💙இருளை ஈர்க்கும் ஒளி💙

eiFC8EY29611

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பின் எபிலாக்

தன்னை தன் குறையோடு நேசிக்கும் துணை…

தன்னை எச்சூழ்நிலையிலும் தாங்கும் உறவுகள்…

துன்பத்தில் தோள் கொடுக்கும் தோழமைகள்…

தன் வாழ்க்கையை வரமாக்கும் பிள்ளை செல்வம்…

இதைவிட வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்?

காலை விடிந்ததும் மருத்துவமனை சென்று, அது குழந்தை தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்கள் அருண், மித்து இருவரும்.

அப்படியே தியா வீட்டு சென்று விஷயத்தைக் கூற,

லைட்டிங் ஸ்டார்ஸ் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை, ‘தங்கள் கேங்கில் ஒரு முதல் குட்டி உருவாகி இருக்கிறது’ என அனைவரும் செம சந்தோஷம்.

சிறிது நேரம் உரையாடி, மித்துவை அவள் உடம்பை பார்த்துக்கொள்ள சொல்லி, லட்சுமி அவளுக்கு பல அறிவுரைகள் கூறி அனுப்பிவைத்தார்.

***

நாட்கள் விரைந்து சென்றது…

அவர்களின் பி. ஜி ரிசல்ட் வந்திருந்தது அனைவரும் நல்ல மார்க்ஸ் எடுத்திருந்தனர்.

தியா ப்ராஜெக்ட்டுக்கு என்று வந்திருந்தபோதே அவளின் வேலை இவனுக்கு பிடித்திருந்தது. எனவே பினான்சியல் டிபார்ட்மெண்டில் தியாவை ஹெட் ஆக போட்டிருந்தான் ஷ்யாம்.

அந்த சிறு அறையில் இப்பொழுது முன்பு போல் அவர்கள் மதிய உணவை ஒன்றாகவே அமர்ந்து உண்கின்றனர்.

அது மட்டுமா திருமணத்திற்கு முன்பே சீண்டல்களில் ஈடுபடுவான் இவன், இப்பொழுது சொல்லவா வேணும்?

அப்படிப்பட்ட ஒரு நாள் தான் அவர்கள் ஆபீஸில் இருந்தபோது அவர்களுக்காக அவசரமாக போன் வந்தது.

ராஜ் தான் போன் செய்திருந்தான். ராஜிடமிருந்து கால் என்றவுடன் இருவருக்குமே பதட்டம், ஏனென்றால் முன்பே ஒரு தடவை கால் செய்யும்போது வர்ஷாவிற்கு ஆக்ஸிடென்ட் ஏற்பட்டிருந்தது அல்லவா.

ஆனால் இப்பொழுது மருத்துவமனைகல்ல வீட்டிற்கு வர சொல்லி கூறினான்.

இவர்கள் இருவரும் பதறிக் கொண்டே செல்ல, அங்கு விஷயமே வேறாய் இருந்தது.

ஷ்யாமும் தியாவும் அவளை சென்று பார்த்து, சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனார்கள்.

ஆம் இவர்கள் கேங்கில் அடுத்ததாய் வர்ஷா கர்ப்பமாக இருந்தாள்.

அவள் அத்தையாயிற்றே, இவன் தாய் மாமன் ஆயிற்றே சும்மாவா.

வர்ஷா கர்ப்பம் என்று தெரியும் போதெல்லாம் மித்துக்கு ஏழு மாதம், எனவே அவளுக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள் பற்றியும், அதை எவ்வாறு தாங்கிக் கொள்ளலாம் என்பதை பற்றியும் வர்ஷாவுக்கு நிறையவே கூறினாள்.

ராஜ் இந்த நேரத்தில் வர்ஷாவை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான். ராதாவும் சரி லட்சுமியும் சரி இருவரும் தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள்.

சில மாதங்கள் கடந்த நிலையில், ஒரு நாள் மித்துக்கு பிரசவ வலி எடுக்க, அருண் அவர்கள் வீட்டு பெரியவர்களுக்கும் லைட்டிங் ஸ்டார்ஸ்க்கும் தகவல் தெரிவித்தான்.

அனைவரும் மருத்துவமனையில் ஒன்றுகூடி இருக்க, அருணுக்கு ஆறுதலாய் ஷ்யாம் ஒரு புறமும் ராஜ் ஒருபுறமும் அவன் கையை பற்றி நின்று கொண்டனர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மித்துவுக்கும் அருணுக்கும் அழகிய குட்டிச்செல்லம் மிதுன் பிறந்தான்.

லைட்டிங் ஸ்டார்ஸ்சின் முதல் புதுவரவு மிதுன் அனைவருக்கும் அவன் செல்லம்.

அடுத்த சில மாதங்களில் ராஜுக்கும் வர்ஷாவுக்கும் ஆதர்ஷா என்ற குட்டி தேவதை பிறந்தாள்.

அந்தக் குட்டி தேவதை அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டாள். அவளின் அத்தை மாமா இருவரையும் சேர்த்துதான்.

அதிலும் ஷ்யாம் ஆதர்ஷாவை அவனே வைத்துக் கொண்டிருந்தான். தாய் மாமனுக்கு அவள் மிகவும் செல்லம்.

இப்போதெல்லாம் அடிக்கடி அந்த உட்புற நீச்சலறையில் ஓயாமல் நீந்துகிறான் ஷ்யாம்.

அவன் வாழ்வே தியா வந்த பின் ஒளிமையாமாக மாறிய நிலையில் அவன் மகிழ்வுக்கு குறை ஏது? அவன் மட்டுமல்ல தியாவுக்கும் நிச்சல் கற்றுத்தரேன் பேர்வழி என்று தியாவிடம் சீண்டிக் கொண்டிருப்பதே இப்பொழுதெல்லாம் இவன் வாடிக்கையானது.

அப்படி ஒரு நாள் அவளை நீந்துவதற்கு அழைக்க, இவளுக்கு புரிந்து விட்டது தன் கணவன் எதற்காக தன்னை அவ்வளவு வருந்தி அழைக்கிறான் என்று.

இவள் வர முடியாது என்று விளையாட்டு காட்டி கொண்டிருக்க, அதற்கெல்லாம் அசைகின்றவனா ஷ்யாம். அவளை தூக்கிக்கொண்டு அவர்கள் அறை அருகில் இருக்கும் அந்த நீச்சல் அறைக்குள் அழைத்து சென்றான்.

புடவை கட்டி இருந்தவளைளோடு நீச்சல் குளத்தில் விழந்தவன் சீண்டல்களால் இவளை சிவக்க வைக்க,

இப்பொழுது நன்றாக நீச்சல் தெரிந்தவள், நீந்தி மேலே ஏறி அவனுக்கு பழுப்பு காட்ட,

அவளை அனுஅனுவாய் ரசித்தான் ஷ்யாம்.

உச்சி முதல் பாதம் வரை நனைந்திருந்தாள் இவள். அவளின் கூந்தலில் இருந்து நீர் மணிகள் அவள் உடலில் வழுக்கி ஓட, அது செல்லும் இடமெல்லாம் இவனின் பார்வையும் போனது, நனைந்த ஈரவுடை அவளின் அழகை அப்பட்டமாய் காட்ட,

விடுபவனா இவன் கண்ணிமைக்கும் நொடியில் நீந்தி மேலே ஏறி இவள் அருகில் வந்தான்.

பெண் பயந்து பின்வாங்க, அவளை நெருங்கிக் கொண்டே போனான் இவன்.

ஒரு கட்டத்தில் நீரில் வழுக்கி மீண்டும் நீச்சல் குளத்தில் இவள் விழ, அதில் சிரித்தவன் நீரில் பாய்ந்தான்.

வழக்கம்போல அவளின் வெற்றிடை அவனை ஈர்க்க அதில் துவங்கி, எங்கே முடித்து இருப்பான் என்று சொல்லவும் வேண்டுமா?

***

அன்று தியாக்கு வேலை பளு அதிகம் டாக்ஸ் பே பண்ண வேண்டிய மாதம் என்பதால் அது சம்பந்தமான வேலைகளில் இறங்கி இருக்கவே, பெண் மிகவும் கலைத்துப் போயிருந்தாள்.

வழக்கம்போல் மதிய உணவு உண்ண இருவரும் அறையில் அமர்ந்திருக்கும் பொழுது இவளின் கோலம் கண்டு இவனுக்கு கஷ்டமானது.

“விடு தியாமா நாம வேணா அங்கிள் வைத்து பார்த்துக்கொள்ளலாம். நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு”, என்று இவன் எவ்வளவு கூறியும் அவள் அதை கேட்கவில்லை.

“கேட்க மாட்டியே நீ, சரி முதல சாப்புடு”, என அவளுக்கு சாப்பிட கொடுக்க, சாப்பிட்ட அனைத்தையும் ஓடிச் சென்று வாந்தி எடுத்தாள்.

‘என்ன ஆனதோ ஏதானதோ’ என்று இவன் பதற, அவளுக்கு அந்த பதற்றம் எதுவும் இல்லை முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

இவன் ஒன்றும் புரியாமல் அவளை பார்க்க,

“அடிக்கடி நீச்சல் குளத்துக்கு கூட்டிட்டு போனீங்கல்ல, அதுல வந்தது தான் இது”, என வயிற்றை தொட்டு காட்ட,

அவனின் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போனது.

ஆம், நம் லைட்டிங் ஸ்டார்ஸ்சின் அடுத்த குட்டி வரவு தயாராகி விட்டது.

அனைவரிடமும் பகிர்ந்து கொண்டனர். அதிர்ஷாவுக்கு அப்பொழுது நான்கு மாதம்.

அனைத்து அம்மாக்களும் டார்ச்சர் செய்து, அவளை சிறிது நாட்களுக்கு கம்பெனியின் பக்கம் தலை வைத்தும் படுக்க வேண்டாம் என்று பாசமாய் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்.

எப்பொழுதாவது சிறு சிறு வேலைகள் மட்டும் அவனிடம் கேட்டு எடுத்து வரச் சொல்லி, வீட்டிலேயே பார்த்துக் கொடுத்தாள் தியா.

மற்ற இருவரைப் போல் இவளுக்கு பெரிதாய் பிரச்சனைகள் எதுவும் இல்லை. வாந்தியோ, மயக்கமோ எப்பொழுதாவது தான் வரும் அவள் சோர்ந்து போய்விடவில்லை.

ஷ்யாம் கூட அவளை மிகவும் கிண்டல் செய்தான், ‘உண்மையா கர்ப்பமா தான் இருக்கியா’ என்று.

அந்த அளவுக்கு முன்பை விட இப்பொழுது பொலிவுடன் அழகாய் தெரிந்தால் அவள்.

கவனமாய் இருக்க வேண்டிய மாதங்கள் செல்ல, டாக்டரை இவர்களுக்கு அனுமதி வழங்கிருத்தார். மனம் நிறைய ஆசை இருந்தாலும், இந்த நேரத்தில் அவளை நெருங்க பயந்து தான் போயிருந்தான் ஷ்யாம்.

இப்படியே மாதங்கள் ஓட, ஒன்பதாம் மாதம் சீமந்தம் செய்யலாம் என்று முடிவெடுத்திருந்தனர். ஆனால் சீமந்தம் செய்யும் அளவு அம்மாவை விடவில்லை அவளின் குட்டி பையன்.

‘ஆம்’ தியாவிற்கு குட்டி பையன் தான். ஷ்யாமிற்கு மிகவும் ஆசை தியாவின் பிம்பத்தில் ஒரு குட்டி தேவதையைக் காண, ஆனால் தன் தந்தையின் ஆசையை பொய்யாக்கி பிறந்தான் அவர்களின் சீமந்தப்புத்திரன்.

ஒன்பதாம் மாதத்திலேயே செக் அப் க்கு செல்லும் போது தண்ணீர் கம்மியா இருக்கிறது என்று அவளுக்கு எமர்ஜென்சி சிசேரியன் செய்தார்கள்.

ஷ்யாமுக்கு தான் சமாதானம் சொல்லி யாராலும் தேற்ற முடியவில்லை. மிகவும் பயந்துவிட்டான் அவன் காதல் மனைவியை நினைத்து.

தன் தாய்க்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் அழகாய் பிறந்தது அந்த மகவு.

உள்ளே சென்று முதலில் தியாவை தான் பார்த்தான்.

அவள் உடம்பு மறுத்திருக்க. கண்களில் மகிழ்ச்சி, காதல், பெருமிதம் அனைத்தும் பொங்க கணவனைப் பார்த்து இருந்தாள் அவள்.

“ரொம்ப கஷ்டமா இருந்துச்சா” என்றான் மென்மையாய்.

“இல்ல ஆனா கொஞ்சம் பயந்துட்டேன்.”, என்றாள் அவன் கைப்பற்றி.

“குட்டி பையனை பாத்தியா?”, தன் மகவு இந்த பூமிக்கு வந்த, மகிழ்ச்சி அவன் குரலில் தெரிந்தது.

“ம்…. நீங்க”

“அவன துடைக்க எடுத்துட்டு போகும்போது பார்த்தேன்”

இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, மகனை இவன் கையில் எடுத்து வந்து கொடுத்தார்கள்.

இவனுக்கு அவ்வளவு பதட்டம் அந்த சின்ன சிசுவை கையில் பிடிக்க. இத்தனைக்கும் ஆதிர்ஷாவை இவன்தான் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பான். இருந்தும் ஏதோ ஒரு சின்ன பதட்டம்.

தன்மகன் தன்னுதிரம் கையில் வாங்கியவுடன் உள்ளுக்குள் ஏதோ செய்தது, கண்களில் சிறிதாய் கண்ணீர் அது ஆனந்தத்தினால்.

கணவனின் கலவையான உணர்வை கண்டு கொண்டிருந்த தியாவிற்குமே கண்களில் ஆனந்த கண்ணீர்.

குழந்தையின் நெற்றியில் மென்மையாய் முத்தம் வைத்தான். ‘தன் மனைவி இன்னும் குழந்தையை தொட்டுக் கூட பார்க்கவில்லை’ என்பது புரிந்தது அவனுக்கு.

எனவே மெதுவாய் அவளின் இதழ் அருகில் குழந்தையை தூக்கிச் செல்ல, அவள் மென்மையாய் தன்னுள் இத்தனை நாள் பொக்கிஷமாய் பாதுகாத்த தன் மகனுக்கு முத்தம் பதித்தாள்.

பின் ஒரு நல்ல நாள் பார்த்து குட்டி பையனுக்கு பெயர் வைக்கும் வைபவம் முடிவு பண்ணி இருந்தார்கள்.

அவர்கள் வீட்டின் தோட்டத்தில் முன்பு வர்ஷாவிற்கு பிறந்தநாள் அன்று எப்படி ஏற்பாடு செய்திருந்தார்களோ அதே போல் நடுவில் ஒரு மேடை அமைத்து, தோட்டம் முழுக்க அலங்காரங்கள் செய்திருந்தார்கள்.

அதைக் காணும் பொழுது தியாவிற்கு முதன் முதலில் இந்த வீட்டிற்கு அவள் வந்த நிகழ்வுகள் கண்களில் ஓடியது. அன்று நினைத்து பார்த்திருப்பாளா இந்த வீட்டிற்கு தான் இவள் வாழ வரப்போகிறாள் என்று.

அதை எதிர்பார்த்தவன் அவளின் அருகில் வந்து நின்றான். “என்ன குட்டிமா முன்னாடி வந்த ஞாபகம் எல்லாம் உள்ள ஓடிக்கிட்டு இருக்கா?”, என ஷ்யாம் வினவ,

‘ஆம்’ என தலையாட்டினாள். இப்பொழுது அந்தத் தோட்டம் வெறும் குரோட்டன்ஸ் போன்ற அழகுக்காக வைக்கப்படும் செடிகள் மட்டுமின்றி, தியாவின் விருப்பத்திற்கு ஏற்ப பூ வகைகளும் அதிகமாய் குடி கொண்டிருந்தது.

உற்றார், உறவினர் மற்றும் முக்கியமாக லைட்டிங் ஸ்டார்ஸ் உறுப்பினர்களான இவர்கள் நண்பர்கள் என அனைவரும் வரவும் விழா துவங்கியது.

ஷ்யாம் மற்றும் தியாவின் உதரத்தில் உதித்த அந்த மகனுக்கு ஆதவ் என்று பெயர் வைத்தார்கள்.

அந்தப் பெயர் வைக்கும் வைபவம் முடிந்தவுடன், அனைவரும் அஸ்வாசமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

பெரியவர்கள் அனைவரும் ஒரு புறம் பேசிக் கொண்டிருக்க,

மற்ற புறமோ குட்டி பையன் ஆதவ்வை கொஞ்சுகிறேன் என்று அடிக்கடி அவனை சீண்டிக் கொண்டிருந்த ஆதர்ஷாவை இரு குட்டிகளை விட சிறிது பெரியவனாக இருந்த மிதுன் அதட்டினான்.

இதை தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்தார்கள் லைட்டிங் ஸ்டார்ஸ் அனைவரும்.

“பாத்தியா இப்பவே என் பையன் உன் பொண்ண என்னமா அதட்டுறான்”, என்றாள் வர்ஷாவிடம் மித்து.

“ஃபியூச்சர்ல ஒரு வேலை இது எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து அவனை பின்னாடி சுத்து விடுவாளோ என்னவோ யாருக்கு தெரியும்”, என்றான் ராஜ்.

அது கேட்ட அனைவரும் நகைத்தனர். ஏன் குட்டிஸ் மூவர் கூட என்ன சொல்கிறார்கள் என்று புரியாமல் நகைத்தனர்.

இவர்கள் அனைவரையும் கண்டு பெரியவர்களும் நகைக்க, அந்த வீட்டே மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்தது.

ஷ்யாம் என்னும் பேருக்கு ‘இருள்’ என்றொரு அர்த்தமுண்டு அதேபோல் தியா என்ற பேருக்கு ‘ஒளி’ என்றொரு அர்த்தமுண்டு.

அவர்களின் பெயருக்கு ஏற்றார் போல் ஷ்யாம் என்னும் இருள் தியா என்னும் ஒளியால் ஈர்க்கப்பட்டு அதனுள் விரும்பியே முழுமையாய் தொலைந்து போனது.

“இருளாயிருந்த என் வாழ்வெனும் வானில்…

ஒளியாய் வந்தவளே.., என் வாழ்வின் தேவைதையே… உனது ஈர்ப்பில் விரும்பியே எனை தொலைத்து மீளா காதல் கொண்டேனடி…

அந்த காதலின் பரிசாய் நம் மழலை…

ஆனால் என் ஆசை தீர்ந்துவிடவில்லை, உன்னைப்போல் ஒரு குட்டி தேவதை நம் மகளாய் வேண்டும்…

வரம் தருவாயா? என் காதல் தேவதையே…

இனி அவர்கள் வாழ்வில் அனைத்தும் அழகாய் இயங்கும். அவர்களை போல் அவர்களின் அடுத்த தலைமுறையும் வாழும். இறைவன் அருளால் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்கவென வாழ்த்தி அவர்களிடமிருந்து விடை பெறுவோம்.

                       முற்றும்…

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!