MK 13

eiS8VZ63923-6078dbca

MK 13

மயங்கினேன்.!கிறங்கினேன்.!

அத்தியாயம் 13

மதிய உணவை முடித்து அறைக்கு வந்த வெற்றிக்கு நிம்மதியே இல்லை.

அவனது எண்ணங்கள் முழுதும் இனியாவே தான் சுற்றி வந்தாள்.

திருமணத்தின் போது கூட அவன் மனமும் மூளையும் இசை இசையென சொல்லிய படி தான் இருந்தது. ஆனால் இப்போது இசையை பற்றின எண்ணம் கூட அவனுள் சுத்தமாக இல்லை.

அது ஏன்.?  என்ற அவனது மூளைக்கு , அட்ராக்ஷனாக இருக்கும் என்று பதில் கிட்ட திடுக்கிட்டு போனான்.

‘ இது எப்படி சாத்தியமாகும்.? அப்போது நான் இசை மீது வைத்திருந்த காதல் உண்மையில்லையா? அது வெறும் அந்த எழுத்துக்களால் உண்டான வசீகரமா.? அன்றைய பொழுது கூட மனசாட்சியிடம் தான் இனியாவை விட போறதில்லை என்று சொன்னேனே.  என்ன மாதிரியான மனிதன் நான்’ என்ற சிந்தனையில் தன்னை தானே கடிந்து கொண்டான் வெற்றிமாறன்.

அதுமட்டுமா , காந்திமதி இனியாவை அடிக்க செல்லும் போது அவர் மீது அத்தனை கோபம் வந்ததே. அதனால் தானே அவளை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தது எல்லாம். இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்.

‘கண்டிப்பாக இது காதல் கிடையாதே. அப்போ மனைவி என்ற உரிமையா? அவளை நான் மனைவியாக ஏற்றுக் கொண்டேன்னா?

அது மட்டுமா , அவளின் காதலை அறிந்த நொடி தனக்குள் ஒரு விதமான வலி கூட எடுத்ததே. இதெல்லாம் எதற்காக நடக்கிறது. ஏன் இப்படியாக நடக்க வேண்டும். ‘

‘என் மனைவி என்னை காதலிக்கவில்லையே , வேறொரு ஆடவனை அல்லவா அவள் காதலிக்கிறாள். இப்போது நான் எனக்காக யோசிக்க வேண்டுமா , இல்லை அவளுக்காக யோசிக்க வேண்டுமா ‘ என்று தன்போக்குக்கு சிந்தனையில் உலன்றவனை சுயத்திற்கு கொண்டு வந்தது அவனது அழைப்பேசி அழைப்பு.

அதில் அவனது பால்ய கால நண்பன் பலராமன் அழைத்திருக்க‌, அவனது எண்ணை  பார்த்த வெற்றி அதனை உயிர்பித்தான்.

” மச்சான்…” என எடுத்த எடுப்பிலே பலராமன் கத்த

” கத்தாத ராம் ” என்றான் சின்ன குரலில்

” மச்சான் சாரி டா. என்னால உன்னோட கல்யாணத்துக்கு வர முடியல. “

” பரவால்ல டா விடு”

” என்ன மச்சான் ஒரே குஷியா இருக்க போலையே. பேட் டைம்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னா என்ன.?” என்று நண்பனை பலராமன் கிண்டல் செய்ய

‘ நானே குழப்பத்தில் இருக்கேன். இதுல எங்க அவ கூட ரொமன்ஸ் பண்றது ‘ என முணுமுணுக்க

” ஏதாவது இப்போ சொன்னியா மச்சான்.? எனக்கு தான் சரியா கேக்கலையா.?”

” நான் ஒன்னும் சொல்லல டா. இப்போ எதுக்கு கூப்பிட்ட.?” என்றவனுக்கு ஒருவித சலிப்பு இருந்தது.

” என்ன மச்சான் ஒரு மாதிரி பேசுற? உனக்கு ஏதாவது ப்ரோப்ளமா என்ன ? எதுவா இருந்தாலும் சொல்லு டா ” என நண்பனின் குரலில் இருந்த சலிப்பை கண்டு கொண்டு கேட்டான் பலராமன் .

” அதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல டா ” என்று சொன்ன நண்பனின் வார்த்தையை அவனால் நம்ப முடியவில்லை .

“உண்மைய சொல்லு எரும ? உன்னோட மாப்பின்ற அழைப்பு மிஸ்ஸிங் மச்சான் . இப்போ வேணா நான் உன்கூட இல்லாம இருக்கலாம் .அதுக்காக உன்னோட ஆக்டிவிட்டிஸ்க்கூடவா எனக்கு தெரியாம போகும் . எனக்கு இப்போ உன் மண்டையில ஓடுற விஷயத்தை சொல்லியே ஆகனும் ” என்ற நண்பனை மனதில் மெச்சி கொண்டான் வெற்றிமாறன் .

“…..”

“வெற்றி..”

“….”

“வெற்றி பேசு ” என்ற குரலில் மாற்றம் இருந்தது . அதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது .

வெற்றிக்குமே தனக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கு , இவனிடம் பேசி குழப்பத்தை தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து அனைத்தையும் சொன்னான் .

” இது தான் டா பிரச்சனை . எனக்கு இப்போ என்ன முடிவு எடுக்குறதுனே தெரில . என் காதல் தான் இல்லாம போச்சி. அதுனால அவ காதலை வாழ வைக்கணுமா , இல்லை அவளோட காதலை விட்டுட்டு என்கூட வாழ சொல்றதா ? இவளோ நாள் காதல்ன்னு நினைச்ச ஒரு விஷயம் அது காதலே இல்லனு இப்போ தோணுது . நான் என பண்ணட்டும் மாப்பி ?” என்ற நண்பன் மட்டும் இப்போது அவன் எதிரே இருந்திருந்தால் அடிவாங்கிய ஒரு வலி ஆகியிருப்பான் .

“லூசா வெற்றி நீ ? இப்போ அவுங்க யாரோடைய காதலியோ இல்லை . இப்போ அவுங்க உன்னோட மனைவி . அவங்க துரைய தான் காதலிக்கிராங்கன்னு எப்படி சொல்ற சொல்லு ?”

” அதான் அவ அன்னைக்கு என் அத்தானை கல்யாணம் பணிக்க போறேன்னு சொன்னாலே . அப்போ அவளோட அத்தான் அவன் தானே ” என சிறுபிள்ளை கோபத்தோடு சொன்னான் .

” ஏன் டா தங்கச்சிக்கு வேற அத்தானே இருக்காதா சொல்லு ” என்றதில் மறைமுகமான நக்கல் இருந்தது .

” ஏன் இல்ல . என்னோட அண்ணங்காரன் இருக்கானே. இன்னைக்கு பூரா அத்தான் அத்தான்னு சொல்லிட்டு அவன் பின்னாடி சுத்துனாளே ” அதில் சிறு பொறாமை கூட எட்டி பார்த்தது .

“அட என் மக்கு மச்சானே ! “

“டேய் ! நான் ஒன்னும் மக்கு இல்ல . உன்கிட்ட போய் சொன்னேன் பாரு , முதல போனை வை டா ” என சிடுசிடுத்தவனை கண்டு சத்தமாக சிரித்தான் பலராமன் .

” சிரிக்காத கடுப்பாகுது “

” டேய் ! நீயெல்லாம் எப்படி டா ஆர்.ஜே வா இருக்க ? மத்தவுங்க சொல்ல வரதை எல்லாம் நீ எப்படி புரிஞ்சிக்கிட்டு பேசுறியோ தெரில ? நான் வேற ஸ்டேட்ல இருக்கறதுனால என்னை ஏமாத்துறியா மேன் ?”

“ஓவரா பேசாத ?”

“அப்புறம் என்ன டா ! தங்கச்சிக்கு நீயும் அத்தான் தானே . அவங்க ஏன் உன்னை குறிப்பிட்டு சொல்லி இருக்க கூடாது சொல்லு. உன்கூட தானே எரும மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி இருந்தாங்க ” என்று பலராமன் சொல்ல , வெற்றியின் தலையில் நங்கூரம் அடித்தது போல் இருந்தது .

“இதை எப்படி நான் மறந்தேன் . தேங்க்ஸ் டா மாப்பி .லவ் யூ சோ மச் டா ” என்றான் சந்தோஷ மிகுதியில் .

“ச்சி பே “

“ஒரு நிமிஷம் டா ” என்ற பலராமன் ,” இன்னேன் பர்த்தினிமா ( இதோ வரேன் மா) ” என கன்னடத்தில் சொன்னவன்,

” சரி டா . நான் அப்புறமா பேசுறேன் மச்சான். அம்மா கூப்பிடுறாங்க” என்று பலராமன் வைத்து விட்டான்.

பலராமனிடம் பேசியதில் வெற்றிக்கு சந்தோஷம் தாளவில்லை. அதுவும் அவன் கூறிய விடயம் அவனின் இதயத்திற்கு சர்க்கரை பாகாய் இனித்தது.

இசை மீது காதல் இல்லை என்று புரிந்ததும் ஒருபக்கம் நிம்மதியாக இருந்தது. மறுபக்கமோ , இனியாவின் காதல் தானாக இருக்க கூடும் என்று நினைக்கும் போது தித்திப்பாய் இருந்தது.

ஆனாலும் அவனுக்கு சந்தேகமாக இருந்தது. இசையை இத்தனை நாள் காதலி என்று நினைத்திருக்க , அதற்கு மாறாக இனியாவை மனைவியாக மனம் ஏற்றுக்கொண்டதா.?

அவனுக்கு அது தெரிய வேண்டி இருந்தது. இனியாவை முழுவதுமாக மனம் ஏற்றுக் கொண்டதா இல்லையா என்று..

அதற்காக சில பல சோதனைகள் வைத்து பார்க்க வேண்டும் என்று நினைத்தபடி இனியாவை காண கீழே வந்தான்.

அந்த சோதனையால் அவன் வாழ்வே ஒரு நாள் சூறையாட போகுது என்று அறியாமல் போனான்..

அது எல்லாம் மஞ்சல் கயிறு செய்த மேஜிக் என்று தெரியாமல் போனது இந்த மக்கு ஹீரோவிற்கு.

******

அவள் வீட்டின் பின்புறத்தில் அமைந்திருந்த சிறிய வகை டயரால் மரத்தில் அமைத்திருந்த ஊஞ்சலில் அமர்ந்து தன் காதல் கதையை நினைவு கூர்ந்து கொண்டிருந்தாள் இனியா.

மூன்று வருடத்திற்கு முன்பு , முதன் முதலில் வெற்றியை சந்தித்தது என்னவோ பூங்கோதை – மணிமாறனின் திருமண வைபோகத்தில் தான்.

திருமணத்தன்று காலை வந்திருங்கிய வெற்றி , தந்தையிடம் திட்டு வாங்கியது , அன்னையை செல்லம் கொஞ்சியது , அங்கிருந்த வேலைகளை சுறுசுறுப்புடன் செய்தது , குழந்தைகளோடு குழந்தையாக உலா வந்தது என ஒவ்வொன்றும் இனியாவை ஈர்க்கச் செய்தது.

அவள் அனுபவித்திராத சுதந்திரம் அவனிடம் இருக்கவே , அவனை பார்த்த படி அந்த நாளை கடத்தியவளுக்கு , மெல்ல மெல்ல அவள் இதயத்திளும் நுழைய தொடங்கினான்.

வெற்றியின் குணத்தால் பெண் மயங்கி போய் அவன் மீது பித்தாகி போனாள்.

அன்னையிடம் கிட்டாத அன்பு , விஜயசாந்தி அத்தையிடம் கிடைக்கவும் அவர்களிடம் நிறைய நிறைய பேசினாள்.

அதனை எல்லாம் ரசித்து கேட்பார் விஜயசாந்தி. பெண் பிள்ளை இல்லா அவருக்கு இவள் பிள்ளையாய் தெரிந்தாள்.

வெற்றியின் குணம் , அத்தையின் அன்பு , மணிமாறனின் கண்டிப்போடு கூடிய பாசம் என அனைத்தும் அவளை வெற்றியின் புறம் சாய செய்தது.

மனதிற்குள்ளே அவனை எண்ணி ஆசையை வளர்த்தவளுக்கு இடியாய் இறங்கியது போல் அமைந்தது துரைபாண்டி குடும்பத்தின் பெண் கேட்கும் நிகழ்வு.

கட்ட பஞ்சாயத்து , அடி தடி , வட்டிக்கு விட்டு பணம் சம்பாதித்தல் என மென்மைக்கு நேர் மாறான முறையில் வேலைகளை செய்து வாழும் குடும்பம் தான் துரைபாண்டியின் குடும்பம்.

இதில் துரைபாண்டி சற்று நல்லவன் தான்.‌ஆனாலும் அவன் குடும்பத்தின் மீது நல்லதோர் அபிப்ராயம் இல்லை ஞானவேலிற்கு.

வந்தவர்களை உபசரித்து , நாசுக்காக திருமணம் வேண்டாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துவிட்டார்.

தன் அண்ணன் குடும்பத்திற்கு மகளை மருமகளாக அனுப்ப முடியாது என்று கூறிய கணவன் மீது விசனப்பட்டார் காந்திமதி.

அவரை ஏதும் சொல்ல முடியாது போக , அனைத்தையும் மகள் மீதே காட்ட , காந்திமதிக்கு அடங்கி வாழ்ந்தவள் இருக்கும் இடம் தெரியாமல் போனது.

‘ எங்கே வெற்றி தனக்கு கிடைக்கமாட்டானோ ‘ என விரக்தியில் இருந்தவளுக்கு அடித்தது ஜாக்பாட் போல் வெற்றியே அவளுக்கு மணவாளன் ஆகிப் போனான்.

எல்லாம் நல்ல விதமாக தான் சென்றது.

அந்த கார் பயணத்தின் போது அவனது காதல் கதையை அறிந்து கொண்டாள் இனியா. அப்போது கூட அது தோல்வியில் முடிந்து விட்டதே. இனி தான் வெற்றியை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ள வேண்டும் என்றே நினைத்தாள்.

ஆனால் திருமணத்தின் முந்தைய நாள் அன்னையும் வெற்றியும் பேசியதை கேட்டு , துடிதுடித்து போனாள்.

பின், இசை தான் என் வாழ்வு என்று கூறி திருமணத்தை நிறுத்த சொன்ன போதும் நிறுத்திவிடலாம் என்று நினைத்திருக்க அதனை கெடுக்கவென பரமசிவம் வந்து மிரட்டி விட்டு சென்றார்.

ஒன்னும் செய்ய முடியாமல் அவன் தாலியை வாங்கி கொண்டு , இதோ இப்போது மறுவீடு நிகழ்விற்கு பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள்.

” ஏன் வெற்றி என்னை முதல பார்க்கலை ? அப்படி பார்த்திருந்தா இப்போ இப்படி நிம்மதி இழந்து இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே ” என்று நினைக்கும் போதே விழி ஓரத்தில் கண்ணீர் கசிந்தது.

” ஏன் வெற்றி உனக்கு என் மேல காதல் வராம போச்சி ? ” என கயிற்றில் தலை சாய்த்தவாரே தனக்குள் பேசிக் கொண்டிருந்தவளை கலைத்தது குழந்தை அஷ்வத்தின் அழுகை சத்தம் .

“இந்த அக்காவும் அத்தானும் எங்க போனாங்க ? குழந்தை இப்படி அழுகுறான். அவுங்களை பார்க்காம இவுங்களுக்கு என்ன வேலையோ ” என்று அக்காளையும் அத்தானையும் திட்டியவாறு அறையை நோக்கி சென்றவள் ,அங்கு நடந்த கூத்தை கண்டு சிரித்துவிட்டாள் .

அதாவது , அங்கு என நடந்தது என்றால் , இனியாவை பார்க்கவென வந்த வெற்றியை வழி மறித்து நின்றான் மணிமாறன் .

” எதுக்கு டா இப்படி சிக்னல் போட்டமாதிரி இடையில வந்து நிக்கிற ?”

“டேய் வெற்றி ! கொஞ்சம் தம்பிய பார்த்துக்கோ டா . நானும் அண்ணியும் அவ வீடு வரைக்கும் போயிட்டு வந்துடுறோம் .”

“சரி , போயிட்டு வாங்க ” என குழந்தையை வாங்கி கொண்டு அவனை அனுப்பி வைத்தான் .

“அச்சு குட்டி ! இந்த சித்தப்பா கூட கொஞ்ச நேரம் இருங்க .” என குழந்தை அஷ்வத்தை கொஞ்சினான் .

அவனுமே வெற்றியின் கை பிடித்து சப்பு கொட்டினான் .

நன்றாக விளையாடிட்டு இருந்த குழந்தை அழவும் பயந்து போனான் வெற்றி .

அந்த நேரம் பார்த்து , அந்த அறையை கடந்து சென்ற காந்திமதி குழந்தை அழவும் அறைக்குள் நுழைந்தார் .

“ஒரு குழந்தையை கூட உன்னால பார்த்துக்க முடியாதா ? அவனை குடு முதல ” என மருமகனிடம் பேரப்பிள்ளையை கேட்க

“நான் எதுக்கு உங்க கிட்ட குடுக்கணும் .அதெல்லாம் குடுக்க முடியாது போங்க”

“என்ன ஓவரா பேசுற ? ஏதோ உன் குழந்தையை கேட்ட மாதிரி தர முடியாதுன்னு சொல்ற ?”

“இவனும் என் குழந்தை தான் . என் குழந்தையை உங்க கிட்ட தர முடியாது ” என்றவன் ” அச்சு குட்டி , இவுங்க கிட்ட நீ போக கூடாது டா . உன் சித்தப்பா சொல்ற பேச்சை நீ தானே கேட்ப ” என குழந்தையிடம் பேச்சு கொடுத்தான் .

” அத நீ சொல்லாத . குட்டிப்பா நீ பாட்டி பேச்சை தானே கேட்ப ?”என வெற்றியிடம் பதில் சொல்லிவிட்டு பேர குழந்தையிடம் பேச்சு குடுத்தார் .

இவர்கள் இருவரின் சண்டையில் , குழந்தை இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு வீறிட்டு அழுதது . இதனை பார்த்த இனியாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

” உங்களோட விளையாட்டை கொஞ்சம் நிறுத்துறீங்களா ? குட்டி பையன் உங்க ரெண்டு பேரையும் பார்த்து தான் அழுவுறான் . வெளிய போங்க ரெண்டு பேரும் ” என இருவரையும் விரட்டி விட்டாள் இனியா .

இருவரும் சண்டைக்கோழிகளாக சிலிர்த்து கொண்டு இடத்தை காலிசெய்தனர் .

போகும் அவர்களை பார்த்து சிரித்தவள் , குழந்தையை சமாதானம் செய்தாள்.

அடுத்தநாள் காலையிலே வீடு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும்.

இனியாவோடு இருக்கும் நேரத்தை வெகுவாக ரசித்து வந்தான் வெற்றிமாறன்.

வீட்டிற்கு வந்ததும் இனியா செய்த முதல் வேலையே அத்தையை தேடியது தான்.

” ஏய்! நில்லு முதல ” வெற்றியின் அழைப்பை கூட அவள் சட்டை‌ செய்யவில்லை.

” அத்தை !” என கத்திய படியே வீட்டிற்குள் நுழைந்தாள்‌ இனியா.

“அத்தை ! எங்க இருக்கீங்க.?”

” என்ன இனியா.?” என்ற படி வெளியே வந்த விஜயாவை கட்டி கொண்டு செல்லம் கொஞ்சினாள் பெண்.

” அத்தை , நான் உங்களை எவ்வளோ மிஸ் பண்ணேன்னு தெரியுமா ” என கட்டிக்கொண்டவளை பார்த்து சிரித்தார் விஜயசாந்தி.

” இப்படி நீ என் பொண்டாட்டியை கட்டிக்கிட்டா , அப்போ என் பையனோட நிலை என்னவாகுறது.?” என்றபடி வந்த மாமனாரை பார்த்து சிறுபிள்ளை போல் வைத்து கொண்டாள்.

” போங்க மாமா . உங்களுக்கு பொறாமை. நான் அத்தையை கொஞ்சிறது போல உங்களை கொஞ்சலன்னு “

” என் மருமகளை கிண்டல் செய்யாதீங்க. நீ வாடா மா ” என கணவனை கண்டித்து விட்டு மருமகளுடன் அயிக்கியமானார்.

சரியாக அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த வெற்றி , இவர்களின் கூத்தை கண்டு தலையில் அடித்து கொண்டு சென்றான்.

Leave a Reply

error: Content is protected !!