நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-13

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-13

அவளின் அழுத்தத்தைப் பார்த்து அதிசயித்தவன் மனதிற்குள் அவளை மெச்சித்தான் கொண்டான், அத்தோடு ‘மை மில்கி’ என்று நினைத்தும் கொண்டான்.

அவளைப் பார்த்துக்கொண்டே கதவை லாக் செய்தவனும், நேராகக் குளியல் அறைக்குச் சென்று விட்டான்.அவன் சென்றதும், அமைதியாய் போய்ப் பெட்டில் அமர்ந்துக்கொண்டாள் ஆத்மி.

குளியலை முடித்துக்கொண்டு வெளியே வந்தவன், சார்ட்ஸ் மற்றும் கை இல்லாத பனியன் ஒன்றை அணிந்திருந்தான். 

அவனைக் கண்டுக்கொள்ளாது இவள் வேறொரு உலகத்தில் இருக்க.அவளின் அருகே சென்றவனும் “போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வா” என்று தன்மையாகவே உரைக்க, தலையை ஆட்டியவள் செல்ல நினைக்கையில்,

“ஹே, இரு டிரஸ் அங்க வெச்சிருக்கேன் எடுத்துக்கோ”என்றான்.இத்தனை நேரம் லெஹங்காவிலே இருந்தது நினைவு வந்தவளாக, அந்த ஆடையை மறுக்காது எடுத்துக்கொண்டாள்.

‘ஆனால், இது என்ன மாதிரியான உடையாய் இருக்குமமோன்னு பயந்தவள்’குளியல் அறையின் உள்ளே சென்று அதைத் திறந்துப் பார்க்க, ரெட் கலரில் மேல்சட்டை மற்றும் அதே கலரில் பேண்ட்டும் இருக்க, அது முழு உடலையும் மறைக்கும்படியே இருந்ததால் திருப்தியுற்றவள், குளித்துவிட்டு அதை அணிந்துக்கொண்டாள்.

ரெட் கலர் வெல்வெட் பைஜாமா செட் உடையில் அங்கம் எல்லாம் வரி வடிவமாக அவளின் இளமை அழகையும், செழுமையையும் கொடை வள்ளல்போல் வாரி வழங்க.

சொக்கித்தான் போனான் தேவ், அவனின் பார்வை மாற்றம் அவளின் வயிற்றுக்குள் பூகம்பத்தை கொடுக்கவே செய்தது. இருப்பினும் எதையும் முகத்தில் காட்டாது உணர்வுகளைத் துடைத்து வைத்தது போல் அவள் நிற்க.

அவளின் அருகே சென்றவன், மேலிருந்து கீழாக அவளை அளவிட்டவன் “சைஸ் கரெக்டா இருக்கா” என்று ஒருமுறை சுத்தி பார்த்தவன்.

“பர்பெக்டா இருக்கு, இல்ல ஸ்வீட் ஹார்ட்”என்றான். அவளின் மொளனம் கலையாது என்பதை அறிந்தவனும். அவளின் வலது கரத்தை மென்மையாகப் பற்றியவன், அவளை அழைத்துக்கொண்டு மஞ்சத்தின் பக்கத்தில் சென்றான்.

அவளிடமிருந்து கிளம்பிய வாசனை இவனை இம்சிக்க, அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பியவன், நெற்றியில் ஈரமுத்தம் ஒன்றை பதித்தவன், சற்றே கீழே இறங்கி மூக்கின் நுனியில் முத்தமிட்டவன், பின், உதட்டிற்கும் மூக்கிற்கும் இடையில் முத்தமிட்டவன், ஒரு நிமிடம் தாமதித்துச் சட்டென அவளின் இதழ்களைச் சிறை செய்திருந்தான்.

மென்மை, வன்மையாய் மாறி, வன்மை கொடூரமாய் மாறத் துவங்கியதும் வலியில் துடித்தாள் மங்கையவள். இருப்பினும் அவனைத் தடுத்தால் இல்லை, எதிர்வினையும் காட்டினால் இல்லை. அவளின் இரு பக்க இடுப்பையும்  தன் இருகைகளாலும்   பற்றிக்கொண்டவன், இதழ்களின் யுதத்தை நிறுத்த விரும்பாது வன்மையாய்  அதைத் தொடர…

அவனின் ஒருக்கை சிறிது நேரத்தில் அவளின் வெற்று இடையில் தன் பயணத்தைத் தொடங்கி, மேல் நோக்கி நகர்வளம் போக…

இப்பொழுது அவனின் இருக்கைகளுமே அவனின் தடைகளைத் தகர்த்தெறிய முற்ப்பட்டு அவளின் பெண்மையை அறிய முற்ப்பட, தன் உலகத்தில் மட்டுமே சஞ்சரித்திருந்தவன். இந்த உலகத்தில் இருக்க விரும்பாது, உலகம் மறந்த, தன்னை மறந்து அவளுள் புதைய நினைத்து, அவளின் இளமையை களவாட துவங்க.

சிறிது நேரம் அவளின் உதட்டின் யுத்தத்தில் வெற்றி வாகை சூடியவனாக, அடுத்ததாக அவளை வெற்றிக்கொள்ள நினைத்து, அவளுக்கான தேடலை ஆக்ரோஷமாகத் துவங்கியவன், அவளின் ஆடைகளைக் களைய முற்ப்பட்டான்.

காமம் என்னும் தீ அவனுள் பற்றி எரிய, மாறாக அவளின் நிலையோ, உடல் விறைத்துக் கட்டையெனச் சமைந்து நின்றாள். அவளின் நிலையைக் கண்டவன் அவனின் தேடலை நிறுத்தி அவளை அழுத்தமாகப் பார்க்க.

முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அவள் நிற்கவே,”என்ன பண்ற?”என்று கேட்டான்.

“நான் ஒன்னும் பண்ணலை, நீ தான் ஏதேதோ பண்ணீட்டு இருக்கிற” என்றாள் பதிலாக.

“ம்ப்ச், நீ இப்படி நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்?”என்றான் கடுப்பாக.

“ஏன்? இந்தக் கூடல் காதலால் ஒன்னும் நடக்கலையே நான் உன்கூட இணைவதற்கு”என்றாள் கடுப்பாக.

“என்ன பேசற நீ?” என்றான் அவனும் கடுப்பாகவே.

“வேற என்ன பேசச் சொல்ற, ஒரு விலைமாது பண்ற வேலையை இப்போ நானும் பண்ணனும். அவ்ளோ தானே, அவளாவது காசு வாங்கிட்டு உடம்பை விற்பா… பட் நான் உன் காமத்திற்கு மட்டுமே இரையாகப் போகிறேன். பரவாயில்லை, வாப்போகலாம்” என்றாள் கண்களில் அனலோடு.

அவளின் இந்தச் சொற்றொடரில் தேவின் காதல் கொண்ட மனமோ பலத்த அடிவாங்கியது,’உன்னை நான் காமத்திற்கு மட்டுமா தொடுகிறேன், நீ என் பக்கத்தில் இருக்கும்போது நான் என்னையே இழக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு தொடுகையும் உன்மேல் நான் வைத்திருக்கும் எல்லையற்ற காதலை பறைசாற்றவில்லையா?எனில் உன் மனதில் எனக்கான பிம்பம் ஒரு காமூகனா?’என்று பலவாறு நினைத்தவன் அப்படியே நிற்க.

அவளுக்கு இத்தனை துயரங்களைக் கொடுத்தவன், ஏதோ அவளும் இவனும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டது போல் அல்லவா கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று கடுப்பாகியது ஆத்மிக்கு.

அவனின் மௌனத்தைக் கண்டவள், அவனது வலக்கரத்தை எடுத்து அவளின் இடுப்பில் வைத்தவள் “ம், வாச்சீக்கிரம் உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ, டைம் வேஸ்ட் பண்ணாத” என்று கூற.

அவளின் இடுப்பிலிருந்து தன் கையை உருவிக்கொண்டவனும், ஒன்றும் பேசாது கட்டிலின் மறுபக்கம் சென்று படுத்துக்கொண்டான்.

அவள் நின்ற இடத்திலே அப்படியே மடித்து அமர்ந்து  கண்ணீர் சிந்தினாள் ஆத்மி. சிறிது நேரத்தில் அதற்கும் பஞ்சம் ஆகிவிட.’எல்லாமே போய்டுச்சு இப்போ கண்ணீரும் கூட வற்றிவிட்டது’ என்று வேதனையோடு கண்களை மூடிக்கொண்டாள்.

*************

 

காலை முதலில் கண்விழித்த தேவ் ஆத்மியை பார்க்க அவளோ, உட்கார்ந்த வாக்கில் அப்படியே உறங்கியிருக்க, குளியலறை சென்று அவனது காலைக் கடன்களையும், குளியலையும் முடித்துக்கொண்டு வெளியில் வந்தவன்.

அவள் இன்னும் உறங்குவதை கண்டவன், “ஆத்மிகா”என்று கத்தி அழைக்க.திடுக்கிட்டு எழுந்தவள் அவனைப் பார்க்க.

“பைவ் மினிட்ஸ் டைம் தர்றேன், போய் ரெடி ஆகிட்டு வா”என்று ஒரு கவரை கொடுக்க அதை வாங்கிக் கொண்டவள் அமைதியாகச் சென்று சரியாக வந்துவிட்டாள்.

அவளையும் அழைத்துக் கொண்டு வெளியில் வத்து காரை எடுத்தவன். நேராக டிபார்மெண்டல் ஸ்டோருக்கு அழைத்துச் சென்றவன் “இந்த மன்த்க்கு தேவையான எல்லா பொருளும் வாங்கிக்கோ, அரைமணி நேரம் டைம் அதுக்குள்ள எல்லாம் வாங்கிக்கோ. அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட நீ அங்க இருக்கக் கூடாது, பில் போட்டு முடிச்சிருக்கனும்” என்று அதிகாரமாகக் கூறியவன்.வெய்டிங் ஏரியாவிற்கு சென்று அமர்ந்துக்கொண்டு தன் மொபைல்லை ஆராய துவங்கிவிட்டான்.

நேற்று சற்றே இலகியிருந்தவன் இன்று மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறியதை கண்டவள், அவனின் அரை மணி நேர கெடுவில் கடுப்பாகியிருந்தாள். ‘பைத்தியம், இதை எந்த லிஸ்டில் சேர்க்குறது, இவன் வீட்டு கிட்சன் துடைச்சு வச்ச மாதிரி இருக்கும் பொருள் வாங்கணும்னா எவ்ளோ நேரம் ஆகும் தெரியுமா? இந்த லூசு அரை மணி நேரம் டைம் தருது, அதுல என்னத்த வாங்க?’ என்று சிறிது நேரம் யோசித்தவள் ‘இதுலேயும் ஏதாச்சும் உள்குத்து இருக்கும் இவனைக் கண்டிப்பா நம்ப முடியாது. முடிஞ்ச வரை வாங்குவோம்’ என்று முடிவெடுத்தவள்.

கடகடவெனச் சமையல் பாத்திரங்கள் சிலவற்றை மட்டும் எடுத்தாள். அதைப் பில்லிங்கில் கொடுத்துவிட்டு, சில காய்கறிகள் மற்றும் அரிசி, மளிகை என்று கைக்குக் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு அவசரமாகப் பில் போட்டிருந்தாள். அதற்கே அரை மணி நேரம் முடிந்திருக்க. பாதி பொருளைக் கூட வாங்க முடியவில்லை அவளால். சரியாக அரைமணி நேரத்தில் வந்தவன், அவள் வைத்திருந்த பொருள்களுக்குப் போன் பேவில் பில்லை கட்டியவன்.

“எல்லாத்தையும் எடுத்துட்டு வா” என்றுவிட்டு போய்விட. இவளுக்குத் தான் அழுகை முட்டிக்கொண்டு வந்தது,’இவ்ளோவையும் நான் எப்படி தூக்கிட்டு போறது?’என்று.

வேறு வழி இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி வைத்த பொருட்களை ஐந்தாவது மாடியிலிருந்து கீழ் தளத்திற்க்கு லிப்டில் வந்து கார் பார்கிங் வரை அதைச் சுமந்து சென்று டிக்கியில் பொருட்களை அடுக்க, ஒரு சில கனமான பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு வருவதற்குள் படாதபாடாகி விட்டது ஆத்மிக்கு. மிகவும் சிரமப்பட்டு ஒரு பத்து முறை மேலே கீழே என்று ஏறி இறங்கியவள்.ஒரு வழியாக அனைத்தையும் ஏற்றி முடித்துக் காரில் அமரந்துக் கொண்டாள்.

அவள் வந்தமர்ந்ததும் காரை எடுத்தவன், அவர்களின் அந்தச் சின்ன வீட்டிற்க்கு அழைத்துச் சென்றான்.

 

இவள் இறங்கவும் தானும் இறங்கி, உள்ளே சென்றவன்.

“இனிமே நீ இங்க மட்டும் தான் இருக்கணும். எக்காரணத்தை கொண்டும் அந்த வீட்டுக்குப் போகவே கூடாது. முக்கியமா நான் சொல்றதை தவிர வேற எதுவும் பண்ண முயற்சி செய்யக் கூடாது” என்று கட்டளைகளை இட்டவன்.

மௌனமாய் நின்றவளை கண்டு இன்னும் கடுப்பானவன்,”இன்னொரு முக்கியமான விஷயம் நான் ஒன்னு கேட்டா வாயைத் திறந்து பதில் சொல்லனும்” என்று கர்ஜிக்க.

தலையை ஆட்டினாள் அவள்.”ம்பச், சொன்னது புரியலையா உனக்கு?வாயைத் தொறந்து பேசனும்னு சொன்னேன்”என்றான் மறுபடியும்.

“சரி,”என்றிருந்தாள் இந்த முறை.”வெல், வாங்கிட்டு வந்த பொருளையெல்லாம் எடுத்துட்டு போய்ச் சமையல் பண்ணு “என்று கட்டளை இட்டவன் நேராக அவனது பெரிய வீட்டிற்க்குள் சென்று விட்டான்.

‘ஐயோ, மறுபடியும்  அதை இறக்கிதொலையனுமா?கடவுளே உனக்குக் கருணையே இல்லை’ என்று கடவுளைக் கேட்டவள்.கொஞ்சம் கொஞ்சமாய் அனைத்து பொருட்களையும் இறக்க, கார் ஷெட்டிலிருந்து வீட்டிற்கு வரும் தூரம் வேறு சற்று அதிகமாகவே இருக்க, சமீபகாலமாகச் சரியாக உண்ணாத நிலை, காலை வெயில் எல்லாம் சேர்ந்து மயக்கம் வரும்போல் இருந்தது அவளிற்க்கு.கனமான தோசை கல் ஒன்றையும் இன்னொரு பைகளில் சில பாத்திரங்களும் இருக்க அதைத் தூக்கிக்கொண்டு வந்தவளின் கால் இடறி அந்தத் தோசை கல்லும் அவளின் காலில் விழுந்து விட வலியில் துடித்துவிட்டாள் பெண்.

காலில் கட்டைவிரலில் நகம் பிய்ந்து இரத்தம் கொட்ட, கால் சுளுக்கி விட்டிருந்தது. தூக்கிவிடக்கூட ஆள் இல்லாமல் மண் தரையிலே சிறிது நேரம் அமர்ந்தவளும் தன்னை தானே தேற்றிக்கொண்டு எழுந்து காலை இழுத்திழுத்து நடந்தவாறே பொருட்களை வீட்டினுள் சேர்க்க, அப்பப்போ கால்கள் வேறு இடறி அவளிற்கு சதி செய்ய வலி அதிகமாகி கால் வீங்கியிருந்தது.

அவள் நடக்க நடக்க இன்னும் வீக்கம் பெரிதாகியது, ஒரு கட்டத்தில் நடக்கவே முடியாது சோர்ந்து அமர்ந்துவிட்டாள். 

தொண்டை வறண்டு போய், வயிற்றுக்கும் உணவுத் தேவை என்பதை உணர்ந்தவள். சிறிது தண்ணீர் குடித்தாள். சாப்பிட எதாவது இருக்கா என்று ஆராய, அந்தோ பரிதாபம்!எதுவும் இல்லாததை கண்டு வேதனை உற்றவள்.அவள் வாங்கி வந்திருக்கும் ரவையில் உப்புமாவை கிண்ட நினைக்க, அவளால் எழுந்துக்கொள்ளவும் முடியவில்லை.

 

*****************

அதே நேரம் இங்கே, தேவ் தனதறையில் அமைதியாய் அமர்ந்து ஆத்மியை பற்றி நினைத்துக்கொண்டிருந்தான்.தாய் அவளைப் பற்றி முதன் முதலில்  கூறிய தினத்திற்கு அவனின் நினைவுகளோடு  பயணித்தான்.

சாரதாம்மா எம் ஏ.பி எட் படித்தவர் ஆதலால் சென்னையில் ஒரு பிரபல பள்ளியில் ஆசிரியராகப் பணிப்புரிய சென்றிருந்தார்.போன வாரம் வரை வேறு பள்ளியில் வேலை பார்த்து வந்தவர்.இங்கே சம்பளம் சற்றே அதிகமாய் வருவதால் இங்கே வந்துவிட்டிருந்தார்.

முதல் நாள் பள்ளிக்குச் சென்று ஜாயினிங் லெட்டர் கொடுத்து அடண்டென்ஸ் ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டவர், அவருக்கு வழங்கப்பட்ட ஆறாம் வகுப்பிற்க்கு செல்ல வேண்டிச் சென்றுக்கொண்டிருக்க அங்கே ஒரு சிறுமி, அவளின் சில தோழிகளோடு ஏதோ பேசிக்கொண்டிருக்க.

இவர் என்னவென்று பக்கத்தில் சென்று பார்க்க,”இப்போ ஒரு கேள்வி, வில்லன், ஹீரோ ரெண்டு பேர் இருக்காங்க, நீங்க எல்லாரும் யாரை செலக்ட் பண்ணுவீங்க?என்று கேட்டிட.

“இது என்னடி கேள்வி கண்டிப்பா, ஹீரோ தான்”என்றனர் அனைவரும் கோரசாக.

“ம்ப்ச், நோ வில்லன் தான் செலக்ட் பண்ணனும்”என்றாள்.

“என்னாது, ஏன் டி”என்றனர்.

“வில்லன் இருந்தா தானே ஹீரோவாவே ஒருத்தர் ஆக முடியும்.வில்லன் இல்லாட்டி ஹீரோ யாரு கூடச் சண்டை போடுவாரு?அப்போ, ஒரு வில்லன் தானே ஹீரோவையே உருவாக்குறாரு…”என்று கேட்க.

எல்லாம் ஒன்றாக ஆமாம் போட, இப்போ சொல்லுங்க யாரை செலக்ட் பண்ணுவீங்க எல்லாரும் இம்முறை அனைவரும் “வில்லன்”என்று சொல்ல “வெரி குட்”என்றாள் அவள்.

அவளின் இந்தப் பேச்சில் அவளை முதல் பார்வையிலே பிடித்துப் போனது சாரதாம்மாவிற்க்கு.தன் மகனின் குணத்திற்க்கு எதிராக இந்தப் பெண்பிள்ளை இருப்பதை கண்டு மகிழ்ந்தார் அந்தத் தாய்.

***************

Leave a Reply

error: Content is protected !!