💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு -2
“ ‘அறியாமை ‘ என்னும் இருளை, ‘கற்றல்’ என்னும் ஒளி கொண்டு வெல்லலாம்“.
அருணை நோக்கி வந்தவள். அவனிடம் நலம் விசாரிக்க துவங்கினாள்.
“எப்படி இருக்கீங்க? வீட்டில் அத்தை மாமாலாம் சௌக்கியமா?” வினவ,
“எல்லாரும் நலம்”, எனப் புன்னகைத்தவன் அவர்கள் குடும்பத்தின் நலம் கேட்டு,
“நீ இங்க தான் அப்ளை பன்றியா என்ன கோர்ஸ்?”
“பி. காம், நீங்க?”
“எம். பி. எ”
“ஒரே கல்லூரி தானே அடிக்கடி பாக்கலாம், சரி என் தோழி காத்திருக்கிறாள் பை”, என்று நகர்ந்து விட்டாள்.
அவள் நகர்ந்த மறுநோடி “என்னடா அவங்க அத்தை மாமா பத்தி உங்கிட்ட விசாரிக்கிறாங்க!”
“என் அம்மா அப்பா பத்தி என்கிட்ட தானே கேட்கணும்”.
“ஓ!அப்படியா” எனச் சாதாரணமாகக் கேட்டு பின் சுதாரித்து என்ன உன் அப்பா அம்மா அவங்க அத்தை மாமாவா??”
ஆமாடா, “நேத்து ஒரு உறவுக்கார திருமணத்துக்குப் போன இல்ல அங்கே தான் இவளைப் பார்த்தேன்” என தன் கதையைக் கூறினான் அருண்.
பல வருடங்கள் கழித்து ஒரு உறவினர் திருமணத்துக்கு சென்றிருந்தான் அருண். அங்கே வயதின் காரணமாக ஒரு பெண்ணை மும்முரமாக சைட் அடித்துக்கொண்டிருந்தான், பிறகு தான் தெரிய வந்தது அது அவன் ஒன்றுவிட்ட அத்தை பெண் என்பது.
அருணின் அப்பா ரகுவின் காதல் திருமணத்தால் பிரிந்த குடும்பம் பல வருடங்கள் கழித்து இந்த திருமணத்தில் சந்தித்து இணைந்தனர் காரணம் அவர்களை எதிர்த்த தந்தைமார்கள் சமீபத்தில் தான் சிவபதம் அடைந்தார்கள்.
“ஓ!அப்போ உன் அத்தை பெத்த ரத்தினமும் நீயும் ஒரே காலேஜா…என்ஜாய் பண்ணுடா”, என தன் நண்பனைக் கிண்டலடித்தான் ஷ்யாம்.
அருண், ஷ்யாம் இருவரும் பள்ளி நண்பர்கள். ஜாகிங், ஜிம் என இருவரும் தங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளனர். இருவருக்கும் இவ்விதமான கெட்ட பழக்கமும் இல்லாத அக்மார்க் நல்ல பசங்கள் படிப்பிலும் கெட்டிக்கார்கள்.
அருண் நல்ல உயரம் மாநிறம், நல்ல புத்திகூர்மை, ஒன்றைக் குறி வைத்தால் அதில் நிலையாயிருந்து சாதிப்பான்.
அருணின் தந்தை ரகு ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருத்தபோது, அங்கே தன்னுடன் வேலை பார்த்த சுலோச்சனா என்பவரை காதலித்து மணந்து கொண்டார். அவர்கள் திருமணம் வீட்டாறால் ஏற்கப்படாது போகவே. இருவரும் தனித்து வாழ ஆரம்பித்தார்கள்.
அவர்கள் வீட்டுடன் எந்த விதமான பேச்சுவார்த்தையும் இல்லாத நிலையில், இதோ இப்பொழுது தான் ஒரு உறவினர் திருமணத்தில் இணைந்திருக்கின்றனர்.
இப்போதும் அதே கம்பெனியில் கணக்காளராய் வேலை செய்து கொண்டிருக்கிறார் ரகு. தன் தந்தை உழைத்தது போதும் அவரை இனி நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அருணின் ஆசை.
அருணுக்கு சொந்த தொழில் அமைக்க வேண்டும் என்று லட்சியம். எப்பொழுதுமே அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பான். இப்பொழுது கூட அதற்காகத்தான் எம்.பி.ஏ தேர்ந்தெடுத்தது.
அவன் நண்பன் ஷ்யாம் வீட்டின் மூத்த மகன், நல்ல உயரம், கூர்மையான கண்கள், ஆண்மைக்குரிய அடர்ந்த மீசை, இருக்கிறதா இல்லையா என்று தெரியாத தாடி.
ஷ்யாமின் அப்பா கிருஷ்ணமூர்த்தி சொந்த தொழில் நடத்தி வருகிறார். மசாலா பொருட்களான பட்டை, கிராம்பு, ஏலக்காய், இலை , சோம்பு, மிளகு போன்றவற்றை விளைவித்து ஏற்றுமதி செய்கிறார். அது மட்டும் இல்லாமல் டீ மற்றும் காபி தோட்டங்களும் உண்டு அவைகளையும் ஏற்றுமதி செய்கிறார். தன் மனைவி ராதாவையும் அணைத்து தொழில்களிலும் பங்காளராக சேர்த்துத்துள்ளார்.
ஷ்யாமின் அன்னை ராதா மிகவும் திறமைசாலி. வெறும் பேருக்காக இல்லாமல் தொழிலில் என்ன என்ன நடக்கிறது என்பதை விரல் நுனியில் வைத்திருப்பார்.
அவர்கள் குடும்பத்தின் கடைக்குட்டி வர்ஷா.
வர்ஷாவும் இவர்கள் யூனிவர்சிட்டியில் தான் பி. காம் சேர்ந்துள்ளாள்.
இவர்கள் ஐவரும் யூனிவர்சிட்டியில் இடம் கிடைத்து கல்லுரியில் கால் பதித்தனர்.
தியாவிற்கும் மித்துவிற்கும் குதூகலம் தாங்க முடியவில்லை. முன் தினம் தான் இடம் கிடைத்ததிற்கான கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு வந்தனர் இருவரும்.
முதல் நாள் வகுப்பில் மிதுவின் தூக்கத்தை களைத்தபடி, பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள் தியா.
அதை அவர்கள் அருகில் இருந்த வர்ஷா பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நெருங்கிய தோழிகள் யாருமில்லை. பணக்கார வீட்டுப் பெண் திமிராகத்தான் இருப்பாள் என சிலர் இவளை ஒதுக்கினார்கள்.
தன் பணத்தைப் பார்த்து தன்னிடம் பழக இவர்களை இவள் ஒதுக்கினாள்.
ஏனோ மித்து தியாவை பார்த்தவுடன் அவளுக்கு பிடித்து விட்டது. அவளும் தியாவுடன் சேர்ந்து மிதுவை எழுப்பி பேராசிரியர் இடம் திட்டு வாங்காமல் பார்த்துக் கொண்டாள்.
பிறகு இடைவெளியில் இவர்களுடன் பேச்சி கொடுத்து இணைந்தாள். அதன் பின் மூவரும் ஒன்றாகவே திரிந்தனர்.
இப்படியே முதல் ஆறு மாதம் செல்ல, தியா மித்து வர்ஷு மூவரும் மிகவும் நெருங்கி இருந்தார்கள்.
முதல் செமஸ்டர் முடிவு வந்தது தியா தான் வகுப்பில் முதல். மற்ற இருவரும் நல்ல பர்சன்ட் எடுத்திருந்தனர்.
ஷ்யாம் அருண் இருவரும் தொன்னூறு பெர்ஸன்ட் மேல் எடுத்திருந்தனர்.
அருண் படிப்பின்னூடே தன் காதல் பயிரையும் வளர்த்து வந்தான். இவர்களின் வகுப்பறைக்கு நேர் மேல் முதல் தளத்திலிருந்தது பி. காம் முதலாம் ஆண்டு வகுப்பறை.
அணைத்து இடைவேளையிலும் தோழிகள் மூவரும் இருக்குமிடத்தில் இவனையும் காணலாம்.
அதில் அவன் சாமர்த்தியம் என்னவென்றால் அவன் இவ்வாறு வருவது மூன்று தோழிகளுக்குமே தெரியாது.
இன்னும் இரண்டு நாளில் வர்ஷுவின் பிறந்தநாள். அதன் பொருட்டு அவர்கள் வீட்டில் நடக்கும் விழாவிற்கு தியா மற்றும் மித்துவையும் அழைத்திருந்தாள் வர்ஷு.
அன்று சனிக்கிழமை, வெளியில் கிளம்ப தன் அறையில் தயாராகினாள் தியா.
அலுவலகத்திற்கு கிளம்பியபடி சந்திரன் தன் மகளைப் பற்றிக் கேட்க “அவள் வெளியில் செல்ல கிளம்புகிறாள் “, என்ற தன் மனைவி சொன்ன பதிலில்,
‘மகள் இப்போது வரமாட்டாள்’, எனக் குஷியானவர்,
“வந்தாள் மகாலட்சுமியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே……”, என்று பாடி மனைவியைச் சீண்டினார்.
அப்போது பார்த்து வீட்டின் அழைப்புமணி அடிக்க,லட்சுமி ‘அப்பாடா தப்பினோம்’, எனக் கதவின் புறம் சென்றார்.
‘யார்டா அது’ என்று எண்ணியபடி உள்ளே வந்த மித்துவை பார்த்துச் சிரித்தார்.
லட்சுமி, “வாமா மித்து, இரு இப்போதான் காபி போட்டேன் எடுத்துட்டு வரேன்”.
அடுப்படி வாசலில் நின்றிருந்த சந்திரனைப் பார்த்து, “என்ன அங்கிள் பூஜை வேலை கரடி ஆகிட்டேனா”.
“விடுடா உங்க ஆண்ட்டி எங்க போய்டுவாங்க அப்புறம் பார்க்கலாம்”, என கூறிய வேளை,
தியா தயாராகி வர, அனைவரிடமும் விடைபெற்று அலுவலகம் நோக்கிச் சென்றார் சந்திரன்.
லக்ஷ்மியின் காபியை ரசித்துக்குடித்தாள் மித்து.
“என்னடி கிளம்பலாமா”.
“ம், போகலாம்டி”.
“அம்மா பை மா நாங்க கிளம்புறோம்”.
“நாளைக்கு வர்ஷுவ நம்ப வீட்டுக்கு அழைச்சிட்டு வாங்கமா”.
“மாலை அவங்க வீட்டில் விழா இருக்கே காலை வேணா கூப்புடுறேன்மா”, என வர்ஷாக்கு கால் செய்து காலை வர முடியுமா என்பதை உறுதிப்படுத்தினாள்.
அவளுக்கு ஒரு எதிர்பாரா வியப்பளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி வர்ஷாக்கு கேக் ஆடர் செய்துவிட்டு கிப்ட் வாங்க ஒரு கடைக்குள் நுழைந்தனர், அங்கே எதிர்பாராமல்(!?) அருணையும் ஷ்யாமையும் சந்தித்தனர்.