரும்பா” என்றாள்.
“ஹ்ம்ம் ஒகே ஏதாச்சும் கொஞ்சமா சாப்பிடு.இப்படியே இருந்தா கஷ்டம்டா.’ என அவள் கூந்தலை காதோடு ஒதுக்கியவன் சரி நான் கிளம்பட்டுமா? அம்மா கீழ போனாங்க. ஹால்ல புன்யா இருக்கா. நான் உள்ளே இருந்து நல்லா இருக்காதுல்ல” என்றவன் எழுந்துக்கொண்டான்.
சரியென்று தலையாட்டியவளும் எழுந்துத்துக்கொண்டாள்.
“அண்ணா வந்ததும் நான் நாளைக்கு வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன் இரண்டு நாள் வீட்ல இருந்துட்டு வரேன். ” என்றாள்.
” சரிடா இந்த வீக் வீட்ல இரு,அப்பாகிட்ட நான் சொல்லிடுறேன்.’
‘அப்போ நான் வரேன் டேக் கேர் ஸ்ரீ. “ என்றவன் அறை வாசல் வரை சென்று திரும்பி பார்க்க இவனையே பார்த்திருந்தாள் தாரா.
‘வா என அவளை கண்களால் அழைத்த மறுநொடி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்.
“ஸ்ரீ ம்மா…” எனவும் அவள் அவன் மார்பிலிருந்ந்து தலை உயர்த்தி பார்க்க நெற்றியில் இதழ் பதித்தவன் அவள் கன்னங்களை இரு கைகளாலும் தாங்கி அவள் மூக்கு நுனியில் முத்தமிட்டவன், கன்னங்கள் இரண்டிலும் இதழ் பத்தித்தான்.அவளை விட்டு பிரிந்தவன், ‘வரேன்’ என திரும்பி மீண்டும் அவள் நெற்றி முட்டி உடம்பை பார்த்துக்கோ டா வரேன்.” என்றுவிட்டு ஹாலுக்கு சென்றுவிட்டான். இவளுக்கு உடம்பெல்லாம் எதுவோ செய்ய அப்படியே நின்றிருக்க அருணா உள்ளே வந்து விடைப் பெற்றார் .
“நாளைக்கு அண்ணா கூட போறியா. அம்மா
வந்ததுக்கப்புறம் நானும் முடியும்னா வரேன்.” என அவள் நெற்றியில் இதழ் பதித்தவர்.
“நல்லா சாப்பிட்டு தெம்பா இருக்கணும்.” என்றுக் கூறி, விஜயும் அவளோடு கண்களால் விடைக் கொடுத்து விடைப்பெற்றனர்.