NSK–19 1

NSK–19 1

அத்தியாயம் 19

“டேய்! ஒழுங்கு மரியாதையா வந்துடுடா. நீ மட்டும் இப்போ கிளம்பி வரலை உன்ன என்ன செய்வேன்னே தெரியாது பாத்துக்கோ” என்று வசீகரன் போனில் விபுனனிடம் கத்திக்கொண்டு இருந்தான்.

“மச்சான்! கொஞ்சம் புரிஞ்சிக்கோடா. எனக்கு இங்க ரொம்ப குளிருது. எனக்கு என்னமோ குளிர் காய்ச்சல் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்டா. என்னைய விட்டுடேன் நான் கல்யாணத்தன்னைக்கு வரேன்” என்று சிறு குழந்தை பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடிப்பது போல் அடம் பிடித்தான் விபுனன்.

“மச்சான்…” என்று கோபத்தில் போனே பயந்து விடும் அளவிற்கு கத்த, விபுனன் அவன் காதிலிருந்து மொபைலை எடுத்திருந்தான்.

“புரிஞ்சுக்கோடா…  இங்கன்னா ஹாஸ்பிடல் போக வசதியா இருக்கும் மச்சி” என்க.

“உனக்கு டாக்டர்ஸ் தானே ப்ராப்ளம். அப்போ ப்ராப்ளம் சால்வ்ட்” என்று ஆசுவாசமாய் மூச்சு விட,

“எப்படி சால்வாகும் சொல்லு?”

“மச்சான் உனக்கு தெரியாதுல, இங்க பெரியப்பா, அபி, அப்புறம் மிளனி இவங்க மூனு பேரும் டாக்டர்ஸ்தான் டா. அவங்ககிட்ட சொன்னா ஓசியிலே பாத்துக்கலாம் மச்சி. நம்ம கம்பெனிக்கும் லாஸ் ஆகாது பாத்துக்கோ எப்படி நம்ம ஐடியா” என்க.

“என்னது அவ டாக்டரா? போடா மண்ணாங்கட்டி… உன் ஐடியாவ கேட்டு நான் சாகுறதுக்கு அங்க கிளம்பி வந்து தொலைக்கிறேன்” என்று வைத்தவனின் மொபைல் சிணுங்கியது.

“இவ ஒருத்தி நேத்தில இருந்து மெசேஜ் பண்ணி டார்ச்சர் பண்றா”என்றவன்  அதனை திறந்து பார்த்தான்.

‘அத்தான்! இந்த பட்டிக்காட்டுக்கு இன்னைக்கு நைட்டு உங்களோட சிறப்பு தரிசனம் கிடைக்குமா‌?’

‘அத்தான்… இன்னைக்கு என்ன கலர் ட்ரெஸ் போடுவீங்க?’

‘அத்தான்… அத்தான்… சாப்பிட்டீங்களா?’

‘அத்…தான்  பேசுங்கத்தான் ஏன் பேசாம இருக்கீங்க?’

‘அத்தான்… இன்னைக்கு நாம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து சீட்ல உட்காந்துக்கலாம் அத்தான். அப்போதான் சோக்கா இருக்கும்’

‘அத்தான் உங்களை பாக்கணும் போல இருக்கு. உங்களுக்கும் அப்படி தானே இருக்கும் சொல்லுங்க. என்னோட மனசு முழுக்க நீங்க தான் இருக்கீங்க. உங்களை நேத்து பாத்தப்ப அப்படியே கடிச்சு சாப்பிடணும் போல இருந்துச்சி அத்தான். ஆனா நீங்கதான்  என்னைய பாக்காம இளச்சிட்டிங்க போலயே அத்தான்’ என நிமிடத்துக்கு ஒருமுறை அவளது மெசேஜ் அத்தான் என்ற தொடக்கத்தில் வந்து கொண்டிருந்தது.

அதனை படித்தவனின் கண்களில் புன்சிரிப்பு மின்னி அவனும் காதலில் விழுந்து விட்டான் என்பதனை சுட்டிக்காட்டியது.

மிளனியின் மேல் காதல் வந்ததுக்கு முழு காரணம் அவளின் குழந்தைத்தனமே. ஆனால் அதனை வெளியே சொல்ல முடியாதளவில் நண்பனின் வாழ்வில் வசந்தம் என்னும் காதலே என்பதே இல்லாமல் இருக்க, தான்  மட்டும் எப்படி காதலிப்பது என்று நினைத்தவனின் பதிலாகதான்  நேற்று இருவரின் பார்வை மாற்று செயலிலே புரிந்து கொண்டான். நண்பனின் வாழ்வு செம்மையுற போகின்றது என்பதை.

இவன் என் நண்பன் எனக்காக என்னவெல்லாம் செய்வான் என்று பிறரிடம் கூறும் சிலபேரில், நண்பனுக்காக அனைத்தையும் செய்து அமைதி காக்கிறானே அவனே உற்ற நண்பன். எதிர்பார்ப்பில்லாத பந்தம் என்றால் அது தோழன் தோழியர் ஒன்றே.

சிறிது மணித்துளிகளில் விபுனன் வசீகரன் வீட்டை அடைந்து விட, அவனை இன்முகத்துடன் வரவேற்றது என்னவோ மிளனி மட்டுமே.

இதுநாள்வரை அவளின் பார்வையை எதிர்க்கொள்ள தயங்கியவன், இன்று அவளுக்கு பதில் பேசும் விதமாக அவளின் பார்வையினை எதிர்க்கொண்டு நின்றான். அதிலேயே பெண்ணவள் ஃப்ளாட் ஆகி விட, அவனை வைத்து செய்ய வேண்டும் என்று எடுத்த உறுதி காற்றில் கரைந்து போனது.

“வாங்க பெரிய மனிசனே… ஆளு ரொம்ப பிசி போல, வீட்டுக்கு வாங்க ஊருக்கு வாங்கன்னு வெத்தலை பாக்கு வச்சி அழைக்கணுமோ. சாருக்கே வர தெரியாதா” எனப் பாரி கோபமாய் கேட்க,

“ப்பா… அது வந்து…” என வார்த்தையை மென்று விழங்கினான்.

“இங்க பாரு நங்கை சாருக்கு என்னைய ப்பான்னு சொல்ல தெரியுது. ஆனா அந்த அப்பாவுக்கு நடக்கப் போற கல்யாணத்துக்கு வரத்தெரியாது அதானே” என்று முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,

“ப்பா ப்ளிஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க பாக்க சகிக்கல. இதுக்கு நீங்க அடி வேணும்னாலும் அடிச்சுக்கோங்க. ஆனா கோபப்படுற மாதிரி நடிக்க செய்யாதீங்க பா” என்று நக்கலடித்து விட்டு சென்றான்.

“கொழுப்ப பாரேன் கண்ணம்மா இவனுக்கு” என்க.

“உங்க கூட இவ்வளோ நாள் குப்பை கொட்டிருக்கான். அப்போ அவன் அப்படிதான்  இருப்பான்” என்றவர் பஸ்ஸில் ஏறி அமர்ந்துக் கொண்டார்.

கண்ணம்மாவின் இடமே தன்னுடைய இடமென பாரி நங்கையிடமே சரணடைந்தான்.

அடுத்து ஒவ்வொருவராக பேருந்தில் ஏறி விட, மிச்சம் இருந்தது என்னவோ ஆதினி, வசீகரன் மற்றும் விபுனன்.

“ஆமா இப்பொ எதுக்கு நீ மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்க. உனக்கு அது செட்டே ஆகல ஆது குட்டி” என அவளை நெருங்கி நின்று கேட்க,

“ஆமா இப்போ எதுக்கு பக்கத்துல வர, தள்ளி நின்னு பேசு, அதுதான் உனக்கு நல்லது” என்று கை முஷ்டியை காட்டினாள்.

“என்னோட செல்லம்ல… இந்த மச்சானை அடிக்க, அணைக்கன்னு உனக்கு எல்லா உரிமையும் இருக்குடா பட்டு குட்டி. அதே மாதிரிதான் எனக்கும் இதெல்லாம் இருக்கு” என்க.

“ஆமா இருந்துட்டாலும்… அப்படியே நாங்க எல்லாம் கண்ணுக்கு தெரிஞ்சிட்டுதான்  மறுவேலை பார்ப்பிங்க பாரு. என்னை தவிர எல்லாரையும் கட்டி பிடிக்க வேண்டியது” என முணுமுணுக்க, அது சரியாக வசியின் காதினில் சென்றடைய அவனுக்கு ஆதினியை பார்க்க சிரிப்புதான்  வந்தது.

‘ஒஹோ! மேடம்க்கு பொஸஷிவ்னெஸ் வந்திருக்கு’ என்று நினைத்தவன், ”சரி நான் கிளம்புறேன் நீ கிளம்பி வா… எனக்குன்னு ஒருத்தி வராமலா பொய்டுவா, நான் அவளை ஹக் பண்ணி கிஸ் பண்ணிக்கிறேன்” என்று அவளை விட்டு விலகி செல்ல போன வசியின் சட்டையை கொத்தாக பிடித்த ஆதினி,  உன்னோட வாழ்க்கையில எவளையாவது கூட்டிட்டு வா, அப்புறம் உன்ன கொன்னுட்டு நானும் செத்…” என்று முடிப்பதற்குள் அவன் இதழால் அவள் இதழை மூடி வாக்கியத்தை முடிவுபெற விடாமல் செய்து விட்டான்.

சில நாழிகையிலே அவளை விட்டு பிரிந்தவன், “வாழ்க்கைய ஆரம்பிக்க இன்னும் மூனு வருஷம் கிட்ட இருக்கு. அதுக்குள்ள இப்படி எல்லாம் அபசகுணமா பேசாத புரியுதா” என அவளுக்கு எடுத்து கூறி அவளுடன் கீழே வெளியே வந்தான்.

பின் வசியும் ஆதினியும் ஏறி விட, அவர்களுக்குப் பின்னே விபுவும் ஏறி மிளனியின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான்.

வண்டியில் அமர்ந்திருந்த இருவரை தவிர்த்து அனைவரும் ஜோடி ஜோடியாக அமர்ந்திருக்க, அந்த பயணம் காதலுடன் இனிமையாக சென்றது.

விடியலில் முதலில் எழுந்த விபுனனின் தோளில் ஏதோ பாரம் தெரிவது போல் உணர்வு வர திரும்பி பார்த்தவன் இமைக்க மறந்து போனான்.

மிளனி அவனின் தோளில் தலை சாய்த்து அவனது வலக்கரத்தைக் கெட்டியாக பிடித்தபப்படியே குழந்தை போல் உறங்கிக் கொண்டு இருந்தாள்.

அவள் கண்ணிற்கு நேராக சூரியனின் வெளிச்சம் வரவும் அதை மறைத்தாற் போல் அவளை அணைத்தபடி அமர்ந்து கொண்டான்.

இவர்கள் இப்படி இருக்கவோ, அங்கே ஆதினி வசியின் மடியில் தலை வைத்து படுத்திருக்க, அவனோ அவளை தூங்க விடாமல் இம்சித்தபடியே இருந்தான்.

“கொஞ்ச நேரம் தூங்க விடு விரு” என அவள் சிணுங்க,

“ஏன்டி இதுதான் நாம காதலிக்க ஆரம்பிச்சி வர முதல் பயணம். இப்படி தூங்குனா எப்படி சொல்லு?” என அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.

“பச் சும்மா இருங்க கரண் வலிக்குது. நீங்க காதலிக்கிறேன்னு என்னோட மூக்கை பிடிச்சு ஆட்டி ஆட்டி அதை பிச்சி எடுக்க வேணாம்” என்க.

“எனக்கு உன்னோட மூக்கை தான் டி  ரொம்ப பிடிக்கும்… நீ கோப படும்போதெல்லாம் சிவப்பாகி உன்னை அழகா காட்டுறதே இந்த மூக்குதான் செல்லம். அதான் அதை பிடிச்சு அப்போ அப்போ கொஞ்சுறேன்” என மூக்கை பிடித்து ஆட்ட,

“எப்படி தானோ” என அவள் சிலாகித்து சொன்னாள்.

“சரி நீ எப்போ என்னோட பனிஷ்மெண்ட் பண்ண போற” என அவன் புருவம் உயர்த்த,

“நான் தூங்கிட்டேன் பா” எனக் கண்ணை இறுக்க மூடிக்கொண்டாள்.

“கள்ளி…” என அவள் தலையை மெதுவாக கோதி விட்டான் வசீகரன்.

சிறிது நேரத்திலே ஆதினியின் வீடு வந்து விட, ஆதினியின் குடும்பத்தினர் அனைவரும் இறங்கினர்.

“நீங்களும் இங்கேயே தங்கலாமே தங்கச்சி மா” என சதாசிவம் சொல்ல,

தங்கச்சி என்ற வார்த்தையில் நங்கைக்கு கண்ணீர் பெருக்கெடுக்க, “இல்ல‌ ஐயா… அண்ணா” என நங்கை வார்த்தையோடு தடுமாற, அவரின் இடக்கரத்தை பிடித்து அழுத்தம் கொடுத்து ஆறுதல் படுத்தினார் பாரிவேந்தர்.

“பரவால்லை நாங்க கொஞ்ச நாளைக்கு என்னோட கண்ணம்மா வாழ்ந்த வீட்ல வாழுறோமே… இத்தனை வருஷமா அவளோட சந்தோஷம் துக்கமெல்லாம் அந்த வீட்லதான்  இருக்கும். நாங்க அங்கேயே போறோம்” என நாசுக்காக மறுத்தவர், நங்கை வீட்டை நோக்கி கிளம்பினார்.

“ரொம்ப நன்றிங்க… எனக்காக பேசினதுக்கு‌”

“ஒரு விஷயம் தெரிஞ்சிக்கோ நங்கை. இத்தனை வருஷமா இந்த உயிர் உன்னைய சரணடைய மட்டுமே காத்திட்டு இருந்தது. இந்த உயிரும் நானும் உனக்கானது, அதே மாதிரி நீ எனக்கானது சரியா… நான் வேற யாருக்காகவோ இதை பண்ணல என்னோட சந்தோஷத்துக்காக மட்டும்தான்  பண்ணது புரியுதா…” என நங்கைக்கு சொன்னவர் அவரை தன்னுடன் இறுக்கி கொண்டார்.

“அங்க பாரு மச்சான்… ஓரே லவ்ஸா இருக்கு” என விபுனன் இருவரையும் காட்டி கிண்டல் செய்ய, வசீகரனோ இருவரையும் புன்னகையோடு பார்த்திருந்தான்.

அதன் பின் வீடு வரவும் இறங்கி விட, அவ்வீட்டின் மாற்றத்தினை கண்ட நங்கை தன் காதலனை, ‘இது எப்போ’ என்பது போல் நோக்க, “எனக்கு தெரியாது மா… எல்லாமே உன்னோட புத்திரன் செய்த வேலை” என்று நழுவி விட்டார்.

“வசி! எதுக்காக நீ தேவையில்லாம காசை செலவு செய்யிற” என நங்கை  கண்டிக்க,

“அம்மா இது ஒன்னும் செலவு இல்லை. இது எங்களோட அன்பு. அப்பா சொன்ன மாதிரி உங்களோட நினைவுகள் எல்லாம்  இங்கதான்  இருக்கு. அதை அப்படியே விட மனசில்லை. எப்படியும் கொஞ்ச நாள்லயோ வருஷத்துலையோ நம்ம குடும்பம் பெருசாகிடும். அப்போ எல்லாரும் தங்க வேணாமா, அதான் இந்த ஏற்பாடு ம்மா” என்றவன் அன்னை தந்தையோடு வீட்டில் வலது கால் எடுத்து வைத்து உள்ளே சென்றான்.

அபிநந்தன், ஊருக்கு வந்ததும் முதலில் சென்று பார்த்தது என்னவோ குழிலியைதான்.

“குழலி” என்றழைக்க,

“சொல்லுங்க எதுக்கு கூப்பிட்டீங்க?” எனப் பட்டும் படாமலும் அவள் பேச,

“நீ சொன்ன பின்புதான்  நான் என்ன தப்பு பண்ணி இருக்கேன்னே புரிஞ்சது குழலி. அதான் அவங்ககிட்ட போய் மன்னிப்பு கேட்டுட்டு வந்தேன். என்னால நடந்ததை கண்டிப்பா மாத்த முடியாது. ஆனா இப்போ உன்னோட ப்ரெண்ட் லைஃப் செட்டில் ஆகிடுச்சி” என அவன் சொன்னான்.

“என்ன சொல்றீங்க? அப்போ… அப்போ… அவளோட காதலை அண்ணா ஏத்துக்கிட்டாங்களா?” என சந்தோஷமாக கேட்டாள்.

“ஆமா குழலி, ப்ரோ அவளோட லவ்வ அக்ஸப்ட் பண்ணிட்டான்” என்றான் இதழ் விரித்து.

சந்தோஷத்தின் மிகுதியில் அபியை அணைத்து கொண்டு கண்ணீர் விடுத்தாள் பூங்குழலி.

இதனை எதிர்ப்பாராத அபிநந்தன் திகைத்து போய் நின்றவனின் கைகள் தானாக அவளை அணைத்தது.

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நந்து. அவ தப்பு பண்றான்னு தெரிஞ்சும் என்னால சில உண்மையை அவளுக்கு எடுத்து சொல்ல முடியலையேன்னு ரொம்ப கவலை பட்டிருக்கேன். ஆனா இப்போதான்  சந்தோஷமா இருக்கு” என்க.

“இனி நீ கவலை பட தேவையில்லை. நீ எந்த உண்மையை சொல்ல முடியலையோ அது இப்போ எனக்கு தெரிஞ்சு போச்சி” என அவர்கள் பின்னாலிருந்து குரல் வந்தது.

தன்னிலை உணர்ந்து விருட்டென இருவரும் பிரிந்து நிற்க, அவர்களையே புன்சிரிப்போடு பார்த்து நின்றாள் ஆதினி.

“ஆதினி” என அவளை அணைத்து கொண்டாள் பூவு.

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு டி. உன்னோட வாழ்க்கையை கெடுத்து நான் வாழப்போறேன்னு நினைக்கும் போது கஷ்டமா இருந்தது. ஆனா இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு டி” என்க.

“இங்க யாரோட வாழ்க்கையும் கெடுத்து யாரும் வாழல சரியா… எனக்கு முன்னாடியே அபி அத்தானோட காதல் கதை தெரிஞ்சு போச்சி. எப்படி இருந்தாலும் ஏதாவது பண்ணி அந்த நிச்சயத்தை நிறுத்தியிருப்பேன். சோ என் பூவா என்னோட அத்தான் கூட சந்தோஷமா வாழணும் அதை நான் பாக்கணும்” என அவள் கையை பிடித்து அபியின் கரத்தோடு இணைத்து வைத்தாள்.

பின் கல்யாண வேலைகள் யாவும் வேகமாக நடந்தேறியது.

error: Content is protected !!