உள்ளத்தின் காதல் நீங்காதடி -16
உள்ளத்தின் காதல் நீங்காதடி -16
காதல்-16
உடலில் எத்தனையோ உறுப்புக்கள் ஆனால் காதலுக்கு இதயத்தை கொடுத்ததின் நோக்கம் என்ன? இதயம் நின்றால் உயிர் நின்று விடும் என்பதாலா? இதயத்தோடு காதலுக்கு என்ன சம்பந்தம்?
…
அந்த பக்கம் வந்த பதிலில் சுணங்கியவள் “ஏன் ஃபோன் ஸ்விட்ச் ஆப்னு வருது, என்னவா இருக்கும்? அண்ணா பொதுவா ஸ்விட்ச் ஆப்லாம் பண்ண மாட்டானே” என்று வாய்விட்டே புலம்பினாள்.
அவளை அமைதியாய் பார்த்த உதய் “மீரா, ஃபோனை கொடு நான் ஒருத்தர் கிட்ட பேசணும்” என்றான்.
“இருங்க, நான் அம்மாக்கு கூப்ட்டுட்டு தரேன்” என்றவள் அவசரமாய் அவளது தாயின் எண்களை அழுத்தினாள், சற்று நேரம் கால் போகவே இல்லை, சிறிது போராட்டத்திற்கு பின் லைன் போக சரியாக அந்த நேரம் உதய் அவளது கையை தட்டிவிட்டுவிட.
அவள் அவனை முறைக்க, அவளுக்கு அவன் ஜாடை காட்ட தூரத்தில் டார்ச்சை ஆன் செய்தபடி சிலர் வருவது தெரிய, அவளது கையை பற்றியவன் டீ கடை காரருக்கு ஐநூறு ரூபாயை கொடுத்துவிட்டு, ‘தாங்கள் இங்கு வந்ததை கூற வேண்டாம்’ என்று உறைத்துவிட்டு அவளோட இருட்டில் மறைந்தான்.
ஒரு ஒத்தையடி பாதையை தேர்ந்தெடுத்து அதில் அவளோடு அவன் பயணத்தை தொடர்ந்தான். சிறிது தூரம் சென்றதும் அவனது கையை தட்டிவிட்டவள் “எதுக்கு இப்படி இழுத்திட்டு வந்த?, ரிங் போச்சு தெரியுமா? தேவையில்லாம இழுத்துட்டு வந்துட்ட” என்று கத்தினாள்.
“லூசாடி நீ, கிறுக்கி வேணும்னே உன்ன உங்க அம்மா கூட பேசவிடாத மாதிரி பேசிட்டு இருக்க, மண்டைல மாசால இல்லையா? நீயும் எல்லாத்தையும் பாக்குற தானே” என்றான் அவளுக்கு புரிய வைக்கும் பொருட்டு.
“ஆமா, ஆமா தேவையில்லாம வந்து உன்கூட போய் மாட்டிக்கிட்டேன் சை” என்றாள்.
“பார்ரா, ஏன் வந்தீங்க? நானா உங்களை வெத்தலை பாக்கு வச்சு அழைச்சேன்” என்றான் உதய் கோபத்தில்.
கோபத்தோடு வேக எட்டுக்களோடு தன் நடையை தொடர்ந்தாள் மீரா, அதில் உதய்யை முன்னேறி சென்றவள் சற்று தூரத்தில் ஒரு ஏரியா தெரிய, “உதய்” என்று அழைத்தாள்.
“என்ன?” என்றான் வெறுப்புடன்.
“அங்க பாரேன்” என்றாள் மீரா.
சிறு ஊர் போல் இருந்தது, கிராமமாகவும் இல்லாமல் நகரமாகவும் இல்லாமல் ஒரு ஊர். முன்னே சென்று பார்ப்போம் என்று தோன்ற முன்னே நடந்தான் மீராவோ அவனுக்கு பின் கிட்டதட்ட ஓடினாள்.
ஊருக்குள் புகுந்தவர்கள், மணி வேறு ஒன்றாகி இருக்க இந்நேரத்தில் யாரிடம் என்ன விசாரிக்க, அத்தோடு இந்நேரத்தில் போய் கதவை தட்டினால் தர்ம அடி நிச்சயம் என்று அறிந்ததால் அமைதியாய் நடந்தனர்.
சிறிது தூரம் நடந்ததும் மீராவே “கால் வலிக்குது, இதுக்கு மேல முடியாது எங்கையாச்சும் உக்காரலாமே, ப்ளீஸ்” என்றாள் பாவமாக.
உதய்க்கும் புரிந்தது ரொம்ப நேரமாக ஓடிக்கொண்டிருக்கிறோம், மீரா என்பதால் சமாளித்தாள் இல்லையென்றால் கஷ்டம் தான் அவனுக்கும் அவளது கஷ்டம் புரிய சரி என்று சுற்றும் முற்றும் தேடினான்.
ஒரு பூட்டிய வீடு தெரிந்தது அதன் முன் திண்ணை இருந்தது மேலே கூரைகளால் நெய்யபட்டு ஓரங்களும் அடைக்கப்பட்டிருந்தது, அவன் அங்கே செல்ல அவனோடு சென்றவள், அவன் அந்த வீட்டின் முன் நின்றதும் தெரிஞ்ச வீடு போல என்று நினைத்து அவனை பார்க்க.
“போ போய் ரெஸ்ட் எடு” என்றான் அவன்.
“தெரிஞ்ச வீடா? சரி சாவி கொடு” என்று கேட்க.
பொறுமையை கைவிட்டவன், “அறிவுக்கெட்டவளே” என்று கத்தியிருந்தான்.
எதற்கு கத்துககறான் என்று முறுக்கிக்கொண்டவள் “சாவி இல்லன்னா சொல்ல வேண்டியது தானே ஏன் கத்துறீங்க? பூட்டை ஒடச்சிடலாம்” என்றாள்.
இவள் தெரிந்து சொல்கிறாளா இல்லை தெரியாமல் சொல்கிறாளா, அவளை ஆராய்ந்தான், அதில் அதீத சோர்வு மட்டுமே தெரிய கோபத்தை கைவிட்டவன்.
“மீரா, நாம உள்ள போக போறதில்ல திண்ணை தான் இன்னைக்கு நைட் நமக்கு” என்றான்.
“ஏதேய், அப்போ இது உங்க தெரிஞ்சவங்க வீடு இல்லையா” என்றாள்.
“ம் ஆமா என் மாமியார் வீடு, இங்க இப்படி ஒரு ஊரு இருக்குறதே எனக்கு தெரியாது, வாயுல எதாவது வந்திடும் மூடிட்டு போய் படுடீ” என்றான்.
“கூல் கூல் பாஸ், நான் இந்த ஊரை காமிச்சதும் நீ எதுவும் சொல்லாம வந்தியா அதான் தெரியுமோன்னு… சரி சரி மொறைக்காதீங்க நான் போறேன், நோ கோபம்” என்று இழித்தவள் அந்த திண்ணையில் சென்று அமர்ந்து கை, கால்களை நீட்டிக்கொண்டாள்.
அவள் கை கால்கள் நீட்டி படுத்த அழகில் அவளை வைத்து கண் எடுக்காமல் பார்த்தவன் அவள் தன்னை பார்ப்பதை எண்ணி கடினபட்டு தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.
“குட் நைட் பாஸூ மார்னிங் பார்ப்போம்” என்று படுத்ததும் கண்களை மூடிக்கொண்டாள் அவள்.
‘கிராதகி எப்படி தூங்குறா பாரு, நைட்ல அந்த ரௌடிங்க வந்தா என்ன பண்ணுவாளாம்?’ என்று மனதில் அவளை திட்டியவன். அவளது முகத்தை பார்த்தான்.
பிறை நெற்றியில் உறவாடிய கருப்பு கற்றை முடிகள் அவளது முகத்தின் அழகை அதிகபடுத்தியது, வில் புருவத்தின் மத்தியில் அவள் காலையில் வைத்திருந்த பொட்டு காணமல் போயிருந்ததை குறிப்பெடுத்துக்கொண்டவன், தன் கரத்தால் அவளது நெற்றி பொட்டில் குங்குமம் வைக்க எழுந்த ஆவலை அடக்கி கூர் நாசியில் தன் பார்வையை பதித்தவனின் மனதில் மூக்குத்தி குத்தினால் அழகாய் இருக்கும் என்ற எண்ணம் தோன்ற சற்றே கீழிறங்கியவன் பார்வையில் சிறு மாற்றம்.
சாயம் பூசாமல் இயற்கையிலே சிவந்த அதரங்களின் சுவையை சுவைக்க நினைத்தவனின் உடலில் உள்ள செல்கள் அனைத்தும் அதை இப்பொழுதே செய் என்று உந்தி பேயாட்டம் போட, ‘சுட்டு தள்ளிடுவேன் ராஸ்கல்ஸ்’ என்று மிரட்டி மறுபடியும் உள்ளேயே தள்ளியவனின் நிலை படு மோசம் ஆனது அவளது கழுத்திற்கு கீழே பார்த்ததும்.
இளமையின் அழகு பெண்ணின் உடலில் பிரம்மன் படைத்த அழகில் சொக்கி போனவனின் நிலை தாருமாறான எண்ணத்தை அவனுள் விதைக்க பயந்தவன் பார்வையை கீழே இறக்க அங்கையும் சதி.
அவனின் மனதில் சட்டென இரு வரிகள்,
“பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி…
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி”
‘ஆண்டவா, இது என்ன ஒரு பிரம்மச்சாரிக்கு வந்த சோதனை, ஏன்யா இப்படி?’ என்று அழுதுவிடும் குரலில் அவன் ஆண்டவனிடம் கேள்வி கேட்க, அவரோ, “இப்படித்தான் சொல்லுவானுவ இந்த பயலுவ அப்றம் இஞ்சி இடுப்பழகி, மஞ்ச சிவப்பழகினு போய்ட்டே இருப்பானுவ” என்று அவரும் தன் வேலையை பார்க்க சென்று விட்டார்.
இந்த நேரத்தில் உதய்யோ பெண்ணின் சேலை ஆணின் வரமா? சாபமா? என்று மனதில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தான், அதன் இறுதியில் ‘அது பத்திலாம் தெரியலை ஆனா இப்போ எனக்கு சாபம் அம்பூட்டுத்தான்’ என்று அதற்கு தற்காலிக விடை கொடுத்தான்.
சேலையால் இடுப்பை மறைக்க அந்த தூக்கத்திலும் அவள் பட்ட பாட்டை பார்த்தவன், தனது சட்டையை கலட்டி அவள் இடுப்பு முதல் கழுத்து வரை மூடினான் “இப்போ அவளும் சேஃப், நம்மலும் சேஃப்” என்று பெறுமூச்சு விட்டான்.
*************
மித்ரனுக்கு ஒன்றும் புரியாத நிலை, தலையே வெடித்ததும் பொறுமையாக ஒவ்வொன்றாய் ஆராய்ந்தான்.
‘மீராவின் தோழியின் கூற்றுபடி சுபி சாட்சி கையெழுத்திட ஆள் தேடியிருக்கிறாள் மீரா ஒத்துகிட்டா. இதில் தவறில்லை எனில் சாட்சி கையெழுத்திட்ட உடன் வீட்டிற்கு அவள் வந்திருக்கணுமே’
‘சுபிக்கு இவள் சாட்சி போட்டாள்’ அவசரமாய் அந்த மேரேஜ் சர்டிபிக்கேட்டை ஆராய்ந்தான் சாட்சிகள் சுபிக்ஷா என்று இருந்தது, அதன் கீழ் கதிரவன்.
‘அப்போ சுபி இவளுக்கு சாட்சி போட்டாளா?’ என் தங்கையா இப்படி? மனது வெம்பியது, திருமணத்தை மட்டும் முடித்துவிட்டு காலேஜ் செல்லவே திட்டமிட்டனரா? அங்கு நடந்த கலவரத்தில் பயந்து ஓடிவிட்டனர்.
எப்படி யோசித்தாலும் மித்ரனுக்கு சுபியின் தந்தை சொன்னது உண்மையாகவேபட்டது.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிறது மாதிரி சுபியின் தந்தையின் எண்ணம் இங்கே அழகாக பளித்துக்கொண்டிருந்தது.
கிட்டதட்ட அவள் திருமணம் செய்து ஓடிவிட்டதாகவே முடிவு செய்துவிட்டான் மித்ரன். அவனும் என்னதான் செய்வான்? மீராவின் மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை ஒவ்வொரு சாட்சியாக வருகையில் குறையவே செய்தது.
மனம் எளிதாக ஏமாந்துவிடும், அதுவும் குழம்பிய தருணத்தில் மீன் பிடிப்பது எளிய காரியமே, அதை தான் சரியாக பிடித்து மித்ரனை கவிழ்த்திருந்தார் அந்த அரசியல்வாதி.
இங்கு தான் அரசியல்வாதி என்பதை நிரூபித்து அல்லவா விட்டார். தந்திரம் மகாபாரதத்தில் சகுனி செய்தது போல் இந்த தந்திரம் கைதேர்ந்தவர்களுக்கு மட்டுமே வரும்.
இந்த நேரத்தில் அவன் ஒன்றை மறந்துவிட்டான், மீரா அது நேற்று இரவு மீரா அவனுக்கு அழைத்து ஏதோ கூறவந்ததை, குழம்பிய மனம், அறிவை யோசிக்க விடுமோ?
நேராக வீட்டிற்கு வந்தவன் வாசலிலே அமர்ந்திருந்த தாயை கையை பற்றி உள்ளே அழைத்துசென்றான்.
அவனை புரியாது பார்த்தவர், “மீரா எங்கப்பா? தனியா வர?” என்று எதிர்பார்ப்போடு அவனை பார்க்க.
“என்னம்மா சொல்ல இனிமே வரவே மாட்டாள்ன்னு சொல்லவா? இல்ல ஓடிபோய்ட்டான்னு சொல்லவா?” என்று அவன் முடிக்க பளார் என்று அவன் அன்னை அடிக்கவும் சரியாக இருந்தது.
மித்ரன் தாயை வலியோடு பார்க்க, “என்ன வார்த்தைடா சொல்ற, அவ என் பொண்ணு அக்னி, அவ மீரா கண்ணனுகாக காத்திருக்கும் மீரா” என்றார் உரக்க.
அவன் அதிர்ந்து அவரை பார்க்க “என்ன நினைச்ச, இது தான்டா பெத்தவளுக்கும் கூட பொறந்தவனுக்கும் உள்ள வித்தியாசம், அவள பத்தி நான் சொல்றேன் கேளு, அவ மனசுல ஒருத்தன் இருக்கான் எப்போ இருந்துன்னுலாம் எனக்கு தெரியாது ஆனா ரொம்ப வருஷமா இருக்கான், அவனையே சுமந்துகிட்டு வாழ்ந்திட்டு இருக்கா.”
“நம்ம வீட்டுல யாராவது காதலுக்கு எதிரி இருக்கோமா? அவ லவ் பண்றேன்னு சொன்னா நாம அதை தடுக்க போறோமா? சொல்லு? இல்லைல நாம மூனு பேருக்குமே அவ நல்லா இருக்கணும்னு மட்டும்தானே அனுதினமும் வேண்டிகிட்டு இருக்கோம்? அது அவளுக்கும் தெரியுமே” என்றார்.
மித்ரன் சிந்தித்தான் ‘உண்மைதானே, காதலுக்கு இங்கு யாரும் எதிரி கிடையாதே, அவள் ஒருவனை விரும்பினாள் அவன் நல்லவனாய் இருக்கும் பட்சத்தில் அவனுக்கு மீராவை கொடுப்பதில் இவர்களுக்கு ஆட்சோபணை இல்லையே’
“நடுவுல எண்ணவோ நடந்திருக்கு, உனக்கு நியாபகம் இருக்கா? இடையில மீரா சில நாட்கள் எதையோ பறிகொடுத்தவள் போல் இருந்தது, நாம தினமும் அவளை கேட்டு கேட்டு ஓய்ந்து போய், பேசாம கல்யாணம் பண்ணி வைப்போம்னு முடிவு பண்ணி, அவளுக்கு காய்ச்சல் வந்ததே” என்றார்.
‘ஆம், இடையில் மீரா அப்படித்தான் இருந்தாள் நடைபிணமாக, ஏன்? எதற்கு? என்ன நடந்தது? எதுவும் இவர்களுக்கு புரியவில்லை, கேட்டு பார்த்தும் பதில் இல்லை, அவளை திருமண பந்ததில் இணைத்துவிட்டால் அந்த பொறுப்புகள் கூடி அவளை சரி செய்யலாம் என்றெண்ணி அவர்கள் அதை கேட்க. வேண்டாம் என்று எதிர்விணை காட்டியவள் கடும் காய்ச்சலால் அவதியுற்றாள்’
“அன்னைக்கு நைட் காய்ச்சலில் சொன்னா, உன் மேல நான் உயிரையே வச்சிருக்கேன், நீ தான் எனக்கு எல்லாம், நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை, உன்னை நான் மனசில நினைக்கல உயிரிலே கலந்துவச்சிருக்கேன், ஆனா ஆனா அன்னைக்கு உன்ன அ…ந்த போ…ட்ட…ல” சிறு மொளனம் “என்னால முடியல எனக்கு புரியுது என்னோடது ஒருதலை காதல் தான் நான் உன்னை காதலித்தேன் என்பதற்காக நீயும் என்னை காதலிக்கனும்னு எந்த அவசியமும் இல்லை, ஆனால் முடியலையே, உயிர்வேதனை தருதே” என்று என்ன வெல்லாமே பிதற்றினாள்.
“என்ன வேரொருத்தரை கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க, என்னால அது முடியாதே, உன்னை என் மனசுல இருந்து தூக்கி போடுறது சாத்தியமே இல்ல, அப்றம் எப்டி இன்னொருத்தருக்கு துரோகம் செய்வேன்” அப்படியே திரும்ப திரும்ப சொன்னா.
“அன்னைக்கு இது நடந்தப்போவே நான் புரிஞ்சுகிட்டேன், சரி மெதுவா இவளை சரி பண்ணிக்கலான்னு தான் விட்டேன், அவ அன்னைக்கு தவித்த தவிப்பு அவ பிறந்த இத்தனை வருஷத்துல நான் பாத்தது இல்ல அப்போ எந்த அளவுக்கு அவள் அவன் மேல் உயிரை வெச்சிருக்கணும்? என் வாழ் நாள் முழுமைக்கும் உன் நினைப்பு போதும்னு சொல்லி அழுதா, அப்போ எனக்கு புரிஞ்சது அவ மனசு மாறாதுன்னு”
“எவனோ சொன்னான்னு இப்படிபட்ட புள்ளய சந்தேக படுறியா நீ, என் புள்ள தீ டா தீ, அவளை எவனும் நெறுங்க முடியாது, அவ வருவா நீ வேணுனா பாரு” என்று அவர் முடிக்க.
வாயடைத்து போய் நின்றான் மித்ரன். தன் தாயின் புது அவதாரத்தில்.
உண்மையில் பெண் பிள்ளையின் உண்மையான பிரியம் தாயே, சிறு வயதில் தந்தையோடு அதிகம் செலவிட மனம் ஏங்கினாலும் வளர்ந்ததும் பிள்ளை மனம் தாயையே தேடும், விரும்பும், ஒரு தாயிற்கும் அப்படியே.
**************
இருளை போக்க வந்த ஒளி சுடர் அதிகாலை பொழுதின் ரம்மியம், குளிர் காற்று உடலை ஊசியென துளைக்க, குளிர் தன் ஆதிகத்தை செலுத்தி முடித்த தருணம், குளிருக்கு இதமாக கம்பிளியை போல், குளிருக்கு இதமாக கீழ் வானத்தில் மெல்ல எட்டி பார்த்தார் சூரியனார், அவரின் இந்த தரிசனத்திலே கண் விழித்தான் உதய், சட்டை இல்லாது வெறும் பனியனோட இருந்ததால் அவனுக்கு மட்டும் குளிர் சற்றே ஜாஸ்தி, பத்தாததிற்கு கொசு வேறு பாடாய் படுத்தியதில் சற்று நேரத்திற்கு முன்பு தான் அவன் கண் அயர்ந்ததே, கண்களை பிரித்து கீழ் வானம் சிவக்கும் அழகை பார்த்தவனுக்கு ரம்மியமாய் தோன்றியது,
“கூடலுக்கு பின்
கணவனை காண வெட்கி
முகம் சிவந்து
கண்கள் தாழ்த்தி
காஃபி என்று நீட்டும் புதுப்பெண்” போல தோன்றியது.
அதிலும் மீராவே தோன்ற ‘இவளை இம்சை முன்னலாம் கனவுல அசின், காஜல், கீர்த்தினு வருவாங்க, இப்போ இவதான்யா வர, சரியான இம்சை’ என்று அவள் முகம் பார்த்து செல்லமாய் திட்டினான்.
உறங்கும்பொழுது மென்மையாக முகத்தை வைத்துக்கொண்டு, சிறு பிள்ளையாய் தூங்குபவளின் அழகில் சொக்கித்தான் போனான் அவனும், அவன் போர்த்திவிட்ட சட்டை இப்பொழுது முழுதாய் அவள் உடலில் உறவாடிக்கொண்டிருக்க ஏனோ மனம் இதை கூறியது
“நல்ல வேலை சட்டைக்கு உயிரில்லை, இருந்திருந்தால், காதலுகாக காதலனின் கொலை எப்படி இருந்திருக்கும் என்று காட்டியிருப்பேன்”
தொடரும்…