Kadhalil nan kathaadi aanen

Kadhalil nan kathaadi aanen

KNKA – 6

ஒரு வாரம் சென்றது! ஸ்வாதிக்கு நண்பர்கள் கிடைக்காவிட்டால் தான் ஆச்சர்யம்!!!

 

ஸ்வாதி, சூர்யா, பிருந்தா, ஷங்கர் நால்வரும் நன்றாக செட் ஆனார்கள்.

 

ஸ்வாதி, ஹாஸ்டலில் ஒரு ஆளை கூட விடுவதில்லை. கூட்டுகிற அம்மா முதல், வாட்ச்மேன் வரை, மெஸ்ஸிலும் வயதுக்கு தகுந்த படி, எல்லோரையும் பாட்டி, தாத்தா, அண்ணா மற்றும் அக்கா என்று பழகுவாள்.

 

அன்று  முதலாமாண்டு மாணவர்களுக்கு  இன்னும் ஒரு வாரத்தில் வெல்கம் பார்ட்டி நடக்க போவதாக சர்குலர் வரவே , ஒரே கொண்டாட்டம் தான் அவர்களுக்கு.  சூர்யா, சத்தத்தை தாங்க முடியாமல் , எழுந்து முன்னாடி சென்றவன், மக்களே! வெல்கம் பார்ட்டி என்றால் என்னனு நினைச்சீங்க?

 

“பாலிஷ் ராகிங் ” என்று சொல்லவும் சிலர் பயந்து போனார்கள்.

~~~~~~~

 

வெல்கம் பார்ட்டி அன்று…..

 

பாட வகுப்புகள் கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எல்லோரும் எப்போதும்  போல் இல்லாமல் , பார்ட்டிக்காக என்று சிரத்தை எடுத்து உடையணிந்து கொண்டு வந்திருந்தார்கள்.

 

முதலில் முதல்வர்  பின் துறை தலைவர் மற்றும் சில மூத்த ஆசிரியர்கள் என்று சிறு உரை ஆற்றி விட்டு ,  சீனியர் மாணவர்கள் ஜூனியர்ஸ்காக செய்த சில பெர்பாமன்ஸ் பார்த்து விட்டு கிளம்பினார்கள்.

 

ஜூனியர்சை சீனியர்ஸிடம் விட்டு விட்டு , மாணவ

தலைவர்களிடம் , ஜாலி யா இருங்க,  மேக் ஷ்யூர் நோ சீரியஸ் ராகிங்!! என்று சொல்லி விட்டே கிளம்பினார்கள். அவர்கள் வந்து   ஒரு வாரம் ஆகி விட்டதால், பல ஜூனியர்களை பல சீனியர்களுக்கு தெரிந்ததிருந்தது, அதனால் உற்சாகமாகவே சென்றது பார்ட்டி.

 

மாணவ தலைவர்கள் குழுவில் இருந்த சித்தை  அப்போது தான் பார்த்தாள் ஸ்வாதி…. தேர்ட்  இயரா  இவரு ……!

 

ஒவ்வொருத்தராக கூப்பிட்டு, அவர்களை பற்றி கேட்டு,பின் ஏதாவது ஒரு ஜாலி அல்லது விஷமமான டாஸ்க் கொடுத்து செய்ய சொன்னார்கள்.

 

சூர்யாவின் முறை வந்த போது ,  உன் உதடு இரண்டும் ஒட்டாமல், ஐந்து நிமிடம் சூர்யா பட பன்ச் வசனம் எல்லாம் சத்தமாக  சொல்லு என்றார்கள். பாவம் திணறி விட்டான் பையன்!!!!

 

ஷங்கர் என்றதும் ,  ராக்கிங்க்கு எதிராக ஒரு டையலாக் எழுதி கொடுத்து  அம்பி, ரெமோ மற்றும் அந்நியன் மாடுலேஷனில் பேசி நடிக்க  வைத்தார்கள் .

 

பிருந்தாவிடம் , பள்ளியில் தமிழ் படிக்க பிடிக்கவில்லை என்று தெரிந்துக்கொண்டு , பத்து நிமிடம் டைம் கொடுத்து ,  தமிழில்  உள்ள நா நெகிழ் சொற்றொடர்கள் கற்றுக்கொள்ள வைத்து அவளை வைத்து செய்தார்கள்.

 

ஸ்வாதி ,  “இதை என்கிட்ட கொடுத்தா ஈஸியா பண்ணுவேன் என்றாள் சூர்யாவிடம்.” “நா வேணா போய் சொல்லிட்டு வரவா என்றான் கடுப்பில்!!” வாய், தாடை எல்லாம் வலி அவனுக்கு!

 

ஸ்வாதியின் முறை வந்த போது, நீ இப்போ உன்  டுவீலர்ல ஒரு ஆளை இடிச்சிட்ட, அவன் உன் கிட்ட சண்டை போடுறான்!! அந்த இரண்டு பேரோட டயலாக் நீ சொல்லி நடித்து காட்டணும் என்றவுடன் அனிச்சையாக அவள்  சித்துவை தான் பார்த்தாள்!! அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.  பண்ணருவியா நீ!!  என்று சவால் விடுவது போல !

 

ஏய்! அறிவில்லை உனக்கு! என்ன வண்டி ஓட்ட தெரியும்னு யாருக்கிட்டாயாவது பெட் கட்டிட்டு வந்துஇருக்கியா? உன்னை அவ்ளோ ஈசி யா போக விட்ருவேனா என்று சித்துவின் வார்த்தைகளை சிறிது மாற்றி போட்டு அவனை போலவே ஆக்ஷன் பண்ணியதை, கண்கள் மின்ன, சிறு சிரிப்புடன் பார்த்து ரசித்தான் சித்!

 

பிரபா, “மச்சான்! பேர் ஸ்வாதி!!!”

 

சித், “ம்ம்…ம்ம்….”

 

“செம பெர்பாமென்ஸ், செம பெர்பாமர் !! ” என்றவனை சிரிப்பை அடக்கிக் கொண்டு  ஒரு சிறு முறை முறைத்தான் சித்!

 

அவள் முடித்தவுடன் , கரவொலி அள்ளியது!! இன்று முதல் “ஸ்கூட்டி ஸ்வாதி” என்று அழைக்கப்படுவாய் என்று கலாய்த்தார்கள்!!

 

அவளுக்கே தன்னை நினைத்து ஆச்சரியம் தான். என்ன தான்  அவளுக்கு ஸ்டேஜ் பயம் இல்லை என்றாலும் ,  எங்கிருந்து வந்தது இப்படி ஒரு ஆர்வம்,  இவ்ளோ கூலாக பண்ண  என்று!!

 

பண்ணி முடித்து , பண்ணிடேன் பார்த்தியா! என்று சொல்ல சித்தை தான் தேடினாள், ஆனால் அவன் இல்லை. வெளியே சென்று விட்டான் .. அவள் தன்னை நிச்சயம் பார்ப்பாள்…ஏனோ அது வேண்டாம்! என்று எண்ணினான்.   ஆனால் வெளியே போனவன் , ஜன்னலின் அருகே  நின்று அவள்  தன்னை தேடுவதை தான் பார்த்திருந்தான்……

Leave a Reply

error: Content is protected !!