உள்ளத்தின் காதல் நீங்காதடி -26

உள்ளத்தின் காதல் நீங்காதடி -26

காதல்-26

 

தாலி கட்டியவுடன் அவன் பக்கத்தில் நான் நிற்க,ஏனோ தெரியவில்லை என் முகத்தில் புதிதாய் தோன்றிய வெட்கம் என்னும் உணர்வில் என் முகம் ஜொளிக்க, அவனின் கடை கண் பார்வையில் விழ்ந்தது என் மனது – இதுவே என் முதல் காதல். பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணத்தில் அவன்பால் காதல் கொண்ட அந்த மனைவியின் கதை.

 

***

 

உதய் சென்று ஒரு மணி நேரம் கழித்தே உள்ளே வந்தாள் மீரா, உதய்யின் நலன் மேல் அக்கறை கொண்டவளால் அதற்கு மேல் முடியாமல் போக, தன் மொபலை ஆன் செய்தவள் அவனுக்கு அழைத்தாள். 

 

முழு ரிங் சென்றது அவன் எடுக்கவில்லை, மறுமுறை முயற்சித்தாள் கட் செய்தான் அதோடு நிறுத்தியவள் அவளது வாட் சாப்பை திறந்து அவனது சேட்டிற்குள் நுழைந்தாள் அத்தனை மெசேஜ் அவனிடமிருந்து, குட் மாரினிங் துவங்கி குட் நைட் வரை அதில் மொத்தமும் அவனது பாசமே அவளுக்கு தெரிந்தது, அது தனக்கு கொடுத்து வைக்கவில்லையோ என்று அவள் மனம் கதற, அதை கிடப்பில் போட்டவள் அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள் ‘நீட் டூ டாக் வித் யூ, ப்ளீஸ் கம் ஹோம்’ என்று அது சென்றடைந்ததை தெரிவிக்கும் பொருட்டு இரண்டு டிக் காட்டியது,  அது ப்ளூவாக மாற காத்திருந்தாள். 

 

ப்ளூவாக மாறியது. ஐந்து நிமிடம் எந்த மாறுதலும் இல்லை, மீராவின் இதயம் வெளியே வந்து துடித்தது, உதய்யிற்கும் இப்படித்தானே இருந்திருக்கும்,  அவள் நிராகரிப்பின் போது. மனது ஊமையாய் கதறியது. மீராவை போல் உதய்யிற்கு கல்நெஞ்சம் கிடையாது. 

 

ஐந்து நிமிடம் கழித்து டைப்பிங் என்று வரவே அவனது பதிலுக்காய் திகிலுடன் அவள் காத்திருக்க,  அவனது பதில் இதோ. 

 

‘ஏ இவ்ளோ நேரம் பேசுனது உனக்கு பத்தலையா? ஆனால் எனக்கு போதும்,  இதுக்கு மேல கேக்க என் மனசுல தெம்பில்ல”

 

அவனின் பதிலில் புதைந்திருக்கும் வலி அவளை பலமாய் தாக்கியது. கண்களின் கண்ணீர் அவளை நினைக்க கண்ணீரை துடைக்கும் சக்தி கூட இல்லாது அமர்ந்திருந்தாள். 

 

அடுத்த ஐந்தாவது நிமிடம் அவனிடமிருந்து இன்னொரு மெசேஜ். 

 

‘ஏன்டி இப்படி அழுது உன்னையும், என்னையும் சேர்த்து கொல்லுற, கண்ண துடச்சுட்டு போய் தூங்கு, என்னால இப்போ வரமுடியாது நான் காலையில வரேன், குட் நைட்’

 

ஏனோ மனது சற்று லேசானது, அவனால் தன்னை எப்பொழுதும் வெறுக்கமுடியாது, பெண்ணின் மனம் கர்வம் கொண்டது, மெலிதாய் நகைத்தது ‘ஹம்…சரி’ பதில் அளித்தவள் கண்களை துடைத்துக்கொண்டு படுத்துக்கொண்டாள். 

 

இங்கு உதய் அவனது ஸ்மார்ட் ஃபோனின் தொடுதிரையை வெறித்துக்கொண்டிருந்தான்,  அவனின் மனதில் பல யோசனைகள், அவன் மனது பல திட்டம் போட்டது. 

 

ஸ்மார்ட் போனை கையில் எடுத்தவன்,  அதில் சில முக்கியமான வேலைகளை செய்தவன்,  அந்த வேலையை முடித்ததும் ‘ம்…வரேன் செல்லம், உன்ன அள்ளிட்டு போக’ என்று மந்தகாச புன்னகையுடன் நினைத்தவன்,  காரின் பின் சீட்டில் படுத்துக்கொண்டான். அவனது சிந்தனை அவனின் திருமணத்தின் மறுநாளிற்கு சென்றது. 

 

*********

 

உதய் மீராவின் திருமணத்திற்கு மறுநாள் அவசர வேலையாய் உதய் கிளம்பும் முன் மித்ரனை அவன் சந்தித்தான். அவனிடம் இந்த ஒன்றரை மாதத்தில் மீரா சந்தித்த வெளியே சென்ற இடங்கள் மற்றும் மனிதர்கள் பற்றி தெரிந்துக்கொண்டான். 

 

எல்லாம் சரியாகவே இருந்தது அந்த ஒரு ஃபோன் கால்லை தவிர. முதலில் தன்மையாய் பேசிய மீரா, அதே அழைப்பு தொடர்ந்து வர கோபத்துடன் பேசியிருக்கிறாள் அதன் பின் மறுநாள் வெளியே சென்று வந்திருக்கிறாள் அதில் தான் ஏதோ நடந்திருக்கிறது. அது என்னவாக இருக்கும்?

 

அவனது போலீஸ் டீமின் உதவியுடன் அது என்ன இடம் என்பதை அறிந்துக்கொண்டவனால் அது யார் என்று அறியமுடியவில்லை, அவன் வெளியூர் சென்றதால். இருந்தும் காவல் துறையில் அவனது நண்பன் ஒருவனிடம் இதை ஒப்படைத்தவன், மீரா சென்று வந்த காஃபி ஷாப்பின் சீசீடீவி ஃபுட்டேஜை செக் செய்ய சொல்லியிருந்தான். 

 

ஆனால் அது ரிப்பேர் சரிசெய்து ரீட்ரைவ் செய்ய ஒரு வாரம் ஆகும் என்பதை அவர்கள் உரைக்க அவர்களுக்கு வேறு வழி இல்லாமல் காத்திருந்தனர் 

 

இன்று தான் வந்திருக்கிறான்,  நாளை அது யாரென்று பார்க்க சொல்ல வேண்டும் என்று நினைத்தவன் அவனது நண்பனுக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினான். அதோடு கண்களை மூடி தூங்கிவிட்டான். 

 

************

 

மறுநாளின் விடியலில் முதலில் விழித்த உதய், நேராக வீட்டை அடைந்தவன் தங்களது அறைக்கு சென்று பார்த்தவனுக்கு மீராவின் சயன தோற்றம் கண்களை கவர்ந்தது. 

 

சேட்டின் நைட் ரோப் அவளது மேனியின் வடிவத்தை அப்பட்டமாய் எடுத்துக்காட்ட தன்னையே நொந்துக்கொண்டவன். 

 

‘எவ்ளோ சோகத்துல இருந்தாலும் க்ளாமர் ஏத்துற மாதிரி தான் ட்ரஸ் போடுவா போல, அவனவன் இருக்குற கண்டிஷன் புரியாம, அப்றோ நடக்க போற சேதாரத்திற்கு நான் பொறிப்பில்லை, ஹம்…நமக்கு குடுத்து வச்சது அம்புட்டுத்தான்’ என்று பெருமூச்சு ஒன்று விட்டவன். 

 

போர்வையை எடுத்து அவளுக்கு அவசரமாய் போற்றினான் தன் மேல் அவனுக்கு அத்தனை நம்பிக்கை, கழுத்து முதல் கால் வரை அவளை மூடியவன்,  ‘இனிமே இப்படித்தான் நீ தூங்கணும்’ என்று மனதோடு பேசியவன் குளியலறையில் அடைந்துக்கொண்டான். 

 

அவன் சென்று சரியாக பத்து நிமிடம் சென்றே கண் விழித்தவள் தன் மேல் இருந்த போர்வையை பார்த்தவாரு யோசிக்க குளியலறையில் வந்த சத்தம் உதய்யின் வருகையை அவளுக்கு உணர்த்த அமைதியாய் எழுந்து பெட்டில் அமர்ந்துக்கொண்டாள். 

 

குளித்து முடித்து டவலோடு வெளியே வந்தவன், மீரா விழித்து கொண்டதை பெரிதாக கண்டுக்கொள்ளாது அவனது வாட்ரோபை திறந்து தனக்கான உடையை எடுக்க, அவனது இந்த அவதாரத்தை முதல்முறை கண்டவளுக்கு ஒரு புது வித உணர்ச்சி தோன்றியது, காமம் அனைவருக்கும் சமம் மற்றும் சொந்தம்,  பெண் மட்டும் என்ன அதில் விதிவிலக்கா? 

 

உதய்யின் அகன்ற புஜங்கள் புடைத்த தோள்களையும், விரிந்த மார்பையும், கூடுதல் சதைபிடிபுகள் இல்லாத சமமான வயிற்று பகுதியையும், நீர்மணிகள் வழிந்தோடிய உடலையும் கண்டவளுக்கு அவனின் கம்பீரத்தின் மீது ஆசை வந்தது உண்மை. அது ‘என் கணவன் அவன்’ என்ற மனைவிக்கு மட்டும் உரிதான பார்வை. 

 

அவளின் பார்வை மாற்றத்தை புரிந்துக்கொண்டவனாக “ஓய்…பொண்டாட்டி, இது பழிக்கு பழிடி” என்றான் உல்லாசமாக. 

 

அவள் பேந்த பேந்த முழிக்க அவளது தலையை தட்டியவன் “நீ போட்ருக்க  ட்ரஸ் என்னை டெம்ப்ட் பண்ணுது, சோ,  நான் உன்னை டெம்ப்ட் பண்ணிட்டேன், சரியா போச்சு” என்றான். 

 

அவனது பதிலில் வெட்கம் அவளை பிடிங்கி தின்றது இப்படி வெளிபடையாய் பார்த்து மாட்டிக்கொள்வதா?அதுவும் அவனுக்கே தெரியுமளவு. தலையில் அடித்துக்கொண்டாள் அவள். 

 

“சரி…கொஞ்சம் வெளிய போறியா?” அவன் கேள்வியாய் நிறுத்த, அவள் அவனை பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்தி என்ன எதுக்கு என்றாள். 

 

“அப்றம் உன் இஸ்டம்” என்றவன் துண்டை அவிழ்க்க போக பயந்தவள் ஓரே ஓட்டமாக திரும்பியும் பாராது பாத்ரூமை அடைந்து கதவை அடைத்துக்கொண்டாள், அவனது சிரிபொலி அவளை துரத்தியது. 

 

அவசர அவசரமாய் ஒரு வித படபடப்போடு அனைத்து காலை கடன்களையும் முடித்து, குளித்து முடித்தவள் அதன்பிறகே கவனித்தாள் துண்டு கூட எடுக்காமல் குளிக்க வந்த தன் மடதனத்தை எண்ணி தன்னையே தலையில் அடித்துக்கொண்டாள். 

 

‘இப்போ என்ன பண்றது, அழுக்க ட்ரஸையும் ஊர வச்சுட்டேன், அவன்கிட்ட தான் ஹெல்ப் கேக்கணுமா? ஐய்யோ’ அவள் புலம்பிக்கொண்டிருக்க. 

 

குளிக்கசென்று வெகு நேரம் ஆகியும் அவள் திரும்பவில்லை, தண்ணீர் சத்தமும் கேட்காததால் அவளிடம் விரைந்தவன் கதவை தட்டியிருந்தான், 

 

“மீரா …” அவன் கத்தியே அழைக்க. 

 

“ஹம்…” என்ற முனங்கள் அவளிடமிருந்து. 

 

“எதாச்சும் பிராப்ளமா?”

 

“இல்ல…ட்ரஸ் எடுத்திட்டு வர மறந்துட்டேன்” என்றாள் அவள் வேறு வழி இல்லாது. 

 

நமட்டு சிரிப்பு சிரித்தவன், “நா எடுத்து தரவா?”

 

“ஹம்…”

 

“என்ன…கேக்கலை”

 

‘பக்கி வேணுணே பண்ணுது ச்சை’ அவனை தாளித்தவள் “உதய் ப்ளீஸ், என்னோட ட்ரஸ் எதாவது எடுத்துக்கொடு” என்றாள். 

 

“ம்…தட்ஸ் குட்” என்றவன் அவளது உடைகளை எடுத்துவந்து மறுபடியும் கதவை தட்ட. 

 

“நீ திரும்பி நில்லு ட்ரஸை மட்டும் நீட்டு நான் வாங்கிகிறேன்” என்றாள் அவள் தெளிவாக. 

 

அவளை மெச்சிக்கொண்டவன் ‘விவரம் தான், பயங்கரமான ஆளுங்க இந்த பொண்ணுங்க’ என்று நினைத்தவனாக “முடியாது நான் அப்டியே தான் கொடுப்பேன்” என்றான். 

 

“ப்ச்…விளையாடாத ப்ளீஸ், என் நிலைமை அப்படி திரும்பி நில்லு” என்றாள். 

 

“சரி, திரும்புறேன், வெளில வந்து ஒரு கொரியன் கிஸ் கொடுப்பியா” என்றான். 

 

அதில் அதிர்ந்தவள் “நோ…” என்று கத்தினாள். 

 

“நானும் நோ, சரிதான் போடி” என்றான். 

 

சற்று நேரம் இருபக்கமும் அமைதி மீராவே ஆரம்பித்தாள் “அ…து என் ட்ரஸ்”

 

அவன் காது கேட்காதது போல் நடிக்க “கிஸ்லாம் கொடுக்க முடியாது, ஒலுங்கா ட்ரஸை கொடு” என்றாள். 

 

“நானும் ட்ரஸை குடுக்க முடியாது” என்றவன் சவகாசமாக பெட்டில் அமர்ந்துக்கொள்ள பொறுத்து பார்த்தவள் பின்,  “சரி” என்றாள். 

 

“எதுக்கு சரி” என்றான் உதய் அமர்த்தளாக. 

 

“கிஸ்ஸூக்கு” உதய்யின் பிடிவாதம் அவள் அறிந்ததே, அதை விட அவனின் மனதை நன்கறிந்தவள் அவனுக்கு எப்படி விடை கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும். 

 

அவளது பதிலில் மயங்கியவன் அவளிடம் விரைந்து அவளது ட்ரஸை நீட்டினான் சொன்னது போலவே அவன் திரும்பி நிற்க அவள் வந்து உடையை பெற்றுக்கொண்டாள். 

 

“சரி அப்படியே ஓடி போ” அவள் உரைக்க. 

 

உதய்யின் மனதில் ஒரு டயலாக் ‘நாங்க போவோம், இல்ல இங்கையே மல்லாக்க படுப்போம், உனக்கென்ன’ அதை நினைத்து அவன் சிரிக்க. 

 

அதை கவனித்தவள் “என்ன ஏதோ வில்லங்கமா நினைச்சு சிரிக்குறியா?” தவளை தன் வாயாலே கெடும், விதி வலியது. 

 

“ஆமா…என்ன நினைச்சேன்னு சொல்லவா?” அவன் இடக்காக. 

 

“இல்ல வர்ணிக்கவா?”

 

“நீ ஒன்னும் சொல்ல தேவையில்ல கிளம்பு”

 

“சரி…”என்றவனோ, 

 

“பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்

 

அடடா பிரம்மன் கஞ்சனடி

 

சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன்

 

ஆஹா அவனே வள்ளல்லடி” என்று பாடியபடியே செல்ல. 

 

அதிர்ந்தவள் அவன் நகர்ந்த பின்னே அந்த ஆளுயற கண்ணாடியை பார்த்தாள், அவனுக்கான பாடலுக்கான அர்த்தம் அவளுக்கு இப்பொழுது புரிந்தது. 

 

கோபமும், வெட்கமும் சம அளவில் வந்து அவளை இம்சிக்க, வேற வழியில்லாமல் அவனை மனதார வறுத்தவள் உடையை மாற்றி வெளியே வந்திருந்தாள். 

 

அவள் வெளியே வந்ததும் அவனை தேட, நல்லவேலை அவன் அங்கில்லை, சற்றே நிம்மதியடைந்தாள். 

நேராய் கீழே சென்றவள், கிட்சனில் தஞ்சம் புகுந்துக்கொண்டாள், தன்னை தவிர்க்கவே இப்படி செய்கிறாள் என்பது புரிய. குறும்பாய் சிரித்தவனை கவனித்த அவனது தந்தை ஏதோ புரிந்தவராக அமைதியானார். 

 

அந்த நேரம் அங்கு வந்தனர் குணசேகரனும், அனுராதாவும் அவர்களாய் அன்பாய் வரவேற்று நலன் விசாரிக்கும்போது அங்கு வந்த மீரா இருவரின் நடுவில் சென்று அவர்களை அணைத்துக்கொண்டாள். 

 

மகளை அன்பாய் தலைகோதிய அந்த தந்தையின் பாசம் அவளுக்கு இத்தனை நாட்களின் கனவு, ஒவ்வொரு முறை அவர் தலைகோதும் போதும் அவள் கண்கள் குளமாகும் அதுவே இன்றும் நடந்தது. அது ஆனந்ததிலா இல்லை அழுகையாலா என்று அவளுக்கே தெரியாது, இப்படியும் மனிதனுக்கு ஒர் உணர்வு உண்டு. பொதுவான பேச்சுகளுக்குபின் ராதா ஆரம்பித்தார். 

 

 “மாப்ளையும் பொண்ணும் விருந்துக்கு வரலை, அதான் இன்னைக்கு கூப்பிடலாம்னு” அவர் கூற. 

 

உதய்யின் தந்தை பதில் கூற வர அதை தடுத்த உதய் “சாரி அத்தை , மதியம் நாங்க ஹனிமூன் கிளம்பணும்” என்று மீராவை கபளிகரம் செய்யும் பார்வையோடு பார்க்க, பயந்தது என்னவோ மீரா தான். 

 

அடுத்து அவன் கூறியதில் அவள் மலைத்தே நின்றாள். “மீரா தான் நீங்க வந்ததும் நம்ம கிளம்பியே ஆகணும் அடம் பிடிச்சா, அதான் நான் போன வாரமே டிக்கெட் போட்டுடேன், அதோட காலையிலையே மீரா எல்லா ட்ரஸ்ஸூம் எடுத்துவச்சுட்டா” என்று அவன் உருட்டியதில் இவளுக்கு பீபீ எகிறி பற்றி எரிந்தது. 

 

‘அண்டா புழுகா, உன் முகறையை நான் இன்னும் முழுசா கூட பாக்கலை அதுக்குள்ள இப்படி உருட்டுறியே டா பாவி’ அவள் அவனை முறைக்க. 

 

அவனது மைண்ட் வாய்ஸ் காட்ச் செய்யப்பட்டு உதய்யால் பதலளிக்கப்பட்டது “நான்தான் பாத்துட்டேனே, என்ன சரியா தெரியலை…” அவன் அவளை பார்த்து கண்ணடித்தவனாக. 

 

‘எல்லாரு முன்னாடியும் எப்படி பாக்குறான் பாரு’ அவள் வருத்தெடுக்கையிலே. 

 

“என்னப்பா பாத்த” என்று மீனாட்சியம்மாள் வருகையிலே. 

 

“அது எங்க எங்க போகணும்னு பாத்தேன் அதை சொன்னேன் மா” என்று அவன் சமாளிக்க. 

 

“சரி தான் அப்போ பாத்து போய்ட்டு வாங்க” என்று அனுராதா கூற அவருக்கு எல்லாம் புரிந்தது நேற்று வரை மகளை பார்த்தவருக்கு அவள் அப்படியில்லை என்பது புரிந்தது, மருமகன் எல்லாத்தையும் பார்ப்பார் என்று நம்பி இப்படி கூறினார். 

 

“நாலு நாள் அத்தை வந்ததும் நம்ம வீட்டுக்கு வரோம்”

 

“அதுனால என்னப்பா கண்டிப்பா வாங்க”

 

“சரிங்க அத்தை…என்றவன் மீரா, போய் ரெடி ஆகு கிளம்பலாம்” என்று அவளிடம் கூற. 

 

அத்தனை பேர் முன்னிலையிலும் எதையும் கூற முடியாததால் அமைதியாய் சென்றவள் அவனை போகும்போது கிள்ளிவிட்டு செல்ல கத்தியவன் ஏதோ சொல்லி சமாளித்தவன் அவளை தேட அவள் ரூமிற்கு ஓடியிருந்தாள். 

 

“இரு இரு நாலு நாள் உன்ன வச்சு செய்யுறேன்” அவன் மனது சூளுறைத்தது. 

 

அனைவரும் அவரவர்களின் வேலையில் மூழ்க, இப்பொழுது சென்றால் மீரா அவனை போட்டு தள்ளுவது உறுதி என்பதால் அவன் அங்கேயே அமர்ந்து பேப்பர் படிக்க துவங்கினான். 

 

இங்கே மீராவோ அவன் வரவுகாக கையில் செம்புடன் காத்திருந்தாள், வேற எதுவும் கிடைக்கல அதான் அத எடுத்து வச்சிருக்கா வந்தா நச்சுனு ஒன்னு போடலாம்னு. 

 

அவன் தான் வர்ற சத்தம்கூட கேக்கலை, ‘எங்க போய்ட போறா வாடா இன்னைக்கு உனக்கு ஊருக்கு’ என்று நினைத்தவள் பேசாமல் அமர்ந்துவிட்டாள். 

 

வாழ்வில் வேதனையில் உழன்ற இரு உள்ளங்களும் சற்றே நிம்மதியடைந்து ஒருவரை ஒருவர் திட்டவாவது நினைத்துக்கொண்டிருக்கின்றனர் இன்று. அவர்களின் மகிழ்வுக்கு ஆயுசு குறைவு என்பது சற்று நேரத்தில் புரிந்தது. 

 

உதய்யிற்கு இப்போழுது ஒரு அழைப்பு வந்தது அது அவனது டீமிடம் இருந்து அன்று மீரா யாரை சந்தித்தாள் என்பது தெரிய வர போகும் தருணம். 

 

அவசரமாய் வெளியே சென்று அதை எடுத்து அவன் காதில் வைக்க அவர்கள் சொன்ன செய்தியை உள்வாங்கியவன். 

 

“சரி அனுப்புங்க” என்றதோடு ஃபோனை கட் செய்தான். 

 

‘யாரா இருக்கும்? இரு பெண்களா? அவங்களை தான் மீரா அன்னைக்கு சந்திச்சாளா? அவங்கனால தான் இப்போ இவ்ளோ குழப்பமா?’ அவனது நெற்றியில் விழுந்த சிந்தனை முடிச்சுகள் அவனின் யோசனையின் தீவிரத்தை உரைக்க. 

 

மேசேஜ் வந்ததிற்கு அடையாளமாய் அந்த சத்தம் அதை திறந்து டவுன்லோட் செய்து பார்த்தவன் கோபத்தின் உச்சியிற்க்கு சென்றான். 

 

நரம்புகள் புடைத்து, கண்கள் சிவக்க அந்த ஃபோட்டோவை வெறித்தவன்,  அதன் பின் ஓர் அளவுக்கு பிரச்சனையை ஊக்கித்தவனாக தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன். வீட்டினுள் சென்று நேராய் தனதறை நோக்கி நகர்ந்தான். 

 

அங்கு மீரா அமைதியாய் பெட்டில் அமர்ந்திருக்க, அவளை பார்த்ததும் கோபம் தலைக்கேற அவளை நெறுங்கியவன்,  அவளை பற்றி மேல தூக்கியவனின் முரட்டு செயலில் வலி எடுக்க முகத்தை சுருக்கியவள். 

 

“என்ன பண்ற, விடு”என்றாள் அமைதியாக. 

 

“கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க, என் கூட வர உனக்கு அவ்ளோ தயக்கம்…” ஒவ்வொரு வார்த்தையாய் அவன் அழுத்திக்கூற இதயம் வெளியில் வந்து துடித்தது அவளுக்கு. 

 

“அப்படிலாம் இல்ல”அவள் வாய் முனுமுனுத்தது. 

 

“பொய்…” அவன் கத்தினான் “எல்லாமே பொய்” அவன் கண்கள் ரெத்தமென சிவக்க இத்தனை ஆக்ரோஷமாய் மீரா உதய்யை பார்த்ததே கிடையாது. 

 

அவளின் தளிர்மேனி நடுங்கியது, அவனது கண்ணை பார்த்தவளுக்கு அத்தனை பயம் வர அவள் அவனை பாவமாய் பார்க்க. 

 

அவளை உதரி தள்ளியவன், “கிளம்பு, ஹாஃப் அ ஹார்ல கிளம்பணும்”என்று வார்த்தையை கடித்து துப்பியவன் விடுவிடுவென்று செல்லும்போது அவனது கை பட்டு தண்ணீர் இருந்த கண்ணாடி குவளை பரிதாபமாய் உடைந்தது அவனது மனதை போல். 

 

அவன் வெளியேரும்போது கதவை படார், என்றுவேறு சாற்றி செல்ல விக்கித்து நின்றாள் மீரா…

 

விதியின் செயலில் காதலை வெறுத்தவன் அதே விதியால் தான் இன்று காதலை நேசிப்பதும், இருந்தும் கடந்த காலம் நிகழ்கால வாழ்வை தாக்கினால் அவனும் தான் என்ன செய்வான்?

 

_தொடரும்_

error: Content is protected !!