MK 11

MK 11
மயங்கினேன்.!கிறங்கினேன்.!
காதல் 11
உறங்கிக் கொண்டிருந்தவளின் கனவில் ஏதோ தன் மீது மழைக்கொட்டுவது போல் உணர்வு ஏற்பட , ” மழையே நான் தூங்கனும் என்னைய டிஸ்டர்ப் பண்ணம்மா அந்த பக்கம்மா போய் பொழி பார்க்கலாம் ” என்று உறங்குபவளை கண்டு காண்டானான் வெற்றி.
” ஏய்! இது என்ன உங்க அப்பா வீடுன்னு நினைச்சியா? முதல எந்திரி ” என வெற்றி அதட்டவும் தான் உறக்கத்திலிருந்து விழிப்பு பெற்றாள் இனியா.
விடியலின் போதே உறங்கியதால் , கண்களை திறக்க சிறிது கஷ்டப்பட்டாள்.
தன் முன் ஏதோ ஒரு ஆடவன் நிற்பதை உணர்ந்து ,” யாரு நீங்க.? என்னோட ரூம்ல என்ன செய்றீங்க ” என கண்ணை கசக்கியவாறே கேட்க
” முதல அந்த நொல்ல கண்ணை கொஞ்சம் நல்லா திறந்து பாரு. யாரு யார் வீட்ல இருக்காங்கன்னு தெரியும்” என வெற்றி பொறிய
அப்போது தான் நன்றாக விழித்து பார்த்தவளுக்கு அனைத்து விடயமும் புரிந்தது.
” சாரி தடியன் சார். கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் ” என இளித்தவளை கண்டு தலையில் அடித்து கொண்டான் வெற்றி.
” இங்க பாரு மணி இப்பவே எட்டாச்சி . சீக்கிரமா குளிச்சு முடிச்சு ரெடியாகி வா. உனக்கு இன்னும் பதினைந்து நிமிஷம் டைம். அதுக்குள்ள நீ கிளம்பி வரணும் ” என கட்டளையிட்டான் வெற்றிமாறன்.
” அது எப்படி தடியன் சார் அவ்வளவு சீக்கிரமா கிளம்ப முடியும். கொஞ்சம் டைம் அட்ஜஸ்ட் கரோ சார் ” என வெற்றியிடம் கெஞ்ச
” நீ பேசி பேசி நேரத்தை வீணடிக்காத கிளம்பு முதல. டைம் போகுது பாரு ” என அவளை துரத்தி விட்டு தன் வேலையை பார்த்தான்.
எப்போதும் போல் அந்த காலையில் அவனது எதிரியான சேவல் கூவி அவனை எழுப்பிவிட்டிருக்க , வெளியே போகலாம் என்று நினைத்த போது தான் இனியாவின் ஞாபகமே வந்தது.
வெளியே போக எத்தனித்தவன் , முதல் நாளே இவளை தனியே விட்டு செல்ல மனம் வராமல் அறையிலே இருந்து கொண்டான்.
எவ்வளவு நேரம் தான் அறையிலே சும்மா அமர்ந்திருப்பது , அதனால் அவளை எழுப்பலாம் என்று நினைத்தவன் , பாத்ரூம் சென்று ஒரு கப்பில் தண்ணி எடுத்து அதை அவளின் முகத்தில் ஊத்த அவளோ கனவு என நினைத்து வரண பகவானிடம் பேசினாள்.
அடுத்து பத்து நிமிடத்தில் குளித்து முடித்து அறக்க பறக்க வெளியே வந்தவள் , “சரியான நேரத்துக்கு வந்துட்டேன்னா தடியன் சார் ” என்க
” ம்ம் , சரி சீக்கிரமா ரெடியாகு ” என்று மொபைலை நோண்ட ஆரம்பித்தான்.
பின்னர் , இருவருமாக சேர்ந்து வெளியே வந்தனர்.
பெரியவர்கள் கண்கள் சிறியவர்களையே மொய்க்க , இனியாவின் முகத்தில் தெரிந்த சோர்வினை கண்டு நல்லதே நடந்திருக்கிறது என்று நினைத்து மகிழ்ந்தனர்.
இனியாவிற்கு மட்டும் தானே தெரியும் , அது அவள் நேற்று அத்தனை துணிகளையும் காயப்போட்டதால் வந்த சோர்வு என்று…
இதை அறியாத பெற்றோர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.
” வா டா ராசாத்தி உனக்காக தான் உங்க அத்தை காலைல இருந்து காத்திட்டு இருக்கா ” என திலகம் சொல்ல
“சாரி அம்மா ! கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் ” என்றவள் வெற்றியின் முகத்தை பார்த்து சிறிது வெட்கப்பட்டவரே ” இவரு தான் என்னை தூங்கவே விடலை மா ” என்றாள் .
அதுவரை பெண்கள் பேசுகின்றனர் என்று அமைதியாக இருந்த வெற்றி இவளின் கூற்றில் திகைத்து தான் போனான் .
‘அய்யோ ! மானத்தை இப்படி வாங்குறாளே ‘ என தலையில் கை வைத்துவிட்டான் .
திலகம் அவனை பார்த்து நமட்டு சிரிப்பொன்று சிரித்தவாறாரே , இனியாவை ஒரு இடி இடித்தார் .
“அம்மு மா வந்துட்டியா டா . உனக்காக தான் காத்திட்டு இருந்தேன் ” என்ற மாமியாரை பார்த்து புன்னகைத்தவள் அத்தையின் தோளில் வாகாக சாய்ந்து கொண்டாள் .
” அம்மாடி மகளே ! புருஷன் கிட்ட செய்ய வேண்டியது எல்லாத்தையும் அவனோட அம்மாகிட்ட செஞ்சிகிட்டு இருக்க ” என கிண்டல் செய்ய இனியா தன் அத்தையிடம் செல்லம் கொஞ்சினாள் .
” எனக்கு என் அத்தையை ரொம்ப பிடிக்கும் ” என்றாள் பெருமையாக .
“எனக்கும் தான் ” என அவள் மூக்கை பிடித்து ஆட்டினார் .
” சரி ரெண்டு பெரும் அப்புறமா கொஞ்சிக்கோங்க இப்போ வாங்க சாமி கும்பிடனும் ” என திலகம் சொல்ல , மூவருமாய் பூஜை அறைக்கு சென்றனர் .
” இந்த வெற்றி பையன் எங்க போனான் ” என்றவர் ” வெற்றி ” என விஜயசாந்தி சத்தமாக அழைக்க
” என்ன மா .?” என கடுப்போடு அங்கே இருந்து கேட்க
“துறைக்கு தனியா வெத்தல பாக்கு வச்சி அழைக்கனுமோ ?சாருக்கா வர தெரியாதா என்ன, வா டா ஒழுங்கா “
வேகமாக பூஜை அறைக்கு வந்தவன் ,” கொஞ்சமாது உனக்கு எல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா ? இப்படி பெத்த பையனை யாரோ ஒருத்தர் முன்னாடி அசிங்க படுத்துற ” என மனைவியை பார்த்தவாறு கேட்க அவளோ வேறெங்கோ பார்த்து படி நின்றாள் .
அவளுக்கு தான் தெரியுமே, இப்போது இவனை பார்த்தால் அதற்கும் ஏதாவது செய்வான் அல்லது சொல்வான் என்று அதனால் அமைதி காத்தாள் .
ஆனால் அதற்கும் வெற்றி கோபம் கொண்டான் .
‘ இங்க நான் அவளை பார்த்தா அவ என்னைய தவிர்த்து வேற எங்கேயோ பார்ப்பாளா .இருக்கு இன்னைக்கு இவளுக்கு ‘ உள்ளுக்குளே பொரிந்து தள்ளினான் வெற்றிமாறன்.
” போதும் டா உன் அலப்பறை தாங்க முடியல டா . கல்யாணம் பண்றதே பையன் பொறுப்பா இருப்பான்னு தான் .ஆனா நீ என்ன டா , இப்படி உல்டாவா குழந்தை மாதிரி பண்ற .?”
” மா நிறுத்து முதல . எதுக்கு என்னை கூப்பிட்டனு மட்டும் சொல்லு எனக்கு நிறைய வேலை இருக்கு ” என்றவன் முகத்தை உம்மென்று வைத்து கொண்டான் .
” சாமி கும்பிடனும் அதுக்கு தான் கூப்பிட்டேன் . அம்மு நீ சாமி கும்பிட்டு விளக்கு ஏத்து டா ” என்றார் .
பின்னர் , இனியா சாமி கும்பிட்டு விளக்கேற்றி வைத்து சூடம் காண்பித்தாள் .
இருவருமாக விஜயா காலில் விழுந்து கும்பிட , ” ரெண்டு பெரும் எப்போதும் சந்தோஷமா இருக்கனும் ” என்று ஆசிர்வதித்தார் .
சாமி கும்பிட்ட பிறகு புது பெண் காலை உணவிற்கு ஏதாவது இனிப்பு வகை செய்ய வேண்டும் என்ற சம்பிரதாயம் இருந்ததால் , அவளை அழைத்து கொண்டு சமையல் அறைக்கு சென்றனர் விஜயாவும் திலகாவும் .
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் , வெளிய சென்று அமர்ந்தவன் , சுற்றத்தை நோட்டம் விட தொடங்கினான் வெற்றி..
அந்த காலை பொழுது அவனை சிறிது களவாடிக்கொண்டது.
இயற்கை எழில் கொஞ்சும் அழகில் அவன் வீட்டை சுற்றி தோட்டம் போல் அமைத்திருந்தனர்.
ரோஜா , மல்லிகை , ஜாதி மல்லி , பவள மல்லி, செம்பருத்தி , பட்டர் ரோஸ், மருதானி ,மாங்காய் மரம் , வேங்கை மரம் , முருங்கை மரம் என இன்னும் சிலவற்றை வைத்திருந்தார்கள்.
அதில் வரும் இயற்கை காற்றும் மனமும் போதும் , மனதில் இருக்கும் அத்தனை சஞ்சலங்களையும் போக்குவதற்கு.
இப்போதிய அவனுடைய எண்ணம் எல்லாம் இனியா தான். அவளை என்ன செய்தால் தன் கோபம் அடங்கும் என யோசித்து கொண்டிருந்தான்.
ஆனால் இங்கே வைத்து ஏதாவது செய்தால் , தான் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது என்றும் எண்ணினான்.
‘இருக்கட்டும் இன்னும் ஒரு நாலு நாள் மட்டும் தானே இங்க இருக்க போறோம். ஊருக்கு போய் இவளை வச்சி செஞ்சிக்கலாம் ‘ என நினைத்தவன் தனக்காக தந்தை வாங்கி கொடுத்திருந்த வண்டியை நோக்கி நடையிட்டான்.
அது அவனுக்கு பிடித்தமான ராயல் என்ஃபீல்ட் க்ளாசிக் 350.
இதில் தான் கல்லூரி படிக்கும் போது நண்பர்களுடன் ஊர் சுற்றியது எல்லாம். இப்போது அவன் இதை பெரிதாக உபயோக படுத்துவதில்லை.
கடந்த கால அவனது நினைவுகள் எல்லாம் வந்து , அவனின் முகத்தில் புன்னகை பூக்க உதவியது .
” என் லைஃப் எப்படி எல்லாம் ஹேப்பியா இருந்தது. பட் இப்போ பாரு எத்தனை கஷ்டம்னு ” என புலம்பல் விட அவனது மனசாட்சி அவன் முன் தோன்றியது.
” வாங்க சார்! எங்க ஆளை காணோம்னு பார்த்தேன் வந்துட்டீங்க ” என கிண்டலாக சொல்ல
‘ சரியான நேரத்துக்கு நான் ஆஜராகளனா நான் என்ன மனசாட்சி சொல்லு ‘
” ம்ஹூம். இது வரைக்கும் நீ செஞ்சது பத்தாதா சொல்லு “
‘ ஏன் டா அப்படி சொல்ற.? உனக்கு ஒரு நல்லது நடக்கனும்னு தான் இதெல்லாம் பண்ணேன். பட் நீ இனியாவை இப்படி எல்லாம் பண்றது எனக்கு பிடிக்கலை டா ‘ என முகத்தை தூக்க
” வேற என்ன செய்றதாக்கும்.?”
‘ நீ இப்போ காதலன் கிடையாது டா. ஒரு பொண்ணுக்கு புருஷன். எனக்கு உன்னை பார்த்தா இசையை கண்டதும் அவளோட போய்டுவியோன்னு தோணுது டா ‘ இடித்துரைக்க
” வாய கழுவு டா. உனக்கு எப்போதும் நல்லதே பேச தெரியாத என்ன.? எப்போ ஒரு பொண்ணு கழுத்துல தாலியை கட்டினேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன். அவதான் என் வாழ்க்கைன்னு ” என கோபமாக சொல்லியவன் இப்போது முகத்தை அவன் திருப்பி கொண்டான்.
‘ நம்புற மாதிரி இல்லையே வெற்றி.? இசை இசைன்னு சொல்லிட்டு சுத்துற’
” நம்பனும் டா . இனியா தான் இனி என் வாழ்க்கை துணைவி. என்கிட்ட அப்பா ப்ளாக்மெயில் பண்ணியதை சொல்லி இருந்தா , நானே கல்யாணத்தை நிப்பாட்டி இருப்பேன் டா. அதுவும் இல்லாமல் அவளும் அவ ஆசைப்பட்ட படி அவுங்க அத்தான் கூட போயிருப்பா. ஆனாலும் இசையை நான் சும்மா விட போறது இல்லை டா. என்கிட்டயே விளையாடிட்டா இல்ல அவளுக்கு பாடம் சொல்லி கொடுத்தே ஆகனும் டா. “
” இசையை அப்புறமா தேடிக்கலாம். இப்போ அதுக்கு முன்னாடி இவளுக்கான தண்டனையை கொடுக்கிறேன்.”
‘லூசா வெற்றி நீ?’
” லூசாவே இருந்துட்டு போறேன் போ டா ” என மனசாட்சியை துரத்தி விட்டான்.
பின் காலை உணவை முடித்து விட்டு சாய்வாக அமர்ந்தவன் , அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடி இருந்தான்.
“ரெண்டு பேரும் சீக்கிரமா கிளம்புங்க கோயிலுக்கு போகனும். ” என விஜயசாந்தி இருவரையும் அறைக்கு அனுப்பி வைத்தார்.
அடுத்த அறை மணி நேரத்தில் குடும்பத்தோடு வயலூர் முருகன் கோயிலுக்கு சென்றனர்.
சாமி கும்பிட்டு முடித்து வீடு வந்து சேரவும் , அவர்களை மறுவீட்டிற்கு அழைப்பதற்காக ஞானவேலும் காந்திமதியும் சம்பந்தி வீட்டிற்கு வந்தனர்.
” வாங்க வாங்க ” என இன்முகத்துடன் வரவேற்றார் விஜயசாந்தி.
” வரோம் தங்கச்சி ” என ஞானவேலும் சந்தோஷ முகத்துடன் சொன்னார்.
” அம்மு மா ! யாரு வந்திருக்காங்கன்னு வந்து பாரு டா ” என சத்தமாக மருமகளை அழைத்தார்.
” இதோ வரேன் அத்தை ” என சத்தமிட்டவள் வெளியே வந்து பார்த்தாள்.
அப்பாவை பார்த்தவளின் முகத்தில் தோன்றிய புன்னகை அன்னையை கண்டதும் தொங்கிவிட்டது. அதை பார்த்த வெற்றி தவறாக கணித்தான்.
” ப்பா..” என சந்தோஷமாக அழைத்தவள் இறங்கி வந்து தந்தையை கட்டி கொண்டாள்.
” அம்மு ” வாஞ்சையாக தலையை தடவி கொடுத்தார்.
” நல்லா இருக்கியா டா.?”
” நல்லா இருக்கேன் பா. நீங்க எப்படி இருக்கீங்க.? வாங்க வந்து உட்காருங்க பா” என கண்ணீரோடு சொன்ன மகளை பார்த்து புன்னகைத்தார்.
” என் பொண்ணு ஒரே நாள்ல வளர்ந்துட்டா போலையே ” என கிண்டல் செய்ய
” ப்பா..” என சிணுங்கினாள் பெண்.
” நான் நல்லா இருக்கேன் டா.”
” அப்புறம் தங்கச்சி சம்பந்தி இல்லையா ? அவரை காணோமே ” என ஞானவேல் கேட்டார்.
” அவரு தோப்பு வரைக்கும் போயிருக்காரு ண்ணா . நீங்க வாங்க “என உள்ளே அழைத்து வந்தார்.
அதற்குள் திலகம் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க , அதை வாங்கி குடித்த ஞானவேல் மனைவியிடம் நீட்டினார்.
அவரோ ,” ஏங்க இது எங்க பிடிச்ச தண்ணியோ ? இதை போயா குடிக்கிறது ” என முகம் சுளிக்க
” என்ன பேசுற மதி நீ.? ” என மனைவியை அதட்ட
” எவ்வளவு காசு கொடுத்து தண்ணி வாங்கி கொடுக்கிறது முக்கியமே இல்லை. ஆனா என் அத்தை கொடுக்கிறதுல பாசம் அள்ளி கிடக்கும். பணம் பெருசு கிடையாது பாசம் தான் பெருசு ” என சுள்ளென வார்த்தைகள் விழுந்தது இனியாவிடமிருந்து.
” என்ன டி ஓவரா பேசுற.?” என மகளை அடிக்க கையோங்க பார்க்க அந்த நேரம் பார்த்து வந்த வெற்றி தன் மனைவியை தன் பக்கம் இழுத்து கொண்டு அவளை அடியிலிருந்து காப்பாற்றினான்.
” என்ன பண்றீங்க.? அவ உங்க பொண்ணா இருந்தது எல்லாம் நேற்றோட முடிஞ்சு போச்சி. இப்போ அவ என் பொண்டாட்டி .மிஸஸ் . இனியா வெற்றிமாறன் மீது வைக்க நினைச்சீங்க அவ்வளவு தான் ” என விரல் நீட்டி எச்சரிக்கை செய்தான்.
இனியாவோ அவன் கைவலைப்பில் இருந்தவாறே , இவனும் அவர்களுக்கு இசைந்து போனான் தானே என்று நினைக்கும் போதே அவள் உடல் விறைத்தது.
அதை உணர்ந்த வெற்றி தவறாக புரிந்து கொண்டான். அவனுடைய எண்ணங்களை கொண்டே அவர்களது வாழ்வை நடத்த துவங்கினான். இதில், இனி தான் மட்டும் அல்ல தன்னுடைய வாழ்வை அவனோடு பகிர்ந்து கொள்ள இனியா என்பவள் உள்ளாள் என்பதை மறந்து போனான்.