சூரியநிலவு 27 2

சூரியநிலவு 27 2

“எல்லாம் சரி தேவ் இதில் சூரியா, ஆகாஷ் மேல் என்ன தவறு இருக்கு? அவங்கள பழிவாங்க என்னை அவங்க கிட்ட இருந்து பிரிக்கவேண்டுமென்று யோசிச்சு இருக்க?”

“நேரடியா அவங்க மேல் எந்த தப்பும் இல்ல. நான் என் சொந்த கிராமத்திற்கு செல்ல முடியாமல் இருப்பது, உங்கள் குடும்பத்தால். ஆனால் அவங்க சந்தோஷமா அங்க போயிட்டு வராங்க. யாருமில்லாத அனாதையா நான் மட்டும் இருக்கேன், அது கோபமா அவங்க மேல திரும்பிடிச்சு”

“இன்னமும் உன்னோட பிரச்சனை தீரலை. இப்ப மட்டும் எதுக்கு உதவுற?”

“நான் உதவுறது உனக்காக மட்டும்தான். அன்னைக்கு ரெஸ்டாரண்டில் வச்சு உன் கடந்த காலத்தை சொன்னபோது மனசு வலிச்சது. உன்மேல் நான் வச்சிருந்த நேசம் உண்மை.

உனக்கு வெற்றி மேல் விருப்பமில்லையென தெரியும், வீட்டில் சொன்னதற்காக விருப்பமில்லாத வாழ்க்கையை நீ ஏன் வாழனும்? அப்படி விருப்பம் இல்லாத வாழ்க்கையை தான் வாழப் போறனா, அது ஏன் உன்னை மனதார விரும்புற என்கூட வாழக்கூடாது? அதனால்தான் உன்னை மிரட்டினேன்.

நீ லண்டன் சென்றது தெரிய வந்தது. எப்படியும் இப்போதைக்கு உனக்கு திருமணம் இல்லை என்ற நிம்மதியில், அதன்பிறகு  உன்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. மேகாவிடம் உன் நலத்தை மட்டும் கேட்டுக்கொள்வேன்.

நான்கு வருடத்துக்கு பின்னர் அந்த ஷாப்பிங் மால்ல உங்களை சந்திச்சபோது உன் கண்ணில் உயிர்ப்பை பார்த்தேன்; அவர்கள் மேல் உனக்கு இருந்த நேசத்தை பார்த்தேன்; அவர்களிடம் உனக்கு இருந்த உரிமையை உணர்ந்தேன்; அவர்களுக்கும் உனக்கும் நடுவிலிருந்த பந்தத்தை உணர்ந்தேன்; பிரதாப்பிடம் உனக்கு இருந்த அன்னியோன்யத்தை உணர்ந்தேன்; அதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் மனது வலித்தது. 

டிடெக்டிவ்ல சொல்லி அவர்களைப் பற்றி விசாரித்தேன். அப்போது தான் தெரிந்தது அவர்கள் சத்தியமூர்த்தி, நாராயணன் பசங்கள் என்று. நான் யாரும் இல்லாமல் இருக்க, அவங்களுக்கு மட்டும் எல்லாம் கிடைக்குமா என்ற வெறி. உன்னை அவங்க கிட்ட இருந்து பிரித்து, நான் இழந்த அனைத்தையும் மீட்கனுமென்று ஒரு ஆசை. 

அந்த ஆசையெல்லாம் உன்னை ரெஸ்டாரண்டில் பார்த்தபோது மறைந்தது. உன்னுடைய விருப்பம் பிரதாப் அப்படிங்கிறதால நான் விலகிவிட்டேன்.”

“தேங்க்ஸ் தேவ். எனக்காக இவ்வளவு விட்டுக்கொடுத்து போறதுக்கு. ரியலி ஐ அம் வெரி பிளஸ்ட்(நிச்சயம் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்) உங்களை மாதிரி ஃப்ரெண்ட்ஸ் கிடைக்க.” 

பிரதாப்பும், ஆகாஷும் அவனின் நிலையை உணர்ந்து அவனை மனதார ஏற்று, அவனை ஆரத்தழுவிக் கொண்டார்கள்.

“அப்பறம் ஆரா என்னை மனசார நேசிக்கிறா. அதனால நான் அவளை கல்யாணம் செய்துக்க முடிவு செய்துட்டேன். என்னோட பேரண்ட்ஸ்கிட்டயும் சம்மதம் வாங்கிட்டேன். மதுவோட பேரண்ட்ஸ் எங்க வீட்டுக்கு வரவும், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்னால் முடிந்த, மது ஏங்கிய பாசத்தை திருப்பிக் கொடுத்து இருக்கிறேன்.” எனக் கூறி முடித்தான்.

அனைவரின் பார்வையும் ஆராதனாவை நோக்கித் திரும்ப, அவள் வெட்கத்தோடு பிரதாப்பின் பாட்டியின் பின் மறைந்தாள்.

பிரதாப், தேவ், ஆரா கூறிய அனைத்தையும் கேட்ட அங்கிருந்த அனைவரும் வார்த்தைகள் அற்று மௌனமாகினர். இப்படியும் நாட்டில் நடக்குமா? என்று.

சென்னையிலிருந்த சூரியபிரதாப்பும், மதுரையிலிருந்த மதுநிலாவும் ஊட்டியில் சந்தித்து கொண்டதை காலத்தின் கட்டாயம் என்பதா? எந்தப் பெண்ணிடமும் தோன்றாத ஆர்வம், அந்த பிங்க் ரோஜாவிடம் மட்டும் தோன்றியதே, இது ரத்த பந்தத்தின் ஈர்ப்பு என்பதா?

தங்கை தன் குடும்பத்தை ஏமாற்றி இருந்தாலும், அவரின் மேல் பாசம் கொண்டிருந்த சத்தியமூர்த்தியின் அன்பில் நெகிழ்ந்தனர்.

மூன்றே மாதம் பழகிய நாத்தனார், தன் கணவன் குடும்பத்தை ஏமாற்றி சென்றிருந்தாலும், தன் கணவனின் விருப்பத்திற்கிணங்க, உயிர் பிரியும் தருவாயில், தன் மகனிடம் ‘அத்தை மகளை திருமணம் செய்துகொள்’ என்று கூறிய அவரின் காதலில் நெகிழ்ந்தார்கள்.

யாரென்றே தெரியாத பெண்ணை, ஊட்டியில் முதல்முறை சந்தித்தபோதே ஈர்ப்பு கொண்டு, அவள் ஆபத்தில் சிக்கியபோது எல்லாம் அவளைக் காப்பாற்றி, அவளிடம் சிக்கிக்கொண்டு, அவளின் மகிழ்ச்சி ஒன்றே எனக்கு முக்கியம் என்று இன்றுவரை, அவளுக்குத் துணை நிற்கும் சூரியபிரதாப்பின் காதலில் நெகிழ்ந்தனர்.

தோழமை ஒன்றிற்காக மதுவின் அனைத்து சுக துக்கங்களிலும் பங்கெடுத்து, அவள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் உறுதுணையாக நின்று, அவளின் வாழ்க்கையை வசந்தமாக்கிய ஆகாஷ், மேகாவின் அன்பில் நெகிழ்ந்தனர்.

என்னதான் சுமித்ரா தன் தந்தையை மணமேடை வரை கொண்டு சென்று அவமானப்படுத்தி, தங்களை சொந்தங்களிடமிருந்து பிரித்திருந்தாலும், மதுவின் மேல் கொண்ட அன்பிற்காக அனைவரையும் மன்னித்த சூர்யதேவ்வின் அன்பில் நெகிழ்ந்தனர்.

எங்கிருந்தோ வந்து, சில வருடங்கள் மட்டும் பழகிய அவர்களுக்கு, மதுவின் மேலிருந்த அக்கறை தங்களுக்கு இல்லையே? என வெற்றி, ஓவியா மனதால் துயர் அடைந்தனர்.

ராஜாவும் கற்பகமும் மனதார அவர்களை வாழ்த்தினர்.

சுமியும் சுந்தரமும் இனி நல்ல பெற்றோராக இருக்க வேண்டுமென உறுதி பூண்டனர்.

*******

அங்கு மன்னிப்பு கேட்பதும், மன்னிக்கப்படுவதும் நடந்தது.

சொந்தமென வெற்றியின் குடும்பத்தை மட்டும் கண்டிருந்த, ஓவியா, மதுவிற்கு தாத்தா, பாட்டி, மாமா, மாமா பசங்கள், என அத்தனை உறவுகளை பார்க்க குதூகலமானது.

பாச மழையில் நனைந்து கொண்டிருந்தனர். ஆனந்த கண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பாட்டியும் தாத்தாவும்,”இன்னும் ஒரு வாரத்தில் நல்ல நாள் வருது. அப்போதே மூன்று கல்யாணத்தையும் நம்ம கிராமத்தில் வச்சுக்கலாம்” என சந்தோஷமான விஷயத்தை தெரிவித்தனர்.

முதல் எதிர்ப்பு சூரியதேவிடம் இருந்து வந்தது,”பாட்டி நான் இப்போதுதான் தொழிலின் நெளிவு சுளிவுகளை கற்று கொண்டிருக்கிறேன். ஆராவோட அன்பை இப்பதான் புரிஞ்சு இருக்கேன். ஒரு வருஷம் கழித்து எங்கள் கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம்.”

“ஒரு வருஷம் ஆராவ சுத்தி, சுத்தி காதலிச்சுட்டு, அப்புறம் தான் கல்யாண வாழ்க்கை அப்படின்னு நேரடியா சொல்ல வேண்டியதுதானே.” ஆகாஷ் கிண்டலில் இறங்கினான்.

“ஆமா அதுக்கு இப்ப என்ன?” என முறைத்தான் தேவ்.

இப்போது திருமணம் வேண்டாம் என உறுதியாக கூறிவிட்டான்.

“எங்களுக்கு தான் ஆல்ரெடி மேரேஜ் ஆயிடுச்சு. அப்புறம் எதுக்கு?” பிரதாப் அடுத்த மறுப்பை கூறினான்.

“சட்டப்படி கல்யாணம் ஆகியிருக்கலாம். சாஸ்திரப்படி கல்யாணம் செய்யணும் அதுக்குதான் இப்ப. மதுவுக்கு அவ கல்யாணத்தைப் பத்தி எவ்வளவு ஆசைகள், கனவுகள் இருக்கும் அதை யோசி பேராண்டி.” என பிரதாப்பின் வாயை அடைத்தார் தாத்தா. 

நிலாவின் ஆசை அது ஒன்று போதாதா பிரதாப்பின் வாயை அடைக்க.

அடுத்து அவரின் பார்வை ஆகாஷிடம் செல்ல, அவன் தன் விரலை வாய் மீது வைத்து, “நான் பேசமாட்டேன். உங்கள் விருப்பம். இன்னமும் இரண்டு நாளில் கல்யாணமென்றாலும் எனக்கு ஓகே” வெட்கம் போல் கால்விரலால் தரையில் படம் வரைந்து கொண்டே.

“ஐயோ பொண்ணுங்க செய்யவேண்டியதெல்லாம் இவன் செஞ்சு, மானத்த வாங்குறானே” என மேகா தலையில் அடித்துக் கொண்டாள். 

“பொண்ணுங்களா உங்களுக்கு தான் வெட்கம்னா என்னனு தெரிய மாட்டேங்குது. அதான் என் பேரன் வெட்கப்படுறான்.” என பாட்டி மேகாவுக்கு கொட்டு வைத்தார்.

அதில் அனைவரும் வாய்விட்டு சிரித்தனர். இப்போது அந்த இல்லம் சந்தோசத்தால் நிரம்பி வழிந்தது. 

******

திருமணத்திற்கு நாட்கள் மிகவும் குறைவாக உள்ளதால், குடும்பத்தார் அனைவரும் ஷாப்பிங்கில் பரபரப்பாகி விட்டனர். 

எல்லா பிரச்சனைகளும் தீர்ந்திருக்க, இன்னும் ஓவியா வெற்றி அதே நிலையிலிருந்தார்கள். அவர்களை சேர்த்து வைக்க அனைவரும் சேர்ந்து திட்டம் தீட்டினர்.

அனைவரும் கிளம்பும் சமயம் ஓவியாவை அழைத்து,”ஓவியா நாங்க போயி தாலி எடுத்துட்டு, பத்திரிக்கை அடிக்க கொடுத்துட்டு வரோம். நீ இன்னைக்கு மத்தியானம் சாப்பாடு ரெடி பண்ணிடு.” எனப் பாட்டி அசால்டாக அவளிடம் ஒரு குண்டை போட்டு சென்றார்.

“என்னது இத்தனை பேத்துக்கும் நான் மட்டும் சமைக்கணுமா?” என அதிர்ந்தாள் பெண். 

“உனக்கு துணையா வெற்றியை விட்டுட்டு போறோம். ரெண்டு பேரும் சேசேசேர்ந்து ரெடி பண்ணிடுங்க” மது நமட்டு சிரிப்புடன் அங்கிருந்து சென்றாள்.

“என்னது ரெண்டு பேரும் சேர்ந்து ரெடி பண்ணுங்கலா? எத சொல்ற? சாப்பாட சொல்ற மாதிரி தெரியலையே?” என புருவம் உயர்த்தினான் நிலவின் சூரியன்.

அவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்து,”ம் எல்லாத்தையும் தான்”

“அதுக்கெல்லாம் அவன் சரிப்பட்டு வரமாட்டான். வேஸ்ட் ஃபெல்லோ.”

“சார் ரொம்ப ஒழுங்கு” என்றாள் அசட்டையாக.

அவள் காதில் ரகசியமாக, “அன்னைக்கு  ராத்திரி நடந்ததை மறந்திடாதே ஸ்வீட்டி” என்றான் மயக்கத்தோடு.

வெக்கத்தில் முகம் சிவக்க, கெத்தை விடாமல்,”ஆமா ஒரு கிஸ் குடுக்க பத்து வருஷமாயிருக்கு. இவர் பேச வந்துட்டாரு.” அதே இரகசியக் குரலில்.

“அது உன்னோட சம்மதம் தெரியாதபோது. இனி பாரு ஐயாவோட ஆக்சன” அவளை இடையோடு சேர்த்தணைத்தான்.

அவன் பிடியிலிருந்து வெளியே வர போராடிய பெண்,”பார்க்கலாம் பார்க்கலாம்” என அவன் கன்னங்களில் தன் இதழை பதித்து, அவன் மயங்கிய நொடி, சுதாரிக்கும் முன் சிட்டாக பறந்தாள்.

அனைவரும் வீட்டிலிருந்து கிளம்பிய பின் சமையல் அறையில் புகுந்தாள் ஓவியா. சிறிது நேரம் சென்று வெற்றி சமையலறைக்குள் நுழையும்போது, ஓவியா அலமாரியின் மேலிருந்த பாத்திரத்தை எடுக்க முயன்று கொண்டிருந்தாள். 

பாத்திரத்தை எடுக்க முயன்றதால் விலகிய புடவையில் தெரிந்த அழகு, வெற்றியின் ஏக்கத்தை தூண்டியது. கண்ணெடுக்காமல் தலை முதல் பாதம் வரை அவளை ரசித்துக்கொண்டே  நெருங்கினான்.

“வெற்றி அந்த டப்பாவை எடுத்து தாங்க” நீண்ட நாட்களுக்குப் பிறகான இயல்பான பேச்சு வெற்றிக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

அவளின் முழங்காலுக்கு மேல் கை சுற்றி அவளை தூக்கி இருந்தான். “வெற்றி என்ன பண்றீங்க? நீங்களே அந்த டப்பாவை எடுத்து தர வேண்டியது தானே?”

“நீயே எடுத்துக்கோ.”

“சரி எடுத்தாச்சு இறக்கிவிடுங்கள்.”

“முடியாது”

“என்னாச்சு வெற்றி உங்களுக்கு இப்படியெல்லாம் நடந்துக்கறீங்க?”

“நீ மாமூன்னு சொல்லு அப்பதான் இறக்கிவிடுவேன்.”

“இப்ப சொல்லமாட்டேன். நான் ஆசையா சொன்னபோது நீங்க  திட்டுனீங்க.” முறுக்கி கொண்டாள் தான் மாட்டியிருக்கும் நிலைபுரியாமல்.

“சரி அப்போ இப்படியே இருப்போம்.” என அவள் வயிற்றில் தன் முகம் புதைத்தான்.

அவள் கரத்தினில் இருந்த பாத்திரம் கீழே விழுந்து ஓசை எழுப்பியது. ஜிவ்வென்று இருவருக்கும் உடலில் உஸ்னமேறியது.  

“என… பண்ணுறீ…” வார்த்தைகள் வராமல் திண்டாடினாள்.

“ம் ட்ரீட்மெண்ட் பண்றேன்” சில்மிஷத்தை தொடங்கினான்.

அவனின் சில்மிஷத்தில் மயங்கிய பெண், வாயிலிருந்து தானாக வார்த்தை வந்தது,”மாமு.”

இப்போது அவளை இறக்கிய வெற்றி தடைபட்ட வேலையை தொடர்ந்தான். அவன் அவள் இதழை நெருங்கும் நேரம், சிவபூஜை கரடியாக வரவேற்பறையில் இருந்த அவனின் தொல்லைப்பேசி அழைத்து அவன் எரிச்சலைக் கிளப்பியது.

எரிச்சலோடு அந்த அழைப்பை ஏற்றால் அந்தப்புரம் பேசியது ஆகாஷ்.”இப்ப என்னத்துக்குடா கால் பண்ண” என பல்லைக் கடித்தான்.

அவனின் நிலையை உணர்ந்த ஆகாஷ், நக்கல் சிரிப்புடன்,”நாங்க இங்க சாப்பிட்டு உங்களுக்கும் பார்சல் வாங்கிட்டு வந்துடுறோம். நீங்க கிச்சனை பெட்ரூமா மாத்தாம, உங்க ரூமுக்கு போயி எல்லாத்தையும் கிளியரா பேசுங்க. ஆல் த பெஸ்ட்” என கூறி அழைப்பை துண்டித்தான்.

அவன் பேச்சில் சிரிப்பு வர, புன்னகையுடன் கிச்சனுக்கு சென்ற வெற்றி, இன்னமும் மயக்கம் தெளியாமல் இருந்த ஓவியாவை தன் கரங்களில் அள்ளிக்கொண்டு படுக்கை அறையை அடைந்தான். 

அங்கே அவளுக்கு காதல் பாடத்தை மட்டுமல்லாமல், காம பாடத்தையும் சொல்லிக் கொடுத்தான் வெற்றிச்செல்வன் தன் ஓவிய பெண்ணுக்கு.

அவர்கள் அங்கே தெளிவாக படிக்கட்டும். அவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்களிடம் விடை பெறுவோம்.

********

திருமண தினம்,

மண்டபமே பரபரப்பில் ஆழ்ந்தது “நிலாவை காணவில்லை.”

Leave a Reply

error: Content is protected !!