Kadhalil nan kathaadi aanen

Kadhalil nan kathaadi aanen

KNKA – 23

அன்று இரவு, மெஸ்ஸில் சாப்பிட போகும் முன் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள் அனைவரும்.

 

சித், எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து விடும் என்பதால், கைஸ் ஒரு டென் மினிட்ஸ் நான் ஸ்வாதியோட தனியா பேசிட்டு வரேன் என்று சொல்லி , அவளை தள்ளி அழைத்து போனான்…

 

பிரபாவை தவிர அனைவரும் ஓ!!! என்று கத்தினார்கள்.

 

” டேய்!! இது எப்போ இருந்து டா…?என்றாள் பத்மினி.

 

“அவனே வந்து சொல்லுவான்…..”

 

“அதானே உன் வாயில் இருந்து ஏதாவது வந்துட்டாலும்?!”

 

ஷங்கரும், சூர்யாவும் “ஏய்! பிருந்தா அவ கூடவே தான இருப்ப?”

 

“டேய் ! சத்தியமா எனக்கும் தெரியாது டா….” என்று அலறினாள் அவளும்..

“ஸ்வாதி!! தேங்க் யூ டா…..ஆனா உனக்கு என் மேல் என்ன வருத்தம் இருந்தாலும் சொல்லிரு மா!”

 

“ப்ளீஸ் சித், அப்படி எதுவும் இல்லை! அதை பத்தி நாம பேச வேணாமே!”

 

“உன் கையை மட்டும் பிடிச்சுக்கவா? ஒன்னு சொல்லனும்…..”

 

“ம்ம்…என்று கையை நீட்டினாள்”

 

“நான் இதுவரை உன்கிட்ட நடந்துகிட்ட மாதிரி வேற யாருக்கிட்டயும் நடந்துக்கிட்டதில்லை, பீல் பண்ணது கூட இல்ல…சித் எப்போவும் ஸ்வாதிக்கு மட்டும் தான்….”

 

“அந்த வார்த்தையை கேட்டு உருகி விட்டாள் ஸ்வாதி! அதை அப்படியே கண்ணிலும் பிரதிபலித்தாள்!”

 

“அண்ட் முக்கியமான விஷயம்,இப்போதைக்கு நம்ம இதுக்கு பெருசா இம்போர்ட்னஸ் கொடுக்காம எப்போதும் போல இருக்கணும்.  இதனால் உன் படிப்பு எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது ஓக்கே…”

 

“அதெல்லாம் படிச்சுடுவேன், நீங்க வேற நல்லா படிக்கிற ஆளா இருக்கீங்க, அதனால கண்டிப்பா படிப்பேன்!”

 

“அண்ட் பிரெண்ட்ஸோடவே தான் இருக்கணும், எப்பயாவது இப்படி பேசிக்கலாம்…சரியா!”

 

“டபிள் ஓக்கே…”

 

சந்தோஷத்துடன் சென்றனர் இருவரும்…..

 

வந்தவர்களை ஒட்டி எடுத்தார்கள் ஷங்கரும் சூர்யாவும்!! அது எப்படி ப்ரோ, நீங்க ஸ்வாதிகிட்ட பேசியே பார்த்ததில்லை! எப்படி இப்படி எங்களுக்கு தெரியாம மெயின்டைன் பண்ணினீங்க…. அந்த திறமையை மட்டும் சொல்லிக் குடுங்க.  இந்த இரண்டு குரங்குகளை வைச்சுக்கிட்டு பிரீயா சைட் கூட அடிக்க முடியலை…….

 

“டேய்! போதும் டா பங்கம் பண்ணது, விட்ருங்க டா ப்ளீஸ்!” சித் சொன்னதுக்கு அப்பறம் தான் விட்டார்கள்.

 

செமஸ்டர் நெருங்குவதால் படிப்பிலும், நேரம் கிடைக்கும் போது சந்தித்துக் கொண்டும் நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

 

ஒரு வழியாக இரண்டாம் செமஸ்டரையும் எழுதி, அந்த வருடத்தை நிறைவு செய்தனர்.

 

சித், “ஹே, எல்லாரும் வந்திருங்க பங்க்ஷனுக்கு…. “.

 

விடுமுறைக்கு போவதற்கு முதல் நாள் ஒரு ஹோட்டலில் சித்தின் பெற்றோருக்கு திருமண நாள் விழா ஏற்பாடு செய்திருந்தார்கள்…

 

அவர்களுக்கு கார் ஏற்பாடு செய்திருந்தான் வந்து போக.

 

பங்கஷனுக்கு முதல் நாள் இரவு போனில் சித்தை அழைத்த ஸ்வாதி, “நா வரணுமா கண்டிப்பா?”

 

“ஏன் மா இப்படி கேக்குற?”

 

“இல்ல, எனக்கு ஏதோ ரொம்ப டென்ஷனா இருக்கு. நா வந்து எப்போதும் போல கன்ட்ரோல் இல்லாம ஏதாவது பேசி, உங்க பேரண்ட்ஸ்க்கு பிடிக்காம போய்டுச்சுன்னா?”

 

“நீ எப்படி இருந்தாலும் அவங்க பையன்க்கு ரொம்ப பிடிச்சு இருக்கு, அது எப்போவும் மாறாது. அதனால் வா… அண்ட் அவங்க தெரிஞ்சுக்கட்டும் இது தான் ஸ்வாதியோட கேரக்டர்னு…..”

 

“உங்க பேரண்ட்ஸ்க்கு பிடிக்கலைனா என்ன செய்யுறது?”

 

“மத்தவங்க என்ன நினைப்பங்களோனு கவலைப்பட்டா, நீ இந்த உலகத்தில ஒரு செயல் கூட செய்ய முடியாது டா.  உனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு நீ பண்ற ஏதாவது ஒரு விஷயம் பிடிக்கலைனு, நீ மாறனும்னு நினைச்சா, எத்தனை பேர் இருக்காங்க உனக்கு தெரிஞ்சவங்க அப்ப நீ உன்னை மாத்திக்கிட்டே இருப்பியா?  அது பாசிபிளா முதல்ல…அதனால தேவையில்லாதது எதுவும் இப்போ யோசிக்காத மா….”

 

“நாளைக்கு  உன்னை ரொம்ப ஆவலா எதிர்பார்க்கிற ஒருத்தன் இருக்கான் அவனை நினைச்சிக்கிட்டு கிளம்பி வா மா!”

 

” புடவை கட்டலாமா மருமகளே?” என்றாள் பத்மினி.

 

“அய்யோ அக்கா, நீங்க வேணா கட்டுங்க, என்னை விட்றுங்க” என்றாள் ஸ்வாதி. “நான் ஸ்பெஷலாக எதுவும் செய்த மாதிரி இருக்க கூடாதுனு நினைக்கிறேன் கா…”

 

தசர் துணியில் தைத்த ஒரு ஆகாய வண்ண சுடிதார் அணிந்து, முத்து தோடு, வளையல், செயின் என்று எலிகண்ட் பியூட்டியாக தயார் ஆனாள். பிருந்தா ஒரு சில்க் காட்டன் சுடிதாரிலும், பத்மினி சாப்ட் சில்க் புடவையிலும் கலக்கினார்கள்.

 

இன்று ரொம்ப எக்சைட் ஆகாமல் அடக்கி வாசிக்கணும், அவங்க பேரண்ட்ஸ் முன்னாடி அசடு மாதிரி பண்ணாதாடி என்று சொல்லிக் கொண்டாள்….

 

முடியுமா! ரொம்ப குஷ்டம்…  வாயை மூடினாலும் பேசுபவள், எப்படி அடக்கி வாசிக்கிறது??!!

 

நிர்மலாவிற்க்கு அந்த “எஸ்” பொண்ணு யாரு என்று அறியும் ஆர்வம் நாளுக்கு நாள் கூடியது. அவன் ப்ரண்டசை அழைக்க சொன்னால், கண்டிப்பாக அவனுக்கு பிடித்த பெண்ணையும் அழைப்பான் என்று கணக்கு போட்டவர்  சரியாக இந்த விழாவை யூஸ் பண்ணிக்கொண்டார்.

 

அவருக்கு பிரபாவை மட்டும் தான் தெரியும்… சித்தும் வேறு யாரை பற்றியும் சொன்னதில்லை. ஆவலாக காத்திருந்தார் நிர்மலா. உன்

பிரண்டசையும் இன்வைட் பண்ணு கண்ணா என்றபோது,

 

“என்ன ட்ரை பண்ற நிம்மி?” என்றார் குணாளன்.

 

“ஒன்னும் இல்ல! ஜஸ்ட் பார்க்கணும், ஒரு ஆர்வம் தான்…”

 

“வேண்டாதது எதுவும் நடக்க கூடாது,ஓக்கே!!!”

 

நிம்மி செய்வது எதிலும் பெரிதாக தலையிடமாட்டார் , ஆனால் சில விஷயத்தில் மிகவும் கறாராக இருப்பார் குணாளன். “ஓக்கே குணா! நா எதுவும் தப்பா பேச மாட்டேன், ட்ரஸ்ட் மீ…..”

 

கிளம்பி வந்த பத்மினியை பார்த்த பிரபா, “நா ஒழுங்காக இருக்கிறது உனக்கு பிடிக்கலை யா? ஏன்டி இப்படி டெம்ப்ட் பண்ற….”என்று அவளை சிவக்க வைத்தான்.

 

பார்ட்டி ஹாலை நெருங்க நெருங்க, ஸ்வாதிக்கு இதயம் மத்தளம் வாசித்தது…..எவ்ளோ இழுத்து இழுத்து மூச்சு விட்டாலும்  ரிலாக்ஸ் ஆக முடியவில்லை அவளால்….

 

வந்து இறங்கி அனைவரும் உள்ளே போகும்போது போது, சோதனைக்கு என்றே ஸ்வாதியின் செருப்பு பிய்ந்து போனது! அழுகையே வந்து விட்டது அவளுக்கு. இவ்ளோ பெரிய ஹோட்டல்ல, நல்லா ட்ரெஸ் பண்ணி செருப்பு இல்லாமல் நடந்தால் நல்லவா இருக்கும்?

 

நீங்கள் எல்லாரும் போங்க, நா இங்க லாபில இருக்கேன் என்றவளை,பரவாயில்லை வா என்றாலும்  எல்லாரும் வித்தியாசமா பார்ப்பாங்க என்று ஒத்துக்கவில்லை அவள்.

 

நா கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன், அப்போ பெருசா யாரும் பார்க்க மாட்டேங்க, எல்லாரும் பேச்சில மும்முரமா இருப்பாங்க…என்றதும் அவர்கள் போனார்கள்.

 

வாயிலே பார்த்தபடி அவர்களுக்காக காத்திருந்தவன், இவர்களை கண்டதும் வேகமாக வந்து வரவேற்றான்…

 

“ஸ்வாதி வரலையா?” மனதிற்குள் அவ்ளோ சொல்லியும் வரலையா என்று நினைத்தான்.

 

அவர்கள் நடந்ததை சொல்லவும். ஓ! சரி வாங்க உங்களை அம்மா அப்பாகிட்ட இண்ட்ரோ குடுக்கிறேன் என்று அழைத்து போனான்….

 

ரெண்டு பொண்ணுங்க முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை நிம்மி, பேரில் தான் கவனமாக இருந்தார். இரண்டும் “எஸ்” இல் ஆரம்பிக்கவில்லையே என்று சோர்ந்து போனார்…

 

அப்போது தான் மகன், “இன்னொரு பிரண்ட் கீழே இருக்காங்க நா போய் கூட்டிட்டு வரேன்” என்று பதிலுக்கு கூட காத்திருக்காமல் விரைந்தான்…. அவள் தனியாக இருப்பதை கேட்டவுடன் அவனுக்கு உடனே அவளை இங்கே அழைத்து வந்து விட வேண்டும் என்றிருந்தது!

 

கீழே போனால், முதல் நாள் எப்படி ஹாஸ்டல் போறது என்று முகத்தை பாவமாக வைத்து இருந்தாளோ அதே போல் இருந்தாள்…  மனம் துடித்தது அவளுக்காக, லூசு! இதுக்கு போய் யாராவது இப்படி வருத்தப் படுவாங்களா??

 

அவளும் வேறு எங்காவது என்றால், இதை பெரிதாக நினைக்க மாட்டாள்… சித் வீட்டு விசேஷம் என்பதால் தான் இவ்ளோ வருத்தம்….சே! இந்த செருப்பு இன்னிக்கு தான் பிய்யணுமா, அய்யோ!!!

 

“வா மேல போலாம்”

 

“இ..இல்….இல்ல செருப்பு!”

 

“எல்லாம் தெரியும் ,அது இருக்கட்டும் , நீ வா!”

 

“வெறும்  காலோடவா?”

 

“ம்ம்… உனக்காக வேணா நானும் செருப்பை கழற்றி விட்ருறேன்!” இருவர் செருப்பையும் கொண்டு போய் அங்கிருந்த செக்யுரிட்டி ரூம் அருகில் போட்டு விட்டு வந்து இவளை கூட்டிக் கொண்டு மாடி ஏறினான்.

 

அப்படியே அவனை கட்டிக் கொள்ள தோணியது அவளுக்கு….  “நீங்க இப்படி ஒரு லவ்வர் பாயா இருப்பீங்கன்னு நினைச்சே பார்க்கலை!” என்று சிரித்தாள்.

 

“எனக்கும் தெரியாது! ஸ்வாதியை பார்த்த அப்பறம் தான் தெரிஞ்சது…என்று சிரித்து வேற என்ன நினைச்ச என்ன பத்தி?”

 

“ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸர்னு நினைச்சேன்!”

 

“அது தப்பு! நா கொஞ்சம் அமைதி, அவ்ளோ தான்….”

 

அங்கே மேலே  நிம்மி, “ஓ!! என் பையன் போய் கூப்பிட்டா தான் அந்த பொண்ணு வருவாளோ” என்று முதல்  அடியை மாமியார் ரோலுக்கு எடுத்து வைத்தார்.

 

உள்ளே நுழைந்த இருவரையும் பார்த்த பலருக்கு தானாகவே தோன்றியது, அழகான ஜோடி என்பது தான்.

 

நிம்மி எதிர்பார்த்த மாதிரியே, அம்மா இது ஸ்வாதி எனவும்!! சற்றே மனம் சுணங்கி இருந்ததால், ம்ம்.. என்று சிரித்தவர் அவளை கண்டுக்கொள்ளாமல்  “சித்தப்பா உன்னை கேட்டார் சித் கண்ணா, போய் என்னனு கேளு என்று  வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார்….”

 

பார்ரா,மாமியார்க்கு ஏதோ டௌட் போலையே என்று நினைத்தாள்! அதனால் அவளாலும்  அவருடன் பேச்சை வளர்க்க முடியவில்லை…

 

இவள் ஒன்று நினைத்தால், அவர், இப்போவே கொஞ்சம் கூட பதமா நடந்துக்கணும்னு நினைக்கலையே என்று நினைத்தார்……

 

ஆனால் குணாளன், ஹாய் மா! என்று அவளிடம் சற்று பேச்சை வளர்த்து பின் அனுப்பி வைத்தார்….  மாமனார் ஓக்கே… மாமியார் கொஞ்சம் கஷ்டம் என்று நினைத்தாள் ஸ்வாதி.

 

பின் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டாள், கொஞ்ச நேரத்தில் அவளின் இயல்பான குணம் தலை தூக்க,கலகலப்பாக என்ஜாய்செய்தார்கள்.

 

இவளை பாராமல் பார்த்த நிம்மி, சரியான வாயாடி போல,இவளை போய் எப்படி என் சித் கண்ணாவுக்கு பிடிச்சு இருக்கும்?

 

குணாளனோ, ரொம்ப கலகலப்பான ஆளு போல, அதான் அமைதியான சித்தை ஈர்த்து இருக்கணும் என்று நினைத்தார்…

 

அனைவருமே கொஞ்சம் நேரமாக சித் எங்கே என்று தான் தேடினார்கள். கரெக்ட்டா உள்ளே வந்தான், கையில் ஒரு பாக்ஸ். நேரே சென்று ஸ்வாதியிடம் கொடுத்து விட்டு பின் அம்மா அப்பாவுடன் சேர்ந்து கொண்டான் …

 

“எங்க போன கண்ணா?”

 

“கடைக்கு மா! என் பிரண்ட் ஸ்வாதிக்கு ஒரு திங் தேவையா இருந்தது… அதான்.”

 

“இதுக்கு எல்லாம் நீ அலையனுமா…. நம்ம ராமு கிட்ட சொன்னா வாங்கிட்டு வந்து இருப்பாரே!”

 

“இட்ஸ் ஓக்கே மா!”

 

விழா முடிந்து, கிளம்பியவர்களை வழியனுப்பி விட்டு வருவதாக அவர்களுடன் சென்றான்.இவர்கள் இருவரையும் பின்னால் விட்டு அனைவரும் முன்னால் சென்றனர்.

 

“இன்னிக்கு ரொம்ப அழகா இருந்தா ஸ்வாதி. ஸேரி கட்டிட்டு வருவேனு ஆசையா இருந்தேன் என்றான்…”

 

“நீங்க சொல்லையே,சொல்லி இருந்தா உங்களுக்காக கட்டியிருப்பேன்” என்றவளை ஆசையாக பார்த்தான்.  சரியா இருக்கா செருப்பு என்றான்? அவன் போய் அவளுக்கு புது செருப்பு வாங்கி வந்திருந்தான், அதுக்கு தான் இடையில் ஆளை காணோம்!

 

“நீங்க ஏன் செருப்பு எல்லாம் வாங்க போனீங்க, எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா போச்சு, யாராவது பார்த்தா என்ன ஆகும்?”

 

நான் சொல்லி இருந்தா புடவை கட்டிட்டு வந்து இருப்பேன்னு எப்படி யோசிக்காமல் சொன்னியோ, அதே மாதிரி தான் இதுவும்…..உனக்கு நான் செய்யுறதுல எந்த பொருளா இருந்தா என்ன? வாங்கிட்டு வந்து கொடுக்கலைனா உன் சோக பேஸ் வந்து என்னை ரொம்ப கஷ்டப்படுத்தும்….

 

அவன் அவளிடம் பேசிவிட்டு, அனைவரையும் வழி அனுப்பி வைத்தான்.

 

அன்றிரவு , சித்தோட டேஸ்ட் இப்படி இருக்கும்னு நா நினைக்கவே இல்ல குணா! அந்த பொண்ணு கொஞ்சம் கூட அவனுக்கு பொருத்தமே இல்லை…

 

நிம்மி சொல்வது புரிந்தாலும் இல்லையே, நல்ல அழகா தான் இருக்கா.நான் கூட ஜோடி பொருத்தம் நல்லா இருக்குனு நினைச்சேனே! என்றார் குறும்புடன்.

 

“வேணும்னு நா சொல்றது புரியாத மாதிரி பதில் சொல்றீங்க…”

 

“ஓக்கே, உன் கிட்ட சொன்னா வருத்தப்படுவ, சொல்லவேண்டாம்னு நினைச்சேன்!  ஆனா சொன்னா தான் சித், அந்த பெண்ணுக்கு எவ்ளோ இம்போர்ட்னஸ் கொடுக்கிறான்னு உனக்கு புரியும்…

 

” பங்கஷனுக்கு நடுவில அவசரமா அவசரமா அவன் கடைக்கு போய் என்ன வாங்கிட்டு வந்தான் தெரியுமா, செருப்பு என்று சிரித்தார்…

 

“செருப்பா?? என்று நம்பவே முடியாமல் கேட்டார்…”

 

“ஆமா, நான் நம்ம சுந்தரை வழியனுப்ப கீழே போன அப்போ பார்த்தேன்! அவளோட பிஞ்ச செருப்பை கையில் எடுத்திட்டு போனதை…. அதனால தப்பா எதுவும் சொல்லி அவனை ஹர்ட் பண்ணிடாத, அதே மாதிரி அவன் எதுவும் உன்னை ஹர்ட் பண்ற மாதிரி சொல்ல வைச்சுடாத நிம்மி மம்மி என்று கலாய்த்தார்……..”

 

தானே கொண்டு வரும் மருமகள் என்றாலே , கொஞ்சம் பொஸ்ஸிவ் வெளிப்பட்டு விடும்,  இங்கே மகன் விரும்பும் , ரொம்ப ரொம்ப விரும்பும் பெண் என்றால்……..

Leave a Reply

error: Content is protected !!