Kadhalil nan kathaadi aanen
Kadhalil nan kathaadi aanen
KNKA – 16
சப்னாவிற்கு இப்படியும் ஒருத்தன் இருப்பானா என்றே தோன்றியது, ஒரு மாதத்துக்கும் மேலாக ஆயிற்று அவள் இட்டு கட்ட ஆரம்பித்து, அவனுக்கு எப்படியும் தெரிய வரும் என்பது நிச்சயம்.அவன் அவளிடம் வந்து பேசும் நாளுக்காக அவள் காத்துக் கொண்டு இருக்க, அவன் வருவதாகவே தெரியலையே என்று குழப்பினாள்.
ஒரு வேளை அவனுக்கு விஷயம் தெரியாதோ? நம்மளே திரும்ப அவன்கிட்ட போய் பேசி பார்க்கலாமா என்றெல்லாம் யோசித்தாள்…
அவனின் அழகு, பணம்,பழகும் விதம் எல்லாம் அவன் மேல் கிறுக்காகி இருந்தாள் சப்னா… அதனால் தான் அவன் எவ்வளவு
கத்தரித்தாலும், அவனிடமே போய் நிற்கிறாள்…
அன்று வகுப்பறையின் ஜன்னலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்வாதி!!!
சித், லைப்ரரி கட்டடத்தை நோக்கி போய்க் கொண்டு இருந்தான். அன்று இருவரும் பேசிய பிறகு, அவனுக்கு சப்னா பற்றி தெரிய வந்ததால், அவனும் பிரபாவும் அதை பற்றிய ஆலோசனையிலே இருப்பதால் இவர்களை பார்க்க வரவில்லை…
“ஒரு ஸாரி மட்டும் சொல்லிட்டு போய்ட்டான்!” அவ்ளோ தானா? ஏதோ ஒரு ஏமாற்ற உணர்வு!!!!
வேற என்ன மேடம் எதிர்பார்க்கிறீங்க? டெய்லி உங்க பின்னாடியே வந்து கெஞ்சி கொஞ்சி பேசி உங்களை சமாதானப்படுத்தனுமா???எப்படி இருக்கும் அவன் கெஞ்சினா என்று கற்பனை பண்ணினாள். அவன் பிம்பத்துக்கு அவளால் செய்யவே முடியலை…..அட , இவன் கற்பனையில் கூட கெஞ்ச மாட்டேன்கிறான் !!!! என்று தனக்குள் பேசிக் கொண்டியிருந்தவளை இடையிட்டது ஒரு குரல்…
“ஏ!!! அங்க பாரேன் டீ!!!”
அருகில் இருந்த இன்னொரு ஜன்னலில் நின்று கொண்டிருந்த அவள் வகுப்பு மாணவி, அவள் தோழியிடம் “அந்த சப்னா சொல்ற மாதிரி அவங்களுக்குள்ளே ஏதோ கதை இருக்குப்பா! இல்லன்னா, இவ அவன் பின்னாடியே சுத்துவாளா? அவனும் திட்டுறான், அப்புறம் பேசுறான்! என்னவோ போ! என்பது இவளுக்கும் கேட்டது!!!!”
வேகமாக வெளியே பார்க்க, போகும் சித்தை வழிமறித்து சப்னா ஏதோ சொல்ல, சித்தும் ஏதோ பதில் சொன்னான். சூர்யா, பிரபா அண்ணா கிட்ட சொல்லிட்டாதா சொன்னானே, அப்புறமும் இவர் சாதாரணமா தானா இவ கிட்ட பேசுறார் என்று நினைத்தவளின் மனம் ஏனோ கலங்கி போனது.
பிரபாவும் சித்தும் எடுத்த முடிவு இவர்களுக்கு தெரியாதில்லையா? அவள் வந்து பேசினால், எதையும் காட்டிக்காமல் இரு, என்ன எக்ஸ்டீரீம் வர சப்னா போறானு பார்ப்போம் என்றிருந்தனர்….
லைப்ரரி செல்பவனை இடைமறித்தவள் சீனியர் என்று அழைக்காமல், “ஹாய் சித்!! என்றாள்.”
அவளின் மேல் மலையளவு கோவம் இருந்தாலும் காட்ட முடியவில்லையே என்று பல்லை கடித்தபடி அவளை ஏறிட்டான்.
“என்னால உங்களை மறக்கமுடியும்னு தோணலை, ப்ளீஸ் என்னை கொஞ்சம் கன்சிடெர் பண்ணுங்க என்று உண்மை காதலில் கசிந்து உருகுபவள் போல் பேசினாள்….”
பொறுமையாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன், “எனக்கு அடிக்கடி மனசை மாத்திக்கிற பழக்கம் கிடையாது!” என்றான்.
“வ்வாவ்…. இந்த ஆட்டியுட் தான் என்னை உங்க பக்கம் ரொம்ப இழுக்குது” என்று வழிந்தாள்….
இது திருந்தாத கேஸ்!! என்று பதிலே பேசாமல் நடக்க ஆரம்பித்தான் சித்!!
இவளும் பின்னாலே சென்றாள், ஜன்னலில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஸ்வாதிக்கு மனம் நிலையில்லாமல் தவித்தது…ஓடிப் போய் சப்னாவிற்கு நாலு அறை விடணும் போல தோன்ற, “இப்போ எனக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது?” அவங்க எப்படியோ போறாங்க!!! என்று விட்டேத்தியாக இருக்க முயற்சி செய்தாள்…சற்று நேரம் அமைதியாக இருந்தவளால் பின் முடியவில்லை….
அடங்கு ஸ்வாதி! அந்த திமிர் பிடிச்சவன், உன்னை நியூசென்ஸ்னு சொன்னான் இல்ல…. இப்ப அந்த சப்னா பண்றதுக்கு பேரு என்ன என்று பொறுமினாள்….
சித் பின்னால் சென்ற சப்னாவே மனதில் நிற்க, அவர்கள் இருவரையும் பார்த்தே ஆக வேண்டும் என்று பரபரத்த மனதை அடக்க முடியாமல் ஸ்வாதியும் லைப்ரரி கட்டடத்தை நோக்கி நடந்தாள்..
செல்லும் போது அவள் இதயத்துடிப்பு அவளுக்கே கேட்டது.இவ்ளோ பதட்டம், படபடப்பு எதுக்கு என்று புரியாமல் அந்த பெரிய லைப்ரரியில் நுழைந்து அவர்களைத் தேடி அவள் பார்த்தது, ஒரு மூலையில் சித்தை இறுக்க கட்டிபிடித்துக் கொண்டு இருந்த சப்னாவையும் அவள் இரண்டு தோளிலும் கை வைத்திருந்த சித்தையும் தான்….
என்ன எதிர்பார்த்து வந்தாள் என்று தெரியாது அவளுக்கு, ஆனால் சத்தியமாக இதை எதிர்பார்க்கவில்லை. பார்த்து அதிர்ச்சி என்று கூட சொல்லமுடியவில்லை ஒரு மாதிரி மரத்து போனது போல் ஆயிற்று அவளுக்கு …பேசாமல் திரும்பி நடந்தாள்….
சப்னா பின் தொடருகிறாள் என்று தெரிந்தது சித்ற்க்கு. என்ன நடந்தாலும் பொறுமையை விட்றாதே என்று சொல்லிக் கொண்டான்.
அவன் அருகே வந்த சப்னா, “சித்!! உங்க எக்ஸ்பெக்டேஷன் என்னனு சொல்லுங்க, நான் என்னை மாத்திக்கிறேன்” என்று நல்லவள் போலவே பேசினாள்….
“ஐ திங்க யூ டோண்ட் அன்டர்ஸ்டாண்ட்!!! எனக்கு மனச மாத்திக்கிற ஐடியா இல்ல, சோ யூ பெட்டர் கிளீயர் திஸ் ப்ளேஸ்!!”
” சித், லவ்னு கமிட் பண்ண யோசிக்கிறீங்களா?? வேற மாதிரினா கூட எனக்கு ஓக்கே தான் என்று ஹஸ்கி வாய்சில் பேசி, அவனை நெருங்கியவள்……ஒரு நாள் என்கூட வெளியில வாங்க, நல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணுவோம்…. அப்புறம் முடிவு எடுக்கலாம் என்று வெளிப்படையாக பேசியவளை கண்டு அருவருத்து போனான் சித்…!
லைப்ரரியில் இருப்பதால, தன்னையே இன்னும் அடக்கி கொண்டான் சித். அடிக் குரலில் மரியாதையா இங்க இருந்து கிளம்பிடு, லைப்ரரினால சும்மா விடுறேன் உன்னை…. இல்லனா உன் முகம் இந்நேரம் இடம் மாறி இருக்கும் என்று உறுமினான்….
அப்படியா என்றவள், எப்படியும் அவனால் எதுவும் செய்ய முடியாது என்பதால் பெண்ணிடம் மனசு மயங்காவிட்டாலும் உடம்பு மயங்காத ஆண் இருக்க மாட்டான் என்று நினைத்தவள், சட்டென்று அவனை இறுக்கி அணைத்தாள்….
ஒரு நிமிடம் உறைந்தவன், பின் சுதாரித்து அவளை தோளில் கை வைத்து தள்ளி விடும் போது தான் ஸ்வாதி அவர்களை பார்த்தாள்… இன்னும் ஒரு நிமிடம் நின்று பார்த்திருந்தால் சித் அவளை கீழே தள்ளி விட்டதையும் பார்த்து இருக்கலாம்….
“என்ன நினைச்ச என்னை, உன் சீப் டாக்டிக்ஸ் எல்லாம் என்கிட்ட காட்டாத, அதுக்கு நா ஆளில்லை!” என்றபடி அங்கிருந்து நகன்றான்.
கீழே விழுந்தவள், அவன் சென்றவுடன் மெதுவாக எழுந்து அமர்ந்தாள். இவனை ஏதாவது பண்ணனும்….ஏதாவது பண்ணனும் என்று ஓலமிட்டது அவள் மனசு….. அவன் எப்படியும் இதை யாரிடமும் சொல்ல மாட்டான்…… கொஞ்ச நாள் அமைதியா இரு சப்னா அப்பறம் பெருசா ஏதாவது செய் அவனுக்கு என்று சொல்லிக் கொண்டாள்.
வெளியே வந்த சித், கொஞ்சம் அதிர்ந்து தான் போய் இருந்தான் அவளின் அதிரடியால்… சீக்கிரம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்!
செமஸ்டர் பரிட்சை நெருங்கவே, எல்லோரும் வெவ்வெறு மனநிலையில் இருந்தாலும் பரிட்சைகளை நன்றாக எழுதிவிட்டு விடுமுறையில் சென்றனர்.
விடுமுறையில் செல்லும் முன், ஏதேனும் ஒரு ப்ரொபசரின் உதவி இல்லாமல் சப்னாவின் விஷயத்தை முடிக்க முடியாது என்று உணர்ந்த சித்தும் பிரபாவும் அவர்கள் நம்பிக்கையை பெற்ற ஒருவரிடம் கலந்து ஆலோசித்து என்ன செய்யலாம் என்று முடிவெடுத்தனர்.
அவரின் உதவியோடு சப்னாவின் அம்மா நம்பரை கல்லூரி அலுவலகத்தில் இருந்து வாங்கி வைத்தனர்….
கல்லூரி திறந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் சென்றனர்.
ஓரு மாதம் சென்றதே தெரியவில்லை. விடுமுறையில் சித்திற்கு திடும் திடுமென ஸ்வாதியின் நினைவு வரும். ஓரு நாளில் பலமுறை அவள் நினைவு தான் அவனுக்கு. அவள் அழுத அன்று, அவளை அணைத்து சமாதானப்படுத்தவே விரும்பினான்… ஆனால் அதற்கான நேரம் வராததால் , அமைதியாய் இருந்தான்.
ஸ்வாதி, உன் கூட இருக்கும் போது, என்னையே எனக்கு ரொம்ப பிடிக்குது டா, என்னை அவ்ளோ ஹாப்பி யா வைச்சுக்கிற!!!! என்று சொல்லி சிரித்துக் கொண்டான்.
சித் கண்ணா! என்றபடி வந்த நிர்மலா, மகனின் மலர்ந்த முகத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு போனார்!! அவனின் பல சந்தோஷங்களை பல வருஷங்களாக பார்த்தவருக்கு இந்த வித்தியாசம் சற்றென்று புரிந்தது!!!!
“என்ன டா!! ஏதாவது ஹாப்பி நியூஸா?”
“இல்லையே, ஏன் மா?”
“ரொம்ப ஹாப்பி யா இருக்க மாதிரி இருக்கு?”
“ஆமா மா! நாளைக்கு காலேஜ் போக போறன்ல, அதான்!”
“அதுக்கு இவ்ளோ ஹாப்பி யா? அப்போ நம்ம வீட்டுல நீ ஹாப்பி யா இல்லையா? என்று சட்டென்று ஏற்பட்ட ஏமாற்றம், வருத்தம் என்ற கலவையான உணர்வுகளுடன் அவர் கேட்ட பின் தான்,
“அச்சோ சித்! அம்மாவை பத்தி தெரிஞ்சும் யோசிக்காமல் ஏதோ சொல்ற! சே! என்ன மா, என்னோட ஹாப்பி ப்ளேஸ் நம்ம வீடு தான்னு உங்களுக்கு தெரியுமே” என்று என்னென்னவோ சொல்லி சமாதானம் செய்தான்……
அன்று இரவு, டல்லாக இருந்த நிம்மியை பார்த்த குணா, ஆரம்பிச்சிட்டியா நிம்மி, இன்னும் ஒரு வாரம் சித் வர வரைக்கும், நா இந்த சேட் பேஸ் தான் பார்க்கணுமா? என்று வழக்கம் போல் கிண்டல் செய்தார்….
பதிலுக்கு பதில் ஏதாவது பேசும் நிம்மி, குணா என்று அவரை கட்டிக்கொண்டு அழ ,பயந்து விட்டார் அவர்…. என்ன மா, என்ன??
“என்கிட்ட பொய் சொல்றான் என் சித் கண்ணா! என்று அழுதார்.”
ஹஹா என்று அறையே அதிரும்படி சிரித்தார் குணாளன்… “பைனலி சித் வளர்ந்துட்டான்” என்று மீண்டும் சிரித்தவரை, புஜத்தில் குத்தினார் நிம்மி….
“சரி சொல்லு, எதை வைச்சு சொல்ற, அவன் பொய் சொல்றான்னு?”
“நீங்க இன்னிக்கு அவன் பேஸ் பார்த்து இருந்தா ஆச்சரியப்பட்டு இருப்பீங்க. அப்படி ஒரு மலர்ச்சி காரணம் கேட்டா, காலேஜ் போறதுக்கு தான்னு சொல்லிட்டான் என்று குழந்தை போல் உதட்டை பிதுக்கினார்!
“உண்மையிலே அவன் சந்தோஷம் காலேஜ்ல இருக்கலாம் இல்லையா?? நீ ஏன் சந்தேகப்படுற?”
“ஆம்பளைங்க நீங்க எல்லாம் தத்திங்க, எங்க உள்ளணர்வு
பெரும்பாலும் தப்பா போகாது…கண்டிப்பா இது லவ் மேட்டர் தான்…”
“சரி, உன் பேச்சுபடி பார்த்தாலும் காலேஜ்ல இருக்க பொண்ணா தான் இருக்கும் போல், உன்கிட்ட பாதி உண்மை சொல்லியிருக்கான்னு பிரீயா விடுமா…”
“மருமக வர்றத்துக்குள்ள நீ கொஞ்சம் மாறனும்,அவன் மேல இருக்க உரிமையை கொஞ்சம் தளர்த்திக்கோ என்று மனைவி மனம் நோகாதவாறு கூறினார் குணா..”
“என்னங்க அந்த பொண்ணு பேரும் எஸ்ல தான் ஸ்டார்ட் ஆகும் போல, எப்படி சொல்ற?”
“ஆங்! உங்க பையன் எஸ்னு வரைஞ்சு அது மேல பல தடவை வரைஞ்சு, அது தலையில் ஒரு குயின் சிம்பல் வேற போட்டு இருந்தான்!”
“நா பார்க்காத மாதிரி வந்துட்டேன் என்று நொடித்தார்”.
“சோ, என் நிம்மியும் வளர்ந்தாச்சு”! என்று மீண்டும் சிரித்தார் குணாளன்!!!
ஸ்வாதியோ, சித்ற்க்கு நேர்மாறாக, அவன் மேல் கடுங்கோபத்தில் இருந்தாள். அவனையும் சப்னாவையும் பார்த்த பின், என்ன நடந்து இருக்கக்கூடும் என்று யோசிக்க கூட அவள் தயாராக இல்லை…. அவர்கள் இருவரும் நின்ற கோலமே வந்து அவளை தூங்க விடாமல் பண்ணும்.என்கிட்ட பெருசா கத்துவான், இப்ப அவகிட்ட கொஞ்சுறான் என்பதே அவள் பிரதான கோவம்.
“அவங்க எப்படியாவது போய் தொலையாட்டும் போ!” என்று கூட சொல்லிக்கொண்டாள்…. ஏனோ மனம் ஆறவே இல்லை… எல்லாத்தையும் கோவமாக அவன் மேல் திருப்பி வைத்திருந்தாள்.
காதலாக சித்தும், கோவமாக ஸ்வாதியும் கல்லூரிக்கு வந்தனர்…