MIRUTHNAIN KAVITHAI IVAL 10

cover page-e9d98438

மிருதனின் கவிதை இவள் 10

கருப்பு நிற ஹுடட்  ஜெர்கின்  அணிந்திருந்த அவன்  சட்டென்று,  தன்  முதுகில் இருந்த  பிஸ்டலை எடுத்து இமைக்கும் நொடிக்குள் இஷிதாவையும் மேகாவையும்  நோக்கி  மீண்டும் மீண்டும் சுட்டான். மேகா அலறி துடிக்க சுட்டான் .

ஆனால் அவர்களோ குருதி சிந்தாமல் , மிரட்சியுடன் கையில் இருந்த பாப்கார்னை வாயில் போட்டு மென்றபடி எதிரே இருந்த டீவியில் ஓடிய சண்டை காட்சியை பார்த்து கொண்டிருந்தனர் .

அப்பொழுது இஷிதாவின் கையில் இருந்த ரிமோட்டை பிரித்த மேகா ,

” இஷு உனக்கு பார்க்க வேற ப்ரோக்ரமே இல்லையா ?மாத்து டி ,இப்போ தான்  ஒருத்தன் தொல்லை போய் நிம்மதியா இருக்கேன் மறுபடியும்  அவனை நியாபகப்படுத்துற மாதிரி சீனை வச்சிட்டு மாத்து  முதல்ல “என்றாள் கண்களில் மிரட்சி குறையாமல் .

” ஏய் ரிமோட்டை குடு . முக்கியமான கட்டம் ,இன்னும் கொஞ்ச நேரத்துல முடிஞ்சிரும் ” என இஷிதா ரிமோட்டை அவளிடம் இருந்து வாங்கி தன் கண்களில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அந்த சண்டை காட்சியை ரசிக்க , மேகாவுக்கோ அன்று இரவு அக்னியோடு இருக்கும் பொழுது நடந்த துப்பாக்கி சுடும் சம்பவம் நினைவில்  வர , கண்களை மூடி மூச்செடுத்தவள் , இஷிதாவிடம் இருந்து ரிமோட்டை வாங்கி ,

” நைட் இந்த மாதிரி படம் பார்க்காதன்னு சொன்னா கேட்குறீயா? ” என்றவள் ம்யூசிக் சேனலை வைக்க இஷிதா மேகாவை முறைத்து பார்த்தாள் .

” இன்னும் கொஞ்சம் நேரத்துல அவன் அவனை அரெஸ்ட் பண்ணிருப்பான் . அந்த ஸீன் எப்படி இருக்கும்ன்னு பார்க்க ஆசை பட்டேன் ” இஷித்தாவின் குரல்  குற்றம்சாட்டியது .

” அதை விடு அந்த படம் நல்லாவே இல்லை ,சும்மா அடிச்சிட்டே இருக்கான். இந்த பாட்டு பாரு எவ்வளவு நல்லா இருக்குனு !”என்று கூறி ,’ எங்கையும் போகாமல் ,தினம் வீட்டிலேயே நீ வேண்டும் ‘ என்ற பாடலை மேகா முணுமுணுத்தபடி   , தன்னை முறைத்து பார்க்கும் இஷிதாவின் முகத்தை டீவியை நோக்கி திருப்ப,  அவளது கையை தட்டிவிட்ட  இஷிதா ,

” வீட்லையே இருந்தா, அப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்றது ?  பாட்ட பாரு ” என்று கலாய்த்தபடி பாப்கார்னை விழுங்க , மேகாவின் பார்வை இஷிதாவை முறைக்க தவற வில்லை.

” எவ்வளவு அழகான ரொமான்டிக் லைன் இது  , அதை ரசிக்கிறத விட்டுட்டு சும்மா கலாய்ச்சிட்டே  இருக்க  “என்றாள் மேகா .

” அழகான ரொமான்டிக் லைன் தான் ஆனா கொஞ்சமாவது எதார்த்தம் வேண்டாமா ?”என்றாள் இஷிதா .

” அம்மா தாயே  நானே ரொம்ப நாள் கழிச்சு  இன்னைக்கு தான் நிம்மதியா மூச்சு விடுறேன்,  உன்கிட்ட ஆர்க்யு பண்ண எனக்கு தெம்பில்லை பா , நான் தூங்க போறேன் ” என்று எழுந்த மேகாவின் கரம்பிடித்து அமரவைத்த இஷிதா டீவியை அணைத்துவிட்டு ,

” உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ” என்றாள் .

” ம்ம்ம் சொல்லு டி ” பாப்கானை  ஒவ்வொன்றாய் சுவைத்தபடி கூறினாள் .

” வாட் யு திங்க் அபவுட் அக்னி ” மேகாவின் முகத்தை ஆராய்ந்தபடி கேட்டாள் .

“இப்போ எதுக்கு டி அவர் பேச்சு ? நானே இப்போ தான் கொஞ்சம் நார்மலா இருக்கேன் “

” சொல்லு மேகா “

“அவரை பத்தி நினைக்க என்ன இருக்க  டி ? அவர் ஒரு பேஷண்ட்,  அவரை பார்த்துகிற பொறுப்பை கனகராஜ் சார் என்கிட்ட குடுத்தாங்க ,  நான் அதை செஞ்சேன் அவ்வளவு தான் ” முகத்தில் எந்த உணர்ச்சிகளும் இல்லை .

“நிஜமாவா அதை தாண்டி எந்த பீலிங்க்ஸும் உனக்கு இல்லையா “என்று கேட்டாள் இஷிதா .

“இல்லை டி,  உனக்கு என்னை பத்தி தெரியாதா ?”அழுத்தமாக கூறினாள் .

” தெரியும் டி,  ஆனா அவர் உன்னை ரொம்ப கேர் எடுத்துகிட்டாரே , அதான் கேட்டேன் ” என இஷிதா இழுக்கவும் அவளது முகத்தை பார்த்த மேகா,

” இஷு நான் அவருக்கு கேர் டேக்  பண்ணினேன்  , அவர் பதிலுக்கு என்னை கேர் பண்ணினாரு , தேங்க்ஸ்னு வார்த்தையால சொல்லாம செயல்ல செஞ்சார் அவ்வளவு தான் . 

ஒவ்வொரு பேஷண்ட்ஸ் ஒவ்வொரு விதமா நன்றி சொல்லுவாங்க , சில பேர் போக்கே குடுத்து தேங்க பண்ணுவாங்க,  சிலர் ஸ்வீட்ஸ் குடுப்பாங்க, இதெல்லாம் நார்மல் பேஷண்ட்ஸ் பண்றது .

பட் அக்னி ரொம்பவே வித்தாயசமான ஆளு , அதிகமா உணர்ச்சி வசப்பட கூடிய ஒரு மனுஷன்  . அதான் அவரோட செய்கை எல்லாமே அதிரடியா இருக்கு   , மே பீ அவர் வளர்ந்த சூழ்நிலை அப்படி  இருக்கலாம் , இந்த மாதிரி பேஷண்ட்ஸையும்  நான் பாத்திருக்கேன் , சட்டுன்னு  யார்கூடையும் மிங்கில் ஆக மாட்டாங்க , ரொம்ப அக்ரசிவா  இருப்பாங்க , ஆனா புடிச்சிட்டா அவ்வளவு கேரிங்கா  இருப்பாங்க,  சின்ன குழந்தைங்க மாதிரி ” என்று மேகா கூறவும்  புன்னகைத்த இஷிதா ,

‘டேய் அண்ணா உன் ரூட் க்ளியரா இருக்கு  , மேகாவை சம்மதிக்க வைக்கிறது  உன் கையில தான் இருக்கு’ என மனதிற்குள் குதூகலித்துவிட்டு மேகாவிடம் ,

” நீ தெளிவா இருந்தா சரி தான் மச்சி ” என்றவள், மேலும் தொடர்ந்து ,”நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு ” என்றாள் .

” என்ன சர்ப்ரைஸ் டி” என கேட்டாள் மேகா .

” நாளைக்கு உனக்கே தெரியும் ” என்று இஷிதா புன்னகைக்க , தன் தோழியின் பிரகாசமான முகத்தை பார்த்த மேகா ,

” என்னவோ இருக்கு  சொல்ல மாட்டிக்கிற  ” என்று கூறி உறங்குவதற்காக தன் அறைக்குள் சென்றாள்.

இஷிதாவிடம் பேசிவிட்டு தன் அறைக்கு  வந்த மேகா , சில நாட்காளாக தனக்குள் இருந்த இறுக்கம் தளர்ந்து , ஏதோ இப்பொழுது தான் சுகந்திர காற்றை சுவாசிப்பது போல மிகவும் நிம்மதியாக காணப்பட்டாள்.

” இப்போ தான் இது நம்ம ரூம் மாதிரி இருக்கு ” என்றபடி இரவு உடைக்கு மாறிவிட்டு  கண்ணாடி முன்னே வந்து நின்றவளுக்கு இத்தனை நாட்களாக காணாமல் போயிருந்த கன்னக்குழி புன்னகை மீண்டும் வந்து உறவாட , நிம்மதியாக மெத்தை மீது வந்து அமர்ந்தவள் .  வழமை போல தன் தாய் தங்கை மற்றும் தமயனிடம்  உரையாடிவிட்டு , நாற்காலியில்  அமர்ந்தபடி கதை புத்தகத்தை  புரட்டினாள்.

மேகா சென்றதும் தன் அறைக்கு வந்த இஷிதா ,தன் தமையனுக்கு அழைப்பி விடுத்து,

“டேய் அண்ணா ஒழுங்கா நாளைக்கு சொதப்பாம அவகிட்ட பேசிரு “

” கண்டிப்பா இஷு , சரி என்னை பத்தி ஏதும் சொன்னியா ?”ஆர்வத்துடன் கேட்டான் ரிதுராஜ் 

” டேய் அண்ணா உன் லவ்க்கு உதவி தான் செய்ய முடியும் , நானே ப்ரோபோசும் பண்ணினா அதை விட கன்றாவி வேற எதுவும் கிடையாது   “

” சரி சரி ,  என்னை பத்தி எதுவும் சொல்லுவாளா ?”அதே ஆர்வத்துடன் கேட்டான் .

” அதெல்லாம் சொன்னதில்லை “

” ஓ ” குரல் உள்ளே சென்றது

“ரித்து உன்கிட்ட ஒரு விஷயத்தை இப்பவே சொல்லிறேன் , என்ன தான் அவ டெல்லி , சென்னைன்னு சிட்டில வளர்ந்திருந்தாலும்  அப்பா பாக்குற பையனை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் ,  கல்யாணத்துக்கு அப்புறம் தான் லவ் பண்ணுவேன்னு சொல்ற சாதாரண டிபிகல் தமிழ் பொண்ணு .

ஸோ நீ ப்ரொபோஸ் பண்ணினதும் அக்செப்ட் பண்ணுவான்னு எல்லாம் சொல்ல முடியாது . எல்லாத்துக்கும் ரெடியா இரு சரியா ” என்றாள் இஷிதா.

“அதெல்லாம் ஓகே சொல்லுவா , நீயே பாரு சீக்கிரமாவே நாங்க ஜோடியா  பைக்ல போவோம்   ” என்ற ரிதுராஜ் தங்கையிடம்  நலம் விசாரித்து விட்டு மேகாவின் போட்டோவை பார்த்தபடி கண் உறங்கினான்  .

############################

நேரம் நள்ளிரவை தொட்டிருக்க , போர்வைக்குள் சுருண்ட படி மெத்தையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மேகாவுக்கு திடிரென்று மின்சாரம் நின்றதில் மின்விசிறி தடைபட முகத்தில் வியர்வை துளிகள் அரும்பியது .

நிமிடங்கள் கடக்க கடக்க அதிகமாக வியர்க்கவும்  தூக்கத்திலே அவள் புரண்டு படுக்க முயற்சிக்க,  திடிரென்று விட்டு விட்டு வீசிய மெல்லிய காற்று ஒருவித இதம் அளிக்க , உறக்கத்திலே புன்னகைத்தவளுக்கு  ஏனோ உறக்கம் தடை பட , அரை உறக்கத்திலே லைட்டை போட சுவிட்ச் போட் பக்கம் கையை தடவ , அறையில் மெல்லிய வெளிச்சம் பரவியது .

உறக்கத்திலே கண்ணை கசக்கியபடி விழித்தவளுக்கு அருகே மெத்தையில் , ஒரு  கையால் புத்தகத்தை வைத்து அவளுக்கு விசிறிக்கொண்டு  , மறுகையை கன்னத்தில் வைத்து படி அவளை பார்த்துக்கொண்டே  அமர்ந்திருந்தான்   அக்னி தீரன் .அவன் அருகே மொபைல் டார்ச் லைட்டை  ஒளிரவிட்டபடி நின்றிருந்த  அஷோக்கை   அடக்கப்பட்ட கோபத்துடன் பார்த்தபடி   நின்றிருந்தாள் இஷிதா .

நேற்று இரவு முக்கியமான வேலையாக, வெளியூர் செல்ல வேண்டி இருப்பதாக கூறி அஷோக் அக்னியை அழைக்க , மனமே இல்லாமல் அவர்களின் வீட்டை விட்டு கிளம்பிய தீரன் போவதற்குள் ,
‘வருவை இப்படி பார்த்துக்கோ , அப்படி பார்த்துக்கோ , அத சாப்பிட சொல்லு , இதை சாப்பிட சொல்லு ” என இஷிதாவை படுத்தி விட்டு சென்றிருக்க ,’ஷப்பா இனி இவன் தொல்லை இல்லை ”  என ஆனந்த  களிப்பில் இருந்த மேகா , இன்று நள்ளிரவில் அவனை தன் அறையில் பார்த்ததும் பதறிவிட்டாள்.

மெல்லிய மொபைல் வெளிச்சத்தில்,  தீரனை மிக அருகில் கண்ட மேகாவுக்கு தூக்கிவாரி போட ,அரண்டு எழுந்து அமர்ந்தவள் ,

“ஸ் தீ தீர் தீரன் என் ரூம்ல என்ன பண்றீங்க ?”சிக்கல் விழுந்த நூல் போல சிக்கி விழுந்தது வார்த்தைகள் .

“அடிபட்ட  இடத்துல ஒரே வலி அதான் வந்தேன் வரு , நீ தூங்கிட்டு இருந்தியா,  அதான் அப்படியே பார்த்துட்டு இருந்தேன் , நீ தூங்கு நான் வீசுறேன் ” என்றான் இயல்பாக , அவளுக்கோ மீண்டும்  திகில் பங்களாவில்  மாட்டிக்கொண்ட உணர்வு .

அப்பொழுது பார்த்து மயங்கி இருந்த  மின்சாரம்  மீண்டும் கண்முழித்து கொள்ள, அறை சட்டென்று பிரகாசம் ஆனது .

ஏற்கனவே பயத்தில் இருந்த மேகாவுக்கு , அறை திடிரென்று பிரகாசம் ஆனதும்,  தேகத்தில் சிறு அதிர்ச்சியுடன்  நெற்றியை நீவியவள் , அறையில் இஷிதா மற்றும் அஷோக்கை பார்த்து மீண்டும் அதிர்ந்தாள் .

இஷிதா , ” என்னடி இது ” என்பது போல பற்களை கடிக்க , மேகாவுக்கோ  முழிபிதுங்கியது .

” சார் ” மூச்சு வாங்க அவனை பார்த்தாள் .

” தீரன் ” கண்கள் கோபத்தில் பளபளத்தது .

” தீரன் தீரன் ” திருத்தி கொண்டாள் .

“ம்ம்ம் சொல்லு வரு ” நாடியில் கைவைத்துக்கொண்டு  அவளை பார்த்தபடியே கேட்டான் .

” வலிக்குதுன்னா  கனகராஜ் சாரை வர சொல்லிருக்கலாமே  ” தயங்கியபடி கேட்டாள் .

” வந்தான் வந்தான் , அவன் பாக்குறது எதுவும் சரி இல்ல,  யாருக்கும் உன் அளவுக்கு டலண்ட்  இல்ல வரு ”   கழுத்தில் கை வைத்து நெட்டி முறித்தபடி  கூறினான் . இஷிதா பல்லை கடித்தபடி அஷோக்கை பார்க்க , அவளது பார்வையை புறம் தள்ளிய அஷோக்கால் ஏனோ மேகாவின் கெஞ்சல் பார்வையை  ஒதுக்க முடியவில்லை , என்ன நினைத்தானோ ,சட்டென்று மேகாவிடம்,

” மேகா கொஞ்சம் வலிக்குதுன்னு சொல்றான் என்னனு பாக்குறீங்களா ?” என்றான் .

வேறு வழியில்லாமல்  சரி என்பதாய் தலையசைத்தவள் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டு , அவனுக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டிருக்க , கண்களை விரித்து முறைத்தபடி நின்ற இஷிதாவை பார்த்து சொடக்கிட்ட தீரன் ,” ஏய் நீ தான்,  கிளம்பு ! அதான் வரு முழிச்சிட்டால்ல ” என்றான் அதட்டலாக ,

மேகா புரியாமல் பார்க்க ,

” அது ஒன்னும் இல்லை வரு ” என்று கட்டிலில் வந்து அமர்ந்தபடி தொடர்ந்தவன்  ,” நீ தூங்கும் பொழுது என்னை உன் ரூம்குள்ள விட மாட்டேன்னு,  உன் ஃப்ரண்ட்  சொன்னா , நான் தான் அப்போ நீயும் உள்ளவான்னு இழுத்துட்டு வந்துட்டேன் , ஆனா  இப்போ தான்  நீ முழிச்சிட்டியே அதான் அவளை போக சொல்றேன் ” என்று கூறிவிட்டு இஷிதாவை பார்த்து ” போ ” என்று சொல்லிவிட்டு அஷோக்கை பார்க்க , அவன் பார்வையிலே அவன் சொல்ல வந்ததை உணர்ந்த அஷோக் அங்கிருந்து கிளம்பிவிட , இஷிதாவும் கிழம்பியிருந்தாள் .

காலில் அலைபேசியை பார்த்தபடி நின்றிருந்த அஷோக்கை பார்த்து இஷிதா தீவிரமாக முறைக்க ,

” ம்ம் ஆரம்பி ” என்று அவள் முகம் பார்க்காமலே செய்கை  செய்தவனது விழிகள் அலைபேசியை விட்டு நொடி கூட அகல வில்லை .

“என்ன அஷோக் இதெல்லாம் ?”

” என்னனு சொன்னா தானே தெரியும் ” பார்வை அலைபேசியில் தான் இருந்து .

” தெரியாத மாதிரி நடிக்காதீங்க ” இப்பொழுது  இருவரது பார்வையும்  சந்தித்துக்கொள்ள , தன் இடையில் கைகுற்றி ஆழ்ந்த மூச்சை வெளியிட்ட அஷோக் ,

”  தீரன் கிட்ட இதை பத்தி பேசுறேன் ” என்றான் .

” பேசுறதுக்கு எதுவும் இல்லை,  தயவு செஞ்சு எங்களை விட்டு விலகி போய்டுங்க ” என கை எடுத்து கும்பிட்டவள் ,அவனை பார்த்து முறைத்துவிட்டு ,  தன் அறைக்குள் நுழைந்து கதவை சாற்றிக்கொள்ள முனையவும் , கதவுக்கிடையில் தன் கால் வைத்து தடுத்தான்  அஷோக்.

“அஷோக் கால் எடுங்க ” சீறினாள்

” உள்ள விடு டி ”  கட்டளையிட்டான் .

” மித்ரன் ப்ளீஸ் “

” உள்ள விடு டி” கத்தினான் .

” கத்தாதீங்க  மேகாக்கு நம்மளை பத்தி தெரியாது ” என்று அவள் கூறவும்  அவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் ,

” என்ன சொன்ன? விலகி போணுமா , அது நீ என்னை நெருங்குறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும் ” என்றான் அவளை சுவற்றோடு வைத்து சிறைவைத்தபடி .

அவன் மூச்சு காற்றோ அவள் முகத்தில் பட்டு தெறிக்க கண்களை மூடி திறந்தவள் ,” மித்ரன் லீவ் மீ ”  என்றாள் .

” முடியாது டி ” என்றவன் அவள் இதழ் நோக்கி குனிய , ” தென் ஐயம் ஸாரி மித்ரன் எனக்கு வேற வழி தெரியவில்லை ” என்றவள் தன் முட்டியை தூக்கி அஷோக்கை அடிக்க போக , அவனோ லேசாக விலகி  சட்டென்று தன் உள்ளங்கையை அவளது ஓங்கிய முட்டியில் வைத்து அழுத்தம் கொடுத்தவன் ,

” யார்கிட்ட? ” என   ஒற்றை புருவம் உயர்த்தி , தனது அதிரடியான  செயலில் தடுமாறி நின்றவள் இடை பிடித்து தன்னோடு இழுத்து கொண்டு தான் எண்ணியதை  செயல்படுத்திவிட்டே  விலகியவன் ,

” விலகி போறதெல்லாம் நடக்காத காரியம் ” என்று தீர்க்கமாக  கூறி  கதவை திறந்து கொண்டு வெளியேற , அவளோ அவன் முதுகை அடக்கப்பட்ட கோபத்துடன்  வெறித்து பார்த்தவள் தன் இதழை  அருகில் இருந்த டவலால் அழுத்தமாக துடைத்தாள் . கண்கள் கண்ணீரில் நனைந்தது.

###############################

” எங்க வலிக்குது தீரன்?” என்றபடி அவன் காயத்தை ஆராய்ந்த மேகா , “என்ன இது? பிளட் லீக் ஆகியிருக்கு  தீரன் , ஏதாவது ஸ்ட்ரெயின்  பண்ணுனீங்களா ?” காயத்தை சுத்தம் செய்தபடி கேட்டாள் .

அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மேகாவையே ரசித்து கொண்டிருந்த தீரன் , சில மணி  நேரத்திற்கு முன்பு மேகாவை பார்ப்பதற்காக  தன் வீட்டில் இருந்து வெளியேற , அப்பொழுது அவனை தடுத்த அஷோக்  அவசியம் இல்லாமல் இரவு நேரத்தில் சந்திக்க வேண்டாம் என அறிவுறுத்த , உடனே தன் ஜிம் அறைக்குள் சென்று விட்டு ,  ஐந்தே நிமிடத்தில் கீழே வந்தவன் ரத்தம்  கசிந்த தன் காயத்தை காட்டி,

“இப்போ போகலாமா ?” என கேட்க,  அஷோக் அக்னியின் செயலை கண்டு வியந்தவன் , பின்பு அவனுக்கு   ஏதாவது ஆகிருமோ என்று பயந்து அவனை  அழைத்துக்கொண்டு வேகமாக இங்கே வந்ததை எண்ணி பார்த்து புன்னகைக்க , 

அப்பொழுது ,” கொஞ்சம் வலிக்கும் தீரன் பொறுத்துக்கோங்க ” என்றபடி அவனை நிமிர்ந்து பார்த்தவள் ,அவன் புன்னகைப்பதை  பார்த்ததும் ,

” வலிக்கலையா ?” என்றாள் அதிர்ச்சியாக .

” அது என்னவோ வரு,  நீ என்ன செஞ்சாலும் வலிக்க மாட்டிக்குது ” குரலில் அநியாயத்துக்கு  நேசம் பொங்கியது .

” ஓ “என்னே செய்வதென்று புரியாமல் கோபத்தில் இருந்தவள்  தன் பணியை தொடர ,அவன் தன் பணியை தொடர்ந்தான் .

” வலிக்குதா ? ” குற்ற  உணர்வுடன்    கேட்டான்  . அவன்  பார்வை   தன்   ஐவிரலால்   சிவந்திருந்த  அவளது  கழுத்தை  சுற்றி  வட்டம்  இட்டது  . இன்று தான் கவனித்தான் . அன்று அவளது கழுத்தை நெரித்து தள்ளிவிட்டது நியாபகம் வந்தது .

நிமிர்ந்து பார்த்தவள் ,அவன் பார்வை   போன  திசை கண்டு ,

” இல்லை தீரன்,  அந்த செகண்ட்   தான்   வலிச்சுது ,  இப்போ லேசா  எறும்பு  கடிச்ச  மாதிரி  தான்  இருக்கு  ”  தீரனின் வருத்தம்  உணர்ந்து  , அவன் குணம் அறிந்து   அழகாய்  சமாளித்தாள்  .  

 ” வலிக்குது  வரு ” என்றான் . கனல் விழிகளில் தான் அவ்வளவு வலி .

“அச்சோ வேகமாக பண்ணிட்டனா? ” பதறியவள் அவனது வலிக்கான காரணம் புரியாமல் கேட்டாள் .

” ம்ஹூம் ” அவள் வெகுளித்தனம் கண்டு புன்னகைத்தவன் ,

” நீ ரொம்ப அப்பாவி வரு , ரொம்ப நல்லா பொண்ணு , அந்த மழை துளி மாதிரி , பச்சை குழந்தை மாதிரி ரொம்ப தூய்மைனாவ நீ ” என தன் உள்ளம் உருக பேசியவனுக்கு  ஏனோ ,  இந்த நொடியே அவளை கட்டியணைத்து நெற்றியில் முத்தம் பதிக்கும் ஆசை அடி நெஞ்சில் இருந்து பொங்கி வழிந்தது .அவளுக்கோ அவனது பார்வை மாற்றமும் பேச்சும் , ஒருவித சங்கடத்தை கொடுக்க , முடிந்தளவு அவனது பார்வையை தவிர்த்தபடி அமர்ந்திருந்தாள்.

முதல் முறையாக அவன் கண்கள் இன்று அவனது கட்டுப்பாடை தாண்டி அவள் மீது ஊர்வலம் வர , அவளால் அவனுக்குள் தூண்டிவிட பட்ட உணர்ச்சியை அவளிடமும்  காட்ட முடியாமல் , அதை கட்டுப்படுத்தவும் முடியாமல் மிகவும் போராடியவன் , வேறுவழியின்றி  மனமே இல்லாமல் சட்டென்று அவளிடம் இருந்து விலகினான் . விலகியவன் திரும்பி பார்க்காமல் அங்கிருந்து சென்றும் இருந்தான் .

அவனது விசித்திர நடவடிக்கைகளை கண்ட   மேகாக்கு  முதன் முறையாக  அக்னியின் செயல் நெருடலை கொடுத்தது .

மேகாவை  விட்டு வந்துவிட்டான் ! அவள்  இங்கு   இல்லை ! இது அவன் இல்லம் !அவன் அறை !

ஏனோ இந்த நொடி அவனது விசாலமான , ஆடம்பரமான அறை கூட வெறுமையாக   இருந்தது  . புரண்டு புரண்டு படுத்தான் உறக்கம் வர வில்லை  . உடலை வளைத்து தாறுமாறாய் நீந்தினான், மன அழுத்தம் தீரவில்லை .மனம் அவளையே நாடியது .

உடலை வருத்தி ஜிம்மில் மணிக்கணக்காக பயிற்சி செய்தான் , அடங்காத மனம் அவளை தான் நாடியது .அவளது  நினைவுகள்  அலையை  போல  அவனை  அடித்து  செல்ல  ,  மிரண்ட  விழிகள்  ,  கொஞ்சும்   இதழ்கள்  என்று  அவளை சார்ந்த அனைத்தும் அவனை இம்சித்தது . மனம் அவளது அருகாமையை தேடியது.

அவள் அணைப்பிற்குள் அடங்கி கிடக்க வேண்டும் என்று மனம் பொல்லாத ஆசை கொண்டு தவித்தது .

என்ன தான் மேகா தான் ஆசை வைத்த  பெண்ணாக இருந்தாலும் , தான் உரிமையாக்கும்    முன்பு , அவளை ஸ்பரிசிக்க நினைத்த தன் கரங்களை எண்ணி ஆத்திரம் கொண்டவனுக்கு இது போன்ற உணர்வுகள் அனைத்தும்   மிகவும்  புதிதாக இருக்க மிகவும் திணறிய  தீரன் , அவளுடன்  கழித்த  ஒவ்வொரு  மணித்துளிகளை   எண்ணிப்பார்த்தபடி   அமர்ந்திருந்தான் .

தொடரும்