தேன் பாண்டி தென்றல் _ 12
தேன் பாண்டி தென்றல் _ 12
12
தென்றலுக்கு சுடிதாரின் மீது துப்பட்டா அணிவித்துக் கொண்டு இருந்தாள் தேன்மொழி. காலையில்தான் குளிப்பாட்டி உடை மாற்றி விட்டிருந்தார் பாக்கியம் அவளுக்கு. துப்பட்டா போடுவதை மட்டும் பாக்கி வைத்திருந்தார்.
அப்படியே பாக்கியமும் வேலைக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தார்.
இப்போது தென்றல் இவர்கள் வீட்டில்தான் இருக்கிறாள்.
அவளை அடைத்து வைத்திருந்த காலங்களில் அவளை மல்லிகா டீச்சர் வாரம் ஒருமுறை குளிப்பாட்டி உடை மாற்றிவிடுவார்.
ஆரம்பத்தில் தென்றலுக்கு நன்றாக இருந்த மனநிலையும் தைரியமும் மல்லிகாவின் அடுத்தடுத்த திட்டுகள் கொடுமைகளால் முற்றிலும் நலிந்து போய் இருந்தது.
இதை முதற்கட்ட கவுன்சிலிங்கில் அறிந்து கொண்டார்கள் இவர்கள்.
இன்னும் சில கவுன்சிலிங்க் மறறும் மருந்துகள் அவளை திருப்பித் தரும் என ஆவலுடன் எதிர்பார்த்தாலும் தேன்மொழிக்குள் ஏதோ ஒரு கலவரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தென்றல் இப்போதும் ‘பாண்டி பாண்டி’ என சொல்லத்தான் செய்கிறாள்.
அதற்கு பாண்டியன் அவளைக் காப்பாற்றியதைத்தான் சொல்கிறாள் என்ற தாயிடம் பூசி மெழுகி வைத்திருந்தாள் தேன்மொழி.
இதோ இவளை அடுத்த கட்ட கவுன்சிலிங்க் அழைத்துச் செல்ல பாண்டியன் வந்து விடுவான்.
காலனியின் சங்க உறுப்பினர்களின் அனுமதி பெற்று மருத்துவமனையில் இருந்து தென்றலை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர் பாக்கியமும் தேன்மொழியும்.
தேன்மொழிக்கு ஏன் தென்றல் மீது அன்பு ஏற்பட்டது என்பது அவளுக்கேத் தெரியவில்லை. சொல்லப் போனால் அவள் தென்றலை வெறுக்க வேண்டும். ஆனால் பாண்டியனைப் பார்த்தால் புயலாகி சுழன்று அடிப்பவள் தென்றலைப் பார்த்தால் தென்றலாகி விடுகிறாள்.
இன்னும் குழந்தைத்தனம் மாறாத அந்த முகமும் கண்ணும் அவளை மயக்கித்தான் விடுகிறன்றன.
பாண்டியனை தென்றலுக்கு விட்டுக் கொடுக்க தேன்மொழியால் முடியாது. ஆனால் இருதார மணத்திற்கு சம்மதிக்கலாமா என்றுதான் யோசித்துக் கொண்டு வருகிறாள்.
எப்படியோ தென்றலுடன் அவளுக்குப் பிணக்கு இல்லை. அதுவே பாண்டியனுக்குப் போதுமானதாக இருந்தது.
இப்போது அவன் காலனியில் முக்கியப்புள்ளி ஆகிவிட்டான். முன்பு பத்தோடு பதினொன்றாக இருந்தான். இந்த நிகழ்விற்குப் பிறகு இவனைக் கொண்டாடினார்கள் மக்கள்.
குமார் கூட வேண்டுதல் முடித்துத் திரும்பி வந்தவன் வாயைப் பிளந்திருந்தான்.
“ மாமா செம மாமா “ என்று குதூகலித்தான்.
“ஆமா போடா. இதுல மூக்கை நுழைச்சதுல தேனு என்னைக் கரிச்சுக் கொட்றா”
“ச்சே ச்சே! என்ன மாமா நீங்க? தங்கச்சிமா நல்ல பொண்ணாச்சே?”
“ஆமாடா. அவ நல்லப் பொண்ணுதான். அதான் என்னை விட்டுட்டு தென்றலை தாங்குறா” என்று சலித்துக் கொண்டாலும் அதில் பெருமைதான் இருந்தது.
எந்தச் சூழ்நிலையிலும் அவன் தேன்மொழி அன்பானவள் என்பது அவனுக்குப் பெருமைதானே?
“அட போங்க மாமா. தங்கச்சி தென்றலை எதுக்காக பாத்துக்குதுன்னு கூடத் தெரியலியா? நாளைக்கு சக்காளத்தி சண்டை வரும் போது சொல்லிக் காட்ட முடியாதில்லயா? அதுக்குத்தான்” என்றவனை அடிக்கப் போன கையை இறக்கிக் கொண்டான் பாண்டியன்.
“இதப் பாரு. அவதான் ஏதோ உளறிகிட்டு இருக்கான்னா நீ அதுக்கு ஒத்து ஊதுறியா? தொலைச்சிருவேன்.
ஊர் உலகத்துல எனக்கு மட்டும்தான் இந்தப் பேரை வச்சாங்களா என்ன?
தென்றல் சொல்றது சத்தியமா என்னை இல்லை. இது எனக்கு நல்லாப் புரியுது. ஆனா புரிய வேண்டியவளுக்கு புரியலியே?
அவளுக்கும் புரிஞ்சிருக்கும் – தென்றல் நல்ல நிலையில இருந்திருந்தா. “ என்று சொல்லிக் கொண்டே போனவன் குமாரின் அதிர்ச்சிப் பார்வையில் நெகிழ்ந்து போனான்.
“ சாரிப்பா. நீயும் இப்படி பேசினா நான் என்னதான் பண்றது சொல்லு? சரி விடு. தென்றலை சைக்காலஜிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போறேன். கிளம்புறேன்” என்று விடை பெற்றவனை பார்த்துக் கொண்டே நின்றான் குமார்.
அதன் பிறகு குமார் பாண்டியனை அதிகம் சந்திக்கவில்லை. இவனுக்கும் அது பற்றி யோசிக்க நேரம் இருந்ததில்லை.
இப்போதும் தென்றலை இரண்டாம் முறை கவுன்சிலிங்கிற்காக கூட்டிச் செல்ல வேண்டி தென்றல் இருக்கும் தேன்மொழியின் வீட்டிற்கு வந்து விட்டான் பாண்டியன்.
“ வாங்க தம்பி” என்ற வரவேற்று அவனுக்குக் குடிக்க தண்ணீர் எடுத்துக் கொடுத்த பாக்கியம் “ வேலம்மா தம்பிக்கு காபி போடுடாம்மா” என்று குரல் கொடுக்க அந்தப் பெயரில் பாண்டியன் சின்னதாய் திடுக்கிட _
தென்றல் பயந்து போனாள். அவள் முகம் வெளிறி விட்டது உதடுகள் நடுங்க பக்கத்தில் இருந்த நாற்காலியை இறுகப் பற்றிக் கொண்டாள் அவள்.
சூழ்நிலை ஏதோ சரியில்லை என உணர்ந்த தேன்மொழி தென்றலை அணைத்துக் கொண்டாள்.
‘இவரு கெட்ட கேட்டுக்கு காபி ஒன்னுதான் கொறை?’ என அவள் இதுவரை காபி போட சமையல் அறைக்குச் சென்றிருக்கவில்லை.
தென்றல் இங்கே வந்திருந்த இத்தனை நாட்களில் தேன்மொழியும் பாக்கியமும் அறிந்து கொண்டது ஒன்றுதான்.
அது – அவள் ‘வேலம்மா என்ற பெயரைக் கேட்டாலே பயப்படுகிறாள் என்பது.
தேன்மொழியையும் அவள் தாய் அந்தப் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார். அதனால் முதலில் அப்படியே அழைத்தவர் தென்றல் பயபபடுவதைப் பார்த்து அப்படிக் கூப்பிடுவதை விட்டிருந்தார்.
இன்று பாண்டியனைப் பார்த்த படபடப்பில் அவர் வாய் பழக்கதோஷமாக ‘வேலம்மா’ என அழைத்து விட்டது மகளை.
‘அந்தப் பேரே பயப்படுத்துற மாதிரி இருக்குன்னா அதுக்கு மல்லிகா டீச்சர் எத்தனை பாடாப் படுத்தி இருக்கனும் ?’ என நினைத்த போது நெஞ்சம் கலங்கியது பாண்டியனுக்கு.
சூழலின் கணத்தை உணர்ந்த பாக்கியம் “நீ இன்னும் காபி போடப் போகலியா?” என்று மகளைப் பார்த்து வினவ – அவள் பாண்டியனைப் பார்த்து முறைத்தாள்.
“இல்ல. காபிலாம் ஒன்னும் வேண்டாம் அத்தை. நாங்க கிளம்புறோம். தேனும்மா நீ இன்னும் கிளம்பலியா?” என்றான் இன்னும் குளித்த தலையை பின்னாமல் விரித்து விட்டிருந்த தேன்மொழியைப் பார்த்து.
அவள் எப்போதும் போல சுடிதார் அணிந்திருந்தாள். இவன் வருவான் என்பதால் தானும் துப்பட்டா அணிந்து தென்றலுக்கும் அணிவித்து விட்டிருந்தாள்.
மற்றபடி வீட்டில் இருக்கும் போது துப்பட்டா அணிய மாட்டாள். வேலை விசயமாக யாரும் வருவதாக இருந்தால் போன் செய்துவிட்டு வருவார்கள். அதனால் பயமில்லாமல் இருப்பாள்.
மொத்தத்தில் பெரும்பாலனான இளம்பெண்களைப் போல அவளுக்கும் துப்பட்டா அணியப் பிடிக்காதுதான்.
ஆனால் அவளது வேலை – அவர்கள் சூழ்நிலை – ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கவனமாக இருப்பாள்.
“நான் வரலை” என்றாள் மொட்டையாக தேன்மொழி.
அவள் போகத்தான் போகிறாள். அதை மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். சொல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் பாண்டியன் இப்படிக் கூப்பிட்டால் போய்விடுவாளாமா?
“என்னடா….என்னடாம்மா இது? நீதானே தென்றலை நல்லாப் பாத்துக்கறே? அத்தைக்கு அங்க ஆஸ்பத்திரியில சில விசயங்கள் புரியாது. அதானே உன்னைக் கூப்பிடறேன்?” என இறங்கி வந்து பேசினான் பாண்டியன்.
‘இது பத்தாதே?’
“இல்ல. நீங்களே கூட்டிட்டுப் போயிட்டு வாங்களேன். கார்லதானே போறீங்க? எனக்கு கொஞ்சம் ஜாப் டைப்பிங் இருக்கு”
“அதுலாம் வந்து பாத்துக்கலாம். இப்ப உனனை யாரு அதையெல்லாம் வாங்கச் சொன்னது? வேற வேலையா இல்ல?” என்றவனை அவள் முறைக்க –
“சரி விடு. முக்கியம்தான். இல்லைங்கலை. இன்னிக்கு கவுன்சிலிங்க் இருக்குனு தெரியம்தானே? நீ மொதல்லயே வேண்டாம்னு சொல்லியருக்க வேண்டியதுதானே?” என்றான் ஆற்றாமையுடன்.
அவனுக்கு இந்த முறையாவது அவளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என நெஞ்சம் பரிதவித்துக் கிடந்தது.
அவள் மட்டும் அதை அறியாமலா இருந்தாள்?
தெரியும்.
இவன் பம்முவது பத்தாதே? என யோசனையில் இருந்தாள் அவள்.
“வேணா அத்தையையும் கூட்டிட்டுப் போகலாம். அத்தை கம்பெனிக்கு கிளம்பிட்டு இருக்காங்க. அதான் அவங்களைக் கூப்பிடலை. “ என்று பரிதவிக்க –
‘அந்த பயம்’ என்று மனதிற்குள் கெத்தாகச் சொல்லிக் கொண்டவள் –
“சரி சரி. நான் கிளம்பிதான் இருக்கேன். ஜாப் டைப்பிங் மேக்சிமம் முடிச்சிட்டேன். வந்து பிரின்ட் எடுத்துக் குடுத்தா போதும்.” என்றவாறு கிளம்பும் பொருட்டு தனது அறைக்குள் சென்ற மறைந்தாள்.
‘இங்கேயே தலை சீவினா என்னவாம்?’ என்ற முணுமுணுத்துக் கொண்டவன் டிவியில் கார்ட்டுன் பார்த்துக் கொண்டிருந்த தென்றலை கனிவுடன் பார்த்தான்.
பாக்கியம் அதைப் பார்த்து மென்னகை புரிந்தார்.
“பொம்மைப் படம் பார்த்தாதான் கதை புரியுது அவளுக்கு. அதான் நாங்களும் அதைப் பாக்க ஆரம்பிச்சிட்டோம்” என்றார்.
அவரை நிமிர்ந்து பார்த்தவன் –
“தென்றலுக்கு அவங்க அம்மா தவிர சொந்தக்காரங்க இல்லைனு இருந்தோம். இப்போ அவங்களுக்கு வந்த லெட்டர்ஸை செக் பண்ணோம். வீட்டுக்கு வந்திருந்த இன்விடேஷன்சன்ஸ் மல்லிகா டீச்சரோட வாட்சப் இதுலாம் செக் பண்ணதுல ஒரு க்ளு கிடைச்சிருக்கு. அதை கன்பார்ம் பண்ணிட்டு சொல்றேன். அது உறுதியா இருந்தா தென்றல் பொறுப்பு உங்களுக்கு இல்லை அத்தை” என்றான்.
“ச்சே! என்ன தம்பி இது? இதை நான் கஷ்டமா நினைக்கலை. எங்களுக்கு சாப்பாட்டுக்கு உலை வைக்கும் போது இவளுக்காக கூட ஒருகை அரிசி போடுறேன். அதில என்ன கஷ்டம்?
நான் கைப்பிள்ளையோட தனியா நின்னப்போ யாரும் எனக்கு ஆதரவு கொடுக்கலை. அந்த வலி இந்த ஜென்மத்துக்கும் என்னை விட்டுப் போகாது.
அதே வலியை – கண்ணாரக் கண்ட ஒருத்திக்கு என்னால முடியும் போது எப்படி கொடுக்க முடியும்?
நீங்க சொன்ன மாதிரி அவளைப் பொறுப்பேத்துக்கிட ஆள் வந்தாலும் அவளும் என் மகதான்” என்றவர் இவன் பதிலை எதிர்பாராமல் –
“தேனும்மா அம்மா கிளம்பறேன்டா. வீட்டைப் பூட்டிட்டு சாவியை எடுத்துட்டுப் போ. என்கிட்ட இன்னொரு சாவி இருக்கு” என கூவியவர் “ லேட்டாச்சு. நான் கிளம்புறேன் தம்பி” என்று வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“பஸ் ஸ்டாண்ட் வரை கொண்டு போய் விடறேன் அத்தை என்ற இவனும் தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பிய நேரம் –
கதவைத் திறந்து கொண்டு தேன்மொழி வந்தாள்.
“இங்க இருக்கிற பஸ் ஸ்டாண்ட் போக எதுக்கு தம்பி கார்? பத்து எட்டு எடுத்து வச்சா பஸ் ஸ்டாண்ட் வந்திட்டுப் போகுது? நான் போய்கிறேன். நீங்க கிளம்புங்க” என்றவர் அதற்கு மேல் நில்லாமல் கிளம்பிவிட்டார்.
வேறு யாராக இருந்தாலும் நிச்சயம் இப்படிச் செய்திருக்க மாட்டார்.
பாண்டியன் – அவர் மகளுக்கு பார்த்திருக்கும் மணமகன் அல்லவா? ‘அவனை நம்பாமல் யாரை நம்ப?’என்பது அவர் முடிவான முடிவு.
“போலாமா?” என்று கேட்ட தேன்மொழியை இதற்கு மேல் உற்றுபார்ப்பது பாக்கியத்தின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகம் என நினைத்தவன் மேற்க்கொண்டு ஒன்றும் பேசாமல் கிளம்பிவிட்டான்.
காரில் முன்பக்கம் ஏறச் சொனனவனை முறைத்து விடடு தென்றலுடன் பின் சீட்டில் ஏறிக் கொண்டாள் தேன்மொழி.
“தென்றலோட மெடிக்கல் பைல் எடுத்துக்கிட்டியா?” என்று ஏதாவது பேச வேண்டுமே என கேட்டு வைத்தான்.
மற்றபடி அவள் கேஸ் ஹிஸ்டரி மருத்துவமனை கணிணியில் இருக்கும் என்பது அவன் அறியாதா?
“என்ன அக்கறை?” என்று கடுகடுத்தாள் தேன்மொழி – தென்றலின் தலைமுடியை சரி செய்தவாறே.
“உனக்கு தேன்மொழின்னு பேர் வச்சதுக்கு தேள்மொழின்னு பேர் வச்சிருக்கலாம். எப்படி பேசறே?” என்றவன் காரைக் கிளப்பி இருந்தான்.
“ஏன் மென்டல்னு வச்சிருக்கலாம். ஒரு பக்கம் தென்றல் இன்னொரு பக்கம் மென்டல்னு ஜாலியா இருந்திருப்பீங்க” பற்களைக் கடித்துக் கொண்டு அவள் பேச –
“ நிஜமாவே நீ மென்டல்தான். சும்மா உளறாதடி. அவ வேறோரு பாண்டியை லவ் பண்றா” என அவசர அவசரமாகச் சொன்னான்.
எப்படி இவனை தென்றல் விரும்புவதாக நினைத்தாளோ அதேப் போல தென்றல் விரும்புவது வேறொரு பாண்டி என்பதிலும் பாதிக்குப் பாதி சந்தேகம் இருக்கத்தான் செய்தது தேன்மொழிக்கு.
இருப்பினும் அவனை ஆரம்பத்திலேயே தட்டி வை;க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்(!) அவன் சொல்ல வந்த எதையும் கேட்காமல் அவனை குடைந்து கொண்டே இருந்தாள். கூடவே இது நிஜமென்றால் அவளுக்கும் அவனிடம் காட்டும் அவளின் சுடுமொழி ஒரு கேடயமாக இருக்கும் என நம்பினாள்.
என்ன இருந்தாலும் நல்ல கணவன் கிடைக்க மாட்டான் என்ற நம்பிய பேதைதானே அவள்?
இதைத் தப்பு என்றும் சொல்லலாம். முன்னெச்சரிக்கை என்றும் கூட சொல்லலாம்.
அப்போதுதானே நாளைப் பின்னே இன்னொருத்தியைப் பாhக்கும் தைரியம் வராது என்ற முன்கூட்டியச் சிந்தனை என்றும் சொல்லலாம்.
தேன்மொழி வாய்க்குள் சிரித்துக் கொண்டு –
“அது யாரு? அந்த வேறொரு பாண்டி?”
“பூதப் பாண்டி”
என்றான் அழகிய வீர பாண்டியன்.
12
தென்றலுக்கு சுடிதாரின் மீது துப்பட்டா அணிவித்துக் கொண்டு இருந்தாள் தேன்;மொழி. காலையில்தான் குளிப்பாடடி உடை மாற்றி விட்டிருந்தார் பாக்கியம் அவளுக்கு. துப்பட்டா போடுவதை மட்டும் பாக்கி வைத்திருந்தார்.
அப்படியே பாக்கியமும் Nவுலைக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தார்.
இப்போது தென்றல் இவர்கள் வீட்டில்தான் இருக்கிறாள்.
அவளை அடைத்து வைத்திருந்த காலங்களில் அவளை மல்லிகா டீச்சர் வாரம் ஒருமுறை குளிப்பாட்டி உடை மாற்றிவிடுவார். முடியையும் பராரிக்க முடியாமலர் வெட்டி வைத்திருந்தார்.
ஆரம்பத்தில் தென்றலுக்க நன்றாக இருந்த மனநிலையும் தைரியமும் மல்லிகாவின் அடுத்தடுத்த திடடுகள் கொடுமைகளால் முற்றிலும் நலிந்து Nபுhய் இருநதது.
இதை முதற்கட்ட கவுன்சிலிங்கில் அறிந்து கொண்டார்கள இவர்கள்.
இன்னும் சில கவுன்சிலிங்க் மறறும் மருந்துகுள் அவளை திருப்பித் தரும் என ஆவலுடன் எதிர்பார்த்தாலும் தேன்மொழிக்குள் ஓதோ ஒரு கலவரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தென்றல் இப்Nபுhதும் பாண்டி பாண்டி எனட்ற சொல்லத்தான் செய்கிறாள்
அதற்க பாண்டியன் அவளைக் காப்பாற்றியதைத்தான் சொல்கிறாள் என்ற தாயிடம் பூசி nழுகி வைத்திருந்தாள் தேன்மொழி.
இதோ இவளை அடுத்த கட்ட கவுன்சிலிங் க் அழைத்துச் செல்ல பாண்டியன் வந்து விடுவான்.
காலனியின் சங்க உறுப்பினர்களின் அனுமதி பெற்று மருத்துவமனையில் இருந்து தென்றலை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர் பாக்கியமும் தேன்மொழியும்.
தேன்மொழிக்கு ஏன் தென்றல் மீது அன்பு ஏற்பட்டது எனபது அவளுக்கேத் தெரியவில்லை. சொல்லப் போனால் அவள் தென்றலை வெறுக்க வேண்டும். ஆனால் பாண்டியனைப் பார்த்தால் புயலாகி சுழன்று அடிப்பவள் தென்றலைப் பார்த்தால் தென்றலாகி விடுகிறாள்.
இன்னும் குழந்தைத்தனம் மாறாத அந்த முகமும் கண்ணும் அவளை மயக்கித்தான் விடுகிறன்றன.
பாண்டியனை தென்றலுக்கு விட்டுக் கொடுக்க தேன்மொழியால் முடியாது. ஆனால் இருதார மணத்திற்கு சம்மதிக்கலாமா என்றுதான் யோசித்துக் கொண்டு வருகிறாள்.
எப்படியோ தென்றலுடன் அவளுக்குப் பிணக்கு இல்லை. அதுவே பாண்டியனுக்குப் போதுமானதாக இருந்தது.
இப்போது அவன் காலனியில் முக்கியப்புள்ளி ஆகிவிட்டான். முன்பு பத்தோடு பதினொன்றாக இருந்தான். இந்த நிகழ்விற்குப் பிறகு இவனைக் கொண்டாடினார்கள் மக்கள்.
குமார் கூட வேண்டுதல் முடித்துத் திரும்பி வந்தவன் வாயைப் பிளந்திருந்தான்.
“ மாமா செம மாமா “ என்று குதூகலித்தான்.
“ஆமா போடா. இதுல மூக்கை நுழைச்சதுல தேனு என்னைக் கரிச்சுக் கொட்றா”
“ச்சே ச்சே! என்ன மாமா நீங்க? தங்கச்சிமா நல்ல பொண்ணாச்சே?”
“ஆமாடா. அவ நல்லப் பொண்ணுதான். அதான் என்னை விட்டுட்டு தென்றலை தாங்குறா” என்று சலித்துக் கொண்டாலும் அதில் பெருமைதான் இருந்தது.
எந்தச் சூழ்நிலையிலும் அவன் தேன்மொழி அன்பானவள் என்பது அவனுக்குப் பெருமைதானே?
“அட போங்க மாமா. தங்கச்சி தென்றலை எதுக்காக பாத்துக்குதுன்னு கூடத் தெரியலியா? நாளைக்கு சக்காளத்தி சண்டை வரும் Nபுhது சொல்லிக் காட்ட முடியாதில்லயா? அதுக்குத்தான்” என்றவனை அடிக்கப் போன கையை இறக்கிக் கொண்டான் பாண்டியன்.
“இதப் பாரு. அவதான் ஏதோ உளறிகிட்டு இருக்கான்னா நீ அதுக்கு ஒத்து ஊதுறியா? தொலைச்சிருவேன்.
ஊர் உலகத்துல எனக்கு மட்டும்தான் இந்தப் பேரை வச்சாங்களா என்ன?
தென்றல் சொல்றது சத்தியமா என்னை இல்லை. இது எனக்கு நல்லாப் புரியுது. ஆனா புரிய வேண்டியவளுக்கு புரியலியே?
அவளுக்கும் புரிஞ்சிருக்கும் – தென்றல் நல்ல நிலைiயில இருந்திருந்தா. “ என்று சொல்லிக் கொண்டே போனவன் குமாரின் அதிர்ச்சிப் பார்வையில் நெகிழ்ந்து போனான்.
“ சாரிப்பா. நீயும இப்படி பேசினா நான் என்னதான் பண்றது சொல்லு?. சரி விடு. தென்றலை சைக்காலஜிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போறேன். கிளம்புறேன்” என்று விடை பெற்றவனை பார்த்துக் கொண்டே நின்றான் குமார்.
அதன் பிறகு குமார் பாண்டியனை அதிகம் சந்திக்கவில்லை. இவனுக்கும் அது பற்றி யோசிக்க நேரம் இருந்ததில்லை.
இப்போதும தென்றலை இரண்டாம் முறை கவுன்சிலிங்கிற்காக கூட்டிச் செல்ல வேண்டி தென்றல் இருக்கும் தேன்மொழியின் வீட்டிற்கு வந்து விட்டான் பாண்டியன்.
“ வாங்க தம்பி” என்ற வரவேற்று அவனுக்குக் குடிக்க தண்ணீர் எடுத்துக்; கொடுத்த பாக்கியம் “ வேலம்மா தம்பிக்கு காபி போடுடாம்மா” என்று குரல் கொடுக்க அந்தப் பெயரில் பாண்டியன் சின்னதாய் திடுக்கிட
தென்றல் பயந்து போனாள். அவள் முகம் வெளிறி விட்டது உதடுகள் நடுங்க பக்கத்தில் இருந்;த நாற்காலியை இறுகப் பற்றிக் கொண்டாள் அவள்.
சூழ்நிலை ஏதோ சரியில்லை என உணர்ந்த தேன்மொழி தென்றலை அணைத்துக் கொண்டாள்.
‘இவரு கெட்ட கேட்டுக்கு காபி ஒன்னுதான் கொறை?’ என அவள் இதுவரை காபி போட சமையல் அறைக்குச் சென்றிருக்கவில்லை.
தென்றல் இங்கே வந்திருந்த இத்தனை நாட்களில் ஆதன்மொழியும் பாக்கியமும் அறிந்து கொண்டது ஒன்றுதான்.
அது – அவள் ‘வேலம்மா என்ற பெயரைக் கேட்டாலே பயப்படுகிறாள் என்பது.
தேன்மொழியையும் அவள் தாய் அந்தப் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார். அதனால் முதலில் அப்படியே அழைத்தவர் தென்றல் பயபபடுவதைப் பார்த்து அப்படிக் கூப்பிடுவதை விட்டிருந்தார்.
இன்று பாண்டியனைப் பார்த்த படபடப்பில் அவர் வாய் பழக்கதோஷமாக ‘வேலம்மா’ என அழைத்து விட்டது மகளை.
அந்தப் பேரே பயப்படுத்துற மாதிரி இருக்குன்னா அதுக்கு மல்லிகா டீச்சர் எத்தனை பாடாப் படுத்தி இருக்;கனும் இவளை எனறு நினைத்த போது நெஞ்சம் கலங்கியது பாண்டியனுக்கு.
சூழலின் கணத்தை உணர்ந்த பாக்கியம் “நீ இன்னும் காபி போடப் போகலியா?” என்று மகளைப் பார்த்து வினவ – அவள் பாண்டியனைப் பார்த்து முறைத்தாள்.
“இல்ல. காபிலாம் ஒன்னும் வேண்டாம் அத்தை. நாங்க கிளம்புறோம். தேனும்மா நீ இன்னும் கிளம்பலியா?” என்றான் இன்னும் குளித்த தலையை பின்னாமல் விரித்து விட்டிருந்த தேன்மொழியைப் பார்த்து.
அவள் எப்போதும் போல சுடிதார் அணிந்திருந்தாள். இவன் வருவான் என்பதால் தானும் துப்பட்டா அணிந்து தென்றலுக்கும் அணிவித்து விட்டிருந்தாள்.
மற்றபடி வீட்டில் இருக்கும் போது துப்பட்டா அணிய மாட்டாள். வேலை விசயமாக யாரும் வருவதாக இருந்தால் போன் செய்துவிட்டு வருவார்கள். அதனால் பயமில்லாமல் இருப்பாள்.
மொத்தத்தில் பெரும்பாலனான இளம்பெண்களைப் போல அவளுக்கும் துப்பட்டா அணியப் பிடிக்காதுதான்.
ஆனால் அவளது வேலை – அவர்கள் சூழ்நிலை – ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கவனமாக இருப்;பாள்.
“நான் வரலை” என்றாள் மொட்டையாக தேன்மொழி.
அவள் போகத்தான் போகிறாள். அதை மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். சொல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் பாண்டியன் இப்படிக் கூப்பிட்டமால் போய்விடுவாளாமா?
“என்னடா….என்னடாம்மா இது? நீதானே தென்றலை நல்லாப் பாத்துக்கறே. அத்தைக்கு அங்க ஆஸ்பத்திரியில சில விசயங்கள் புரியாது. அதானே உன்னைக் கூப்பிடறேன்?” என இறங்கி வந்து பேசினான் பாண்டியன்.
‘இது பத்தாதே?’
“இல்ல. நீங்களே கூட்டிட்டுப் போயிட்டு வாங்;களேன். கார்லதானே போறீங்க? எனக்கு கொஞ்சம் ஜாப் டைப்பிங் இருக்கு”
“அதுலாம் வந்து பாத்துக்கலாம். இப்ப உனனை யாரு அதையெல்லாம் வாங்கச் சொன்னது? வேற வேலையா இல்ல?” என்றவனை அவள் முறைக்க –
“சரி விடு. முக்கியம்தான். இல்லைங்கலை. இன்னிக்கு கவுன்சிலிங்க் இருக்குனு தெரியம்தானே? நீ மொதல்லயே வேண்டாம்னு சொல்லியருக்க வேண்டியதுதானே?” என்றான் ஆற்றாமையுடன்.
அவனுக்கு இந்த முறையாவது அவளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என நெஞ்சம் பரிதவித்துக் கிடந்தது.
அவள் மட்டும் அதை அறியாமலா இருந்தாள்?
தெரியும்.
இவன் பம்முவது பத்தாதே? என யோசனையில் இருந்;தாள் அவள்.
“வேணா அத்தையையும் கூட்டிட்டுப் போகலாம். அத்தை கம்பெனிக்கு கிளம்பிட்டு இருக்காங்க. அதான் அவங்களைக் கூப்பிடலை. “ என்று பரிதவிக்க –
‘அந்த பயம்’ என்று மனதிற்குள் கெத்தாகச் சொல்லிக் கொண்டவள் –
“சரி சரி. நான் கிளம்பிதான் இருக்கேன். ஜாப் டைப்பிங்க மேக்சிமம் முடிச்சிட்டேன். வந்து பிரின்ட் எடுத்துக் குடுத்தா போதும்.” என்றவாறு கிளம்பும் பொருட்டு தனது அறைக்குள் சென்ற மறைந்தாள்.
‘இங்கேயே தலை சீவினா என்னவாம்?’ என்ற முணுமுணுத்துக் கொண்டவன் டிவியில் கார்ட்டுன் பார்த்துக் கொண்டிருந்த தென்றலை கனிவுடன் பார்த்தான.;
பாக்கியம் அதைப் பார்த்து மென்னகை புரிந்தார்.
“பொம்மைப் படம் பார்த்தாதான் கதை புரியுது அவளுக்கு. அதான் நாங்களும் அதைப் பாக்க ஆரம்பிசட்சிட்டோம்” என்றார்.
அவரை நிமிர்ந்து பார்த்தவன் –
“தென்றலுக்;கு அவங்க அம்மா தவிர சொந்தக்காரங்க இல்லைனு இருந்தோம். இப்போ அவங்களுக்கு வந்த லெட்டர்ஸை செக் பண்ணோம். வீட்டுக்கு வந்திருந்த இன்விடேஷன்சன்ஸ் மல்லிகா டீச்சரோட வாட்சப் இதுலாம் செக் பண்ணதுல ஒரு க்ளு கிடைச்சிருக்;கு. அதை கன்பார்ம் பண்ணிட்டு சொல்றேன். அது உறுதியா இருந்தா தென்றல் பொறுப்பு உங்களுக்கு இல்லை அத்தை” என்றான்.
“ச்சே! என்ன தம்பி இது? இதை நான் கஷ்டா நினைக்கலை. எங்களுக்கு சாப்பாட்டுக்கு உலை வைக்கும் போது இவளுக்காக கூட ஒருகை அரிசி போடுறேன். அதில என்ன கஷ்டம்?
நான் கைப்பிள்ளையோட தனியா நின்னப்போ யாரும் எனக்கு ஆதரவு கொடுக்கலை. அந்த வலி இந்த ஜென்மத்துக்கும் என்னை விட்டுப் போகாது.
அதே வலியை – கண்ணாரக் கண்ட ஒருத்திக்கு என்னால முடியும் போது எப்படி கொடுக்க முடியும்?
நீங்க சொன்ன மாதிரி அவளைப் பொறுப்பேத்துக்கிட ஆள் வந்தாலும் அவளும் என் மகதான்” என்றவர் இவன் பதிலை எதிர்பாராமல் –
“தேனும்மா அம்மா கிளம்பறேன்;டா. வீட்டைப் பூட்டிட்டு சாவியை எடுத்துட்டுப் போ. என்கிட்ட இன்னொரு சாவி இருக்கு” என கூவியவர் “ லேட்டாச்ச. நான் கிளம்புறேன்தம்பி” என்று வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
“பஸ் ஸ்டாண்ட் வரை கொண்டு போய் விடறேன் அத்தை என்ற இவனும் தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பிய நேரம் –
கதவைத் திறந்து கொண்டு தேன்மொழி வந்தாள்.
“இங்க இருக்கிற பஸ் ஸ்டாண்ட் போக எதுக்கு தம்பி கார்? பத்து எட்டு எடுத்து வச்சா பஸ் ஸ்டாண்ட் வந்திட்டுப் போகுது? நான் போய்கிறேன். நீங்க கிளம்புங்க” என்றவர் அதற்கு மேல் நில்லாமல் கிளம்பிவிட்டார்.
வேறு யாராக இருந்தாலும் நிச்சயம் இப்படிச் செய்திருக்க மாட்டார்.
பாண்டியன் – அவர் மகளுக்கு பார்த்திருக்கும் மணமகன் அல்லவா? ‘அவனை நம்பாமல் யாரை நம்ப?’என்பது அவர் முடிவான முடிவு.
“போலாமா?” என்று கேட்ட தேன்மொழியை இதற்கு மேல் உற்றுப பார்ப்பது பாக்கியத்தின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகம் என நினைத்தவன் மேற்க்கொண்டு ஒன்றும் பேசாமல் கிளம்பிவிட்டான்.