kaliyuga kalki 16

kaliyuga kalki 16

கலியுக கல்கி –16

 

தந்தையின் அழைப்பை சற்று தடுமாறிய படி தான் எடுத்தான் விதுரன் “நானா”

 

“என்ன விதுரன் பண்ணிட்டு இருக்க எதுக்கு மருமகள அங்க கூட்டிட்டு போன”

 

“நானா நாளைக்கி ஒரு நாள் தான் அங்க வந்து எல்லாம் சொல்லுறேன்”

 

“தனியா முடியுமா”

 

“முடியும் நானா அண்ணன் வெளில பார்த்துப்பாரு.ராகவ் லீகல் பார்த்துப்பான் நாளைக்கி இவன் கதைய முடுச்சுட்டு வரேன்”

 

“சரி பார்த்து இனி நம்பப் பக்கம் எந்தச் சேதாரமும் வர கூடாது”

 

“சரி நானா” என்றவன் போனை வைத்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டான்.ராஜலுக்கு விடயம் தெரியும் என்பதை அறிந்தவன் அவரது கோபத்தை எண்ணி கலக்கம் கொண்டான்.நல்ல வேலை அவர் தன்மையாகப் பேசவும் அவனுக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது.

 

அவன் நிம்மதியுடன் திரும்ப பொன்னி அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள். ஒருவனைத் தனது கணவன் கூட்டி வந்து அடைந்திருப்பது தெரியும் அவன் நல்லவன் இல்லையென்பதும் தெரியும், ஆனாலும் கணவனின் செயல் சாதாரணக் குடும்பப் பெண்ணாக அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது.

 

பொன்னியைப் பார்க்கவும் உல்லாசமாகக் கண் அடிக்க அவனை முறைத்து பார்த்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு நகரப் பார்த்தாள்.ஒரு கண் இருக்கும் போதே இந்த லொள்ளு இன்னும் இரண்டு கண்ணும் நல்ல இருந்தா ஆளா புடிக்க முடியாதுடா சாமி.

 

மூணு முனுத்துக் கொண்டே சென்றவளை இடையில் கை கொடுத்து தூக்கியவன் “ரொம்பத் தாண்டி பேசுற எனக்குத் தமிழ் தெரியுதுனு தைரியமா? என்ன சொன்ன இரண்டு கண்ணும் நல்ல தெரிஞ்சா உன்ன……… என்ன சொல்லி இருப்பானோ அவனது வாயை கரம் கொண்டு மூடி

 

“தெரியாம  சொல்லிட்டேன்” கண்கள் சுருக்கி கெஞ்ச விடுவானா என்ன அள்ளி கொண்டான் அவனது அல்லியை.

 

அவள் சொன்னதை அவன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை ஆனால் கோபம் போல் நடித்து அவளை வம்பு செய்தான்.அவனது முகத்தில் வழியும் குறும்பில் நிம்மதி உற்றவள் சுகமாக அவனைத் தங்கினால்.

 

அடைத்து வைக்கப் பட்டிருப்பவனின் பின் புலம் தெரியாது என்பதால் பொன்னி பயம் அற்று மகிழ்ச்சையாகவே இருந்தால். இன்னும் தனது கணவன் எதற்காக இங்குக் கூட்டி வந்தான் என்பது தெரியாது.அதை கேட்க கூட மதியற்று கணவனின் காதல் மயக்கத்தில் இருக்கிறாள்.

 

கையவனை பற்றித் தெரிய வரும் பொதுப் பொன்னியின் நிலை என்னவோ.அவள் விதுரரின் செயலை எத்தனை தூரம் ஆதரிப்பாள் என்பது கேள்வி குறி தான்.

 

****************************

 

காலையில் இருந்து கணவன் பின் சுத்தி கொண்டு இருக்கிறாள் முத்து தனது உயிர் தோழியைப் பற்றித் தெரிந்து கொள்ள இது தான் சமயம் என்று ராகவ்வும் ஆட்டம் காட்டி கொண்டு இருக்கிறான் என்ன வதை செய்திருப்பாள் திருமணத்திற்கு முன்பு அப்…ப்….பா என்ன பேச்சு வாடி வாடி வா கருவியவன் வேலை இருப்பது போல அங்கு மிங்கும் நடையோ நடை என்று நடக்க அவளும் அவன் பின்னே நடந்து கொண்டு இருந்தால்.அவள் செயலில் சிரிப்பு வந்தாலும் அதனை மறைத்து போக்கு காட்டி கொண்டு இருந்தான் ராகவ்.

 

அவனது ஓயாத நடையில் எரிச்சலுற்றவள் பொறுமை இழந்து “யோவ் ஐயரே” அவளது விழிப்புக்கு முறைத்தவன் “என்னடி இன்னும் யோவ்னு ஏன்னா கூப்டு இல்லை அத்தான் கூப்டு அது என்ன ஐயரே”

 

“ப்ச்.. வெளில வாங்க போங்க தானே கூப்பிடுறேன்.அதுகூட உங்க அம்மாக்காக தான் உசுர வாங்குறாங்க.நான் இப்புடித்தான் கூப்புடுவேன்” சட்டமாகப் பேசியவளை கதற விடும் நோக்கத்தோடு.

 

“சரிடி நோக்கு எப்படி விருப்பமோ அப்புடியே கூப்டுக்கோ நான் என் அம்மாகிட்ட சொல்லிறேன்”

 

“சொல்லிக்கோ சொல்லிக்கோ எனக்கு என்ன பயமா” என்றவளை கண்கள் சிரிக்கப் பார்த்தவன்.

 

அதானே! நீ யாரு ஒரு மாதிரியாக உரைத்தவன் உனக்கு ஒன்னு தெரியுமோன்னோ எங்க அம்மாக்கு உன்ன பிடிக்கவே பிடிக்காது.அதுமட்டுமா அவாளுக்கு அவுங்க அண்ணன் பொண்ண கல்யாணம் பண்ணிவைக்கணும் ஆசை. நானும் அண்ணனும் இப்படிக் கல்யாணம் பண்ணிண்டோம்.வேற வழி இல்லாம அம்மா புலம்பிண்டு இருந்தால,

 

அப்போ என் அத்தை சொன்னா மன்னி மன்னி ஏன் புலம்பெரேல் இரண்டு மாட்டு பொன்னும் சரி வருதான்னு பாருங்கோ இல்லனா இரண்டாம் தாரமா கட்டி வச்சுடலாம் சொல்லிட்டா இப்போ சொல்லு உனக்கு வசதி எப்படி என்றவனைப் பார்த்துக் கோபம் பொங்க அதனை அடக்கி கொண்டாள்.முன்னிருந்த முத்துவாக இருந்தால் ராகவ் பேசிய பேச்சுக்கு அவனை நன்கு கவனித்திருப்பாள் ஆனால் இன்றோ ராகவ்வின் அன்பு அவளைக் கட்டி வைத்திருந்தது.

 

(ஒரு சிலருக்குத் திருமணம் என்பது ஒரு பாதை அதில் முட்கள்,கல் என எத்தனை தடைகள் வந்தாலும் தாங்கி  கொண்டு முன்னேறுவர். அது போலத் தான் முத்துவும் ராகவ்வின் அன்பு புரிந்தாலும் முரண்பாடான உறவு கொண்டு திருமணம் என்பதால் சற்றுப் பொறுத்தப் போனால்)

 

என்னது இரண்டா தாரமா! கண்ணில் நீர் கோர்த்தது அவளுக்கு

 

“யோவ் நானாய்யா உன்ன கல்யாணம் பண்ண கேட்டான் நீயா தானே வந்து அடாவடி பண்ணி கட்டிக்கிட்ட”

 

“ஆமா நான்தான் கட்டிகிட்டேன் ஆனா நீ குடும்பம் பண்ண ஒத்துவர மாட்ட போலையே” தாடையைத் தடவியவாறே அவன் யோசிக்க அவனது பேச்சில் முத்துவுக்கு அழுகை வரும் போல் இருந்தது இனம் புரியாத பயம் வாழ்க்கையைப் பற்றி வர அந்த எண்ணம் கேவலக மாறி கதறி அழுதுவிட்டால் அவளது அழுகையில் பதறி போனவன்

 

ஏய்! ஏய்! என்னடி அழுற

 

“நீங்க பேசுனத்துக்கு அழுகாம.. நான் போறேன் இங்க இருந்து”

 

“கெட்டுது குடி சும்மா உன்ன வம்பு பண்ணுனேன் அதுக்குப் போய் அழுற அவள் கை பற்ற சமாதானம் செய்ய முயன்றவனை உதறி தள்ளியவள்

 

“போயா அதாண்டா நீ வேணாம்”

 

“அப்படிச் சொல்லாதடி உன் ஆம்படையான் பாவம்”

கொஞ்சி மிஞ்சி எஞ்சி இருவரும் கலைத்து போக முத்து பொன்னியை முற்றிலும் மறந்து போனால். ராகவ்வுக்கும் அதானே வேண்டும் நாளை விதுரன் வரும்வரை வீட்டில் உள்ளவர்களுக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்பது விதுரன் மற்றும் ரெங்கன் கட்டளை.என்ன செய்தாலும் ராஜலுவின் செவிக்கு வரும் என்பதால் அவரே தெரிந்து கொள்ளும் வரை ராகவ் வாய் விடவில்லை.பெருமாளுக்கு ஏற்ற கருடாழ்வார் போல் கலியுக கல்கிக்கு இந்த ராகவ்.

 

***********************************************

 

அடுத்த நாள் விடியலில் ஓர் எதிர்பார்த்த நிகழ்வு……

 

அழுது கொண்டே ஓடி வந்தாள் பொன்னி வேர்க்க விறுவிறுக்க அவள் வந்த கோலம் அவளது தந்தையை உலுக்க என்னம்மா ஏன் அழுதுட்டு வர மாப்பிள்ளை எங்க? எங்க போனீங்க? என்று படப் படத்தவரை ஆசுவாச படுத்திய ராஜலு.

 

“சம்மந்தி பொம்மி பயந்து போய் இருக்குக் கொஞ்சம் உட்கார வைங்க வேணி தண்ணீ கொண்டுவா” என்று மனைவியைப் பணிந்தவர்.அவளது தலையைத் தடவி சமாதானம் செய்ய அவளது உடல் நடுங்கி கொண்டு இருந்தது.

 

ராஜலுக்கு அவளது நடுக்கம் கண்டு அத்தனை கோபம் விதுரன் மேல்.பொன்னியின் நடுக்கத்துக்கு காரணம் அறிந்தவர் ஆயிற்றே தனது மகனின் செயலில் தான் மருமகள் பயந்து கொண்டு வந்திருக்கிறாள் என்பதைக் கண்டு கொண்டார்.

 

வேணி தண்ணீர் கொண்டு வர அதனை பருக கொடுத்தவர் அவள் பருகி முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை. அவள் தன்னை அமைதி படுத்திக் கொண்ட பிறகு ராஜலு பேச வர அவரை முந்தி கொண்டு பேசினால் பொன்னி “அப்பா நம்ம ஊருக்கு போய்டலாம்ப்பா இங்க வேணாம் என்றவள் “அவரது தோளில் சாய்ந்து அழுதாள்.

 

‘என்ன இது’ என்று திகைத்த பொன்னியின் தந்தை ராஜலுவை பார்க்க.அவர் கண்களை மூடி திறந்து நான் இருக்கிறேன் என உறுதி அளிக்கச் சற்று தெளிந்தவர் பொன்னியை அழைத்துக் கொண்டு சென்றார்.பொன்னியை பார்த்து எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் மா இப்போ போய் ஓய்வெடு என்றவர் வேணியை முறைத்துக் கொண்டு சென்றார்.

 

பண்றது எல்லாம் அப்பாவும் பையனும் கோபம் மட்டும் என் மேல என்றவர் முனகி கொண்டே அவர் பின்னோடு சென்றார்.முறைத்துப் பார்த்தாலும் அதில் வா என்ற அழைப்பிருக்க அதனைப் புரிந்து கொண்டு சென்றார் வேணி.

 

வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒரு வித இறுக்கத்தோடு தான் களித்தனர்.இருக்காதா பின்னே செய்து வைத்திருக்கும் செயல் அப்படி என்னதான் சமுதாயம் சீர் கேடுகளைக் களை எடுக்கத் துணிந்தாலும் தன்னைச் சார்ந்தவர்களையும் பார்க்க தானே வேண்டும்.நம் சமூக அமைப்பு அப்படி.துணிந்து நல்லது செய்தாலும் அதற்கான பலன் கிடைக்காவிட்டாலும் எதிர்வினை நல்லதாக அமையலாம் அல்லவா.

 

பொன்னிக்கு விதுரன் மேல் கோபம் இருந்தாலும் அவனுக்கு என்ன ஆனோதோ என்ற பயம் அவளை நிலையாக இருக்கச் செய்யவில்லை. அவன் நின்ற தோற்றம் அப்ப…..ப்ப தன் ஊரில் உள்ள காவல் தெய்வம் உயிர் பெற்று வந்தது போல் அல்லவா இருந்தது.

 

இன்னும் அதனை எண்ணினால் பெண்ணுக்கு நடுக்கும் தான்.பார்த்த காட்சியை மறக்க முடியவில்லை என்னதான் நல்லது செய்தாலும் ஓர் ஒவ்வாமை தவித்துப் போனால் பெண்.மகளின் நிலையைக் கண்ட தந்தையும் தனது கையறு நிலையை எண்ணி கலங்கி தான் போனார்.

 

“அம்மாடி என்னதான் நடந்துச்சுச் சொன்னா தானே தெரியும் வந்ததுல இருந்து அழகுற தனியா வேற வந்து இருக்க மாப்பிள்ளைக்கு என்ன ஆச்சு?” அவரது பேச்சில் பதற்றம் தெரிய அவரது தவிப்பை எண்ணி கலங்கியவள்

 

“அப்பா அவருக்கு ஒண்ணுமில்லை அதுக்கு மேல கேட்காதீங்க நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் தலை வலிக்குது” என்றவள் அவரிடம் தப்பிக்கும் பொருட்டுக் கட்டிலில் சுருண்டு கொண்டாள்.

தற்போது அதுதான் அவளால் முடியும் விதுரன் வரும்வரை இங்கு இருந்து போக முடியாது.அவன் வந்தாலும் போக முடியாது என்ன செய்வது செத்து பிழைக்கும் இந்த வாழ்கை தனக்குத் தேவையா? இது போல் பல கேள்விகளைத் தனக்குள் கேட்டவாறே கண் அயர்ந்தாள்.

**********************************

அங்கு ராஜலு வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டு இருந்தார் “என்னடி பண்ணிக்கிட்டு இருக்கான் உன் மகன் இது சரியில்லை வேணி நானும் தான் பல வேலைகள் பண்ணியிருக்கேன் அதுல என் தலையீடு இல்லாம பார்த்துக்குவேன்.ஏன்னா நான் செய்ததுக்கு உண்டான எதிர் வினை என் குடும்பத்த பாதிக்கும் அதுல எனக்கு விருப்பமில்லை.ஆனா உன் மகன் அந்தப் பொண்ணு பயந்து போய் இருக்கு”

 

மூச்சுவிடாமல் பேசியவர் வேர்த்து போய் நிற்க அவரை நெருங்கி அவரின் முகத்தைத் தனது முந்தானையால் துடைத்தார் வேணி.மனைவியின் செயலில் தன்னைத் துளைத்தவர் தண்ணீர் பட்ட நெருப்பாக மாறி அவரை நெருங்க அந்நேரம் கமலத்தின் குரல் கேட்டது பதறி விலகியவர் ராஜலு முகம் பார்க்காமல் அவரைத் தாண்டி செல்லவும் கமலம் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

 

இங்க தான் இருக்கீங்களா வாங்க சாப்பிட என்றவர் அவரை நெருங்கி என்ன முகமெல்லாம் வேர்த்து போய் இருக்கு என்றவர் தனது முந்தானை கொண்டு இயல்பாக அவர் முகம் துடைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு வாங்க சாப்பிட உங்க கோபமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று அவரது கை பற்றி அழைத்து வந்தார்.

இதனைக் கதவோறொம் நின்று பார்த்த வேணிக்கு ஏக்கம் பிறக்க.ராஜலுவோ வேணியை முறைத்துக் கொண்டு நின்றார் அவரது பார்வை ‘திருந்த மாட்ட’ என்ற குற்றம் சொல்ல தலையைக் குனிந்து கொண்டு அங்கிருந்து சென்றார்.

 

கல்கியாக அவதாரம் எடுத்து வதம் முடித்து,தனது செயலுக்கு வாதம் முடித்து விதுரன் நியாயக் கோடி ஏற்றி விட்டே வீடு திரும்பினான்.

 

அவனது வருகைக்கு அனைத்து முக்கியச் சொந்த பந்தங்களும் அங்கே குழுமிருந்தனர்.இது அவர்களது வழக்கம் தான் என்றாலும் ராகவ்வின் அண்ணன், முத்து,பொன்னி மற்றும் பெற்றவர்களும் வயிற்றில் புளியை கரைத்தது.

 

வருவான்………………….

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!