MK 19

eiS8VZ63923-eae0f172

MK 19

மயங்கினேன்.!கிறங்கினேன்.!19

அத்தியாயம் 19

வெற்றியின் பார்வை அவளை துளைத்தெடுப்பது போல் இருந்தது. பதில் சொல்ல முடியாத நிலையில் இனியா சிக்கிக்கொள்ள என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கையை பிசைந்தவாறே அவனை பார்க்க மறுத்து காப்பி கப்பை பார்த்தபடி இருந்தாள்‌.

” சொல்லு சில் , உனக்கு எப்படி தெரியும் எனக்கு மோமோஸ் பிடிக்கும்னு?”

” அது… அது…” என இழுத்தவளை கண்டு புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டது வெற்றிக்கு .

‘ இப்டி வாய கொடுத்து மாட்டிக்கிட்டியே அம்மு. இவருக்கிட்ட இருந்து என்னைய காப்பாத்து சாமி ‘ மனதார கடவுளிடம் வேண்டுதல் ஒன்றை வைத்தாள்.

” சொல்லு இனியா ?”

‘ டக்குன்னு இப்படி கேட்டா எப்படி சொல்றது , கொஞ்சம் யோசிக்க தான் விடுறது ‘ உள்ளுக்குள் புலம்பி தள்ளினாள்.

” என்ன அமைதியா இருக்க , ஏதாவது பேசு இனியா . இந்த வெற்றி பொண்டாட்டி அமைதியா பதில் சொல்லாம இருக்கலாமா என்ன” புருவம் உயர்த்தி தலை கோதி கேட்டான்.

” அது கொஞ்ச நேரம் அமைதியா இருந்தா , நீங்க என்ன பண்றீங்கன்னு பார்க்க தான் ” புன்னகைத்தாள்.

” ஆஹான்.அப்போ பதில் ?”

“சொல்றேன்.. சொல்றேன்..”

” சொல்லு சில்”

” இன்னைக்கு வீட்டை சுத்தம் பண்ணும்போது தான் தெரிஞ்சிக்கிட்டேன் போதுமா. ப்பா உங்ககிட்ட பேச தான் முடியாதுன்னா , அமைதியா கூட இருக்க முடியல “என காப்பியை சுவைத்து அருந்த துவங்கினாள்.

‘ இவளை எல்லாம் எதுக்கு தான் பெத்தாங்களோ . நாட்டுக்கு இவளால என்ன பண்ண முடியுமோ , ஆனா என்னை கூடிய சீக்கிரத்துல பைத்தியமாக்கிடுவா ‘ உள்ளுக்குள் வெம்பினான்.

சாப்பிட்ட பின் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

********

ஷோ முடித்து வெளியே வந்த வெற்றியை பிடித்து கொண்டான் கௌதம்.

” மச்சான் , இனி நீ என்னைய உன் வீட்டுக்கு கூப்பிடாத டா “

” ஏன் டா ?” கேள்வியாய் நோக்கினான் வெற்றி.

” சின்ன பிள்ளை டா நானு. உங்க வீட்டுக்கு வந்தா , நான் கெட்டு போயிடுவேன் டா. அதுவுமில்லாது சிங்கிள் பையன் சாபம் உங்களை சும்மா விடாது பார்த்துக்கோ ” கிண்டலாக சொல்ல ,

” வாய மூடு டா எரும. நீ நினைக்கிற மாதிரி அங்க எதுவும் நடக்கல “

” சின்ன குழந்தை கூட நம்பாது டா. அதுவும் நீங்க ரொமான்ஸ் பண்ணியதை தான் நானே பார்த்தேனே “

” சொல்றேன்ல நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லைன்னு. அப்படியே இருந்தாலும், அதான் கமிடட் பீப்பிள்ஸை ரொமான்ஸ் பண்ண விட கூடாதுனே உங்களை மாதிரி சிங்கிள்ஸ் சுத்துறீங்களே ” கடுப்பாய் கூறினான் வெற்றி.

” அடபாவி !” வாயை பிளந்து விட்டான் கௌதம்.

” போ இனியாவது குடும்பஸ்தர்களை தொந்தரவு பண்ணாம இருக்க பாரு ” அறிவுரை வழங்கிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டான்.

‘ இவன் என்ன எனக்கு பல்ப் கொடுத்திட்டு போறான். ச்சை இந்த வில்லனுக்கு கூட நண்பனா இருந்துட்டு போலாம் போல . ஆனா ஹீரோக்கு மட்டும் நண்பனா இருக்க கூடாது பா. இப்டி நம்மளை மொத்தமா சேதம் பண்ணிடுறானுங்க’ உள்ளுக்குள் புலம்பிய படி அவனது வீட்டிற்கு சென்றான் கௌதம்.

வீட்டிற்கு வந்த வெற்றிக்கு அத்தனை பசி. இதுநாள்வரை உணராத ஒரு பசி , இன்றைய பொழுதில் அவனை தாக்கியது.

அத்தனை பசியோடு வந்தவனுக்கு , வெறும் பாத்திரங்களே கண்ணுக்கு கிட்டியது.

இத்தனை நாட்கள் வீடு சாப்பாடு சாப்பிட்டதாலோ என்னவோ , வெளியே சாப்பிட அவனுக்கு பிடிக்கவில்லை.

அதிலும் இனியாவின் சமையல் தன் அம்மாவின் சமையல் போலவே இருப்பதால் அவளது சமையலை சாப்பிட ஆசைக்கொண்டான்.

ஆசை பட தெரிந்த அவனுக்கு , அவளிடம் சென்று கேட்க பிடிக்கவில்லை.

அதனாலே அவளை விட்டுவிட்டு , அவள் ஏதோ கூற வருவதை கூட கண்டுக்கொள்ளாமல் வேலைக்கு சென்று விட்டான்.

எப்படி இருந்தாலும் , இரவிற்கு அவள் சமைத்து தானே ஆகனும். தனக்கு இல்லையென்றாலும் அவளுக்காகவாது அவள் சமைப்பாலே. அப்போது தனக்கும் சேர்த்து சமைப்பால் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது.

அதனாலே அத்தனை அலட்சியமாய் இருந்தான்.

இனியாவை தேடியவன் , அவள் இருப்பது போல் தெரியாமல் போகவே ‘ எங்கேயாவது சென்றுவிட்டாளோ ‘ என்ற யோசனை உதித்தது அவனுக்கு.

” இனியா..” அழைத்தபடி அறையெங்கும் தேட அவளோ தென்படவே இல்லை.

‘ இந்த நேரத்துல எங்க போய் தொலைஞ்சா , இவளை தேடுறதே எனக்கு ஒரு வேலையா போச்சி ‘ சலித்தபடி அவளை தேடினான்.

அவளோ சாவகாசமாக மாடியில் நின்று காற்று வாங்கிட்டு அப்போது தான் வீட்டிற்கு வந்தாள்.

‘என்ன கதவு திறந்திருக்கு . தடியன் சார் வீட்டுக்கு வந்துட்டாங்க போலையே ‘ எண்ணியவள் கதவை சாற்றி விட்டு உள்ளே வந்தாள்.

” தடியன் சார்! எங்க இருக்கீங்க?”

வீடு முழுவதும் தேடிப்பார்த்து வந்தவனுக்கு ஹாலில் ஹாயாக அமர்ந்திருந்தவளை கண்டு ஆசுவாச மூச்சொன்றை வெளியேவிட்டான்.

” எங்க போயிருந்த நீ ?” கேட்டபடி அவள் எதிர்க்க இருந்த இருக்கையில் அமர்ந்தான் வெற்றி.

” நான் எங்க போனேன் இங்கேயே தானே இருக்கேன் “

” உன்ன நான் வீடு முழுக்க தேடினேன். ஒரு நிமிஷத்துல நீ திரும்பவும் எங்கேயோ போயிட்டியோன்னு நினைச்சி பயத்துட்டேன் சில் “

” நான் தான் காலைலயே சொன்னேனே , எங்கேயும் போக போறது இல்லைன்னு . அப்புறம் என்ன ” என்றவள் அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்து பாலை சூடு பண்ண துவங்கினாள்.

” இப்போ எதுக்கு பால்லை சூடு பண்ணுற ?”

” உங்களுக்காக தான். நீங்க நைட் டைம்ல தூங்குறதுக்கு முன்னாடி பால் குடிப்பீங்களே , அதுக்காக தான் ” என்றவள் வேலையை தொடர்ந்து செய்தாள்.

” அப்போ டின்னர் செய்யலையா ?”

” இல்லையே.. நான் எதுக்கு செய்யனும் சொல்லுங்க ? ” அவனை பார்த்து கேட்க ,

” எதுக்கு செய்யனுமா , இது என்ன கேள்வி நீ தானே இதெல்லாம் செய்யனும் . நீ செய்யாம வேற யார் செய்வா ?” எகத்தாளமாக பதில் பேச

” நான் எதுக்கு செய்யனும் , அதை சொல்லுங்க முதல ” தீவிரமாய் அவள் கேட்டு வைக்க , அங்கே வாதம் சூடுபிடிக்க துவங்கியது.

” இங்க பாரு இனியா , உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு காரணமே , நான் தனியா இருக்கிறதும் , சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறதும் தான் . அப்போ நீ தானே எனக்காக இதெல்லாம் செய்யனும் ” கோபமாய் வார்த்தை தாக்குதல் நடத்தினான்.

” அதுக்கு நீங்க ஒரு வேலைக்காரியை வேலைக்கு வச்சியிருக்கலாமே . எதுக்கு நானு ?”

” இது ஒரு கல்யாணமான பொண்ணோட சராசரி செயல் தானே. எல்லாரும் இதே தான் செய்றாங்க. அதையே தானே உன்னையும் செய்ய சொல்றேன். கணவனை பார்த்துக்க வேண்டியது ஒரு மனைவியா உன்னோட கடமை.வீட்டு வேலை பார்க்கிறது உன்னோட கடமைன்னா , வெளிய போய் வேலை செய்து பணம் சம்பாத்திக்கிறது என்னோட வேலை. இதுக்கு எதுக்கு இத்தனை வாக்குவாதம் பண்ற இனியா ” இளக்காரமாக வெற்றி சொல்லி முடிக்கவும் , கைகளை தட்டினாள் இனியா.

” வாவ் ! வாட்ட ஸ்பீச் ” என்று கைத்தட்டி அவளுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினாள்.

” ஒரு மனைவிக்கான உங்களது வரையறை அருமையா சொன்னீங்க. இன்னும் எத்தனை காலத்துக்கு பெண்களை சமையலறைக்குள்ளே முடக்கலாம்னு பார்க்குறீங்க . குட்ட குட்ட குனிஞ்சிட்டு போறதுனால , எவ்வளவு வேணாலும் குட்டலாம்னு அர்த்தம் கிடையாது. அவுங்க எதிர்த்து பேசாத ஒரே ஒரு காரணம் அன்பு மட்டுமே. நீங்க காட்டுற அந்த அன்புக்காக தான் அர்பணிஞ்சு போறதே. அதை உங்களுக்கு சாதகமா பயன் படுத்திக்கிட்டு பொண்ணுங்க இந்த வேலை தான் செய்யனும்னு சொல்லாதீங்க.

அண்ட் ஒன் மோர் திங்க் , இப்போ இருக்கிற காலக்கட்டத்துல மனைவியை வேலைக்கு அனுப்பிட்டு வீட்டிலிருந்து வீட்டை பார்த்துக்கிற கணவன்மார்கள் நிறைய பேர் இருக்காங்க. சோ இந்த மாதிரி ஃபுல் சிட்டா பேசிட்டு சுத்தாதீங்க ” நீண்டதொரு பேச்சை பேசிய இனியா சோஃபாவில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

இனியாவின் பேச்சினை கேட்டதும் தான் வெற்றிக்கு தான் என்ன பேசினோம் என்றே புரிந்தது.

உடனே சமையலறை நோக்கி நடந்தவன் அவளுக்காக தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்.

” எனக்கு வேணாம் தடியன் சார். இப்போ உங்க கிட்ட வாங்கி குடிக்கிறதுல எனக்கு விருப்பமில்லை. இப்படியொரு எண்ணம் நீங்க வச்சிருப்பீங்கன்னு நான் சுத்தமா நினைக்கல . உங்களை நான் ஒரு உயர்வான இடத்துல வச்சிருந்தேன். நீங்களும் நான் ஒரு சராசரி ஆண்பிள்ளைன்னு காட்டிடீங்கள ” தன் வருத்தத்தை வெற்றியிடம் வெளிப்படையாக சொன்னாள்.

” ஐயம் சாரி டா மா. நான் வேணும்னு ஏதும் பேசல , ஏதோ தெரியாம பேசிட்டேன் . முதல தண்ணியை குடி டா ” என்று அவள் புறம் குவளையை நீட்ட,

” எனக்கு வேணாம் தடியன் சார். உங்க மேல நான் வச்சிருந்த பிம்பத்தை நீங்க உடச்சிட்டீங்க “

” ஐயம் ரியலி சாரி டா. நீ எதுக்கு செய்யனும்னு கேக்க போய் என்னோட நிதானத்தை நான் இழக்க வேண்டியதா போச்சி.நான் நீ சொல்ற மாதிரியான பையன் கிடையாது டா .இதை வார்த்தையால சொல்றதை விட வாழ்ந்து காட்டி உனக்கு புரியவைக்குறேன் . ப்ளிஸ் டா கொஞ்சமா தண்ணி குடிச்சு சமாதானம் ஆகிடு மா ” வெற்றி கெஞ்ச ,

புன்னகைத்த இனியா ,” இப்போ கிடைச்ச மன்னிப்பு மாதிரி எப்போதும் கிடைக்காது சார் , அதை ஞாபகத்துல வச்சிக்கோங்க” அவனிடமிருந்த குவளையை வாங்கி தண்ணீர் குடித்தாள்.

” சரி, உங்க கிட்ட பேசுனதுல எனக்கு பசி வந்துடுச்சி. நான் சாப்பிடுறேன் ” என்று பிஸ்கெட் பாக்கெட்டை பிரித்து சாப்பிட துவங்கினாள்.

அவள் பிஸ்கெட் சாப்பிட துவங்கவும் , வெற்றிக்கு பசியில் வயிற்றை கிள்ளியது.

” இப்போ உன்னால சமைக்க முடியுமா முடியாதா? எனக்கு ரொம்ப பசிக்குது” நிதானமாக கேட்டான்.

“டைம் இல்ல..”

” ப்ளிஸ் மா, பசிக்குது “

” முடியாது..” என்றவாறே வாங்கி வந்த பிஸ்கெட்டை எல்லாம் உண்ண துவங்கினாள்.

” ஏய்! என்ன திமிரா உனக்கு. நானும் அப்போ இருந்து சமைன்னு சொல்லிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு உட்கார்ந்திருக்க. எனக்கு சமைக்க தெரிஞ்சா நா சமைச்சிக்க மாட்டேனா ” முறைத்தபடி வெற்றி கேட்க ,

” அப்படி தான் இருக்குமோ ” யோசனையாய் இனியா பதில் சொல்ல ,

” திமிரு பிடிச்சவளே , இப்போ சமைக்க போறியா இல்லையா “

” அதான் முடியாதுன்னு சொல்லிட்டேன்ல . வெற்றியோட பொண்டாட்டின்னா சும்மாவா என்ன , கொஞ்சமாது திமிரு இருக்க வேணாமா ” சொல்லியவள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

அவளை பார்த்து ஏகத்துக்கும் முறைத்தவன் , ” நானே எனக்கு தெரிஞ்ச மாதிரி சமைச்சிக்குறேன். சமையல் கட்டு பக்கம் வந்த, நீ அவ்வளவு தான் பார்த்துக்கோ ” மிரட்டல் விட்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

சமையலறைக்குள் சென்றவனுக்கு ஆச்சரியம் தான்.

‘ இது நம்ம வீட்டு சமையலறையா என்ன ‘ வியந்து பார்த்தான் வெற்றிமாறன்.

இத்தனை வருடத்தில் வெற்றி இங்கே பெரிதாக சமைத்ததே இல்லை. தோசை ஊற்றுவான் , பால் காய்ச்சுவான் . இதனை தவிர்த்து வெற்றி அங்கே எதுவும் செய்ததில்லை.

இப்போது தோசைமாவும் இல்லாது போக , என்ன சமைப்பது என்றே அவனுக்கு தெரியவில்லை.

‘எதாவது சமைத்தாகவே வேண்டுமே ‘ என்ற காரணத்தினால் உப்புமா செய்யலாம் என்று முடிவெடுத்தான்.

அதுவுமே வலைஒளி மூலமாக தான் செய்து முடித்தான். அது சற்று கருகி போய்விட்டது.

டைனிங் டேபிளில் கொண்டு வந்து சாப்பிட வாய் வைக்கும்போதே , அந்த தட்டை கையில் எடுத்து கொண்ட இனியா. அவள் சமைத்த சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.

இனியா சாப்பாட்டை எடுத்து வைக்கவும் அவளை நிமிர்ந்து ஆச்சரியமாக பார்த்த வெற்றியிடம் ,” இப்போ தெரிஞ்சிருக்குமே சமையல் வேலை ஒன்னும் அத்தனை சுலபமானதில்லைன்னு “

“புரியுது. இனி இப்டி ஒரு காலமும் பேசமாட்டேன்”என்று உணர்ந்து கூறினான் வெற்றி.

***********

பெங்களூரு

அறைக்குள் அடைந்து கிடந்த இசைக்கு , வெற்றியின் ஞாபகமே.

அவனின் நிலையென்ன என்று புரியாமல் தவித்து கொண்டு இருந்தாள் இசை.

அவளால் அறைக்குள்ளே முடங்கி கிடக்க முடியவில்லை. வெற்றியின் ஞாபகம் அவளை ஒவ்வொரு நாளும் பித்து பிடிக்க வைக்க செய்தது.

அவள் மனம் மூளை இரண்டுமே வெற்றி வெற்றி என்று சொல்லிய மையமாக இருந்தது.

வெற்றியின் இதய கூண்டுக்குள் அடங்கிட ஆசைக் கொண்டு , தவியாய் தவித்து கொண்டிருக்கிறது அவள் உளம்.

இதற்கு மேலும் இங்கே இருக்க முடியாது என்றதும் தந்தையை நோக்கி நடையிட்டாள் இசை.

” அப்பா…”

“நனகே ஹேலு ( சொல்லு மா )”

” நன்னு சென்னைகே ஹோகுதித்தேனே பா ( நான் சென்னை போகனும் பா )”

” என்ன அவசரம் மா.‌இன்னும் டோட்டம்மா டோட்டப்பா இங்க தான இருக்காங்க. அவுங்க கூடவே நீ போகலாம் ” சுவாமிநாதன் கூறிட இசையின் முகம் சுருங்கியது.

” ப்ளிஸ் ப்பா , ஐ ஹேவ் டு கோ ” இசை தந்தையிடம் கெஞ்ச,

” அதான் சிக்கப்பா எங்களோட போகலாம்னு சொல்றாருல . அப்புறம் என்ன ? போ போய் உன்னோட அறையில இரு ” மிரட்டலாக சொன்னப்படி வந்தான் வாசுதேவ் ப்ரசாத்.

அண்ணனின் வருகையால் தந்தையிடம் அதற்கு மேல் பேச முடியாமல் போகவே அமைதியாக உள்ளே சென்றாள் இசையாழினி.

இதனை எல்லாம் சாம்பவி சமையலறையிலிருந்து பார்வையிட்டார்.

வாசுதேவ் ப்ரசாதிற்கு இசையின் மீது நம்பிக்கை இல்லாமல் போகவே அவளை காண அறைக்கு சென்றான் .

” யாழினி ” அதிகாரமாய் அழைக்க,

” சொல்லுங்க அண்ணா”

” உனக்கே நல்லா தெரிஞ்சிருக்கும், இப்போ எதுக்கு இந்த அவசரமான நிச்சயதார்த்தம்னு. தெரிஞ்சும் நீ சிக்கப்பா கிட்ட சென்னை போகனும்னு அடம்பிடிச்சா , அப்புறம் நான் என்ன செய்வேன்னே தெரியாது. நான் சூர்யா மாதிரி கிடையாதுன்னு உனக்கே நல்லா தெரியும். நீ ஏதாவது அந்த சாம்பவி மாதிரி செய்ய நினைச்ச , நீ லவ் பண்றியே அந்த பையன் வெற்றியை முடிச்சிடுவேன் ஜாக்கிரதை ” தங்கையிடம் மிரட்டல் விடும் தொனியில் பேசினான் வாசு.

” அப்புறம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாரேன். நீ லவ் பண்ற பையனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. சோ நீ அவனை மறக்குறது தான் உனக்கு நல்லது. அதுவுமில்லாமல் நீ பண்ண கேடிதனம் எல்லாம் தெரியும் ” வாசு அலட்டிக் கொள்ளாமலே அவள் தலையில் குண்டை இறக்கிவிட்டு சென்றான்.

வாசு கூறிச்சென்றதில் இசை உள்ளுக்குள் உடைந்து போய்விட்டாள்.

” வெற்றி நீ என்னை ஏமாத்திட்டியா ? இல்லையே என்னோட வெற்றி அப்டி எல்லாம் செய்ய மாட்டானே” அவள் அறையில் இருந்த பொருட்களை எல்லாம் உடைக்க துவங்கினாள்.

அந்த மாளிகையே அவள் உடைக்கும் பொருட்களின் சத்தம் கொண்டு எதிரொலித்தது.

சத்தம் கேட்டும் யாரும் அவள் அறைக்கு செல்லவில்லை. ஆனால் மனம் தாங்காது சாம்பவி மட்டும் அவளது அறை நோக்கி வேகமாக சென்றார்.

” இசை மா பாகிலன்னு தேரே ( கதவை திற) ” பதறியபடி கதவை தட்டினார்.

பதில் பேசாது பொருட்களை உடைத்தபடி இருந்தாள் இசை.

” பாகிலன்னு தேரே இசை “

” முடியாது , எதுக்கு கதவை திறக்கனும் சொல்லுங்க? “

” பொறுமையா பேசலாம் இசை. கதவை திற , எதுவா இருந்தாலும் சொல்லு டா. தீர்வு இல்லாத பிரச்சனையே இல்லையே ” என்று சாம்பவி சொல்ல , உடனே கதவை திறந்தாள் இசை.

” என்னோட பிரச்சனையே நீங்க தான். அதுக்கென்ன தீர்வு உங்களால தர முடியும் சொல்லுங்க “இளக்காரமாய் கேட்டாள் .

” நான் தான் உன்னோட பிரச்சினையா , அப்டி நான் உனக்கு என்னம்மா பண்ணிட்டேன் “இசை கூற்று புரியாது சாம்பவி மருமகளிடம் கேட்க ,

” உங்களால மட்டும் தான் இப்போ எனக்கு இத்தனை கஷ்டமும். உங்களுக்கு இப்போ குளு குளுன்னு இருக்குமே ” கோபமாக வந்தது வார்த்தைகள்.

” என்ன பேசுற இசை நீ ? சொல்றதை கொஞ்சம் தெளிவா தான் சொல்லேன்”

” நான் சொல்ல வரது உங்களுக்கு புரியலையா என்ன , நீங்க ஓடிப்போய் உங்களுக்கு விருப்பமானவுங்களை கல்யாணம் பண்ணியதுனால தான் , இப்போ எனக்கான சுதந்திரம் இந்த வீட்ல இல்லாம போச்சி “

” என்ன சொல்ற இசை ? என்னால உனக்கான சுதந்திரம் போயிடுச்சா. ” சாம்பவி வினவ,

” என்ன , என்ன சொல்றன்னு ஏதோ புரியாத மாதிரியே கேக்குறீங்க ? அன்னைக்கு குடும்பத்தை அசிங்க படுத்திட்டு போனதால தான் இன்னைக்கு என்னோட காதலுக்கு எதிரியா நிக்கிறாங்க இங்க உள்ளவுங்க” வெடிக்க துவங்கினாள்.

” காதலிக்கிறியா ?” அதிர்ச்சியுடன் கேட்டார் சாம்பவி.

“ஆமா ஆமா ஆமா ” அந்த அறையே அதிரும் படி கத்தினாள் இசை.

சாம்பவிக்கு தலையே சுற்றியது. இசையின் இந்த பேச்சிலே தன் மகனை கட்டிக்கொள்ள விரும்பவில்லை என்று நன்றாக புரிந்தது அவருக்கு .

அதுவும் தன்னால் தான் அவள் இத்தனை துன்பப்படுகிறாள் என்று புரிந்த நொடி , இதயமே வெடித்தது போலான ஒரு வலி.

தன்னால் , அதுவும் ‌தன் செயலால் ஒருவள் இங்கு பாதிக்கப் பட்டிருக்கிறாள் . அது தெரியாது நான் அங்கு என் மக்களோடு சந்தோஷமாக அல்லவா வாழ்ந்துள்ளேன்.

” உங்களால என் காதல் பறி போயிடுச்சி. நீங்க என் வாழ்க்கை அழியறதை பார்த்து சந்தோஷமா வாழுங்க “

” நான் இப்டி ஆகும்னு நினைக்கல இசை. என்னால உன்னோட வாழ்க்கை அழியறதை பார்க்கவே முடியாது. ஐயம் ரியல்லி சாரி மா . எனக்கு ஒரு வாய்ப்பு கொடு டா ,உன்னோட காதலை நான் சேர்த்து வைக்கிறேன் “செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் நோக்கோடு கேட்க ,

“உங்களால எப்டி முடியும் . அப்போ உங்க பையனோட வாழ்க்கை ?”புருவம் உயர்த்தி இடக்காக கேட்டாள்

” அதை நான் பார்த்துக்கறேன் . அவன் சொன்னா புரிஞ்சிப்பான் . நீ சொல்லு இப்போ நான் உனக்கு என்ன பண்ணனும்னு. என்னால உன் வாழ்க்கை வீணா போறதுல எனக்கு விருப்பம் இல்லை ” என்க

” சரி , என்னைய இங்கே இருந்து அனுப்புங்க அது போதும் . ஆனா உங்க அண்ணணங்க கிட்ட நல்ல பேரு வாங்க என்னைய உபயோகப்படுத்துற மாதிரி தெரிஞ்சுது ,அப்றம் என்னைய வேற மாதிரி பார்க்க வேண்டியதா இருக்கும் ” எச்சரிக்கை விடுத்தாள் இசை .

” அப்டி ஒன்னு நடக்கவே நடக்காது .நீ என்னை தாராளமா நம்பலாம் இசை . நான் உன்ன ஊருக்கு அனுப்பிவைக்குறேன் . உன் வாழ்க்கையை நீ சந்தோஷமா வாழு டா ” ஆசிர்வதித்து சென்றார் சாம்பவி .

‘வெற்றி நான் உனக்காக வரேன் டா . நம்ம கஷ்டம் எல்லாம் தீர போகுது ,உனக்கு புடிக்காத வாழ்க்கையை நீ கஷ்டப்பட்டு வாழ வேணாம் . நான் வரேன் , நாம்ம சந்தோசமா வாழலாம் ‘ எண்ணியவள் ஒரு சுற்று சுற்றினாள் .

Leave a Reply

error: Content is protected !!