Kadhalil nan kathaadi aanen
Kadhalil nan kathaadi aanen
kNKA – 11
“என்ன தான் டா ஆச்சு?”
ரூமிற்கு வந்து விட்டத்தை பார்த்து படுத்து இருந்த சித்திடம் கேட்டான் பிரபா!
என்ன தான் நெருங்கிய நண்பன் என்றாலும், இதை சொல்லவே அசிங்கமாக இருந்தது அவனுக்கு!
அவனின் தயக்கத்தையும் , அவன் முகம் காட்டிய பாவத்திலும் நடந்தது என்னவென்று தெரியாததால் , “என்னவா இருந்தாலும் பிரீயா விடுறா!
நீ, இப்படி இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு டா !” என்றான் பிரபா.
“பிரபா, நானா இப்படியெல்லாம் பண்ணினேனு என்னாலையே நம்ப முடியலை டா…..! அதை விட ஏன் அப்படி செஞ்சேன்ற குற்ற உணர்ச்சி தான் என்னை ரொம்ப மோசமா பீல் பண்ண வைக்குது டா…..!”
என்ன பண்ணினான் என்று தெரியாமல் என்ன சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தான் பிரபா.
“நீ செஞ்சத்துக்கு ரொம்ப வருத்தப்படுறனு புரியுது… ஒன்னு தான் சொல்லணும் நினைக்கிறேன், உன்னை மாதிரி ஒரு ஆளு கண்டிப்பா தெரிஞ்சே எந்த தப்பும் பண்ணமாட்டான் , அப்படியே பண்ணிட்டாலும், அதை சரி பண்ண நினைச்சல்ல…. அது போதும் டா. நடந்ததை இனிமே மாற்ற முடியாது, இது உனக்கு லைப்பில் ஒரு பாடமாகவோ , அனுபவமாகவோ எடுத்துக்கோ…..!”
அவன் மனமோ…. “இவ்ளோ செல்ப் கன்ட்ரோல் இல்லாம , இமோஷன்ஸ் என்னை ஓவர்டேக் பண்ணற அளவு வீக் பெர்ஸனா நான் …. !” என்றே வருந்தினான்.
எல்லாருக்கும் ஒரு வீக் மொமண்ட் இருக்கும், அதனால் நம்ம இயல்பை மீறி சில விஷயங்கள் செய்திடலாம்….எல்லாத்தையும் எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தவன் சராசரி மனிதன் இல்லையே….!
என்ன தான் மன முதிர்ச்சி இருந்தாலும், சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் , அதில் அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது தானே ஒருத்தரை இன்னும் பக்குவப்படுத்தும்.
அவன் அமைதியா இருக்கிறதை பார்த்த பிரபா, ” நீ இவ்ளோ வருத்தப்படுற அளவு ஒன்னும் இல்லனு நினைக்கிறேன், ஸ்வாதி ஓக்கே வா தான் இருக்களாம்!!” இப்போ தான் பத்மினிக்கு மெசேஜ் பண்ணி கேட்டேன்.
“ம்ம்… தேங்கஸ் டா மச்சான்…!” என்றவன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான்.
ஆரம்பத்தில் இருந்தே அவள் விஷயத்தில் ஏதோ ஒரு சறுக்கல் அவனுக்கு…. அவளை கண்டாலே அவன் எண்ணமும் செயலும் வேறு வேறாக மாறிவிடுவது தான் அவன் பிரச்சனையே…
அவளை திட்டுவது, முறைப்பது, திட்டம் போட்டது என்று அவன் இயல்பை மீறிய , அவனுக்கு துளியும் தேவையில்லாத செயல்கள். இந்த அணைப்பு, முத்தம் எல்லாம் எல்லை மீறிய செயல்கள்.
அவ என் மன நிம்மதியை கெடுக்கிறா அதனால் தான் இவ்ளோ குழப்பம்… இனிமே நிச்சயமா , அவ இல்ல வேற யாராலும் என்னோட
உணர்ச்சிகள் பந்தாட பட விடவே மாட்டேன் என்று உறுதியாக சொல்லிக் கொண்டான்…
அறையில் அமர்ந்திருந்த ஸ்வாதிக்கு , சித்துவின் கலங்கிய முகமே நினைவில் வந்தது….. அவன் எவ்வளவு வருந்துகிறான் என்று அவனை பார்த்தவுடனேயே தெரிந்தது! செய்த தப்பை ஒத்துக் கொண்டு , மன்னிப்பு கேட்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? நிறைய பேர் தங்கள் தவறுக்கு காரணங்களை மட்டுமே அடுக்குவார்கள். அந்த வகையில் சித்துவின் மேல் பெரிய மரியாதை வந்தது ஸ்வாதிக்கு.
ஆனால், முதல் நாளிலிருந்து பார்த்த ஒருத்தர், திட்டுவதும், முறைப்பதுமாக இருந்து விட்டு, திடீரென்று அத்து மீறியது கொஞ்சம் அதிர்ச்சி தான் … ஏதோ நல்லவனானதால் சரி, இல்லயென்றால், அவள் நிலை? நினைக்கவே பயமாக இருந்தது…
அதை பத்தியே சிந்தித்துக் கொண்டிருந்ததால், கழுத்து குறுகுறுப்பது போல இருந்தது. உடம்பெல்லாம் புல்லரித்தது!!!!!
“சே!! சே!!! இதை பத்தி இனிமே நினைக்கக்கூடாது….” நடந்தது பெரிய தப்பு என்று அவரே சொல்லி இருக்கார். இன்னும் நம்ம ஒரு செமஸ்டர் கூட எழுதலை, நாலு வருஷம் இருக்கு, படிப்பை தவிர மற்றத்தில் மனசை அலைப்பாய விடாத ஸ்வாதி என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
சித், மறுநாள் அதிகாலையில் கிளம்பி வீட்டிற்கு போய் விட்டான். அம்மா அவனை எவ்வளவு மிஸ் செய்வார் என்று தெரிந்திருந்தால், ஒரு நாளாவது அவருடன் இருக்கலாம் என்றும் ,அவனுக்குமே நேற்று ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பின் பெற்றோரை பார்க்க வேண்டும் போல் இருந்தது.
முன் மாலை பொழுது, மெஸ்ஸில் சாப்பிட்டு விட்டு, மர நிழலில் அமர்ந்தார்கள் பத்மினியும், ஸ்வாதியும்.
சற்று நேரத்துக்கெல்லாம் ஷங்கர், சூர்யா வரவும் ஒரே கலாட்டாவாக சென்று கொண்டிருந்த போது, தனியாக வந்த பிரபாவை பார்த்து, எங்கே சித்? என்றாள் பத்மினி. அவன் வீட்டுக்கு போயிட்டான் காலையிலே எனவும்…..
ஷங்கரும், சூர்யாவும் இருந்ததால், ஓ! என்றதோடு வேறு எதுவும் கேட்காமல் விட்டு விட்டாள் … அதை கேட்ட ஸ்வாதிக்கு ஏன் என்று தெரியவில்லை, ஆனால் ஏதோ ஏமாற்றமாக இருந்தது..
ஸ்வாதியும் சாதாரணமாக இருப்பதால் நேற்றோடு அந்த விஷயத்தை முடித்து விட்டார்கள். பிரபாவிற்காவது முன்பு நடந்த உரசல் தெரியும். பத்மினிக்கு எதுவுமே தெரியாது ஆனாலும் எதையும் கிளற வேண்டாம் என்று விட்டனர்.
“என்ன, பத்மினி ,வரவர நீ தேர்ட் இயரா, பர்ஸ்ட் இயரானு குழப்பம் வந்துடும் போல, இந்த கும்பலோடவே சுத்திக்கிட்டு இருக்க?” என்றான் பிரபா.
“சாரு ரூமே கதினு கிடக்கிறா, ஸ்வாதி தான் இப்போ எனக்கு நல்ல கம்பெனி, சோ!” என்று தோளை குலுக்கினாள்….
“ஸ்வாதி தான் உனக்கு நல்ல கம்பெனி யா…..!” அவளை ஆழ்ந்து பார்த்தவாறு பிரபா மீண்டும் சொல்ல, முகம் சூடானது அவளுக்கு! இவன் ஒருத்தன் இத்தனை பேரை வைச்சுக்கிட்டு என்று நினைத்தவள்,
“ஏன் , ஸ்வாதிக்கு என்ன? கேளு ஸ்வாதி!” எனவும்,
அவளும் வேகமாக அவனிடம், “சொல்லுங்க சீனியர் , எனக்கு என்ன!”
“உனக்கு என்ன!!!”
“ஐயோ! நான் நல்ல கம்பெனி இல்லையா ?”
“ஒன்னும் இல்லமா, சேதாரம் ஏதாவது நடந்தா உங்க கம்பெனிக்கு யார் பொறுப்பு?” எனவும் சிரிப்பை அடக்கினாள் பத்மினி!
உள்ள இருக்கும் உள் குத்து தெரியாவிட்டாலும் , பிரபா
கலாய்க்கிறான் என்று புரிந்து கொண்டவர்கள், ஷங்கரும் சூர்யாவும் கையை தட்டிக் கொண்டு சிரித்தார்கள்!!
“சீனியர், இப்போ ஒன்னும் புரியலை, ஆனா கண்டிப்பா எனக்கு ஒரு டைம் வரும் , அப்போ பார்த்துகிறேன் என்று மிரட்டினாள்!!!”
“அய்யோ! பயமா இருக்குமா !!”என்று அதற்கும் வம்பு இழுக்கவே , “போங்க சீனியர்!” என்று மூக்கை சுருக்கி பழிப்பு காட்டினாள்..
திங்கட்கிழமை காலை கல்லூரிக்கு வந்த சித்துவை டிபார்ட்மெண்ட் வாசலிலேயே பார்த்து விட்டாள் சப்னா!
வாவ்!! இவனும் கம்ப்யூட்டர் சயின்ஸ் தானா , எப்படியாவது சான்ஸ் க்ரீயேட் பண்ணியாவது இவன் கூட பழகிடனும்!!!
இந்த வெள்ளிக்கிழமை எப்படியாவது அவனுடன் தான் கல்லூரியிலிருந்து கிளம்ப வேண்டும், அப்போது தான் அவனுடன் பழக முடியும் என்று முடிவு எடுத்தாள். அந்த வாரம் முழுவதும் வகுப்பு நேரம் போக மற்ற நேரம் எல்லாம் கவனத்தை வெளியில் சித் எங்கும் தென்படுகிறனா? எங்கே செல்கிறான் என்றே வைத்திருந்தாள்!
வெள்ளிக்கிழமையும் வந்தது. கடந்த நான்கு நாட்களில், ஸ்வாதி பிரபாவை மட்டுமே ஒரிரு முறை பார்த்தாள், அவனும் இவளை பார்க்கும் போது எல்லாம்,
“கம்பெனி எப்படி போகுது?”
“என்னை ஒன்னும் பண்ணிடாத மா!”
“அய்யோ பயமா இருக்கே!”
இப்படி ஏதாவது சொல்லி அவளை வம்பு இழுப்பதை வழக்கமாக வைத்திருந்தான்.
அன்று மதிய உணவு முடிந்து, கல்லூரிக்கு திரும்ப வரும் போது பிரபாவும் சித்துவும் செல்வதை பார்த்தாள்.
சித் இருப்பதலோ என்னவோ பிரபா, ஹாய் !! மட்டும் சொல்லி சிரித்தான்.
பதிலுக்கு சிரித்தவள் சித்தையும் பார்த்து சிரிக்க முயல , அவன் அறிமுகமானவர்களுக்கு கொடுக்கும் சின்ன சிரிப்பு கூட இல்லாமல் பார்த்து சென்றது , அவளை மிகவும் காயப்படுத்தியது!
வகுப்பறைக்கு சென்றவளுக்கு மனதே சரியில்லை, பெரிய இவர், ஸ்மைல் பண்ணா என்ன? பண்ணனிதெல்லாம் இவர், ஆனா நா ஏதோ தப்பு பண்ண மாதிரி போறாரு!!
நான் ஏதாவது பண்ணினேனா !!!
இப்ப எதுக்கு என்னை இன்சல்ட் பண்ணார் !!! என்று ஆற்றமையில் புலம்பிக் கொண்டாள்.
அதே நேரம் சித்தும், சே!!! பொண்ணையே பார்க்காத மாதிரி அவளை பாரு அவளை பாருனு கத்துற இந்த மனசை என்னை பண்றது என்று
தவித்தான்… தூரத்திலே அவளை பார்த்து விட்டான், அவள் எங்கிருந்தாலும் அவனுக்கு தெரிந்துவிடுகிறது…. கிட்டே வர வர அவளை பார்க்காமல் இருக்க அவன் பெருமுயற்சி தான் செய்ய வேண்டியது இருந்தது…….
அது இன்னும் அவனை , இவள் சங்காத்தமே வேண்டாம் என்று வெறுக்க, விலக செய்தது……