Kaatrukena Veli–02

ei7UR8419219-e6dac2ea

Kaatrukena Veli–02

 காற்று 02

பேருந்திற்காக நிலா காத்துக் கொண்டு இருக்க மொழி என்ற அழைப்பு அவளின் செவிகளை எட்ட மனதினுள் பயம் இருந்தாலும் அதை அவள் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றாள்.

“ஹே மொழி!” என்று மீண்டும் குரல் வந்தது. ஆனால் இந்த முறை இன்னும் சிறிது நெருக்கத்தில், திரும்பிப் பார்க்க ஆறடியில் உடற்மிடுக்குடன் கண்ணைக் கவரும் அழகுடன் அசரடிக்கும் ஆண்மகனாய் அவள் முன் வந்து நின்றான் அவன்.

பயந்தவள் “யாரு நீங்க உங்களுக்கு என்ன வேணும்?” என்று பயத்தை அடக்கியவாறு கேட்டாள்.

“ஹே என்ன தெரியலையா” என்று எதையோ எதிர்பார்த்து கேட்க,

“உங்கள தெரிஞ்சு வச்சிக்கிறதுக்கு நீங்க என்ன செலிப்ரிட்டியா இல்ல சாதிச்சவுங்களா” என்று கேட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள,

“மொழி உண்மையாவே உனக்கு என்ன தெரியலையா?” என்று எதிர்பார்ப்பு கலந்து நப்பாசையில் கேட்க,

” நீங்க வேற யாரோன்னு தப்பா நினைச்சி என்கிட்ட பேசிட்டு இருக்கீங்க” என்று உறக்க உறைத்தாள்.

“ஏன், இப்படி பேசுற மொழி?”

” மொதல யாருங்க நீங்க இப்படி பப்லிக் ப்ளேஸ்ல  ஒரு பொண்ணு கிட்ட இப்படி மிஸ் பிஹேவ் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க. இது நல்லா இல்ல பாத்துக்கோங்க” என்று கோபமாகக் கத்த, அதற்குள் பஸ் வரவும் அதில்‌ ஏறிச் சென்றாள்.

அவள் ஏறிச் சென்ற பேருந்தையே பார்த்த படி வேதனையுடன் நின்றிருந்தான் அவன்.

“உனக்கு என்ன தெரியலன்னு சொன்னா, இத என் ஆத்மா கூட நம்பாது மொழி. ஆனா நான் நம்பன்னும்னு நினைக்கிறல. உன்ன விட்டுட்டு போனது தப்பு தான் அதான் நான் திரும்ப வந்துட்டேன்னே. இனி உன்னோட வாழ்க்கைக்கு நான் ஒரு துணையா இருக்க போறேன்” என்று அந்த இடத்தை விட்டுச் சென்றான்.

பேருந்திலிருந்து இறங்கியவள் வேக நடையுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

நேராகச் சமையலறைக்கு சென்றவள் ஒரு செம்பு தண்ணியை மட‌மட வென்று குடித்து அவளது பதற்றத்தை சிறிது கட்டு படுத்த முயன்றாள்.

தனது அறைக்கு வந்தவள் தொப்பென்று கட்டிலில் அமர்ந்து அவனை இப்படியொரு சூழ்நிலையில் கண்டதை எண்ணி மனம் கலங்கியது.

கண்ணீர் வர மல்கியவள் அவளது சிறுவயது புகைப்படங்களைக் காணத் தொடங்கினாள்.

ஒவ்வொரு படமாகத் திருப்பியவள், ஒரு படத்தைப் பார்த்ததும் அதைக் கண்களில் கண்ணீருடன் ஏறிட்டாள். அது அவளது பிறந்தநாளன்று எடுத்தது.

அவளது பள்ளி தோழி தோழர்களை அழைத்துக் கொண்டாடிய முதலும் கடைசியூமான பிறந்தநாள் விழா.

அதில் நிலா கேக் வெட்டி ஒருவனுக்கு ஊட்ட அதை அப்படியே வாங்கி அவள் முகத்தில் பூசி விடுவது போல் இருந்தது. அதில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர்.

அதைப் பார்த்தவளுக்கு அந்த நாள் ஞாபகத்தில் வந்து சேர்ந்தது.

“அம்மா இன்னைக்கு என்ன நாள் தெரியுமா மா” என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்தப் பதினான்கு வயது குழந்தையான நிலா கேட்க,

” எனக்குத் தெரியாம எப்படி, இன்னைக்கு தான் என் தங்கத்தோட பிறந்தநாள் ஆச்சே” என்று சொல்லி நெற்றியில் முத்தம் வைத்தார் ரஞ்சினி.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா மா” என்று வாழ்த்தி அவளுக்குப் பிடித்தமான பால் பாயசத்தை ஊட்டி விட்டார்.

” அவ், அம்மா ரொம்ப யம்மியா இருக்கு மா” என்ற படி அதனை முழுவதும் உண்டு முடித்தாள்.

” அம்மா கொஞ்சம் இத ஸ்கூலுக்கும் போட்டுக் குடுங்க மா நான் மணிக்கும் சக்திக்கும் தருக்கும் கொண்டு போய்க் கொடுக்குறேன் அம்மா”

“சரி நீ போய் ஸ்கூலுக்கு கிளம்பு நான் போய் அவங்களுக்கு ஒரு டிஃபன் பாக்ஸ்ல பேக் பண்றேன்” என்றார்.

பின் நிலா இரட்டை ஜடையில் மல்லிகை பூவை இரண்டு ஜடையையும் சேர்த்தவாறு வைத்தவள் பள்ளி பையை எடுத்துக்கொண்டு வந்தாள்.

” அம்மா நான் கிளம்பிட்டேன்” என்று கத்த,

” இரு வரேன்” என்று கூறி அவளுக்குப் பிடித்தமான ரவா தோசையை எடுத்துக் கொண்டு வந்து அவளுக்கு ஊட்டி விட்டார்.

“போப்போய் அப்பாவ கும்பிட்டு வா” என்று அனுப்பி வைக்க அவளும் சரியெனத் தலை ஆட்டி விட்டுச் சென்றாள்.

தன் அப்பாவின் புகைப்படத்தின் முன் நின்று கை எடுத்துக் கும்பிட்டவள் “உங்களோட வாழ்த்து எனக்கு வேணும் பா” என்று வேண்டக் கண்ணில் நீர் கோர்த்தது.

கண்ணீரை வெளியே வராமல் உள்ளுக்குள்ளேயே தடுத்தவள் சிரித்த முகத்தோடு அன்னையை நோக்கிச் சென்றாள்.

“அம்மா லஞ்ச்” எனச் சிறியவள் கத்த,

” டேபிள் மேல இருக்கு பாரு, அதுல ஒன்னு பால் பாயாசம் சரியா” என்றவாறு கத்தியபடியே வேலைக்குக் கிளம்ப தொடங்கினார் ரிஞ்சினி.

“பாய் மா” என்று விட்டுப் பள்ளிக்கு நடந்து சென்றாள்.

பள்ளிக்கு வந்ததும் மணியையும் சக்தியையும் தேட, ஏனோ அவள் கண்ணுக்கு இருவருமே தென் பட வில்லை.

சிறிது நேரம் கழித்து மணிமேகலை வரவே, அவளுக்குப் பால் பாயாசம் கொடுத்தாள்.

“ஹே நிலா, என்ன பால் பாயாசம்லாம் கொண்டு வந்துருக்க இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷலா” என்று நக்கலாகக் கேட்க, 

“இன்னைக்கு என்ன டேன்னு உனக்குத் தெரியாதா மணி?” என்று பாவமான முகத்துடன் நிலா கேட்டிட,

“அது தெரியாமா இருப்பேன்னா டி” என்றாள் அவளைச் சீண்டும் நோக்கத்துடன். 

அதனை அறியாத பேதையவளின் முகத்தில் தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எறிய “அப்போ சொல்லு மணி இன்னைக்கு என்ன டேன்னு” என்று எதிர்பார்ப்புடன் கேட்டாள்.

“ஹான், இன்னைக்கு சனிக்கிழமை டி நிலா” என்றாள்‌.

நிலாவின் முகம் சுருங்கி விட, அதைக் கண்ட மணிமேகலைக்கு சிரிப்பாக வர அதை  அடக்க முயன்றாள்.

அவள் சிரிப்பை அடக்குவது தெரிந்து அவள் பக்கத்தில் இருந்த நோட்டை எடுத்து அடிக்கத் தொடங்கினாள் நிலா.

” விடு டி வலிக்குது. பக்கி சும்மா ஃபன்னுக்கு தான் பண்ணேன். அதுக்கு போய் இப்படி அடிப்பியா” என்று அடியைத் தாங்க முடியாமல் அவளிடம் சரணடைந்தாள்.

“மூன் எதுக்கு நம்ம பெல்ல இந்த அடி அடிச்சிட்டு இருக்க” என்று கேட்ட படியே வகுப்பிற்குள் நுழைந்தான் அவர்களது அறுந்தவாலு நண்பன் சக்திதரன்.

“டேய் பால்! டப்பா இவ இன்னைக்கு என்னோட…” என்று கூற வந்த நிலா அப்படியே நிப்பாட்டி விட்டு “இன்னைக்கு என்ன நாள்ளுன்னு தெரியுமா?” என்று கேட்டு அவனின் முகத்தைப் பார்க்க, 

‘வாலண்டரா மாட்டிக் கிட்டானே. அடிவாங்க என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள் டா தரன்” என்று மனதிலே அவனிடம் இதை உறைத்தாள். 

” சொல்லு டா பால் டப்பா, ஏன் இப்படி அமைதியாவே இருக்க” என்க,

“நான் ஒன்னு சொன்னா சிரிக்க மாட்டியே” என்று குழந்தைபோல் பாவனை வைத்த படி சொல்ல, அதற்கு நிலாவோ “நீ மொதல சொல்லு அதுக்கப்புறம் நான் சிரிக்கிறதா வேணாமான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்” என்றாள் இரு கைகளையும் மார்புக்கு நடுவே மடக்கியவாறு.

“அது இன்னைக்கு நான் கேலன்டரே பாக்கலையா, அதுனால எனக்கு இன்னைக்கு என்ன டேன்னே தெரியல” என்றான் பச்ச குழந்தையாய். 

அதனை கண்டு முறைத்தவள், அவனை அடிக்க கை ஓங்க அதனை பார்த்த சக்தி, “விட்றா ஜூட்” என்று ஓடியே விட்டான்.

அவனின் ஓட்டத்தைக் கண்ட இரு பெண்மணிகளும் சிரிப்பை அடக்கப் பெரும் பாடுபட்டனர்.

அதன் பின் வகுப்புகள் தொடங்க நிலாவும் மணியும் வகுப்பைக் கவனிக்க தொடங்கினர்.

மதிய உணவு வேளையில் சக்தியின் அண்ணனிடம் சென்று தனக்கு பிறந்தநாள் என்று சொல்லாமலே பால் பாயசத்தை கொடுத்து விட்டு வந்தாள்.

மாலை நேரம் மெதுவாகச் சோர்ந்து போய் வீடு வந்து சேர்ந்தவளுக்கு, வீடு பூட்டி இருக்கவும் எப்போதும் சாவி இருக்கும் இடத்திலிருந்து சாவியை எடுத்துக் கதவைத் திறந்து லைட்டை ஆன் செய்தவளுக்கு அதிர்ச்சியே.

அவளின் வீடு முழுவதும் பலூன் ஒட்டப் பட்டு இருந்தது. சுற்றியும் பார்த்தவள் அங்கே சிரித்த முகத்தோடு இருந்த மணி சக்தி சக்தியின் அண்ணன் மற்றும் அன்னையை கண்டாள்.

“விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிடேன்ஸ் ஆஃப் தி டே” என்று அனைவரும் ஒரேபோல்  ஒரே நேரத்தில் அவளுக்கு வாழ்த்து கூறினர்.

அதன் பின் அவளுக்குப் பிறந்தாள் நாள் வாழ்த்து பாடி, கேக் வெட்டி‌, அனைவருக்கும் ஊட்டியும் விட்டாள். 

அப்போதே சக்தியின் அண்ணாவுக்கு ஊட்டி விட வர, அவனோ அதைத் தடுத்து அவளின் முகத்தில் பூசி விட்டான். இதை சக்தி அவனின் கேமராவில் புகைபிடித்தான்.

இதனை சிந்தித்தவளின் கண்ணீர் ஓட்டம் எடுத்தாலும் புன்னகையும் முகத்தில் சிறிதாகத் தோன்றியது.

பின், அந்த போட்டோக்களை எடுத்த இடத்தில் வைத்தவள் முகத்தை நன்றாக கழுவிக்கொண்டு வந்து இரவு உணவை தயார் செய்து வைத்தாள்.

தன் பாட்டியை சாப்பிட அழைக்க, அவரோ “இதோ வரேன் டி ஆத்தா” என்றவாறு அறைக்குள் இருந்து வெளியே வந்தார் பாட்டி.

நிலா அமைதியாக அவருக்கு இட்லியையும் அதற்குத் தேங்காய் சட்னியையும் வைத்துக் கொடுத்தவள், தனக்கும் வைத்துக் கொண்டு சாப்பிட தொடங்கினாள்.

பாட்டி மெதுவாகத் தயங்கிய படியே “நிலா” என்றழைக்க,

“சொல்லுங்க பாட்டி என்ன வேணும், இட்லி வைக்கட்டுமா” என்று கேட்டு அவளது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.

“எனக்கு ரொம்பவே வயசாயிடுச்சி மா. காலா காலத்துல உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சிட்டா இந்த உசுரு நிம்மதியா போய்ச் சேருமேமா” என்று கவலையுடன் அவரின் ஆசையைக் கூறினார்.

சாப்பிடுவதை நிறுத்திய நிலா அமைதியாகத் திரும்பி அவரை பார்த்தவள், “எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடக்கவே நடக்காது பாட்டி மா. நீங்க என்ன விட்டுப் போகும்போது நானும் எங்க அம்மா அப்பாவைப் பாக்க உங்களோடவே வந்துடுவேன்” தீர்க்கமான  குரலில் சொன்னவள், சாப்பிட தொடங்கினாள்.

இவளின் பதிலைக் கேட்டு ராஜேஸ்வரி அதிர்ச்சியுற்றார்.

நிலா வேகமாகச் சாப்பிட்டு விட்டுப் பாட்டிக்கு இரவு போட வேண்டிய மருந்தை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து, போடவும் வைத்தாள்.

பின் அவரை அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு, அவளது அறைக்கு வந்தவள் பால்கனியில் நின்று கொண்டு அந்த நிலவினையே வெறித்த படி நிற்கத் தொடங்கினாள்.

“உன்னை இரசிக்கவும் முடியாமல் உன்னை வெறுக்கவும் முடியாமல் உள்ளம் உன்னைக் கண்டு அஞ்சுகிறது” என்று நிலாவை பார்த்துத் தன்னவனின் நினைவில் கூறினாள்.

சரியாக அதேநேரத்தில் “உனக்கு இனி எந்தக் கஷ்டமும் வராம நான் உன்கூடவே இருந்து உன்னைப் பார்த்துப்பேன் மொச குட்டி” என்றவன் அந்த நிலவை விட்டுத் தன்னவளை நினைவில் கூர்ந்து  இரசிக்க தொடங்கி இருந்தான்.

இதனமான காற்று இருவரையும் தாக்கியது. அதில் இருவருமே சிலிர்ப்புற்று இருந்தனர்.

தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!