Kaatrukena Veli–03

ei7UR8419219-5acf0fa4

காற்று 03

காலை எழுந்ததும் எப்பொழுதும் போல் பல் துலக்கிக் காலைக் கடன்களை முடித்த நிலா சிறிது நிமிடங்களுக்குத் தான் எப்போதும் செய்யும் மூச்சு பயிற்சியை மேற் கொண்டாள்.

அதன் பின் வாசலுக்கு வந்து கூட்டி தண்ணீர் தெளித்து அழகிய வண்ண கோலத்தை ஒன்று அவள் வீட்டின் முன் போட்டு விட்டுச் சமையல் வேலையில்‌ இறங்கினாள். அதற்குள் ராஜேஸ்வரி பாட்டி எழுந்து விட அவருக்கு வர டி வைத்துக் கொடுத்தாள்.

அதை வாங்கி குடித்தவர் அமைதியாக சோஃபாவில் அமர்ந்து, அடுத்து எப்படி கேட்டு அவளின் திருமணத்திற்கு ஒப்புதல் வாங்குவது என்று சிந்திக்க தொடங்கினார்.

“ரொம்ப யோசிக்காதீங்க பாட்டி நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்றாள் அவரின் சிந்தனையை அறிந்து கொண்ட படி.

“எப்படி தான் நாம மனசுல நினைக்கிறது புரியுதோ” என்று மனதினுள் அவர் புலம்ப அதுவும் சரியாக அவளின் மன செவிக்கு நன்றாக விழுந்தது.

“அது எனக்கும் தெரியாது பாட்டி ஆனா நீங்க மனசுல நினைக்கிறது மட்டும் எனக்கு நல்லாவே புரியுது. அதுக்கு‌‌ நான் என்ன பண்றது சொல்லுங்க” என்றாள் சமையல் வேலையைக் கவனித்துக் கொண்டே.

அதன் பின்‌ பாட்டி அமைதியாகி விட்டார். பின் டிவி பார்க்கத் தொடங்கினார்.

சமையைல் வேலையை முடித்த நிலா கல்லூரிக்குக் கிளம்ப தயாரானாள்.

அறைக்கு வந்தவள் அறையைச் சுத்த படுத்தி விட்டுக் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

குளித்து முடித்து வந்தவள் லைட் ப்ளு கலர் புடவையில் மயில் இறகின் வண்ணம்  பதித்த பார்டர் கொண்டு இருந்த புடவையை அணிந்துக் கொண்டாள். இடை வரை இருந்த கூந்தலை ஃப்ரெஞ்ச் ப்லேட் போட்டு அதை அடக்கியவள் தன் புடவைக்குத் தகுந்தாற்போல் காதனிகளை அணிந்து சிகிப்பு பொட்டு வைத்து  புடவை முந்தானையை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள். அவள் முன் இருந்த கண்ணாடிக்கே அவளைக் கண்டு வெட்கி நின்றது அவள் அழகின் பேரழகை கண்டு.

அதற்குத் தகுந்தாற்போல் அவள் பாட்டி சேனல் மாத்திக் கொண்டே வர அதில் பாரதி படத்திலிருந்து பாட்டு ஒன்று பாடியது.

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல!

மயில் போல பொண்ணு ஒன்னு
பொண்ணு ஒன்னு…..

அதை முணு முணுத்த படியே நிலா வேலைக்குக் கிளம்பி வெளியே வந்தாள். அவளை கண்ட அவளது பாட்டி, “இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க டி ராசாத்தி. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்று நெட்டி முறித்தவர் “யாரு கண்ணும் பட்டு விடக் கூடாது” என்று பாட்டி பக்கத்தில் இருந்த மை டப்பாவை எடுத்துப் பின்னங் கழுத்தில் காதுக்கு பின்னே வைத்து விட்டார்.

“பாட்டி உங்களுக்கு இது கொஞ்சம் அனியாயம்மா  தெரியல எதுக்கு இவ்வளவு பில்பட்பு” என்றாள் நக்கலாக.

“உனக்கு எல்லாத்துலையும் நக்கல் கூடிப் போச்சி டி யம்மா. சீக்கிரமா உன்ன எவன் கைலயாவது புடிச்சி குடுத்தறனும் இல்லன்னா ஒவ்வொரு நாளும் பயந்து பயந்து வாழனும் டி” என்று சாதாரனமாகத் தொடங்கியவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த,

“சரிங்க பாட்டி, நீங்க இப்படி உக்காந்துட்டு மெதுவா புலம்பிட்டு இருங்க நான் சாப்பிட்டு கிளம்புறேன்” என்றவள் பாட்டியை ஒரு இருக்கையில் அமரவைத்து நைசாக எஸ்சானால்.

அவளின் செயலை எண்ணி வருந்திப் போனார் ராஜேஸ்வரி பாட்டி.

சாப்பிட்டு முடித்தவள் கல்லூரிக்குக் கிளம்பிச் சென்றாள்.

கல்லூரிக்கு வந்தவள் அமைதியாக அவள் இடத்திலமர்ந்து அவளது வேலையைக் கவனிக்க அதனை இடை வெட்டியது மணிமேகலையின் குரல்.

“வாங்க மேடம் என்னடா இன்னும் ஆளையே காணோம்னு நினைச்சேன்” என்று நிலா அவளைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்க,

“என்ன பண்றது எனக்கு இருந்த ரெண்டு ஃப்ரெண்ட்ஸ்ல ஒன்னு தான் இப்போ என்கூட இருக்கு. என் கிரகம் எங்க போனாலும் கடைசியில உன்கிட்ட வந்தே மாட்டிக்கிறேன்” என்று கோவை சரளா மாதிரி பேச நிலாவிற்கு சிரிப்பு வந்தது. அதனை கண்டு மணிமேகலை முறைத்து வைத்தாள்.

“ஹே அப்படிலாம் பாக்காத டி எனக்கு ரொம்ப சிரிப்பு சிரிப்பா வருது” என்று சிரிப்பை அடக்கப் பெரும் பாடுபட்டாள்.

“போதும் நீ சிரிச்சது” என்று மூக்கு பிடைக்க கூறியவள் “இன்னைக்கு எங்க வீட்ல உப்புமா செஞ்சி வச்சாங்க டி அதுனால…” என்று அவள் அடுத்து சொல்ல வருவதற்குள் “அதனால நீ சாப்பிடல. சோ என்னோட டிஃபன் பாக்ஸ் கேட்டு இங்க வந்துருக்க அப்படி தான” என்றாள் நிலா அவள் கூற வருவது புரிந்து.

“ஆமா டி பட்டுக் குட்டி. இதுக்கு தான் நான் உன்ன என்னோட உயிர் தோழியா வச்சிருக்கேன்” என்றாள் நிலாவை பார்த்து.

“நான் உனக்கு உயிர் தோழின்னா நீ எனக்கு என் உயிரை எடுக்கிற தோழி டி” என்று அவளை அசிங்க படுத்தினாலும் சிரித்த முகத்துடனே டிஃபன் பாக்ஸை அவளுக்கு நீட்டினாள்.

அதைப் பெற்றுக்கொண்ட மணி “அப்படிலாம் சொல்லப் படாது” என்று விட்டுச் சாப்பிட சென்றாள்.

அதன்பின் நேரமாவது உணர்ந்து அவளது வகுப்பிற்கு சென்றாள். மதியம் வரையும் அவளுக்கு வகுப்பு இருந்ததால் அவளால் புது ஹெசொடியை பார்க்க முடியாமல் போகிற்று.

வகுப்புகள் அனைத்தும் முடித்து வெளியே வந்தவளுக்கு மாணவ மாணவிகளின் பேச்சே காதில் விழுந்தது. அதைக் காது கொடுத்துக் கவனிக்க தொடங்கினாள் நிலா.

“ஹே நம்ம புது ஹெச்சோடி சார் செம்ம ஹேன்சமா இருக்காரு தெரியுமா” என்று ஒருவள் தன் தோழியிடம் கூற,

“ஆமாம் மச்சி அப்படியே நம்ம தல மாதிரி கெத்தா இருந்தாரு” என்று வழிந்துக் கொண்டே கூறினாள்.

அதைக் கேட்ட அவள் தோழி “இல்ல டி தளபதி மாதிரி அமைதியா இருந்தே மேக்னெடிட் மாதிரி இலுக்குறாரு மச்சி. பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு” என்று பேசிட, இதைக் கேட்ட நிலாவுக்கு எரிச்சல் தான் வந்தது.

அவர்களிடம் சென்றவள் “இது என்ன பேச்சு. மாதா பிதாக்கு அடுத்து ஆசிரியர்கள் தான். அவுங்கள போய் இப்படி பேசலாமா இதெல்லாம் ரொம்பவே தப்பு போங்க. எங்களை நம்பி தான் உங்களை இங்கே படிக்க அனுப்பினது. படிக்கிற வேலையை மட்டும் பாருங்க. போங்க உள்ள” என்று அவர்களுக்குக் கண்டிப்புடனான அறிவுரை கூறி அனுப்பி வைத்தாள்.

இதனைக் கேட்ட படி இருவர் அவளுக்குத் தெரியாமல் கவனிக்க அதில் ஒருவர் அந்த இடத்தை விட்டு மறைந்தார். ஆனால் மற்றொருவர் அவளை நோக்கி மெதுவாக அடி எடுத்து வைத்தது.

“நீங்க சரியா சொன்னிங்க யாழ் மேடம் காலையில இருந்தே இதே வேலை தான் பசங்களுக்கு. உங்க பேச்சு சூப்பர் மேம்” என்ற படி வந்து நின்றான் அதிரூபன்.

“சார் இது என்னோட கடமை. அவங்கள நாம தான் நல் வழி படுத்தனும் அத தான் இங்க நானும் செஞ்சேன்” என்று மரியாதை நிம்மதிமாகப் பேசியவள் அந்த இடத்தை விட்டு நகர பார்க்க,

“என்ன மேடம் பேசிட்டு இருக்கும் போதே நகருறீங்க” என்று அவளது நடைக்கு தடை போட,

“அப்படின்னா நாம ரெண்டு பேரும் பேசுறதுக்கு ஒன்னும் இல்லைன்னு அர்த்தம் சார்” என்று நேரடியாகவே அவனை நோஸ் கட் பண்ணினாள் நிலா.

அதிரூபன் மேலும் ஏதோ பேச வர அதற்குள் நிலாவிற்கு அழைப்பு வந்தது.

“எக்ஸ் க்யூஸ் மீ சார்” என்று நகர்ந்து நின்று ஃபோனை அட்டன் செய்தாள்.

“சொல்லு மணி” என்றாள்.

“எங்க டி இருக்க லஞ்ச் பெல் அடிச்சு எவ்வளவு நேரம் ஆச்சி ஆனா நீ இன்னும் ஏன் வராம இருக்க” என்று கடுகடுத்தவளிடம், “இரு டி வந்தறேன் இங்க ஒரு மங்கி கிட்ட மாட்டிக்கிட்டேன். அதான் நீ போய் கேண்டின்ல வெயிட் பண்ணு நான் வந்தறேன்” என்றவள் அவளது அழைப்பை அணைத்தாள்.

“சாரி சார் என்னோட கோ ஸ்டாஃப் கூப்பிடுறாங்க. நான் போறேன்” என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

போகும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அதிரூபன் “என்கிட்ட தப்பிக்க ட்ரை பண்றியாக்கும், உன்னால அது முடியவே முடியாது மிஸ்.யாழ்மொழி என் லைஃப்ல கண்டிப்பா உன்ன கொண்டு வந்தே தீருவேன்” என்று சபத மிட்டு சென்றான்.

வேகமாகக் கேண்டின் வந்தவள் “சாரி டி அது அதிரூபன் சார் வந்துட்டாரு அதான் பேசிட்டு வர டைம் ஆய்டுச்சி” என்று கூறி மன்னிப்பு வேண்ட,

“சரி மன்னிச்சு விடுறேன்” என்றவள் “உனக்கு ஒரு சப்ரைஸ் டி” என்று புதிர் போட்டாள் மணி.

“எனக்கு என்ன சப்ரைஸ் டி?” என்று கேள்வியாய் அவளை நோக்க,

“நம்ம ஹெச்சோடி யாருன்னு தெரியுமா” என்று கேள்வி கேட்டு அவளைப் பார்க்க,

“அது தான் டி யாருன்னு தெரியல. காலைல இருந்து நேரமே இல்ல. அதுனால தான் போய்ப் பாக்க முடியல லஞ்ச் முடிச்சிட்டு தான் போய்ப் பாக்கனும். ஸ்ட்டென்ஸ் எல்லாரும் அவர பத்தி தான் பேசிட்டு இருந்தாங்க டி முடியல” 

“ஹே அது யாருன்னு தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட டி” என்று சொல்ல,

“அப்படி யாரு டி நம்ம ஹெச்சோடி இவ்வளோ பில்டப் கொடுக்குறீங்க எல்லாரும்” என்றவள் அவளுக்காக மணி வாங்கி வைத்திருந்த சாப்பாட்டை பிரிக்கலானாள்.

“ஏதோ சப்ரைஸ்ன்னு சொன்ன” என்று கேட்ட படி உணவை எடுத்து வாயில் வைக்க,

“அதோ அந்த சப்ரைஸே வருது மா கொஞ்சம் திரும்பிப் பார் அவங்க தான் நம்ம ஹெச்சோடியும் கூட” என்றாள்.

அவள் சொல்லி முடிக்கவும் திரும்பிப் பார்த்த நிலா அதிர்ச்சியில் சிலையாகி போனாள்.

“ஹாய் கேர்ள்ஸ்! ” என்றபடி நிலாவின் பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் அவன்.

“விச்சு சாச்சா” என்றாள் புன்னகையாக

“நீ இன்னும் இந்த சாச்சாவ விடலையா?” என்று வாய் கேட்டாலும் அவனின் பார்வை என்னவோ சிலையாக நின்றிருந்த நிலா அதாவது அவனின் மொழி மேல் தான் இருந்தது.

“அத எப்படி விடுவேன் சொல்லுங்க. நீங்க எப்போதும் எனக்கு சாச்சா தான் அது மாறவே மாறாது” என்றாள்.

“சரி சரி நீ அப்படியே கூப்பிடு. ஆனா அது எல்லாம் காலேஜ்க்கு வெளிய தான்” என்றான்.

மணியோ “ஹே நிலா விச்சு சாச்சா டி உன்னோட வி” என்று சொல்ல வந்தவளின் கையைப் பிடித்து அமைதியாக இருக்கும்படி சொன்னவன் “ஹாய் மிஸ் யாழ்மொழி ஐம் விஸ்வேந்தர் உங்க டிபார்ட்மெண்ட் நீயு ஹெச்சோடி” என்று அவளை நோக்கி கையை நீட்ட,

திக் பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தவள் தன் முன் கை நீட்டியவனை கண்டு சுயநினைவிற்கு வந்தாள்.

“ஹே ரொம்ப நேரமா சார் கை நீட்டிட்டு இருக்காரு பாரு டி” என்று மணி அவள் தோள் தட்ட,

“சாரி சார்” என்று அவனின் கைக்குள் அவளின் கைகள் தானாக நுழைந்தது.

“இப்ப புடிச்ச இந்த கைய நான் என்னைக்குமே விட மாட்டேன் ” என்று சொல்லுவது போல் இருந்தது அவனின் பிடி…

இவர்கள்  ஒருவரை ஒருவர் தெரியாதது போல் நடந்துக் கொள்ள அதில் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது மணிமேகலைக்கு…

அவள் கையை வழுக்கட்டாயமாகப் பிரித்து எடுத்தவள்”எனக்கு லேட்டாச்சி நான் போறேன் மணி நீ பேசிட்டு வா” என்றவள் எழுந்து செல்ல எத்தனிக்க,

“மிஸ். யாழ்மொழி! ஈவ்னிங் என்னை என்னோட கேபின்ல வந்து மீட் பண்ணுங்க” என்றான் அதிகாரமாய்.

“ஓகே சார்” என்றவள் வேகமாக நடந்து சென்றாள்.

போகும் அவளையே இமைக்க மறந்து பார்த்த படி அமர்ந்திருந்தான். அவனுக்குப் பிடித்தமான கலரில் அவனின் தேவதை அவளுக்குத் தரிசனம் அளித்திருந்தாளே…

தொடரும்..