Kadhalil nan kathaadi aanen
Kadhalil nan kathaadi aanen
KNKA – 22
“என்ன டா, ஹீரோயின் டான்ஸ் முடிஞ்சு பக்கத்துல திரும்பினா ஹீரோவை காணும்! சரி பாராட்ட போய் இருப்பனு விட்டுட்டேன்…. எந்த மாதிரி பாராட்டு கொடுத்த?” என்று கண்ணடித்தான்…
அவன் கொடுத்ததை நினைத்துக் கொண்டான்…
“என்னடா ஒன்னும் சொல்லமாட்டேங்கிற?”
“ம்ம்…ம்ம் பாராட்டினது நான் இல்லை, ஸ்வாதி!!”
“ஏன் டா லவ் பண்ணா அடுத்தவனுக்கு புரியாத மாதிரி பேசுறேனு எதுவும் வேண்டுதல் வைச்சு இருக்கியா??”
“ச்சு.. ஏன் டா நீ வேற”
“என்ன ஆச்சு சித்? ஸ்வாதி என்ன சொன்னா?”
“சப்னா காலேஜ் விட்டு போனதுக்கு நா தான் காரணம்னு சொல்றா…..”
“இப்ப எதுக்கு சப்னா பத்தி பேசினீங்க ரெண்டு பேரும்?” என கரெக்ட்டா மேட்டர்க்கு வந்தான் பிரபா.
“சொல்லு டா!”
“அவ நல்லா தெளிவா குழப்பமா இருக்கா டா, அதான் தேவையில்லாதது எல்லாம் பேசுறா…”
“ம்ம்… நீ சொல்ல இஷ்டப்படலை.ஓக்கே… அப்புறம்…”
“நா நினைச்சது இனிமே சரி வராதுனு சொல்லிட்டு வந்துட்டேன்!”
“அவ கிட்ட தான சொன்ன… நீ என்ன நினைக்கிற அதை சொல்லு?”
“நண்பேன்டா!! எப்படி டா!”
“உன்னை தெரியாதா எனக்கு! ஏதோ யோசிக்கிற மாதிரி இருந்தியே தவிர, இந்த அழகு முகத்தில கப்பல் கவிழ்ந்த மாதிரி ஒன்னும் ரியாக்க்ஷன் இல்லையே! அதான்…”
என்ன தோன்றியதோ எழுந்து நண்பனை கட்டிக் கொண்டான்…. அவன் முகம் பார்க்காமல், “அவ அப்படி சொன்ன போது ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு!”
அப்பறம் ரூம்க்கு வந்து யோசிச்சு பார்த்த அப்போ, என் மேல இருந்த தப்பும் தெரிஞ்சது. அவளையும் டிஸ்டர்ப் பண்ணி, நானும் டிஸ்டர்ப் ஆகி முடியலை டா…. எனக்கே இப்படினா சின்ன பொண்ணு அவ நிலைமையும் புரிஞ்சுது அப்புறம் சரி ஆய்ட்டேன் என்றான்….”
“சூப்பர் மச்சி! நீ தெளிவா இருந்தா போதும், அவ எவ்ளோ வேணா குழம்பிட்டு வரட்டும் திரும்ப உன்கிட்டயே….”
“கண்டிப்பா வருவா! எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு, ஆனா அது வரை அவ பக்கமே போகக்கூடாது….பயங்கரமா டையாலக் எல்லாம் விட்டுட்டு வந்துருக்கேன்! ஹாஹா”
“முடியுமா உன்னால? ஒரு வாரத்துக்கே ஸார் மூஞ்சியை பார்க்க முடியலையே….”
“அது அவளை பார்க்காம இருந்ததால, இனிமே அப்படி எல்லாம் விடமாட்டேன் அவளை என்று சிரித்தான்…”
“ஓக்கே ஒக்கே! எங்களுக்கு நல்ல டைம் பாஸ் இருந்தா சரி தான்!”
“சரி, அவ ஏதோ பேசி தான் ஹர்ட் ஆய்ட்டே!!! அவளை திட்டலையா? அவ மேல கொஞ்சம் கூட கோவம் வரலையா, உண்மையா சொல்லனும்” என்றான் பிரபா.
“இல்லவே இல்ல! கோவமும் வரலை, திட்டணும் தோணக் கூட இல்லையே!! மோரோவர், அவ மேல தப்பே இல்ல. நா நினைச்சு இருந்தா அவளோட மிஸ்அன்டெர்ஸ்டாண்டிங்கை தெளிவு படுத்தி இருக்கலாம்…. வேணும்னு தான் வந்துட்டேன்….”
“ஏன்?”
” பயமா இருக்கு டா!!! அவளை விட்டு இப்படி அப்படி போக முடியலையே…. நல்ல படியா படிச்சு முடிக்க வேணாமா? அதுக்கு தான்…..”
” நீ இப்படி எல்லாம் பீல் பண்ணத்திலயா டா”?
“இல்லாமையா இருக்கும்?? நல்லா செட்டில் ஆகணும்னு நினைச்சு அதுக்கு எல்லாம் 144 தான்! சான்ஸ் கிடைச்சா லைட்டா எனர்ஜி ஏத்திக்கலாம், அதுவும் அவங்க மனசு வைச்சா தான் என்று கண்ணடித்து சிரித்தான்….”
இரண்டு பேரும் மனம் விட்டு சிரித்தனர்!!!
அறையில், கப்பல் கவிழ்ந்த மாதிரி இருந்தது ஸ்வாதியே தான்!!
“ஹாய் டி! என்றபடி வந்த ஹேமா, “உன்கிட்ட ஒன்னு சொல்லனும் டி!”
அய்யோ மறுபடியுமா, (நீ முதல்ல சொன்னதோட எபெக்டே இன்னும் முடியலைமா) சொல்லு டி!
“நா ஒரு வாரம் அவன்கிட்ட பேசாம இருந்ததில, இனிமே இந்த மாதிரி கேட்க மாட்டேன்னு சொல்லிட்டான்! எனக்கு இஷ்டம் இல்லாதது எதுவும் செய்யலைன்னு சொல்லிட்டான் டி. பசங்களுக்கு அவங்க லவ்வை இப்படி தான் எக்ஸ்பிரஸ் பண்ண வருமாம், அவன் சொன்னான் டி!! நாங்க பேசி எல்லாம் சரி பண்ணிக்கிட்டோம்…..”
” ஓ!! (இதை ஒரு வாரம் முன்னாடியே பேசி தீர்த்து இருந்தா, நா இப்படி ஆகி இருக்க மாட்டேனே!!!) அப்படி யா, சூப்பர், நல்லது தான்…”
ஆனா இந்த ஒரு வாரம் நா பேசாம இருந்து, இன்னிக்கு ஓவரா பேசி, அவன் மனசை ரொம்ப ஹர்ட் பண்ணி மொத்தமா இழுத்து மூடிட்டேன் எல்லாத்தையும் என்று அழுகையாய் வந்தது ஸ்வாதிக்கு…
இனிமே சித் பழைய மாதிரி என்னை கண்டுக்காம தான் இருப்பான் நினைக்கும் போதே, மனம் பாரமானது.
முதல் நாள் கல்லூரி விழா என்பதால்,இன்று கல்லூரி விடுமுறை. சித், வீட்டிற்க்கு போய் விட்டான். மற்றவர்கள் அனைவரும் அமர்ந்து விழாவைப் பற்றி பேச, ஸ்வாதி மட்டும் அமைதியாக இருந்தாள்…..
“என்ன மேடம்! எப்போ பார்த்தாலும் சில்லறையை சிதற விட்ட மாதிரி, உன் சிரிப்பு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும்! இன்னிக்கு என்ன ஆச்சு?”
“அதானே!!என்று மற்ற அனைவரும் அவனுக்கு பின்பாட்டு பாடினார்கள்!”
என்ன சொல்றதுனு தெரியாம, “இனிமே நான் அமைதியான பொண்ணா இருக்காலம்னு முடிவு பண்ணிருக்கேன்….”
“அச்சோசோ!! நீ பேசிட்டே இருக்கிறது தான் உனக்கு அழகு! இல்லனா எனக்கு போர் அடிக்குமே என்று கண் சிமிட்ட…..”
“அக்காஆஆ….என முறைத்தாள்!”
ஷங்கர் , “யானைனாவே குண்டு மாதிரி, ஸ்வாதினா ஓட்டை வாய்யா தான இருக்கணும்! எனவும் அவனை தொரத்தி அடித்தாள்.”எதுக்கு டா அதுக்கு யானை கூட கம்பேர் பணற…..”
அந்நேரம் சரியாக சித், பிரபாவிற்கு கால் பண்ணினான்….
“சொல்லு டா,”
“எங்க டா இருக்க,ரூம்ல யா?”
“இல்லல, சாப்பிட்டு இங்க எல்லாரும் இருந்தாங்க பேசிட்டு இருக்கேன்!”
“ஸ்வாதியை பார்த்தியா, எப்படி இருக்கா?”
சித், ஸ்வாதியை பற்றி கேட்டவுடன் தனியே எழுந்து சென்றான் பிரபா. அதை கவனித்த ஸ்வாதி, நான் இருக்கிறதால தான் தனியா வந்து பேச சொல்றாரோ என்று கஷ்டப்பட்டாள்…….
“மேடம் ஒரே சோக கீதம் தான், இனிமே அமைதியா இருக்க போறாங்களாம்……எனக்கு என்னவோ இந்த மூஞ்சியை பார்க்க முடியாமலே நீ சீக்கிரம் பேசிருவனு நினைக்கிறேன்…..”
“ஹாஹா பார்ப்போம்… இருக்கலாம்….”
“செமஸ்டர் எக்ஸாம்ஸ் முடிஞ்சு எல்லாரும் எப்ப ஊருக்கு போவாங்கனு கேட்டு சொல்றியா டா? அப்பா அம்மாவோட வெட்டிங் அனிவெர்சரிக்கு வீட்டுல சின்ன பார்ட்டி பண்ண போறோம்…. அம்மா இந்த வருஷம் உங்களை எல்லாம் இன்வைட் பண்ணனும்னு ஆசைப்படுறாங்க!!”
“செம மச்சி, அன்னிக்கே இது தான் உங்க மருமகனு காமிச்சிடலாமா??”
“டேய்! டேய்! மூச்! ஸ்வாதி கோர்ஸ் முடிக்கணும்… நானும் மாஸ்டர்ஸ் முடிச்சிட்டு தான்…..”
அந்த வாரம் ஆரம்பித்து இரண்டு நாள் அமைதியாக இருந்து பார்த்தாள் ஸ்வாதி. சித், அவளை பார்த்தால் லைட்டா ஸ்மைல் மட்டும் செய்வான்…அவள் பக்கத்தில் கூட வர மாட்டான்! (அவன் கை என்ன பண்ணலாம்னு பார்க்குமே, அதுக்கு தான்).
அவனிடம் நேரிடையாக கேட்காமல், நானே முடிவு செய்து தப்பு தப்பா பேசியதால் தான் இப்படி இருக்கிறான் என்று புரிந்தது ஸ்வாதிக்கு.
ஒரு பதில் கூட இல்லாம, “ஓ! நீ அப்படி நினைச்சுக்கிட்டியா,பை பை னு சொல்லிட்டு போய்ட்டான் என்று காண்டு ஆனாள்… அவ்ளோ தானா!!”
அவர்களுக்குள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ஆனால் அவன் அவளிடம் நடந்துக் கொண்ட விதம், அவளும் அவனை அனுமதித்தது எல்லாம் சேர்ந்து, அவளுக்கு எல்லாம் புரிந்தது…..
“இருக்கட்டும் இருக்கட்டும், பார்த்துக்கிறேன்!!”
புதன் கிழமை, சித் மட்டும் கேண்டீன் போவதை பார்த்தவள், ஓடிப் போய் அவன் முன்னால் நின்றாள்!!!
ஒரு நிமிடம் ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு, ஒதுங்கி போவாள் இனி என்று நினைத்தால், இப்படி வந்து நிற்கிறா? அவள் வந்தது அவ்ளோ சந்தோஷம் அவனுக்கு… என்ன தான் சின்ன பெண் என்று ஒதுங்கி போனாலும், அவள் மனதில் தான் இருப்போமா இல்லையா என்று …..
“என்ன ஸ்வாதி?”
“என் மேல கோவமா?”
“இல்லையே!”
“வருத்தமா அப்போ?”
“அதெல்லாம் இப்போ எதுக்கு?விடு!”
“ஐயம் ரியலி வெரி ஸாரி!!”
“சொன்னது தப்புன்னு இப்ப மட்டும் எப்படி தெரிஞ்சுது?”
“அது அறியாத வயசு, அதனால சின்ன பிள்ளை ஏதோ சொல்லிடிச்சுனு புரிஞ்சுக்கனும்!”
“ஓ! ஒரு வாரத்தில் என்ன ஆச்சு அந்த அறியா பிள்ளைக்கு?”
“வளர்ந்துடுச்சு, இப்போ வாலிப வயசு!!!”
“ஹாஹா ஹா…. ஒரே வாரத்தில எப்படி வாலிப வயசு வந்துச்சு?”
சித், அவன் உணர்வுகளை வெளிப்படுத்தி காதலை சொன்னான், அவள் அவனிடம் வார்த்தையில் சொல்ல விரும்பினாள்…..
“சித்னு ஒருத்தர் மேஜிக் பண்ணி வளர வைச்சுட்டார்..அவர் மனசு கஷ்டப்பட்டா எனக்கு தாங்கலை! அவர் எனக்கு ரொம்ப முக்கியம்னு தெரிஞ்சுடிச்சுனு சொல்லிட்டு ஓடி விட்டாள்….”
ஏதோ காமெடி பண்ண போறானு பார்த்த சித், இப்படி ப்ரோபோஸ் பண்ணுவானு எதிர்பார்க்காததால் பேச்சு இழந்து போனான்…. தான் சொல்லாவிட்டாலும் அவளே வந்து சொல்லியது அவனை மிகவும் உணரச்சிவசப்பட வைத்தது. என் மேல் எவ்வளவு அன்பு இருந்தால், எதையும் எதிர்பார்க்காமல் அவளே காதலை சொல்லுவாள் என்று நினைத்து நினைத்து பூரித்து போனான்…..
எப்போதும் போல், ஸ்வாதி விஷயத்தில் நான் எதிர்பார்க்காதது தான் நடக்கும், அதுவும் மிகவும் சந்தோஷமானதாக இருக்கும்!!