மோகனம் 22

258870534_107665628407960_2661016960017320672_n-192fcd9e

மோகனம் 22

மோகனம் 22

அதிகாலை பொழுது சில்லென்ற காற்று இதமாய் இதயத்தை வருட, அமைதியாய் பால்கனி முன்பு நின்றிருந்தாள் அருவி.

சிறிது நேரத்திற்கு முன்பு விஷ்வாவிடம் பேசவேண்டும் என கூறிய அருவியை கேள்வியாய் நோக்கியவனிடம் பேசுவதற்குள் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு “இந்த நேரத்தில யாரா இருக்கும்” யோசித்தவாறே எழுந்தவன் ” இரு நான் போய் யாருன்னு பார்த்துட்டு வரேன்” கூறி செல்ல, போகும் கணவனை விழியகள பார்த்திருந்தாள்.

அதற்குள் அருண் தூக்க கலக்கத்துடன் கதவை திறக்க, பேய் போல் உடல் முழுவதையும் குளிருக்கு மறைத்து கண்கள் மட்டும் தெரிய நின்றிருந்தாள் விழி.

“அம்மா” பயத்தில் கத்த,” நான் தான் சார் அகல்விழி” சொல்லி குல்லாவை கழற்றினாள்.

“இந்த நேரத்துல இங்க என்ன பண்ற நீ” ஆராய்ச்சியுடன் கேட்க,

“ஹான்,நீங்க வேற மாமா கிட்ட பேசினதும் அவசரமா கிளம்பிட்டீங்க. நானும் வரலாம்னா , வேலைய என் தலையில கட்டிட்டு போனதால, நகர முடியல. அதான் காலையிலே கிளம்பி இங்க வந்துட்டேன்” ஏதோ பக்கத்து கடைக்கு வந்தது போல் சர்வ சாதாரணமாக சொல்ல, அவளையே பார்த்திருந்தான் அருண்.

அதற்குள்,” யாரு அருண் வந்திருக்கிறது?” கேட்ட படி இறங்க,

“உன் மச்சினிச்சி தான் டா” குறும்பாய் சொல்லி நகர்ந்து விட்டான்.

அகல்விழியை உறுத்து விழித்தவன்,” அகல் மா இந்த நேரத்துல இங்க?” என வினவினான்.

ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று திருதிருவென விழிக்க, அருணின் இதழில் அவள் செயலினால் புன்னகை ததும்பியது.

“அது மாமா…”என உண்மையை சொல்ல முடியாது இழுக்க, அவளை காப்பாற்ற முன்வந்தான் அருண்.

“டீச்சரோட தங்கச்சி இருந்தா, கொஞ்சம் அவளை தேத்துவாங்கள . அதான் வர சொன்னேன்” சொல்ல,

“சரி உள்ள வா அகல் மா” என்றவன், இருவரையும் பார்த்து”நீங்க என்ன பண்றீங்க அம்மு எழுந்ததும் அவளை உங்களோட கூட்டிட்டு போய்ட்டுங்க. நாங்க அப்புறமா வரோம்” என்றான்.

“மாமா , அக்காவை பார்த்துட்டு போறேனே…” சொல்ல, வேணாம் என்று விட்டான்.

அடுத்த அரைமணி நேரத்தில் மூவரையும் கிளப்பிவிட்டே ,மேலே அறைக்கு சென்றான் விஷ்வா.

அறையில் பார்வையெங்கும் ஓட்டியவனுக்கு அவனின் தேவதை அழகாய் தரிசனம் தர,”அருவி மா” அழைத்தவாறே அவளை நோக்கி நடையிட்டான்.

திரும்பி பார்த்த அருவி, மீண்டும் தூரத்தில் தெரியும் மலைகளையும், வீட்டிற்கு கீழ் வைத்திருக்கும் தோட்டத்தையும் பார்வையிட்டிருந்தாள்.

“காப்பி குடிச்சியா?இல்லையா?” ஆராய்ந்தவாறே கேட்டான்‌.

இல்லையென தலையசைத்தவள், திரும்பி அவனை பார்த்தாள்.

அவளின் பார்வையில் ஏதோ ஒரு வித்தியாசம் தென்பட,”என்ன அப்படி பார்க்கிற அருவி” பார்வைக்கான அர்த்தத்தை அறிய கேட்டான்.

“ஒன்னுமில்லை. உன்கிட்ட ரெண்டு விஷயம் சொல்லணும்னு சொன்னேனே” சின்னதான குரலில் சொன்னாள்.

“ம்ம்ம்…”என்றவன் அவளை அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தினான்.

“சொல்லுமா” கனிவுடன் சொன்னவன் அவள் கரத்தை மென்மையாய் பற்றிக்கொண்டான்.

அவனுக்கு தெரிந்திருந்தது. அருவி அவளின் கடந்த காலத்தை பகிர நினைக்கிறாள் என்று, ஆனால் அந்த மற்றொன்று என்னவென்று தான் தெரியவில்லை,ஏதேனும் கிறுக்குத்தனமாக பேசுவாளோ குழம்பி தான் போனான்.

அருவி அவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்தாள்.

“என்னடாமா?”

“எனக்கு இப்படி ஒன்னு தோணும்னு நான் நினைச்சு கூட பார்த்தது இல்ல. உனக்கே தெரியும் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்னு.அந்த பிடித்தம் எப்போ காதலா மாறுச்சுன்னு தெர்ல” சொல்லி அவள் நிறுத்த, அருவி ஏதோ சொல்கிறாள் என்று கவனித்தவன், அவளின் கூற்றில் திகைத்து தான் போனான்.

மனைவியிடமிருந்து காதலை பெற வேண்டுமென்றலாம் விஷ்வா ஒருபோதும் நினைத்தது இல்லை. அவனுக்கு இது அதிசயத்திலும் அதிசயமாய் இருந்ததது. தன்னை தானே ஒரு முறை கிள்ளி பார்த்துக்கொண்டான்.

அவனின் செய்கையில்,” என்ன பண்ற?” கேட்க,

“இல்ல இது கனவு தான அருவி மா? கனவாக தான் இருக்குமென கேட்க, புன்னகையை உதிர்த்தாள்.

“இல்லவே இல்ல…உண்மை தான்” சொல்ல மனைவியை தட்டாமாலை சுற்றி முகமெங்கும் முத்த மழை பொழிய மனம் ஏங்கியது. இருப்பினும் மனைவியின் மனநிலைக்காக மனதை அடக்கினான்.

அவன் முகத்தையே பார்த்திருந்தவள், என்ன நினைத்தாளோ” நான் உன்ன கொஞ்ச நேரம் ஹக் பண்ணிக்கட்டுமா?” தயக்கத்துடன் கேட்க,

கரும்பு தின்ன கூலியா,”நானே உனக்கு தான் வா… வா…”சொல்லி மனைவியை மென்மையாய் அணைத்துக்கொண்டான். அவளின் பிடி தான் இறுகியது.

சிறிது நேரம் அப்படியே இருந்தவர்கள்,பிரிந்து அமர்ந்தார்கள்.

“விஷ்வா…”

“சொல்லு மா”

“நான் நேத்து ஜின்சிய பார்த்தேன்” சொல்லவும், புருவங்கள் இரண்டும் முடிச்சிட்டது.

“உன் தோழியா? அதுக்கு எதுக்கு நீ இப்டி பயந்த அருவி?”

“அவ விக்ராந்த்தோட லவர்” சொல்ல, அஷ்டகோணலானது அவனின் முகம்.

“நான் யார்கிட்டயும் சொல்லாத என்னோட கடந்த காலத்தை உங்கிட்ட சொல்றேன். அதுக்கப்றம் நம்ம புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்” என்றவளின் கைகளை இறுக பிடித்து உனக்காக நான் இருக்கிறேன் என சொல்லாமல் சொன்னான்.

இவர்கள் பிரிந்த பின்பு, மூர்த்தி தான் அருவியை கொட்டிக்கொண்டே இருந்தார்.

இந்த நிலையில் தான் ஆனந்தி வீடு தேடி வந்து பெண் கேட்க, அதுவும் பணக்கார வரனாக இருக்கவும் திருமணத்தை முடித்தே தீர வேண்டும் என அவா.

அதே போல் அருவியும் பிள்ளைப்பூச்சியாக போய்விட, நல்லதாய் போய்விட்டது மூர்த்திக்கு.

அருவியை பற்றின முழு விவரமும் மூர்த்தியால் ஆனந்திக்கு பகிர பட, அவளை செக்கப் அழைத்து சென்றனர்.

மரண வேதனையை கொடுத்தாலும், குடும்பத்திருக்காக அனைத்தையும் செய்தாள். மருத்துவர்கள் ஆக்கபூர்வமான பதிலை கூறவும், திருமண வேலைகள் சூடு பிடித்தது.

திருமணம், மூர்த்தியின் நிர்பந்தத்தோடு நடைபெற, பெண்ணிருக்கே உள்ள நாணம் எல்லாம் இல்லாது கடமையென ஒவ்வொன்றையும் செய்தாள்.

சந்திராவும் விழியும் எதுவும் பேசமுடியாதவகையில் அருவி கட்டிப்போட்டுவிட்டாள்.

எப்படியோ திருமணம் முடிந்து பெண்ணும் மாப்பிள்ளையும் கோவை சென்றுவிட, பெண் விட்டார்கள் உடன் வருகிறேன் சொன்னதற்கு விக்ராந்த் வேணாம் என்று முகத்திலடித்தாற்போல் சொல்லி விட, அமைதியாய் பெண்ணை மட்டும் அனுப்பிவைத்தனர்.

எந்த வித எதிர்பார்ப்புமின்றி அவனுடன் அவன் வீட்டிற்குள் நுழைந்ததுமே,” உங்களுக்காக நான் மேரேஜ் பண்ணிட்டேன் மாம். இனி என்னமோ பண்ணுங்க” என்றவன் மனைவியை விட்டேற்றியாக விட்டு விட்டு மாடி ஏறி அறைக்கு சென்றுவிட்டான்.

அருவியோ பொம்மை போல் அங்கே நின்றிருந்தாள். அவள் பக்கத்தில் வந்த ஆனந்தி,” அவன் கொஞ்சம் முசடு. போக போக சரியாகிடுவான்”சமாதானம் செய்து அவளை பூஜை அறைக்கு அழைத்து சென்றார்.

அருவி தனியாய் மாமியாரோடு விளக்கேற்றி சாமி கும்பிட்டவள், திருநீர் இட்டுக்கொண்டாள்.

மருமகள் குங்குமம் வைக்காததை பார்த்து,” என்ன பொண்ணும்மா நீ, முதல குங்குமத்தை வை” செல்லமாய் கடிய, அவளும் அவர் சொன்னது போல் செய்தாள்.

அன்றிரவே ஆனந்தி,” என் பையனை நீ தான் உன் கைப்பிடியில் வச்சுக்கணும்.தவர விட்டுடாத” பொறி வைத்து பேசியவர், மருமகளை மகனின் அறையில் விட்டுவந்தார்.

‘கடவுளே! என் பையனை பிடிச்ச சனி விட்டு போய்டணும் பா’ வேண்டுதல் வைத்தார்.

இங்கே அறைக்கு வந்தால், அறையோ காலியாய் இருந்தது.

விக்ராந்த் இல்லையென நினைத்து அமைதியாய் ஓரிடத்தில் அமர போக, அதற்குள் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் விக்ராந்த். காதினுள் இயர் பேட் மாட்டி இருப்பான் போல, பேசியவாறே உள்ளே நுழைந்தவன் அருவியை ஒரு பொருட்டாய் கூட சட்டை செய்யவில்லை.

அமருவதா? நிற்பதா ?புரியாமல் நின்றே இருந்தாள். இவனும் அரைமணி நேரத்திற்குமேல் போன் பேசியபடியே இருக்க,கால்வலியில் துவண்டு போனாள்.

“ஹோ, சரி பேபி. நாளைக்கு மீட்பண்ணலாம். பாய் லவ் யூ… உம்மா ” சொல்லி வைக்க, திட்டுகிறாள் அருவி.

இப்போது அருவிக்கு புரிந்தது, மாமியார் எதனை குறிப்பிட்டு இருக்கிறாரென. மனம் வெறுத்தது.

அருவியை திரும்பி பார்த்தவன்,” இங்க பாரு , எனக்கு இந்த மேரேஜ்ல சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல. நான் ஜின்சினு ஒருத்தியை லவ் பண்றேன். சோ ஸ்டே யுவர் லிமிட்ஸ்.என் கைக்கு சொத்து கிடைக்கவும் நான் டிவோர்ஸ் அப்ளை பண்ணிடுவேன்”சர்வ சாதாரணமாய் அவன் சொல்லவும், பெண் இறுகி போய் பார்த்தாள்.

அதிலும் அவன் காதலிக்கும் பெண் தன் தோழி என்று தெரிந்த நொடி, தோழிக்கு துரோகம் செய்தததை எண்ணி உள்ளுக்குள் வருந்தினாள்.

அதன்பின்னான நாளில், விக்ராந்த் அவனது வேலையிலும், அருவி என்ன செய்வது என்று புரியாமலுமே அவர்களது நாட்கள் நகர்ந்தது.

இப்படியான ஒரு நாளில் தான் ஜின்சியை விக்ராந்த்தோடு சந்திக்க நேரிட, விஷமாய் பேசி அருவியின் மனதை நோகடித்தாள் ஜின்சி.

“விக்ராந்த்! உங்க அம்மாக்கு வேற நல்ல பொண்ணே கிடைக்கலையா என்ன? என்ன வேணாம்னு சொல்லிட்டு எவன் கூடவோ ஒரு நாள் இருந்தவ கூட உனக்கு மேரேஜ் பண்ணிவச்சிருக்காங்க. பணத்துக்காக என்னவேணாலும் செய்ற கேஸ் இதுங்க” வார்த்தையில் விஷத்தை வைத்து கக்க, உள்ளாரே தோழியின் பேச்சில் நொறுங்கி போனாள்.

விக்ராந்த் அவளை புழுவை போல் பார்த்து, கடந்து விட்டான்.

அனைவரும் அருவியை கடந்து சென்றார்கள், அவளால் தான் எதையும் கடக்க இயலவில்லை.

ஜின்சி வந்ததற்கு பின்னான நாளிலிருந்து நிறைய நிறைய கெடுபிடிகள்.

எது செய்தாலும் செய்யாவிட்டாலும் குறை கண்டுபிடித்து திட்ட செய்தான் விக்ராந்த்.

வாழ்க்கையே வெறுத்தது அருவிக்கு. இருந்தும் வாழ்ந்தாள்.

காரணம் அவள் தந்தை. ஆனந்தி மூலமாக மாத மாதமானால் கணிசமான தொகை மூர்த்திக்கு செல்கிறது. அதை வைத்து தான் இப்போது குடும்பத்தை ஓட்டுகிறார்கள்.

மூன்று மாதங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் அத்தனை கோபமாக உள்ளே வந்தான் விக்ராந்த்.

வீடே அதிருமளவிற்கு,” மாம்” என உச்சஸ்தாயியில் கத்தினான்.

அவன் கத்திய கத்தலில் அறையிலிருந்து வெளியே எட்டி பார்த்தாள் அருவி.

“இப்போ எதுக்கு இந்த கத்து கத்துற விக்ராந்த்?”

“நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க மாம்?” கட்டுக்கடங்காத கோபத்தில் கேட்க,

“நான் என்ன பண்ணினேன்?”

“என்ன பண்ணல நீங்க? எனக்கும் அதோ அங்க நிக்கிற அவளுக்கு பொறக்க போற குழந்தைக்கு பின் தான் சொத்து எனக்கு வர மாதிரி எழுதியிருக்கீங்க.” சீற்றத்தோடு கேட்டான்.

“வக்கிலை போய் பார்த்துட்டு வந்தியா?”

“அங்க போக போய் தான் எனக்கு இந்த விவரமே தெரியவருது. எதுக்கு இப்படி பண்ணீங்க?உங்களுக்கே தெரியும் இந்த மேரேஜ் உங்களோட சேக்காக பண்ணியது. இதுல குழந்தை எங்க இருந்து…” நெற்றியை அழுத்த நீவினான் விக்ராந்த்.

மேலே இதனை பார்த்திருந்த அருவி,யாருக்கோ வந்த விருந்து என்பதுபோல் பார்த்திருந்தாள்.

“எத்தனை காலத்துக்கு நான் இருக்க போறேன். என் காலம் முடியறதுக்குள்ள இந்த வீட்டு வாரிசை பார்க்கணும்னு ஆசைப்படுறேன். இதுல என்ன தப்பை கண்டுட்ட விக்கி”

“மாம்… நான் ஜின்சியை லவ் பண்றேன். அவளோட மட்டும் தான்…”முடிப்பதற்குள்”வாயை மூடு விக்கி. இனி அவளோட பெயரை சொன்ன உன்ன என்ன செய்வேனே தெரியாது. அருவி தான் உன் ஃப்யூச்சர் “கட் அண்ட் ரைட்டாக சொன்னவர் இடத்தை காலி செய்தார்.

கோபத்தோடு ஜின்சியை காணச்சென்றவன், இரவு தாமதமாக தான் வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்நாளே, விக்ராந்த் அருவியை அழைத்து கொண்டு வெளியே செல்ல, பார்த்திருந்த ஆனந்தி ஆனந்தமானார்.

ஆனால் அவன் மகனோ அழைத்து சென்றது என்னவோ ஃபெர்ட்டிலிட்டி சென்டர்க்கு தான்.

பெயரை கண்டு அதிர்ந்தவள்,” இங்க எதுக்கு வந்திருக்கோம்?” கலவரத்துடனே கேட்க,

“ஹான், குழந்தை பெத்துக்க தான்” என்றவன் முன்னே சென்றுவிட்டான்.

அவன் பின்னே ஒரு வித நடுக்கத்துடன் சென்றாள் அருவி.

அவர்களின் நேரம் வரும்வரை காத்திருந்தவர்கள், மருத்துவரை காணச் சென்றனர்.

மருத்துவர் எத்தனை கூறியும் இயற்கையாக குழந்தை பெற்றுக்க முடியாதென கூறிய விக்ராந்த், ஐவிஎஃப் மூலமாக தான் பெற்றுக்கொள்ள போகிறோம் என்று முடித்து கொண்டான்.

அதனால் மருத்தவரும் அதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் அந்த ட்ரிட்மெண்டக்கான முறையை பற்றியும் சொன்னவர் கையெழுத்தை வாங்கினார்.

பின், அருவியை அழைத்து சென்று ஸ்கேன்,தைராய்டு டெஸ்ட் ,ஏயம்ஹெச் (A M H ), பிரோலேக்ட்டின்(prolactin) போன்ற டெஸ்ட்களை எடுத்தனர். விக்ராந்திற்கோ சீமென் டெஸ்ட் எடுக்கப்பட்டது.

அனைத்து டெஸ்ட்டையும் எடுத்து வீட்டிற்கு வந்தனர். எங்கேயும் வெளியே செல்ல கூடாது, மொபைல் உபயோகம் படுத்த கூடாது,பிறந்த வீட்டிற்கு செல்ல கூடாதுயென நிறைய கெடுபுடிகள் போட்டான் விக்ராந்த்.

அனைத்தையும் சகித்து கொண்டு வாழ்ந்தாள்.

அடுத்து அவள் தலைக்கு குளித்ததும், ஜின்சியுடன் அவளை அழைத்து சென்றான்.

அடுத்த நாளில் இருந்து அவளின் கருமுட்டையின் வளர்ச்சிக்காக ஊசி செலுத்தப்பட்டது. பொதுவாகவே பெண்ணின் கருப்பைக்குள் ஒரு கருமுட்டை வளர செய்யும். இது எதற்காக என்றால், முட்டைகளைக் கொண்டிருக்கும் நுண்ணறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க கருப்பைகளைத் தூண்டுகின்றனர்.நுண்ணறைகளைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் உள்ள பொதுவான ஹார்மோன்கள் ஃபோலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (FSH) மற்றும் லுடினைசிங் ஹார்மோன் (LH) கொண்டு மருத்துவர்கள் மருந்துகளுக்கு கருப்பைகள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதைக் கண்காணிக்கின்றனர்.

இது கிட்டத்தட்ட எட்டு முதல் பத்து நாட்கள் எடுக்கும்.அந்த நாட்களில் அருவி படாத பாடு பட்டாள். வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தாள்.

கருமுட்டைகளின் வளர்ச்சியை தெரிந்து கொள்வதற்கென அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. கணவனாக துணை நிற்க வேண்டியவனோ ஜின்சியுடன் இருந்துகொண்டான்.

கருமுட்டைகளின் வளர்ச்சியை பார்த்து, அடுத்த படியாக அருவிக்கு மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் (hCG) ஊசியை செலுத்தினர். அது எதற்காக என்றால், முட்டைகளை முதிர்ச்சி அடைய செய்வதற்கும், கருப்பை நுண்ணறைச் சுவரில் இருந்து வெளியேற உதவுவதற்கும் செலுத்துப்படுகிறது.

ஆரம்ப கால கட்டத்திலே அருவி துவண்டு போய்விட்டாள். இங்கு இத்தனை நடக்க இது எதுவும் தெரியாது இருந்தார் ஆனந்தி. தெரிந்திருந்தால் விட்டியிருந்துருக்க மாட்டார்.

மனைவியுடன் மகன் வாழனும் என்பதற்காக தான் இதனை செய்து வைத்தார். அதுவே அவருக்கு பாதகமாய் முடிந்தது.

அடுத்து, அவளின் பிறப்புறுப்பு கால்வாய் வாயிலாக முட்டைகளை எடுத்து சேமித்து வைத்தனர். அருவிக்கான ப்ராசஸ் முடிவடைந்த நிலையில் விக்ராந்தின் விந்தணுக்களை எடுத்து அதனை செறிவூட்டபடுத்தினர் . எடுத்த விந்தணுக்களில் ஆரோக்கியமான விந்தணுவை அருவியிடமிருந்து எடுக்கப்பட்ட முட்டைகளுடன் சேர்த்து அடை காக்கும் கருவிக்குள் வைத்தாகப்பட்டது.

அருவி அமைதியாய் அவளின் துணியை மடித்து வைத்துக்கொண்டிருக்க, அங்கே வந்த விக்ரம் ” மாம் கிட்ட இன்னவரைக்கும் எதுவும் சொல்லலை தானே” கடுமையான குரலில் கேட்க, இல்லையென தலையசைத்தாள்.

“சரி” என்றவன் நகர பார்க்க,” எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” கேட்டாள்.

“என்ன?”

” எனக்கு படிக்கணும்னு ஆசை. நான் பி.எட் பண்ணட்டுமா? வீட்லயே இருந்தா ஒரு மாதிரி இருக்கு” சொன்னவளுக்கு அவளின் நிலையை விவரிக்க முடியவில்லை. கணவனே என்றாலும் பெண்ணவளால் வாயை திறக்க இயலவில்லை.

என்ன நினைத்தானோ சரி என்று சென்றுவிட்டான்.

அருவியும் இந்த இடைப்பட்ட காலத்தில் கல்லூரி சென்று வந்தாள். இப்படியே சென்று நாட்கள் மாதங்களாய் செல்ல, இரண்டு மாதம் கழித்து அவளின் கருப்பைக்குள் கரு செலுத்தப்பட்டது. வலியில் துடித்துவிட்டாள்.

மருத்துவர்களின் உதவியதோடு அருவி கருவுற்றாள்.அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் வேண்டாமென மருத்துவர்கள் கூற கவனமாய் கேட்டுக்கொண்டாள் அருவி.

தனது இத்தனை கஷ்டத்திற்கு பலனாய், அவள் குழந்தை.

வீட்டில் வந்து சொல்ல, அருவியை கொண்டாடி தீர்த்தார். அருவியின் வீட்டிற்கும் இது தெரியப்படுத்த அவர்கள் வந்து பார்த்து விட்டு சென்றனர். ஆனால் விழிக்கும் மட்டும் அக்காளின் புன்னகையில் உயிர்ப்பு இல்லையோ என்று தோன்றியது.

மாதம் மாதம் செக்கப் சென்று குழந்தையின் வளர்ச்சி அடுத்து என்ன செய்ய வேண்டுமென கேட்டு கொண்டு வருவாள். விக்ராந்தும் ஜின்சியும் கூடவே வருவார்கள். ஆனால் உள்ள எல்லாம் வந்து பார்த்துக்கொள்ள மாட்டார்கள்.

அருவியின் சிகிச்சையில் காதலர்கள் ஊர்ச்சுற்றி காதலை வளர்த்தனர்.

இப்படி அப்படியென மாதங்கள் நகர்ந்து அருவியின் பிரசவத்தில் வந்து நின்றது.

அந்தோ பரிதாபம் அந்த நேரத்தில் மாமியார் மட்டுமே வீட்டிலிருக்க, கணவனோ ஜின்சியுடன் வெளிநாடு சென்றிருந்தான். ஜின்சி தான் பிளான் பண்ணி அவனை அழைத்து சென்றுவிட்டாள். அங்கே இருந்தால், ஏற்கனவே அருவிக்காய் பேசும் காதலன், அவளின் கதறல்களை எல்லாம் கேட்டால், எங்கே தன்னை விட்டு சென்றிடுவானோ என பயந்துவிட்டாள்.

இரவு நேரத்தில் வலி வந்துவிட ,கடினப்பட்டு அருவியை மருத்துவமனையில் சேர்த்தனர். விடியலில் தான் குழந்தையை ஈன்றெடுத்தாள்.

ஆனந்திக்கு பேத்தி வந்த குஷியில், கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எல்லாம் போனஸ் கொடுத்தார்.

பதினாறாவது நாளில் பூவினி என பெயரிட்டனர். விக்ராந்த் குழந்தை பிறந்த நாளிலிருந்து கண்ணில் கூட பார்த்ததில்லை.

சொத்து தனுக்கு கிடைத்திடும் என்ற எண்ணத்திலே மூன்று வருடம் ஓடிவிட்டது. சொத்தும் கிடைத்தபாடில்லை, ஜின்சியுடனான திருமணமும் நடைபெறவில்லை.

இது இப்படியே இருந்தால் ஆகாது என புரிந்து கொண்டவன், அன்னையிடம் பேசலானான்.

ஹாலில் அமர்ந்து குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த தாயை நோக்கி நடையிட்டான் விக்ராந்த் .

“மாம்…”

“சொல்லு டா” குழந்தையுடன் விளையாடியப்படி கேட்க,

“நீங்க சொன்னபடி உங்களுக்கு இந்த வீட்டு குடும்பவாரிசை குடுத்தாச்சி. ஆனாலும் ஏன் என்னால இந்த சொத்துல உரிமை கொண்டாட முடியல. எதையாவது விக்கணும்னா கூட உங்க சைன் தேவைப்படுது ” ஜின்சியின் பிறந்தநாளுக்காக அவளுக்கு பிடித்த ஒரு வீட்டை அவள் பெயரில் மாத்தலாம் என்றால், அது முடியவே மாட்டேங்கிது.

இன்னும் எத்தனை கெடுகுபிடிகள் தாய் போட்டு வைத்திருக்கிறார்கள் என்று கடுப்பானான்.

“இப்போ அதுல என்ன இருக்கு?” என்றவர்,” அம்மு! டாடி கூட பாட்டி கொஞ்சம் பேசணும் டா. நீங்க வெளிய விளையாடுறிங்களா” சொல்லி குழந்தையை அனுப்பி வைத்தார்.

“என்ன… என்ன இருக்கான்னு கேக்குறீங்க?” சீற்றம் ஏறியது அவனுக்கு.

“அப்புறம் வேற எப்படி கேக்க சொல்ற ? “

“நீங்க சொன்னிங்கன்னு தான் காசை கொட்டி புள்ளைய பெத்தேன்” சொல்லவும் அதிர்ந்து போனார்.

“என்ன சொன்ன?” அப்போது தான் சமையலறையிலிருந்து வெளிய வந்த மருமகளை பிடித்து,” இவன் என்ன சொல்றான்?” புரியாது கேட்டார்.

“நீங்க தான பிள்ளை பிறந்தா தான் எனக்கு சொத்துன்னு சொன்னதால வேற வழி இல்லாம ivf மூலமா குழந்தை பெத்துக்கிட்டோம்” சொல்ல,” அப்போ அருவிகூட வாழவே இல்லையா டா” கேட்டார்.

“எவனோ ஒருத்தன்கூட இருந்தவ கூட நான் எப்படி என் லைஃவை ஸ்டார்ட் பண்ணுவேன். அவளோட தகுதி என்ன என்னோட தகுதி என்ன ” கோபத்தில் கண்டமேனிக்கு பேச, சாட்டையால் அடித்தது போல் இருந்தது அருவிக்கு. விழுக்கென்று கண்ணீர் எட்டி பார்க்க, அவ்விடத்தை விட்டு நகர்த்துவிட்டாள்.

“என்ன பேச்சு டா பேசிட்ட” மகனை ஓங்கி அறைந்திருந்தார்.

“தங்கமான பொண்ணு டா தேனு. தங்கத்தை எடுத்து உன்ன மாதிரி ஒரு தகரத்துக்கிட்ட கொடுத்தது தான் தப்பு. போ போய்டு … என் மூஞ்சிலே முழிக்காத” கத்திவிட்டு நகர்ந்துவிட்டார்.

இரவு படுக்க போகையில் அருவியிடம் சென்றவர்,” உன்ன கல்யாணம் பண்ணா, அவன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சேன் மா. தப்பு செஞ்சிட்டேன் என்னை மன்னிச்சுடு தேனு மா” அவள் கைகளை பிடித்து அழுது விட்டார்.

அவரை சமாதானம் செய்து அவரை படுக்க அனுப்பி வைத்தாள். அடுத்தநாள் அவரின் உயிர் இவ்வுலகில் இல்லை.

விக்ராந்த், அன்னை இறந்ததற்கு பெரிதாய் அழட்டிக் கொள்ளவெல்லாம் இல்லை. கடமையாய் அனைத்தையும் செய்தான்.

ஆனந்தி இறந்த இரண்டு நாளிலே டிவேர்ஸ் பேப்பர் ரெடி செய்து அருவியிடம் கொடுத்து, கையெழுத்திடும் படி சொல்ல, அவளும் இந்த நரகம் வேண்டாமென கையெழுத்திட்டு கொடுத்துவிட்டாள்.

கடகடவென நாட்கள் சென்று ஆறு மாதத்தில் விவகாரத்தும் கிடைத்துவிட, கோவையே வேணாமென குன்னூர் வந்த அருவி, இப்போது விஷ்வாவின் மனைவியாகவும் ஆகிவிட்டாள்.

அவள் வாயாலே அனைத்தையும் கேட்டவன், அவளை இறுக்க அணைத்து கொண்ட விஷ்வா சில நிமிடங்கள் அப்படியே இருந்தான். அருவிக்கும் தான் இத்தனை காலமாய் மறைத்து வைத்து இருந்த ரகசியத்தை கூறியதில் மனபாரம் குறைந்தது போலான ஓர் உணர்வு!

“விஷ்வா! என்னை தப்பான பொண்ணா எல்லாரும் பார்க்கும்போது செத்து போய்டலாம் போல இருக்கும்” அணைப்பின் இறுக்கம் கூடியதே ஒழிய குறையவில்லை.

“ச்சு, இனி நம்ம வாழ்க்கையில வசந்தம் தான் அருவி மா” சொல்லி மென்மையாய் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அந்த முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.

“ஜின்சி சொல்றா அவகிட்ட ஏதோ எனக்கு தெரியாத முக்கியமான ரகசியம் ஒன்னு இருக்குன்னு சொன்னா விஷ்வா. எனக்கு பயமா இருக்கு பா” சொல்லவும்,” ஒன்னும் இல்லை டா. என்கிட்ட சொல்லிட்டல நான் பார்த்துக்கிறேன் விடு.” என்றான்.

“ம்ம்ம்…” சின்ன குரலில் சொன்னாள்.

“நேத்து மதியம் சாப்பிட்டது வா சாப்பிடலாம் அருவி. அம்மு வேற நம்மளை எதிர் பார்த்திட்டு இருப்பா” சொல்ல, மகளின் ஞாபகம் வர” அம்மு எங்க விஷ்வா?” கேள்வி கேட்டாள்.

” கவலைப்படாத. அருண் கூட அம்முவை வீட்டுக்கு அனுப்பிவிட்ருக்கேன் ” கூறவும் தாம் நிம்மதியானாள் அருவி.

அதன் பின் இருவரும் காலை உணவை முடித்து கொண்டு சில மணி நேரம் ஓய்வெடுத்தவர்கள் வீட்டிற்கு சென்றார்கள்.

Leave a Reply

error: Content is protected !!