Kadhalil nan kathaadi aanen
Kadhalil nan kathaadi aanen
KNKA – 10
இதெல்லாம் உனக்கு தேவையா சித்? யாரு எப்படி போனா உனக்கு என்ன? நீயா இப்படியெல்லாம் பண்ற? என்று மனசாட்சி கேள்வி கேட்டது!!
அதானே பேசாம பிரபா கிட்ட சொன்ன மாதிரி ரூம்க்கு போயிடலாம் என்று ஒரு மனசு சொன்னது……
என்ன காரணம் என்று சொல்லாமல் , இன்னொரு மனசு , சும்மா பண்ணு டா, ஏதோதோ யோசிச்சு சொதப்பிடாத, இது ஒரு நல்ல சான்ஸ்! என்று சவுண்ட் விட்டது.
என்னை கீழே தள்ளி விட்டதுக்கு, என்னை கிண்டல் பண்ணியதற்கு என்று வைச்சுக்கலாம் என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். அவன் அவளை திட்டியதெல்லாம் ஈஸியா விட்டுட்டான்!!
படம் ஆரம்பித்து எப்படியும் நாற்பது நிமிஷம் இருக்கும், போதும் உன் பிரண்ட் கூட இருந்தது ஸ்வாதி என்று நினைத்துக்கொண்டே சூர்யாவிற்கு அழைத்தான்.
சத்ததில் பேச முடியாது என்று வெளியில் வந்த சூர்யா , இவனை பார்த்து ஆச்சரியபட்டு , “இங்கயா இருக்கீங்க சீனியர்?”
“ஆமா, இந்த வாரம் போகலை. நீ அன்னிக்கு பிரபா கிட்ட ஒரு நோட்ஸ் கேட்டியே , என் ரூமில் இருக்கு. வர்றியா தரேன் எனவும், மறுத்தால் மரியாதை இல்லை என்று தெரிந்தவன் “மேலே போய் ஸ்வாதி கிட்ட சொல்லிட்டு மட்டும் வரவா ?”என்று கேட்க “ஷ்யூர் !” என்றான்.
போயிட்டு வந்தவனிடம், “இப் யூ டோன்ட் மைண்ட், என் நோட்ஸை இன்னிக்கே ரிடர்ன் பண்ண முடியமா என்றான்?”அப்போ தானே ரொம்ப டைம் ஆகும்!!!
“ஓக் கே சீனியர்!” என்றதும் , சாவியை கொடுத்து வேலை முடிந்து என் நோட்ஸை ரூம்ல வைச்ச அப்புறம் கால் பண்ணு, நான் கொஞ்சம் வெளியே போறேன் என்றான்.
சூர்யா சென்றதும், வெளியே போகலாம் என்று நினைத்தான், ஆனால் ஸ்வாதியை பார்க்க வேண்டும் என்று சண்டித்தனம் பண்ணியது மனது.
ஹாலில் பெரிதாக கூட்டமில்லை , ஆங்காங்கே அமர்ந்திருந்தார்கள். இவன் ஏன் என்று தெரியாமலே ஸ்வாதி இருந்த வரிசையில் இரண்டு சேர் இடைவெளியில் அமர்ந்தான்.
சூர்யாவும் இல்லை, பத்மினியும் வரவில்லை பேசாமல் போய் விடலாமா என்று யோசித்தபடியே படம் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
யாரோ வந்து அமர்ந்ததும் , சூர்யா தான் வந்து விட்டான் போல் என்று நினைத்துக்கொண்டு , ஏன்டா! இவ்ளோ தள்ளி உட்கார்ந்த என்று கேட்டபடி கிட்டே செல்லவும் , இருட்டில் யார் என்று தெரியாவிட்டாலும் சூர்யா இல்லையென்று புரிந்துக்கொண்டவள், வேகமாக திரும்பி செல்ல முயன்றவள் தடுமாறி சேரில் இடித்து சித்தின் மேல் போய் அவனை அணைப்பது போல விழுந்தாள். அவள் மெதுவாக விழுந்ததால் இருவரும் கீழே விழவில்லை. அணைத்தாற் போல விழுந்தவளை நன்றாக அணைத்துக்கொண்டான் சித். அவளை தன் மேல் உணர்ந்தவனுக்கு இருக்கும் இடம், எதற்காக இங்கே வந்தான் எல்லாம் மறந்தது!
யார் மேலோ விழுந்து விட்டோம், அவனும் அழுத்தி அணைக்கிறான் என்று ஸ்வாதிக்கு புரிய , திமிறினாள்….
ஏ…யாரு நீங்க….. விடுங்க என்னை…. என்று எழ முயற்சி செய்தவளை,
“ஸ்வாதி நான் தான்!!” என்ற குரல் அமைதி அடைய செய்தது. பேர் சொல்லாமலே சித் என்று தெரிந்தது!!! தெரிந்தவர் தான் என்ற நிம்மதி. மெதுவாக எழுந்துக் கொள்ள முயன்றவளை , விடவில்லை அவன். அணைத்திருந்தவளை மீண்டும் இறுக்கி அணைத்து , அவன் கை அவள் முதுகெங்கும் தடவ , உதடு கழுத்து வளைவில் சூடான வேகமான முத்தங்களை பதித்தது.
ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை ஸ்வாதிக்கு, புரிந்த பின் , வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து அவளை பிய்த்துக் எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள் ஸ்வாதி.
அவள் ஓடிய பின் அவன் பிரமை பிடித்த மாதிரி அமர்ந்து விட்டான். நான் என்ன பண்ணி வைச்சு இருக்கேன்!!! அய்யோ! என்று தலையை பிடித்து அமர்ந்து விட்டான். அவ்ளோ வீக்கான ஆளா நான்? சான்ஸ் கிடைத்தவுடன் சின்ன பொண்ணை இப்படி செய்தால் , எனக்கும் , தப்பு பண்றவங்களுக்கும் என்ன வித்தியாசம்!!! சே! ,
நானா இப்படி பண்ணினேன்!! அதுவும் ஒரு பர்ஸ்ட் இயர் சின்ன பொண்ணு!! கடவுளே!!!
தட தட வென்று ஓடினான் சித், பிரபா இருக்கானா என்று பார்த்தான். தூரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நாளைக்கு ஸ்வாதி என்னை பற்றி சொன்னா, நான் எப்படி இவங்களை பேஸ் பண்ணுவேன்!!!
சம்பந்தமே இல்லாமல் , அவன் அப்பா பள்ளியில் படிக்கும் போது சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்தது, நீ செய்யறதை, செஞ்சதை உன்னால வெளிலே சொல்ல முடியலைனா, நீயே தெரிஞ்சுக்கலாம் நீ செய்யறது தப்புனு!
பிரபா என்று உரக்க அழைத்தான்! கிட்டே வருமாறு சைகை செய்தான். குற்ற உணர்ச்சியும் , பதட்டமும் சேர்ந்து அவன் வேக வேக மூச்சுகள் விட்டான்.
வந்தவன், தாறுமாறாக மூச்சு விடும் சித்தினை பார்த்து பயந்து விட்டான்!! என்னடா ? என்ன பண்ணுது? ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு? வா டாக்டர் கிட்ட போலாம் என்று படபடத்தான்.
நா … உ ….உடனே ஸ்வாதி கிட்ட தனியா பே …பேசணும் இல்லை பார்க்கணும். ப்.. ப்ளீஸ், ஏன்னு அப்புறமா சொல்றேன்!!
சரி சரி , இரு….. ரிலாக்ஸ் ….. மூச்சை பொறுமையா இழுத்து விடு, நான் போய் கூட்டிட்டு வரேன்.
ரூம்மில் இருந்த ஸ்வாதிக்கு படபடப்பு குறையவே இல்லை.இதயம் வெளியே வந்து விடுமோ என்னும் அளவுக்கு இருந்தது. ஏன் இப்படி செஞ்சாங்க என்று அழுகை, பயம் எல்லாம் வந்தது…..
என்ன தான் தன்னை திட்டினாலும், முறைத்தாலும் அவன் தப்பானவன் இல்லை என்று அவளுக்கு தெரியுமே!!! அதனால் தானே இவளும் அவனை கிண்டல் செய்வது போல் பதில் கொடுப்பாள்….
பத்மினியின் உதவி இல்லாமல் ஸ்வாதியை கூப்பிட முடியாது என்று , அவளிடம் சென்று, ஸ்வாதியை கூட்டிட்டு வா, சித் பார்க்கணுமாம் , எதுக்குனு கேக்காத, எனக்கும் தெரியாது, ஆனா ப்ளீஸ் , மூணு வருஷமா சித்தை உனக்கு தெரியும், அவன் மேல் இருக்க நம்பிக்கையில் செய்…..
பத்மினி சென்று சித் உன்னை பார்க்கணுமாம் என்றதும் ,… ஏன்? ஏன்? என்று வேகமாக அவள் கேட்டதில் , ஏதோ நடந்து இருக்கிறது என்று புரிந்துக்கொண்டவள் …..
ஹேய்…. பயப்படாதே, அவன் உன்கிட்ட ஏதோ பேசனுமாம் , நாங்க எல்லாம் அங்க தான் இருப்போம்…. அவன் நல்ல பையன்..சோ பயப்படாத வா என்று கூப்பிட்டுக்கொண்டு சென்றாள்.
அவர்கள் இருவரையும் தனியே விட்டு , இவர்கள் இருவரும் சற்று தள்ளி நின்று கொண்டார்கள். பிரபா ,பத்மினி இருவருமே சித், ஸ்வாதியை மோசமாக திட்டி இருக்க கூடும் என்று தான் நினைத்தார்கள்…..
சித், கொஞ்சம் கூட யோசிக்காமல் , என்னை மன்னிச்சுடு ஸ்வாதி, நா பண்ணினது பெரிய தப்பு… ஏன் அந்த நேரம் நான் அப்படி செஞ்சேன்னு எனக்கே தெரியலே….ரீயலி இ பீல் அஷேம்ட் ….
உன்னால என்னை மன்னிக்க முடியலைனா , உனக்கு என்ன பண்ணினா சரி ஆகுமோ , அது எல்லாத்துக்கும் நான் ஒத்துக்கிறேன். அவள், அவன் மேல் கம்பெளையின் பண்ணினாலும் சம்மதேமே என்கிற மாதிரி கூறினான்.
அவன் செய்தது தவறு தான். அதற்காக வருந்துகிறேன், மன்னித்துவிடு என்பவனிடம் , உடனே என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க, ப்ளீஸ் ஏதாவது சொல்லு… என்னால இந்த கில்ட் பீலிங்கை தாங்க முடியலை என்று கண் கலங்கி விட்டான்.
அய்யோ சார், நீங்க ….நாம….. இதை மறந்துடுவோமே…. இப்படி ஒன்னு நடக்கவே இல்லனு நினைச்சுக்கலாம்… நா இதை பத்தி யாருக்கிட்டேயும் சொல்ல மாட்டேன். நீங்க இவ்ளோ வருத்தப்பட்டதே போதும். விடுங்க….என்றாள்.
சற்று நேரம் இருவருமே அமைதியாக நின்றார்கள். பின் அவள் நா கிளம்பவா எனவும், மறுபடியும் நன்றி சொல்லி, ” நீ என்னை மன்னிச்சியா தெரியாது? ஆனா நீ சொன்னது எனக்கு நிஜமாவே கொஞ்சம் ஆறுதலா இருக்கு தேங்க்ஸ் என்றான்.”