MIRUTHNAIN KAVITHAI IVAL 18.2

cover page-9c4ba721

MIRUTHNAIN KAVITHAI IVAL 18.2

மிருதனின் கவிதை இவள் 18.2

” காலையிலே எங்க போயிருந்தீங்க? ” என்ற மனைவியிடம் ,

” முக்கியமான வேலை டி ஃபரண்டை பார்த்துட்டு வரேன் ” என்றவர் ,

” எல்லாரும் ரெடி தானே கேபுக்கு சொல்லிட்டேன் ” என்றார் . அப்பொழுது தன் காரில் ஏறவிருந்த தீரன் சிறு யோசனையுடன் கோபால கிருஷ்ணனின் அருகில் வந்து ,

” ஹலோ அங்கிள் எல்லாரும்  வெளியில கிளம்புறீங்க  போல  ” கண்களில் இருந்த சன் கிளாஸை கழற்றியபடி  வினவினான் தீரன் .

” ஆமா பா கல்யாண ஷாப்பிங் போறோம் , கேப் சொல்லிருக்கேன் இன்னும் வரல ” என்றார் கோபால கிருஷ்ணன் மென்னகையுடன் .

” உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா நான் வேணும்ன்னா உங்களை ட்ராப் பண்ணவா “

” இல்லை பா உங்களுக்கு எதுக்கு சிரமம் , நீங்களும் வெளிய கிளம்புறீங்க , உங்க வேலை டிஸ்டர்ப் ஆகிட போகுது “

“அதெல்லாம் ஒன்னும் இல்லை அங்கிள் சும்ம சென்னை சிட்டியை சுத்தி பார்க்கலாம்ன்னு தான் ரெண்டு பேரும் கிளம்பினோம்  , தனியா போறதுக்கு உங்க கூட வரப்போறோம் அவ்வளவு தான் .  எங்களுக்கும் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் ஸோ எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லை ,வாங்க நாங்களும் இன்னைக்கு உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றோம் , புக்கிங் கான்செல் பண்ணிருங்க ” என்று அக்னி கூற முதலில் தயங்கியவர் , பின்பு அக்னியின் முகத்தை பார்த்து சரி என சம்மதம் தெரிவிக்க , இதை கேட்ட  மேகா மற்றும் இஷிதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது .

ஆனால் விக்ரமோ துள்ளி குதிக்காத குறையாக ,

” செம பா ” என்றவன் ,” ப்ரோ உங்க கார் செமையா இருக்கு ” கண்களில்  ஆர்வம் மின்ன கூறினான் .

“விக்ரம் பேசினது போதும் வண்டில ஏறு ” கோபால கிருஷ்ணனின் குரல் மகனை அதட்டியது .

” இட்ஸ் ஓகே  அங்கிள்  சின்ன பையன் தானே ” என்ற அக்னி விக்ரமின் ஆர்வத்தை பார்த்து விக்ரமிடம் ,

“நீ  ட்ரைவ் பண்றியா ” என  சாவியை நீட்ட , அதை அவன் வாங்க முனைந்த நேரம் ,

” அவனுக்கு டிரைவிங் தெரியாது அக்னி ” என்றார் கோபால கிருஷ்ணன் .

” அதெல்லாம் தெரியும் , அப்பா ஓட்ட விட மாட்டாரு ” அவன் முனங்களாக கூற ,

” அதெல்லாம் நம்ம சாம்பியன்  ஓட்டுவான்  அங்கிள்  , நான் பக்கத்தில தானே இருப்பேன் பார்த்துகிறேன்  ” தீரன்  சாவியை நீட்டியது தான் தாமதம்  விக்ரமின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி  .

ஏற்கனவே தந்தை சொல்லுக்கு மறுப்பும் தெரிவிக்க முடியாமல் , அவனுடன் செல்ல விருப்பமும்  இல்லாமல் ,இஷிதாவுடன்   எதையோ  முணுமுணுத்தபடி நின்ற மேகாவுக்கு  இந்த காட்சி  கோபத்தை கொடுக்க ,

‘டேய் விக்கி …  நோ சாவிய திருப்பி  குடு  ‘ சந்தோஷமாக சாவியை  வாங்கி   காரின் கதவை திறந்து கொண்டிருந்த  தமையனிடம்  ரகசிய குரலில் செய்கை செய்தாள் .

‘ என்ன அக்கா? ‘ அவனும் அதே குரலில் வினவினான் .

‘ என் கூட வந்து உக்காரு ‘ பற்களை கடித்தபடி செய்கை செய்தாள் .

‘ மாட்டேன் போ ‘ காருக்குள் எற போனவனின் பின் சட்டையை பிடித்து இழுத்தவள் .

‘ சாவிய குடுத்துட்டு , என் பக்கத்துல வந்து உக்காரு ‘ மெதுவாக அதட்டினாள் . மேகாவை மேலும் கீழும் பார்த்த விக்ரம்,

” முடியாது போ ” என  கத்திவிட ,காரை விட்டு வெளியே இறங்கி வந்து   எட்டிப்பார்த்த தீரன் ,

” வண்டிய எடு விக்கி ” என்று கூறி   மேகாவை முறைத்து பார்த்து ‘ என்ன ‘ என தன் புருவம் உயர்த்த ,  அவன் பார்த்த பார்வையில் முதுகுத்தண்டு  சில்லிட்டு போக  திணறியவள் ,

“ஒன்னும் , இல்லை” என தன் தலையை வேகமாக ஆட்டி விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என   கதவை திறந்து  காருக்குள்  ஏறி அமர்ந்துகொள்ள , அதன் பிறகு  காருக்குள் ஏறிய தீரன்   கண்ணாடியுடு  மேகாவை ஒரு கணம்  உறுத்து  விழித்து விட்டு இறுக்கமாக அமர்ந்திருந்தான் .

” ப்ரோ இது தான் சென்னையிலே ..” என ஆரம்பித்து விக்ரம் உற்சாகமாக  , காணும் இடங்களையெல்லாம்  விவரித்து  பேசிய எதுவுமே அக்னியின் செவியில் சென்றடையவே இல்லை .விழிகள் சாலையை வெறித்தபடி இருக்க,  எண்ணம் முழுவதும் கண்களை உருட்டி ‘ ஒன்னும் இல்லை ‘  என தலையை அசைத்த தன்னவளையே சுத்தி சுத்தி வட்டமிட்டது .

” உங்க அக்கா என்னடா சொன்னா?” விக்ரமின் பேச்சில் குறுக்கிட்டபடி வினவினான்  அக்னி  . சாலையை ஒருகணம் பார்த்து விட்டு அக்னியை ஏறிட்டவன்,

” அக்காவா  ?” சாலையில் தன் கவனம் பதித்தபடி கேட்டான் .

“ம்ம் ” முகம் கடுகடுவென இருந்தது .

” அது உங்க கிட்ட உக்கார கூடாது,  சாவிய குடுன்னு சொன்னா ” என  தயங்கியபடி கூறினான் , ஏனோ அக்னியிடம் அவனால் மறைத்து பேச முடியவில்லை .

” அப்படியா சொன்னா ” தீரனின் முகம் இன்னும் இறுகியது .

” ம்ம்ம் அவளுக்கு உங்களை புடிக்கலைன்னு நினைக்கிறன் ” என  மெதுவாக தீரனின் காதில் கூறியவன் ,” ஆனா எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும் ,யு ஆர் மை ரோல் மாடல் ” குதூகலத்துடன் கூறி  மகிழ்ச்சியாக புன்னகைத்தான் , விக்ரமின் புன்னகை முன்பு அக்னியின் கோபம் தோற்றுவிட ,தன் இறுக்கம் தளர்ந்து மெலிதாய் புன்னகைத்த தீரன்,

” அவ்வளவு புடிக்குமா டா ” என கூறி அவன் சிகையை  வாஞ்சையுடன் கலைத்து விட , ” ஆமா ப்ரோ ” கண்சிமிட்டி சிரித்தான் .

” ரோட்டை பார்த்து ஓட்டுடா ” என்ற அக்னி , விக்ரம் நன்றாக ஓட்டும் பொழுது பாராட்டி , ஆங்காங்கே தவறு செய்யும் பொழுது சுட்டி காட்டி ,தட்டி கொடுத்து கொண்டே வந்தான் .

சிலமணிநேர   பயணத்திற்கு  பிறகு  வேளச்சேரியில்  உள்ள  ப்ரபலமான கடைக்கு அவர்கள்   வந்தடைய  , அனைவரையும்  கடையின்  வாசல் முன்பு   இறக்கிவிட்டுட்டு , கார் பார்க்கிங் ஏரியாவில்  காரை நிறுத்திவிட்டு  தங்க நகைகள் இருக்கும்  ப்ளோருக்குள்  அஷோக் மற்றும் விக்ரமுடன் தீரன் நுழைய ,

அங்கே கோபால கிருஷ்ணன் கடுங் கோபத்தில் நின்றிருக்க , மேகா தன் கரங்களை பிசைந்து கொண்டு நிற்க , ராதிகா தன் கணவரை  சமாதானம் செய்து கொண்டிருந்தார் .

                                              ~~~~~~~~~~~~~~

” யாரை கேட்டு டெல்லிக்கு போன ” இஷிதா தமையனிடம் அலைபேசியில் தாறுமாறாய் கத்தினாள்.

” அப்பா சொன்னாரு டி “

” ஷட் அப்  அப்பா அப்பா , அவரு சொன்னா நீ கிளம்பி வருவியா , நான் உன்கிட்ட என்ன சொன்னேன் , இனிமே  அப்பா எல்லாம் ரெண்டாவது தான், மேகா தான் உனக்கெல்லாம் சொன்னேன் தானே . இன்னைக்கு  தாலி,  புடவை எல்லாம் வாங்குறோம் டா ,  நீ இருக்கணுமா வேண்டாமா , மேகாக்கும்  ஆசை இருக்கும்ல . அந்த ஆளும் வரல, அவங்களும் வரல. என்னடா எல்லாரும் நினைச்சிட்டு இருக்கீங்க , இங்க மேகா அப்பா செம டென்க்ஷன்ல இருக்காங்க  “

” ஸாரி டி “

” மரியாதையா  அடுத்த பிளைட் புடிச்சு  சென்னைக்கு வர , நீ வந்ததுக்கு அப்புறம் தான் தாலியும் , முகூர்த்த புடவையும்  எடுப்போம் , மவனே நீ மட்டும் வரல உன் கல்யாணத்தை பத்தி நான் யோசிக்க வேண்டியிருக்கும்  ” அலைபேசியில்  ரிதுராஜை ஒருவழி படுத்தி கொண்டிருந்தாள் இஷிதா .

                                   !!!!!!!

” தாலியும் , முகூர்த்த புடவையும்  வாங்க  பெரியவர்களும்  வரல , மாப்பிள்ளையும் இல்லைன்னா எப்படி ?கல்யாணத்துக்கு  இன்னும் ஒருவாரம் கூட இல்லை  சொல்லாம அவர் இஷ்டத்துக்கு டெல்லிக்கு போய்ட்டாரு , இது சரியா படல ராதிகா “

“அவங்க தான்  சம்பந்திமாக்கு உடம்பு சரியில்லைன்னு  சொல்றாங்களே , அதான் மாப்பிள்ளை வீட்டு சார்பா இஷிதா இருக்காள்ல , முறைக்கு அவ தானே நாத்தனார் ” சீறும் கணவனை  ஏதேதோ சொல்லி சமாளித்து கொண்டிருந்தார்  ராதிகா .

“மாப்பிள்ளை ஊருக்கு போறதை பத்தி உன்கிட்ட சொன்னாரா இல்லையா ” மனைவியை விடுத்தது மகளிடம்  சாடினார் .

” மார்னிங் தான் சொன்னாரு பா , முக்கியமான வேலை இருக்கு சீக்கிரமே வந்திருவேன்னு  சொன்னாரு “என்றாள் மேகா .

” ஓ  அதை நான் கேட்டா தான் சொல்லுவியோ ” சட்டென்று  கோபால கிருஷ்ணன் கத்திவிட  ,மேகாவின் கண்களில் கண்ணீர் திரையிட்டது  . அதை ஏனோ அக்னியால் சகித்து கொள்ள முடியவில்லை , கோபால கிருஷ்ணன் மீது அவ்வளவு கோபம் வந்தது .

கோபால கிருஷ்ணன் மேகாவின் தந்தை , அவருக்கு மகளிடம் இல்லாத உரிமையா?  இருந்தும்  காதல் கொண்ட அவனது மனம் தன்னவளை  யாரும் கடிந்து கொள்வதை  சிறிதும்  விரும்பவில்லை .

” ரிலாக்ஸ் அங்கிள் , இட் ஹபென்ஸ்    , மாப்பிள்ளை  வீட்டுகாரங்களோட  நிலைமையையும்  நாம புரிஞ்சிக்கணும்ல , நான் மிஸ்டர் கனகராஜ்  கிட்ட பேசுறேன், ஷாப்பிங் கண்டின்யு பண்ணுங்க  ” இடைபுகுந்து  அவரது கோபத்திற்கு  மடையிட்டான் .

” ஓகே பா ” மாயாஜாலம்  அக்னியின் குரலிலா இல்லை அவன்  விழிகளிலா  என தெரியவில்லை , ஆனால் கோபால கிருஷ்ணனின் குரலில் திடீர் மாற்றம் , கடுமை எங்கோ சென்றிருக்க  , எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல்   அவன் சொன்னதிற்கு தலையசைத்தவர் ,

” போ ராதிகா  போய் தாலி பாரு ” என அவர் மனைவியிடம் சொல்லிய மறுநிமிடம்  ,

” வெய்ட் பண்ணுங்க அங்கிள் , அண்ணன் பேசினான்,   வேலைய முடிச்சிட்டானாம் , நெக்ஸ்ட் பிளைட்ல வருவானாம் . ஸோ   தாலியும்,   முகூர்த்த புடவையும்  மட்டும் அண்ணன் வந்ததுக்கு  அப்புறம் பார்க்கணுமாம்  ,  இப்போ மத்ததை  வாங்கிக்க சொன்னான் ” அனைவரின்  முன்பு தமையனை விட்டுக்கொடுக்காமல் அவனே பேசியது போல அவனது வருகையை  உறுதி படுத்த , யாரிடமோ அலைபேசியில் பேசிவிட்டு அங்கே வந்த அஷோக் ‘ என்னடா ‘ என்பதை போல அக்னியை பார்க்க,  அவனோ கண்களால்  அமைதியாக இருக்கும் படி கண்ணசைக்க , எரிச்சலுடன்   நின்றான் அஷோக் .

!!!!!!!!!!!!!!!!!!

“அந்த ஆரத்தை எடுங்க , இந்த நெக்லஸை எடுங்க ” என பெண்கள் மூவரும்  ஆர்வமாக நகைகளை  தேர்ந்தெடுத்து  கொண்டிருக்க ,  மேகவோ தந்தை கடிந்து கொண்டதை எண்ணி  கண்களை துடைத்தபடி  நின்றிருக்க ,

” என்னடா அப்பா மேல கோபமா ” மனம் கேளாமல் மகளை ஓரமாக அழைத்து வினவினார் .

” இல்ல பா ” அவள் மறுக்கும்  பொழுதே கண்களில் இருந்து கண்ணீர் வழிய  ,

“ஸாரி செல்லம் , இதை முன்னாடியே என்கிட்ட சொல்லிருக்கணும்ல, நீ ஏன் சொல்லலை  ? அதான் அப்பாக்கு கோபம் வந்திருச்சு ” மகளின் கண்ணீரை துடைத்துவிட்டு , மகளை அணைத்து கொண்டார் .

” சொல்ல கூடாதுன்னு  இல்லை , நான் இதை பெருசா எடுத்துக்கல, சாரி பா ”  கேவலுடன்  அவரது அணைப்புக்குள் ஒடுங்கிக்கொண்டாள்  மேகா .

இப்பொழுது அக்னியின் கண்களில் கோபம் மறைந்து ஒருவித பொறாமை எட்டி பார்த்தது .

தன்னவளை  அணைக்கும்  கரங்களாய்  என் கரம் இருந்தால் எப்படி இருக்கும் ? அணைத்துக்கொள்ள கரங்கள் பரபரத்தது .

அவள் தலை சாய்க்கும் தோளாய்  என் தோள் இருந்திருக்க கூடாதா ?  தவிப்புடன் பார்த்தான் .

என்னவள் என் நெஞ்சோடு  ஒட்டி உறவாடினால்  , ஆஹா என்ன சுகம் ? ஆசை  கொண்ட அவன் உள்ளம்  தவிக்க ,ஏக்கத்துடன் அவர்களை பார்த்திருந்தான் தீரன் .

அனைவரும் நகைகளை அலசி ஆராய்ந்து கொண்டிருக்க ,கிட்ட தட்ட மூன்று மணி நேரத்திற்கு மேல் கடந்திருந்தும் எதையும் தேர்வு செய்யாமல் இருக்க , அஷோக்குடன் கடையை சுற்றி வந்த தீரனின் பார்வை போகும்  திசையை கண்ட  அஷோக் மெல்லிய புன்னகையுடன்  நண்பனின் தோளை தட்டிவிட்டு  ஒதுங்கிவிட , யாரோ இருவர் தங்களின் நகைகளை பெற்றுக்கொண்டு நகர்ந்து செல்ல , அந்த காலியான இடத்தில் சென்று அமர்ந்தான் தீரன் .

“என்ன சார் பார்க்கிறீங்க? ” என கேட்ட கடை சிப்பந்தியின் முகத்தை ஒருகணம் பார்த்தவன் , தன் சட்டை பைக்குள் இருந்து சிறு பெட்டியை எடுக்க அவனுக்கு திடிரென்று ஒருவித நடுக்கம் , எட்டி மேகா இருக்கும் திசையை பார்த்தான்  அவள் தாய் எதோ கூற தலையசைத்து கொண்டிருந்தாள் .

 கண்களை இறுக்கமாக முடிகொண்டவனின் செவியில் , ஒரு குரல் மீண்டும் மீண்டும் ஒலித்தது , கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக்கொண்டான், தீரனின் கண்கள் கலங்கியது .

” எந்த பொண்ணை பார்த்தா உன் மனசு துடிக்குதோ,  எந்த பொண்ணு உன்னை விட,  உன் பணத்தை விட , உன் மனசை நேசிக்கிறாளோ , எந்த பொண்ணு நீ எந்த நிலையில இருந்தாலும் உன்னை அப்படியே  ஏத்துகிறாளோ , எந்த பொண்ணை பார்த்தா அவ இல்லாம உன்னால வாழ முடியாதுன்னு  தோணுதோ ,  அவ  தான் உனக்கானவ  ,  அப்படி  ஒருத்திய பார்க்கும் பொழுது அவ கிட்ட உன் மனசோட சேர்த்து இதையும் குடு,   அவ இன்பத்திலையும்  துன்பத்திலையும் உன் கூடவே இருப்பா, உன்னை விட்டு என்னைக்கும் போக மாட்டா “தீரனின் தந்தையின்  இறுதி வார்த்தைகள் ! அவனுக்காக  அவர் விட்டு சென்ற பொன் மொழிகள் !  ஒவ்வொரு வரிகளும்  அவன் மனதில் ஆழப்பதிந்திருக்க  , கண்மூடி  அதன் அர்த்தத்தை  உணர்ந்தவனுக்கு  ஒருவித  உணர்வு  , அது சலனமா ! பயமா !சந்தேகமா !என தெரியவில்லை, ஆனால் அவன் மனதிற்குள் இவ்வாறு  தோன்றியது.

‘ தான் செய்ய போகும் செயல் சரியா ! தவறா! ‘  என எண்ணின தீரனின் கரங்கள்  நடுங்கியது  , இதயம்  வேகமாக துடிக்க  மீண்டும் மேகாவை தேடினான் . தேர்ந்தெடுக்க பட்ட தங்க நகைளில்  தேவதையாக காட்சி அளித்தாள் .  அப்படியே  அள்ளிக்கொள்ள அவன் கைகள்  துடித்தது . கம்பீரமான  என் அருகில் என்னவள் இருந்தால்  எப்படி இருக்கும்?  எண்ணும் பொழுதே ஒருவித பரவசம்,   கர்வத்துடன்  தன்  எதிரே இருந்த கண்ணாடியை பார்த்து தன் மீசையின் நுனியை  முறுக்கி கொண்டவன் ,

வெகு நேரமாக தன்னையே பார்த்து கொண்டிருந்த  சிப்பந்தியிடம்   டப்பாவை நீட்டினான் .

” இதோட வேலைப்பாடு ரொம்பவே அழகா இருக்கு சார் , இதெல்லாமே  பியூரான  நவரத்தினங்களா? ரொம்பவே யுனிக்கா   இருக்கு ” சிப்பந்தி  ஆச்சரியத்துடன்  விழிவிரித்து கூறினான் .

“ம்ம்ம் ” தீரனால் எதுவும் பேச முடியவில்லை . அவன் மனம்  பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தது .

” இதை என்ன சார் பண்ணனும்? “

” இதுல … ” தயங்கியவன் நீண்ட பெருமூச்சை வெளியிட்டபடி  சொல்லி முடிக்க ,  தன் கைகளை அசைத்தபடி  அங்கே ரிதுராஜ் வந்திருந்தான் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேகாவை பார்த்தான்  தீரன்  , மெல்லிய  கீற்று போல புன்னகை அவள் முகத்தை அலங்கரித்தது ,  மனதில் மீண்டும் ஒருவித  தடுமாற்றம்  ,

‘ தான் செய்வது பிழையாகி விட்டால் ?’ எண்ணும் பொழுதே அவனது இதயம் வேகமாக துடித்தது  தன் கரம் வைத்து  நெஞ்சை அழுத்தமாய் பிடித்துக்கொண்டான் . கண்களை மூடி திறந்த  அக்னிக்கு 

‘எது எப்படி இருந்தாலும் இனி இவள்  இன்றி இந்த தீரன்  இல்லை ‘  என்பது மட்டும்  தெளிவாய் புரிய , சிப்பந்தியிடம்  தன் தேவையை  ஒருமுறைக்கு இரெண்டு முறை தெளிவு படுத்தினான் .

அப்பொழுது தீரனின்  தோள் மீது கை வைத்த அஷோக் ,

” இதுக்கு தான் இதெல்லாம்,  வேண்டாம்ன்னு சொன்னேன் பாரு வந்து நிக்கிறான்  , அந்த கனகராஜை   ” என  சீரிய  அஷோக்கின் தோள் மீது கை போட்டு   ,

” விளையாட்ட தனியா ஆடுனா சுவரசியமாவே  இல்லை அஷோக்  ” என்ற தீரனை கடுமையாக  பார்த்த அஷோக் “இது விளையாட்டு இல்லை அக்னி எதிரியை  எப்பவுமே வீக்கா நினைக்க கூடாது , ரிதுராஜை வீக்கா நினைக்காத  “

” ஆஹாங்  , அதுக்கு அவன் முதல்ல என் எதிரியா இருக்கணுமே ” என விஷமமாய் புன்னகைத்த அக்னியின் சிரிப்பில் ஒளித்திருந்த அர்த்தத்தை உணர்ந்த அஷோக்   தீரனை அழுத்தமாக பார்க்க , தீரனின் பார்வையோ மேகா மற்றும் ரிதுராஜிடமே தேங்கி இருந்தது .

!!!!!!!!!!!

கடையை வட்டமிட்டபடியே வந்த அஷோக்கின் கண்ணில் பட்ட ஒரு நகை மட்டும்  சுவாரசியத்தை கூட்ட,  கடை சிப்பந்தியிடம்   அதை பற்றி வினவியவனின் விழிகள்  பொங்கி வழியும் தாபத்துடன் தன்னவளை  கண்டதும்  , சிப்பந்தியிடம் ,

” இதை பேக் பண்ணி அதோ நிக்கிறாங்களே  ” என ஏதோ கூறியவனின் இதழ்கள் குறும்பாய் வளைந்தது.

” யார் குடுத்தாங்க? ” பேக்கிங் செய்யப்பட்ட பார்செலை  நீட்டிய கடை ஊழியரிடம்  வினவினாள் இஷிதா ,

” அதோ அந்த சார் ” என்ற அந்த  பெண் அதை இஷிதாவிடம்  கொடுத்துவிட்டு சென்றுவிட , அஷோக்கை முறைத்தபடி பகிங்கை  பிரித்தவள் , அதில் இருந்த பொருளை கண்டதும்  அவளது முகம் குப்பென்று  சிவந்துவிட கஷ்டப்பட்டு முறைத்தவள்  ,

” பொறுக்கி புத்தி எங்க போகுது பாரு ? எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்கிருவான் போல , நல்ல வேலை யாரும் பார்க்கல ” என அவனை திட்டிவிட்டு சென்றவிட , அஷோக்கோ அடக்கப்பட்ட சிரிப்புடன்  அவளை பார்த்திருந்தான் .

எல்லாருக்கும் பிடித்த வகையில்  நகைகளை  வாங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறிய போது  கண்ணாடி பெட்டிக்குள்,  பொம்மைக்கு போடப்பட்டிருந்த  ஒரே ஒரு வெள்ளை கற்கள் பதித்த  நூல் போன்ற கழுத்து சங்கிலி   ஒன்று , மேகாவின் கவனத்தை வெகுவாய் கவர்ந்தது .

பொதுவாக நகைகளில் அவளுக்கு பெரிய ஆர்வம் கிடையாது, உடுத்த உடைக்கு ஏற்றது போல இமிடேஷன்  நகைகள்  அணிவதிலே ஆர்வம் கொண்டவளுக்கு,  ஏனோ இன்று  இந்த நகை ஆசையை உண்டாக்க , சிறு புன்னகையுடன் அதன் அருகே சென்றவள் ,  அதன் அருகே இருந்த ஊழியரிடம் அதை பற்றி கேட்க , ‘ சாலிட்டர் டைமண்ட் மேம் ஜஸ்ட் ட்வெல்வ்  லக்ஸ் ‘ அவர் புன்னகையுடன் கூற ,  மேகாவின்  முகம் விழுந்துவிட்டது .

” புடிச்சிருக்கா ” ரித்துராஜின் கேள்வியில்  விழித்துக்கொண்டவள் ,

“நோ ஜஸ்ட் பார்த்தேன் “

“புடிச்சிருந்தா வாங்கிக்கோ,  விலையை  பத்தி யோசிக்காத , உன்னை விட இது ஒன்னும் முக்கியம் இல்லை ”  புன்னகையுடன்  அவளது விழிகளை நோக்கி கூறினான்  ரிதுராஜ் .

” இல்லை வேண்டாம்  போகலாம் ” என்றாள்  மேகா .

” தென் ஓகே ” என் தன் தோளை குலுக்கியவன் முன்னேறி செல்ல , மேகா இஷிதாவுடன்  இணைந்து கொண்டாள்.   ஆனால் அந்த நகையை,   அவள் ஆசை ததும்ப பார்த்ததையும்  , அந்த ஊழியர் சொன்னதும் அதை வேண்டாம்  என்று கூறியதையும்  ,அவளை விடாமல் துரத்தும்  தீரனின் இரு விழிகள் கண்டுகொண்டதை  மேகா அறியவில்லை .

!!!!!!!!!!!!!!

நகை வாங்கி முடிக்கவே  மணி   ரெண்டை    தாண்டியிருக்க , அந்த கடையின்  மேல் தளத்தில் உள்ள ரெஸ்டாரன்டிலே  மத்திய  உணவை முடித்து கொண்டவர்கள் ,அடுத்து முற்றுகையிட்டது என்னவோ புடவைகள் இருக்கும் தளத்தில் தான் .

தன் தந்தை  , ரிதுராஜ், என தன் மொத்த குடும்பமும்  , தன்னுடன் இருந்தாலும்  தீரனின் விடாமல் துரத்தும் பார்வையால் ஒருவித நடுக்கத்துடனே இருந்த   மேகாவுக்கு பயத்தின் பாதியால் , எதிலும் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள முடியவில்லை . நகை போல புடவையிலும்  மற்றவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிட்டாள். அப்பொழுது ரிதுராஜ் ,

” உன் விருப்பப்படி எதுவுமே வேண்டாமா ம்ம்ம்,  நாங்க என்ன சொன்னாலும் ஓகே சொல்ற , வா உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு பாரு ” சட்டென்று ரிதுராஜ் மேகாவின் கரத்தை பிடிக்க வர , அன்று பூட்டிய அறையில் தீரன் விடுத்த எச்சரிக்கை , மேகாவின்   நினைவிற்கு வர சுற்றும் முற்றும் தீரனின் விழிகளை தேடியவள் , அவனை காணாது ஆசுவாசம் அடைந்து தன் கைகளை விலகிக்கொள்ள ,

” ரொம்ப தான் வெட்க படுற , பாப்போம் எத்தனை நாளைக்குன்னு ?” என ரிதுராஜ் மென்னகையுடன் கூற , தலை குனிந்து கொண்டவளுக்கு  அதற்கு எந்த பதில் கூறவேண்டும்  என்று சுத்தமாக தெரியவில்லை .

மேகவோ பட்டுப்புடவை  விடுத்து  ரிதுராஜுடன் பார்ட்டி வியர் புடவை செக்ஷனுக்கு சென்று , அங்குள்ள புடவைகளை பார்த்து கொண்டு இருக்க , ரிதுராஜும்  நடந்துகொண்டே அவளை விட்டு தள்ளி சென்றபடி  பார்வையிட்டு கொண்டிருக்க,  அந்நேரம் அங்கு வந்த சேல்ஸ் மென் தனியாக நின்ற  மேகவிடம் எப்படியான புடவை வேண்டும் என கதையளந்து கொண்டிருந்தான் .

மேகா தன் தேவையை கூற ,
” அங்க வாங்க மேடம்,  நீங்க கேட்டது , அந்த செக்ஷன்ல தான் இருக்கு ? “அவனும் அவள் கேட்டது போல ஆடைகளை எடுத்து காட்டியவன்,

” மேல வச்சி பாருங்க மேடம்  அப்போ தான் நல்லா இருக்கும் ” என்றவன் மேகா சுதாரிப்பதற்குள் ஒவ்வொன்றாய் தூக்கி அவள் மேல வைத்து காட்ட , அவனது கரங்கள்  தாராளமாக  மேகா மேல உரச , முதலில் தவறுதலாய் கை பட்டிருக்கும்  என்று எண்ணியவளுக்கு  , அவனது பார்வையின் அர்த்தம் கிலியை உண்டாக்க  , பதறி விலகியவளின்  விழிகள் தன்னை  மறந்து , சுற்றி  சுற்றி உதவியை நாடியது  என்னவோ  ,  இனி பார்க்கவே கூடாது என்று நித்தமும் வேண்டிக்கொள்ளும்! அவன் வேண்டவே வேண்டாம் என ஒவ்வொரு நொடியும் மேகா வெறுக்கும் , அனல் தெறிக்கும் தீரனின் விழிகளை தான் .

” எனக்கு வேண்டாம் ”  என்றவள் சேல்ஸ் மேனை முறைத்து படி அங்கிருந்து நகர போக ,

” என்னாச்சு மேடம்,  இந்த கலர் இன்னும் நல்லா இருக்கும் ” புடவையுடன்  அவனது கரங்கள் அவளை  நோக்கி வர , அன்று  கேஸ் ஏஜென்சி காரன் தன்னை தவறாக பார்த்தது நினைவிற்கு வர   நடுக்கியவள் ,” தீரன் ” என வாய்விட்டு சொல்ல  வரவும்    , தீரனின் கரங்கள் சிப்பந்தியின்  கரத்தை பிடித்திருந்தது .

ரிதுராஜ்  மற்றும் மேகா இருவரையும் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த தீரன் .ரிதுராஜ் மேகாவை தனியே விடுத்து செல்லும் பொழுதே தன் பார்வையை கூர்மையாகியவன் , அந்த சேல்ஸ்  மென்  மேகாவிடம் ஏதோ சிரித்து பேசி , தனியே ஒரு ஓரமாய் அழைத்து போவதை கண்டு புருவம் சுருக்கிய தீரனுக்கு கோபம் வர , தன் இருக்கையில் இருந்து எழுந்து விறுவிறுவென  அவ்விடத்திற்கு  வர ,  சேல்ஸ் மென் புடவையை மேகா மீது வைக்கும் பொழுதே ஆத்திரம் கொண்டவன்    ,  மேகா பதறி விலகியும் அவன் மீண்டும்  அவளை நெருங்கவும் ,பொங்கி எழுந்த தீரன் ஆக்ரோஷமாக அவனது கரத்தை பிடித்திருந்தான் .

” என்னடா ” சிம்ம குரலில் அக்னி கர்ஜிக்க அவனோ நடுங்கியே விட்டான் .

” ஒன்னும் இல்லை சார் ” தீரனின் பிடியில்  வலி எடுக்க ,குரல் நலிந்து ஒலித்தது .  தீரனின் ருத்ர தாண்டவத்தை  ஏற்கனவே  ஒருமுறை கண்டிருந்த  மேகாவுக்கு பயம் எடுக்க , ஏதும் அசம்பாவிதம் நடக்கும் முன்பே தடுத்துவிட  எண்ணியவள் ,

” விடுங்க சார் , அவர் ஜஸ்ட் புடவை தான் காட்டிட்டு இருந்தார் ” தயங்கியபடி கூறினாள் .

” அப்படியா  டா ” தீரனின்  பார்வை அவனை எரித்தது .

” ஆமா சார் “

” விடுங்க சார் ப்ளீஸ் ” என்ற  மேகாவை ஒருகணம் பார்த்தவன் , கண்களால் சேல்ஸ்மெனை எச்சரித்தபடி  அவனது கரத்தை விடுவிக்க , அவளும் உடனே அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க ,

” நீ தீரன்னு  என்னை கூப்பிட்டல ” என்றான் அவளது முகத்தை பார்த்தபடி , அவன் மனதிற்குள்  தன்னவள் தன்னை அழைத்தது போல ஒருவித பிரம்மை .அதனால் கேட்டுவிட்டான். 

ஏற்கனவே  அப்பாவையோ , ரிதுராஜையோ இல்லை விக்ரமையோ  நினைக்காமல் , ஏன் இவனை நினைத்தோம் ?என உள்ளுக்குள்  மருகி கொண்டிருந்த  மேகாவுக்கு   , தீரனின்  கேள்வி தூக்கிவாரிப்போட  முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டவள் ,

 ” நோ , நான் ரிதுராஜை தான் கூப்பிட்டேன்   ” தீரனின் முகத்தை பார்த்து கூட பேசாது , கையில் புடவையுடன் தன்னை நோக்கி வரும் ரிதுராஜை கைகாட்டியவள்  , ஏதோ தீரனிடம இருந்து தப்பித்தோம் பிழைத்தோம்  என ரிதுராஜை   நோக்கி  ஓடாத குறையாக  செல்ல ,’ என் முகத்தை பார்த்து கூட பேச மாட்டாளா ‘ தீரனுக்கோ  காலை போல மீண்டும் அவமானப்பட்ட உணர்வு  ! .

” இந்த புடவை நல்லா இருக்கா ?நான் உனக்காக செலெக்ட் பண்ணினேன் ” என்றான் ரிதுராஜ்

“தேங்க யு நல்லா இருக்கு ” என்றவள் பதற்றமாக  இருப்பதை பார்த்து ,

” என்னாச்சு ” என கேட்க

” கொஞ்சம் மூச்சு முட்டுற மாதிரி இருக்கு ” என்றாள் .

“சரி வா ரெஸ்டாரண்ட் போகலாம்,  ஏதாவது ஜூஸ் குடி உனக்கு பெட்டெரா இருக்கும் ” என்ற ரிதுராஜ் மேகாவை அழைத்து கொண்டு சென்றான் .

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காலையில்  மேகாவை பார்த்து முறைத்து விட்டு  விறுவிறுவென தன் அறைக்குள் வந்த அக்னி ,

தன்னை மறந்து , தான் தன் அறையில் இருந்து,  மேகாவை  பார்க்க  கீழே வந்தது மற்றுமின்றி,  மேகாவின் அழகில்    தன் சுயம் தொலைத்து,   நேரம் போவதே தெரியாமல் ரசித்ததை எண்ணி தன்னையே கடிந்து கொண்டவன் , தன் கேசத்தை அழுத்தமாக கோதி கொண்டான் .

ஆனாலும்   தன்னை நிலைகொள்ள முடியாமல் தனக்குள்ளே தகித்தவன் , மீண்டும் வந்து பால்கனியில் நின்றபொழுது  அவன் கண்ட காட்சி அவன்  கோபத்திற்கு  தீனி  போட்டது.

பதற்றத்தில்  கைகால் நடுங்க நின்றவள் முகத்தில் வர்ணஜாலம்  போல வெவ்வேறு உணர்வுகள் மாறி மாறி வந்தது .

‘முதலில் பதறுகிறாள்  !பின்பு மூச்சை நன்கு இழுத்து விடுகிறாள்  ஏன்?  ‘ ஓ ஹோ  நான் சென்றதற்காக  நிம்மதி பெரு  மூச்சோ  !  அப்படியென்றால்  என் கூட இருக்கிறது  அவளுக்கு மூச்சு முட்டிக்கொண்டு வருகிறதோ? ‘ பற்களை கடித்தான்  தீரன் .

பிறகு அவள்  முகத்தில் சிந்தனை ரேகை ஓடுகிறது , ‘ எதையோ சிந்திக்கிறாள் ! அப்படி என்ன சிந்திக்கிறாள் திடிரென்று ?’ தன் பார்வையை கூர்மையாக்கினான் . முகத்தில் ஒருவித அதிர்ச்சி  !  மறுநொடியே கோபம்  !   ‘ இந்த குழந்தை முகத்திற்கு இவ்வளவு  கோபம் வருமா ? அப்படியென்ன கோபம் ?’  அவனுக்குள் சுவாரசியம்  கூடியது .

உடனே ஒருவித நடுக்கம் , ‘ பதறுகிறாள் ஏன் ?’ தன் பார்வையை கூர்மையாக்கினான் . ‘எதையோ செய்ய கூடாததை செய்தது போல,  அவள் முகம்  அருவருப்பில்  அஷ்ட கோணலாக  மாறியது , ஆனால் ஏன்? ‘

தீரனுக்கு ஏதோ புரிவது போல் தோன்ற ,அவனது தாடை இறுகியது . உடனே தன் கை,  கழுத்து  , என தன் மேனியை  தன் கைகளால் அவ்வளவு  வேகமாக  துடைக்கிறாள். அவளது செய்கையில்  மிகவும்  அவமானப்பட்டான் ! தன்னை இழிவு படுத்துவதாய் எண்ணினான் !

‘ஏன் நான் தொட கூடாதோ ? என் கரம் உன்  மீது பட்டால் தீட்டோ  ? நீ என்ன பேர் அழகியா  ! இல்லை நான் தான் அருவருக்கத்தக்கவனா !’கண்களை மூடி திறந்தவனுக்கு  அவ்வளவு  ஆத்திரம் வந்தது .

‘ இன்னும் என்ன செய்கிறாள் ?என்று பார்ப்போம் ‘ கண்களை விரித்து பார்த்தான் .

அவள் தங்கையும் தம்பியும் எதோ சொல்கிறார்கள்  ஆனால் அதை காதிலே வாங்காமல்  எதையோ  தேடுகிறாள் , குனிந்து ட்யூபை எடுக்கிறாள் . தீரனுக்கு புரிந்து விட்டது !

“எவ்வளவு தைரியம்  இவளுக்கு ? பூனை போல் இருக்கிறாள் என நினைத்தால் , இவளுக்குள் இவ்வளவு அகங்காரமா  ?” ஆத்திரமிகுதியில்  சுவற்றில் ஓங்கி  தன் கையை குத்தியவனுக்கு  ஏனோ மேகாவின் செயலை  ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

ஆக ஏற்கனவே  பயங்கர கோபத்தில் இருந்த தீரனுக்கு ,மேகா இப்பொழுது ஏதோ தீண்ட தகாதவனிடம் இருந்து ஓடுவது போல, தீரனின் முகத்தை கூட பார்க்காது பதில் சொல்லிவிட்டு ஓடி சென்றது எரிச்சலை அதிகரிக்க , மனம் வேறு மீண்டும் காலை நடந்த நிகழ்வில் கோபம் கொள்ள  ,”இவள் என்னை பற்றி என்ன நினைத்து  கொண்டிருக்கிறாள்? ”  என்ற அக்னி அதே  ஆத்திரத்துடன்   மேகாவை தேடினான் .

ரெஸ்டாரண்டில்  குளுமையான ஜிகர்தண்டாவை  சுவைத்து கொண்டு ரிதுராஜிடம் பேசியபடி   அமர்ந்திருந்த  மேகா , அதுவரை இருந்த இறுக்கத்தை விடுத்து கொஞ்சம் இயல்பு நிலைக்கு மாறியிருந்தாள் .

அப்பொழுது பார்த்து  ரிதுராஜின் அலைபேசிக்கு அழைப்பு வர மேகாவிடம் பேசிவிட்டு வருவதாக கூறி சற்று தூரம்  ரிதுராஜ் தள்ளி சென்றிருக்க ,

கண்ணில் சன் க்ளாஸும் ,  வாயில்  நச்சுக்குழலுமாக  அவள் முன்பு வந்து அமர்ந்தான் தீரன் .  அவன் ஒருகையால் கிளாஸை  கழட்டி , நச்சுக்குழலை  மேகா மிரண்டு பார்க்க ஊதி தன் காலில் போட்டு மிதித்து விட்டு,   தலையை கோதியபடி   அமர்ந்திருந்த  தோரணையில் மேகாவுக்கு  நா வறண்டு விட்டது .

சட்டென்று அவள் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள ,

” உக்காரு ” மேகாவின் பதற்றத்தை உள்வாங்கியபடி  உட்கார சொல்லி   தன் கரங்களை  ஆட்டி செய்கை செய்தான் . தீரனின் அதிகார பார்வை அவளை உட்கார வைத்தது .

” ஆமா ,நீ உன்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க? ஹாங் , அழகி ,பேரழகி ,தேவதை ” இகழ்ச்சியில்  தீரனின் இதழ் வளைந்தது , அவனது ஏளன பார்வையில்  அவள் மிகவும் காயப்பட்டாள். அவன் பார்வை அவளை ஆழ துளைக்க,  சிரிது நேரம் அவளை  பார்த்தபடி  இருந்தவன் தன் இருக்கரங்களையும்  கோர்த்து சற்று முன்னால் வந்து ,

“நத்திங்,  யு ஆர் ஜஸ்ட் நத்திங் மேகா , யா  நான் உன்னை நேசிச்சேன் ,  கல்யாணத்துக்கு  ப்ரோபோஸ் பண்ணினேன்,  நீ என்னை ஏமாத்தின , நான் கோபப்பட்டேன் , அதெல்லாம் முடிஞ்சிருச்சு , இப்போ நீ வேற வாழ்க்கைக்குள்ள போக போற , ஆமா  அன்னைக்கு  நான்  உன்கிட்ட  ரூடா நடந்துக்கிட்டேன் தான் ,  ஆனா அதுக்கப்புறம்  என் சைட்ல இருந்து உனக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சா  ம்ம்ம், ” என்றான் மர்ம புன்னகை புதைந்து கிடந்த ஏளன குரலில் .

அவளோ  கண்களில் கண்ணீர் திரையிட  அவனை ஏறிட்டு  கூட பார்க்காமல்  தலையை குனிந்தபடி இருக்க , அவளை துளைத்தெடுக்கும்  பார்வை பார்த்து கொண்டே மேசையில் அழுத்தத்துடன் வேகமாக தட்டியவன் ,” பதில் சொல்லு ” அதட்டினான் .

சட்டென  நிமிர்ந்து பார்த்தவள் ,  ” நோ ” என்று கூற , அவள் தலை அனிச்சையாக  அசைந்தது .

” இங்க பாரு மேகா உன் உணர்ச்சிகளை என்னால புரிஞ்சிக்க முடியுது,  பட் நீ நினைக்கிற மாதிரி  உன் மேல நான் ஆசை பட்டு,   இருபத்திநாலு  மணிநேரமும்  உன் பின்னாடியே சுத்தி சுத்தி வர்ற அளவுக்கு ,  நீ ஒன்னும்  தேவ கன்னி கிடையாது . நீ ரொம்ப ரியாக்ட் பண்ற  ரிலாக்ஸ்சா இரு ஹாங் . எனக்கு புரியுது உனக்கு என்னை மறக்கிறது கஷ்டம் தான் ,  இருந்தாலும்,   நீ  என்னை மறந்துட்டு   உன் பியான்ஸே ரிதுராஜ் மேல போகஸ்  பண்ணி தான் ஆகணும் ” என்றது எள்ளல் நிறைந்த  அவனது குரல்,  ‘ அவன் மேல போகஸ் பண்ணிருவ’ என சவால் விட்டது அவனது கபடம் நிறைந்த விழிகள்.

‘ நீ ரொம்ப ஓவரா அலட்டிக்கிற  அளவுக்கு , நீ வொர்த்  இல்லை , ஸோ என்னை நினைக்கிறதை விட்டுட்டு  உன் பையன்ஸைய பாரு ‘ என்று கூறியவனை  மேகா அதிர்ச்சியுடன்   பார்த்தாள் .

” நீ தப்பா நினைச்சு   … நான் உங்களை  அப்படி ” அவனுக்கு தெளிவுபடுத்த  விரைந்தவளுக்கு  வார்த்தைகள் மட்டும் ஏனோ சிக்கல் விழுந்த நூல் போல தொண்டைக்குள் சிக்கிக்கொண்டு  வெளி வர மறுக்க ,

” இட்ஸ் ஓகே மேகா ரிலாக்ஸ் “

” நீங்க என்னை தப்பா நினைக்கிறீங்க  அக்னி,  எனக்கு அந்த மாதிரி எந்த எந்த எண்ணமும் உங்க மேல இல்லை ” எப்படியோ சொல்லிவிட்டாள்.

“ஆஹாங் ” அவன் பார்வை அவளை மிகவும் அவமானப்படுத்தியது , கோபம் , அவமானம்  , வலி , இயலாமை  என முகத்தில்  வெவ்வேறு உணர்ச்சிகள்  மாறி மாறி வர , துடித்து போன மேகாவின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ,

‘இதை தான் எதிர்பார்த்தேன் ? இன்று காலை நானும் இப்படி தானே அவமானப்பட்டேன் !’

‘நான் தொட்டால் உனக்கு அருவருப்பாக இருக்கிறதோ ? தீண்ட தாகாதவனிடம்  இருந்து ஓடுவது போலவா ஓடுகிறாய்’ வாங்கியதை  நான்கு மடங்காவது திருப்பி கொடுக்காவிட்டால்  நான் அக்னி தீரன் அல்லவே .’

‘ என்னை நினைக்க மாட்டாயோ ? வலுக்கட்டாயமாக  உனக்குள் நுழைந்து ,ஒவ்வொரு நிமிடமும் , ஒவ்வொரு நொடியும்  உன் உயிர், உன் ஆன்மா , உன் இதயம் , அதன் துடிப்பு  என அனைத்தையும்  என் பெயரையே  சொல்ல வைக்கிறேன் பார் ‘ என மனத்திற்குள்  நினைத்தவன்,

” கொஞ்சம் ஜில்லுனு ஜிகர்தண்டா குடி மேகா , தொண்டைக்கு இதமா இருக்கும் ” என்றவன் ஜிகர்தண்டாவை அவளிடம் நீட்டிவிட்டு ,

”  ஓகே என்ஜாய் யுவர் ட்ரின்க், அண்ட் அட்வான்ஸ் ஹாப்பி மரிட் லைஃப்  ” என வாழ்த்தியவன்  அவளது வெளிறிய முகம் கண்டு  , திருப்தியான புன்னகையுடன்  ரித்ராஜிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்த  அஷோக்கை பார்த்து கண்ணசைத்துவிட்டு வெளியேறினான் . ‘ நான் எப்போ இவனை  நினைச்சேன் , இவனை மறக்க கஷ்டப்படுறதுக்கு ?’  என அதிர்ந்து விழித்த மேகா அவமான உணர்வில்  கண்களை துடைத்தபடி  அமர்ந்திருக்க ,

” சாரி மேகா  அஷோக் பேசிட்டு இருந்தாரு , அதான் வர லேட் ஆகிடுச்சு ” என்றபடி ரிதுராஜ் வந்து அமர , அவன் முன்பு இயல்பாய் இருப்பது போல காட்டிக்கொண்டவள் , தன் எதிரே இருந்த குளிர்பானத்தை அனிச்சையாக  பருக , அதில் இருந்து வந்த வித்யாசமான  வாசனையில்  முகத்தை சுளித்த மேகா  ‘ஏன் ஒருமாதிரி  ஸ்மெல் வருது ?’ என்று எண்ணியவள்  ‘ நிறைய இருந்துச்சே எப்படி காலியாச்சு? ‘ என மீண்டும் சிந்திக்க ,  அதிர்ச்சியுடன்  வாயை  மூடிக்கொண்டு  வாஷ் ரூமை நோக்கி ஓடினாள் .

நாளை

” அங்கிள்  ஆர் யு ஓகே ?” கோபால கிருஷ்ணனின்  வெளிறிய முகம் கண்டு அக்னி வினவினான் .

” அதுவந்து  அக்னி ” அவருக்கு மூச்சு முட்டிக்கொண்டு வர ,பேச முடியாமல் திணறியவர்  , தன் அலைபேசியை காட்ட 

அவரை புருவம் சுருக்கி பார்த்தபடி  அலைபேசியை  வாங்கியவன்  கண்கள்  கோபத்தில் தகிக்க ,  கோபால கிருஷ்ணன்  நிலை தடுமாறி விழுந்தார் .

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!