Kadhalil nan kathaadi aanen
Kadhalil nan kathaadi aanen
kNKA – 24
விடுமுறை எல்லாம் முடிந்து இரண்டாம் வருடத்தில் காலடி வைத்தனர் ஸ்வாதி அண்ட் பிரெண்ட்ஸ்.
கடைசி வருஷம் என்ற சந்தோஷம், வருத்தம் என்ற கலவையான மனதுடன் இருந்தனர் சித் அண்ட் பிரெண்ட்ஸ்…
ஸ்வாதி, “நீங்க இல்லாமை இரண்டு வருஷம் இங்க படிக்கணும்னு நினைச்சாவே கஷ்டமா இருக்கு….”
சித், “உன்னை இரண்டு வருஷம் பார்க்கக்கூட முடியாதேனு நினைச்சு நா வருத்தப்படுறேன்!” அதை கேட்டவுடன் கண் எல்லாம் கலங்கி, வரவா என்று நின்றது கண்ணீர்…..
“மம்ப்ச்…. அழக் கூடாது…. இப்படி தான் நடக்க போகுதுனு முன்னாடியே தெரியும்ல நமக்கு,வேற சாய்ஸும் இல்லடா இப்போ. ஆனா, “ஐ ப்ரோமிஸ் யு! படிச்சிட்டு வந்து உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்… ஓக்கே!”
“ம்ம்..ம்ம்.. ஆன்ட்டி எதுவும் கேட்டாங்களா என்னை, இல்ல நம்மளை பத்தி?”
“ஹே! அவங்களுக்கு எதுவும் தெரியாது. பிரெண்ட்ஸ்னு மட்டும் தானே சொன்னனேன்……”
“நீங்க அப்படி நினைச்சிட்டு இருக்கீங்க! ஆனா ஆன்ட்டிக்கு ஏதோ தெரிஞ்சு இருக்கு….”
“அப்படியா எப்படி சொல்ற…..?”
உங்க அம்மா என்னை பார்த்த பார்வையே சரி இல்லனா சொல்ல முடியும்? “அது பொண்ணுங்களுக்கே இருக்க இன்ஸ்டிங்க்ட்!” என்று மாமியார் போலவே கூறினாள்….
“அப்போ ரொம்ப நல்லது, வேலை ஈஸி!” என்றவனை வியந்து பார்த்தாள்…
“உங்களுக்கு பயமா இல்லையா, படிக்கிற அப்போ இது தேவையானு திட்ட மாட்டாங்களா…..?”
“மே பி, நீ சொல்ற மாதிரி கேட்கலாம், சான்ஸ் இருக்கு!”
“ஆனா நான் இப்ப உன்கூட சுத்திக்கிட்டு, படிக்காமல் இல்லையே…. எனக்கு ஸ்வாதி தான்னு மனசு பிக்ஸ் ஆச்சு. அதை சைடுல வைச்சுட்டு நம்ம வேலையை ஒழுங்கா பார்த்தா என்ன சொல்ல முடியும்…. நாமளே பொறுப்பா இருக்கோம்னு தெரிஞ்சா, பேரண்ட்ஸ் மினிமல் கண்டிப்பு தான் காட்டுவாங்க…… சோ மேடம் நீங்களும் நல்லா படிக்கணும் . ஓக்கே!”
“உங்க வீட்டுல எப்படி ரொம்ப ஸ்ட்ரிக்டா?” என்றான் ஸ்வாதியிடம்.
“மத்த விஷயத்தில இல்ல, ஆனா இந்த மேட்டர்ல எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு நிஜமா தெரியலை!”
“பயமா இருக்கா உனக்கு?”
“நா லவ் பண்ணது தப்புனு வேணா அவங்க கோவப்படலாம், வருத்தப்படலாம்….அவங்க ஹர்ட் ஆனதுக்கு மன்னிப்பு கேட்டிடுறேன்…. ஆனா லவ் பண்ண பையன் மேல குறையே சொல்லமுடியாதே!” என்று நிறைந்த மனதுடன் சிரித்தவளை ஸ்வாதி மா!! என்று கண்களால் கபளீகரம் செய்தான்!
காலமும் நேரமும் யார்க்கும் நிற்காமல் ஓடியது….சித் கடைசி வருஷமும் முடித்து , இன்னும் ஒரு மாசத்தில் மாஸ்டர்ஸ் படிக்க அமெரிக்கா போக போறான் என்ற நிலையும் வந்தது….
மீண்டும் மகாபலிபுரம் சென்றிருந்தார்கள்…. இம்முறை ஜோடிகள் மட்டுமே. பிரபா பத்மினியின் கதையும் தெரிய வந்து, “இன்னும் இரண்டு வருஷத்துக்குள்ள நானும் நீயும் ஏதாவது பார்த்து முடிக்கணும் டா “என்று பொருமினான் ஷங்கர்……
“அவங்களை மாதிரி ரெசிஸ்ட் பண்ண முடியாத அளவுக்கு தோணனும் டா, அப்போ தான் நல்லா இருக்கும் என்று உணர்ந்து கூறினான் சூர்யா!”
இரு ஜோடிகளும் தனித்தனியே சென்று விட்டார்கள்… பிரிவு நேர போகிறதால் தனிமை தேவைப்பட்டது. கொஞ்சம் நேரம் கழித்து ஒரு இடம் சொல்லி அங்கே பார்க்கலாம் என்றபடி…
சித்தின் தோளை விட்டு தலையை எடுக்கவே இல்லை ஸ்வாதி!!!
“ஏய்! ஏதாவது பேசு மா, வாயே மூட மாட்ட! இன்னிக்கு என்ன பேசவே மாட்டேங்கிற….”
” மனசே பாரமா இருக்கப்போ, பேச்சு எங்கிருந்து வரும்.?அதான் டோட்டல் ஆஃப்”
அவள் கையை எடுத்துக் கைக்குள் வைத்து தடவி கொடுத்தவன், அவளை தோளோடு அணைத்துக் கொண்டு, “எனக்கும் தான் கஷ்டமா இருக்கு என்றான்.”
இன்று அவன் ஸ்வாதியின் நெருக்கமான அண்மையை மிகவும் விரும்பினான்… அவளை விட்டு பிரிந்து செல்ல போவதால் அவள் இதழ் முத்தம் வேண்டும், ஆனால் அவள் என்ன நினைப்பாளோ என்று கேட்பதற்கு திண்டாடினான்….
அந்த கல்லூரி விழாவிற்க்கு பிறகு அவர்கள் அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளவே விரும்பவில்லை……
ஸ்வாதி, “நா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க கூடாது என்று பீடிகை போடவும்…”
“ம்ம்.. உன் சித் நான், அதனால் யோசிக்காம எது வேணா கேளு!”
கீழே பார்த்துக் கொண்டே…. “எனக்கு ஒரு கிஸ் வேணும், எனக்கு ரெண்டு வருஷம்னு நினைச்சலே அழுகையா வரு….”என்று அவளை சொல்லி முடிக்கக் கூட விடவில்லை…
“ஸ்வாதி! என பாய்ந்து அவள் இதழை கவ்விக் கொண்டான். அவனும் ஏக்கமாக அல்லவா இருந்தான்…மென்று மென்று தின்றான், அவன் கை கட்டுப்பாடே இல்லாமல் எங்கெல்லாம் போக முடியுதோ, அங்கெல்லாம் போய் வந்தது….போதுமென்ற மனமே வரவில்லை….
அவள் இதழில் இருந்து இறங்கி சற்று நேரம் கழுத்தில் கொஞ்சி, அவளை மொத்தமாக கீழே சாய்த்து அவள் மீது அழுந்த படுத்தான். ஸ்வாதியை இறுக்கி அணைத்தான். அவனை தன் மேல் உணர்ந்தவள், அவன் செய்யும் மாயாஜாலத்தில் மயங்கி கிறங்கினாள்…. மீண்டும் ஒரு முத்த யுத்தம் நடத்தியபின் தான் அவளை விட்டு எழுந்தான்……
எழுந்தவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, அவளையும் எழுப்பி உட்கார வைத்தான். கொஞ்சமாக சிவந்து இருந்த உதடு, மொத்தமாக கலைந்திருந்த அவள் என பார்க்க பார்க்க ஆசை கூடியது… ஆனால் கட்டுப்படுத்தக் கொண்டவன்…. வெறுமனே இழுத்து அணைத்துக் கொண்டான்…..
அவளும் அவளை சரி செய்துக் கொண்ட பின், “நீ ஒரு சர்ப்ரைஸ் பேக்ஏஜ் எனக்கு! நா எதிர்பார்க்காததை தான் சொல்லுவே, செய்வ ஆனா அது எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும் என்று நெற்றியில் முத்தமிட்டான்”….
” நமக்கு ப்ரோப்ளேம் வந்த அன்னிக்கு அப்புறம் நாம் அதை பத்தி நினைக்கவே இல்லை, இப்ப நீங்க தூரமா….”
“ஷ்ஷ். நீ என்கிட்ட பேசுறதுக்கு பண்றதுக்கு எதுக்கும் எக்ஸ்பிளனேஷன் வேண்டாம்… ஓக்கே. பிரீயா விடு… இன்னைக்கு நானும் உன்னை கிஸ் பண்ற பிளான்ல தான் இருந்தேன்!” என்று கண்ணடித்து சிரித்தான்.
“இது இரண்டு வருஷம் தாங்குமா?” என்று அவளை வம்பு இழுத்தான்….
வெட்கப்பட்டாலும், “நம்ம பேசினது, ஷேர் பண்ணது எல்லாத்தையும் இதோட சேர்த்து போதும்” எனவும்
“ஆனா எனக்கு போதாதே என்றான் ஏக்கமாக…பெரு மூச்சு விட்டபடி வேற வழியும் இல்ல….என்று பேபி கிஸ் பண்ணினான் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டு.”
பின் அனைவரும் சேர்ந்து சற்று நேரம் அரட்டை அடித்தபடி சுற்றிவிட்டு கிளம்பினார்கள்….
சித்துக்கு கிளம்பும் முன் நிறைய வேலைகள் இருந்ததால், அவளுடன் தொலைபேசியில் மட்டும் பேசினான்…
கிளம்பும் நாளும் வந்தது, ஏர்போட்டுக்கு போக விரும்பவில்லை ஸ்வாதி.”சும்மாவாவது உன்னை பார்ப்பேன்ல மா, வரலாம் இல்ல!”
“இல்ல சித், அது ஆன்ட்டிக்கும் அங்கிளுக்கும் உள்ள டைம்!”
“நாங்க டெய்லி தான் பார்த்துக்கிட்டு இருக்கோமே இப்போ, உன்னை பார்த்து தான் த்ரீ வீக்ஸ் ஆச்சு…”
” நீங்க யூஸ் போய் செட்டில் ஆன அப்புறம் வீடியோல பேசலாம்..”
“மிஸ் யூ மை சிப்பர்…”(Chipper)
“ஹான்… சிப்பரா? இது என்ன செல்ல பேரா! ஏதோ வாட்டர் பாட்டில், சிப்பர் மாதிரி இருக்கு!”
“ஹாஹா, நீ என்னை எவ்ளோ உயிர்ப்பான ஆளா வைச்சு இருக்கனு உனக்கு தெரியாது. அதுக்கு தான் அந்த பேரு!”
மறுநாள் ஏர்போர்ட்டில் நிம்மி அவன் கையை விடாமல் அமர்ந்து இருந்த போது ஸ்வாதி எவ்ளோ யோசித்து சொல்லி இருக்காள் என்று அவள் மேல் இன்னும் காதல் பொங்கியது….. அவள் வந்து இருந்தால் அவனால் அவளிடம் பேச கூட முடிந்து இருக்காது…
பிரபா, ஷங்கர் மற்றும் சூர்யா எல்லாரிடமும் விடை பெற்று கிளம்பினான். பிரபாவே, “நாங்க மேடமை பத்திரமா பார்த்துக்கிறோம்” எனவும் வழக்கம் போல ஆமாம் போட்டனர் மற்ற இருவரும்…..
பிரபா, ஐஐஎம், பூனேயில் எம்பிஏ படிக்க போகிறான்… நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டான்.
பத்மினி சென்னையிலேயே ஒரு கம்பெனியில் சேர்ந்து விட்டாள் அவள் ஆசைப்படி….
சூர்யா, ஷங்கர், பிருந்தா மற்றும் ஸ்வாதி மீதம் இருந்த இரண்டு வருடங்களை என்ஜாய் செய்துக் கொண்டே படித்தார்கள். பத்மினிக்கு நேரம் கிடைத்தால் இவர்களுடன் வெளியே செல்வாள்.
அவரவர் செய்யும் எல்லாவற்றையும் அவர்கள் குரூப்பில் ஷேர் செய்துக் கொள்வார்கள் ,அதனால் ஒருவரை ஒருவர் ரொம்ப மிஸ் பண்ணுவது போல் இருக்காது!
தனியாக வாரம் ஒரு முறை, நிறைய நேரம் பேசுவான் சித் அவனின் சிப்பருடன்.
“உன்கிட்ட பேசுறது தான் எனக்கு ஒரு வாரத்திற்கான எனர்ஜி தருது ஸ்வாதி மா!!” சிப்பர் மிகவும் அரிதாக தான் அவன் வாயில் வரும்… அவள் பெயர் சொல்லிக் கூப்பிடுவதை தான் விரும்புவான்…
“ஆனா உங்ககிட்ட பேசினா அடுத்த இரண்டு நாளுக்கு எனக்கு தூக்கம் தூக்கமா வரும் சித்! என சொல்லிவிட்டு நிறுத்த முடியாமல் சிரித்தாள்….”
“நீ இப்படி தானே எப்போதும் ஏதாவது பல்ப் கொடுப்ப, பரவாயில்லை போ என்று அவனும் சிரித்தான்.”
நேர வித்தியாசம் காரணமாக அவளை நடுராத்திரிக்கும் மேலாக பிடித்து வைத்துக் கொண்டு கடலை போட்டால் அவளும் தான் என்ன செய்வாள்….. சில நேரம் வீடியோ காலில் அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே தூங்கி விடுவாள், இவன் அவள் தூங்குவதையும் பார்த்தபடி தன் வேலைகளை பார்ப்பான்…. அவள் போனே சுவிட்ச் ஆஃப் ஆனால் தான் உண்டு