அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 16

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 16
An kn-16
“ஹேய் கெளதம்…” அவ்விடமே அதிரும் வண்ணம் கத்திக்கொண்டு ஓடியவன் நொடியில் அவனை பிடித்திருந்தான்.
அவன் பின்னோடு ஓடிக்கொள்ள முடியாது எப்படியோ தட்டுத் தடுமாறி வந்த ரம்யாவும் நெஞ்சு படபடக்க அப்படியே அருகிருந்த இருக்கையில் அமர்ந்தார்.
“கெளதம், எங்கேயாவது அடி பட்டுச்சா?” அவன் கழுத்தோடு கையிட்டு தலை நிலத்தில் படாதவாரு பிடித்திருந்த அகில் அவன் உடல் முழுதும் ஆராய்ந்தவாறே கேட்டான்.
“நோ ப்பா அம் ஆல்ரைட்.”
கெளதமின் அருகே அப்படியே படுத்து விட்டான். அவனை பிடிக்க வந்து அகிலின் முலங்கையில் நல்ல அடி. நிலத்தில் கை ஊன்றியிருப்பான் போல.
“சாரிப்பா.”
அப்படியே அவனை நெஞ்சோடு சேர்த்துக்கொண்டான். “ரொம்ப பயந்துட்டேன் டா. ஒன்ஸ் உங்க அம்மாவையும் இப்டியே துரத்திட்டு வந்துதான் விழுந்தா. இன்னிக்கு வரைக்கும் அவளுக்கு அதோட வலி இருந்துட்டே தான் இருக்கு. அதான் ரொம்ப பயந்துட்டேன் கெளதம்.”
“நாந்தான் நீங்க கேட்ச் பண்ணிருவீங்கன்னு ரொம்ப பாஸ்டா ஓடிவந்துட்டேன் ப்பா.”
“டேய் எழுந்து ரெண்டு பேரும் இங்க வா. தண்ணிலேயே இருக்கீங்க.
என்னால அங்க வர முடில.”
அப்போது தான் மூச்சுவாங்க ரம்யா அமர்ந்திருப்பதைக் கண்டான்.
மெல்ல எழுந்தவன் கையில் மிகை வலி. காட்டிக்கொண்டால் சின்னவனும், ரம்யாவும் வருந்துவார்கள் என, “வா பாட்டிகிட்ட போலாம்.” என அவனையும் அழைத்துக்கொண்டு சென்றான்.
விழா முடிந்து வீட்டுக்கு வர, ரகுராமோடு ரம்யாவும் வந்திருந்தார் வீட்டுக்கு.
“ஹேய் பாட்டி” என அவரைக் கட்டிக்கொண்டு சந்தோஷித்தான் சின்னவன். பின்னோடு வந்த அகில்,
“ம்மி கொஞ்ச நேரம் தூங்கணும். எழுப்பாத. நானே எழுந்து வரேன்.”
எனக் கூறி உள்ளே செல்ல, சரியென்றவர் கெளதமோடு அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்.
அறைக்கு வந்தவனோ ,’சத்யாவோடு பேசியவை ஐராவிற்கு தெரிந்தால் என்ன நினைப்பாள், இதை கூறித்தான் அவன் அவளை புரிந்துக்கொள்ள வேண்டுமா? என்ன லவ்வோ. ச்சே… ‘
அழைபேசியை கட்டிலில் தூக்கிப்போட்டவன் அங்கிருந்த ஒரு ஷார்ட்ஸ், ஆர்ம்லெஸ் டீஷர்ட் எடுத்து போட்டுக் கொண்டு கட்டிலில் அப்படியே விழுந்தான்.
‘அவளுக்கு பிடித்திருக்கிறதே. அவள் கண்களில் எத்தனை முறை பார்த்திருப்பான் அத்தனை குதூகளிப்பாளே. உனக்குதானே பிடிக்கணும் ஐரா. எனக்கு பிடிக்கலன்னா என்ன,ஆளும் அவன் மூஞ்சியும்.’
அந்நேரம் இவன் முகத்தை ஐரா பார்த்திருக்க வேண்டுமே…
எப்போதும் ஏனோ இருவருக்கும் இருவரையும் பிடிப்பதே இல்லையே. இருவருக்கும் இருவரும் சலைத்தவர்கள் இல்லை என்பதாலா அல்லது வேறேதுமா?
இத்தனைக்கும் இருவருக்குள்ளும் பேச்சுக்கள் கூட இருந்ததில்லை. அதை விட இருவரும் எப்போதும் நேருக்கு நேர் காணும் போது காட்டிக்கொண்டதும் இல்லை.
அகில் அப்படியே இரண்டு மணிநேரம் தூங்கியிருப்பான். ரம்யாவோடு பேசி விளையாடி பொறுத்துப்பார்த்த சின்னவனோ மெல்ல அகிலின் அறைக்கு வந்தான். அவன் மீதேறி தூக்கத்தை களைத்தவன் அவன் கன்னத்தை வலிக்க கடித்துவிட்டு இறங்கி ஓடி வந்தான். தூக்கம் களைந்தவனோ அவனை துரத்திக்கொண்டு வர கெளதமோ முன்னறை தாண்டி நீச்சல் குளத்தை நோக்கி ஓடினான்.
பதறிய அகில் இன்னும் வேகமாய் ஓட ‘பிடித்திடுவானா’ பதட்டத்தில் தவறி விழப்போனவனை எப்படியோ பிடித்து அவனும் சேர்ந்து இருவருமாக விழுந்தனர். இருவரும் ஓட அவர்களைக்கண்டு பின்னோடு ரம்யாவும் பழையன நினைவோடு பதட்டத்தில் ஓடி வந்திருந்தார்.
ரம்யா அருகே வந்தமர அவர் கண்களின் கண்ணீரைக் கண்டவன் பயந்து போனான். “பாட்டிமா சாரி.”
“உங்கம்மாக்கு தெரிஞ்சா உண்டில்லன்னு பண்ணிருவாடா.”
“அப்போ நீ நாம விழுதுட்டோம்னு அழல்லயா?”
“நாராயணா…” இது கெளதம். வாய் பொத்திச் சிரிக்க அவனை மடியமர்த்திக்கொண்டவன்,
“இந்தக் கொடுமையை யாருகிட்ட போய் சொல்வேன். மருமகளுக்கு பயந்து அழுற மாமியார் நீதான் ம்மி.”அவரை சகஜமாக்கினான்.
“டேய் இன்னிக்கு நேத்திக்கா அவளுக்கு பயம், எப்போ என் மடில உட்கார்ந்து என்னையவே அதட்டுனாளோ அப்போல இருந்தே பயம்தான்.
“சரிதான்.”
“ஏன்டா அகி நம்மலால அப்டி சந்தோஷமா இனி இருக்கவே முடியாதா? “
“அப்டில்லாம் இல்லம்மி. நாம ஒன்ன தானே இழந்தோம், ஆனா அவ?”
“அவளுக்கு நாம இருக்கோமே.”
“அது அவளுக்கு பத்தலைனு நினைக்குறேன்ம்மி. போதும்னா தான் நம்மகூட சகஜமா எப்போவும் போல இருந்திருப்பாளே.”
“யாருதான் இழக்கல அகி,ஆனாலும் கொஞ்ச நாளைக்கு அப்றம் சகஜமா ஆகிடலையா?”
“ம்மி இப்போதான் கொஞ்சம் அவளுக்காக வாழலாம்னு முடிவெடுத்திருக்காணு நினைக்குறேன். அது அவளுக்கு நல்லதா அமஞ்சுறட்டும், அப்றம் நா, நீ,அப்பா நம்ம கெளதம் எல்லாம் ஜாலியா இருக்கலாம்.”
அகிலின் நெஞ்சில் சாய்ந்து இவர்கள் பேசிவதை கேட்டுக் கொண்டிருந்தாலும் எதுவும் இடையில் பேசவில்லை கெளதம்.
“அப்போ உன் லைப்? “
“என்னை சும்மா விட்ரவா போறீங்க?எனக்காக நானே தேடிக்கிட்டது என் பின்னாடியே வந்துட்டேதானே இருக்கு. அப்படியே ஏறி பயணத்தை ஆரம்பிக்க வேண்டியதான்.”
“என்னமோ சொல்ற, அப்பாவும் இதையேதான் பேசிட்டு இருக்காங்க. நீ சந்தோஷமா இருக்கதை நான் பார்க்க வேணாமா?”
“நான் சந்தோஷமா தானே இருக்கேன்ம்மி.”
“என்கிட்டேயே மறைக்குற, நான் உன்ன கடைசியா பார்த்ததுக்கும் இன்னிக்கும் உங்கிட்ட எவ்ளோ வித்தியாசம்னு என்னால புரிஜிக்க முடிது அகி.
உனக்கு இப்போவாவது என்ன வேணும்னு புரிஜிக்க முடிலயா?”
“ம்மி…”
“அகி நான் உன் அம்மாடா. வாழணும்னு வாழ கூடாது. வாழுற வாழ்க்கை வசந்தமா இல்லன்னாலும் வறண்டு இருக்க கூடாதில்லையா? உனக்கான சந்தோஷம்னு நீ அனுபவிச்சது தப்பு தான். ஆனாலும் அதைக்கூட முழுசா பண்ணுனியா? அம்மாவா இதெல்லாம் பேசக்கூடாது தான். எதுலயுமே நிலையா இல்லாம எப்டி வாழறது? முப்பது ஆகியாச்சு. இப்போவும் உனக்கு என்னவேணும்னு புரியலன்னா என்ன சொல்றது.’
‘அந்த பொண்ணோட பெத்தவங்க கவலை தான் என்னையும் இப்படி நிம்மதி இல்லாம பண்ணுதோ என்னவோ. அவங்களுக்கும் எவ்ளோ கஷ்டம் இருக்கும், பொண்ணு இப்டி தனியா வாழுறாளேன்னு.”
“என்னவோ பண்ணு. ஆனால் நீ சந்தோஷமா இருக்கணும் இப்போ அதுமட்டும் தான் எனக்கு வேணும். எனக்கு அது மட்டும் போதும்…”
அமைதியாக இருந்தான் அகில். கெளதம் அவன் நெஞ்சில் உறங்கியிருந்தான்.
“போ போய் இவனை பெட்ல தூங்க வை. தேவையா இவனுக்கு இப்டிலாம் இருக்கணும்னு. ரெண்டு பக்கமும் பந்தா ஆகப்போறதென்னவோ இவன் தானே? நம்ம கூடவும் ஒட்ட விடல இல்லன்னா.”
“ம்மி இவன் எப்போவும் எங்கூடத்தான், யாருக்காகவும் இவனைவிட்டுத்தர போறதில்லை. அவ தனிச்சிருக்காளேன்னு
தான் அவ கூட விட்டுட்டு இருந்தேன். இவனால அவ சந்தோஷத்தை இழக்க கூடாது. இவன் காரணமாகி அவளுக்கான சந்தோஷம் கிடைக்காம இருக்கவும் கூடாது.
என்னால பேலன்ஸ் பண்ணிக்க முடியும். அவளால முடில. அவ்ளோதான்.”
“ஹ்ம்.” கெளதமின் தலைகோதியவர் கொண்டுபோய் படுக்கவை.
பயந்துட்டான் நல்லா.”
“ஹ்ம்.”
அவனோடு படுக்கைக்கு வந்த அகில் மாலையில் உறங்கி எழுந்ததினால் உறக்கம் ஏனோ வரவில்லை.
ஐராவோடு நேற்று இரவு பேசியது இப்பொழுதோடு ஒருநாள் கடந்து விட்டது.
கோபமெல்லாம் எப்போதும் நீண்டு போக விடமாட்டாள். எத்தனை கோபப்பட்டாலும் அவளாகவே பேசியும் விடுவாள் அவள் பிழையே இல்லாத போதும். ஆனால் இன்று அவள் பேசவே இல்லை.
மனம் கேளாது அழைத்தான், அழைப்பு பிஸியாக இருந்தது. மீண்டும் அழைப்போமா எண்ணியவன், இப்போதும் வெயிட்டிங்கில் தன்னுடைய என் காட்டியிருக்குமே அவளே அழைப்பாள் என விட்டுவிட்டான். ஆனால் அவளோ அழைக்கவே இல்லை. தலையணையில் தலைவைத்து இமைகள் மூடிக்கொண்டான்.
ஏழு வயது சிறுமி அப்போதும் மழலை மாறாத சிரிப்போடு,அதே வயது குறும்போடு அவனோடு சேர்ந்து விளையாடிய ஞாபகங்கள் பயணங்களில் பின்னோடு வரும் நிலவாய் கூடவே வந்தது.
****
“என்ன மயூரி இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க?
“சும்மாதான், வாங்களேன்.”அருகே இடம் காட்டி அவனையும் அழைத்தாள். அவர்களின் சூப்பர் மார்க்கெட்டின் மேல் மாடியில் ஒரு ஓரமாய் பாதைகளில் ஓடும் வண்டிகளை பார்த்தாவாரு அமர்ந்திருந்தாள் மயூரி.
“தனியா இப்டி வந்து உட்கார்ந்திருக்கீங்க. பயமா இல்லையா?”
“பயமா? அது இருக்கு எக்கச்சக்கமா.”
“அப்றம் எப்டி? எனக்கே காலெல்லாம் வெடவெடங்குது.”அவள் அருகே அமர்ந்துக்கொண்டே கூறினான் விஷ்வா.
“உங்களுக்கு, அதுவும் நான் நம்பணுமா?”
“ஏன் நான்லாம் பயப்பப்படக் கூடாதா என்ன? நீங்களா முடிவு பண்ணுனா எப்டி?”
“அப்போ பேஸ்மென்ட் வீக்கா?”
“ஹ்ம்…”
“என்ன திடீர்னு கால் பண்ணி எதுக்கு வரச் சொன்னீங்க? “
“வரச் சொல்லக்கூடாதா?”
“அப்டில்லாம் இல்ல மயூரி. எப்போவும் பேசுற டோன் இன்னிக்கு உங்க வாய்ஸ்ல இருக்கல. அதான்.”
“இல்ல விஷ், இன்னும் ஒன் வீக் தான் இருக்கு.”
“எதுக்கு? “
“இல்ல நீங்கெல்லாம் எனக்கு முடிவெடுங்கன்னு டைம் கொடுத்து.”
“ஓஹ்!”
‘அட சரியா நேரம்லாம் குறிச்சி வச்சிருக்காளே’
“ஹ்ம் அதுக்கு இப்போ என்ன?இன்னும் ஒன் வீக் இருக்கு தானே?”
“நான் ஆல்ரெடி டிசைட் பண்ணிட்டேன். பட் எனக்கு சரியா சொல்லத் தெரில, என்னால அதை நினச்சு சந்தோஷப்பட முடில.”
“ஹ்ம்.”
“நான் முன்ன இருந்த சந்தோஷம் கூட எனக்கு இப்போ இல்லை. அதான் என்ன பண்ணலாம்னு கேட்கத்தான்… “
“நான் இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு. உங்களுக்கு சந்தோஷம், நிம்மதி கிடைக்கும்னா தான் அது உங்களுக்கு நிலைச்சிருக்கும். அப்படியான ஒரு முடிவை தானே நீங்க எடுக்கணும்.”
“ஹ்ம்…”
“ஒன்னும் பிரச்சினை இல்ல. இன்னும் ஏழு நாள் இருக்கா,இந்த ஏழு நாளைக்கும் டேலி மார்னிங் அப்றம் நைட் உங்களுக்காக கொஞ்சம் நேரம் எடுத்து பொறுமையா கண்ண மூடி உங்க மனச நீங்களே கேளுங்க. அமைதியா அது என்ன சொல்லுதுன்னு பாருங்க. தினம் ஒரு முடிவு சொல்லுதா இல்ல தினமும் ஒன்னையே சொல்லுதா அதைவைச்சு உங்களுக்கே ஒரு முடிவுக்கு வரலாம்.”
அவன் பேச அவனையே பார்த்திருந்தாள் மயூரி.
“என்னாச்சு? ரொம்ப மொக்கையா ஐடியா சொல்றனா?”
“ச்சே ச்சே அப்டில்லாம் இல்லை.’அப்படியே பேச்சை மாற்றினாள். ‘முன்ன இப்டி மொட்டைமாடில உட்கார்ந்திருப்பேன்.”
“உங்க வீட்லயா?”
“ஹ்ம் ஹ்ம். காலேஜ்ல.”
“ஓஹ்!”
“ஐந்தாவது மாடில இருப்போம்.”
“நைட்ல எல்லாம் அல்லோவ் பன்வாங்களா?”
“நோ, நான் போகணும் சொன்னா கூட்டி போயிடுவான். ஒரு த்ரீ டைம்ஸ் போயிருக்கேன்.”
“ஹ்ம் “
“போய் நிறையா பேசணும் தோணும். பேசிருக்கோம். ரெண்டு பேரும் ரெண்டு பேரோட விஷஸ், லைக்ஸ்னு. நம்மளுக்காக பேசினமான்னு கேட்டா…என்ன பேசினோம் தெரில.”
“ஹ்ம்.”
“அவனை கைட் பண்ணுனா ரொம்ப புடிக்கும். பட் யாரையும் அல்லோவ் பண்ண மாட்டான். சஜெஸ்ட் கேட்டுப்பான் நிறையா… ஆனால் முடிவெல்லாம் அவளோடதாதான் இருக்கும். அது அப்போவே எனக்கு நல்லாவே புரிஞ்சது. அதுக்கும் சேர்த்து சொல்லுவான். இதே வேற யாரா இருந்தாலும் அடிதடிதான்னு.”
“ஹ்ம்”
“சின்ன சின்ன ஆசை கூட அழகா பண்ணுவான், ரசிக்க வச்சுத்தான் அனுபவிக்க விடுவான். அதான் அவங்கிட்ட இருக்க பிளஸ். அவனுமே அப்டித்தான். ரசிப்பான் ரொம்ப ரொம்ப. ஆனா…”
அவள் இடை நிறுத்தவும் என்னவென்பதாய் அவளைப் பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்தாள்.
“ஏதோ நமக்குள்ள இல்லையேன்னு தான் நான் அவங்கிட்ட கேட்டேன், அதுக்கு அவனும் அந்த டைம்ல அப்டி கேட்கவும் என்னால மறுக்க முடில. தப்புன்னு கூட தோணல. புரிஜிக்க தானே,அதோட லைஃப்க்கு அது சப்போர்ட்டா தானே இருக்கப்போகுதேன்னு சரி சொல்லிட்டேன்.”
“ஹ்ம்.”அதற்கு மேல் அவனுக்கும் கேட்க வேண்டும் எனும் மனநிலை இல்லை. அவளுக்கும் சொல்லி விளக்க அவளுக்குமே புரியா நிலை. அவள் கதை கேட்க யாரும் சிரிக்கத்தான் செய்வார்கள். ஆனால் பார்வைக்கு…
உள்ளுக்குள் எத்தனை காயப்பட்டு, ரணப்பட்டு, நொறுங்கி, அசிங்கப்பட்ட போதிலும் பார்க்கும் பார்வைக்கு தானே இங்கே எல்லாம் சரியாக முறையாக இருக்க வேண்டும். இவளும் பார்வையில் கீழாய் போக தானே வலை விரித்து மாட்டிக்கொண்டாள்.
“போலாம் மயூரி, டைமாச்சு. அப்பா ரெண்டு தடவை கால் பண்ணிட்டாங்க.”
சரியென்று அவனோட வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். “எதையும் மனசுல போட்டுட்டு குழப்பிக்காம, நிதானமா இருக்கப்ப முடிவெடுக்கணும். அதுவும் எப்போவும் நைட் டைம்ல எந்த முடிவும் எடுக்கக் கூடாது.”
சரியென்று கூறினாள். அன்றைய தினம் அவள் உறக்கமும் இருளோடு ஒளிந்து கொள்ள, அவள் நினைவேடு படமாய் பல காட்சிகளை அவள் நனவுக்குள் கொண்டு சேர்த்தது.
அப்போதாவதேனும் நிஜம் அறிந்து முடிவெடு என்று கூறத்தானோ…!