அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 8

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 8
An kn-08
அந்த ஹோட்டலை விட்டு ஐராவின் நிழல் மறையும் மட்டும் பார்த்திருந்த கண்களில் என்ன இருந்தது?
வெறுப்பும் இல்லை. விருப்பமா? அதுவும் இல்லை.பொறாமை துளிக்கூட இல்லை. ஏதோ ஒரு விரக்தியில் ஒரு புன்னகை அந்த இதழ்களில் அவ்வளவே.
“தெரிஞ்சவங்களா மயூரி? ”
“ஹ்ம். தெரிஞ்சவங்க மாதிரிதான் இருந்தது அதான் பார்த்தேன். ரொம்ப வருஷத்துக்கு அப்றம் இங்க வந்திருக்கனா அதான்.”
“ஹ்ம் ஓகே.”
“காலேஜ் டைம் புள்ளா இங்கதான் விஷ்வா. லீவ் நாளைக்கு கூட இங்கேயேதான் இருப்பேன். ஏதாவது விஷேஷம்னு வீட்ல கம்பல் பண்ணுனா போய்டுவேன். இல்லன்னா அதுவும் இங்கதான்.”
“இன்னும் அந்த லைப மிஸ் பன்றிங்களா மயூரி? ”
“நோ நோ. அப்ப அப்டி இருந்ததோட கொஞ்சம் புத்தியா நடந்திருக்கலாம். அவ்ளோதான்.”
“ஹ்ம்…”
“ஏன் அப்படிக் கேட்டிங்க?”
“சும்மாதான். கிளம்பலாம் டைமாச்சு. இப்போ போனாதான் ட்ராபிக் மாட்டிக்காம போய்டலாம்.”
கூறியவன் முன்னே செல்ல அவன் பின்னோடு சென்றவள் நினைவுகள் அவள் மனதில் ஒரு வட்டம் அடித்து நிகழுக்கு வந்தது.
***
அவள் நினைவில் மூன்று வருடங்கள் முன்…
“உன்னை இவ்ளோ படிக்க வச்சேன் எதுக்காக? எனக்கு சப்போர்டிவா இருப்பண்ணு தானே? ஜஸ்ட் ஒரு விசிட் கூடவா உன்னால பண்ண முடியல? ‘
‘அண்ணன் காரன் பெட்டிப் படுக்கையோட போய்ட்டான். அக்காவை விட்டு தம்பி கல்யாணம் பண்ணி அவன் வேலை அவன் பார்த்திட்டு இருக்கான்.
ரெண்டு பேரும் பசங்கன்னு கொஞ்சமாச்சும் பொறுப்பா இருக்காங்களா?அதுவும் இல்ல. எல்லாம் நான் மட்டுமே பார்க்கனுமா?”
“எதுக்கு மனோ நீங்க சும்மா உங்க பீபி ஏத்திக்கிறீங்க,புரிஜிக்குற பசங்களுக்கு சொல்லித்தான் புரியனும்னு அவசியம் இல்லையே. எப்போவும் நாம சொல்லிட்டே இருக்கதுக்கு சின்னப் பசங்களா என்ன.”
“எனக்கும் வயசாகிட்டு போகுது புஷ்பா. நானும் ரெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறது தப்பா?”
“நீங்க தப்பில்லங்க. நம்மளால முடிலயா, எவ்ளோ முடிதோ அந்தளவுக்கு பண்ணிட்டு நிறுத்திப்போம். அதுக்கு மேல அவங்களுக்கு வேணும்னா அவங்க பார்த்துப்பாங்க. அவ்ளோதான்.”
“என்ன புஷ்பா இவ்ளோ ஈஸியா சொல்லிட்ட,எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேன்.”
“எனக்கு தெரியுங்க, அது அவங்களுக்கு புரிலயே.”
விசாலமான வரவேற்பறையில் சுற்றியும் நீள் நவீனரக சோபாக்கள் போடப்பட்டிருக்க அதில் அவர்களுக்கு எதிர் இருக்கையில் தன் ஒரு காலை மடித்து அமர்ந்து தன் அலைபேசியை விரல்களால் தட்டிக் கொண்டிருந்தாள் மயூரி.
இவளுக்கு எதிரே அவளின் அன்னை தந்தையாகிய மனோகர், புஷ்பா ஆகிய இருவரும் அமர்ந்திருந்தே இத்தனை பேச்சுக்களும்.
ஒருவார்த்தை பேசினாள் இல்லை. அதற்கான பதில் அவளிடம் இல்லாததே அற்கான காரணம். தந்தையின் ஆதங்கம் புரியாமல் இல்லை. இருந்தும் அவளும் என்னதான் செய்திட முடியும்.
அண்ணன் தம்பி இருவருமே அவரவர் விருப்பப்படி இருக்க, மகள் இவள் மட்டும் பொறுப்பா என்ன.
ஆனாலும் தந்தையின் இந்தப் பேச்சுக்கு காரணம் வேறாக இருக்க அமைதியாகவே இருந்தாள்.
“நம்மலால முடியுமானதை மட்டுமே தானேங்க பார்த்துக்க முடியும். சும்மா அவங்கள பேச விட்டுட்டு பார்த்துட்டு இருக்கீங்க. சொல்ல வேண்டிய தானே எதுக்கு சும்மா நாம பேச்சு வாங்கணும்?”
தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பிப் பார்த்தாள் மயூரி.
தம்பியும் அவன் மனைவியும் அமர்ந்திருந்தார்கள். இவள் பார்க்கவும் ,
“வாய வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா நந்து.”
“இல்லங்க நான்… ”
“உன்னை ஏதும் சொன்னாங்களா? இல்லல்ல, சோ ப்ளீஸ்.”
அக்காவின் முகத்தை ‘சாரி’ எனும் விதமாய் பார்த்து மனைவியை முறைக்க, அவனை இவள் முறைத்துவிட்டு முன்னே திரும்பினாள்.
“ப்பா,எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லாததை பண்ணச் சொல்லி கம்ப்ள் பண்ணாதீங்க. விருப்பம் இல்லாம இருந்து என்னால எந்த நஷ்டமும் வரவிட விருப்பம் இல்லை. உங்களால பார்த்துக்க முடிலன்னா இன்னும் யாருக்கும் கை மாத்தி விடுங்க.”
“எவ்ளோ ஈஸியா சொல்ற மயூரி.”
“ப்பா ப்ளீஸ், அவங்கவங்களுக்குன்னு ஒரு விருப்பம் இருக்கும்ல. அப்பா பண்ணுனதையே பசங்க பண்ணனும்னு இல்லையே.”
“அங்க போயும் இதே வேலையை தானே உங்கண்ணன் பார்த்துட்டு இருக்கான். அத இங்கேயே இருந்து பார்க்கலாமே.”
“ப்பா, அண்ணாக்கு அங்க இருந்து அங்க வேலை பார்க்கத் தான் பிடிச்சிருக்கு. இதோ இவனுக்கு உடல் நோகாம கம்ப்யூட்டரை தட்டி வேலை பார்க்க பிடிச்சிருக்கு. இதோ எனக்கு வீட்ல இருக்கத்தான் பிடிச்சிருக்கு. ஒவ்வருத்தங்க ஒவ்வரு விதம்ப்பா.”
“நீ வீட்ல என் கணக்கு வழக்கு மொத்தமும் பார்த்துக்கிற தானே, அப்போ அங்க வந்து அதையும் சேர்த்து பார்த்துக்கோன்னு தானே சொல்றேன்.’
‘எங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணுன்னு பையன் பார்த்தா அதையும் பண்ணல.’
இப்போதுதான் அவரின் மன உளைச்சளின் சரியான காரணத்திற்கு வந்தார் மனோகர்.
‘லவ் பண்றேன் சொன்ன, சரி மறுத்து பேசுனமா? அதற்கும் விருப்பப்பட்டு ரெண்டு வீட்லயும் பேசி முடிக்கலாம்னா பேசி முடிச்சு எல்லாம் முடிவுக்கு வர்ரப்ப சரி வராதுங்குற.”
திருமணமாகி மூன்று மாதமே ஆன மகனைப் பார்த்து,
“இதோ அக்கா என்ன ஆனா என்ன, எனக்கு என் வாழ்க்கை முக்கியம்னு அவன் இஷ்டத்துக்கு அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
பெரியவன் ஒருத்தன் பெயருக்குத்தான் இருக்கான். தங்க வாழ்க்கை பத்தி யோசிக்கிறானா? பார்க்குறவங்க எல்லாமே நம்மல என்ன மாதிரியான கேள்வி கேட்குறாங்க தெரியுமா?
எல்லாத்தையுமே நாம ரெண்டு பேரும் தானே தாங்கிக்கணும்?
எதாவது ஒரு வகையில நிம்மதியா இருக்க முடியுதா?பசங்கன்னு அதை தரீங்களா?”
“ப்பா ப்ளீஸ், கடைசில எல்லாமே என்னால ஆன மாதிரி பேசுறீங்க. எனக்கு பிடிக்காம என்னால வாழ முடியாதுண்ணுதான் இருக்கேன்.
தப்பு தான் நான் இப்டி இருக்கது தப்புதான். நான் பண்ணுன தப்புக்காக இப்டியே இருந்துட்டு போறேன். என்னை அந்த விஷயத்துல மட்டும் கம்பெல் பண்ணாதீங்க. அடுத்தவங்களுக்காக என்னால வாழ முடியாது. என் வாழ்க்கையை ஒவ்வருத்தங்களுக்கா புரிய வச்சு விளக்கம் கொடுத்துட்டே வாழவும் முடியாது.”
“நீ பண்ணிருக்கது அந்த மாதிரியான தப்புதான். கேட்குறவங்களுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும்.”
இத்தனை நேரம் கணவனுக்கு மட்டுமே பதில் கூறிக் கொண்டிருந்தவர் மகள் முகத்தையும் பார்க்கவில்லை, ஏன் வீட்டில் கணவன் தவிர்த்து யாருடனும் பேசுவதில்லை அவர். தன் மகளைப் பார்த்து கூறிவிட்டு
“உங்களுக்கு மாத்திரை போட டைமாச்சு எந்திரிங்க.” கனவனை எழச் சொன்னவர் தானும் எழுந்துக்கொண்டார்.
அன்னை தன்னோடு பேச்சை நிறுத்தி இரண்டு வருடங்களாகிறது. தேவைக்கு மட்டுமே பேசும் அன்னையைப் பார்த்தவள் பெருமூச்சொன்று விட்டு தானும் அவர்களோடு எழுந்துக்கொண்டாள்.
“உங்க சூப்பர் மார்க்கெட்டை பார்த்துக்கணும் அவ்ளோ தானே. ஓகே பைன். நாளைல இருந்து வரேன்.”
****
அன்று கூறியவள் தான் அன்றிலிருந்து இதோ மூன்று வருடங்களாக நடத்தி வருகிறாள். முதலில் விருப்பம் இன்றி தந்தைக்காக இருந்தவள் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக கற்று மனமும் அதன் பால் ஈர்க்கப்பட்டு இருந்ததையும் விட முன்னேற்றி இருக்கிறாள். இதோ புதிய கிளை ஒன்றையும் தொடங்குவது சம்பந்தமாக இங்கு, தான் கல்லூரி நாட்களை கழித்த ஊருக்கு தன் நண்பனின் விருப்பதிற்காக அவனோடு இணைந்து தொழில் செய்யும் நோக்கில் வந்திருக்கிறாள்.
‘விஷ்வா’ அவர்களது சூப்பர் மார்க்கெட்டுக்கு மூலபொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் நபர்களில் ஒருவன். சூப்பர் மார்க்கெட்டின் வரவு செலவுகளை நீண்ட நாட்களாக பார்ப்பவளுக்கு அவர்களுடனான தொடர்பு இன்றியமையாதது என்பது வரை தெரிந்து வைத்திருந்தாள்.
என்னவொன்று இத்தனை இளைமையாக இருப்பான் என்று எதிர்ப் பார்க்க வில்லை. இந்த மூன்று வருடங்களில் இருவருக்கிடையே நல்ல புரிதல் இருந்ததோடு வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொண்டிருத்திருந்தான்.
ட்ராபிக் தாண்டி வாகனம் சென்றுக்கொண்டிருக்க, மயூரியின் முகம் யோசனையாகவே இருப்பதைப் பார்த்தவன்,
“என்னாச்சு மயூரி? இங்க வந்ததுல இருந்தே டல்லா இருக்கீங்க. பார்த்த இடமும் சரியா அமையல.”
“அப்டில்லாம் எதுவும் இல்ல விஷ்வா.”
“பிடிக்கலைன்னா சொல்லுங்க மயூரி. நம்ம ஊர்லயே பண்ணலாம். வேற இடத்துல பண்ணுனா ஒரு சேன்ஜ் இருக்கும் ரீச் ஆகும்னுதான் பார்த்தேன்.”
“அதெல்லாம் ஏதும் இல்லை விஷ்வா, சும்மா பழைய ஞாபகம். எவ்ளோ மிஸ் பண்ணிட்டேன். அதை நினைச்சுட்டு இருந்தேன்.”
“மிஸ் பண்ணுனது நம்மளுக்கானதா இருக்காது மயூரி. அப்டியே நம்மளுக்கானதா இருந்தா கண்டிப்பா நம்மகிட்ட வந்துதான் ஆகணும்.”
“எனக்கானது இல்லனு நானே விட்டது எனக்கு திரும்ப கிடைக்க வாய்ப்பில்லையே.”
“அது உங்களுக்கானதா இருந்தா கிடைக்கும் மயூரி.”
“ஹ்ம்…”
“இப்போ என்ன யோசனை, அது உங்களுக்கானதா இருக்கும்னு இப்போ தோணுதா? ”
“தெரில விஷ்வா. பார்க்கலாம்.”
“உங்க அப்பா நேத்து பேசுனாங்க மயூரி, உங்க மனசு இன்னுமே உங்க லைப் பத்துன ஒரு முடிவை எடுக்க முடியாத இடத்துலயா இருக்கு? ”
“முடிவு சொல்ல பயம்மா இருக்கு விஷ்வா. இதுக்கு மேலயும் வீணா காலம் தாழ்த்த வேணாம்னு யோசிக்கிறேன். அப்பாவும் அம்மாவும் என்னை நினச்சு ரொம்ப வருத்தப்படறாங்க புரிது. அப்போவும்…
ப்ச் தெரில விஷ்வா.”
“மயூரி இப்டியே காலத்துக்கும் இருக்க முடியுமா என்ன, கண்டிப்பா உங்க மனசுகுள்ள ஒரு எண்ணம் இருக்கத்தானே செய்யும். அதை வெளில சொல்லத்தானே இத்தனை யோசிக்கிறீங்க.”
தன்னை இத்தனை புரிந்து வைத்திருக்கிறானே என அவன் முகம் பார்த்து “ஆமாம்” எனும் விதமாய் புன்னகைத்தாள்.
“ஒரு குறிப்பிட்ட டைம் நீங்களாவே எடுத்துக்கோங்க, அதுல,’கண்டிப்பா இந்த காலத்துக்குள்ள எனக்கான வாழ்க்கையை முடிவு பண்ணிப்பேன், இதுக்கப்றம் இதுதான் என் வாழ்க்கைனு.’ முடிவு பண்ணுங்க. இல்லன்னா எப்போவும் உங்களால முடிவெடுக்க முடியாது மயூரி.”
“ஹ்ம்…”
“பசங்கன்னா எப்டியோ சமாளிச்சுப்போம். பொண்ணுங்க இந்த ஏஜ் வர்றப்ப வீட்ல பேரன்ட்ஸ் வருத்தப்படறது ஞாயம் தானே. பசங்களே இப்போ இருபத்தைந்து வர்ரப்பவே கல்யாணம் பண்ணிடறாங்க.”
“ஹ்ம், சார் ஏன் இன்னும் பிரம்மச்சாரியாவே சுத்திட்டு இருக்கீங்க?”
“அது உங்களுக்கே தெரியும் மயூரி. அக்கா வீட்ல இருக்கப்ப என்னால அடுத்து யோசிக்க முடில. அம்மா இருந்தாக் கூட பரவால்ல. அக்கா தனியா பையன் கூட வீட்ல இருக்கப்ப என்னால அதை தாண்டி யோசிக்க முடில.”
‘இதற்கு தன் அண்ணன்மார்கள். எத்தனை வரம் இப்படி சகோதரன் கிடைப்பது.’ மனதில் மயூரி அவனை பெருமையாக நினைத்துக் கொண்டாள்.
“எங்கதை விடுங்க. நீங்க சொல்லுங்களேன் என்ன பண்ணலாம்னு. ஒரு சிக்ஸ் மன்ந்த் டைம் எடுத்துக்கோங்க. நடந்தது, நடந்துட்டு இருக்கது எல்லாம் வச்சு இனி எப்படி உங்க வாழ்க்கை அமைச்சுக்கிட்டா நல்லா இருக்கும்னு யோசிங்க. இன்னும் உங்களுக்குக்கான காத்திருப்புகள் இருக்குன்னு நினைக்குறீங்கன்னா, பாஸ்ட் லைப் போய் திரும்ப ஒன்ஸ் ட்ரை பண்ணலாம் தப்பில்லை. பட் எல்லாமே இந்த டைம் பீரியட்குள்ள மட்டும் தான்.’
‘என்ன சொல்றீங்க மயூரி? ஷால் வீ?”
அவனைப் பார்த்தவள்,
“ஓகே தான், பட் வீட்ல சொல்ல வேண்டாம். என்னால எந்த முடிவுக்கும் வர முயலைன்னா?”
“வர முடிலன்னா அதுக்கப்றமா பெரியவங்க முடிவு பண்றதுக்கு ஓகே சொல்லுங்க மயூரி.”
“விஷ்வா? ”
“ஆமா, இதுக்கப்றமும் வீணா காலத்தைப் போக்க வேணாம். அட்லீஸ்ட் பெத்தவங்களையாவது சந்தோஷப் படுத்தலாமே.”
“அவங்களுக்காக… ”
“வெய்ட் மயூரி. அவங்களுக்காக நாம வாழ தேவை இல்லை தான். நீங்க இந்த சூப்பர் மார்க்கெட்க்கு விருப்பப்பட்டா வந்தீங்க? ஆனா இப்போ? இதுவும் அதுவும் ஒன்னில்லதான். ஆனாலும் நம்ம ஈடுபாடோட எது பண்ணுனாலும் அது கரெக்டா நம்ம மனசுக்கு பிடிச்சதா அமையும்.
‘ஒரு பிரெண்டா இத்தனை நாள் பழகி உங்கள புரிஞ்சிக்கிட்டதை வச்சு சொல்றேன். நல்லதா அமையும். ஜஸ்ட் ட்ரை பண்ணலாம்.”
“ஓகே.”
“ஆர் யூ சுவர் ”
“யெஸ்”
அடித்த நொடியே அலைபேசி எடுத்து டையல் செய்திருந்தான்.
“ஹலோ அங்கிள்.”
“சொல்லுங்க தம்பி. போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா?”
“பார்திருக்கோம் அங்கிள், இன்னும் ரெண்டு இடம் சொல்லிருக்கோம் பார்க்கலாம்.”
“ஓஹ் சரிங்க தம்பி. அங்கேயிருந்து கிளம்பிட்டிங்களா?”
“ஆமா வந்துட்டே இருக்கோம், நைட் ஒன்பதுக்குள்ள வந்துருவோம். அங்கிள் நான் கால் பண்ணுனேன் முக்கியமா ஒன்னு சொல்லலாம்னு.”
“சொல்லுங்க தம்பி என்ன விஷயம்?”
“மயூரி ஆறுமாசம் டைம் கேட்டிருக்கா. அடுத்து என்னன்னு அவங்க முடிவு பண்றாங்களாம். அவங்களால முடிலன்னனா அதுக்கப்றமா நீங்க சொல்றது தான்.”
“நிஜம்மா தான் சொல்றீங்களா தம்பி?”
“ஆமா அங்கிள். இப்போதான் சொன்னாங்க. இதோ பக்கத்துல தான் இருக்காங்க.”
“சந்தோஷம் தம்பி இப்படியே இருந்துருவாளோன்னு தான் தினம் தினம் உள்ளுக்குள்ள ரணப்பட்டுட்டு இருக்கோம். புஷ்பா கேட்டான்னா ரொம்ப சந்தோஷப்படுவா.”
“சரிங்க அங்கிள், வந்து நேர்ல மீட் பண்ணலாம்.”
அழைப்பை துண்டித்து அவளைப் பார்க்க, அவளோ இவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
சிரித்துக்கொண்டே,”இல்லங்க நீங்க மனசு மாரிட்டீங்கன்னா அதான் சொல்லி வச்சுறலாம்னு…” கூறிவிட்டு அவளின் முறைப்பை பார்த்தவன் இன்னுமாகச் சிரித்தான்.
அருகிருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து அவனை அடிக்க வண்டியை ஓட்டிக்கொண்டே தடுத்தான்.
“முடிவெடுத்து கன்போர்ம் பண்ண முன்ன நீங்க பிக்ஸ் பண்ணிடீங்க விஷ்வா.”
“பிரெண்டுக்காக இதுகூட பண்ணலன்னா என்ன மயூரி. ”
“ரொம்பத்தான்… ”
அதன் பின் இருவரும் ஏதேதோ அந்நேரத்திற்கு ஏற்ப பேசிக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர்.
****
ஐரா தன்னைத் தானே தேற்றிக் கொண்டு தன் வாழ்வை சீரமைக்க எண்ணி, ஐந்து வருடங்கள் முன்னே இருந்த ஐரவாக மாற அகிலால் கொடுக்கப்பப்பட்ட கால இடைவெளிக்குள் பயணிக்கப் போகிறாள்.
அவ்விடைவெளியில் அவளுடன் நுழையும் நபர்கள், அவர்களுடனான பயணமும் எப்படி இவர்களை இனி வாழவைக்கும் பார்க்கலாம்…
தொடரும்.