தேன் பாண்டி தென்றல் _ 8

தேன் பாண்டி தென்றல் _ 8

 
அன்று   மற்றுமோரு ஞாயிற்று கிழமை. அழகிய வீர பாண்டியன் எங்கும் செல்லாமல் தன் வீட்டில் இருந்தான். வேறு வேலைகள் வைத்துக் கொள்ளவில்லை.  
 
அம்மா வைத்துத் தந்த பூண்டுக் கஞ்சியைக் குடித்துவிட்டு மோட்டு வளையை முறைக்கலானான்.
 
காலனி விழா முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.  ஆனால் அன்று அவன் ஆரம்பித்த வேலை இன்னும் இழுத்துக் கொண்டே போகிறது.
 
அது கலக்கத்தையும் தருகிறது.
 
அன்று தேன்மொழி அவனிடம் சொன்ன சேதியை நினைத்தால் உள்ளம் பதறியது. அது அப்படி இருக்காது என்ற நப்பாசையும், அப்படி இருக்கக் கூடாது என்ற பேராசையிலும் மனதை திடப்படுத்திக் கொண்டாலும் அப்படியே விட்டுவிட முடியாதே?
 
“என் பேரைச் சொல்லி கூப்பிட்டதுக்கு நான் அலறல சார். ஆனா கூப்பிட்ட விதம் அத்தனை பயங்கரமா இருந்துச்சு. நல்ல மனநிலை யில இருக்கிறவங்க இப்படிக் கூப்பிட மாட்டாங்க.   அவங்க அந்த வேலம்மாவை ஏதோ டார்ச்சர் பண்ணுறாங்கனு தோணுது.”
 
“அட! என்னதான் சொல்ல வர்ற?”  சலித்துக் கொண்டான் பாண்டியன்.
 
 
அதைக் கேட்டு மனம் சுருங்கினாள் தேன்மொழி.
 
 
ஏனோ அவன் அவள் சொல்வதை நம்ப வேண்டும் என்று அவள் மனது தவித்தது.
 
 
“பொதுவா அந்த இடத்துக்கு யாரும் போக வர மாட்டாங்க.
 
பாம்பு நடமாட்டம் இருக்கும்னு குழந்தைகள இந்த பக்கம் வர விடாம நம்ம அம்மாக்கள் பயங்காட்டி வச்சிருக்காங்க.
 
நான் இங்க குடி வந்த புதுசுல இந்த வழி பத்தி தெரிஞ்சு வச்சிகிட்டேன். ஆனா பயன் படுத்தினதில்ல.
 
இன்னிக்கு கோலப் போட்டிலயும் ஜெயிக்கல. ‘பாசிங் த பால்’லயும் பாதில அவுட் ஆனதால் ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன்.  
அதனால் பேசாம வீட்டுக்குப் போயி காபி குடிக்கலாம்னு கிளம்பினேன். அந்த சமயம் அம்மா ஃபோன் பண்ணியிருந்தாங்க. அவங்க  வரும் போது பால் வாங்கிட்டு வர சொன்னாங்க.
 
எனக்கு இன்னும் டென்ஷன் ஆகிடுச்சு
 
 
சரி. நம்ம நேரம் சரியில்ல. வர காபியாசும் குடிப்போம்னு மனசத் தேத்திக்கிட்டுஅந்தப் பாதையில நடந்தப்போ ஒரு அம்மா ‘ வேலம்மா’னு கத்தினாங்க.
 
இல்ல. அலறினாங்கனு சொல்லணும். “ 
 
இந்த இடத்தில் பாண்டியனுக்கு சந்தேகம் வந்தது.
 
“ சரிதான். ஆனா அந்த அலறல் சத்தம் எங்க காதுக்குக் கேக்கலையே? – நீ கத்துனது நல்லா திவ்வியமா ரெண்டு காதுலயும் விழுந்துச்சு”. என்று குழப்பம் ஏற்படுத்தி அவள் எரிச்சல் முறைப்பைப் பரிசாக பெற்றான்
 
 
“ நான் தான் அந்த வீட்டுக்குப் பக்கத்துல  தானே நின்னேன்?
உங்களுக்கு டெசிபல் பத்திப் பாடம் நடத்தத்  தெரியாது எனக்கு.
 
நான் கத்துனது உங்களுக்கு எப்படிக் கேட்டுச்சினு நீங்கதான் சொல்லணும் “  என்றவளின்  பேச்சில் இனிமையாக அதிர்ந்த பாண்டியன் ,
 
“ எப்படின்னு, ஏன்னு உனக்கும் புரியலியா?” என்று அவள் முகத்தை ஆழ்ந்து நோக்கியவாறு கேட்டான்
 
“ எப்படி?” _ அவன் முகத்தில் அவள் என்ன தேடினாள் என்பது அவளுக்குப்  புறிந்தாலும் புரியாவிட்டாலும் அவனுக்குப் புரிந்தது.
 
அவளையே நினத்த அவன் மனது அவள்  குரல்  பயத்தில் உயர்ந்த போது பதறிவிட்டது.
 
வாசலில் வேலையாக இருக்கும் தாய் வீட்டினுள்  பிள்ளை சிணுங்கியது கேட்டு பிள்ளையைத் தூக்க ஒடுவாள் அல்லவா? அது போல.
 
எத்தனையோ முறை அவளிடம் சொல்ல நினைத்து முடியாமல் போன அவன் மனதை இன்று அவன் சொல்லாமலே புரிந்து கொண்டாள்.
 
 கல்யாணம் பேசுவது வேறு. காதல் பேசுவது வேறு இல்லையா?
 
ஒருதலைக் காதலை தன் மன  இணையிடம் சொல்வதற்கும், சொல்லாமல் இருப்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை.
 
சொன்னால் ஒத்துக் கொள்ளப் படுமா? ஒதுக்கப்படுமா? என்ற குழப்பம்.
 
சொல்லாவிட்டால் , எப்படிச் சொல்ல? என்ற ஒரே குழப்பம்
 
அவற்றை எல்லாம் கடந்து, இதோ.. தன் விழி வழியே  சொல்லிவிட்டான். 
 
தேன் மொழிக்கு பாண்டியனின் பாசம் புரிந்தது.
தனக்கு வரப் போகும் மணமகன் குறித்து தவறான அல்லது சரியில்லாத கருத்துக்கள் தான் அவள் வைத்திருந்தால்.
 
அதைத் தவிடுபொடியாக்கிய பாண்டியனை விழி நிறையப் பார்த்தால்.
 
அதில் அவள் சம்மதம் தெரிந்தது.
 
பாண்டியன் காதல் முக்தி அடைந்தான்.
 
எங்கோ கைதட்டும் ஒலி வின்னைப் பிளந்தது.
 
யாருக்கோ பரிசு கொடுத்திருக்கிறார்கள் போலும்.
 
தன்னிலை அடைந்த இருவரும் மெல்ல புன்னகைத்துக் கொண்டனர்.
 
“ சரி சொல்லு தேனுமா!” பாண்டியன் குரலில் மென்மை பரிபூரணமாக விரவி இருந்தது.
 
மெல்ல தலையை தட்டிக் கொண்ட தேன்மொழி , 
“ எஸ். விஷயத்துக்கு வருவோம்
அந்தக் குரல் வேலம்மானு கூப்பிட்டதுக்கு ஒரு சின்னப் பொண்ணு குரல் பயந்துகிட்டு வந்துச்சு.
 
‘என்னை விட்ருங்க. நான் உங்களை மீறி போக மாட்டேன்’ அப்டின்னு சொல்லிச்சு.
 
 பதிலுக்கு அந்த பயங்கரக் குரல்,
 
‘ நீ என்னை மீறி எப்படிப் போக முடியும்? நீ இங்கேயே கிடந்து சாவ வேண்டியதுதான் வே லம்மாணு’ சொல்லவும் எனக்கு பயமாகி கத்திட்டேன். பிகாஸ் என்  இன்னொரு பெயரும் வேலம்மாதான். பச்” என்று நிறுத்த,
 
“ இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்” என்றான்.
 
அவன் ஜொள்ளு விழிகள் அவள் உதட்டை முகாமிட்டு இருந்தன.
 அதைக் கண்ட தேனு கோபத்தில் தன் பற்களுடன் பல்லாங்குழி ஆடினால்.
 
“ யோவ். அங்கே ஒரு பொண்ணு உயிருக்குப் போராடுது. நீ பன்னாட்டு பண்ணிட்டு இருக்கியா? “ என்று இவனைக் காரித் துப்பினாள்.
 
“ அதில்லடா. அங்கே இருந்தது ஒரு அம்மாவும் பொன்னும் தான். அம்மா டீச்சர். ரிட்டையர்ட் ஆயிட்டாங்க. பொண்ணு தென்றல். அவ வெளியூர்ல படிச்சிட்டு இருந்தா. பாதில இந்த அம்மா கூட்டிட்டு வந்தாங்க.
 
ஆரம்பத்துல கொஞ்ச நாள் தென்றல் வெளிய வரும் போகும். இப்போ தெரியல. 
 
தென்றலுக்கு வேலம்மானு ஒரு பெரை வச்சு அதை ஏ டாகூடமா கூப்பிட்டு உன்னை கலவரப் படுத்தினது மட்டும் இல்லாம என்னையும் பழி வங்குறாங்க அந்த மல்லிகா டீச்சர். அதான அவங்க  அம்மா பேரு.”
 
“ என்ன சொல்ல வர்றீங்க?”
 
“ அதாவது அவங்க சும்மா கேலிக்கு சொல்லி இருப்பாங்க. இல்ல, ஏ தாச்சும் டிவி சேனல் பாத்துகிட்டு இருந்து இருப்பாங்க.
 
ஒன்னும் இல்லாதது நீயும் அலறி என்னையும் கிலருறே நீ” என்று அவளை சமாதானப் படுத்தினான்.
 
‘ அப்படியும் இருக்குமோ?’ என்ற குழப்பத்தில் ‘ நீலாம் ஒரு ஆளு! த்தூ” என்று தன்னை தானே  கழுவி ஊற்றிக் கொண்டு தேனு நின்ற போது கோ லப் போ ட்டிக்கான் சிறப்புப் பரிசு அவள் பெயர் அழைக்கப் பட்டது.
 
தேன்மொழி மற்றதை மறந்து பறந்தொடினால்
 
அவள் போவதைப் பார்த்துக் கொண்டு நின்ற பாண்டியன் முகம் இறுகியது.
 
அதன் பிறகு, அந்த டீச்சர் வீட்டை குமார் மற்றும் குழுவினால் வைத்துக் கண்காணித்தான்.
 
அவர்களும்  வேலை வெட்டிக்கு செல்பவர்கள் தான்.  அதில் கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது.
 
அதில் உருப்படியாகக் கிடைத்த விசயம்  என்னவென்றால்
 
தென்றல் வீட்டுக்குள் இருக்கிறாள். 
 
ஆனால் அவள் ஏதோ துன்பத்தில் இருக்கிறாள்.
 
அதற்கு அவள் அம்மா தான் காரணம்!
 
இதை அவன் இங்கே போய் சொல்லுவான்?
 
குமாரும் சொல்லிவிட்டான்: 
 
 
 
“ அண்ணா … சாரி. மாமா,  தென்ற லுக்கு ஏதோ பிரச்சனைதான். 
 
நாம பேசாம நேர வீட்ல அவங்க அம்மாகிட்ட கேட்டுடுவோம். “ 
 
 
அதற்கு தலையை சம்மதமாக அசைத்த பாண்டியன் முகம் யோசனையைக் காட்டாமல் இல்லை.
 
“ மாமா, நிஜமாவே பிரச்சனை இருந்தா டீச்சர் ஏதாச்சும் பொய் சொல்ல வாய்ப்பிருக்கு. கோபப் பட சான்ஸ் இருக்கு.
 
இல்லன்னா  தென்றலை பார்த்து சௌக்கியம் விசாரிசிட்டு வந்துறுவோம்? என்ன நான் சொல்றது?” 
 
அதன் விளைவு?
 
இன்று பாண்டியன் மட்டுமாக தென்றல் வீட்டுக்குப் போய் பார்த்து விடுவதாக முடிவெடுத்து இருந்தான்.
 
தேன் மொழி சொன்னதும் போ யிருந்தால் ஒன்றும் இல்லாவிட்டால் மன சங்கடம்
 
அப்படி ஏதும் இருந்தாலும் தென்றல் மல்லிகா டீச்சரின் மகள் 
அதனால் அவளுக்கு பெரிய ஆபத்து வர வாய்ப்பு இல்லாதது இருந்ததால் அவன் நிதானித்து இருந்தான்
 
“ விட்டத்த எதுக்குடா விரிச்சு பாத்திகட்டு இருக்கே? இன்னிக்கு அம்மாக்கு கிச்சன்ல ஹெல்ப் பண்ண லாம்ல?”
 
சும்மா இருந்த சங்கை சொரிந்துவிட்டார் செம்பா
 
“ செம்பா! என்னா ? நான் வெட்டியா வீட்ல  இருக்கற  தெம்பா?
 
நான் முக்கிய வேலயா போக இருக்கேன். அதான் யோசிச்சு கிட்டு இருக்கேன். “
 
என் தகவல் மெல்ல சொன்னான் பாண்டியன்
 
“ எங்கடா முக்கிட்டு போக போர?” சிக்கனை கழுவி எடுத்தவாரு செண்பகம் நையாண்டி செய்தார்.
 
“ அம்மா.. இப்போ உங்களுக்கு உங்க மகன் அருமை தெரியாது…”
 
“ ஆமா. நீ முக்கிய விசயத்தை குடிச்சிட்டு செருப்படி வாங்கிட்டு வரும்போது உன் அருமை தெரியும்” மேலும்  ஓட்டினார் அன்னை.
 
“ அம்மா இப்போவே வாய வைக்கதிங்க!” பாண்டியன் அதிர்ந்து போய் கூற,
 
“ ஆமா போ. மிஞ்சி மிஞ்சி  என்ன செய்வ நீ? தேன்மொழி கிட்ட போய் பல்லைக் காட்டுவ?” என்று அசால்ட்டாக சென்பகம் சொல்ல இவன் அதிர்ச்சியின் சதவிகிதம் எகிறியது.
 
“ எப்டிமா..?”
 
தயங்கினான் பாண்டியன்.
பின்னே?
 
கூட்டுக் குடும்பத்தில் அதிக சொந்தங்கள் உள்ள பெண் எடுப்பது அவர்கள் ஒன்றுக்கும் உதவாத முன்னாள்  தீர்மானம் ஆகிற்றே?
 
“ அடப் போடா அறிவு கெட்டவனே!
 
அம்சமா பொண்ணு கிடசிருக்கா. அத விட வேற என்னடா வேனும்? எப்டியோ நீயா சொல்லுவன்னு இவ்ளோ நாள் பாத்தேன். நீ வாய தொறக்ர வழியாக காணோம். 
 
போன ஞா யித்துக் கிழம்  பயங்கர பிரசனாயாம்? என்ன வி சயம் பாண்டி? எதா இருந்தாலும்  தேன்மொழிய அன்னிக்கு தாங்கு தாங்குனு தாங்கினியாம்? எல்லாம் அந்த குமார் சொல்லி தெரிய வேண்டி இருக்கு!
 
சரி சரி. நான் புதன் கிழமை போய் அவங்க வீட்ல பேசிட்டு வந்துட்டேன்.
 
இன்னிக்கு சாயங்காலம் நானும் அப்பாவும் மறுபடி போய் உறுதி பண்ணிட்டு வரலாம்னு இருக்கோம்.
 
அடுத்து அடுத்து எத்தனை வேலை இருக்கு?
 
பூ வைக்கிறது, பந்தக் கால் நடுறது, பொன் உருக்ரது, ஜவுளி எடுக்ரது, நிச்சயம், மாப்பிள்ளை வீடு பாக்ரது, நிச்சயம்  , கல்யாணம், மருவீடு….”
 
“ அம்மா … கொஞ்சம் மூச்சு விடுங்க. எல்லாம் செய்வோம்.
அதுக்கு முன் ஒரு முக்கிய… அர்ஜென்ட் ஒர்க் இருக்கு. 
அதை முடிச்சிட்டு சொல்றேன்.” 
 
என்ற பாண்டியனை விநோதமாக பார்த்த தாய்,
 
“ இத விட என்னடா ஆர்ஜெ ன் ட் ஒர்க்?  சாயங்காலம் பொண்ணு பாக்கப் போரோம். நீயும் வர்ற. நாங்க மட்டும் போ ரோம்னு சொன்னா ஓடன  நானும் வாரெண்ணு சொல்லுவன்னு பார்த்தா.. என்னடா பில்டப் ஓவரா இருக்கு? அதும் என்கிட்டேயே?
 
நான்  வண் ட  வன் டயா கேக்ரதுக்குள்ள  கிளம்பிரு”
 
செண்பகம் கொடுத்த ஆனந்த அதிர்ச்சியை உள்வாங்கவும் முடியாமல் ஒதுக்கி வைக்கவும் முடியாமல் மனது ரணமானது பாண்டியனுக்கு.
 
அவன் மிகவும்   விரும்பி எதிர்பார்த்த தருணம். எதிர்பாராத நேரத்தில். 
 
என்னதான் செய்வான் பாவம்? 
 
இப்போது அவன் செய்யப் போ வாது பிரச்சனை இல்லாமல் முடிந்தால்  உடனே தேனுவின் வீட்டுக்கு படை எடுத்து விடத் தயார் இந்தப் பாண்டியன்.
அதற்கு முன்னால்.. சற்று ஒத்தி வைப்பது நலம் என்ற முடிவுக்கு வந்தவன்,
 
“ அம்மா.. உங்க கொள்கை எங்க போச்சு?.
 
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. அப்புறம் பாக்காலாம்.”  என்று அசிறத்தையாக கூற செண்பகம் அதிர்ந்தார்.
 
“என்னடா சொல்ற? இந்தப் பொண்ணு கட்டிக்க இஷ்டமில்லயா?”  என தவித்தார்.
இந்த குமார் பேச்சைக் கேட்டு இவர் போய் சம்பந்தம் பேசிவிட்டு வந்துவிட்டார். மகனை போட்டு வாங்கலாம் என்று பார்த்தால் அவன் அவரைப் புரட்டி அல்லவா போடுகிறான்?
 
கடிகாரத்தைப் பார்த்தவன் அதற்கு மேல் தாமதிக்க விரும்பாமல்  உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்தான்.
 
“ போங்கம்மா அங்குட்டு. சும்மா ஒளரிக்கிட்டு?”
 
அருகே நின்று அவன் வாயை பிடுங்கிக் கொண்டிருந்த தாயை சுற்றிக் கொண்டு வந்தவன் செருப்பை மாட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

error: Content is protected !!